2
பாலகுமார் பார்வையில்.
வாழ்க்கை எப்படி அமைய வேண்டும் என்பதில் ஒவ்வொருத்தருக்கும் வெவ்வேறான எண்ணங்கள் இருக்கும். ஆனால் பொதுவாக பலர் மற்றவரின் வாழ்க்கையை பிரதி செய்து வாழவே ஆசைப்படுவார்கள். ஒரு சிலர் மட்டும் வாழ்க்கையை அதன் போக்கிலேயே விட்டு அதன் பின்னால் செல்வார்கள். அப்படியானவர்கள் உண்மையிலேயே ஆசீர்வதிக்கப்பட்டவர்கள். அப்படியாக ஆசீர்வதிக்கப்பட்ட ஒருவன் தான் நான்.
மகள்கள் இருவரும் அறைக்குள் சென்று பதினைந்து நிமிடம் ஆகின்றது. இதோ பொருட்கள் உடையும் சத்தம் கேட்கின்றது. நல்ல வேலை எங்கள் வீட்டின் டீவி, கம்ப்யூட்டர் என்பன ஹாலிலேயே இருக்கும். அதனால் அவை தப்பித்தன. என் மனதுக்குள் ஓடிக்கொண்டிருப்பது ஒன்றே ஒன்றுதான். என்னதான் கயல் சற்று அமைதியாகி அறையில் இருந்து வெளியில் வந்தாலும் அவளின் கோபம் சில நாட்களுக்கு குறையாது. புயல் அடிப்பது சில நிமிடங்கள் எனினும் அதன் பாதிப்பு பல நாட்கள் இருக்கும். அது போலவே அவளின் கோபமும்.
இதோ அவளுடைய அறையின் கதவு திறக்கின்றது. கயல் வெளியே வருகின்றாள். என்னிடம் வராமல் ஏன் நேரடியாக டீவியின் அருகில் சென்கின்றாள்? புரிந்தது. இன்றைக்கு இந்த டீவியின் ஆயுள் முடியப்போகின்றது.
நான் கயல். அப்பாவின் செல்லப் பொண்ணு. நான் மட்டுமில்ல நிலாவும் அப்பாவின் செல்லப் பொண்ணுதான். அதனால் மட்டுமே அவள் மீது எனக்கு பொறாமை. ஆனால் அவளுக்கு என்மேல் பாசம் அதிகம். அவளின் பாசத்திற்காகவே என் தந்தையின் பாசத்தை அவளுடன் பங்கு போட்டுக்கொள்ளலாம். என் தந்தை. ஆம் என் தந்தைதான். நான் உயிராக மதிக்கும் தோழன், நான் வியந்து பார்க்கும் ஆண், மனைவியை மதிக்கத்தெரிந்த கணவன், எந்த உயிருக்கும் தீங்கு நினைக்காத ஜீவன், சில நேரங்களில் என் தந்தையை நானே சைட் அடிப்பேன். தந்தையை மகள் சைட் அடிக்க கூடாதா என்ன? இப்படி ஒரு தந்தை எங்களுக்கு கிடைத்ததை நினைத்து என் தோழன் சித்தார்த்துக்கு எப்பொழுதும் எங்கள் மீது பொறாமை உண்டு. அவனுக்கு மட்டுமா. எங்கள் மொத்த தோழமைக் கூட்டமும் எங்கள் மீது பொறாமை கொள்ள ஒரே காரணம் த க்ரேட் பாலகுமார்.
ஆனால் இன்று என் தந்தை மனமுடைந்து யார் முகத்தையும் பார்க்க முடியாமல் செய்துவிட்டால் அந்த ராட்சசி. ராட்சசிதான். எங்களை எப்பொழுதுமே கவனிக்காத எங்களை பெற்ற ராட்சசி. நாங்கள் ஏதும் நன்மை செய்தால் கூட கவனிக்காதவள். நாங்கள் செய்யும் சிறிய தவறைக்கூட பெரிதாக ஊதும் ராட்சசி. எங்கள் தந்தை எது செய்தாலும் குற்றம் கானும் பேய். வகுப்பில் நல்ல மதிப்பெண் பெற்றால் கூட " யாரு பேப்பர பார்து காப்பி பண்ண" என்று கேட்கும் பிசாசு. எங்களை அவள் என்றுமே அன்பாக பார்த்ததில்லை. எங்களை சுற்றி என்ன நடக்கின்றது என அறியும் பக்குவம் வந்த நாளில் இருந்தே எங்களை கொஞ்சமும் சட்டை செய்யாத அரிய வகை தாய். இன்று அவளால் எங்கள் எல்லோருக்குமே பெருத்த அவமானம். நானும் நிலாவும் இதை ஓரளவு கடந்து விடுவோம். ஆனால் எங்கள் தந்தை இதை எப்படி கடந்து போவார். தண்ணீர் கேன் போடும் ஆள் முதல் அவர் வேலை செய்யும் இடத்தில் இருக்கும் ப்யூன் வரை அவர் எப்படி எதிர்கொள்வார்? நல்ல வேலை அந்த ராட்சசி என் கையில் சிக்கவில்லை. சிக்கியிருந்தாள் நான் கொலைக் குற்றத்துக்காக ஜெயிலுக்கு சென்றிருப்பேன்.
நிலா தயங்கி தயங்கி என்னிடம் நடந்ததை கூற எனக்கு வந்த கோபத்திற்கு உடைக்க எங்கள் அறையில் பெரிதாக எதுவுமே இல்லை.இருந்தவையோ சிறிய பொருட்கள். அவை ஒவ்வொன்றும் ஒவ்வொரு இடத்துக்கு பறந்தன. இதுவே அவள் ஹாலில் வைத்து கூறி இருந்தாள் எந்த எந்த பொருட்கள் உடைந்திருக்கும் என்று எனக்கே தெரியாது.
அறைக்கதவை திறந்து வெளியில் வந்த நான் மிகவும் கோபமாக இருந்தேன். என் தந்தைக்கு ஆறுதல் கூறுவதா இல்லை என் கோபத்தை முதலில் தனிப்பதா? முதலில் கோபத்தை தனிக்க டீவியை உடைக்கலாம் என்று அதன் அருகில் சென்றேன். ஆனால் மூளையில் சற்றென்று ஒரு மின்னல் தோன்றியது. எங்கள் அம்மா செய்த காரியத்துக்கு நாங்கள் ஏன் எங்களை வருத்திக் கொள்ள வேண்டும். டீவியை உடைக்கும் என் எண்ணத்தை மாற்றினேன். எனது நடையை குளிர்சாதனப் பெட்டியை நோக்கி திருப்பினேன். குளிர்சாதனப் பெட்டியில் இருந்து ஆப்பிள் ஜூஸ் பாட்டிலை எடுத்து மூண்று கிளாஸ்களில் ஊற்றி அவர்கள் இருவருக்கும் கொடுத்தேன். நானும் ஒரு க்ளாஸை கையில் எடுத்து " சியர்ஸ்" என்றேன்.
நிலாவுக்கு அந்த இக்கட்டான நிலையிலும் சிரிப்பு வந்துவிட்டது. அவளும் சிரித்துவிட்டு சியர்ஸ் என்றாள். ஆனால் அப்பாதான் கவலையா இருந்தார். நான் செய்வதின் அர்த்தம் புரியாமல்.
பாலகுமார் பார்வையில்.
கோபமாக டீவியின் அருகில் சென்ற கயல் அதை உடைக்காமல் அடுத்து அவள் செய்த காரியம் என்னை பயத்துக்குள் உள்ளாக்கியது. என் மகள்களில் கயலுக்கு நான் என்றால் உயிர். அதற்காக நிலாவுக்கு என் மீது பாசமில்லையா என்று கேட்டால் அவளும் என்மீது பாசம் உள்ளவள்தான். ஆனால் கயல் எல்லாவற்றையும் வெளிப்படையாக பேசிவிடுவாள். ஆனால் நிலா அப்படியில்லை. நிலா எப்பொழுதும் பொறுமையாக எந்த காரியத்தையும் செய்வாள். ஆனால் கயல் அதற்கு எதிர்மாறு. நிலா எங்கள் வீட்டு மகாராணி என்றால் கயல் எங்கள் வீட்டு சுட்டி இளவரசி. Nila is my pride; Kayal is my joy.
ஒன்றைவிட்டு ஒன்று என் வாழ்வில் இல்லை. நேற்று நடந்த சம்பவம் என் மகள்களின் எதிர்காலத்தில் எந்தவிதமான எதிர்வினையும் ஆற்றிவிடாமல் இருக்க நான் தான் முயற்சிக்க வேண்டும். ஆனால் கயலில் செயலால் அவளின் மனநிலை எப்படி உள்ளது என்பதை கணிக்க முடியவில்லை.
நிலாவின் பார்வையில்.
அப்பாவுக்கு கயலுடைய செயலின் அர்த்தம் புரியவில்லை. ஆனால் எனக்கு கயலின் செயலில் இருந்த அர்த்தம் புரிந்தது.
" சியர்ஸ், லெட்ஸ் எஞ்ஜாய் திஸ்" என்று நான் கூற கயலின் முகத்தில் இருந்த கோபம் குறைந்து புன்னகை அரும்ப துவங்கியது. அப்பாவின் முகத்தை பார்த்த போது அவருக்கும் எங்கள் செய்கையின் அர்த்தம் புரிய ஆரம்பித்தது. எங்களை பெற்ற ராட்சசி வீட்டை விட்டு சென்றதை நாங்கள் கொன்டாடுகின்றோம் என்று.
--------
கடந்த பதிவுக்கு முதல் மூண்று வோட் போட்டவர்கள் unique_nature , nasoohanawas Maayaadhi நன்றிகள். கதை படித்து வாக்களித்த, பின்னூட்டம்
இட்ட அனைவருக்கும் நன்றிகள்.
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro