Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

9.


இரவு ஒரு மணி, உறக்கம் வராமல் கட்டிலில் புரண்டு கொண்டிருந்தாள் நித்யா. விடிந்தால் கவின் வந்து விடுவான். மூன்று வருடங்களின் பின் அவனை பார்க்கப் போகிறாள்.  நினைக்கும் போதே இனித்தது.  ஆனால் ... ஆனால் அவன் அவளுடன் இன்னும் கோபமாய் தானே இருக்கிறான்.  வீட்டிற்கு வந்தும் அவன் அவளோடு பேசாமல் இருந்து விட்டால்?

பேசாம மட்டும் இரு நீ!! ஒன்ன அப்டியே கழுத்த நெறிச்சி கொல பண்ணிடுவேன்.  பெருசா Hero மாறி Dialogue விட்டான். என்னவோ வாழ்க்க முழுக்க என்னோடயே இருக்க போற மாரி ... ஆனா அவன் என்னோட ஒழுங்கா பேசி மூனு வருஷத்துக்கு மேல ஆச்சு.  உண்மைலயே பாசம் இருந்தா என்ன இப்டி தனியா விட்டுட்டு போக மனசு வந்திருக்குமா? 

கவினை கரைத்துக் கொட்டிக் கொண்டிருந்தவள் எப்போது உறங்கினாள் என்று அவளுக்கே தெரியாது. விழிப்பு வந்த போது விடிந்திருந்தது. முகம் கழுவிவிட்டு சமையலறைக்குப் போனாள்.  

வா நித்தி ... வினய்க்கும் அப்பாக்கும்  காபி போட்டு குடுத்துட்டேன். நீ ஒனக்கு மட்டும் போட்டுக்கோ.

தோசை சுடுவதில் கவனமாய் இருந்தார் சுபா.  

காபி போட்டுக் கொண்டு ஹாலுக்கு வர அங்கே வினய் TV பார்த்துக் கொண்டிருந்தான்.  

என்ன TV பாத்துட்டு இருக்க? Ready ஆகல?

"நா இன்னைக்கி College  போகல. மாமா கூட Air port போக போறேன். " TVயில் இருந்து பார்வையை விலக்காமல் பதில் சொன்னான் வினய்.

பெரிய மகா ராஜா யுத்தம் செஞ்சிட்டு திரும்பி வர்ராரு.   அவன Receive பண்ண இவங்க போகப் போறாங்க.  

தனக்குள் முணுமுணுத்தபடி மீண்டும் சமையலறைக்குப் போனாள். அவளுக்கு கவினை பார்க்க பயங்கர ஆர்வமாய் இருந்தது.  ஆனால் இன்னொரு பக்கம் கவினை நினைக்கும் போதே கோபமும் எரிச்சலும் கவலையுமாய் இருந்தது. எப்படியும் அவனுடன் பேசி விட வேண்டும் என மனம் சொன்னாலும் அவன் பேசாவிட்டால் என்ன செய்வது என நினைக்கும் போது அழுகை வந்தது. 

"Office போகலயா?" -சுபா. 

"இல்ல . " -நித்யா 

ம்ம்.  நல்லது தான் கவின் வரும் போது நீ வீட்ல இல்லைனா நல்லா இருக்காதுல்ல. 

"நா ஒன்னும்  அவனுக்காக Leave போடல.  எனக்கு தலவலி.  அதான். " சுபாவிடம் சிடுசிடுத்து விட்டு வெளியே போனாள். 

.

.

நிமிஷங்கள் வருஷங்களாய் நகரும் என்று இதை தான் சொல்லுவார்களோ? அறையில் இருப்புக் கொள்ளாமல் அங்கும் இங்குமாய் நடந்து கொண்டிருந்தாள் நித்யா. இடைக்கிடை Airport போனவர்கள் திரும்பி வந்து விட்டார்களா என Balcony வழியே எட்டிப் பார்த்துக் கொண்டிருந்தாள்.  

நித்தி ... 

சுபாவின் குரல் கேட்டு லாக் செய்திருந்த கதவை திறந்தாள்.

ம்ம்?

இன்னும் கொஞ்ச நேரத்துல கவின் வந்துடுவான். வா அத்த வீட்ல போய் இருக்கலாம்.

வர மாட்டேன் என்று சொல்ல வேண்டும் போல் தான் இருந்தது.  ஆனால் அவனை பார்க்க வேண்டும் போலவும் இருக்கிறதே!!

ம்ம் என்று தலையாட்டி விட்டு சுபாவுடன் கிளம்பினாள். 

இவர்கள் அங்கே போய் சேரவும், கார் வந்து வாசலில் நிற்கவும் சரியாய் இருந்தது. சுதாகர், வினய் இறங்கிக் கொள்ள மூன்றாவதாய் இறங்கினான் கவின். 

மூன்று வருடங்களின் பின் வீட்டுக்கு வந்த கவினின் மீது எல்லோரும் பாச மழை பொழிந்து கொண்டிருந்தார்கள் .அவனும் ஆர்வமாய் நித்யாவை தவிர எல்லோருடனும் பேசி விட்டு இறுதியாய் அவள் பக்கம் திரும்பினான்.

"ஹேய் நித்யா ...நீயும் இங்க தான் இருக்கியா? " என்றான் அப்போது தான் அவளை பார்ப்பவன் போல .

ஹ்ம் என்று விட்டு வேறெதும் பேசாமல் சமையலறைக்குள் புகுந்து கொண்டாள்.

"நித்யாவாம் நித்யா!!!"  அவள் பெயரை அவளுக்கே பிடிக்கவில்லை. பெயரில் கூட அந்நியம் காட்டுகிறான்.  பேசாமல் இந்த கத்தியை எடுத்துக் கொண்டு போய் அவனை குத்தி கொலை செய்துவிடலாம் போல இருந்தது அவளுக்கு.  

பகல் நித்யா வீட்டினர்க்கும் சேர்த்து கவின் வீட்டிலேயே சமைத்திருந்தார்கள். எல்லோரும் பேசி சிரித்தபடி விருந்து சாப்பிட, பேருக்கு இரண்டு வாய் சாப்பிட்டு விட்டு தன் வீட்டுக்கு போய் அறைக்குள் அடைந்து கொண்டாள்.

 சுதாகர், ரம்யா, கணேஷ், சுபா, வினய் என எல்லோருக்கும் Gifts வாங்கி வந்திருந்தான் கவின்.  எல்லோருக்கும் கொடுத்து விட்டு தன் அறைக்குள் போய் அமர்ந்தவனுக்கு மனது என்னவோ போலிருந்தது.

கவின், கவின் ... 

கதவை தட்டினாள் ரம்யா.

கதவை திறந்தவன் கேள்வியாய் அம்மாவை பார்க்க, அவனை தள்ளிக் கொண்டு அறைக்குள் வந்தவள்,

"நீ நித்திக்கு எதுவும் வாங்கிட்டு வரலையா? " கோபமாய் கேட்டாள்.கவின் பதில் சொல்லாமல் அமைதியா இருக்க,

ஒனக்கு என்ன தான் Problem கவின்? ஏன் அவள யாரோ மாதிரி நடத்துற?

ப்ச் இப்ப எதுக்கு சும்மா சத்தம் போட்டுட்டு இருக்க? இந்தா இத கொண்டு போய் குடு அந்த மகாராணிக்கு!!

தன் Traveling bag இலிருந்து கைக்கு அடக்கமாய் ஒரு  பெட்டியை எடுத்து ரம்யாவிடம் கொடுத்து விட்டு Balcony இல் போய் நின்று கொண்ட தன் மகனை பார்த்து பெருமூச்சு விட்டு விட்டு வெளியே போனாள் ரம்யா.

ரம்யா போனதும் கதவை தாளிட்டு விட்டு அந்த Bag ஐ கட்டில் மேல் தூக்கி வைத்தான் கவின். அதில் இருந்து ஒவ்வொன்றாய் வெளியே எடுத்துப் பார்த்தான்.  Wind chime ... நித்யாவுக்கு பிடிக்கும் என வாங்கியது, creame color இல் ஒரு Teddy bear அமெரிக்கா போன முதல் வருடம் அவள் பிறந்த நாளுக்காய் வாங்கியது, அந்த Platinum Ring முதல் மாத சம்பளத்தில் அவளுக்கென வாங்கியது .  இன்னும் அவள் ஒவ்வொரு பிறந்த நாளுக்கும், அவள் பட்டம்  பெற்றதுக்கும், ஏன்? அவள் நினைவு வரும் போதெல்லாம் அவளுக்கென வாங்கி வைத்தவைகள் . 

எல்லாவாற்றையும் திரும்ப அதே Bag போட்டு கட்டில் கீழே தள்ளி விட்டவன், கட்டிலில் அமர்ந்து ஆழமாய் மூச்சை இழுத்து விட்டான். 

" புரிஞ்சிக்கோ நித்தி ..." இதயம் கனமாய் கனத்தது. 



Bạn đang đọc truyện trên: Truyen247.Pro