5.
அடுத்த நாள் காலை ...
"இந்தா சாப்டு ... நெறைய இருக்கு. ஒனக்கு எவ்ளோ வேணுமோ அவ்ளோ சாப்டலாம் "
தான் முதன் முதலாய் சமைத்ததை ஆர்வமாய் வினய்க்கு பரிமாறிக் கொண்டிருந்தாள் நித்யா.
கறுகிப் போயிருந்த உருளைக் கிழங்கு வறுவலை பார்த்து விட்டு, " இல்லக்கா ... வேணாமே. நா School போற வழில Hotel ல எதாச்சும் சாப்டுக்குறேனே " பாவமாய் அவள் முகம் பார்த்தான் வினய்.
"நெறைய சாப்ட வேணாம் ... Atleast நாலே நாலு பூரி சாப்டு போதும். நல்லா இருக்கும். நீ சாப்டு பாரேன் ..."
அவன் சொன்னதை கேட்காமல் தட்டில் பூரியை வைத்தாள் அவள்.
"என்னது நாலா!!! அதெல்லாம் முடியாது". பதறிக் கொண்டு எழுந்து விட்டான் வினய். புன்னகையுடன் பரிமாறிக் கொண்டிருந்தவள் அப்படியே சந்திரமுகியாகி அவனை முறைத்தாள்.
"சாப்புட்டு போன்னா ரொம்ப ஓவரா போற? மரியாதையா உக்காந்து சாப்புடு. இல்லைனா நடக்குறதே வேற. "
"நீ சமச்சத சாப்புட்ற தைரியம் இல்லாம தான் அப்பா வேல இருக்குன்னு சொல்லிட்டு அவசரமா கெளம்பி போயிட்டாரு. நா மட்டும் என்ன பலி ஆடா?? காலைலயே தீஞ்சி போன பூரிய சாப்புட எனக்கென்ன தலையெழுத்தா !!என்னால முடியாது போடீ . "
அவளை முறைத்து விட்டு School bag ஐ தூக்கிக் கொண்டு போனான் வினய்.
"எரும ... தடிமாடு ... சாப்புட்டு பாக்காமயே ஓவரா அலட்டிக்கிறான். நா எல்லாம் நல்லா தான் பண்ணி இருக்கேன். அந்த கழுதைக்கு அத சாப்புட குடுத்து வைக்கல " வினய்யை அர்ச்சனை செய்தபடி சமையலறைக்குள் போனவள், " அம்மா அவன் ரொம்ப சீன் போட்றான். நீ வா வந்து சாப்புடு " என்றாள் கோபம் குறையாமல்.
ஐயோ தனி ஆளாய் மாட்டிக் கொண்டோமே என்று திருதிரு என விழித்தார் சுபா. இருந்தாலும் முதல் முறையாய் ஆசையாய் சமைத்தவளை காயப்படுத்த தோன்றாமல் வேறு வழியின்றி அமர்ந்து கஷ்டப்பட்டு மென்று விழுங்கிக் கொண்டு இருக்கும் போது "Good morning!!! "என்று உற்சாகமாய் கவினின் குரல் கேட்டது.
"ஹேய் ... வா கவின், நானே உன்ன கூப்டலாம்னு இருந்தேன், நீயே வந்துட்ட. இன்னைக்கி நானே தனியா சமச்சிருக்கேன் " அவள் ஆர்வமாய் சொல்லவும் "அப்டியா ... Super. எனக்கு செம்ம பசி, சீக்கிரம் பரிமாறு " பயங்கர உற்சாகமாய் அமர்ந்து கொண்டவனை பாவமாய் பார்த்துக் கொண்டிருந்தார் சுபா . (சொந்த காசுல சூனியம் வெச்சிக்கிறானே ..." )
கவினின் புண்ணியத்தில் சுபா இரண்டு பூரியுடன் எழுந்து கொள்ள, "இன்னும் ரெண்டு பூரி கொண்டுவா நித்தி .." என்றான் அவன் சாப்பிட்டுக் கொண்டே.
"ம்ம் இரு எடுத்துட்டு வரேன் " அவனுக்கு பரிமாறி விட்டு தானும் அமர்ந்து ஆர்வமாய் ஒரு வாய் சாப்பிட உப்பும் காரமுமாய் அழுகையே வந்தது அவளுக்கு. சாப்பிட்ட ஒருவாயும் தொண்டைக்கு கீழே இறங்க மறுக்க கஷ்டப்பட்டு தண்ணீர் குடித்து விழுங்கி விட்டு கவினை ஆச்சரியமாய் பார்த்தாள்.
கவின் ...
ம்ம்?
"போதும்டா, இதுக்கு மேல சாப்புடாத ... "
கண்ணீர் இமையோரமாய் தேங்கி நிற்க "Sorry, நா சமச்சது நல்லாவே இல்ல " என்றாள் விம்மிய படி.
"ஹேய் இதுக்கு ஏன் நித்தி அழற? First time அப்டி தான் இருக்கும். " என்று சொன்ன படி அவன் மீண்டும் சாப்பிடப் போக அவன் கையை பிடித்து தடுத்தாள் அவள்.
"வேணாம் ... Please " என்ற போது கண்ணீர் கன்னம் தொட்டது. வேகமாய் கை கழுவிவிட்டு விம்மியபடி மாடிப் படியேறினாள்.
நித்தி ... நித்தீ ...
கவினின் அழைப்புக்கு அவள் திரும்பி பார்க்கவில்லை.
" என்ன கவின் ... நீயும் நல்லா இல்லைனு சொல்லிட்டியா? " சுபா சமையலறையிலிருந்து எட்டிப் பார்த்தார் .
"இல்ல அத்த அவளே சாப்புட்டு பாத்துட்டா " கவின் கவலையாய் சொல்ல " நா Help பண்றேன்னு சொன்னேன், தனியாவே எல்லாம் பண்ணுவேன்னு அடம்புடிச்சி பண்ணா " சிரிப்பை கஷ்டப் பட்டு அடக்கிக் கொண்டு மீண்டும் பாத்திரம் கழுவ போனார் சுபா.
அவள் அழுது கொண்டே போனது என்னவோ போலிருக்க, அவள் அறைக்கு போனான். Balcony இல் நின்று கொண்டு மூக்கை உறிஞ்சிக் கொண்டிருந்தாள்.
First time சமச்சா இப்டி தான் நித்தி இருக்கும் ... இதுக்கெல்லாம் அழுவியா?
நா அதுக்கு அழல ...
அப்றம் என்ன?
"அது தான் நல்லாவே .... இல்லையே ... அப்றம் நீ ஏன்டா ... ஒன்னுமே சொல்லாம சாப்ட? " விம்மிய படி கேட்டாள்.
இல்ல ... நா உன்ன Marriage பண்ணிகிட்டா Daily நீ சமக்கிறத தானே சாப்டணும் ... அதான் இப்பல இருந்து Practice பண்ணலாம்னு ....
அவன் சொல்லி முடிப்பதற்குள் அவள் அழுகை முறைப்பாய் மாறியது.
"கவின்!! நேத்து என்னமோ Mood out ல பேசுறன்னு நெனச்சேன். இன்னைக்கும் அதயே சொல்ற? "
வேற என்ன சொல்றது ... இது நா ரொம்ப தெளிவா யோசிச்சி எடுத்த முடிவு. நாம ரெண்டு பேரும் Love பண்ணி Marriage பண்ணிக்கிறது தான் சரி .
ப்ச் ... சும்மா சும்மா அதையே சொல்லாத ... உன்ன போய் Love பண்ண முடியுமா?
அவள் சலிப்பாய் முதல் நாள் சொன்ன அதே பதிலை சொல்ல, அவள் பதிலில் எரிச்சல் அடைந்தவன், "ச்சே " என்று கைமுட்டியால் சுவரில் ஓங்கி குத்தி விட்டு கோவமாய் வெளியே போனான்.
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro