Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

3.


ம்ம் பரவால்ல என் அக்கானு Prove  பண்ண  கொஞ்சம் ஒழுங்கா Notes எழுதிருக்க!

நித்யா சீரியஸாய் நோட்ஸ், புத்தகங்கள் என ஒரு பையில் அடுக்கிக் கொண்டிருக்க, அவள் அடுக்கி வைத்த கட்டிலிலிருந்து ஒரு நோட் புக்கை எடுத்து புரட்டிய படி சொன்னான் வினய். நித்யாவின் ஒரே தம்பி.

"டேய் அடுக்கி வெச்சிருக்கேன்ல ... இழுக்காதே. " நித்யா சிடுசிடுக்க, 

"ம்ம் பாவம்னு Help பண்ணலாம்னு வந்தா எனக்கு தேவ தான். " வினய் அவளை முறைத்து விட்டு வெளியே போனான்.  

அவன் போனதை கண்டு கொள்ளாமல் நித்யா மீண்டும் ஆர்வமாய் தன் வேலையை தொடர, கவின் அப்போது தான் 

"என்னடீ பண்ணிட்டு இருக்க" .  என்றபடி அறைக்குள் வந்தான். 

"Exam முடிஞ்சிருச்சி, அதான் இத்த Books எல்லாம் ஸ்டோர் ரூம்ல போட போறேன் " கவினை நிமிர்ந்து பார்க்காமலே பதில் சொல்லிவிட்டு தன் வேலையில் கவனமாய் இருந்தாள் அவள். 

பாவி இன்னைக்கி தானே Exam முடிஞ்சது, அதுக்குள்ள என்னடீ அவசரம் ஒனக்கு.

"ப்ச், Busy ஆ இருக்கேன்ல. Disturb பண்ணாதே " அவள் தன் வேலையை தொடர, 

"டடா " என்றபடி அவளிடம் ஒரு Box ஐ நீட்டினான் கவின். 

அதில் இருந்த Ladies watch அவளுக்கு பார்த்ததும் பிடித்துவிட, அதை ஆர்வமாய் வாங்கிக் கொண்டவள்,

"ஹேய் Cute ஆ இருக்குடா, Thanks என்றாள்" கண்கள் மின்ன. 

"லூசு ஒனக்கில்ல, அனிதாக்கு ... birthday gift . இத குடுத்து Propose பண்ண போறேன்  "

கவின் Watch ஐ வாங்கிக் கொள்ள  நித்யாவின் முகம் ஏமாற்றமாய் சுருங்கியது.

"ம்ம் All the best " என்று கையை நீட்டினாள் வலிந்து புன்னகைத்து . இருந்தாலும் குரலில் வாட்டம் மிஞ்சியிருந்தது.

கவினுக்கும் சங்கடமாய் போக, Thanks என்ற படி அதை வாங்கிக் கொண்டவன், வெளியே போக இரண்டு எட்டு எடுத்து வைத்து விட்டு மீண்டும் திரும்பி வந்து அதை அவளிடமே நீட்டினான்.

நித்யா என்ன என்பது போல அவனை பார்க்க,

"ஒனக்கு புடிச்சிருக்குல்ல, நீயே வெச்சிக்கோ " 

"ஹேய் வேணாம்பா, அனிதாக்கு வாங்கினது.  அவளுக்கே குடு.  அவளுக்கு கண்டிப்பா புடிக்கும் " 

"ப்ச், புடி . அவளுக்கு வேற Gift வாங்கிக்கிறேன்." அவள் கையில் அதை தினித்து விட்டு கவின் வெளியே போனான். 


.

.

.

நேரம் இரவு பதினொன்று முப்பது.  இருப்புக் கொள்ளாமல் இருந்தது கவினுக்கு.  First year, first semester இலேயே அனிதாவின் போன் நம்பரை எடுத்து வைத்திருந்தான்.  ஆனால் இந்தனை வருடத்தில் ஒரு நாள் கூட பேசியது இல்லை.  இப்போதும் தைரியம் இல்லை தான்.  ஆனால் இன்று பேசியே தீர வேண்டும்.  பல முறை ஒத்திகை பார்த்துக் கொண்டான். 

சரியாக பன்னிரண்டு மணிக்கு ஒரு நிமிடம் இருக்க, அவளுக்கு அழைத்தான். இதயம் பயங்கரமாய் அடித்துக் கொண்டது.   அவனை காக்க வைக்காமல் இரண்டு ரிங் இல் போனை எடுத்தவள் ஹலோ என்றாள் தூக்கக் கலக்கத்தில்.

கவின் பதிலுக்கு ஹலோ சொல்ல வெறும் காற்று மட்டுமே வெளியே வந்தது.  மூச்சு விட்டு தன்னை நிதானப்படுத்த முயன்றவன் மீண்டும் ஹலோ சொல்ல அப்போதும்  வார்த்தை காற்றாகவே வந்தது.

இவன் பக்கம் பதில் இல்லாமல் போகவே,

"ஹலோ கவின், இருக்கீங்களா "

ஹ்ம்?  ம்ம் ...  Happy birthday அனிதா என்றான்.  நேரம் சரியாய் பன்னிரண்டு மணி.

ஹேய் Thank you. நீதான் First wish ... 

அவள் பக்கமிருந்து உற்சாகமாய் பதில் வந்தது.  

ம்ம் ... அனிதா நா உன்கிட்ட கொஞ்சம் பேசணும். நாளைக்கி Meet பண்ணலாமா?

அவள் உற்சாகம் இவன் மனதை நிறைக்க தைரியத்தை வர வழைத்து கேட்டு விட்டான். 

"மீட் பண்ணனுமா?  " யோசிப்பது போல இழுத்தவள்,

"ம்ம், எங்க வரணும்னு சொல்லு. "  என்றாள்.

காலைல பத்து மணிக்கு, நம்ம College பக்கத்துல இருக்குற Coffee shop வர முடியுமா?

ஹ்ம் Ok, வந்துட்றேன்.

Thanks, அனிதா.  Bye ... Good night 

Good night.



Bạn đang đọc truyện trên: Truyen247.Pro