1.
கவின் College போக தயாராய் கீழே வர அங்கே அவனுக்காக காத்துக் கொண்டிருந்தாள் நித்யா. வழக்கத்திற்கு மாற்றமாய் அவள் இளித்துக் கொண்டு நிற்க " என்னமோ காரியம் ஆகணும்னு தான் வந்து நிக்கிறா, கண்டுக்காத கவின் ... கெத்த Maintain பண்ணு " என்று தனக்குத்தானே சொல்லிக் கொண்டு, அவளை காணாதவன் போல அவன் பாட்டுக்கு அமர்ந்து சாப்பிடத் தொடங்க, தானும் வழிய வந்து சிரித்த படியே அவன் முன்னால் அமர்ந்தாள் அவள்.
இப்போதும் அவன் கண்டு கொள்ளாதது எரிச்சலை வர வைத்தாலும் அதை காட்டிக் கொள்ளாமல், அவன் சாப்பிட்டு முடிக்கும் வரை பொறுமையாய் இருந்தவள்,
"என் வண்டில பெற்றோல் இல்லடா ... நா இன்னைக்கி உன் பைக்லயே வந்துட்றேன். "
அவள் சொல்லிவிட்டு மீண்டும் இளித்து வைக்க,
"வர வர பிச்சக்காரங்க தொல்ல தாங்க முடியல" சலித்துக் கொண்டு கை கழுவ எழும்பிப் போனான் கவின்.
அத்தே ... அவள் சிணுங்கிய படி ரம்யாவின் முகம் பார்க்க,
டேய் காலைலயே அவள அழ வெக்காதே. கூட்டிட்டு போ.
முடியாதும்மா. நேத்து எனக்கு Assignment Type பண்ணி குடுக்க சொன்னதுக்கு முடியாதுன்னு சொல்லிட்டா. அவள எல்லாம் என் பைக்ல ஏத்த முடியாது.
கவின் நித்யாவை பார்த்து முறைத்து வைக்க,
டேய் Presentation இருக்குடா. Time க்கு போய் சேரணும். அப்பா வேற வீட்ல இல்ல. கூட்டிட்டு போ. Please please ....
அவள் கெஞ்சிய படி அவன் பின்னால் வர,
சரி வந்து தொலை ..
இருவருமாய் கிளம்பினார்கள்.
சுதாகர் , ரம்யா தம்பதியினரின் ஒரே மகன் கவின். ரம்யாவின் அண்ணன் மகள் நித்யா. பக்கத்து பக்கத்து வீடுதான் இவர்களுக்கு. கவின் Engineering இறுதியாண்டு படிக்க, இந்த வருடம் தான் அதே கல்லூரியில் First year சேர்ந்தாள் நித்யா. ஒரு நாளைக்கு ஐம்பது முறை சண்டை போட்டுக் கொண்டாலும் ஒட்டிக் கொண்டே தான் திரிவார்கள் இருவரும்.
பார்க்கிங் இல் பைக்கை நிறுத்தி விட்டு,
All the best என்று அவன் கையை நீட்ட, தானும் புன்னகைத்த படி நித்யா கையை குலுக்கினாள்.
"எப்பவும் போல நல்லா சொதப்பி வை " அவன் நக்கலாய் சொல்லவும், அவனை முறைத்து விட்டு கிளம்பத் தயாரானவள் அங்கே ஸ்கூட்டியில் வந்து இறங்கிய அனிதாவை பார்த்ததும் உற்சாகமாய் கவின் பக்கம் திரும்பி அவளை கண்காட்டினாள்.
அனிதாவை பார்த்ததும் கவினுக்கும் உற்சாகம் தொற்றிக் கொள்ள,
போய் பேசட்டுமா? என ஆர்வமாய் நித்யாவிடம் கேட்டான்.
ஹெஹே அது தான் First year ல இருந்து பேசி கிழிச்சிட்டியே, இன்னைக்கி மட்டும் பேசிட்டாலும்,
அவள் கிண்டல் செய்யவும் போடீ குள்ளச்சி என்று அவளை திட்டி விட்டு இதயம் படபடக்க அனிதாவை நோக்கி நடந்தான் கவின்.
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro