Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

9

தீப்தியின் சிரிப்பை ரசித்த படி அருகில் வந்த மித்ரன்,..நிலா மா என்க...தீப்தியின் சிரிப்பு இருந்த இடம் தெரியாமல் மறைந்தது...

ஹாய்னா என நிலா கூறவும்...வா..காலேஜ்ஜ சுத்தி காட்டுறேன் என மித்ரன் கூறினான்..

ஹாஹா...இவளுக்கு நீங்க சுத்தி காண்பிக்க போறீங்கலா...இவளுக்கு இந்த காலேஜே அத்துபடி என ரேனு கூற..மித்ரன் இழித்து வைத்தான்...

"ஹும்ம்...அது எனக்கு தெரியாம இருக்குமா?? தீப்திய பார்க்க தான் என்றும் இல்லாம இன்னைக்கு க்ளாஸ கட் அடிச்சிட்டு வந்திக்கிறேன்...இப்படிலாம் நடக்கும்னு முன்னாடியே தெரிஞ்சிருந்தா நிலாவ என் கூட அடிக்கடி காலேஜ்க்கு கூட்டிட்டு வந்திருக்க மாட்டேனே மா"..
(😕😕😕)

என்னனா என நிலா கேட்க...அப்பொழுது தான் சுய நினைவிர்க்கு வந்தவனாய், இல்லை...நிலா மா..நம்ம டக் சாப்ல நியூ குல்ஃபி வந்திருக்காம்...பாட் ல இருக்கும்லே...உனக்கு கூட பிடிக்கும்னு சொல்வியே..அதான் உன்னை கூட்டிட்டு போய் வாங்கி தரலாம்னு ஆசையா வந்தேன் என மித்ரன் கூறிய அடுத்த நொடி..பெஞ்சில் ஏறியவல் வேகமாக டெஸ்கில் ஏறி மித்ரனின் அருகில் குதித்து நின்றாள்...

அடி..ஏன் டி குரங்கே..இப்படி தாவி தாவி போறே...நீ எந்திரிச்சா நாங்க வழி விட்ருப்போம்லே என ரேனு கத்தவும்.. அதுக்குள்ள குல்ஃபி முடிஞ்சிரும்டி..வாங்க போகலாம் என நிலா அவசரபடுத்தினாள்...

வா தீப்தி...போலாம் என ரேனு கூறவும்...நான் வரல..நீங்க போயிட்டு வாங்க என தீப்தி கூறினாள்..

அதுக்கு இல்லை...தீப்தி மா...நாங்க போனதும்..நீ தனியா இருப்பா...உன்னை யாராவது ரேக் பன்னா..என்ன பன்னுவே என நிலா கேட்கவும்...ஒரு நொடி விழித்தவள்...இல்லை..இல்லை...
நானும் உங்க கூடவே வரேன் என தீப்தி எழுந்து கொண்டாள்..

நிலாவின் கிண்டலையும் தீப்தியின் படப்படப்பயும் பார்த்து புன்னகைத்த மித்ரன்...வா டா என கூறி நிலாவை இழுத்து சென்றான்...

ஒவ்வொறு டிப்பார்ட்மென்ட் மாணவர்களுக்கும் சீனியர்ஸ் ஆறு பேராக முன்னாள் சென்று கல்லூரியவே சுத்தி காண்பிக்க...பின்னால் அவர் அவர்கள்(ஜுனியர்ஸ்) கதைத்த படி வந்தனர்..

மித்ரன் முன்னாள் இருப்பதால் நிலா அவனுடன் பேசியபடி செல்லவும்...ரேனுவும் அவர்களுடன் செல்ல...வேறு வழியில்லாமல் தீப்தியும் அவர்களுடன் சென்றாள்...

இது தான் கம்ப்யூட்டர் லேப் என மித்ரன் கூறவும்...இங்கே தான் கம்ப்யூட்டர்லாம் இருக்கும்...எல்லோரும் நோட் பன்னிக்கோங்க என நிலா கூற...இது எல்லோருக்கும் தெரியும் என முறைத்தான் ஜீவா..

இது தான் காமர்ஸ் டிபார்ட்மென்ட் என சத்யா கூறவும்...இங்கே தான் ஸ்டாஃப்ஸ் லாம் கடலை போடுவாங்க என நிலா கூறி சியாமின் முறைப்பை பெற்று கொண்டாள்...

இது நம்ம ஃபுட் லேப் என ஜீவா கூற...இங்கே தான் நாம்ம வகை வகையா செய்ஞ்சி சாப்பிட போறோம் என நிலா கூற.. ரேனுவும் தீப்தியும் அடக்க முடியாமல் சிரிக்க ஆரம்பித்தனர்..

டேய்...உன் தங்கச்சி ஓவரா பன்றா டா...நாங்க சொல்றதுக்குலாம் கௌன்டர் குடுக்குறா டா என ஜீவா கூறி கொண்டிருக்க மித்ரனிடமிருந்து பதில் வரவில்லை...

அவனோ...தீப்தியின் சிரிப்பை பார்த்து சொக்கி போனவன்...இப்படி கொள்ராலே...முடியலையே என வச்ச கண்ணை எடுக்காமல் பார்த்து கொண்டிருந்தான்...

இதை கவனிக்காமல் பேசிய படி.. மாடி படி ஏற...அந்த பக்கம் என்ன இருக்குனு சொல்லலே என ரேனு கேட்கவும்...அதானே..கூட்டிட்டு போங்க என நிலா கூறினாள்...

அது வாஷ் ரூம்...பார்க்கனுமா என ஜீவா கேட்க...அங்க தான் எல்லாமே என கூற வந்த நிலாவின் வாயை பொற்றி மண்டையில் "நங்கு, நங்கு" என கொட்டினான் ஜீவா..

ஆஆஆஆஆ...கண்ணனா வலிக்குது என நிலா கத்தவும்...அப்பொழுது சுய நினைவிர்க்கு வந்தவனாய்...என்ன ஆச்சி நிலா என மித்ரன் கேட்டான்..

தலையில கொட்டி கண்ணத்துல ஜீவா அடிச்சிட்டான் என கண்ணத்தில் கை வைத்த படி நிலா கூற...அடிப்பாவி...இப்படி புலுகுறாலே என நினைத்தவன்..மித்ரனை பார்க்க...அவனோ கோவத்தில் ஜீவாவின் அருகில் வரவும் ஜீவா ஓடியே விட்டான்..

பக்கி..தப்பிச்சிருச்சி என நிலா ரேனு மற்றும் தீப்தியிடம் சொல்ல...அவளின் செயலை பார்த்து சிரித்த ரேனு...ஆமா...உங்க அண்ணா பேரு என்ன?
கண்ணனா?? மித்ரனா?? என கேட்டாள்...

ஹேய்...அவன் பேர் மித்ரன் தான்...பட் நாங்க வீட்லே கண்ணனு கூப்பிடுவோம் என நிலா கூற..ஏன் அப்படி என கேட்டாள் ரேனு...

அதுவா என கூறிய நிலா...
என் அண்ணா பிறந்தது.. கண்ணன் பிறந்த ஆவணி மாதம் அஷ்டமி நேரத்தில ரோகிணி நட்சத்திரத்தில் நள்ளிரவில தான்... சரியா அதே நாள்ள பிறக்கவும் கண்ணனு பேர் வைக்க சொன்னாங்க..பட் என் டேட் மித்ரன் தான் வைக்கனும்னு ஸ்ட்ரிக்ட்டா சொன்னதாலே..மித்ரனு வைச்சிட்டாங்க...

அப்புறம் பார்த்தா அவன் செயல்லாம் கண்ணன் மாதிரி தான் இருக்கும்...நல்லா வெண்ணெய திருடி திருடி திம்பானாம்...அவனுக்கு வெண்ணெய்னா ரொம்ப பிடிக்குமாம்...

நாங்க சின்ன பிள்ளையா இருக்கும் போது ஒருத்தவங்க வெண்ணெய் விற்க வருவாங்க...இவன் அவங்க கிட்ட போய் வெண்ணெய் கேட்டானாம்..அவுங்க துட்டு(காசு)
தா ப்பா...வெண்ணெய் தரேனு சொல்லிறுக்காங்க...

இவன் வீட்டுக்குள்ள போய் திரும்பி வந்து அம்மா குளிக்குறாங்க...என் கிட்ட துட்டு இல்லை..இந்த செய்ன் தான் இருக்கு...இதை வேணா வச்சிக்கிட்டு வெண்ணையா தாங்கனு கேட்டிக்கிறான்...அவங்களும் இது தங்க செயினு நம்மளுக்கு நல்ல அதிர்ஷ்டம் தான்னு கூறி வெண்ணைய மொத்தமா குடுத்துட்டு செய்யின வாங்கிட்டு போயிட்டாங்க...

எங்க அம்மா குளிச்சிட்டு வந்து செய்ன காணோம்னு தேடுனா...இவன் வாசபடில உட்கர்ந்து வெண்ணெய தின்னுட்டு இருந்தானாம்...யாரு வெண்ணெய் தந்தானு கேட்டதுக்கு...ஒருத்தவங்களுக்கு உங்க செய்ன குடுத்தேன்...அவங்க தான் அம்முட்டயும் தந்தாங்க என மித்ரன் கூறி...அம்மாவிடம் செம்ம அடி வாங்கினான்...

ஹாஹாஹா முடியலே பா...வெண்ணெய்க்காக கோல்டு செய்ன்ன குடுத்திக்குறாங்க என ரேனு சிரிக்க...ஹிஹி நானும் தான் சாப்பிட்டேன்...ஆனா, அவன் அடி வாங்கிட்டான் என நிலா கூற இருவரும் சிரித்தனர்...

சரி அப்புறம் என தீப்தி கேட்க...இதையெல்லாம் கண்டும் காணாமல் மித்ரன் கவனித்து கொண்டிருந்தான்..

அப்புறம் என்ன...அவன் செயல்ல அப்படி கண்ணன் மாதிரி தான் இருக்கும்..
அவனுக்கு 6 வயசா இருக்கும் போது..
கிருஷ்ண ஜெயந்தி அப்ப..அம்மா அவனுக்கு துளசி மாலை போட்டு விட்டாங்க..

(கண்ணன் துளசி மாலை அணிந்திருப்பான். விஷத்தை முறித்து, உடலுக்கு வெப்பத்தை தரும் சக்தி துளசிக்கு உண்டு. கண்ணன் நாகங்களுடன் விளையாடுபவன். ஐந்து தலை நாகத்தின் மீதேறி நடனம் ஆடியவன். குளிர்ந்த மேனியன். எனவே தான், கண்ணன் துளசிமாலை அணிந்து கொள்வான். வீடுகளின் பின்பக்கத்தில் துளசிமாடம் அமைப்பதும் இதனால்தான். பூச்சிகள் நுழையாமல் தடுக்க, வீட்டின் பின்புறத்தில் துளசிமாடம் வைத்து, அதனை வழிபட்டார்கள்.)

அந்த துளசி மாலை போட்டு...தலையில மயில் இறகு வைத்து...கண்ணனை போல ஆடை அணிந்து...அரிசி மாவுல காலை வைத்து வீட்டுக்குள்ள மித்ரன கூட்டி வந்தாங்க...அதை பார்த்தவங்க எல்லோரும் அந்த கண்ணனே வந்த மாதிரி இருக்குனு சொன்னாங்க...
(வீட்டில இருக்குற குழந்தைங்க கடவுளுக்கு சமமாம்...இப்படி செய்ஞ்சா கடவுளே வீட்டுக்குள்ளே வர மாதிரியாம்)

அதே மாதிரி அவனுக்கு பிடிச்சது எல்லாம்...அந்த கண்ணனுக்கு பிடிச்சது தான்...ஐ மீன்,. சீடை, அவல் லட்டு, அப்பம், தட்டை, முள்ளு முறுக்கு, வெண்ணை பால் திரட்டு,...

அவனோட ஒவ்வொரு செயலும் கண்ணன் மாதிரி இருக்கும்...ஓடுற பாம்ப கூட பிடிப்பானம்...இவன் தான் கண்ணன் ஆச்சே...எப்படி பயப்பிடுவானு கேட்பாங்களாம்...

இப்படி இவன் செய்யுற ஒவ்வொன்றும் கண்ணன் மாதிரி இருக்குறதாலே...நாங்க கண்ணனு தான் கூப்பிடுவோம்...நான் என் அண்ணன மித்ரனு கூப்பிட்ட நியாபகமே இல்லை என கூறி முடித்தாள் நிலா...

ஓஓஓ...ஹேய்...இன்னொனு தெரியுமா...சின்ன வயசுல சுட்டி டிவி பார்ப்போம்லே...அப்ப தீப்திக்கு "லிட்டில் கிருஷ்ணா" தான் பிடிக்கும்...நாங்க அதை பார்க்கும் போது...கண்ணன் என் கண்ணன்...நீங்க டோரா வா வேணா எடுத்துக்கோங்கனு சண்டை பிடிப்பா...அதுக்காக நாங்க வீணுகுன்னே வம்பு பன்னுவோம்...

நான், எனக்கு தான் கண்ணனு சொல்லுவேன்... இல்லை.."என் கண்ணனு தீப்தி அழுவா"...

சுஜா பெரியம்மா சொல்லுவாங்க...நீ அழுவாதே தங்கம்...உனக்கு இந்த கண்ணனையே கல்யாணம் பன்னி வைக்கிறேனு...நிஜமாவானு சிரிப்பா என ரேனு கூறி முடிக்க...ஹாஹா அப்படியா என நிலா கேட்டாள்...

இதை கேட்ட படி இருந்த மித்ரன் உலகம் மறந்து சந்தோஷமாக தீப்தியை பார்த்து கொண்டிருந்தான்.....

அவளோ...ரேனு சொன்னதை கேட்டதும் சிறு வயதில் சொன்னது நியாபகம் வர..சிறு புன்முறுவலுடன் மித்ரனை நோக்க...அப்பொழுது தான் மித்ரன் தன்னை பார்ப்பதை கவனித்தவள்...அவன் கண்களை பார்த்த படியே நின்றாள் தீப்தி..
.
.
.
.
.
.
.
Sry...sry...sry...
Late ud ku...
Soolnilai sari illaadhanaala ud poda mudiyalae...

And yenaku kannan ah pathi solli indha ud ku support panna "Google guru" dharshinichimba sis and arunlovely thozhi kum thnx..

Yenna da iva...ithana peru kitta kaetikra alavuku...kannan ah pathi perisaa yedhuvum sollalaenu yosikaadheenga😕😕

Yenaku kannan and krishnanum same nu tharakannan தாரா solli than thaeriyum😕😕

Indha ud la mistake irundhaa yenna mannichirunga natpooos..

And yenna porutha vara oru mistake sollanumnaa adhuku dhairiyam vaenum...andha dhairiyathoda yenaku mistake sonna AnugSathya bro ku thnx...

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro