3
(மூங்கிலிலே வரும் சங்கீதம் போல்
நீ சிரிப்பது காவியமே
அன்புக்கு நூறு ஆசைக்கு நூறு
முத்துக்கள் சூட்டி நான் காணுவேன்
வா மகளே எனை பார் மகளே
என் உயிரின் ஒளி நீயே
பூ போலே உன் புன்னகையில்
பொன் உலகினை கண்டேனம்மா
என் கண்ணே கண்ணின் மணியே
என் உயிரே உயிரின் ஒளி நீயே )
விழித்தாள் வெருப்பாய் பார்க்கும் குழந்தையை தூங்கும் போது..அவள் சிரிக்கும் சிரிப்பை ரசனையுடன் பார்த்தார் அவளின் அன்பு தந்தை ரவி..
.
.
காலையில் எழுந்ததும் வீட்டை பெருக்கி சுத்தம் செய்து கழுவி, வாசலில் சானம் தெளித்து, கோலம் போட்டு கொண்டிருந்தவளிடம்...
என்ன மா ப்ரியா...நேத்து நீங்க யாரும் வீட்ல இருக்கிற அரவமே இல்லையே என பக்கத்து வீட்டில் இருக்கும் தனம் ஒரு மாதிரி கேட்க...ஆமா க்கா...ஏதோ நடக்க கூடாதது நடந்த மாதிரி வீடே வெறுமையா இருந்திச்சி...எப்பையும் பிள்ளைங்க வீட்டு வாசல்ல ஆடிட்டு இருக்கும்...இந்த குட்டிம்மா காலையிலயே கோலம் போடுறேனு அழிச்சாட்டியம் பன்னும்..இப்ப அவளையும் காணோம் என எதிர் வீட்டில் இருந்த கோகிலா கேட்டாள்...
ஏர்கனவே நொந்திருந்தவள்.. அவர்களை கண்டுக்கொள்ளாமல்...அவங்க சிக்கல்ல இருக்குற குட்டிம்மா வோட பாட்டி வீட்டிற்கு போயிருக்காங்க என தட்டு தடுமாறி கூறிய ப்ரியாவிடம்...அதுக்கு ஏன் மா நீ அழுகுறா என கோகிலா கேட்க...இல்லை...அப்படிலாம் இல்லை...பாவம்...அவ பாட்டிக்கு உடம்பு சரியில்லை என கூறி உள்ளே சென்று..ச்சே...யாரு வீட்டில என்ன நடக்குதுனே பார்த்துட்டு இருப்பாங்க போலே என பொருமினாள் குட்டிம்மா வின் அத்தை ப்ரியா...
இங்கே...பாருங்கக்கா...எனக்கு ஏதோ இது சரியா படலே...அவ எதையோ மறைக்கிறா என கோகிலா கூறவும்...
அட..விடு கோகிலா...
எவ்வளவு பொத்தி பொத்தி மறைச்சாலும் உண்மை வெளி வராமயா போக போகுது...அப்ப பார்த்துக்குவோம் என்ற தனத்திடம்...சீக்கிரம் கண்டுபிடிக்கனும் க்கா என்றபடி உள்ளே சென்றாள் கோகிலா...
(இவங்களாம் எப்ப திருந்துவாங்களோ)
.
.
.
நான் நேத்து நைட்டு கொலை நடந்ததாவே சொல்லலையே டா...உனக்கு எப்படி நைட்னு தெரியும்...உண்மைய சொல்லு டா என்ற சுந்தரிடம்...
இ ..இல்..லை சார்...அ...அது என தடுமாறிய பாபு வின் ஃபோன் அலற...பதற்றத்துடன் அதிகாரியையும் கைப்பேசியையும் மாறி மாறி பார்த்தான் பாபு...
பாபுவின் தடுமாற்றத்தை கவனித்த சுந்தர்...காவலர் கோபாலிடம் கண்ணால் ஏதோ கூற...பாபுவின் கைப்பேசியை எடுத்து அதிகாரியிடம் குடுத்தார் கோபால்..
அதில் வந்த அழைப்பை சுந்தர் ஏற்க...
"டேய்...பாபு பின்னிட்டே டா...செம்மயா வந்திருக்கு...பார்க்கும் போதே ##### இருக்கு...இதுக்கு உன்னை சிறப்பா கவனிக்கிறேன் டா" என கூறுவதை கேட்டு...கைப்பேசியை அனைத்தான் சுந்தர்...
யாரு டா இது...அவன் எதை பத்தி பேசுறான் என கேட்ட சுந்தரிடம்...சார்...எனக்கு தெரியாது சார்...அவன் ஏதோ உளறுறான்
என பாபு கூறிக் கொண்டிருக்க...
கைப்பேசியை மற்றொரு காவலர் செந்திலீடம் கொடுத்து விட்டு....சேர்ச்(search) என்றான் சுந்தர்...
.
.
எங்க பிள்ளையை எப்ப டிஸ்சார்ஞ் பன்னலாம் டாக்டர் என கேட்ட ரவியிடம்...
சாரி டு ஸே திஸ்...கிட்ட தட்ட மூனு பேறு பாலியல் பலாத்காரம் பன்னிருக்காங்க...
இந்த சின்ன குழந்தைக்கு ஏகப்பட்ட ப்ளட் லாஸ் ஆகியிருக்கு...
உடம்புல சுத்தமா ஸ்ட்ரென்த் இல்லை...ரொம்ப பயந்து போய் இருக்கிறா... ஒரு ஒன் வீக் இங்கேயே பெட் ரெஸ்ட்ல இருக்கட்டும்...அப்புறம் க்யூர் ஆனதும் சைகாலஜிகல ட்ரீட்மென்ட் குடுக்குறத பத்தி யோசிப்போம்...
இப்போதைக்கு எதையுமே பொண்ணு கிட்ட கேக்காதீங்க...ஃப்ரீ மைன்டா இருக்கனும்...பொண்ணுக்கு முன்னாடி எதை பற்றியும் நீங்க பேசாதீங்க என சில பல அறிவுரைகளை கூறி டாக்டர் சென்றார்...
.
.
தர்ஷன், ராம், ஷிவானி மற்றும் ரேனுவிடம்...நீங்க யாரும் வெளியே போகவே கூடாது..
நான் போய் ஹாஸ்பிடல்ல சாப்பாடு குடுத்துட்டு வர்ரேன்...
பாப்பாவ பத்தி யார் கேட்டாலும் , யாரு கிட்டயும் எதுவும் சொல்ல கூடாது...
நீங்க யாராவது சொன்னீங்கனு தெரிஞ்சிச்சு உங்களுக்கு சூடு போட்ருவேன்...
ஜாக்கிரதையா இரிங்க என மிரட்டி விட்டு சென்றாள் ப்ரியா...
.
.
தேடும் படலத்தில் தாங்கள் எதிர்ப்பார்க்காததை கண்டவுடன் அதிர்ந்தனர் சுந்தர் மற்றும் கோபால்...
கையில் வைத்திருந்த கைப்பேசியை பார்த்த செந்தில் உச்சக்கட்ட அதிர்ச்சிக்கே சென்றான்..
.
.
.
இப்ப குட்டிம்மா எப்படி இருக்கிறா என கேட்ட ப்ரியாவை கட்டி கொண்டு அழுதாள் சுஜா...
ரொம்ப கஷ்டமா இருக்கு டி...ஒரு பொண்ணா தாங்க கூடாத கஷ்டத்த என் பிள்ளைக்கு குடுத்துக்குறாங்களே..
எப்படி டி, இதைலாம் தாங்குவா...மனசு ரொம்ப பாரமா இருக்கு டி என புலம்பிய சுஜாவை சமாதானம் படுத்தியவள்...கீழே கோயில் இருக்கு...போய் சாமி கும்பிட்டு வா என கூறியவளிடம்...இனி நான் கும்பிட்டு என்ன டி ப்ரோஜனம்... இதுக்கப்புறம் அந்த கடவுள் கிட்ட நான் கேக்க என்ன டி இருக்குது என கோவமாக கூறியவளை சமாதானம் படுத்தி.. அங்கே போய் இருந்த உனக்கு கொஞ்சம் மனசு இலேசா இருக்கும்...நான் பாப்பாவை பார்த்துக்குறேன் என அனுப்பி வைத்தாள் ப்ரியா...
.
.
கீழே வந்தவள்...கோபத்துடன் சாமி முன்னாள் போய் நின்றாள்..
உன் பெயருக்கு மறு பெயர் தான் என் பிள்ளைக்கு வச்சிக்கிறேன்...
அப்புறம் எதுக்கு அவளுக்கு இவ்வளவு கஷ்டத்தை குடுத்திக்குறா என கோவமாக கத்த...சாந்தமாக இருந்தார் மஹா விஷ்னு...
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro