28
நிலாவின் யோசனை என்ன முயன்றும் கடந்த காலத்திர்க்கே சென்றது..
அன்று:
மாணவ மாணவிகள் சந்தோஷமாக கல்லூரி பேருந்துகளில் சுற்றுலா சென்றனர்..
"என்ன ஒரு அமைதி.. நாம டூர் தானே போறோம்.. அதுக்கு ஏன் இவ்வளவு அமைதி?? பாட்ட போட்டு பட்டைய கிழப்புங்க" என ஜீவா எழுந்து ஆட ஆரம்பிக்க.. நிலாவும் சேர்ந்து ஜீவாவுடன் ஆட.. மற்றவர்களும் ஆடினர்..
என்ன தான் எல்லோரும் ஆடினாலும் சிவ்வின் கண்களுக்கு நிலா மட்டுமே தெரிந்தாள்..
இரசணையாய் பார்த்த கண்களுக்குள் கோவமும் வந்து சென்றது.. எவ்ளோ தான் நல்லவனா இருந்தாலும் ஜீவாவுடன் நிலா ஆடியது சிவ்விர்க்கு பிடிக்கவில்லை போலும்...
மற்றொரு புறமோ தன்னுடைய நட்புகளான ரேனு, நிலா ஆடுவதை வாயில் பாடலை முனுமுனுத்தவாறு மகிழ்ச்சியுடன் பார்த்துகொண்டிருந்த தீப்தியை எந்த ஒரு இடையூரும் இல்லாமல் தெள்ள தெளிவாக ரசித்தான் மித்ரன்..
தன்னை யாரோ பார்ப்பது போல் தோன்றவும்.. தீப்தி சுற்றி முற்றி பார்க்க.. மித்ரன் தன்னையே பார்ப்பதை கண்டுகொண்டாள்..
மித்ரனின் பார்வையை எதிர்கொள்ள முடியாமல் தட்டுத்தடுமாறி முதல் முறையாக தீப்தியிடம் வெட்கம் குடியேர.. அவளின் மாற்றத்தை ரசித்தவனாய் மேலும் அவளை கண்களால் வருட.. அவள் கையில் புள்ளரிப்பதை அவன் உணர்ந்து கொண்டான்..
தன்னை சமாதானம் படுத்த வழி தெரியாமல் மித்ரனை பார்த்தும் கீழே குனிந்தவளுமாக இருந்த தீப்தியை பார்க்க.. இப்பவே தீப்தியை கல்யாணம் பண்ணா எப்படி இருக்கும்?? என நினைக்கும் நேரம் பஸ் பஞ்சராகி நின்றது..
"ச்சே, சரியான நேரத்தில இந்த பஸ் நிற்கனுமா??" என கோவத்தில் பேருந்தை ஓங்கி குத்தியவாரு மித்ரன் கீழே இறங்க.. மற்றவர்களும் கீழே இறங்கி கொண்டிருந்தனர்..
இறுதியாக நிலா இறங்கும் நேரத்தில் பின்னாலிருந்து ஒரு கரம் அவளை இழுக்கவும்.. திரும்பி பார்க்க அங்கே சிவ் நின்றுகொண்டிருந்தான்..
"எதுக்கு என் கைய பிடிச்சு இழுத்தீங்க??" என நிலா கோவமாக கேட்கவும்.. ஒற்றை வரியில் கூறிவிட்டு சிவ் கீழே இறங்கினான்..
பஸ்ஸ சரிபன்ற வரை சும்மா ஒரு நடைய போடுவோம் என ஆளுக்கொரு பக்கம் நடைபோட.. ரேனு,நிலா மற்றும் தீப்தி ஒரு ஓரமாக நடந்தனர்..
சிவ் கூறியதை நினைத்த படி நிலா நடக்க, மித்ரனின் செய்கையை மனதில் சுமந்தவாறு தீப்தி நடந்தாள்.. இவர்கள் இருவரும் ஏன் இவ்வளவு அமைதியாக நடக்கிறார்கள் என ரேனு யோசித்த நேரம் ஏதோ சத்தம் கேட்க அங்கே திரும்பி பார்த்தாள்..
"ஹேய்.. நிலா.. அங்க யாரோ கத்துர சத்தம் கேட்குது " என ரேனு கூறவும் நிலாவும் தீப்தியும் தங்கள் கணவுலகத்தில் இருந்து வெளியே வந்து சத்தம் வரும் திசையை நோக்கி சென்றவர்கள் உறைந்து நின்றனர்..
முதலில் சுதாரித்த நிலா "கண்ணானா... கண்ணானா.. மித்ரன்னா..ஜீவா.." என கூக்குறள் குடுக்க நிலாவின் சத்தத்தை கேட்டு ஓடி வர..
அங்கு இருந்த ஐந்து ஆண்கள் அரைகுறை ஆடையுடன் ஓட ஆரம்பித்தனர்..
அதற்க்குள் அங்கே ஓடி வந்த மித்ரன், ஜீவா, சத்யா, சிவ் மற்றும் பிற மாணவர்களும் சேர்ந்து அந்த பொருக்கிகளை பிடித்து அடிக்க ஆரம்பித்தனர்..
தீப்தி,.. அந்த சின்னஞ்சிறு குழந்தையின் அருகில் சென்று.. "உனக்கு ஒன்னும் ஆகலை டா.. அந்த கடவுள் காப்பாத்திட்டாரு.. க்ரிஷ்னா காப்பாத்திட்டாரு.. கண்ணா காப்பாத்திட்டாரு" என அழுதவாறு அந்த நான்கு வயது மதிக்கத்தக்க குழந்தையை தூக்கிக் கொண்டு வெளியே வந்தாள்..
அனைவரும் அந்த குழந்தையை சமாதானம் படுத்த முயன்று.. காவல் நிலையம் எங்கே இருக்கு என விசாரித்தவாரு இருக்க.. தீப்தியின் கண்களுக்கு மித்ரன் மட்டுமே தெரிந்தான்..
ஏதோ அவள் எண்ணம் மித்ரன் மட்டுமே அந்த குழந்தையை காப்பாற்றியதாக இருந்தது..
தன்னையே அறியாமல் மித்ரன் அருகில் சென்றவள்.. "தேங்ஸ் மித்ரன்.. நீங்க இந்த குழந்தைய காப்பாத்திட்டீங்க.. ஆனா, அன்னைக்குகுகுகு என்னையும்ம்ம்ம்ம் நீங்க" என கூறியவள் அடுத்த வார்த்தை கூறும் முன்.. அவன் மேல் மயங்கி விழ தாங்கி பிடித்தான் மித்ரன்..
"ஏன் மித்தூ.. அன்னைக்கு மட்டும் நீ வந்திருந்தா.. இன்னைக்கு நம்ம சந்தோஷம் இரட்டிப்பா இருக்கும்லே" என தீப்தி கேட்க.. "என்ன சொல்லுறே.. என்னைக்கு தீப்தி" என புரியாமல் விழித்தான் மித்ரன்.
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro