22
காலை விடியல் அழகாக விடிய.. குளித்து முடித்து டவலால் துவட்டியவாறு வந்து அறையில் இருக்கும் ஜன்னல்களை திறந்து கொண்டிருந்தவள்... ஒரு ஜன்னல் மட்டும் சிக்கி கொண்டு திறக்க முடியாததால்.. அதனுடன் போராடி கொண்டிருந்தாள் தீப்தி..
சத்தம் கேட்டு கண்விழித்தவன் காலை இயற்கையை இரசிக்கிறதை விட்டுவிட்டு.. தன் மனைவியின் அழகை இரசிக்க ஆரம்பித்தான்..
"ஐயோ, இப்படி கொல்லுறாலே.. காலையிலே இப்படி வந்து கண்முன்னாடி நிக்கிறாலே.. ஆமா, இவ லவ்லாம் நல்லாதான் பன்னுறா.. ஆனா, பக்கத்துல போனா மட்டும் எறிஞ்சு எறிஞ்சு விழுறா?? என்னவா இருக்கும்??" என தாடையில் கைவைத்த படி யோசித்தவன்.. "சரி.. எதா இருந்தா என்ன?? நாம்ம தானே மாத்தனும்.. பொண்ணுலே.. அதான் கொஞ்சம் பயப்பிடுறா போலே" என நினைத்த படி எழுந்து தீப்தியின் பின்னால் போய் நின்றவன் அவளின் அசைவையே பார்த்து கொண்டிந்தான்..
அவளோ, அவனை தூண்டும் விதமாக அந்த ஜன்னலுடன் மள்ளுகட்டி கொண்டிந்தவளின் ஆடை அவள்
குளித்து விட்டு வந்ததால் அவள் மேனியில் ஒட்டிபோய் அங்கு அங்கு ஈரமாக இருக்க.. அதை பார்த்த படி நின்றவன் சொக்கி போய் அவளை பின்னால் இருந்து அணைத்து கழுத்தில் முகம் புதைக்க.. தீப்தியோ,.
"என்ன இது.. விடுங்க மித்ரன்.. இப்படிலாம் பன்ன கூடாதுனு எத்தனை தடவை சொல்லிக்குறேன்.. இதலாம் தப்பு" என கூறி முறைத்தவளிடம்.. "என்னது தப்பா?? அது சரி.. நான் உன் ஹஸ்பண்ட் டி.. மேரேஜ்க்கு முன்னாடி தான் பக்கத்துல வர விட மாட்டிக்கிறானு பார்த்தா இப்பையும் நெருங்க விட மாட்டிக்கிறா.. மீ பாவம் டி.. என் செல்லம்ல" என தீப்தியின் அருகில் நெருங்கியவனை தள்ளி நிற்க வைத்தவள்.. "இங்க பாருங்க மித்தூ.. எனக்கு இதெல்லாம் சுத்தமா பிடிக்கல" என சினுங்கியவளை..
"ஹேய்.. ஆமா.. இப்ப நீ என்ன சொன்னே" என கேட்டவனிடம்.. "என்ன சொன்னேன்??" என திருதிருவென விழிக்க.. "இல்லை.. இப்ப என்னை ஏதோ செல்லமா கூப்பிட்டிலே.. என்ன அது??" என கேட்ட மித்ரனிடம்.. "அது.. அது.. ஒன்னும் இல்லை" என மறுக்க.. "என் தீபு குட்டிலே.. ப்ளீஸ் டா.. சொல்லு மா" என கெஞ்சி கொண்டிருக்க.. "அது வந்து" என வாயை திறக்க..
"அண்ணி.. அம்மா கூப்பிடுறாங்க" என நிலா கதவை தட்டவும்.. "இதோ வந்துட்டேன்" என வேகமாக கதவை திறந்து வெளியே சென்றவள்.. "ஏன் டி அண்ணினு சொல்லுறா எருமை.. எத்தனை தடவை சொல்றேன்?? அப்படி கூப்பிடாதே.. பேர் சொல்லி கூப்பிடுனு.." என முறைத்தவளை.. "ஹிஹி.. அம்மா பேசுறாங்க தீப்ஸ்.. ஆனாலும், உன்னை அண்ணினு கூப்பிட எனக்கு ஜாலியா இருக்கு" என சொல்லி சிரித்தவளை பார்த்தவள்.. "ஆமா.. ஏன்?? உன் கண்ணுலாம் சிவந்து இருக்கு?? அழுதியா?? இல்லைனா தூங்கலையா??" என கேட்ட தீப்தியிடம்.. "இல்லை.. அப்படிலாம் இல்லை" என கூறிய நிலாவின் கண்களில் கண்ணீர் நனைந்து போய் இருந்தது..
"என்ன டி?? ஏன் அழுகுறா??" என்க... "தெரியாதவங்க கிட்ட சொல்லலாம்.. தெரிஞ்சிக்கிட்டே தெரியாத மாதிரி கேட்டா எப்படி சொல்லுவாங்க" என்றபடி ரேனு வர.. குற்ற உணர்ச்சியில் உதட்டை கடித்து கண்ணீரை அடக்கி கொண்டு நின்றாள் நிலா..
"ப்ச்ச்.. ரேனு.. என்ன இது.. நடந்ததுலாம் நடந்து முடிஞ்சிருச்சி.. அதை மாத்த முடியாது.. ஒரு நேரம் நல்லா பேசுறா.. இன்னொரு நேரம் குத்தி காமிக்கிறா.. என்னதான் நினைச்சிட்டு இருக்கிறா.. இவ நம்ம ஃப்ரெண்ட்.. அதை மறந்துட்டியா??" என தீப்தி கொஞ்சம் கடுமையாகவே கேட்க..
"நான் மறக்கலே.. அதனால தான் திணறி போய் நேரத்துக்கு ஒரு மாதிரி பேசுறேன்.. ஆனா, மேடம் என்னை ஃப்ரெண்ட்னு நினைக்கலயே.. மறந்திருப்பாங்கலோ" என யோசிப்பவள் போல் பாவனை செய்தவள்..
"அட ஆமல்லே.. காதல் கண்ணை மறைச்சிரும்னு சொல்லுவாங்களே.. உலகத்தையே மறக்குறவங்களுக்கு.. நான்லாம் அற்பம் தானே" என ரேனு பேசிக்கொண்டே போகவும்.. நிலா அழுதபடி ஓடி அறைக்குள் புகுந்து கொண்டாள்..
"ஏன் ரேனு.. இப்படி நடந்துக்குறே.. அவ அழுவுறா பாரு" என தீப்தி வருத்தமாக கூற.. "என்னாலையும் முடியலை தீப்தி.. சில நேரம் அவ்வளவு கோவம் வருது.. சில நேரம் அவள பார்க்கும் போது ரொம்ப கஷ்டமா இருக்கு.. நானும் மறக்க ட்ரை பன்றேன்.. மறக்க முடியல டி" என்றவளின் கண்கள் கலங்கியது..
"அடச்சே.. பழைய ப்ராப்ளத்தை கிளறி உன் மூட ஆஃப் பன்றேன் பார்த்தியா?? நான் ஒரு லூஸு.." என்றவள்.. "ஹேய்.. அத்தை உன்னை கூப்பிட்டாங்க.. அண்ணாக்கு டீ கொண்டு போகனும்லே" என ரேனு கூற..
அப்பொழுது தான் நியாபகம் வந்தது..
"அட கடவுளே.. நிலா கூப்பிட்ட அவசரத்துல மித்தூ கேட்டுட்டு இருக்கும் போதே பதில் சொல்லாம இப்படி ஓடி வந்துட்டோமே.. கோவமா இருப்பாங்களோ??" என எண்ணியவள்.. "சரி ரேனு.. நான் டீ குடுத்துட்டு வரேன்.. நீ போய் நிலாவ சமாதானம் படுத்து" என கூறியவள் சமையலறையை நோக்கி சென்றாள்..
"வா மா.. எழுந்துட்டியா?? இந்தா மா.. டீ.. இதை நீ குடிச்சிட்டு அவனுக்கும் போய் குடுத்திரு" என பாக்கியா கூறி தேனீரை குடுக்க.. "அதை வாங்கியவள்.. ஏன் அத்தை நீங்க போட்டீங்க.. நான் வந்து போட்றுப்பேன்லே" என கூறி பாக்கியா முறைப்பதை பார்த்தவள்.. "ஐயையோ.. சாரி.. சாரி.. அம்மா" என பதறியவளின் தலையை வருடியவர்.. "பரவாயில்லை மா.. அங்கே உன் புருஷன் உனக்காக வெய்ட்டிங்.. டீ ஆறிறாம.. அப்புறம் கத்துவான்" என கூற.. "சரி மா.. நான் குடுத்துட்டு வரேன்.. நான் தான் சமையல் பன்னுவேன்.. சரியா??" என்றவளிடம.. "அட.. புது பொண்ணு மா நீ.. ரெஸ்ட் எடு.. கொஞ்ச நாள் போனதும் நீயே மொத்த பொறுப்பையும் எடுத்துக்கோ.. சரியா??" என கூறி அனுப்பி வைத்தார் பாக்கியா..
"என்ன இவ.. பலமா யோசிச்சிட்டு வர்ரா?? என்னவா இருக்கும்??" என யோசித்தபடி தன்னை கோவமாக வைத்து கொண்டவன் அவளை கண்டுகொள்ளாமல் இருக்க.. "இந்தாங்க டீ" என குடுத்தவள்.. அவனை கண்டுகொள்ளாமல் யோசனையுடனே கட்டிலில் அமர.. அவனோ, இது சரி வராது என எண்ணியவன்.. "அடியே, பொண்டாட்டி.. நான் கோவமா இருக்கேன் டி" என பாவமாக முகத்தை வைத்து கூறியவனிடம்.. "ஓ, ஏங்க??" என கேட்க.. "சுத்தம்" என தலையிலடித்து கொண்டவன்.. "சரி பேபி மா.. என்ன தின்கிங்??" என கேட்க..
"அதுவா.. ஹான்.. என்னை புது பொண்ணு அதுனால ரெஸ்ட் எடுனு அம்மா சொன்னாங்க.. புது பொண்ணுனா வொய் ரெஸ்ட் எடுக்கனும்.. எனக்கு புரியல.. அதான் யோசிச்சிட்டு இருக்கேன்" என உதட்டை பிதுக்கி அப்பாவியாக கேட்டவளை.. "ஹாஹா.. பேபி.. யோசிக்கனும்னா ப்ரைன் வேணும்.. உனக்கு தான் அது இல்லையே" என கூறியவன்.. அவள் முறைத்ததும் வாய் மேல் கைவைத்து.. நான் எதுவும் சொல்லலை என்பது போல செய்கை செய்தவன்.. சிறிது நேரத்திர்க்கு பிறகு..
"பேபி.. அந்த சீக்ரெட் எனக்கு தெரியும்" என மித்ரன் கூறினான்..
"என்ன சீக்ரெட்" என யோசனையுடன் கேட்க.. "அதான் உன்னை ஏன் ரெஸ்ட் எடுக்க சொன்னாங்கனு தான்" என கூறவும்.. "ஹான்.. சொல்லுங்க.. சொல்லுங்க.." என கேட்க.. "சும்மா சொல்லனும்னா எப்படி?? எனக்கு இங்கே ஒரு முத்தம் குடு.. சொல்லுறேன்" என கண்ணத்தை காமித்தவனிடம்.. "யோ, போலீஸ் காரணா இருந்துட்டு லஞ்சம் வாங்குறா.. தப்பா தெரியலையா?? உனக்கு" என தீப்தி கேட்க.. "ஹிஹி.. இந்த லஞ்சம் வாங்கலாம்.. ஏன்?? இங்க கொல்லையே அடிக்கலாம்.. தப்பே இல்லை" என கண்ணடித்தவனிடம்.. "இப்ப சொல்ல முடியுமா?? முடியாதா??" என கேட்டாள்..
"ஒரே ஒரு கிஸ் குடு டி.. ப்ளீஸ் டி.. ஆம்பளைய கெஞ்ச வைக்காதே டி.. ஒரு மாதிரி இருக்கு" என கூறி அடம்பன்னியவனை பார்த்தவளுக்கு இரக்கம் வந்ததோ எனவோ தெரியவில்லை.. "சரி.. ஒன்னே ஒன்னு தான்" என கூறி கண்களை மூட சொல்லி பல கட்டளைகள் இட்டு அவன் கண்ணத்தில் தன் இதழ் பதித்தாள்..
"ஒரு கிஸ் வாங்க என்னலாம் பன்ன வேண்டியிருக்கு.. இவளை எப்போ என் வழிக்கு கொண்டு வந்து.. நான் எப்போ அப்பாவ ஆகுறுது" என மனதினுள் புலம்ப..
("அட போயா.. ஒரு கிஸ் சீன்ன வைச்சே என்னை ஒரு யூடி போட வைச்சிட்டியே டா" என ஆதர் கூற.. "என்ன ஆதர்.. அங்க சுத்தி இங்க சுத்தி கடைசியா எங்க பெட் ரூம்க்கே வந்துட்டீங்க" என கேட்டவனிடம்.. "சும்மா.. உன்னை சமாதானம் படுத்த வந்தேன்.. பாவம்.. அவ கிட்ட மாட்டிக்கிட்டியே" என கூறியவளை.. "சொல்லவா?? சொல்லவா?? என் பொண்டாட்டி கிட்ட சொல்லவா??" என கேட்டவனிடம்.. "அடி ஆத்தி.. அந்த குட்டிச்சாத்தான் கண்ணை திறக்குறதுக்குள்ள நான் ஓடிடுரேன்🏃🏃")
"பேபி.. கிஸ் வாங்குன நானே கண்ணை திறந்துட்டேன்.. நீ ஏன் கண்ணை மூடிட்டு இருக்குறா?? உனக்கு எதுவும் வேணுமா" என குறும்பாக கேட்டவனை பார்த்து முறைத்தவள்.. "ஆமா ஆமா.. வேணும்.. அந்த சீக்ரெட் சொல்லுங்க" என கூற.. "அதுவா?? அது.." என கூறியவன் அவளை அருகில் அழைத்து அவளின் நிலை அறியாமல் காதுக்குள் கிசுகிசுக்க.. அவனின் ஒவ்வொரு வார்த்தைலும் இதயம் தடபுடலென தடுமாறி துடிக்க கண்களில் இருந்து கண்ணீர் வர தலை சுற்றி விழ போனவளை தாங்கி பிடித்தவன்.."என்ன ஆச்சி டா" என பதறியபடி கேட்க.. "ஒன்னும் இல்லை.. லைட்டா தலை சுத்துற மாதிரி இருக்கு.. தூங்கட்டா??" என கேட்கவும்.. "சரி.. மா.. படுத்துக்கோ" என கூறியவன் அருகில் அமர்ந்தான்..
அவள் நெஞ்சமோ சிறு வயது காட்சிகள் முன்னும் பின்னும் முரணாக வந்து அவளை நிலைகுலைய வைத்தது..
Hi hi hi frndz..
How r u all??
Ud mokkaiyaa podhunu thaeriyudhu..
Bcz yen story ya naanae marandhutaen.. again read panni potikraen..
Vazhakam pola kaluvi oothirunga..
And my new story
IIdhukum unga support vaenum frndz..
And kavidhai thalaivi arunlovely kavidhai vadivathulayae oru kadhai potrukaa " நாயகனை பிரியாள்" padithu paarungal frndz..
Tata
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro