Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

17

வகுப்பறையில் நடத்தும் பாடத்தில் கவனத்தை செலுத்தாமல் ஆழ்ந்த யோசனையில் இருந்த ரேனுவின் கையை சுரண்டிய நிலா,.. "ஹேய் ரேனு.. உன்னை ரொம்ப நேரமா அந்த சார் கூப்பிடுறாங்க டி.. நீ என்ன டி யோசிச்சிட்டு இருக்கே" என கேட்க.. அப்பொழுது தான் சுய நினைவிர்க்கு வந்தவளாய் எழுந்து திருதிருவென விழிக்க,.. "என்ன கண்ணை திறந்துட்டே தூங்குறியா??" என கேட்டவரை.."நோ மேம்" என ரேனு கூற.. " நான் பாட்டுக்டு கேட்டுட்டு இருக்குறேன்.. நீ என்ன பதில் சொல்லாம இருக்குறா?" என கேட்டவரை பார்த்துவிட்டு.. சுற்றி உள்ளவர்களை பார்க்க.. "அங்க என்ன பார்க்குறே.. ஃபேஷன் பேரைட்க்கு வர மாதிரி வரது.. நீங்களாம் காலேஜ்க்கு படிக்கவா வரீங்க.. கெட் அவுட்" என அவர் கத்த.. "ப்ச்ச்.. பக்கி.. துரத்தி விட்ருச்சி" என மனதில் புலம்பியவாரு வெளியே சென்றாள் ரேனு..

"அந்த சம்பவத்துக்கு அப்புறம் எப்பையுமே சோகமாக திரிந்தவளை கஷ்டப்பட்டு அதிலிருந்து வெளியே கொண்டுட்டு வந்தாலும் ஆண்களை பார்த்தாள் பத்தடி இல்லை.. இருபது அடியே தள்ளி நிற்பவள்.. இந்த சில நாட்களாக அவளின் கண்கள் மித்ரனை ஏறிட்டு பார்த்தது அதிசியமே... அவள்,. ஒருவனை ஏறிட்டு பார்ப்பது என்றால் அது கல்வெட்டில் பதிக்க வேண்டிய விஷயமே.. அவனால், தீப்தி அவளுக்கே என அவள் போட்டிருந்த இரும்பு சுவற்றை உடைத்தெறிய தயாரானவள்.. இன்று பேசிய மித்ரனின் பேச்சை அவள் கேட்டிருந்தாள் நிச்சயமாக அதிலேயே முடங்கியிருப்பாள்.. எக்காரணத்தை கொண்டும் மித்ரனின் குணம் மட்டும் தீப்திக்கு தெரிய வரகூடாது.. அவளும் சராசரி பெண்ணாய் இந்த உலகத்தில் நடமாடனும்" என ஏதேதோ யோசித்தபடி நடந்த ரேனு எதிரே வந்த ஜீவாவின் மேல் மோதி நிற்க.. "என்ன ரேனு.. நடந்துக்குட்டே தூங்குரீங்க போல" என கேட்க.. "இல்லை அண்ணா.. அது" என கூறியவள் தடுமாறி நிற்க.. "அண்ணாவா??.. ஏன் மா என்னை பார்த்து அண்ணானு சொன்னா?" என பாவமாக கேட்ட ஜீவாவை புரியாமல் பார்த்தாள் ரேனு..

"அது சும்மா.. அது சரி.. மார்னிங் மித்ரன் அண்ணா செம்ம கோவமா இருந்தாங்க.. நீங்க எல்லாரும் செம்மயா திட்டு வாங்குனீங்க போலே" என அர்த்தமாய் கேட்டு ஜீவாவின் முகத்தை பார்க்க.. "அது ஒன்னும் இல்ல மா.. இந்த எலக்ஷன் டைம்னால எதுக்கெடுத்தாலும் கோவப்படுறான்.. அது தான்.. வேற ஒன்னும் இல்ல" என ஜீவா கூறவும்.. "நிஜமா அவ்வளவு தானா??" என கூர்ந்து நோக்கியவளிடம்.. "ஆஹ.. உனக்கு ஏதோ தெரியனும்னு கேக்குற.. அது என்னனு கேளு.." என கூறவும்.. "அப்படிலாம் இல்ல.. லைப்ரரில புக் எடுக்கனும்.. நான் போய்ட்டு வரேன்" என கூறி செல்ல.. "ஏன் இவ இவ்வளவு தடுமாறுரா" என நினைத்தவன் அவள் செல்லும் திசையையே பார்த்தபடி நின்றான்..

"இன்னைக்கு என்ன சாப்பிட்டாலும் அந்த ராஜோட செலவுனு ஃப்ரீயா சாப்டீங்களே.. அப்போ வோட் யாருக்கு போடுவீங்க" என மாணவர்களில் ஒருவன் கேட்கவும்.. "அவன் செலவுல சாப்டோம்னா அவனுக்கு தானே வோட் படனும்.. ராஜ் செலவுல சாப்டுட்டு மித்ரன்க்கு வோட் போடுறது எப்படி சரியா வரும்??" என மற்றொரு மாணவன் பதில் குடுக்க.. "ஆனா, அந்த ராஜ் பொல்லாதவன்லே.. அவனால எத்தனை பொண்ணுங்க பாதிக்க பட்டிக்குறாங்க.. அதெல்லாம் மறந்துட்டு அவனுக்கு வோட் போட்டு அவன் காலேஜ் சேர்மேன் ஆகிட்டா.. நாளைக்கு அவன் ஆட்டம் அதிகமாகிடுமே" என மூன்றாமானவன் கூறவும்.. "அப்படி பார்த்தா.. அந்த மித்ரனும் தான் ஃபர்ஸ்ட் யேர் பொண்ணுகிட்ட தப்பா நடந்துக்க பார்த்தான்" என ஒருவன் கூறவும்.. "அது தான் ராஜோட ப்ளானு தெரிஞ்சிருச்சே.. மித்ரன் மேலே எந்த தப்பும் இல்லையே" என ஒருவன் அவனுக்கு பதில் கூற.. "அட போங்க பா.. அந்த மித்ரனும் சேர்மேன் ஆகுறதுக்காக ட்ராமா பன்னலாம்.. அந்த ஃபர்ஸ்ட் யேர் பொண்ணோட ஃப்ரெண்டோட அண்ணா தானே மித்ரன்.. ஃப்ரெண்ட்க்காக மித்ரன் செய்ஞ்ச தப்ப அந்த பொண்ணு மறைச்சிக்கலாம்" என கூறவும்.. "அப்டினா இப்போ யாருக்கு வோட் போட போறீங்க??" என முதலில் ஆரம்பித்தவன் கேட்க.. சிலர் ராஜ் என்றும் சிலர் மித்ரன் என்றும் கத்தினர்..

இதையெல்லாம் கேட்டுக்கொண்டிருந்த சத்யா.. கோவத்துடன் அங்கிருந்து எழுந்து சென்றான்..

"என்ன டா மச்சி.. உனக்கு இவ்வளவு கோவம்" என கேட்ட சியாமிடம்.. மாணவர்களின் உரையாடலை சத்யா கூறினான்..

"டேய்.. மச்சான்.. அதலாம் விடு டா.. யாரு நாக்கு எப்ப மாறும்னு தெரியாதுடா.. நாம்ம நெக்ஸ்ட் என்ன ஸ்டெப் எடுக்கலாம்னு யோசிப்போம்" என ஜீவா கூற.. "அதுலாம் எடுத்தாச்சி.. இப்போ நீங்க என்ன பன்றீங்கனா ஸ்டேஜ் டெக்கரேஷன் செய்து சாமியானா போடுங்க" என மித்ரன் கூற.. "என்ன டா.. அது எதுக்கு?" என கேட்ட நண்பர்களிடம் "நாளைக்கு நம்ம சார்பா வோட் கேட்க என் ஃப்ரெண்ட் வரான் டா" என மித்ரன் கூறவும்.. "வாட்... யாரு டா" என கேட்ட நண்பர்களிடம்.. "இந்தியன் ஃப்லிம் கம்போஸர் ஆன்டு சிங்கர்" என இழுக்க.. "அ......" என இழுத்த நண்பர்களின் வாயை மூடியவன்.. "அவனே தான் நாளைக்கு வரான்.." என கூறியவன்.. "இது சீக்ரெட் ப்ளேன் மச்சான்" என்றான்..

"ஹாஹா.. சீக்ரெட் ப்ளானா?? இதை நாங்க நடக்க விட்ருவோமா?? என்ன??" என இதெல்லாம் மரத்திர்க்கு பின்னே அமர்ந்து கேட்ட சரன்,.. "டேய்.. மச்சான்.. அந்த மித்ரன் நாளைக்கு யாரையோ கூப்பிட்டு வந்து வோட் கேட்க போரானாம்" என கூற.. "என்ன டா.. லூஸு தனமா உலருரே.. தண்ணி எதுவும் அடிச்சியா??" என கேட்ட ராஜிடம்.. "அது இல்லை டா.. யாரோ மித்ரனோட ஃப்ரெண்ட் போல.. நேம் தெரியல டா.. ஆனா, ஏதோ சொன்னான் டா" என தாடையில் கை வைத்து யோசித்தவனை... "எருமை.. எருமை.. ஒட்டு கேக்குறத கூட சரியா கேட்டு வர மாட்டியா??" என முறைத்தவனை.. பாவமாக பார்த்தவன்.. "ஹான்.. நியாபகம் வந்திருச்சி டா.. இந்தியன் ஃப்லிம் கம்போஸர் ஆன்டு சிங்கர்னு சொன்னாங்க டா" என சரன் கூற.. "யாரா இருக்கும்??" என யோசித்த ராஜிடம்.. "அ... ல ஆரம்பிக்கும்னு நினைக்கிறேன்" என சரன் கூற.. "வெய்ட்.. கூகுள்ள சேர்ச்ச் பன்னலாம்" என கூறி பார்த்தவன்.. "ச்சே.. இவன் மட்டும் வந்தானா மொத்த கேர்ள்ஸ் வோட்டும் கண்டிப்பா மித்ரனுக்கு தான்" என கூறி தலையை சொரிய ஆரம்பித்தான் ராஜ்..

"பாரு.. நீ எவ்வளவு பார்த்தாலும் நான் உன் கிட்ட பேச இறங்கி வர மாட்டேன் டா என் தீபு குட்டி.. நீ பார்த்துட்டே இரி.. நானும் உன்னை கண்டுக்காத மாதிரி பார்த்துட்டே இருக்கேன்.. இதுவும் நல்லாதான் டா இருக்கு.. நீ என்னை பார்த்து பார்த்து.. அப்புறம் என்னை பிடிச்சி.. அப்புறம் என்னை கல்யாணம் பன்னி.. நாம்ம சந்தோஷமா இருக்கலாம்... நீ எதுக்காக இவ்வளவு பயப்புடுறானு எனக்கு தெரியல.. ஆனா, உன் பயத்தை கண்டிப்பா நான் போக்குவேன் பேபி.." என மனதில் எண்ணியபடி தீப்தியின் பக்கம் செல்ல... மித்ரனையே பார்த்து கொண்டிருந்தவள்.. மித்ரன் தன் பக்கம் தான் வரான் என்பதை கவனித்தவள் அருகில் இருக்கும் நிலாவின் கையை இருக்கி பிடித்தால்.. "ஏன் இவ.. இப்படி பதறுறா??" என யோசித்த படி தீப்தி பார்க்கும் திசையை பார்க்க.. மித்ரன் தங்களை நோக்கி தான் வருகிறான் என புரிந்து கொண்டவள்.. அவனின் பார்வை செல்லும் திதையை பார்த்தவள்.. "என்ன கண்ணானா இங்கே வந்திக்குறா??" என கேட்க,...

நிலாவின் குரலில் சுயநினைவிர்க்கு வந்தவன்.. "ஹான்.. அது ஒன்னும் இல்ல டா.. உன் ஸ்கூடி ரிபேர்ல இருக்குனு சொன்னிலே.. எங்களுக்கு கொஞ்சம் வேலை இருக்கு.. நாங்க வர லேட் ஆகும்.. உன் ஃப்ரெண்ட்ஸ் கூட கார்ல போய்டுறியா??" என கேட்க.. நிலா தடுமாறவும்.. "ஓகே ணா.. நாங்க ட்ராப் பன்னிடுறோம்" என ரேனு பதில் கூற... "ஓகே மா.. தேங்க்ஸ்" என கூறி அவர்களிடமிருந்து விடைபெற்றவன்.. "ச்சே.. நாம்ம எப்படி அங்க போனோம்.. நல்லதா போச்சி.. ஒரு வழியா சமாளிச்சிட்டோம்..இனிமே ரொம்ப கேர்ஃபுல்லா இருக்கனும்" என கூறி சென்றான்..

காலை கல்லூரிக்குள் நுழையும் போதே மாணவர்கள் பரபரப்பாக இருக்க.. "என்ன.. எதுவுமே தெரியாமயே.. இவுங்க இவ்வளவு ஹேப்பியா இருக்காங்களே" என நினைத்த படி தன் பைக்கை நிறுத்தியவனிடம் வந்த சத்யா.. "டேய் மச்சான்.. நம்ம ப்ளானயே ஃப்லாப் பன்னிட்டாங்க டா" என பதற்றத்துடன் கூற.. சத்யாவின் பதற்றம் இவனையும் தொற்றி கொள்ள.. "ஏன் டா?? என்னாச்சு" என கேட்டவன்.. அப்பொழுது தான் சுவற்றில் இருக்கும் விளம்பரத்தை பார்த்து அதிர்ச்சியானவன்.. "என்ன டா இது.. எப்படி டா நடந்துக்கும்" என கேட்டான் மித்ரன்..

"இது அந்த ராஜோட வேலை தான் டா.. நாம்ம உன் ஃப்ரெண்ட கூப்பிட்டு வோட் வாங்கலாம்னு பார்த்தா.. அந்த ராஜ்,.. அந்த சிங்கர் ஃபோட்டோவோட விசில்ல போட்டு ஊதல் சின்னத்துக்கான போஸ்ட்டரா அடிச்சிக்குறான் டா.. இப்ப ஸ்டூடண்ட்ஸ் எல்லோருக்கும் உன் ஃப்ரெண்ட ராஜ் தான் இன்வைட் பன்னி அழைச்சிட்டு வந்திக்குறானு நினைப்பாங்க.. அவனுக்கே வோட்டும் போயிரும்" சத்யா வருத்தமாக கூற.. அவனின் கணிப்பு சரி தான்.. அடுத்து என்ன செய்றது என யோசிக்க ஆரம்பித்தான்..

"டேய்.. மித்ரன்.. வா டா.. எதா இருந்தாலும் பார்த்துக்கலாம்" என கூறி சியாம் அழைக்க.. நண்பர்கள் அனைவரும் சாமியானா போட்டிருக்கும் இடத்திற்கு சென்றனர்..

மித்ரனை பார்த்த ராஜ் ஏளனமாக சிரிக்க.. அவனை அருவருப்பாக பார்த்து.. முகத்தை திருப்பிக்கொண்டனர் மித்ரன் மற்றும் நண்பர்கள்..

மாணவ மாணவிகள் குதூகலத்துடன் நாற்காலியில் அமர்ந்திருக்க.. "எவ்ளோ நேரமாகுது.. இன்னும் வரலயே".. "ஹேய் க்யூட்டி.. சீக்கிரம் வா.. உனக்காக தான் வெய்ட்டிங்"..."ஐஐஐஐஐ.. இன்னைக்கு செம்ம ஜாலி.. நாம்ம தான் ஃபர்ஸ்ட்டா ஆட்டோகிராஃப் வாங்கனும்" என அவர் அவர்கள் ஒவ்வொரு மனநிலையில் இருக்க. வாகனம் வரும் வழியை ஆர்வமாக திரும்பி திரும்பி பார்த்தவாறு இருந்தனர்..

"ஹேய்.. கார் அங்கே வருது டி.. பாருங்க" என ஒரு மானவி கத்த..

அதே நேரம்,...

யோ யோ ஹனி சிங் யோ அனிருத்
மச்சான் தூளு

ஸ்பீட் ஸ்பீட் ஸ்பீட் வேணும்
ஸ்பீட் காட்டி போடா நீ
லேட் லேட் லேட் இல்லாம
லேடஸ்ட் ஆக வாடா நீ

தக்கிட தக்கிட திமி தாளம் தான்
தோம் தரிகிட மேளம் தான்
தக்கிட தக்கிட திமி தாளம் தான்
தோம் தரிகிட மேளம் தான்
(ஸ்பீட்)

ஹே... ஹூ இஸ் திஸ் ஹனி
ஹே... ஹூ இஸ் திஸ் ஹனி
ஹே... ஹூ இஸ் திஸ்...
ஹே... ஹூ இஸ் திஸ்...
ஹே... ஹூ இஸ் திஸ்... ஹனி
ஹே... ஹூ...//////
ஹூ இஸ் திஸ்... ஹனி சிங்
ஹ... உங்க ஆயா...

என சாமியானாவே அதிரும்படி பாடல் ஒளிக்க... "ஹே.. ஹோய்.. அனிரூத்.. அனிரூத்" என மாணவ மாணவிகள் கத்தி குதூகலத்தனர்..

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro