11
தீவிர யோசனையில் இருந்த சரனை பார்த்த ராஜ்..."என்ன டா?? அப்படி என்ன யோசிச்சிட்டு இருக்கே?? உன் முகமே சரியில்லையே" என கேட்கவும்..."இல்லை டா" என இழுக்க.."சொல்லி தொலை" என கடுகடுத்தான் ராஜ்..
"அது இல்லை டா, அந்த சத்யா பையன் உனக்கு எதிர மித்ரன் நிற்பானு சொன்னான்...அப்படி எதுவும் நடந்திறுச்சுனா" என இழுத்த சரன் ராஜ் முறைப்பதை பார்த்து..."இல்லை மச்சி..நீ தான் ஜெய்ப்பா" என கூறினான்..
"ஏன் டி அந்த அண்ணா அப்படி அழுதாங்க" என தீப்தி கேட்டபடி வர..."அது ரொம்ப கொடுமையான விஷயம் டி..இந்த காலேஜ கதிகலங்குன நாள்" என நிலா கூற...ரேனுவும் அதை ஆமோதிப்பதாக தலையசைத்தாள்...
"உனக்கு தெரியுமா ரேனு" என தீப்தி கேட்க..."ஆமா டி, ஷிவானி சொல்லிருக்கா" என கூறியவள் பேச்சை திசை திருப்ப முயற்சி செய்ய...அதர்க்குள் நிலா முந்தி கொண்டாள்..."நான் சொல்றேன் டி...லாஸ்ட் ஏர் ல தான் சத்யாணா தங்கச்சி ஜானகி...இந்த காலேஜ்ல ஜாய்ன் பன்னாங்க.."
(சின்ன fb, twitter னு one year க்கு பின்னால் போகலாம் )
"டேய் சத்யா...இவ்வளவு பெரிய காலேஜ பார்த்தாலே பயமா இருக்கு...பேசாம நான் எங்க ஊர் காலேஜ்லயே படிச்சிக்கிறேன்" என ஜானகி கேட்க(சத்யாவின் சின்னம்மா பொண்ணு)...அது ஒரு ஊர்...அது ஒரு காலேஜ்...லைஃப் என்ஜாய் பன்ன கத்துக்கோ தங்கம் என கூறியவனுக்கு தன் தங்கையின் வாழ்க்கை அழிய போறது தெரியவில்லை...
ஓர் பயத்தோடு வந்தவள் சிறிது சிறிதாக தனக்குள் இருந்த பயத்தை போக்கி கொண்டாள் நட்பு வட்டாரத்துல் நுழைந்த பின்னர்..
அன்று...கல்லூரியில் ஃபங்ஷன் என்பதால் பெண்கள் புடவை அணிந்து வந்தனர்..
கணினி ஆய்வகம் வெளியில் நின்று தன் தோழிகளுடன் பேசிய படி...இடுப்பு மடிப்பை சரி செய்தவள்...யாரோ தன்னை பார்ப்பது போல் இருக்க திரும்பி திரும்பி பார்த்து யாரும் இல்லை எனவும் தலையை சிலுப்பி கொண்டாள்..
(இது பொதுவா நடக்குற ஒன்னு...இப்ப இருக்கிற பெண்களுக்கு சேரி கட்ட தெரியாது...அதுனாலயே சேரி அவிழ்ந்திருமோனு பயத்துல அட்ஜஸ்ட் பன்னிட்டு இருப்பாங்க...
சேரி கட்ட தெரியலேனா சரியா சேஃப்டி பின் குத்துங்க இல்லாட்டி வாஷ் ரூம் போய் சரி பண்ணுங்க...பெண்கள் ஒன்றும் கண்காட்சி பொருளில்லை)
எக்ஸ்க்யூஸ் மீ...உங்களை பூபதி சார் கூப்பிடுறாங்க என ஒருவன் வந்து கூற...தன் தோழிகளிடம் சொல்லிவிட்டு ஆய்வகத்திர்க்குள் நுழையவும் கதவு அடைத்து கொண்டது...
ஹேய்...பூபதி சார்...இங்கே வராங்க டி...அவ லேப் குள்ள போய்ருக்கா என ஒருவள் கேட்க..மற்றவள் தெரியாம போயிருப்பா..நான் போய் கூப்பிட்டு வரேன் என செல்ல கதவு அடைத்து இருந்தது..
ஹேய்...லேப் டோர காலேஜ் க்ளோஸ் பன்ற மூட மாட்டாங்க டி...எனக்கு ஏதோ பயமா இருக்கு என கூறி கதவை தட்ட ஆரம்பித்தார்கள்...கதவு தட்டும் சத்தம் அதிகரிக்கவே...மொத்த காலேஜும் ஒன்று கூடியது..
(உள்ளே என்ன நடந்தாலும் வெளியே சத்தம் கேட்காததால்...இவர்களுக்கு ஒன்றும் புரியவில்லை)
சிறுது நேரத்தில் கதவு திறக்கப்பட...ராஜை பார்த்ததும் பயம் தொற்றி கொள்ள வேகமாக ஆய்வகத்திர்க்குள் ஓடியவர்களின் கதறல்கள் மொத்த காலேஜையும் கதிகலங்க வைத்தது...
...
அப்படினா என்று குரல் நடுங்க கேட்ட தீப்தியிடம்,. "ஷீ ரேப்ட் ஆன்ட் கிள்ட் ஹெர்" என நிலா கூறவும்...மயக்கம் வருவது மட்டும் தான் குறை என்பது போல அமர்ந்திருந்தாள் தீப்தி..
"சரி டி..இவ்வளவு பெரிய தப்பு...நம்ம காலேஜ்லயே நடந்திருக்கு...அப்புறம் எப்படி??...இந்த காலேஜ் நேம் கெட்டு போய்ருக்குமே" என தீப்தி கேட்க..
"அவன் அண்ணன் ஒரு மினிஸ்டர் டி..அந்த பொறுக்கி..அவன் பொறுக்கி தம்பிக்கு எந்த ப்ராப்ளமும் வராம மேட்டர மூடி மறைச்சிட்டாங்க" என நிலா கூறினாள்...
"ஹ்ம்ம்" என சிறிது நேரம் அமைதியாக இருக்க..."ஆமா, எதுக்கு டி அந்த அண்ணா உங்க அண்ணா பேர சொன்னாங்க...சேர்மேன்க்கு" என ரேனு கேட்க.."ஹாஹா...கண்ணானா தான் காலேஜ்கே பஞ்சாயத்து பன்னும்"..
"முக்கியமா லவ்வர்ஸ்ஸ சேர்த்து வைப்பான்".."அதான்...எல்லோருக்கும் கண்ணானா தான் ஃபேவரேட்"..
"நம்ம கதையோட ஆத்தர்க்கு கூட" என நிலா கண்ணடித்தாள்😉
"டேய்...நீ பாட்டுக்கு மித்ரன சேர்மேனாக்குவோம்னு சொல்லிட்டா.. அதுக்கு நாம்ம என்ன பன்ன போறோம்" என சியாம் கேட்க..."ஆமா...ஏதாவுது பன்னனும்..பட் என்ன பன்னனு தான் தெரியலே..எல்லாம் அந்த ராஜ்க்கு சாதகமா தான் இருக்கும்" என சத்யா பதில் குடுத்தான்..
"ப்ரின்ஸிபால் கிட்ட போய் நாம பேசி பார்ப்போமா??" என சியாம் கேட்க...இருவரும் சியாமை முறைத்தனர்..
"ஹாய் ஸ்டூடண்ட்ஸ்..என்ன மீட்டிங் இங்கே" என்றபடி சிவ் வர..."அட வாங்க ஹீரோ...கரேக்ட் டைம்க்கு என்ட்ரி குடுத்திக்குறீங்க" என சியாம் கூற..
"ஹாஹா...அப்டியா?? என்ன டிஸ்கஸன்" என சிவ் கேட்டான்..
"மித்ரன் சேர்மேனா ஆவானு கெத்தா சொல்லிட்டோம்...ஆனா, அதுக்கான ஸ்டெப்" என சத்யா இழுக்க... நால்வரும் யோசிக்க ஆரம்பித்தனர்...
"ஹேய்...உங்கள்ள யாருக்காவது போலீஸ் தெரியுமா??" என கேட்க..."ஹ்ம்ம்...நான் தான் போலீஸ்" என மித்ரன் சிரிக்க..."தலையிலடித்த சிவ்... "உங்களுக்கு தெரிஞ்சவங்கனு கேட்டேன்" என கூற..."ஹ்ம்ம்...எங்க சித்தப்பா இருக்காங்க..கமிஷ்னர் தான்..ஆனா, அவுங்க கூட டச் இல்ல...அவுங்க நெருங்கி வந்தாலும்...எங்க அம்மா விலகி நிற்பாங்க" என மித்ரன் கூறினான்..
"நம்மலுக்கு ஏதாவது ப்ராப்ளம்னா உங்க சித்தப்பா ஹெல்ப் பன்னுவாங்களா??" என சிவ் கேட்க. .."கண்டிப்பா பன்னுவாங்க...ஆனா, நம்மளுக்கு இப்ப எதுக்கு போலீஸ் ஹெல்ப்" என மித்ரன் புரியாமல் கேட்கவும்...சுற்றி முற்றி பார்த்த சிவ்..மிக அருகில் வந்து ஏதோ கூற...சியாமிர்க்கு தண்ணீர் குடிக்காமல் பொறை ஏறியது..
"மாட்டுனா அவ்வளவு தான்" என சத்யா பதற..."எனக்கு தெரிஞ்ச ஐடியா இது தான்..வேற ஐடியா இருந்தா சொல்லுங்க" என சிவ் இழிக்க..."நாங்க உங்களை ஹீரோ ரேஞ்ச் க்கு கூப்பிட்டுட்டு இருக்கோம்...நீங்க சினிமால வர்ர சீன்லாம் சொல்லுறீங்க" என சியாம் கூற..அனைவரும் சிரிக்க ஆரம்பித்தனர்..
"ஹ்ம்ம் ஓகே...நீங்க ஃபர்ஸ்ட் ப்ரின்ஸிபால் கிட்ட பேசி பாருங்க...அவுங்க என்ன சொல்லுறாங்கனு பார்த்துட்டு அப்புறம் முடிவு பன்னுவோம்" என சிவ் கூற...
"கண்டிப்பா நோ சொல்லி ராஜ தான செலக்ட் பன்னுவாங்க" என மித்ரன் கூறினான்..
"நாம்ம எலக்ஷன்ல நின்னா மட்டும் போதும் மித்ரன்...கண்டிப்பா ஜெய்ச்சிரலாம்"..
"பட் எலகஷன் வைக்கனும்னா அதுக்கு ப்ரின்ஸிபால் ஒத்துக்கனும்...அதுக்கு ஏதாவது நாம்ம செய்ஞ்சி தான் ஆகனும்" என சிவ் கூறி..."சரி நீங்க க்ளாஸ்க்கு போங்க...நாளைக்கு ப்ரின்ஸிபால் வந்துருவாங்க...அவர் கிட்ட பேசலாம்" என கூறியவன்.."நீ எதுக்கும் எந்த ஹெல்ப்னாலும் கேட்போம்னு உங்க கமிஷனர் சித்தப்பா கிட்ட சொல்லிடு என கூறினான்"....
...
தம்பி sago266ms வின் "சகோவின் சிந்தனை சிதறல்கள்"(கவிதை) மற்றும் "காதம்பரியின் காதல்வலி"(கதை)க்கு நீங்கள் ஆதரவு குடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்😊
....
Useful information:
குளிர் காலம் ஆரம்பிச்சாச்சு. அடுத்து வீட்டில் ஒவ்வொருவராய் மாறி மாறி சளி, காய்ச்சல் என வந்து குளிரோடு உடல் நிலையும் பாதித்து இம்சை பண்ணும்.
குளிர்கால தட்பவெப்பம் கிருமிகள் பெருக்கத்திற்கு ஏதுவான காலமென்பதால் விரைவில் நமது உடலில் புகுந்து நோய்களை உண்டாக்குகின்றன.
சளி பிடித்தால், நமது உடலிலுள்ள வெள்ளையணுக்களே அக்கிருமிகளுடன் சண்டையிடும்.
அவற்றை பூஸ்ட் அப் செய்வது போல் நமது மூலிகைகளைய அவற்றிற்கு தரும் போது வெள்ளையணுக்கள் பலம் பெற்று கிருமிகளை வெளியேற்றும்.
இது நடப்பதற்கு குறைந்தது 3 -5 நாட்களாகும்.
இப்படி இயற்கையாக நடக்கும் நிகழ்வுகளை நாம் மாத்திரைகள் கொண்டு தடுக்கும்போது, வெள்ளையணுக்கள் எதிர்த்து போரிடாமல் சோம்பேறியாகும்.
நமது உடல் எல்லாவ்ற்றிற்கும் மாத்திரைகளையே எதிர்பார்க்கும்.
ஆகவே முடிந்தாரை மாத்திரைகளை தவிர்த்து இயற்கை வைத்தியங்களை முயற்சியுங்கள்.
🍏குறிப்பு 1 :
கொய்யாப்பழத்தை மிளகுத் தூள் தொட்டு சாப்பிட, நுரையீரலில் உள்ள சளி வெளியேறி, இருமல் பிரச்சனையில் இருந்து தீர்வு கிடைக்கும்.
🍋குறிப்பு 2
ஆரஞ்சு ஜூஸில் தேன் மற்றும் ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து கலந்து குடித்தால், சளி, இருமல், தொண்டை வலி போன்றவற்றில் இருந்து விடுபடலாம்.
🍍குறிப்பு 3 ;
ஒரு டம்ளர் அன்னாசிச்சாறுடன் மிளகுத்தூள் சேர்த்து தினமும் அருந்தி வந்தால் உடல் சோர்வு மறையும் சளித்தொல்லை குணமாகும்.
🍎குறிப்பு-4 :
வெங்காயத்தை தீயில் சுட்டு சாப்பிடுவதன் மூலம், இருமல் மற்றும் சளியில் இருந்து விடுதலை கிடைக்கும்.
🥛குறிப்பு- 5 :
மாட்டுப் பாலை நன்கு கொதிக்க வைத்து, அதில் தேன் கலந்து குடிப்பதன் மூலமும் சளி, இருமல் தொல்லையில் இருந்து விடுபடலாம்.
🥗குறிப்பு- 6 :
கற்பூரவள்ளி இலையை நீரில் போட்டு கொதிக்க வைத்து, அந்நீரைக் குடிப்பதன் மூலமும் விரைவில் சளித் தொல்லை நீங்கும்.
🥙குறிப்பு- 7 :
வெற்றிலையை சாறு எடுத்து, தேன் கலந்து குடித்தாலும், இருமலில் இருந்து உடனடி நிவாரணம் கிடைக்கும்.
Yen maela yellorum kadum kovathla irukeenganu puriyudhu...
Sila peru story ah marandhurupeenga..
Knjm exam bc...adhaan ivlo late..
Sry frndz...😊
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro