அண்ணா
அன்பு காட்டுகையில் அண்ணனாய்
அறிவுரை கூறுகையில் தந்தையாய்
நெறிப்படுத்துகையில் நல்லாசானாய்
துன்பம் நேர்கையில் தோழனாய்
அநியாயங்களை தட்டி கேட்பதில் வீரனாய்
குறும்புகளை ரசிக்கையில் குழந்தையாய்
புன்சிரிப்புடன் என்றும் உலாவரும்
என் அன்பு குட்டி அண்ணா,
நீ பதிவுலகில் மட்டுமல்ல
என்றும் பார் போற்றும் தலைமகனாய்
இந்நாளல்ல எந்நாளும்
புன்னகையுடன் நலமாக வாழ
என் இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.
கடலில் எழுந்து கரையில் அழியும்
அலையல்ல பாசமென்பது
உடைந்த அலைகள் உயிர் பெற்று
மீண்டும் கடலை சேர்வது போல
உன் பாசம் கூட
சிறு சிறு பிரிவுகளின் பின்
துளிர்விடத்தான் செய்கிறது.
❣️இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அண்ணா ParamaJoseph
நேத்து தெரிஞ்ச கண்டிப்பா வாழ்த்து சொல்லி இருப்பேன்.
ஸாரி ஃபார் லேட் விஷ் அண்ணா❣️
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro