காதலில் சிறந்த நாள்...
முன் ஜென்ம முன்னேற்றங்கள்
கனவுகளில் காதில் சொல்ல...
நள்ளிரவில் குறுஞ்செய்தி
தோழியவள் தூதுவிட....
அதிகாலைச் சூரியனோ
அகந்தையில் விட்டுச்செல்ல...
இன்னும் சற்று உறங்கட்டும்
சகோதரி எடுத்துரைக்க...
பொருந்தாத வண்ணத்தில்
புத்தாடை புதுக்குளியலிட்டு...
அன்னையின் ஆசியுடன்
ஆலயத்தில் வழிபட...
தந்தையின் பாசமோ
தங்க மோதிரம் பரிசாக...
பாட்டியுடன் போட்டியிட்டு
வீட்டுச்சுவரை அலங்கரிக்க...
தோழர்கள் துணையோடு
தொலைதூரம் சுற்றி வர...
கைகொடுக்கும் வாழ்த்துக்களில்
தோழியர்கள் கேலி செய்ய...
பரிசுகளில் பெரிதென்று?
புதிரொன்றை போட்டு விட...
என்னவென்று ஏளனமாய்
எல்லோரும் கேள்வியிட...
தவளும் காலம் தொட்டு
இவன்தான் என் துணையென்று...
கன்னத்தில் சின்னதாய்
சின்னமொன்று பதித்து விட்டு...
இதுதான் என் பரிசென்று
இன்முகத்தோடு சிரித்தவளே...
கேள்வியின் பொருள் காதலே...
காரணம் நீ காதலியே....
மாலை விழா மேஜை இனிப்பிலும்
தித்தித்ததென்னவோ இவள் முத்தமே...
மகிழ்ச்சியின் சிரிப்பிலும்
பதற்றமே படர்ந்ததே....
கண்கள் ஒவ்வொன்றும் படபடத்ததே..
அவள் நல்வரவை எதிர்பார்த்து
மலர்பாதையை வடிவமைத்ததே...
பூஞ்சோலை புதர் காட்டில்
வண்டொன்றின் பசி தீர்க்க
செஞ்சேலைக் கன்னியவள்..
கண்முன்னே கடந்து வந்தாள்...
கண்ணாடி இதயப்பொருளை
கையடக்கி காதலுடன்...
வண்ணத்து பூச்சியைப் போல்
கண்மூடி பரிசளித்தாள்...
கடவுள் தந்த நாட்களில்
இந்நாளே இனிய நாள்...
காதலில் பிறந்த நாளே
எந்நாளும் சிறந்த நாள்.....
ஜே...
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro