
பார்வையில் பட்டவை சிந்தனை தொட்டவை
குளிர்கால நேரம்,சூடான தேநீர்
சுகமான இரவில் காதல் பாசம்
அலைபேசி அழுகையில் ஆறுதல்
எல்லையில் வீரன் பாதுகாப்பு பணியில்!
கைவண்ணம் காட்டுகிறாள் தையல்காரி!
கையில்லா ஆடை தயாரிப்பில் - கலாச்சாரம்!
அரசியல் வாதியின் தினசரி பேச்சு!
அன்பே சிவம்!
மரக்கதவில் பொரித்த வாசகம்!
மரம் வளர்ப்போம்...
சுதந்திர தின கைக்குழுக்கள்
ஆற்று மீனும், கடல் மீனும்
வெள்ளப்பெருக்கில்...
அடித்துக்கொள்கிறான் வெட்டவில்லை!
கருணைகண்ட மனித உள்ளம்!
சிகப்பு கண்டா மாடு முட்டும்!
பழிவாங்கும் படலம்
பாசமில்லா பந்தம்
வீட்டின் பெயரோ
அன்பு இல்லம்!
வளர்பிறையும், தேய்பிறையும்
நடைமுறையாய் வான் நிலவுக்கு!
மறை பிறையும் சில நேரம்
கார்மேகம் சூழ்வதினால்!
சரியானவன் மதி கெட்டால்!
தவறானவன் அதில் வென்றால்!
நான் பொறுப்பல்ல - இப்படிக்கு கடவுள்
தூங்கும் நேரம் ஏங்குபவன் பாவி!
துன்பத்திலும் சிரிப்பவன் அப்பாவி...
தினந்தோறும் நாளிதழில் ஒரே வாசகம்
"மாறுதல் வேண்டும்"
பார்வையில் பட்டவை
சிந்தனை தொட்டவை
மாறுபட்ட மனிதரிடம்
வேறுபட்ட கோணங்கள்
சிந்திக்க நினைத்தால்
சிந்தை கெட்டு விடும்போல!
எண்ணம் எழுத்து
ஜே...
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro