பிரிவு
வேக நடையும், கோப முகமும்
பார்க்காத பார்வையும்,
சிரிக்காத உதடுகளும்
பிரிவென்ற பந்தத்தின் கொள்கைகளோ! இதை
கடை பிடிக்க ஆர்வம் காட்டும் மனமே!
காதலெனும் காலம் கரைவதைக்
காட்ட மறந்தாயோ....
கண்ணீரின் நிறம் சிகப்பு, எனக்
கண்டறியும் மனமே சிறப்பு, இதில்
பிரிவென்ற சோகம் எதற்கு?
சுகம் கொண்ட வலியும் துன்பம்தான்,
பிரிவு கொண்ட இன்பமும் துயரம்தான்!
மனமெனும் பெருங்கடலில்
மறைக்கப்பட்ட முத்துக்களே
முதலில் கண்டறியப்படும்
காதலெனும் கண்களால்...
பிரியாத நட்புடன்
ஜே....
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro