43 அபிநயாவின் முடிவு
43 அபிநயாவின் முடிவு
அஸ்வின் இல்லம்
அஸ்வினை அணைத்துக் கொண்டு, தன்னை மறந்து உறங்கிக் கொண்டிருந்தாள் அபிநயா. தன் உடலில் தன் கண்களை ஓடவிட்ட அஸ்வின், தன் மனைவி பரிசளித்திருந்த தழும்புகளை பார்த்து, பெருமூச்சுவிட்டான். எவ்வளவு மூர்க்கம்... ஒருவேளை, சரியான நேரத்தில் தான் வந்திருக்காவிட்டால் என்ன நடந்திருக்கும் என்பதை நினைத்த பொழுது, அவன் ரத்தம் கொதித்தது. தருண், அவளை மொத்தமாய் சிதைத்திருப்பான். அப்படி நடந்திருந்தால் அபிநயாவின் முடிவு என்னவாக இருந்திருக்கும்?
அவனுக்கு சுரீர் என்று உரைத்தது. இதற்கு ஏதாவது செய்தாக வேண்டும். இந்த போதை மருந்தினால், இன்னும் எந்தப் பெண்ணும் பாதிக்கப்படக் கூடாது. அபிநயாவின் பிடியிலிருந்து மெல்ல தன்னை விடுவித்துக் கொண்டான்.
கீழ் தளத்திற்கு வந்தவன், தன் கண்களால் வரவேற்பறையை சலித்தான். அபிநயா தேநீர் அருந்திய குவளை அவன் கண்ணில் பட்டது. அதில் தான், அந்த மருந்து கலக்கப்பட்டிருக்க வேண்டும் என்பதை அவன் யூகித்தான். ஏனெனில், வீட்டில் தான் அவளைத் தவிர யாருமே இல்லையே. ஆம். உடைந்த பூ ஜாடியை சுத்தப்படுத்தும் நேரத்தில், அவள் அந்த குவளையை கழுவி வைக்க மறந்து தான் போனாள். அந்த குவளையை எடுத்துக் கொண்டு தன் அறைக்கு வந்தான் அஸ்வின்.
அபிநயாவுக்கு சுலபமாய் அணிவிக்கும் வகையில், அலமாரியிலிருந்து அவளுடைய இரவு உடையை எடுத்து அவளுக்கு அணிவித்தான்.
ஒன்றும் அறியாத அப்பாவி குழந்தையை போல் இருந்த அவள் முகத்தை பார்த்த பொழுது, சற்று நேரத்திற்கு முன் அவள் ஆடிய ஆட்டத்தை பற்றி கூறினால், யாராவது நம்புவார்களா என்ன? என்று நினைத்து கொண்டான். அன்பாய் அவள் கன்னத்தில் முத்தமிட்டு, அவளை தன் கையில் அள்ளிக் கொண்டு, அந்த குவளையையும் தன் கையோடு எடுத்துக் கொண்டான்.
அவன் அபிநயாவை தூக்கிக் கொண்டு வருவதை, மனோஜும், அருணும் பார்த்தார்கள். அவனுக்கு தெரியாமல் சுவரின் பின் ஒளிந்து கொண்டார்கள். அஸ்வின் அவளை காரில் அமரவைத்து, சீட் பெல்ட்டால் அவளை பினைத்தான். அங்கிருந்து மருத்துவமனையை நோக்கி பயணமானான்.
அருணும் மனோஜும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள்.
"எஸ்ஸ்..." என்று குதூகலித்தான் அருண்.
"ஏன்?" என்றான் மனோஜ்.
"நம்முடைய பிளான் ஒர்க் அவுட் ஆயிடுச்சுன்னு நினைக்கிறேன் "
"எப்படி?"
"அண்ணி அமைதியாயிட்டாங்க பாரு"
"அதனால?"
"அந்த மருந்தை சாப்பிட்டவங்க, வேற எதுக்கும் அமைதியாக மாட்டாங்க"
"ஆமால்ல...?" என்றான் மனோஜ் சந்தோஷமாய்.
அப்பொழுது சுபத்ராவின் கார் உள்ளே நுழைந்தது. இருவரும் முகத்தை இறுக்கமாக வைத்துக்கொண்டு நின்றார்கள்.
"நீங்க ரெண்டு பேரும் இங்க என்ன செய்யறீங்க? அஸ்வின் எங்கே?" என்றார் சுபத்ரா.
"அவன் ஹாஸ்பிடலுக்கு போயிருக்கான்" என்றான் அருண்.
"ஹாஸ்பிட்டலுக்கு எதுக்கு?"
"எல்லாம் உங்க அருமை பேரனால" என்றான் அருண் காட்டமாக.
"யாரை சொல்ற?"
"வேற யாரு...? தருண் தான்"
"தருணா? " என்றார் பதட்டமாக.
"அவன் பாண்டிச்சேரிக்கு போகல. இன்னும் சென்னையில தான் இருக்கான். அவன் பிசினஸ் பண்ண போறேன்னு சொன்னது எல்லாம் சுத்தப் பொய்." என்று சினந்தான் அருண்.
ஏதும் கூறாமல் சிலை போல் நின்றார் சுபத்ரா. அவரால் எப்படி எதுவும் கூற முடியும்? அவருக்கு தான் தெரியுமே, தருண் சென்னையில் தான் இருக்கிறான் என்பது.
"அவன் என்ன செஞ்சான்னு தெரியுமா?" என்றான் அருண்.
அருணை தடுக்கவில்லை மனோஜ். சுபத்ராவுக்கு தருணை பற்றி நிச்சயம் தெரிந்தாக வேண்டும்.
நடந்தவற்றை ஒன்று விடாமல் சுபத்ராவிடம் கூறினான் அருண். உறுதிமிக்க பெண்மணி என்று பெயர் வாங்கிய சுபத்ரா, தான் பலவீனம் அடைவதை உணர்ந்தார். ஒழுக்கம் கெட்ட தன் பேரனை நினைத்த பொழுது, அவன் செய்யத் துணிந்த காரியத்தை கேட்ட பொழுது, அவருக்கு தலைசுற்றல் ஏற்பட்டது. அப்படியே தரையில் சரிந்து விழுந்தார். அருணும், மனோஜும் அவரை வீட்டினுள் தூக்கிச் சென்றார்கள்.
மறுநாள் காலை
மருத்துவமனையின் கட்டிலில் படுத்திருந்த அபிநயாவின் பக்கத்தில் அமர்ந்திருந்தான் அஸ்வின். இன்னும் அவள் அந்த மருந்தின் பாதிப்பிலிருந்து வெளிவரவில்லை போல தெரிகிறது. அவள் கூந்தலை மெல்ல வருடிக் கொடுத்தான் அஸ்வின். அவன் மனம், சுழலில் சிக்கி தவித்தது. இவள் செய்த தவறு தான் என்ன? எதற்காக அவளுக்கு இவ்வளவு சோதனைகள்? எவ்வளவு சோதனை வந்தாலும் அவளை காக்க வேண்டும் என்று சூளுரைத்தான் அவன்.
தருணைப் பற்றி நினைத்த போது அவனுக்கு கோபம் தலைக்கேறியது. இந்த முறை அவன் அஸ்வினின் கையில் கிடைத்தால், *இந்த முறை* தான், அவனுக்கு *கடைசி முறையாக* இருக்கும். அவனுடைய எண்ணச் சங்கிலி அறுபட்டது, ஒரு செவிலி உள்ளே நுழைவதை பார்த்த பொழுது.
"டாக்டர் உங்களைப் பார்க்கணும்னு சொல்றார், சார்" என்றார் அவர்.
"நான் வர்ற வரைக்கும் அபிநயாவை பாத்துக்கோங்க."
"என்னுடைய டியூட்டி முடிஞ்சிடுச்சு சார். *டே டியூட்டி* பாக்குற நர்ஸ் ஏற்கனவே வந்துட்டாங்க. அவங்க இன்னும் கொஞ்ச நேரத்துல இங்க இருப்பாங்க" என்றார் அந்த செவிலி.
சரி என்று தலையசைத்துவிட்டு, டாக்டரின் அறையை நோக்கி சென்றான் அஸ்வின். டாக்டர் அவனை வரவேற்று அமர வைத்தார்.
"தேங்க்யூ மிஸ்டர் அஸ்வின். உங்களால தான் அந்த மருந்தைப் பத்தி எங்களால தெரிஞ்சுக்க முடிஞ்சது. அந்த டீ கப்பை நாங்க லாபுக்கு டெஸ்ட்க்காக அனுப்பி இருக்கோம். அதுல என்னென்ன கலந்து இருந்ததுன்னு நாங்க கண்டுபிடிச்சி, மாற்று மருந்தையும் சீக்கிரமே கண்டுபிடிச்சிடுவோம்" மகிழ்ச்சியுடன் கூறினார் டாக்டர்.
"அபியோட கண்டிஷன் என்ன, டாக்டர்?" என்றான் கவலையாக.
"அவங்க இப்ப நல்லா இருக்காங்க"
"எதிர்காலத்துல அவங்களுக்கு அதனால ஏதாவது பாதிப்பு ஏற்படுமா?"
"இப்போதைக்கு அதைப் பத்தி எங்களால எதுவும் சொல்ல முடியாது. ஏன்னா அந்த மருந்தில் என்னென்ன கலந்து இருக்குன்னு எங்களுக்கு எதுவும் தெரியாது. ஆனா, அவங்களுடைய பிளட் டெஸ்ட் ரிசல்ட் எல்லாமே நார்மலா தான் இருக்கு. அவங்க நல்லா இருப்பாங்கன்னு நம்ம நம்புவோம். தவறாம அவங்களை மருந்து சாப்பிட சொல்லுங்க. அவங்க சீக்கிரமே குணமாயிடுவாங்க."
சரி என்று தலையசைத்துவிட்டு அங்கிருந்து கிளம்பினான் அஸ்வின்.
இதற்கிடையில்...
அபிநயா மெல்ல கண் விழிக்க முயற்சித்தாள். விவரிக்க முடியாத ஒரு நிலையில் தான் இருப்பதை அவள் உணர்ந்தாள். அவளால் அவ்வளவு எளிதாக கண்களைத் திறக்கவே முடியவில்லை. அவள் தன் கால்களை அசைக்க முயன்ற போது அது பாரமாக இருப்பதாக தோன்றியது அவளுக்கு. மேலும், அவளுக்கு மிகவும் களைப்பாக இருந்தது. இறுதியாக கண்களை கசக்கி விட்டு, கண் திறந்தாள். தனக்கு முன் பின் தெரியாத, ஒரு புதிய இடத்தில் தான் இருப்பதை கண்டாள். அந்த அறை முழுவதும் தன் கண்களை ஓடவிட்டு, அது ஒரு மருத்துவமனை என்பதை புரிந்து கொண்டாள். அப்பொழுது தான், நேற்று என்ன நடந்தது என்பது அவளுக்கு நினைவுக்கு வந்தது.
அவ்வளவு நேரம் களைப்பாக உணர்ந்த அவளுக்கு, எங்கிருந்து தான் அவ்வளவு வேகம் வந்ததோ தெரியவில்லை. திடுக்கிட்டு
எழுந்து அமர்ந்தாள். தருண் கூறிய வார்த்தைகளை ஒவ்வொன்றாய் எண்ணிப் பார்த்தாள். தன் கை கால்களை பரிசோதித்து பார்த்தவள், தன் உடலில் சொல்லவொண்ணா வலியை உணர்ந்தாள்... முக்கியமாக இடுப்பின் கீழ்... அந்த வலி, அவள் இது வரை கண்டிராதது. அந்த வலி, என்ன நடந்திருக்க கூடும் என்பததை அவளுக்கு தெள்ளத் தெளிவாக விளக்கியது. தன் கன்னித்தன்மையை அவள் அந்த சண்டாளனிடம் இழந்து விட்டாள் என்பதை அவளால் தாங்கிக் கொள்ளவே முடியவில்லை. பொங்கி வந்த கண்ணீரை அவளால் கட்டுப்படுத்த முடியவில்லை.
இறுதியில் அதர்மம் வென்று விட்டதா? முழங்கால்களைக் கட்டிக்கொண்டு, ஓவென்று அழுதாள். அவள் தன்னை ஒரு மிருகத்திடம் இழுந்துவிட்டாள்... அவன் கூறியதை, கூறியபடி செய்துவிட்டான்... அவள் பயந்தது போலவே, அவள் கண்ட கெட்ட கனவு பலித்துவிட்டது.
இப்படிப்பட்ட கலங்கத்துடன் அவள் எப்படி அஸ்வினின் முகத்தில் விழிக்க போகிறாள்? தருண் அனுப்பிய காணொளியை அஸ்வின் பார்த்திருப்பான். தன் மனைவி வேறொருவருடன் இருப்பதை பார்ப்பதை போல கொடுமையான தண்டனை, ஒரு கணவனுக்கு வேறெதுவும் இருக்க முடியாது. அவளால், இன்று அஸ்வினுக்கு அந்த தண்டனை கிடைத்துவிட்டது. அவளுடன் சேர, அஸ்வின் எவ்வளவு பிரயத்தனம் செய்தான்...? அவள் ஒருபொழுதும் அதற்கு இடம் கொடுக்கவேயில்லை... ஆனால் இன்று, ஒரு வெறிபிடித்த நாய், அவளைக் களங்கப்படுத்தி விட்டது.
அந்த அறையில் அஸ்வின் இல்லாமல் தான் மட்டும் தனியாக இருப்பதை கண்டு, அவள் மனம் பதைபதைத்தது. அவளை மருத்துவமனைக்கு அழைத்து வந்தது யார்? அஸ்வின் அவளைத் தேடிக்கொண்டு இருப்பானா? அவன் வருவதற்கு முன்பு ஏதாவது செய்தாக வேண்டும். அவளால் அவன் முகத்தில் விழிக்க முடியாது. கட்டிலை விட்டு கீழே இறங்கியவள் இங்குமங்கும் எதையோ தேடினாள். அங்கு அறுவை சிகிச்சைக்கு தேவையான சில சாதனங்கள் வைக்கப்பட்டிருப்பதை கண்டாள். அதை நோக்கி ஓடியவள், அங்கு வைக்கப்பட்டிருந்த கத்திரிக்கோலை கையில் எடுத்தாள். கடைசியாக ஒரு முறை அஸ்வினின் முகத்தை தன் மனதில் கொண்டு வந்து நிறுத்திவிட்டு, தன் கண்களை இருக்கமாய் மூடிக் கொண்டாள். மூடியிருந்த அவள் கண்களில் இருந்து கண்ணீர் வழிந்தோடியது. தன் கையை உயர்த்தி தன்னை அந்த கத்தரிக்கோலால் மாய்த்துக்கொள்ள அவள் தயாரானாள்.
தொடரும்...
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro