15 எங்கே தருண்?
15 எங்கே தருண்?
திருமண நாள்... 10:30 - 12:00 முகுர்த்தம்...
அஸ்வினின் அறைக்கு வந்து, அவனுக்கு பட்டு வேட்டி சட்டை கொடுத்தார் சுபத்ரா. அதைப் பார்த்து பெருமூச்சு விட்டான் அஸ்வின்.
"இந்த டிரஸ் எனக்கு கம்ஃபர்டபிளாவே இருக்காதுன்னு உங்களுக்கு தெரியாதா? எனக்கு கோட் சூட்டே போதும்." என்றான்.
"இது நம்ம குடும்ப கல்யாணம். எல்லாருடைய கண்ணும் நம்ம மேல தான் இருக்கும். மாப்பிள்ளையோட அண்ணன் நீ. அதுக்காகவாவது இதைப் கட்டிக்க."
சுபத்ராவின் கையிலிருந்து, அதை வேண்டா வெறுப்பாக பெற்றுக்கொண்டான் அஸ்வின். அங்கிருந்து திருப்தியுடன் புன்னகைத்து விட்டு சென்றார் சுபத்ரா.
....
தாங்க முடியாத கோபத்துடன் தருணின் அறைக்குள் நுழைந்தான் அருண்.
"உன் மனசுல நீ என்ன நினைச்சுகிட்டு இருக்க?" என்று எரிந்து விழுந்தான்.
"நீ எதைப் பத்தி பேசறே?" என்றான் தருண்.
"உன்னோட எக்ஸ்-கேர்ள்ஃப்ரெண்ட் இங்க என்ன பண்ணிகிட்டிருக்கா?" என்றான் காட்டமாக.
"யாரு?"
"அதானே... உனக்கு ஒரே ஒரு எக்ஸ் இருந்திருந்தா சொன்ன உடனே ஞாபகம் வரும். நானும் முட்டாள் மாதிரி, உனக்கு ஒரே ஒரு எக்ஸ் இருந்தா மாதிரி பேசிட்டு இருக்கேன் பாரு..." என்று கோபமும் எகத்தாளமும் கலந்து பேசினான்.
அவன் கையை பிடித்து, தரதரவென ஜன்னல் பக்கம் இழுத்துச் சென்றான் அருண்.
"அங்கே பாரு..."
அங்கு நின்றிருந்த பெண்ணை பார்த்தவுடன், தருணின் முகம், கள் குடித்த குரங்கைப் போல் மாறியது. அவன் தனது உணர்வுகளை கட்டுபடுத்த படாத பாடுபட்டான்.
"இன்னிக்கு உனக்கு கல்யாணம். இன்னும் உனக்கு இந்த கண்றாவி எல்லாம் தேவையா?" என்று கத்தினான் அருண்.
"சத்தியமா நான் அவளை கூப்பிடல. அவ இங்க எப்படி வந்தான்னு எனக்கு தெரியல. நான் போய் என்னன்னு கேட்டுட்டு வரேன்..."
"நீ ஒன்னும் கிழிக்க வேண்டாம். நான் போய் அவளை அனுப்புறேன்" என்று பல்லைக் கடித்தவனிடம்,
"ப்ளீஸ், ப்ளீஸ்... ஒரு தடவை நான் அவ கிட்ட பேசிட்டு வரேன்... சீக்கிரம் வந்துடுவேன்..."
"பைத்தியமா டா நீ...? யாராவது பார்த்தா என்ன ஆகுறது?"
"நீ அதைப் பத்தி கவலைப்படாதே. நான் பின்பக்கமா போயிட்டு வந்துடறேன்" என்று கூறிவிட்டு, அங்கிருந்து விரைந்தான் தருண்.
அந்த பெண், தன் ஃபோனில் பேசிக்கொண்டு, அங்கிருந்து பின்பக்கம் நோக்கி செல்வதைப் பார்த்தான் அருண்.
சிறிது நேரத்திற்கு பிறகு
தருணின் அறையில் அவன் இல்லாததால் பதற்றம் அடைந்தார் சுபத்ரா. அவனுடைய அறையின் குளியலறையில் அவனை தேடியவாரே, அவனுடைய ஃபோனுக்கு தொடர்பு கொண்டார். அவன், அவருடைய அழைப்பை ஏற்காமல் போகவே, அவனைத் தேடிக் கொண்டு வெளியில் வந்தார். அஸ்வின் இல்லம் முழுதும் தேடியும் அவன் எங்கும் தென்படவில்லை. தன்னுடைய நடுக்கத்தை மறைக்க தன் கைகளை சேர்த்து அழுத்திப் பிடித்துக் கொண்டார் சுபத்ரா. முகூர்த்த நேரம் நெருங்கிக் கொண்டிருக்கிறது... அவருக்கு வியர்த்துக் கொட்டத் துவங்கியது.
தனக்கு வழங்கப்பட்ட பட்டு வேட்டி சட்டையில், முழுவதும் தயாரான நிலையில், தருணின் அறைக்கு வந்தான் அருண். அங்கு நின்றிருந்த சுபத்ராவை பார்த்து,
"பாட்டி, நான் எப்படி இருக்கேன்?" என்றான் தன் கைகளை விரித்தபடி.
அவனுடைய கேள்விக்கு பதிலளிக்காமல்,
"தருண் எங்க? அவன் எங்க தேடியும் கிடைக்கல..."
"அவன் இன்னும் திரும்பி வரலையா?" என்றான் அதிர்ச்சியுடன்.
"திரும்பி வரலையாவா...? அவன் எங்கே போயிருந்தான்?"
"அவனுடைய எக்ஸ்- கேர்ள்ஃபிரண்ட், அவனை பார்க்க வந்திருந்தா. *போகாதே*ன்னு, நான் எவ்வளவு தடுத்தும் கேட்காம, *உடனே வரேன்னு* சொல்லிட்டு போனான்."
"நீ எதுக்காக அவனை போக விட்ட?" என்று கடிந்து கொண்டார் சுபத்ரா.
"ஆமாம்... அப்படியே நான் சொல்றதை அவன் கேட்டுட்டுவான்... கெட்டு குட்டிச்சுவரா போயிருக்கான், தறுதலை..." என்று கத்தினான்.
"அவனை திட்டுறதையும் கத்துறதையும் நிறுத்து... நேரம் ஓடிக்கிட்டிருக்கு. போய் அவனை தேடு..."
"எங்க போய் தேட சொல்றீங்க?"
"அது எனக்கு தெரியாது. ஆனா, அவன் இங்க வந்தாகணும்"
அருண் தனது ஃபோனிலிருந்து, அவனுடைய ஃபோனுக்கு தொடர்பு கொண்டான். ஆனால், அவனுடைய ஃபோன் சுவிட்ச் ஆஃப் ஆகி இருந்தது.
"ஃபோனை சுவிட்ச் ஆஃப் பண்ணிட்டான்" என்று பல்லைக் கடித்தான் அருண்.
"இப்போ நம்ம என்ன பண்றது?" என்று தடுமாற்றத்துடன் கேட்டார் சுபத்ரா.
அங்கிருந்து அஸ்வினின் அறையை நோக்கி ஓடினான் அருண். அவன் மேடையின் அருகில் நின்று, மனோஜுடன் கல்யாண ஏற்பாடுகளை கவனித்துக் கொண்டிருந்தான்.
"எதுக்கு இப்படி தலைதெறிக்க ஓடி வர?" என்றான் அஸ்வின்.
"ஆவின்... தருணை காணோம்"
"என்னது...?" என்றான் அதிர்ச்சியாக.
"ஆமாம்... தயவுசெய்து என்னோட வா."
அவன் கையைப் பற்றி, அவனை தருணின் அறைக்கு அழைத்துச் சென்றான் அருண். தன் முகத்தை மனோஜ் பக்கமாக திருப்பி, தன் கட்டை விரலை உயர்த்தி, அருண் கண்ணாடிக்க, அவனை நோக்கி, ஒரு வெற்றிப் புன்னகையை சிந்தினாள் மனோஜ்.
தவிப்புடன் அமர்ந்திருந்த சுபத்ராவை பார்த்தவுடன், பதற்றமாகிப் போனான் அஸ்வின்.
"என்ன ஆச்சு, பாட்டி?"
"தருண் வீட்ல இல்ல. அவனுடைய ஃபோன், ஸ்விட்ச் ஆஃப் ஆகியிருக்கு"
தருணுடைய எக்ஸ்-கேர்ள்ஃபிரண்ட் வந்ததைப் பற்றி, அவனிடம் கூறினான் அருண்.
"என்ன முட்டாள்தனம் இது? எக்ஸை பார்க்கிற நேரமா இது?" என்று கடுகடுத்தான் அஸ்வின்.
"எனக்கு அப்பவே தெரியும், இதையெல்லாம் அவன் அபிநயாவை பழிவாங்க தான் செய்யாறான்னு. அதனால தான் இந்த கல்யாணம் நடக்கக் கூடாதுன்னு நெனச்சேன். இப்போ என்ன செய்யப் போறீங்க? அபிநயாவோட குடும்பத்தாருக்கு என்ன பதில் சொல்லப் போறீங்க? அவங்க ஏற்கனவே நம்ம மேல ரொம்ப வருத்தத்தில் இருக்காங்க. முகூர்த்த நேரம் நெருங்கிகிட்டு இருக்கு. அவங்க மாப்பிள்ளை எங்கன்னு கேட்டா, என்ன பதில் சொல்றதுன்னு யோசிச்சு வையுங்க" என்று கூறி, சுபத்ராவின் மீது கோபப் பார்வையை வீசினான் அருண்.
மனோஜ் தனது ஃபோனை எடுத்து, தருணை தேடுவதற்கான எல்லா ஆயத்தங்களையும் செய்வது போல் பாசாங்கு செய்தான்.
தனது கார் சாவியை எடுத்துக்கொண்டு, அங்கிருந்து புறப்பட்டான் அஸ்வின்.
"நீ எங்க போற ஆவின்?" என்றான் அருண்.
"வேற எங்க? நம்ம அருமை தம்பியை தேடித்தான்" என்று ஆத்திரத்துடன் அங்கிருந்து கிளம்பிச் சென்றான் அஸ்வின்.
சிறிது நேரத்தில் மனோஜுக்கு கைபேசி அழைப்பு வந்தது. அந்த அழைப்பை ஏற்று பேசிய அவனின் முகம், பேயறைந்தது போல் மாறியது. அவன் அருணை நோக்கி விரைந்தான்.
"என்ன ஆச்சி, மனோ?"
"எனக்கு ஒன்னும் புரியல"
"என்ன சொல்ற நீ?"
"நம்ம ஆளுங்க கையில தருண் கிடைக்கலயாம்" என்றான் மெல்லிய குரலில்.
"என்னது....? அப்பறம் எப்படி அவன் காணாம போனான்?" என்றான் அதிர்ச்சியுடன்.
"நம்ம ஆளுங்களுக்கு முன்னாடியே, அவனை வேற யாரோ கடத்திட்டதா சொல்றாங்க."
"வேற யாரோவா...? அவங்க யாரா இருக்க முடியும்?" என்றான் குழப்பத்துடன்.
"எனக்கும் எதுவும் புரியல."
"ஒருவேளை, அவன் திரும்பி வந்துட்டா, என்ன செய்றது?" என்றான் அருண் திகிலுடன்.
"நானும் அதையே தான் யோசிச்சிகிட்டு இருக்கேன்" என்றான் மனோஜ்.
"நம்மளுடைய ஒட்டுமொத்த பிளானும், ஃப்ளாப் ஆயிடும்."
"அதுக்காக தான், நம்ம எப்பவும் செய்யற மாதிரி நம்ம ஆள் சக்தியை வச்சி இந்த வேலையை முடிக்கலாம்னு சொன்னேன். நீ தான் அஸ்வினுக்கு தெரிஞ்சிடும்னு, வேண்டாம்னு சொன்ன. இப்ப பாரு என்ன ஆச்சுன்னு... அடுத்து என்ன நடக்கப் போகுதோ தெரியல" என்றான் மனோஜ் தவிப்போடு.
"ஆனது ஆகிப்போச்சு. நடக்கிறது நல்லதாக நடக்கணும்னு நினைப்போம்" என்றான் அருண்.
"அஸ்வின் எங்க போனான்னு தெரியலயே..." என்றான் மனோஜ்.
"அவன் என்ன முடிவெடுக்க போறான்னு தெரியல" என்றான் அருண்.
"இந்த நேரத்துல அவன் ஏன் வெளியே போனான்...?"
இருவரும் செய்வதறியாது திகைத்து நின்றார்கள்.
மணமகள் அறை
தன் குடும்பத்தார் மீது, அதீத கோபத்துடன் அமர்ந்திருந்தாள் அபிநயா. இந்த சமுதாயத்தில் பெண்களின் நிலையை எண்ணும் போது, அவளுக்கு கோபம் பொத்துக்கொண்டு வந்தது. பெண்களின் உணர்வுகளுக்கு மதிப்பே இல்லையா? தனக்கு அறவே பிடிக்காத விஷயங்களை கூட அவள் ஏற்றுத் தான் ஆக வேண்டுமா? இக்கட்டான சூழ்நிலைகளில், ஒரு பெண்ணுக்கு தோள் கொடுக்க வேண்டிய பொறுப்பு அவள் குடும்பத்தை சார்ந்தது அல்லவா...? ஆனால் இங்கோ குடும்ப கௌரவத்தை காப்பாற்றிக் கொள்ள அவள் குடும்பத்தாரே அவளை நரகக் குழியில் தள்ள தயாராகி விட்டார்கள்.
இன்னும் சற்று நேரத்தில், அவள் தலைக்கனம் பிடித்த சுபத்ராவின் மருமகளாகப் போகிறாள். ஈவு இரக்கமற்ற கரங்களுக்கு அடிமையாக போகிறாள். அவள், அவனுக்கு வேண்டியதை செய்தாக வேண்டும். தனது கையாலாகாத தனத்தை நினைத்து, நொந்து கொண்டாள் அபிநயா. அங்கே வைக்கபட்டிருந்த திருமண பட்டு புடவை, அவளை பார்த்து சிரிப்பது போல் தோன்றியது அவளுக்கு.
தொடரும்...
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro