பயம்
செந்தழலை கண்டு பயமில்லை மாந்தர்தம் பொறாமை தீ கண்டு பயம்...
இருளை கண்டு பயமில்லை மானிடருள் உறையும் வன்மம் கண்டு பயம்...
விலங்குகளை கண்டு பயமில்லை மிருக குணம் கொண்ட மனிதர்
மேல் பயம்...
சீறும் பாம்பை கண்டு பயமில்லை மானிடர் நாக்கிலுள்ள விஷம் கண்டு பயம்...
ஆன்மாவை கண்டு பயமில்லை
சிரித்து கொல்லும் துரோகிகளை கண்டு பயம்...
எல்லாவற்றிக்கும் மேல் என்னுள் உறங்கும் "அவளை" கண்டு பயம்...
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro