புயலே 3
அத்தியாயம் 3
அவளையும் அறியாமல் அவனது பெயரை அத்தனை மென்மையாக உச்சரித்தாள். அந்நேரம் "துகி என்ன பண்ற..." மனம் அதட்டல் போட்டது.
பதில் பேசாது கண்களை இறுக மூடிக் கொண்டாள். அவளின் மனமோ அவளை முறைத்துவிட்டு அங்கிருந்து நகர்ந்தது...
அக்கணம் "மேம்..." என்ற ஹேமாவின் குரலில் கண்களை திறந்தவள்
"சொல்லுங்க மா..." என்றாள் அமைதியான குரலில்...
"அவர் நேம் அன்ட் டீடைல்ஸ் எதுவும் வாங்கவே இல்லை... அதுக்குள்ள கிளம்பிட்டார்..."துகி திட்டுவாளோ என்ற பதப்பதப்பு ஹேமாவின் குரலில்
"தட்ஸ் ஓகே மா..." என்றாள்..
'அப்பா...' என்ற பெருமூச்சுடன் "ஆமா மேம், இப்போ வந்தவர் யாரு ? பார்க்க ரொம்ப அழகா மேன்லியா இருக்கார்..."மனதில் உள்ளதை சட்டென கூறிவிட்டு ஐயோ என்பதை போல் நாக்கைக் கடித்தாள். அவளது செய்கையில் சிரித்தாள் துகி.
துகியின் சிரிப்பை பார்த்துக் கொண்டே "நான் கூட இன்டர்வியூக்கு வந்து இருப்பாரோன்னு நினைச்சேன். பட் அவர் கிலைண்டா வந்திருப்பாருன்னு யோசிக்கவே இல்லை. அவரை உங்களுக்கு தெரியுமா மேம். நேம் என்னனு சொல்லுங்களேன்..." கண்களில் ஆர்வம் மின்ன கேட்டவளை ஆழ்ந்து பார்த்தாள் துகிரா... மற்ற நேரங்களில் திட்டி இருப்பாளோ என்னவோ இன்றைய மனநிலைக்கு அவள் கேட்டதை பெரியதாக எடுத்துக் கொள்ளவில்லை.
"நந்தன் யாதவ் பிரசாத்..." என்று அவன் பெயருக்கே வலிக்காமல் உச்சரித்தாள்
அவன் பெயரை உச்சிர்த்த கணம் அவளையும் அறையாமல் மனம் தித்திப்பாய் உணர்வதை தடுக்க முடியவில்லை அவளால்... மனதின் எண்ணத்தை முற்றிலும் வெறுத்தவளாய்
நீண்ட நெடிய பெருமூச்சுடன் எழுந்து நின்றவள் "ஓகே மா, வொர்க் பாருங்க..." என தன் அறைக்குள் முடங்கினாள்.
********
இங்கு... யாதவின் கைகளில் ராமின் நான்கு சக்கர வாகனம் பறந்து கொண்டிருந்தது.. வாகனத்தின் வேகம் நிமிடத்திற்கு நிமிடம் எகிறி கொண்டே சென்றது. அவனையும் சாலையையும் மாறி மாறிப் பார்த்த ராமோ
"இப்போ எதுக்கு இவ்ளோ ஸ்பீடா போயிட்டு இருக்க? சந்தோசமா இருந்தாலும் சரி, சோகமாக இருந்தாலும் சரி, இப்படி வேகமாக வண்டி ஓட்டறதே உனக்கு பொழப்பா போச்சு. இனிமே உன்கூட வரவே மாட்டேன். என் உயிருக்கு உத்தரவாதமில்லை டா சாமி..." படபடத்தான் ராம் பிரசாத்.
ராமின் புலம்பல் இன்னும் இன்னும் எரிச்சலூட்ட சட்டெனத் திரும்பி ஆடவனைப் பார்த்தவன் "கொஞ்சம் உன் புலம்பல நிறுத்தரயா? நானே செம கடுப்புல இருக்கேன்..." என்றான் யாதவ்...
"அப்படி என்னடா கடுப்பு? நீ நினைச்ச மாதிரி அவளைப் பார்த்துட்ட தானே..." எனக் கேட்டான்.
"என்ன கடுப்பா...? அவ எப்படி இருக்கா தெரியுமா..." எனக் கேட்டவன் அதீத கோபத்தில் ஸ்டியரிங் வீலை ஓங்கி அடித்தான்.
"அடேய்... எதுக்கு இந்தளவுக்கு கோபம் வருது உனக்கு..." அதட்டினான் ராம்..
"அவளைப் பார்த்து இருந்தா உனக்கு நான் ஏன் கோபப் படறன்னு புரிஞ்சு இருக்கும்..." என்றான் யாதவ் கோபத்தில்.
"சரி என்னாச்சு சொல்லு..." என்றான் ராம்..
"நான் இன்னும் உயிரோட தானடா இருக்கேன். நான் என்ன செத்தாப் போயிட்டான் சொல்லு ராம்.." அதீத கோபத்தில் கத்தினான் யாதவ்...
"அடி வாங்க போற நீ... கோபம் வந்தா என்ன வார்த்தை வேணாலும் வாயில வருமா உனக்கு..." இன்னும் அதட்டினான் ராம்.
நண்பனின் அதட்டலிலா இல்லை தன்னவள் நின்ற கோலத்திலா ஏதோ ஒன்று சட்டென கண்கள் கலங்கியது யாதவிற்கு...
ஆண்மகனின் கண்களில் கண்ணீரை கண்டதும் பதறியவன் "அச்சோ டேய், என்னடா... முதல்ல கண்ணைத் தொட..." என்றான்.
வாகனத்தை ஓரமாக நிறுத்தியவன்
"என்னால முடியால டா. அவளை பார்த்ததும் கோவம் தலைக்கு ஏறிடுச்சு... நான் அவளைப் பார்க்க எவ்ளோ ஆசையா போனேன்னு உனக்கே தெரியும்ல... ஏதோ பேருக்குன்னு இருக்கா டா... கழுத்துல நான் கட்டின தாலிக் கூட இல்லை டா..." என்றவன் மீண்டும்
"அந்த தாலி கூட எனக்கு பெருசா தோணலை டா... அவ இருந்த கோலம் தான் மனசை அப்படியே பிழியுது டா..." கண்களில் வழிந்த கண்ணீரை துடைத்து கொண்டே கூறியவன் வாகனத்தை இயக்கினான்.
அத்தனை எளிமையாக அவளைக் கண்டது அவனுக்கு ஏதோ போல் இருந்தது. இன்றைய காலத்தில் விதவைகள் கூட தங்களின் தோற்றத்தை மாற்றிக் கொண்டிருக்கின்றனர். ஆனால் இவளோ அத்தனை எளிமையாக இருந்தது வலித்தது யாதவிற்கு...
நண்பனின் கலங்கிய தோற்றத்தில் என்ன ஆறுதல் கூறுவதென்று தெரியாமல் விழித்தான் ராம். அதே கணம் இவனை இப்படியே விடுவது நல்லதல்ல என்றும் நினைத்தான்...
"டேய்ய்ய் மச்சி.." என அழைக்க அவனிடம் பதில் இல்லை. அவனது நினைவுகள் முழுவதும் துகிரா மட்டுமே ஆட்சி செய்தாள்.
'நீ இப்ப என்னோட கண்மணியா இல்லைன்னு எனக்கு தெரியும் டி... உன்னோட இந்த பொய் திரையை விலக்கி உன்னை என்னோட கண்ணமாவா மாத்தி மும்பைக்கு தூக்கிட்டு போகல நான் உன்னோட நந்தன் இல்லை...' மனதில் சபதம் போட்டு கொண்டவனது தோளில் சுள்ளென்ற வலியை உணர்ந்தான்.
"ஸ்ஸ்..." என்றவன் பக்கவாட்டில் திரும்பி பார்த்தான்.
"இத்தோட முப்பது தடவை கூப்பிட்டுட்டேன் டா... அப்படி என்ன யோசிச்சுட்டே வர..." எனக் கேள்வியாக கேட்டான் ராம்.
அவனின் கேள்வியை காற்றில் பறக்கவிட்டவன் "இப்போ எதுக்கு டா என்னை அடிச்ச?..." எனக் கேட்டு முறைத்தான்.
'இப்போ அடிச்சா தானே கண்டுக்காம இருப்ப அதான்...' என நினைத்தவன் "நான் கூப்பிட்டே இருக்கேன். நீ காதுல கூட வாங்காம வர. அதான் இரண்டு தட்டு சும்மா தட்டினேன்..." எனக் கூறியவனை வெகுவாக முறைத்தான் யாதவ்.
"இப்போ அடிச்சா தானே நான் உன்னை ஏதும் சொல்ல மாட்டேன்னு அடிச்சு இருக்க உண்மையை சொல்லு..."ராமின் மனதில் இருப்பதை அப்படியே கூறினான் யாதவ்.
"இவ்ளோ ஓப்பனாவா கேக்குது? ச்ச
மனக்கெங்கேட்ட மனசு டா..." சலித்து கொண்ட நண்பனைப் பார்த்து சிரித்தான் யாதவ் பிரசாத்.
"சும்மா சும்மா சிரிக்காத மச்சி. நான் ஒன்னும் மனசுல நினைக்கல..." ராம் முகத்தைத் தூக்கி வைத்தபடி கூறினான். ராமின் முகத்தை பார்க்க இன்னும் சிரிப்பு தான் யாதவிற்கு...
நண்பனின் புன்னகையை உதட்டில் மலர்ந்த புன்னகையோடு பார்த்துக் கொண்டிருந்தான் ராம்.
அதே மனநிலையோடு இருவரும் பயணித்தனர்..
****
கார் பார்க்கிங்கில் வாகனத்தை நிறுத்தி விட்டு வந்தவர்கள் போர்டிகோவில் அமர்ந்து இருந்தவளை கண்டதும் அப்படியே நின்று விட்டனர்.
வீட்டு படிக்கட்டில் அமர்ந்து கையில் குச்சியோடு அமர்ந்திருந்தாள் ராமின் தங்கை நவிதை.
தன் முன்னே நெடுநெடுவென நிற்கும் இருவரையும் ஏறயிறங்க பார்த்தவள் "வாங்க டா தம்பிகளா... ஏன் இவ்வளவு நேரம் ? இங்க இருக்கற காஞ்சிபுரம் போயிட்டு வரவே நாலு மணி நேரம் தான் ஆகும். ஆனால் நீங்க ரெண்டு பேரும் போயிட்டு வர எட்டு மணி நேரத்துக்கு மேல ஆயிருக்கு. மிட் நைட் வரீங்க இரண்டு பேரும்.. உண்மையை சொல்லுங்க எங்க போனீங்க..." எனக் கேட்டாள் அதட்டலாக.
அக்கணம் இவளை இங்கு எதிர்ப் பார்க்கவில்லை என்பது போல இருவரும் விழித்தனர்.
"உங்க முழியே சரியில்லையே டா, ஏதோ ஸ்மெல் வர மாதிரி இருக்கே? இப்ப இரண்டு பெரும் உண்மையை மட்டும் சொல்லணும்... இல்லை என்னோட இன்னொரு முகத்தை பார்க்க வேண்டி வரும்..." என ஒற்றை விரல் நீட்டி மிரட்டிய இளையவளை பார்த்த ராமோ பல்லைக் கடித்துக்கொண்டு
"சின்னக் கழுதை கேள்வி கேட்கிறேன்னு அதையும், இதையும் கேட்காம கம்னு போ..." என்றது மட்டுமல்லாமல் பாவையின் தலையில் தட்டப் போன சட்டென
ராமின் கையை இறுக்கமாக பிடித்தவள் "என்ன பைத்தியதுக்கு வைத்தியம் பார்க்கிற இரண்டு டாக்டர்ஷும்... ஏதோ கோவமா இருக்கற மாதிரி இருக்கு..." புருவத்தை உயர்த்தி கேள்வியாக கேட்டாள்.
அதற்கு ராம் பதில் கூறும் முன்பே
"அப்படியெல்லம் ஏதுமில்லை நவி, கொஞ்சம் டயர்டா இருக்கு அவ்ளோதான்..." எனக் கூறிவிட்டு அங்கிருந்து நகர்ந்தான் யாதவ்.
"என்னடா? ஏன் யாதவ் அண்ணா ஒரு மாதிரி இருக்கு.நீ ஏதாவது பழச ஞாபகப்படுத்தி விட்டுட்டியா?..." விளையாட்டை விட்டு சீரியசான முகப் பாவனையில் கேட்டாள் பெண்.
"நான் எதுவும் ஞாபகம் பண்ணல...அவனே ஞாபகம் பண்ணிக்கிட்டான்..." என்றவன் நீண்ட நெடிய பெருமூச்சுடன் "துகியை நினைச்சுக் கவலைப் படறான்..." என்றவன் இளையவளின் பதிலைக் கூட கேட்காமல் அங்கிருந்து நகர்ந்தான்.
"சரி ரெண்டு பேரும் சாப்டிங்களா இல்லையா?..." பின்னால் திரும்பி ராமிடம் கேட்டாள்.
"ஹான்..." நடந்து கொண்டே பதில் கூறினான் ராம்... செல்லும் இருவரையும் பெருமூச்சுடன் பார்த்தவள் மின் விளக்கை அணைத்து விட்டு அங்கிருந்து நகர்ந்தாள்.
*******
இங்கு தன் அறைக்குள் நுழைந்த யாதவோ தன்னை சுத்தப்படுத்தி கொண்டு படுக்கையில் விழுந்தான். உறக்கம் வருவேனா என்றது.
கண்களை மூடி படுத்துக் கொண்டான் இன்றைய நாளின் நினைவுகள் கண்முன்னே மின்னி மறந்தன... மூன்று வருடங்களுக்கு முன்பிருந்த துகிக்கும் தற்போதைய துகிக்கும் எத்தனை வித்தியாசங்கள் என நினைத்தவனின் நினைவுகள் முழுவதும் அவள் மட்டுமே நிறைந்து இருந்தாள்.
அதே கணம் இங்கு இவனின் நினைவானவளோ
எவ்வித சந்தோசமும் இல்லாமல், எவ்வித துக்கமும் இல்லாமல் தன் அறையில் நன்றாக உறங்கி கொண்டிருந்தாள்.
பின்னே, அவனைவிட்டு விலகிய இத்தனை வருடங்களில் மனதின் ஒரு மூலையில் அவனை காண தவித்து கொண்டு தானே இருந்தாள்... அவன் செய்த துரோகத்தையும் மீறி அவனிடம் செல்லென்று அவளது மானங்கெட்ட மனம் ஆர்ப்பரித்து கொண்டு தானே இருந்தது...
கணவனின் வசீகரத்தை, குறும்பு பார்வையை மீண்டும் காண மாட்டோமா என்று ஏங்கிய நாட்களும் இருக்கிறதே... இவையனைத்தும் இன்றைய நாள் நடந்துவிட்ட மகிழ்ச்சியோ இல்லை அவனை பார்த்துவிட்டு ஆர்ப்பரிப்போ ஏதோ ஒன்று அவளை வெகு நேரத்திலேயே உறக்கத்திற்கு அழைத்து சென்றது...
**********
பனி விழும் இரவில்... வீட்டு தோட்டத்தில் கைகளை கட்டிக்கொண்டு இலக்கின்றி வெறித்து பார்த்து கொண்டிருந்தார் மோகன்... நீண்ட நேரமாக ஆழ்ந்த யோசனையில் அமர்ந்திருந்த கணவரை புருவங்கள் சுருங்க பார்த்தபடி வந்தார் பார்வதி...
'என்னங்க என்ன ரொம்ப நேரமா யோசனையாவே இருக்கீங்க.."வீட்டு தோட்டத்தில் அமர்ந்திருந்த மோகனிடம் கேட்டார் பார்வதி.
"நம்ம பிள்ளைகளை பத்தி தான் மா யோசிக்கிறேன்.என்னதான் நம்ம அவங்களைப் பார்த்துகிட்டாலும் யாதவ் அவங்களோட இருக்கிறது போல வராது தானே. துகீ அவரைப் புரிஞ்சுக்கிட்டு ஏத்துக்கிட்டா பரவாயில்ல... நம்ம இருக்கிற வரைக்கும் பிரச்சனை இல்லைன்னாலும் நமக்கு ஏதாவது ஒன்னுண்ணா பிள்ளைக மூணு பேரையும் யார் பார்த்துப்பா?..." கலங்கிய குரலில் கேட்டார் மோகன்...
கணவரின் கலங்கிய முகத்தை ஆழ்ந்து பார்த்தவர் "ஏங்க, எங்கிட்ட ஏதாவது சொல்லனுமா?..." எனக் கேட்டார். சட்டென நிமிர்ந்து மனைவியைப் பார்த்து சிரித்தவர் "ராம் கால் பண்ணான்... மாப்பிள்ளை வந்திருக்காருண்ணு சொன்னான்..." என்றார் கண்களை இறுக மூடிக் கொண்டு...
மோகனை போல பார்வதி பதட்டப்படவில்லை அமைதியாகவே "ம்ம், இப்ப என்ன பண்ணலாம்னு இருக்கீங்க?..." எனக் கேட்டார். சட்டென நிமிர்ந்து அமர்ந்தவாறு
"கொஞ்ச நாள் போகட்டும்.என்ன பண்ணலாம்னு பார்க்கலாம்..." என்றார். நிமிடம் அங்கு மெளனம் மட்டுமே ஆட்சி செய்ய அதனை பார்வதியே கலைத்தார்.
"பிள்ளைகளை இன்னும் ஸ்கூல் சேர்த்து விடல மூணு வயசாக போகுது..." என்ற மனைவியிடம் முன்பு கூறிய அதே பதிலை தான் கூறினார் மோகன் "கொஞ்ச நாள் போகட்டும்..." என்று...
"ஸ்கூலுக்கு போனாலும் சரி, இல்லை யாதவ் கூட்டிட்டு போனாலும் சரி, உங்களுக்கு எப்படினு தெரியலைங்க ஆனால் குழந்தைகள் இல்லாம என்னால இருக்க முடியுமான்னு தெரியல..." கண்கள் கலங்க கூறினார் பார்வதி.
"ப்ச், அதெல்லாம் ஒன்னுமில்ல மா... எங்க போக போறாங்க. பார்த்துக்கலாம் விடு..." என்றதும் இமை மூடித் திறந்தார் பார்வதி.
நொடிகள் கடக்க "ரொம்ப பனி விழுது போவோமா?..." எனக் கேட்டபடி பார்வதி எழ உடன் மோகனும் எழுந்தார்... கணவன் மனைவி இருவரும் வீட்டினுள் நுழைய தங்களின் அறையிலிருந்து வெளியே வந்தாள் குட்டி வாண்டு.
தன் குட்டி கண்களை கசக்கிக் கொண்டே வெளியில் வந்த வாண்டோ எதிரில் நின்ற பாட்டியைக் கண்டு உதடு பிதுக்கி அழ தாயரானது.
"அச்சோ அம்முக்குட்டி.. என்னடா என்னாச்சு.. பாட்டி இங்க தான் இருக்கேன் டா.." பிள்ளையை கைகளில் அள்ளிக் கொண்டப்படி கூறினாள் பாட்டி..
"பாட்டி அம்மா எங்க..." கண்களை கசக்கிக் கொண்டே கேட்டாள் இளையவள்.
"அம்மா அவங்க ரூம்ல டா..." பிள்ளையின் கேசத்தை கோதிக் கொண்டே கூறினார்.
"நான் பார்க்கல..." என்றாள் கண்களை உருட்டி .
"அம்மா வரும் போது நீயும் சரணும் தூங்கிட்டு இருந்ததுனால அம்மா உங்களை தொந்தரவுப் பண்ணலை..." அவளைப் போலவே கண்களை உருட்டி கூறினார்.
"நான் அம்மாட்ட போறேன்..." பார்வதியின் கையிலிருந்து இறங்க முயன்றவளிடம்
"அம்மு, நீங்க அம்மாவா காலைல போயி பாருங்க. இப்போ தாத்தா, பாட்டிக் கூட தூங்கலாம் வாங்க..." என்றார் அவளை தன்னோடு இறுக்கி அணைத்துக் கொண்டே..
"நான் அம்மாட்ட போகணும் பாட்டி..." அத்தனை பிடிவாதம் பிள்ளையின் குரலில். அவளை கண்டிக்க முடியாமல் கணவரை பார்த்தார் பார்வதி.. கூட்டிட்டு போ என்பதை போல் இமை மூடித் திறந்தார் மோகன்.
"ம்.." என்று பிள்ளையை இறக்கி விட துகியின் அறையை நோக்கி மெல்ல நடந்தாள் சரண்யா... பூனை நடைபோட்டு நடந்த பேத்தியின் பின்னாலயே சின்ன சிரிப்போடு நடந்தார் பார்வதி. சிலடிகள் கடந்த பின்பே பார்வதி பின்னால் வருவதை உணர்ந்தாள் குட்டி வாண்டு... சட்டென பின்னால் திரும்பி
"நோ பாட்டி, நீங்க வர வேணாம், நான் மட்டும் போயி அம்மாவை பார்த்துட்டு வரேன். நீங்க சரண் கூட இருங்க..." பெரிய பெண்ணைப் போல் சில்வண்டு கூறியதும் இடுப்பில் கை வைத்து பார்த்தார் பார்வதி..
"ஹாஹா.. நீ வா பார்வதி, குட்டிமா வந்துடுவா..." என்ற கணவரை திரும்பி பார்த்து சிரித்தவர் சரண்யாவை ஒரு பார்வை பார்த்துவிட்டு தங்களின் அறைக்குள் நுழைந்தார்.
இங்கு துகியின் அறையில்..
ஆழ்ந்து உறங்கி கொண்டிருந்தவளுக்கு
தன் அருகில் யாரோ இருப்பது போல் ஓர் உணர்வு... அந்த உணர்வின் தாக்கத்தில் திடுக்கிட்டு எழுந்து அமர்ந்தாள். சுற்றிலும் ஒரு பார்வை பார்த்தாள். தன் அருகில் மின்மினி கண்களை இறுக மூடி, அழுகையில் துடித்த இதழ்களை பிதுக்கியப்படி நின்றிருந்தாள் துகியின் செல்ல வாண்டு..
பிள்ளையின் பயந்த முகத்தை கண்டதும் "அழகி பொண்ணு, எப்ப டா வந்தீங்க. ரொம்ப பாயந்துடிங்களா..." எக்கி பிள்ளையை தூக்கியபடி பதட்டமான குரலில் கேட்டாள் துகிரா..
தாயின் பதட்டக் குரலில் ஒற்றை கண் மட்டும் திறந்து பார்த்தவள் இல்லையென தலையாட்டி சிரித்தாள். அவள் இல்லையென்று கூறியது கூட சிரிப்பு தான் வந்தது அவளின் அன்னைக்கு.
' உண்மையா ஒத்துகிறாளான்னு பாரு...எல்லாம் அவனை மாதிரியே இருக்கு...' மனம் தன்னாலேயே யாதவை நினைத்தது. அவனை நினைத்து மெல்லிய புன்னகை கூட வந்தது. அக்கணம் தன் பிஞ்சு விரலால் துகியின் முகத்தை தன் பக்கம் திருப்பினாள் சரண்யா...
"என்னடா..." அதே புன்னகையோடு கேட்டாள்.
"நீங்க தாத்தாவை அப்பா சொல்லி கூப்படறீங்க தானே...நாங்க யாரை அப்பா சொல்றது..." மழலை குரலில் கேட்டாலும் அவள் பேசிய வார்த்தைகள் தெளிவாக புரிந்தது துகிக்கு.
அந்நேரம் அவளது இதழ்களில் தவழ்ந்த புன்னகை துணி வைத்தது போல் துடைக்கப் பட, மகளை கண்களில் நீர் சூழ பார்த்தாள்.
தாயின் கண்ணீரை பார்த்து என்ன புரிந்ததோ "எங்களுக்கு அப்பா இல்லையா மா... செத்து போயிட்டா..." எனக் கேட்க கேட்க சட்டென மகளின் இதழில் கை வைத்து
"உன் அப்பா நல்லா இருக்காரு டா, சீக்கிரம் வருவார் ..." என்றாள் அவசரமாக... தாயின் பதிலில் கண்களை அகல விரித்து "எப்ப வருவார்... எப்படி இருப்பார்..." வரிசையாக கேள்விகளை கேட்க ஆரம்பித்தாள்.
இளையவளின் ஒவ்வொரு கேள்விக்கும் துடித்து, தவித்து போனாள் பெரியவள்...
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro