புயலே 2
அத்தியாயம் 2
"துகிரா..."என்றழைத்து தன் எதிரில் நின்றவளை இழுத்தணைத்து கொண்டான் ஆடவன்.
அவளிடம் எவ்வித உணர்வும் இல்லை, அதேகணம் எவ்வித எதிர்ப்பும் இல்லையென்று அறிந்தவன் சற்றே தயக்கத்துடன் அவளிடமிருந்து விலகினான்.
அவளோ அவனைப் பார்த்தது பார்த்தபடி நின்றாள். மங்கையின் அமைதியில் பொறுமை இழந்தவனாய் "ஏதாவது பேசு டி கண்ணம்மா,முதல்ல என் முகத்தைப் பாரு, ஏண்டா இப்படி பண்ணேன்னு கேளு, பிளீஸ் இப்படி அமைதியா இருக்காதா. உன்னோட இந்த அமைதி எனக்கு பயத்தை கொடுக்குது..." படபடப்பாக கூறியவன் பாவையின் முகத்தை விரல் கொண்டு நிமிர செய்து அவளது கண்களை ஆழ்ந்து பார்த்தான்.
காளையின் செய்கையில் அவனையே விடாமல் பார்த்தாள் பெண். அந்த பார்வை ஆயிரம் ஆயிரம் குற்றங்களை அவன் மீது வீசியது...
துகியின் பார்வை வீச்சைத் தாங்காது
"சாரி..." என்றவனது இதழ்கள் துடித்தது.தொண்டை குழி ஏறி இறங்கியது ஆடவனுக்கு.. அவன் செய்த துரோகம் கண்முன் வந்து நின்றது. கண்களை இறுக மூடித் திறந்தவன் துக்கத்தை விழுங்கிக் கொண்டு
"நான் செஞ்சது எல்லாமே தப்பு தான். அதை வேணும்னு பண்ணல மா,எல்லாமே உனக்..." என்றவனை கூர்ந்து பார்த்தாள்.
அந்த பார்வையில் தான் உளர வந்தது புரிந்தது அவனுக்கு.. சட்டென "பிளீஸ் ஏதாவது பேசு..." என்றான் மீண்டும்.
அவனது கெஞ்சலில் கண்களை இறுக மூடித் திறந்தவளுக்கு அன்றைய நாளின் நினைவுகள் கண்முன்னே வந்து மறைந்தது.
அந்நொடி ஆக்ரோசாமாய் அவனிடமிருந்து விலகி நின்றவள் "என்ன பேச சொல்ற? உன்கிட்ட என்ன பேசணும் நான். எதிரியை கூட மன்னிச்சு விட்ருவேன். ஆனால் உன்னைப் போல ஒரு துரோகியை என் வாழ்க்கை முழுக்கவும் மன்னிக்கவே மாட்டேன்..." அன்றைய கோபம் இன்னும் மிதம் இருந்தது போல பேசினாள்.
அன்றைக்கு மட்டும் அவளது தந்தை வரவில்லை என்றால் நிச்சியம் அவளைப் புதைத்த இடத்தில் மரமே வளர்ந்திருக்கும். நீண்ட நெடிய பெருமூச்சுடன் கண்களை இறுக மூடித் திறந்தாள்.
கண்களுக்குள், கண்களில் கண்ணீருடன் நின்ற ஆடவன் விழுந்தான். அவனது கண்ணீரை இகழ்ச்சியாக பார்த்தவள் அவனை விட்டு விலக,சட்டென மங்கையின் கைகளை பற்றிக் கொண்டான் காளை.... அவனையும் அவனது கைகளையும் மாறி மாறி பார்த்தவள்
"இப்ப நீ மட்டும் என் கையை விடலை உன்னை கொல்லக் கூட தயங்க மாட்டேன்..." கண்களில் அனல் பறக்க கூறியவளை கூர்ந்து பார்த்தான்.
இதற்கு மேல் கெஞ்சுவது வேலைக்கு ஆகாது என்று நினைத்தானோ என்னவோ மங்கையை நெருங்கி நின்று "எங்கே கொல்லு டி பாக்கலாம்..." என்றான் புருவத்தை உயர்த்தி.
இருவருக்கும் இடைேயான இடைவெளியை பார்த்தவள் "இதோ பாரு...என்னை நெருங்க நினைக்காத. உன்னை கண்மூடி தனமா காதலிச்ச துகிரா இல்லை நான்..." என்றவளின் எச்சரிக்கையும் மீறி மங்கையை இறுகணைத்துக் கொண்டான் ஆடவன்...
முதலில் அவனது அணைப்பில் துள்ளியவள் மெல்ல மெல்ல அடங்கிப் போனாள் அவனது கைகளுக்குள்... பெண்ணின் அமைதியில் மெல்ல பேச ஆரம்பித்தான் ஆடவன்..
"எஸ் தப்பு தான். நான் பண்ண எல்லாமே தப்பு தான்.அதுக்கான தண்டனையை என்கூட இருந்துட்டே கொடுக்கலாம் டி... என்கூட இருந்துட்டே எனக்கான தண்டனையை காலம் முழுக்க கொடு..." என்றான் இன்னும் இன்னும் இறுக்கி கொண்டு...
அக்கணம்...
"அடேய்... என்னை விடு டா... எனக்கே எனக்குன்னு இருக்கிற நாலு நல்லி எலும்பும் ஒடைய போகுது..." என்ற கத்தல் அவனது காதில் துளியும் விழவில்லை போல...
அவனது பிடி இறுகிக் கொண்டே போகவும் ஆடவனின் முதுகில் பலமாக அடித்தான் அவனது நண்பனான ராம் பிரசாத்...
ராம் அடித்தடியில் தூக்கத்தில் இருந்து விழித்து கொண்டான் ஆடவன்... இத்தனை நேரம் நடந்தவை அனைத்தும் கனவென்று புரியவே நிமிடங்கள் தேவைப் பட்டது அவனுக்கு... காரில் ஏறியதும் அசதியில் உறங்கியது புரிந்தது அவனுக்கு. உறக்கத்தில் சிவந்த கண்களை தேய்த்து கொண்டே "நீயா? எப்ப வந்த? துகி எங்க?..." எனக் கேட்டான்.
"எதே...எப்ப வந்தனா?..." அதிர்ச்சியாக கேட்டவன் மீண்டும்
" நீ கார்லயே தூங்கிட்டேன்னு ட்ரைவர் வந்து சொன்னான்.அவர் எழுப்பியும் நீ எழுந்துக்கலன்னு சொல்லவும் பதறி போயி ஓடி வந்தேன்..." என்றவன் மீண்டும்
"உன்னை எழுப்ப வந்தது குத்தமா டா? சட்டுன்னு கட்டிப் பிடிச்சு இத்தனை அலப்பற பண்ணிட்ட... நிமிசம் என் மேல அந்தளவுக்கு பாசம் போல நினைச்சிட்டேன்.. அப்பறம் துகி துகின்னு கொஞ்சனப்பாரு அப்போ தான் புரிஞ்சுது என்னை நீ நினைக்கவே இல்லன்னு. ச்சே..." என்றவனின் பேச்சு பாதி காற்றில் தான் கலந்தது... அவன் தான் எப்பொழுதோ இறங்கி சென்றிருந்தானே..
"அடேய்..." என்று பல்லைக் கடித்தவன் இறங்கி அவன் பின்னாலேயே சென்றான்...
இவன் ராம் பிரசாத்... அவனது நெருங்கிய நண்பன். கல்லூரி தொடக்கத்திலிருந்தே இருவருமே நெருங்கிய நண்பர்கள்... தற்பொழுது ராம் பிரசாத் பிரபல மனநல மருத்துவமனையில் மருத்துவராகப் பணிப் புரிந்து கொண்டிருக்கிறான்.
இங்கு வீட்டிற்குள் நுழைந்தவனை கண்டதும் "வாடா பா எப்படி இருக்க?..." விசாரிப்பாக கேட்டார் ராமின் அன்னை வேணி... அதற்கு அவன் பதில் கூறும் முன்பே வேணி மீண்டும் தொடர்ந்தார்.
"எங்க எல்லாரையும் பார்க்க வர மூணு வருசமாச்சா உனக்கு...ஏதோ ராம் இருந்ததுனால நீ எப்படி இருக்க, எங்க இருக்கனு தெரிய வந்துச்சு, இல்லைன்னா உன்னைப் பத்தி..." அடுத்து அவர் பேசும் முன்பே இடையிட்டான் ராம் பிரசாத்..
"அம்மா... இப்போ அவன் வந்தும் வராமல் ஏன் இப்படி பேசிட்டு இருக்கீங்க?. கொஞ்ச நாளைக்கு இங்க தான் இருக்கப் போறான் அப்பறம் பொறுமையா பேசுங்க இப்ப அவன் ஃப்ரெஷ் ஆகட்டும்..." என்றான் ராம்.
"டேய் இதுல என்ன இருக்கு..." ராமிடம் கூறியவன் வேணியிடம் திரும்பி
"ம்மா நான் நல்லா இருக்கேன். நீங்க எப்படி இருக்கீங்க? பாப்பா எங்க மா காணோம்..." எனக் கண்களால் ராமின் தங்கையை தேடியப்படி கேட்டான் ராமின் நண்பன். அதற்கு பெரியவள் பதில் கூறும் முன்பே
"அந்த நாய் இன்னும் தூங்கிட்டு இருக்கா டா..." சலித்தப்படி கூறினான் ராம்.
"இரு தம்பி, நான் போயி அவளை எழுப்பி விடறேன்..." என்று வேணி முன்னால் நடக்க
"இல்லைங்க மா வேண்டாம். அவ எழுந்ததும் நான் போய் பார்த்துக்கிறேன்..." என்றான் அவன். அவனது பேச்சில் மெல்லிய புன்னகை வேணியிடத்தில்...
அதே புன்னகையோடு"சரி ப்பா, பிரேஷாகிட்டு வாங்க. நான் சாப்பாடு எடுத்து வைக்கறேன்..." என்றார். அவரிடம் சரியென தலையை ஆட்டிவிட்டு அங்கிருந்து நகர்ந்தான் ராமின் நண்பன்...
தனக்கென ஒதுக்கப்பட்ட அறைக்குள் நுழைந்தவனை ஜன்னல் வழியே உள்ளே நுழைந்த தென்றல் வரவேற்றது.
திறந்திருந்த ஜன்னலை பார்த்தவன் நேராக அங்கு சென்று நின்று கொண்டான்... ராமின் வீட்டை சுற்றிலும் தோட்டத்தை போல வடிவமைத்திருந்தனர். பார்க்கவே அத்தனை ரம்மியமாக இருந்தது...
அவனின் மனக் காயங்களுக்கு இந்த இயற்கை எழில் மருந்தாகியது என்றே கூறலாம். தென்றல் வருடி சென்ற கேசத்தை அழுத்திக் கோதிக் கொண்டிருந்தவன் காதில்
"என்ன மச்சி, ஒரே யோசனையாவே இருக்க..." என்ற ராமின் குரல் கேட்டது.
ராமைத் திரும்பி பார்த்தவன் வரவழைக்கப்பட்ட புன்னகையோடு
"டிராவல்ல கொஞ்சம் டயர்ட்டா இருக்கு டா, வேற ஒன்னுமில்லை..." என்றான்.
தன் நண்பனை பொய்யாக முறைத்தான் "இதுவே ஓவரா இல்லயா உனக்கு.மும்பை டு சென்னை ப்லைட் இரண்டு மணி நேர டிராவல் தான். ஃப்ளைட்ல தூங்கிட்டு வந்தது இல்லாம ஏர்போர்ட்டிலிருந்து நம்ம வீடு வரவரைக்கும் நல்லா தூங்கிட்டு வந்திருக்க.. இன்னும் என்னடா சலுப்பா இருக்கு உனக்கு... ஒழுங்கா ப்ரஷ் ஆயிட்டு வர வழிய பாரு போ..." ராம் விரட்டினான்.
"சரி சரி போறேன் போறேன். வந்ததும் துகியை பார்க்க போகணும் ஞாபகம் இருக்கு தானே.." எனக் கேட்டான் கேள்வியாக.
"அதெல்லாம் இருக்கு. நான் அவகிட்ட என்னோட ப்ரெண்ட் வரான்னு தான் சொல்லி இருக்கேன். அவளும் யாரு அதுன்னு கேட்கல நானும் நீதான் அந்த ப்ரெண்ட்ன்னு சொல்லல...உன்னை பார்த்ததும் எனக்கு தான் அடி விழும் சோ நான் வரல.. நீ மட்டும் போயி உன் பொண்டாட்டியை பார்த்திட்டு வா..." என்றான் ராம். ராமின் கூற்றில் அதிர்ச்சியாக விழிகளை திறந்தவன்
"வாட்? நான் மட்டும் தனியாவா? அங்க போயி என்னனு சொல்றது சொல்லு...முன்னபின்ன தெரிஞ்ச இடம் கூட இல்லை அது..." என்றான் ஒருவித குரலில்..
நண்பனின் புலம்பலில் பாக்கெட்டில் வைத்திருந்த விசிட்டிங் கார்டை நீட்டி "இதை அங்க போயி காட்டு உன் பொண்டாட்டியை ப பார்க்க விடுவாங்க..." என்றான் ராம்.
அவனை மேலிருந்து கீழாக பார்த்தபடி சரியென தலையாட்டிவிட்டு குளியலறைக்குள் நுழைந்துக் கொண்டவன் கிளம்பும் நேரம் ராமையும் கையோடு அழைத்துக் கொண்டு தான் புறப்பட்டான்...
*******
ஞாயிறு தன்னை மலைமுகடுகளில்
மறைத்துக் கொண்டு தன்
செந்நிற கதிர்களை பரப்பிக் கொண்டிருந்த அழகிய மாலைப் பொழுது அது...
ஈரோடு, பவானி லட்சுமி நகரில் வந்து நின்றது ராமின் நான்கு சக்கர வாகனம். கிட்டதட்ட எட்டு மணி நேர பயண களைப்பையும் மீறி அவனது முகத்தில் அத்தனை மகிழ்ச்சி...
"ஜியோ பெட்ரோல் பங்க் பக்கத்திலேயே ஒரு ரோடு போகும் அதுக்கு ஒட்டின பில்டிங் தான்..." துகி அலைபேசியில் கூறியது நினைவு வந்தது ராமிற்கு.
அவள் கூறியது போலவே தான் இருந்தது வழியிலில் வாகனத்தை நிறுத்தினான். முகம் முழுக்க புன்னகையோடு வாகனத்தில் இருந்து இறங்கியவன்
"வெயிட் பண்ணுடா வந்துடறேன்..." என்றப்படி அங்கிருந்து நகர்ந்தான். எதிரிலிருந்த சிறிய அளவிலான விநாயகர் கோவிலை பார்த்தான் கணேசனை வணங்கி கொண்டே துகி பணிப் புரியும் டிராயிங் சென்டரை நோக்கி நடந்தான்.
அந்த நான்கு அடுக்கு மாடியில்
முதல் தளம் முழுவதும் துகியின் டிராயிங் செண்டர் தான் இருந்தது... சாதாரண டிராயிங் சென்டர் போல் இல்லாமல் பார்க்கவே கிளாசிக் லூக்கில் இருந்தது.
சென்னை, மும்பை , புனே போன்ற பெருநகரங்களை விட சுமார்தான் என்றாலும் ஈரோடிற்கு இது கிளாசிக் லூக் என்றே கூறலாம். அலுவலகத்தை ஆராய்ச்சியாக பார்த்தபடி உள்ளே நுழைந்தான் அவன்...
கதவிற்கு பக்கவாட்டில் ரீஷப்ஷனீஸ்ட் இருக்க அவரை நோக்கி சென்றவன் ராம் கொடுத்தனுப்பிய கார்ட்டை நீட்டினான்.
அதனை பார்த்த ரீஷப்ஷனீஸ்ட்டும் "பியூ மினிட்ஸ் வெய்ட் பண்ணுங்க சார்... மேமை வர சொல்றேன்..." என்றபடி த்துகிக்கு அழைத்தாள். அவள் அழைப்பை ஏற்காது போகவும் அவளின் அறையை நோக்கி நடந்தாள் அந்த ரீஷப்ஷனீஸ்ட்.
கணினியில் ஆழ்ந்து இருந்தவளின் காதில் கதவு தட்டும் சத்தம் கேட்டது. நிமிர்ந்து பாராமலே "எஸ்..." என்றாள்.
"மேம்... உங்களை பார்க்க வந்திருக்காங்க...' எனக் கூறி விசிட்டிங் கார்ட்டை நீட்டினாள் ரீஷப்ஷனீஸ்ட்.
அதனை வாங்கிப் பார்த்தவள்
'அண்ணா சொன்ன ஆள் போல...' என நினைத்தப்படி "வெய்ட் பண்ண சொல்லுங்க ஹேமா..." என்றாள் துகிரா...
"ஓகே மேம்..." என்றவள் நேராக வெயிட்டிங் ஏரியாவில் அமர்ந்திருந்தவனிடம்
"பைவ் மீனிட்ஸ் வெய்ட் பண்ணுங்க சார்..." என்றாள். சரி என்பதை போல் இமை முடி திறந்தவன் டிபாயின் மீதிருந்த நாளிதழிலை புரட்டினான்.
அக்கணம் மெல்லியதாக கேட்டது காலடி சத்தம்...சட்டென நாளிதழிலிருந்து பார்வையை திருப்ப அவனின் கண்களுக்கு அனிச்சம் பூப் பாதம் காட்சியளித்தது...
மங்கையின் கால்களை கண்டதும் மெல்லிய புன்னகை அவனிடத்தில்... மங்கையின் பாதத்தை தொட்டும் தொடாமல் உரசி செல்லும் புடவையின் மடிப்பும், விசிறி வாழைகள் போன்ற அழகிய மடிப்பும்... அதனை தாண்டி மேலே சென்றாள் ஓர் சிலையின் நளினங்களை ஒத்திருந்தாள் பெண்ணவள்...
பெண் சிலையை முழுவதும் கண்களால் வருடிக் கொண்டே பாவையின் முகத்தைப் பார்க்க நிமிடமேனும் உறைந்தே போனான்...
அவனிற்கு எதிர்ப் புறம் நின்றவளோ படபடவென அடித்துக் கொண்ட மனதை அடக்கியப்படி அவனைப் பார்த்தாள். அந்த பார்வையில் தெரிந்த அந்நிய தன்மை அவளது பேச்சிலும் வெளிப்பட்டது.
"நீங்க தான் டாக்டர் ராம் சொன்னவரா?.." எனக் கேட்டாள். அவனிடம் பதில் இல்லை... புருவங்கள் சுருங்கி அவனைப் பார்த்தவள் மீண்டும் அதையே கேட்க இப்பொழுது ஆமென்ற தலையாட்டல் மட்டுமே அவனிடத்தில்...
"லேண்ட் டீடெயில்ஸ் இருக்கா?..." இல்லையென்று தலையாட்டினான்.
" ஓகே பைன்... நாளைக்கு கொண்டு வாங்க. தென் என்னென்ன வேணுமோ அதெல்லாம் சொல்லிடுங்க..." என்றாள். அவளது அந்நிய பேச்சில் இவனுக்கு ஏனோ கோபம் வந்தது.
அந்த கோபத்தை குரலில் தேக்கியப்படி "ஓகே ஃபைன் மேடம்..." என்றவன் நிமிடம் நிற்காது அங்கிருந்து கிளம்பி இருந்தான்..
அவன் கண்ணை விட்டு மறையும் வரை அங்கேயே நின்றவள் அவன் கண்ணை விட்டு மறைந்ததும் பொத்தென சோபாவில்ல் அமர்ந்தாள்.
இதுநாள் வரையிலும் யாரை பார்க்கவே கூடாது என நினைத்து இருந்தாளோ அவனை இன்று கண்டு விட்டாள்.. இனி என் வாழ்க்கையில் வேண்டவே வேண்டாம் என நினைத்த ஒருவன் மீண்டும் அவளது வாழ்வில்..
கண்களை சூழ்ந்த நீரை துடைக்க மனமில்லாமல் அமர்ந்திருந்தாள்... ஒருபக்கம் மனம் கதறிக் கொண்டிருந்தது...
நம்ம வாழ்க்கையில மறக்க முடியாத பல விஷயங்கள் நடந்து இருக்கும். அதுல ஒரு குறிப்பிட்ட விஷயம் நம்ம மனசை அரிச்சுட்டே இருக்கும்... சின்ன சின்ன செயல்ல கூட அந்த நினைவுகள் நம்மளை சுத்தி சுத்தி வரும்.. வாழ்க்கை முழுக்க அந்த நினைவுகளை சுமந்துட்டே பயணிப்போம்.. அப்படி நான் மறக்க நினைக்கிற, என் வாழ்க்கை பயணத்தில என்னோட கை கோர்த்தவன் தான் நந்தன்... துகிராவோட நந்தன் யாதவ் பிரசாத்...
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro