Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

!!!1!!!

அப்போ தாம்பூலம் தட்டு  மாத்திராலாம என அராதாவின் தந்தை ஸ்ரீனிவாசன் கேட்க

ஒரு நிமிஷம்  அங்கிள் நான்  உங்க  பொண்ணுகிட்ட கொஞ்சம் பேசணும் அதுவும் தனியா , நகுல் சொன்னான்

அதை கேட்டு அராதாவின் குடும்பத்தினர் அனைவரும் ஒருவரை ஒருவர் பார்த்து என்ன இது என்பதை போல்  நகுலின்  பெற்றோரை பார்க்க  அவர்களும் நகுலை என்ன விசையம் என்பது போல் பார்த்தார்கள்

அவனோ யாரையும் கண்டுகொள்ளாமல் ஆராதனாவை  பார்த்து கொண்டே மீண்டும் நான் உன்கிட்ட தனியா பேசணும் என கேட்க   

அவளோ பதில் ஏதும் சொல்லாமல் அவளின் தந்தையே பார்த்தாள், அவரோ போய்  பேசிட்டு வாம்மா அண்ணியே கூட அழைச்சுட்டு  போ என அவர் அனுமதி தந்த பின் அராதனா மெல்ல எழுந்து முன்னாள் நடக்க நகுல் அவளை தொடர்ந்தான் .அவளின் அறை வந்து விட அங்கே கிடந்த சோபாவில் அவனை அமர சொன்னாள் , அறையே முழுவதும் பார்வையால் அளவு எடுத்தான் அவன்  , அது ஒரு பெரியே அறை , எங்கு திரும்பி பார்த்தாலும் புத்தகமாய் அடிக்கி இருந்தது , மருத்துவ துறையே சார்ந்தவள் அல்லவா ,அது மட்டுமில்லாமல் புத்தகம் என்றால் அவளுக்கு உயிர்  , அதை பார்த்த நகுல் , " எப்பா என்ன இது எதோ லைப்ரரி குள்ள நிக்கிற மாதிரி இருக்கு என ஏளனமாய் சிரித்து வைத்தான் நகுல்  ,அதை எல்லாம் கண்டுகொள்ளாமல் அராதனா நேரடியாய் விசயத்திற்கு வந்தாள் , " என்ன பேசணும் என்கிட்டே "( அவளும் யோசித்தாள்  இவ்வளோ நாள் இல்லாமல் இப்பிடி கடைசி நிமிஷத்தில் பேசணும் சொல்லுகிறான் என்றால் அவனுக்கு தன்னை பிடிக்கவில்லையோ என்கிற யோசனை வேறு ,ஆனால் அவன் தன்னை வேண்டாம் சொல்லிவிடுவான்  என்கிற பயம் இல்லை , மாறாக சற்று நிம்மதியாக இருக்கும் என்று நினைத்தாள் )

குட் நேர விசயத்துக்கு வந்துட , நம்ம  கல்யாணத்துக்கு  முன்னாடி என்ன பற்றி எல்லா சொல்லிடனும் அதான் பேசணும் சொன்னேன் , நான் நகுல் என அவனை பற்றி சொல்ல ஆரம்பித்தான்

" தெரியும் , என மிக மெல்லியே குரலில் சொன்னாள் 

"நீ எப்பிடி டாக்டர் ஆனா , குரலே கேட்க மாட்டேங்குது , அப்புறம் உன்ன எப்போவாச்சும் கண்ணாடில பார்த்து இருக்கியா என்ன காஸ்டியும் இது  , என் பர்சனாலிட்டிக்கு எவ்வளோவோ பேரு நீ-நான்னு பொண்ணு குடுக்க வந்தாங்க தெரியுமா  ஆனா என்னோட  அப்பா தான் உன்ன பார்த்து பொண்ணு அப்பிடி இப்பிடி சொல்லி என்ன சம்மதிக்க  வைத்தாறு இங்க வந்து பார்த்தா ... ?? என அவளை ஏற- இறங்க கேவலாமாக பார்த்து வைத்தான்

அவனின் ஒவ்வரு வார்த்தையும் அராதனவை கொள்ளாமல் கொன்றது இருந்தும் அண்ணி சொல்லி அனுப்பியதால் அவனின் பேச்சுகளையும் கேட்டு அமைதியாக நின்றாள் , அவளின் அமைதியே  அவனை மேலும் தர குறைவாய்  அவளை பற்றி  பேச வைத்தது , வெள் , டாக்டரா இருக்க , அதுக்காக உன்னை நான் கல்யாணம் பண்ணிக்கிறேன் உன் ப்ரோபிச்சனல் எனக்கு சமம்மா   இருக்கிற ஒரே காரணம் தான்  இந்த கல்யாணம் மற்ற படி  எனக்கு உன்னை பிடிக்கல ,எப்பிடியும் உனக்கு என்ன விட்டா வேற ஒப்சன் இல்லை சோ நீ கல்யாணத்துக்கு மறுக்க மாட்ட நினைக்கிறேன்   ஹான்  ,நாம  பேச வந்து  ரொம்ப நேரம் ஆச்சு போலாமா  , என  சொல்ல்விட்டு   அவன் முன்னால் போய்  விட  , ஆராதனா அப்பிடியே  சரிந்து அருகில் இருந்த  சோபில் விழுந்தாள்  மனதில் அவன் பேசி அவனின் ஒவ்வொரு  பேச்சும் படமாய்  ஓடியது , ஒருவர்   ஒருத்தரை இவ்வளோ இழிவாக கூட பேச இயலுமா என்று இன்று தான் பார்க்கிறாள் அவள்  , இது வரை அவளிடம் யாரு இவ்வாறு பேசியது கிடையாது ஆனால் இவனோ என்னவெல்லாம் பேசிவிட்டான்,  

இவனா தனக்கு தேர்ந்து எடுக்க பட்டசி  வாழ்க்கை துணை , இவனை திருமணம் செய்தாள் தனது வாழ்வு அல்லவா சீர் அழிந்து விடும். தகுதி வேண்டுமாமே , இவனை விட்டால் எனக்கு வேற வழி இல்லையாமே , யாருக்கு வேண்டும் இப்பிடி பட்டவன் ,இருக்குடா உனக்கு என்று ஒரு முடிவுடன் தன் கண்ணீரை துடைத்து முகம் திருத்தி விட்டு வெளியே வந்தாள் , எல்லாரும் அவள் வரவும் மீண்டும் சந்தோசமாய் நல்ல நேரம் முடியறதுக்குள்ள    சீக்கிரம் தட்ட மாத்துங்க நகுலின் தந்தை தனது கரத்தில் தட்டை  எடுத்து மற்ற நீட்ட , இம்முறை , எனக்கு இந்த கல்யாணத்துல இஷ்டம் இல்லை என ஆராதனா திடமானா குரலில் சொல்லி முடித்தாள்  .

அமைதி என்றால் அப்பிடி ஒரு அமைதி நகுல் அவளை யோசனையாய்  பார்க்க அவளின் பெற்றோர் அவளை குற்றவாளியே போல் பார்த்தார்கள் , என்ன பழக்கம் இது சபைல இப்பிடி மரியாதை இல்லாம பேசுறது ஆனால் அதை எல்லாம் பொருட்டு படுத்தாமல் ஆராதனா தொடர்ந்தாள் , சாரி ப்பா  எனக்கு இவர கல்யாணம் பண்ணிக்க இஷ்டம் இல்லை

இப்போது ஸ்ரீனிவாசன் கோபமாய் , பாப்பா உனக்கு ஒன்னும் தெரியாது நீ பேசாமல் அமைதியா இரு என அதட்டினார்

இருந்தும் அதை காதில் வாங்காமல் , மன்னிக்கணும் அப்பா எனக்கு இவர பிடிக்கல என சொன்னதையே அவள் திரும்ப சொல்ல

மற்ற உறவினர்கள் எல்லாரும் அவர்களுக்குள் பேச ஆரம்பித்தார்கள் ,எல்லாரும் ஆராதனாவை  சமாதனம் செய்ய  முயற்ச்சி  செய்ய , அது ஏதும் பயன் இல்லாமல் போனது.

ஸ்ரீனிவாசன் கடைசியாக மகளிடம் , இப்போ  முடிவா என்னதான் சொல்லவர  என சற்று குரல் உயர்த்தி கோபமாய் கேட்டார்

அராதனா தெளிவாக , இவ்வரோட எனக்கு கல்யாணம் வேண்டாம் என தெளிவாக மறுத்துவிட்டாள்  தந்தை இடம்

நகுல் கூட கோபமாய் பேச போக பின் அமைதியாகி விட்டான் , இப்போது பேசினாள் காரியம் கெட்டுவிடுமே என்று

நகுலின் தாயாரோ ஆராதனாவின்  பிடிவாதம் கண்டு எரிச்சல் பட்டு கணவன் இடம் , என்ன பொண்ணுங்க இவ இப்போவே இவ்வளோ பிடிவாதம் பிடிக்கிறா இவ நம்ம குடும்பத்துக்கு  எல்லாம் சரி பட்டு வருவாளா  என கேட்க

நகுலின் தந்தையோ , இவ்வளோ நாள் அமைதியா இருந்த பொண்ணு இப்போ இப்பிடி பேசுறான்னா அந்த  புள்ளையே  மட்டும் குறை சொல்ல கூடாது உன் பையன் போய்  என்ன பேசினான் அவன்கிட்டையும் கேளு என அவர் சொல்ல

கணவரின் பேச்சை கேட்டு அவரோ , ஹ்ம்ம்கும் உங்களுக்கு நம்ம புள்ளையே பத்தி குறை சொல்லலைன்னா தூக்கம் வராதே என முகத்தை திருப்பிக்கொண்டார்   

நகுலோ , இப்பிடி ஒரு திருப்பத்தை எதிர் பார்க்கவில்லை அவன் என்னமோ நினைத்து பேச அதுவே அவனுக்கு எதிராக திரும்பி விட்டது , இந்த ஊமை கொட்டன் இவ்வளோ பேசுவாளா இது தெரியாம போச்சே,இவ்வளோ மிரட்டி கொஞ்சம் பணம் பார்க்கலாம் அப்படியே அவளை காலம் முழுவதும்  நம்ம கால் கிழ  கிடப்பான்னு பார்த்தா இப்பிடி காரியத்த கேடுத்துர்வா போல இருக்கே என மனதுக்குள் புழம்ப  ஆரம்பித்தான்.

ஆராதானாவின்  தந்தை அவளிடம் , இந்த கல்யாணம் இப்போ நடந்து ஆகனும் தனா , உனக்கு பிடிக்கிறதோ இல்லையோ என கடுமையாக சொல்ல

இப்போது ஆராதனாவும் இன்னும் உறுதியாக முடியாது அப்பா எனக்கு இந்த கல்யாணம் வேண்டாம்    அதையும் மீறி   நீங்க  இந்த கல்யாணம் பண்ணனும்  நினைச்சா ..? என முதல் முறையாக தந்தையே எதிர்த்து பேசினாள்

மொத்த குடும்பமும்  அவளை திட்டி தீர்த்து அப்போதும் அவள் அசைந்து கொடுக்கவில்லை

கடைசியில் தனாவின் தந்தை அவளை பார்த்து என் பேச்சுக்கு மதிப்பு குடுக்க தெரியாதவங்க இனி இந்த வீட்டுல  இருக்கிற தகுதி இல்லை. என்று தன்னுடையே முடிவு சொல்லிவிட 

அவரின் இந்த முடிவை கேட்டு , அப்பா என அதிர்ந்து போனாள் ஆராதனா

எல்லாரும் அவரின் முடிவு தான் சரி என்பது போல் பேசி அவளை அந்த இடத்தை விட்டு கிளம்ப சொல்ல [ அப்பிடியாவுது அவள் சம்மதம் சொல்லிவிடுவாள் என பேசினார்கள் அனைவரும் ]

[இப்பொது அவள் சரி என்று சொல்லிவிட்டாள் அவள் வாழ்கை முழுவதும் வேதனை பட நேரிடும் அதற்காகவே ]கண்ணீர் உடன் வேகமாய் தன்னுடையே அறைக்கு திரும்பி ஒரு பெட்டியில் தன்னுடையே உடமைகலையே அனைத்தும் அடிக்கி கொண்டு  போனில் யாரோகோ அழைத்து பேசினாள்

" ஹலோ நான் டாக்டர் ஆராதனா , உடனே ஒரு ரூம் ரெடி பண்ணுங்க நான் கிளம்பி வரேன்" என பேசிவிட்டு அங்கே இருக்க பிடிக்காமல் கிளம்பினாள்

அப்போது அவளது சித்தப்பாவின் மகள் அவளை தேடி வந்து நக்காலக , என்ன அக்கா இவ்வளோ முட்டாளாக இருக்க , இப்போ பாரு உன் முட்டாள்  தனத்து நால எனக்கு எப்பிடி ஒரு ஜாக்பாட் அடிச்சு இருக்குன்னு , சொல்ல

முதல் முறையாக ஆராதனா  தன்னுடையே  அணைத்து உறவுகளையும் அறவே வெறுத்தாள் , ஆனால் வெளியே காட்டிகொள்ளாமல்  தங்கையே  பரிதாமாக ஒரு பார்வை பார்த்துவிட்டு வாழ்த்துக்கள்  என்று  சொல்லிவிட்டு கிளம்பினாள்

கிழே வந்தவளுக்கு அங்கே அனைவரின் சிரிப்பு சத்தம் மேலும் அவளை  வேதனையில் ஆழ்த்தியது , இது கூத்து இன்னும்  எவ்வளோ நாளைக்கோ என்று , அவள் தாய் கூட அவள் இடம் பேச முயற்சிக்கவில்லை அதுவே அவளை இன்னும் வருத்தியது ஏதும் பேசாமல் விருட்டேனே அங்கே இருந்து நகர்ந்துவிட்டாள்.

அவர்கள் வாங்கி குடுத்த  எந்த ஒரு பொருட்களையும் எடுத்துட்டு போகாமல் இவ்வளோ  வருடத்தில் அவள் பணத்தில் என்னவெல்லாம் வாங்கினாலோ அதை மட்டும் எடுத்து சென்றாள்

அவள் போய் விட்டாளா  என்று கூட வீட்டில் உள்ள யாருக்கும் பார்க்க தோன்றவில்லை.  வேதனை உடன்  தான் பிறந்த வீட்டை விட்டு ஆராதனா தனக்கு என்று குடுக்க பட்ட மருத்துவ  குடி இருப்புக்கு வந்து விட்டாள் .

இதோ இன்னையோடு அவள் தன்னுடையே வீட்டை விட்டு வந்து ஒரு மாதம் ஆகிவிட்டது

ஆராதனா – சற்று உயரம் கம்மி தான் நிறம் கூட மாநிறம் ஆனால் படிப்பில் படு சுட்டி அவளுக்கு பிடித்த மருத்துவ துறையே அவள் தேர்ந்து எடுத்தாள். அமைதியான பெண் அவள் எல்லரோரிடமும் சற்று ஒதுங்கியே இருப்பாள் அதிகம் யாரிடமும் பேச மாட்டாள் அதுநாள் அவளுக்கு நடுப்பு வட்டாரம் சற்று குறைவு தான். அவளுக்கென இருக்கும் ஒரே உலகம் புத்தக உலகம் தான் எப்போவ்தும் எதாவுது ஒரு புத்தகத்தை வைத்து படித்து கொண்டே இருப்பாள். வெளி இடங்கள் செல்ல அவ்வலோவாக பிடிப்பது இல்லை அவளுக்கு ஆனால் அவள் வீடு தோட்டத்தில் நடக்க பிடிக்கும் அவளுக்கு, எப்போது எல்லாம் வீட்டில் இருப்பாளோ அப்போது எல்லாம் அவள் தோட்டத்தில் தான் இருப்பாள், இவ்வளோ தான் இவளை பற்றி.

நடந்த அனைத்தையும் பற்றி யோசித்த படி அமர்ந்து இருந்தாள்  தனா அவளுக்கென்று குடுக்க பட்ட அறையில் , நள்ளிரவை தாண்டி இருந்தது  வீட்டுக்கு செல்ல பிடிக்காமல் இல்லாத வேலையே இழுத்து போட்டு செய்து கொண்டு இருந்தாள் அவள் அப்போதான் ஒரு நர்ஸ் அவளிடம் அவரசமாக வந்து , மேம் , எமெர்ஜென்சி அக்சிடென்ட் கேஸ் சீக்கிரம் மேம் , வந்து அழைக்க

அவளோ அந்த நர்ஸ் உடன் வேகமாக நடந்த படி வேற டாக்டர்ஸ் யாரும் இல்லையா என கேட்க

நர்ஸ் , இல்லை மேம்  யாரும் இல்லை அதான் உங்கள அழைச்சிட்டு போலாம் வந்தேன் , நிலைமை ரொம்ப மோசமாய் இருக்கு என இருவரும் பேசியே படி          

நோயாளியே நெருங்கினார்கள் இருவரும் , நர்ஸ் சொன்னது போல் அவனது நிலைமை சற்று மோசமாய் தான் இருந்தது, அவனை  பரிசோதித்த பார்த்து நர்ஸ்  சீக்கிரம்


 நர்ஸ் சொன்னது போல் அவனது நிலைமை சற்று மோசமாய் தான் இருந்தது, அவனை  பரிசோதித்த பார்த்து நர்ஸ் சீக்கிரம் எமெர்ஜென்சி வார்டு ரெடி பண்ணுங்க , என அவனுடன் அவசர சிகிச்சை பிரிவு   அழைத்து வந்து அவனுடையே காயங்கள் அனைத்தும் சுத்த படுத்தியே படி நடந்தது என்னவென்று விசாரித்தாள்  எப்பிடி ஆச்சி , ட்ரங்கன்  கேஸா , சற்று , கோபமாய் கேட்க"

அவனுடன் நின்ற ஒருவன் , ஐயோ டாக்டர்  அப்படியெல்லாம் இல்லை கொஞ்சம் ப்பாமிலி ப்ரோப்லேம் அதே ஞாபகத்துல  வண்டி எடுத்துட்டு வெளியே போயிட்டான் அப்புறம் தான்  இப்பிடி ஆகிருச்சு என கவலை , பயம் கொண்டு அவன் நடந்ததை எடுத்து சொல்ல ஒருநிமிடம்  தனாவின்  கைகள்   அப்படியே நின்றது அடிப்பட்டு  கிடந்தவனின் முகத்தை உற்று பார்த்து  அவனிடத்தில் தன்னை வைத்து பார்த்தாள், என்ன பிரச்சனையோ ,அவனது உடல் நிலையில்  மாற்றத்தை உணர்த்த ஆராதனா அவசரமாக நர்ஸ் பல்ஸ்  டவுன் ஆகுது சீக்கிரம்  ரத்தம் எனன் குரூப் பார்த்து   அரேன்ஜ் பண்ணுங்க ,அப்பிடியே  ஆபரேஷன் தியேட்டர் ரெடி பண்ணுங்க. என நர்ஷை  அவசர படுத்தினாள் , அவன் அவசர சிகிச்சை பிரிவு அழைத்து செல்ல பட்டான் ,  இரண்டு மணி நேரம்  போராட்டத்துக்கு பின்பு தான் அவனது நிலைமை சீர் ஆனது, செலவியாரிடம் பார்த்துக்க சொல்லிவிட்டு அவள் தனது   அறைக்கு திரும்பினாள் ,அப்போது தான் அவளுக்கு நிம்மதியான முச்சு வந்தது , பிழைத்த விட்டான்  அல்லவா என்று  இருக்கையில் அமர்ந்தவளுக்கு  மேலும் அவனை பற்றியே  சிந்தனைகள் தானே வண்டியில போய் மோதிக்கிற அளவுக்கு என்ன பிரச்சனையா இருக்க முடியும் , இப்பிடி கூடவா ஒருத்தன் இருப்பான் எதுனாலும் பேசி சரி பண்ணி  இருக்கலாம் இப்போ பாரு யாருக்கு நஷ்டம் என்று அவன் மேல் கோபமாய் வந்தது அவளுக்கு .திட்டியே படி நாற்காலியில் சாய்ந்து  அப்படியே உறங்கியும்  விட்டாள்.

இரண்டு நாள் கழித்து தான் அவனுக்கு நினைவு திரும்பியது , உடல் முழுவதும்    ரணமாய்  வலித்தது , நடந்த எதையும் அவன் நினைத்து பார்க்க விரும்பவில்லை அவன்  எழுந்து அமர முயற்ச்சி செய்யவும்  ஆராதனா உள்ளே வர சரியாக இருந்தது அவனின் முயற்ச்சியே பார்த்து , இதெல்லாம் காரை கொண்டு போய் மோதுறதுக்கு முன்னாடி யோசிச்சு இருக்கணும் என அவனின் அருகில் சென்று  பரிசோதித்து பார்த்தாள் , அவளிடம் பதில் ஏதும் சொல்லாமல் ,நான் எப்போ டிச்சார்ஜ் ஆகலாம் என கேட்ட அவனை  முடிந்த மட்டும் முறைத்து பார்த்துவிட்டு ,மற்ற நோயாளிகளை பார்க்க சென்று விட்டாள் 



Bạn đang đọc truyện trên: Truyen247.Pro