சந்திப்பு டே!!.... 09/07.
மணி 11.45... அதை கவனித்த தீரா, தன் மொபைலை அனைத்து ஒரு ஓரமாக வைத்துவிட்டு இப்பக்கமாக திரும்ப.. குறுகுறுவென அவளையே பார்த்தபடி அமர்ந்திருந்தாள் வானு.
"ஆத்தாடி", அவ்வளவு அருகில் வானுவை கண்ட தீரா, நெஞ்சில் கைவைக்க.., "அடியேய் லூசு பப்பிமா.. இந்த ராத்திரில இவ்வளவு குலோசப்ல பேய் மாதிரி என்னடி பண்ணிட்டு இருக்க..."
"ஆங்.. நானே எழுப்பனும்னு நெனச்சுட்டு இருந்தேன்.. நீயாவே எந்திருச்சுட்ட..", தூக்க கலக்கத்தில் கண்ணை கசக்கி கொண்டே கேட்டவளின் முகத்தை ஜன்னலின் புறமாக திருப்பி வைத்தாள் வானு.
"என்-", கூற வந்ததை முழுமையாக கூறாமல் ஜன்னலை நோக்கியவளது கண்கள் ஏகத்திற்கும் விரிந்தது..
"ஹேய்.. என்னதது..", பரபரப்புடன் கட்டிலில் இருந்து இறங்கியவள் விறுவிறுவென ஜன்னலருகில் ஓடினாள். அவளை தொடர்ந்து வானுவும் ஓடினாள். அங்கே அவர்களின் வீட்டு தோட்டத்தில் பளபளத்து கொண்டிருந்தது நீல நிறத்தில் ஒரு ஒளி.
ஓரிரு நொடிகள் அந்த ஒளியையே உறுத்து நோக்கிய தீரா, "வா பப்பிமா அது என்னன்னு பாக்கலாம் ", மறு யோசனை இன்றி வானுவை பிடித்து தரதரவென இழுத்துக்கொண்டு தொடத்திற்கு ஓடினாள். அங்கே தோட்டத்தில் கண்ட காட்சியில் தீரா வாயை பிளந்தே விட.., "ஹை.. நிரன்!!!.. அஜி!!!.. பாத்து எவ்வளவு நாள் ஆச்சு...", நிலவில் இருந்து அந்த ஒளியின் வழியாக பயணித்து அங்கே வந்திருந்த இருவரையும் நோக்கி ஆர்வமாக ஓடினாள் வானு.
"ச்சை.. இதுங்க தானா..", சலித்து கொண்டு வானுவை பின்தொடர்ந்தாள் தீரா.
வேகமாக ஓடி சென்ற வானு அவ்விருவரையும் நலம் விசாரித்து கொண்டிருக்கையில், தொண்டையை செறுமிக்கொண்டு அவர்களுக்கு நடுவில் புகுந்த தீரா, "என்னைக்கும் இல்லாத திருநாளா இன்னைக்கு எதுக்கு வந்து இருக்கீங்க", நிரனையும் அஜியையும் ஏற இறங்க பார்க்க.. ஒருவரை ஒருவர் பார்த்து கொண்ட அவ்விருவரும், "இன்னைக்கு என்ன நாள்ன்னு நியாபாகம் இருக்கா ?", அவளிடமே எதிர் கேள்வியை கேட்டார்கள்.
"என்ன நாளு???"
"அதானே என்ன நாளு ? இன்னைக்கு எதுவுமே ஸ்பெஷல் கெடையாதே?", தீராவை தொடர்ந்து வானுவும் தலையை சொறிய..., "ஹஹ்ஹ்.. அஞ்சு வருஷத்துக்கு முன்னாடி இன்னைக்கு தா உனக்கு ஆகஸிடெண்ட ஆச்சு... நியாபகம் இருக்கா ?", நீண்ட பெருமூச்சுடன் தீராவை நோக்கினான் நிரன்.
"ஆக்ஸிடென்ட்டா????....", தீரா யோசனையில் மூழ்கிய நொடி, "ஹே.. ஆமா ஆமா.. உன் மண்டைல அடிபட்டு பொளபொளன்னு ரத்தமா கொட்டுச்சே... அஞ்சு வருஷம் முன்னாடி .. ஸ்கூல்ல.. மாடி ஏறிட்டு இருக்கைல பின்னாடி கெளந்து மண்டைல அடிபட்டு மெமரிலாஸ் கூட ஆச்சே!!..", அவளுக்கு யோசிக்க பாயிண்ட் எடுத்து கொடுத்தாள் வானு. அவளை மேலும் கீழும் பார்த்த தீரா, "எனக்கு எதுவும் நியாபகம் இல்லையே பப்பிமா" , அவளை வினோதமாக நோக்கிய நொடி, "அட லூசு பாப்பு.. மெமரி லாஸ் ஆனா எப்டி நியாபகம் இருக்கும்", அவளை வாரிவிட்டு கைக்கொட்டி சிரித்தாள் வானு.
"அம்ம்ம்ம்..", தீரா முழிக்க.. இவ்விருவரின் பைத்தியக்கார தனத்தையெல்லாம் தலையில் அடித்துக்கொண்டு பார்த்து கொண்டிருந்த அஜி, "சரி சரி... நடந்த சம்பவம் தா நியாபகத்துல இல்ல... மெமரி லாஸ் ஆனதாச்சும் நியாபகத்துல இருக்கா?", சலித்து கொண்டு தீராவிடம் கேட்டாள்.
"ஹான் ஹான்... இருக்கு இருக்கு.. ஒரு மாசம் நடந்தது மறந்து போச்சு... இப்போ அதுக்கு என்னாவாம்... அஞ்சு வருஷ நிறைவு விழான்னு கேக் வெட்டி செலப்ரேட் பண்ண வந்துருக்கீங்களோ??"
"ஹிஹிஹி.. இல்ல இல்ல.. ஆனா.. .. .. ஆமான்னும் சொல்லலாம்"
"எதே.. ", தீரா விழிவிரித்து அஜியை நோக்க அவளோ நிலமையை விளக்குமாறு நிரனை நோக்க அனைவரையும் பார்த்து கெக்கபெக்கவென சிரித்து கொண்டிருந்தாள் வானு. தொண்டையை சரி செய்து கொண்டு தீராவிடம் பேச தொடங்கினான் நிரன்.
"ஆக்ச்சுவலி... உனக்கு மெமரி லாஸ் ஆனதுக்கு காரணம் அடி பட்டது கெடையாது.."
"பின்ன???"
"நாங்க உன் மூலைக்குள்ள வச்ச சிப் தா காரணம்.."
"எதே மூலைல சிப் வச்சீங்களா?, " தீரா வாயை பிளக்க.. "ஹை !!!... பாப்பு மண்டைக்குள்ள சிப் இருக்கு!!... அப்டி இருந்தும் ஏன் பாப்பு டெஸ்ட்ல ஃபெயில் ஆகுற நீ???. சிட்டி ரோபோ மாறி எல்லாத்தையும் படிக்க வேணாம்??" , அதி முக்கிய சந்தேகத்தை முன் வைத்தாள் வானு.
"உன்ன கொல்ல போறேன் பாரு..", வானுவின் கழுத்தை பிடித்தவள், "ஆமா யார கேட்டு ஏன் மூலைல சிப் வாச்சீங்க நீங்க ரெண்டு பேரும் ??", அஜி நிரனிடம் எகிறியதில் திருட்டு முழி முழித்தாள் அஜி. அவளுக்கு கண்ணை காட்டிவிட்டு நிலமையை திசை மாற்றினான் நிரன்.
"ம்ம்ச்... இப்போ அது முக்கியம் இல்ல... அன்னைக்கு நாங்க வச்ச சிப் உன் நரம்பு மண்டலத்தோட கனெக்ட் ஆகும்போது கொஞ்சமா உன் நியாபகங்கள அது டேமேஜ் பன்னிருச்சு... அதனால தா உன் நினைவுகள் அழிஞ்சு போச்சு"
"அட பாவிகளா???.."
"அது சரி.. அதா முடிஞ்சு போய் அஞ்சு வருஷம் ஆச்சே... இப்போ ஏன் அத நியாபக படுத்தீட்டு இருக்கீங்க.... பாருங்க என் பாப்புக்கு பயத்துல ஜுரம் வர்ர மாறி இருக்கு..", தீரா அதிர்ச்சியின் உச்சத்தில் இருந்த நேரம் சம்பந்தமே இலாமல் ஏதேதோ கூற தொடங்கினாள் வானு.
"அடியேய்.. அதிர்ச்சில எனக்கு ஹார்ட் அட்டாக்கே வர்ர மாறி இருக்கு.... நீ ஜுரம் வர்ரத பத்தி கவல பட்டுட்டு இருக்க?", என வானுவை முறைத்த நொடி, "இதுக்கே அட்டாக்கா??.. அப்போ அடுத்த தகவல் கேட்டு என்ன பண்ணுவா இவ ?", அஜி வாய்க்குள் முனங்கியது அவளுக்கு தெளிவாக கேட்டுவிட்டது.
"அடுத்து என்னது", மீண்டும் ஒரு அதிர்ச்சிக்கு தயாராகியவள் நிரனை நோக்க.. "அந்த சிப்ப இப்போ ரி-நியூவ் பண்ணனும்... இல்லனா அது மொத்தமா உன் பிரைன் சிஸ்டம டேமேஜ் பண்ணி நீ பர்மனன்ட் கோமாக்கு போக வேண்டியது தா", சொல்லி வாயை மூடிய நொடி, "எதே கோமாவா???.. அடேய்.., நா வாழ வேண்டிய புள்ள டா.. என்ன கொல பண்ண பாக்குரியா நீ?", பொங்கி எழுந்து விட்டாள் தீரா.
"கொல பண்ணணும்னா ஏன் பாப்பு இங்க வர போறாங்க... அவங்க நிலாலயே இருந்துருப்பாங்களே இப்போ உண்ண காப்பாத்த தா வந்துருக்காங்க.... இல்ல ?", தீராவை அணைத்தபடி மற்ற இருவரையும் நோக்கினாள் வானு.
"ஆமா.. ஆனா இப்போ நிலாக்கு போற அளவு டைம் இல்ல... அப்டியே இருக்குனாலும் அந்த பழைய சிப்போட இவளால நிலாக்கு வர முடியாது... அங்க இருக்குற ஹை ரேடியேஷனால சிப் வெடிச்சுறும்", சீரியஸ் லுக்குடன் விளக்கம் கொடுத்தாள் அஜி.
"சிப் தானே வெடிக்குது.. வெடிச்சா வெடிச்சுட்டு போகட்டும்.. நாம போகலாம்", சர்வ சாதாரணமாக தோளை குலுக்கி கூறிய வானுவை, அபூர்வ ஜந்து போல் நோக்கினார்கள் மற்ற மூவரும்.
"அடியேய் கொலகாரி பப்பிமா.. வெடிக்கிறது என் மூளைக்குள்ள டி.. மூளைல ஒரு சின்ன பார்ட் கொலாப்ஸ் ஆனா கூட, நா பரலோகம் போக வேண்டியது தா ", என வானுவின் முடியை பிடித்து ஆட்டியாடி கூறிய பின்னரே அப்படி ஒன்று இருப்பதை யோசித்தாள் அவள்.
"அம்.. அப்போ சரி.. அப்டினா இப்போ என்ன செய்ய?? எப்டி என் பாப்புவ காப்பாத்த?"
"பூமியிலயே வச்சு தா ட்ரீட்மெண்ட் பண்ணனும்", விடை கொடுத்தான் நிரன்.
"அப்போ வாங்க வாங்க சீக்கிரம்... ஆப்ரேஷன் பண்ணலாம்", அனைவரையும் வீட்டுக்குள் அழைக்கும் வானுவை வினோதமாக நோக்கிய தீரா, "எதே?? யாரு பண்ணுவா ஆப்ரேஷன்??", ஒரு மிரட்சியுடன் நோக்கியவளுக்கு, "இவங்க தா?", மற்ற இருவரியும் கை காட்டினாள் அவள்.
"இவங்களா ??"
"நாங்களா ??"
அனைவரும் ஒன்றுபோல் கோரஸ் பாடுவதை கண்ட வானு, "ஆமா..நீங்க தா. ஏன்? ஆப்ரேஷன் பண்ணி என் பாப்புவ காப்பாத்த மாட்டீங்களா?", என்றதற்கு, "எங்கள பாத்தா ஆப்ரேஷன் பண்ணுறவங்க மாறியா தெரியுது?", மேலும் கீழும் நோக்கினாள் அஜி.
"உம்... அப்போ பண்ண மாட்டீங்களா?? நீங்க சைன்டிஸ்ட்டுன்னு நா கேள்வி பட்டேனே ?"
"அடியேய்..எந்த சைன்டிஸ்ட்டு டி ஆப்ரேஷன் பண்ணுவாங்க.. இப்டி எல்லாரும் ஒண்ணு கூடி என்ன கொல்ல பாக்குறாங்களே.. நா என்ன பண்ணுவேன்?", வானுவை முறைத்தவள் இறுதியில் தன்னதனியாக புலம்ப தொடங்கிட, "சரி சரி அழுவாத பாப்பா...", அவளை அனைத்து கொண்டு தேற்றிய வானு, "சரி, இப்போ என்ன தா செய்ய??.. நீங்க ஆப்ரேஷன் பண்ணாட்டி யாரு தா என் பாப்புவ காப்பாத்துவா?? எனக்கு இருக்குரதே ஒரே ஒரு பாப்பு.. ", நிரனிடம் தொடங்கி அஜியிடம் முடித்தாள் வானு.
"இப்போ இருக்குற நெலமைல பூமிலயே தா ட்ரீட்மெண்ட் பண்ணனும்... அதுவும் ஏலியன் டெக்னாலஜிய பத்தி நல்லா தெரிஞ்ச ஒரே ஒரு ஸ்பெஷல் டாக்டரால தா முடியும்", அஜி விடையளிக்க.. வானுவிடம் இருந்து பிரிந்து அவளிடம் நகர்ந்தாள் தீரா.
"யாரந்த புன்னியவான்? எங்க இருக்கு அந்த தெய்வம்?"
"ஹம்ம்.. லோக்கேஷன் சரியா தெரியாது... ஆனா பிளானட் கிளவுட்ல ஸொஹாரான்னு எங்களோட ஒன்னுவிட்ட உறவுக்கார தம்பி ஒருத்தன் இருக்கான்... அவனுக்கு நல்லா தெரியும் அந்த டாக்டரோட எடம் . அவன் வந்தா தா பூமில இருக்குற அந்த டாப் ஏலியன் டெக்னாலஜி ஸ்பெஷலிஸ்ட் டாக்டர் நாங்களே பாக்க முடியும்."
"அய்யோ... அந்த புன்னியவான் எவன்னு வேற தெரியலையாமே.. எவனா இருந்தாலும் சரி.. என்ன காப்பாத்தி விட்டுறுடா பேரு தெரியாத ராசாவே ..."
"ஹே பெரு எனக்கு தெரியும்... அந்த டாக்டரோட பெரு .??. என்னமோ ரா'ல வரும் .. ஹான் ரக்ஷவன்.", நிரன் கூறி வாயை மூடவில்லை, "எதே.. அவனா???", அதிர்ச்சியில் வானுவின் மீதே மயங்கி சரிந்தாள் தீரா.
💙WILL MEET YOU ALL💙
💜SOON AGAIN 💜
❤️LOVELY LIL HRTZ ❤️
தொடரும்.❣️
happaaaadaaaa... karuppu poga moottaththa vittu oru varushama enna kidnap panna vachchadhukku oru vazhiyaa pazhi vaangiyaachchu ... uffffff.... I'm releifed nowwwww.
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro