அத்தியாயம் - 9 😭
ஆதவன் உச்சியில் இருந்தபடியே... தன்னுடைய கதிர்களால்.. இது மதியவேளை எனக் காட்ட தொடங்கினான்..
ஷ்ரித்திக்... டென்சனில்.. வார்டுக்கு வெளியே.. அங்குமிங்கும் நடந்த வண்ணமிருக்க...
விக்ரமோ... இன்னமும் யோசனையில் உளன்ற வண்ணமிருக்க..
ஷ்ரித்திக் "டேய்.. சனியனே.. எப்படியும் அவளப் பத்தி எல்லாம் கறந்திருப்பல.. அவ புருஷனுக்கு போன் பண்ணு.. என்ன பண்றான் இவ புருஷன்... இவள இப்படி விட்டுட்டு அங்க என்ன.. " என்று வாய்வரை வந்த வார்த்தையை முழுங்கிவிட்டு விக்ரமை கேட்டான்..
விக்ரமோ... அதைக் கேட்டு இன்னும் பேந்த பேந்த விழிக்க... "டேய்.. என்னடா.. நீ என்ன இப்படி முழிச்சிட்டு இருக்க.. " என்று ஷ்ரித்திக் அவனின் மண்டையில் தட்ட..
"டேய் .. நா எப்படி டா போன் பண்ணுவேன்.. "என்று விக்ரம் பே என விழிக்க..
ஷ்ரித்திக் தன் கையிலிருந்த போனை காட்டியபடி "நீ எப்படி பண்ணுவேன்னு கேட்டா..இதான் போன்.. அவ புருஷன் நம்பர .. கீ பேட்ல டைப் பண்ணு.. கீரின் கலர் பட்டன ப்ரஸ் பண்ணுணா.. ட்ரிங் ட்ரிங்னு சத்தம் வரும்.. அவனும் போன எடுப்பான்.. நீயும் பேசற" என்க..
"டேய்.. " என்றான் விக்ரம் கடுப்பாக...
"பின்ன என்னடா..
நீ தான நேத்து அவ புருஷன் ஆஹா ஓஹோன்னு என்னை சாப்பிட விடமா .. என் காதுல வந்து ஒதுன.. " என்று ஷ்ரித்திக் கடுப்புடன் மொழிய..
நேற்று ஷ்ரித்திக்கை வெறுப்பேற்ற நினைத்து.. நிச்சயதார்த்ததில் ஷ்ரித்திக்கை சாப்பிடவிடாமல் இல்லாத ஷிவாக்ஷியின் கணவனைப் பற்றி இல்லாத கதைகளை கட்டியதை நினைவு கூர்ந்து கேட்க.."அட .. இவன் வேற.. நேரங்காலமில்லாம.. சீரியஸ்ஸா ஏதாவது சொல்லும்போது கவனிக்கறதில்ல... நா மொக்க போடும்போது மட்டும்.. எப்படி தான் கேள்வி.. கேப்பானோ... " விக்ரம் தனக்குள் முணுமுணுத்துக் கொண்டே.. திருட்டு முழி முழிக்க ...
"டேய்.. என்ன .. உன் முழியே சரியில்லை.. போன் தான பண்ண சொன்னேன்.. இல்லன்னா .. நம்பர் சொல்லு.. நான் பண்றேன்.. " என்று ஷ்ரித்திக் வினவ..
விக்ரம் அதே முழியை அப்படியே முழிக்க...
"விக்ரம்.. என்னை பாரு.. இங்க பாருன்னு சொன்னேன்.. ??? " என்று ஷ்ரித்திக் விக்ரமிடம் கட்டளையிட.. விக்ரமும் அவனைக் காண.. "என்னாச்சு ..என்ன என்கிட்ட ஏதாவது மறைக்கிறியா... ??? அவ புருஷனுக்கு போன் பண்ண சொன்னா அதுக்கு இப்படி முழிக்கிற.. ?? " என்று ஷ்ரித்திக் கேள்வி எழுப்பினான்...
"இல்லாத புருஷனுக்கு எப்படி மச்சான்.. போன் பண்ணுவேன்... ??? " என்று விக்ரம் பயந்தபடியே கூறிமுடித்தான்... ஏனெனில்.. ஷ்ரித்திக்கின் குணநலன்களை பற்றி யார் விமர்சனமோ அல்லது தூற்றினாலோ.. அவனுடைய கோபத்தின் எல்லையை காண நேரும்.. அவன் தன்னை குறை கூறும்படி எப்போதும் நடக்கமாட்டான்..
"என்ன.. அப்படின்னா.. ???" என்று ஷ்ரித்திக் புருவ முடிச்சுடன் வினா எழுப்ப..
"அவளுக்கு இன்னும் கல்யாணமே ஆகலடா... உன்கிட்ட பொய் சொல்லிருக்கா.. " என்று விக்ரம் கூறுவதைக் கேட்டவன் .. கோபம் எழாமல்.. மாறாக அவனுள் வருத்தமே எழுந்தது.. தன்னை தவறாக எண்ணி தன்னிடம் பொய்யுரைத்தது தனக்குள் ஏதோ பிசைவது போலவே உணர்ந்தான்..
விக்ரமோ.. "என்ன.. கோவபடுவான்னு பாத்தா.. அப்பாடா.. கோவப்படல.. நா தப்பிச்சேன்.. " என்று விக்ரம் அவனிடமிருந்து தப்பித்த மகிழ்ச்சியில் மனதில் பேசிக் கொண்டான்..
"மச்சான்.. எனக்கொரு டௌட் ?? " என்று விக்ரம் முகத்தை சுருக்கிக் கொண்டு ஷ்ரித்திக்கிடம் கேட்க..
" கேட்டுத் தொலை.. " என்று ஷ்ரித்திக் கடுப்பாகவே கூறியவனிடம்.. விக்ரம்..
"டேய்.. இல்ல நானோ.. இல்ல வேற யார் பொய் சொன்னாலும் ஈஸியா கண்டுபிடிச்சிடுவ.. ஆனா இதுல எப்படி கோட்ட விட்ட.. ??? இல்ல நா கேக்கறேன்.. அவளே மொக்கையா.. ஒரு பொய்.. சொல்லிருக்கா.. அத நானே நம்பியிருக்க மாட்டேன்.. நீ எப்படி டா நம்புனே.. ??? " என்று வந்த சிரித்தபை அடக்கியபடியே ஷ்ரித்திக்கின் கோபத்தில் குச்சியை விட்டு ஆட்டினான்..
"டேய்.. மூடிக்கிட்டு இரு.. " என்று ஷ்ரித்திக் விக்ரமின் முடியை பிடித்து ஆட்டியபடியே கூற..
"ஆஆஆஆஆ... ஹேய் .. விட்றா.. " என்று விக்ரம் கத்தியபின்னே தான் விடுவித்தான்..
"சரி.. அவளோட அப்பாக்கோ.. இல்ல அம்மாக்கோ.. போன் பண்ணு.. " என்று ஷ்ரித்திக் அவர்களிடம் தகவலை தெரிவிப்பதிலே குறியாக இருந்தான்..
விக்ரமும்.. "இல்லடா.. என்கிட்ட ஷிவுவோட நம்பர் கூட இல்ல டா.. " என்க..
ஷ்ரித்திக் "டேய்.. உன்ன.. போடா.. " என்று சலித்துக் கொண்டான்..
ஷ்ரித்திக்கிடம் வந்த மருத்துவர்கள் ஷிவாக்ஷி
பற்றின தகவலை ஸ்டேசனில் கம்ப்ளைட் கொடுக்கச் சொல்லி மருத்துவம் செய்ய தயங்கியதால்.. தன்னுடைய செல்வாக்கை பயன்படுத்தி ஷிவாக்ஷிக்கு சிகிச்சையளிக்க வைத்தான்..
ஷிவாக்ஷியை பற்றின தகவலை அவளின் குடும்பத்திடம் எப்படி கூறுவதென்றே புரியாமல்.. மண்டையை பிடித்துக் கொண்டு அமர்ந்து விட்டான்..
"டேய்.. சாரி டா.. "என்று விக்ரம் மன்னிப்பை ஷ்ரித்திக்கிடம் யாசிக்க..
"விடு மச்சான்.. நீ மட்டும் என்ன பண்ணுவ.. ??? " என்று ஷ்ரித்திக் விக்ரமின் தோளில் கைப் போட.. "இப்ப ஓகே வா... ரத்தம் குடுத்திருக்க.. ஜூஸ் ஏதாவது வாங்கிட்டு வரவா.. மச்சான்?? " என்று ஷ்ரித்திக் அக்கறையுடன் வினவ..
"இல்ல .. மாப்பிள்ளை.. வேணாம்.. "என்று விக்ரம் அவனின் அன்பில் நெகிழ்ந்தான்..
ஷ்ரித்திக்.. "வெளியே போனவங்கிட்ட இன்னும் ஒரு தகவலும் வரலன்னு.. இந்நேரம் வீட்ல பேச ஆரம்பிச்சிருப்பாங்க.. ஷிவு எப்படி இவங்கிட்ட மாட்டுனா.. ?? முதல்ல யார் அவன்.. ?? " என்று ஷ்ரித்திக் கேள்விகளை விக்ரம்மிடம் கூறியதற்கு மறுமொழியாக ..
விக்ரம் "இதெல்லாம் கேள்விக்கும் அவ கண் முழிச்சா தான் என்ன நடந்துச்சுன்னு தெரியும்.. சோ வைட் பண்ணிதான் ஆகணும்.."என்று பெருமூச்சுடன் மொழிந்த சமயம்... விக்ரமின் கைப்பேசி ஒலியெழுப்பியது..
"டேய்.. யார்ரா.. "என்று ஷ்ரித்திக் வினவியவன்..
"நம்ம அம்மா அதாவது உன் அம்மா தான்டா.. "என்று விக்ரம் ஷ்ரித்திக்கிடம் கூறிவிட்டு
"நா சொல்லல"என்று ஷ்ரித்திக் கூறுவதைக் கேட்டபடியே போனில்.. ஷ்ரித்திக் ஃப்ரண்ட்ஸிடம் பேசிக் கொண்டிருப்பதாகவும்.. அவனை விரைவில் அழைத்து வந்து விடுவதாகவும் ஷ்ரித்திக்கின் தாயிடம் கூறிவிட்டு வைத்தான்..
"என்னடா... என்ன சொன்னாங்க.. " என்ற ஷ்ரித்திக் தாயிடம் பேசியதைப் பற்றி வினவ...
"உன்னைய சீக்கிரமா வீட்டுக்கு கூட்டிட்டு வரதாம்.. " என்று விக்ரம் ஷ்ரித்திக்கிடம் கூறிவிட்டு பக்கத்து இருக்கையில் அமர்ந்து கொண்டான்..
வெளியே வந்த டாக்டரை கண்ட விக்ரம்.. "மச்சான் .. " என்று ஷ்ரித்திக்கின் தோள் மீது கைவைக்க.. ஷ்ரித்திக்கும் அவர் வருவதை கண்டு எழுந்து அவரிடம் சென்றவன்..
"டாக்டர்.. என்னாச்சு.. ?? இப்ப.. எப்படி இருக்கா.. ???" என்று ஷ்ரித்திக் பதற்றத்தை மறைத்துக் கொண்டு வினவினான்..
அதற்கு பதிலாக டாக்டர்.. "அடி கொஞ்சம் பலம் தான்.. சார்.. நல்லவேளை.. நெத்தில பட்டதால பரவால.. இதே பின் மண்டையில அடி பட்டிருந்தா.. நிலமை இன்னும் மோசமாகி இருக்கும்.. Now she is perfectly alright.. உடம்பில அங்கங்கே சின்ன சின்ன காயமிருக்கு.. மருந்து போட்டு இருக்கோம்.. நெத்தில காயம் கொஞ்சம் பெருசு.. so அதனால கட்டு போட்டு இருக்கோம்.. இப்ப மயக்கமா இருக்காங்க.. இன்னும் .. "தன் கைகடிகாரத்தை பார்த்து விட்டு.. "10 நிமிஷத்தில கண்ணு முழிச்சுடுவாங்க.. take of her .." என்று ஷ்ரித்திக்கின் தோளை தட்டி கொடுத்துச் சென்றார்..
"ஹப்பாஆஆஆஆ.. "என்று ஷ்ரித்திக்கும் விக்ரமும் ஒருசேர தொப்பேன அங்கிருந்த நாற்காலியில் அமர்ந்திருந்தனர்..
"மச்சி.. போலமா.. ??? " என்று விக்ரம் வினவ..
"வந்துத் தொலையும்.. " என்று ஷ்ரித்திக் அவனின் சட்டைக் காலரை பிடித்து இழுத்தப்படியே உள்ளே நுழைந்தான்.. "டேய் .. டேய்.. இருடா.. " என்றவனின் இழுப்புக்கு தொதாக நடந்தான்.. விக்ரம்
படுக்கையிலிருந்த ஷிவாக்ஷி.. முட்டையின் ஒட்டை பிரித்து வெளிவரும் குட்டி கோழிக் குஞ்சுகளைப்
போலவே.. தன்னுடைய கருநீலவிழிகளை உருட்டி இமைகளை பிரித்தவளுக்கு அனைத்தும் மங்கலாக தெரியவே.. கண்களை கசக்கி கொண்டு பார்த்தவளுக்கு.. முதலில் தான் எங்கு இருக்கிறோமென புரியாமல் விழிதவளின் நினைவில்.. நடந்த சம்பவங்கள் ஒன்றன் பின் ஒன்றாக நினைவு வரவே...
கண்களில் நீர்த்துளிகள் எட்டி பார்க்கவே துடித்தன..
வலியினால்..
தலையில் ஏதோ அழுந்துவதுப் போலவே இருக்க.. அப்போது தான் நெற்றியில் கட்டு போட்டு இருப்பது தெரிய வந்தது..
"என்ன.. வலிக்குதாங்க.. மேடம்.. " என்று ஷ்ரித்திக் வினவிக்கொண்டே நுழைய விக்ரமும் அவனுடன் அறையினுள் நுழைந்தார்கள்..
அப்போது தான் அவர்களை கவனித்தாள்.. தான் காப்பாற்ற பட்டிருக்கிறோம்..என்பதை உணர்ந்தாள்..
நெற்றியில் கட்டுடனும்.. இதழின் ஓரத்தில் சிறிய ப்ளாஸ்டர் ஒட்டப்பட்டிருந்து... மணிக்கட்டில் சிறிய கட்டுடனும்.. கண்களில் நீர்த்துளிகள் இப்பவா அப்பவா என்றிருந்தவளைக் இந்நிலையில் காணவே முடியவில்லை.. ஷ்ரித்திக்கிற்கு உள்ளுக்குள் ஏதோ குடைவதை போலவே நெஞ்சம் வலித்தது..
"ஸ்ஸ்ஸ்.. ஆஆஆ.. " என வலியில் முனகிக்கொண்டே எழ முயற்சிக்க..
"எதுக்கு இந்த வீர செயல்.. ஷிவு உட்காருங்க... " என்று விக்ரம் அவளை படுக்கையிலேயே அமர வைக்கும் நேரத்தில்..
"விடுடா.. நல்லா வலிக்கட்டும்.. "என்று ஷ்ரித்திக் வீம்புக்காக கூறியவுடன்.. ஷிவாக்ஷி படக்கென திரும்பி ஷ்ரித்திக்கைப் முறைக்க முயற்சி செய்ய.. ஆனால் அவளுடைய குழந்தை முகத்திற்கு முழுதுமாக பொருந்தாமலிருந்தது..
விக்ரமோ.. 'என்ன இவன் கோபத்தை ஷிவுகிட்ட காமிக்கறானா.. பாத்தா அப்படித் தெரிலயே.. ' என்று தனக்குள் பேசியபடியே ஷ்ரித்திக்கை பார்த்தான்..
"டேய்.. மேடம் என்ன முறைக்கறாங்களாம்.. " என்று ஷ்ரித்திக் ஷிவாஷியின் செயலை உள்ளுக்குள் ரசித்தாலும்.. விக்ரம்மிடம் ஏளனமாக மொழிந்தான் ..
"உனக்கு கல்யாணம் ஆயிடுச்சு... இல்ல.. ??? ஆமா உன் புருஷனுக்கு வேற கால் பண்ணி உன்ன அட்மிட் பண்ணத சொல்லனும்..just give his number ??? " என்றனைத்தும் தெரிந்தாலும் வம்பிளுக்க நினைத்து.. ஷ்ரித்திக் அவளிடம் வினவ..
"அது.. வந்து.. " என்று நெளிந்தவளுக்கு விக்ரம் கண்களால் ஜாடை காட்டி ஷ்ரித்திக்கு அனைத்தும் தெரிந்துவிட்டது என உணர்த்தினான்..
" அதான்..உங்களுக்கு தெரிந்துடுத்தோன்லியோ.. அப்பறமென்ன.. அசடு மாதிரி கேக்கறேளே.. " என்று ஷிவாக்ஷி சமாளிப்பதற்காக தைரியமாக பேசுவதாக காட்டிக் கொண்டாள்...
' தைரியம் டோய்.. ' என்று விக்ரமின் மனம் அதற்கேற்ப கவுண்டர் கொடுத்தது..
அவளுக்கு மறுமொழியாக
"ஆமா ஆமா.. நா லூசு தான்.. உன்ன நம்புனேன் பாத்தியா..நா லூசு தான்.. என்னைய என்ன 3rd rated rogueனு நெனச்சியா .. ??? நீ என்கிட்ட பொய் சொன்னது எனக்கு பெருசாவே தோணல.. ஆனா என்ன தப்பா நெனச்சு தான்.. ஒரு மாதிரி இருந்தது.. " என்று ஷ்ரித்திக் வருத்தத்துடன் தெரிவிப்பதைக் கண்டவளின் மனமோ..
' அச்சோ.. ஃபீல் பண்றாளே.. ' என்று தன் மனதில் நினைத்தவள்..
"என்னை மன்னிசிடுங்கோ.. நேக்கு அப்ப என்ன பண்றதுன்னு தெரியல.. கோவில்ல என் பின்னாடியே வந்தேளா.. எனக்கு தெரிஞ்சவா எல்லாம் அங்க இருப்பா.. அப்போ உங்கள சட்டுன்னு அனுப்ப பதட்டத்துடல சொல்லின்டேன்.. " என்று ஷிவாக்ஷி மன்னிப்பை யாசித்தாள்..
" ஹேய்.. நீ எதுக்கு சாரி சொல்ற.. இட்ஸ் மை மிஸ்டேக்.. நானும் உன் பின்னாடி வந்திருக்கக் கூடாது.. actually தேங்ஸ் சொல்லத்தான் வந்தேன்.. சரி ஏதேதோ நடந்துருச்சு.. சாரி" என்று ஷ்ரித்திக்கும் மன்னிப்பை வேண்டினான்..
" மச்சான்.. நீங்க மன்னிப்பு படலத்தை முடிச்சுட்டு சொல்லுங்க.. நா வெளிய வைட் பண்றேன்.. " என்று விக்ரம் நகர முற்பட்டவனின்
சட்டைக் காலரை பிடித்து..
"டேய்.. " என்றான் ஷ்ரித்திக்..
"பின்ன என்னங்கடா.. கேக்க வந்தத விட்டுட்டு.. இந்தாம்மா.. யாரவன்.. ?? உன்ன ஒருத்தன் துரத்துனான்ல யாரது... ??" என்று விக்ரம் ஷிவாக்ஷியின் பக்கம் திரும்பி கேள்வி எழுப்ப..
"ஆம்பளைங்கள விட.. பொன்னுங்க தான் ரொம்ப தைரியமா இருக்கனும்.. ஆனா நீ என்னடான்னா.. ஓகே just live it.. என்னாச்சு.. ??? who's that.. ??? உன்கூட யாரும் இல்லையா.. ??? I mean தனியா எப்படி அவங்கிட்ட மாட்டுன .. ??" என்று ஷ்ரித்திக்கும் வினவியதை கேட்டவளின்..
அந்நினைவில்.. உடல் நடுங்க.. எங்கோ வெறித்தபடி.. "நேக்கு சின்ன வயஷுல எல்லாமா பாட்டி.. தான் இருந்தா.. என்னை அவா நல்லா பாத்துண்டா.. கதை சொல்லுவா.. சாதம் ஊட்டுவா.. ஹ்ம்ம்ம்ம்.. " பெருமூச்சு விட்டு மீண்டும் தொடர்ந்தாள்.. " ஒருநாள் காய்ச்சல் வந்து படுத்துட்டா.. பாட்டினால அப்ப என்ன கவனிச்சுக்க முடியலன்னு ரொம்ப வருத்தப்பட்டா.. என் கண்ணு முன்னாடியே பாட்டி ரொம்ப கஷ்டப்படுவா.. நேக்கு ஏதாவது பண்ணணும்ணு தோணும்.. நேக்கு அப்ப என்ன பண்றதுன்னே தெரியாது.. நா சின்ன பொன்னு அப்ப நேக்கு 11 வயஷுதான்.. தாத்தா எனக்காகவாது பாட்டிய காப்பாத்தனும்னு.. நெறைய கடன் வாங்குனா.. பாட்டிய காப்பாத்த ரொம்ப போராடுனா.. அன்னிக்கு ராத்திரி தூங்குனவா தான்.. மறுபடியும் எந்திரிக்கவே இல்ல..." தன்னுடைய அழுகையை கட்டுபடுத்த முயன்று மீண்டும் தொடர்ந்தாள்..
தன் கைகளை மேலே காட்டி..
" பாட்டி போயிட்டா.. கொஞ்ச நாள் கழிச்சுண்டு. திடீர்னு ஒரு நாள்.. கடன்காரன் வந்து.. என்கிட்ட வாங்குன கடன கட்டு.. எவ்ளோன்னு தாத்தா கேக்கறச்ச.. 5 லட்சம்னு சொன்னா.. தாத்தா ஆடி போயிட்டா.. ஏன்னா.. அவா வாங்குனது 1 லட்சம் தான்.. அப்போதான் அவா கந்துவட்டிக்கு கடன் கொடுக்கரவான்னு தெரிஞ்சுது.. தாத்தா என்னையும் பாத்துண்டு .. கடனையும் அடைக்க முயற்சி பண்ணா.. ஆனா அவரால வட்டி தான் கட்ட முடிஞ்சது.. அவாளுக்கும் என்ன செயறதுன்னு தெரில.. தாத்தா வாங்குன கடன நா கட்டிடுறேன்னு நா முயற்சி பண்ணேன்.. நா படிச்ச படிப்பும் எனக்கு உதவல.. அந்த கடன்காரன் 2 நாள் time குடுத்து.. 2 நாள்குள்ள வாங்குன கடன கட்டு.. இல்ல நா என்ன சொன்னாலும் செய்யனும்னு ஒரு மாதிரி சொல்லிட்டு போனான்.. அப்ப எனக்கு புரியல.. இப்ப.. இன்னிக்கு காலைல என்ன தூக்கிட்டு வந்துன்டு என்கிட்ட அபச்சாரமா.. பேசிண்டு.. " என்றவளால் அழுகையை அடக்க முடியாமல் கைகளில் முகத்தை புதைத்தப்படியே அழுது கரைந்தாள்..
ஷ்ரித்திக்..
அவளின் கண்ணீரை துடைத்து ஆறுதல் கூற நீண்ட கைகளை அடக்கியவனின் விழிகளிலும் கண்ணீர் துளிகள்..
அவள் பட்ட இன்னல்கள் யாவும் சிறு குழந்தை தன் தந்தையிடம் கூறுவதைப் போன்றே உரைத்தவளை போயா தவறாக... ' சைக்..' என்று நினைத்த அந்நிமிடமே அருவெருத்தான்.. ஷ்ரித்திக்
விக்ரம்மோ.. 'குழந்தைகிட்ட போய்.. சைக்.. அவன.. ' என்று தன் மனதுள் ஷிவாக்ஷியை குழைக்க நினைத்த வஞ்சகனை வசைப் பாடிக் கொண்டிருந்தான்.
"அதுக்குள்ள நீங்க வந்து காப்பாத்திட்டேள்.. " என்று ஷிவாக்ஷி அழுதுகொண்டே கூறினாள்..
ஷிவாக்ஷி நினைத்ததாவது.. போலீசை வரவழைத்து தான்.. தன்னை காப்பாற்றியதாக எண்ணினாள்.. அந்த கடன்காரனை பற்றி கேட்கவும் தோன்றவில்லை..
ஆனால்.. ஷ்ரித்திக்கின் ரைட் லெஃப்ட் ஆகா இருக்கும் ராபர்ட்.. தன்னுடைய தொழில் ரீதியாக இருக்கும் எதிரிகளை அதட்டி உருட்டுவதற்காகவும்.. தன்குடும்பத்தின் பாதுகாப்புக்காகவும் ராபர்ட்டும் உடன் சில அடியாட்களை வைத்திருந்தான்.. அவர்களிடம் தகவலை கொடுத்து .. அந்தக் கடன்காரனை சித்திரவதை செய்ய சொல்லி ராபர்ட்டிடம் கட்டளையிட்டவனின் மொழிகளை செயல்படுத்தலானான்..
ராபர்ட் ஷ்ரித்திக்கிடம் விசுவாசமாக பணிபுரிபவன்.. ஷ்ரித்திகின் எதிரிகள் கூட்டத்தில் பணிபரிந்தவனிடம் பல கஷ்டங்களை அனுபவித்து கொண்டு இருந்தான்.. இறுதியில் ராபர்ட்டை அக்கூட்டம் கொல்ல முயற்சிக்கும் நேரத்தில்.. எதர்ச்சையாக வந்த ஷ்ரித்திக்தான் காப்பாற்றினான்..
ராபர்ட்
அதன் பிறகு அக்கூட்டத்திலிருந்து வெளியேறினான்.. தன் உயிரை காத்தவனிடமே வேலைக்குச் சேர்ந்தான்.. ராபர்ட் ஒரு பெண்ணை காதலித்து வந்தான்.. அங்கும் அவனுக்கு மதம் வேறு என்றப் பிரச்சனை எழுந்து நின்றபோதும்... ஷ்ரித்திக் வந்து பேசி பிரச்சனையை முடித்து.. அவன் காதலியையே மணம் முடித்து வைத்ததிலிருந்தே.. ஷ்ரித்திக்கின் மீது மிகுந்த அன்பும் மரியாதையும் விசுவாசம் ஏற்பட அன்றிலிருந்து ஷ்ரித்திக்கின் வார்த்தையே வேதவாக்காக எண்ணி அவனிடம் பணிபுரிகிறான்.. ஷ்ரித்திக்கும் ராபர்ட்டிடம் பண்பாகவே இருப்பான்.. அவனுடைய தேவைகளையும் நிறைவேற்றினான்..
"ஏன்.. மேடம் .. கடன் இருக்குன்னு தெரியும்ல.. அப்பறம் எங்கிட்ட கேட்டா. குறைஞ்சுருவீங்களா.. ???" என்று விக்ரம் சற்று கோபமாகவே வினவ..
"நேத்து என்கேஜ்மேன்ட்க்கு வந்தல்ல.. ??? இந்த மாதிரி .. ஆச்சு .. சொல்லிட்டு.. கேட்டா நாங்க தரமாட்டமா.. என்ன ??? ஓகே அட் லீஸ்ட் போன் பண்ணி இருக்கலாம்ல.. ??? சப்போஸ்.. நாங்க அங்க வரமா போயிருந்த.. ??? " என்று ஷ்ரித்திக்கும் அந்நிலைமையை நினைத்து சற்று பதற்றத்தை மறைத்துக் கொண்டு வினவினான்..
அந்நினைப்பே.. அவளுக்கு உடலெங்கும் நடுக்கம் பரவச் செய்ய.. "இல்ல.. நேத்து தான் நாம அறிமுகமானோம்.. இட்ரோ ஆனா அடுத்த நாளே.. பணம்னு கேட்டா... என்னைய பணக்காரன பாத்தா ஈஷிண்டு வர பொம்படையாள்னு தப்பா நினச்சுட மாட்டேளா... ??" என்று நடுக்கத்தை மறைத்துக் கொண்டு கூறிட..
"அட போம்மா.. ஒருத்தங்கல பாத்தா தெரியாதா.. ??? அவங்க எப்படிபட்டவங்கனு.. ??? பணம் என்ன பணம்.. அத நாங்க மறுபடியும் சம்பாதிச்சுடுவோம்.. ஷ்ரித்திக்கிட்ட கேக்கல.. அட் லீஸ்ட் என்கிட்ட கேட்ட என்ன.. ??? " என்று விக்ரம் மீண்டும் அங்கேயே வந்து நிற்க..
"ஷட்டர சாத்து.. போதும்.. " என்று ஷ்ரித்திக் வாயை மூடு என்று செய்கையால் காண்பிக்க.. " ஓகே .. " என்று தன்னுடைய தோள்பட்டையை குலுக்கினான்.. விக்ரம்..
"ஷிவு .. நீ கடனை அடைக்கனும்னு நனைக்கறியா.. ??? " என்று ஷ்ரித்திக் வினவியதற்கு விடையாக..
ஷிவாக்ஷியும்.. தன்னுடைய தலையை மேலும் கீழுமாக ஆட்டி... "ஆமாம் .. அடைக்கனும்.. நேக்கு கொஞ்சம் பணத்தை கடனா தரேளா.. ??? நா ஷட்டுனு அடச்சுடறேன்..என்ன நம்புங்கோ.. அந்த அபிஷ்டு முகத்துல வீசுடறேன்.. " எனக் கோவமாக கூறியபோதும்கூட... அவளின் கருநீல விழிகளும் அவளுடனே பயணிக்க.. அவளின்
கோபத்தின் அழகு... அவனை கிறங்கடித்தாலும்.. வெளியே காண்பிக்காமல்.. விக்ரமிடம்.. "டேய்.. அந்த பணத்தை.. அந்த நாய் மூஞ்சில விட்டேறிஞ்சுடு.. இதுக்கு அப்புறமும்.. ஷிவாக்ஷிய அங்க கூட்டிட்டு போறது சரியில்ல.. " கூறியவனின் மொழிகளை விக்ரமும் ஆமோதித்தான்..
"நீ சொல்றதும்.. கரக்ட் மச்சான்.. நா அப்படியே பண்றேன்.. "என்று விக்ரம் தொடர்ந்தான்.. "சரி .. டிஸ்சார்ஜ் ஆகலாம்னு டாக்டர் சொன்னாங்க.. என்ன பண்றாதா.. உத்தேசம் ??? " என வினாவினை எழுப்பியதற்கு..
"ஷிவு.. நீ எங்க வீட்டுக்கு வரியா.. நாளைக்கு எனக்கு மேரேஜ்.. உனக்கும் இப்ப ஒரு சேன்ஜா இருக்கும்.. என்ன சொல்ற.. ??? " என்று ஷ்ரித்திக் தன்னிலத்திற்கு அழைப்பு விடுத்து அவளின் பதிலுக்காக.. அவளையே பார்த்துக் கொண்டிருந்தான்..
"இல்ல.. வேண்டாம்.. ஆத்துல மாட்டுக்கு ஜலம் வைக்கனும்.. "என்று ஷிவாக்ஷி மறுத்தாள்.. ஏனோ.. அவளின் மனம் அங்கு செல்ல வேண்டாம்.. எனக் கட்டளையிட்டது.. ஏதோ ஒரு தவறு நிகழப் போவது போலே தோன்றியது..
"வீட்ல யாரும் இல்லைல.. இப்ப அங்க போக வேணாம்.. ஷிவு.. நீ அங்க போறது எனக்கு சரியாப்படல..." என்று விக்ரம் தன்னுடைய கருத்தை வெளிப்படுத்தினான்..
"இல்ல... அது.. நேக்கு அடிப்பட்டு இருக்கறச்ச... இந்த நாழில வந்தா.. அது அவாளுக்கு பாரமாகுமோன்லியோ.. நன்னா இருக்காதே... ?? " ஷிவாக்ஷி இழுத்தாள்..
"அதெல்லாம் ஒன்னும் இல்லை.... உன்னைய பாத்துக்கறதுல எந்த ஒரு பிராபளமும் இல்ல .. உனக்கு அந்த அளவுக்கு காயம் இல்ல.. நீ என்னோட கல்யாணத்துக்கு வர.. அவ்வுளவு தான்.. dot.. " என்று ஷ்ரித்திக் கூறி முடித்தான்..
ஷிவாக்ஷியோ.. யோசனையின் பிடியிலிருந்து இன்னும் மீளவில்லை..
"என்ன.. யோசனை ஷிவு .. இங்க பாரு.. ஃப்ராண்க்கா சொல்றேன்.. உன்ன இந்த நிலைமையில விட்டுட்டு போக என்னால முடியாது.. உன் வீட்ல நீ சும்மா இருக்க மாட்ட.. நீ வேலை செய்வ.. நீ ரெஸ்ட் எடுக்க மாட்ட.. அதுக்கு தான் சொல்றேன்.. " என்று ஷ்ரித்திக் தன் மனநிலையை கூறினாலாவது வருவாளா.. என்று ஷ்ரித்திக்கும் அவளது முகத்தையே பார்த்தான்..
'எல்லோரும் கூப்படறச்ச .. போகாம இருந்தா.. நன்னா இருக்காது.. சரி.. எவ்வளவோ பாத்துண்டோம்.. இதென்ன.. ' என்ற தீவிர யோசனையின்.. பிறகே சம்மதித்தாள்..
"நேக்கு.. சித்த உங்க போன தரேளா... ??? " என்று அவ்விருவரிடமும் விளித்தாள்.. ஷ்ரித்திக் தன்னுடைய iphone ஐ தர.. அதை இப்படியும் அப்படியும் திருப்பி பார்த்தவளுக்கு ... எப்படி உபயோகிப்பது என தெரியாமல் விழித்தாள்..
அதை புரிந்துகொண்ட ஷ்ரித்திக் அவளிடமிருந்து போனை வாங்கினான்..
"அது நா இதுக்கு முன்னாடி இருந்த iPhone version தான் யூஸ் பண்ணுணேன்னா..
அதான்.. " என அவனை பார்த்து 'ஈஈஈஈஈஈ' என இழித்து சமாளித்தாள்.. அவளின் இச்செயல் ஷ்ரித்திகின் இதழ்கள் தானாய் விரிந்தது..
"ஷிவு.. நா ஏமாந்துட்டேன் மா.. " என்று விக்ரம் அவளை கேலி செய்தான்..
"மூடு.." விக்ரமிடம் கூறிவிட்டு.." ஷிவு நீ நம்பர் சொல்லு.. " என்று ஷ்ரித்திக் ஷிவாக்ஷியிடம் திரும்பினான்..
ஷிவாக்ஷி நம்பர் கூற அதற்கு கால் செய்து அவளிடம் கொடுத்ததும்.. அவர்களை விட்டு தனியே வந்து.. தன் தாத்தாவிடம் தனக்கு நடந்த இன்னல்களை தவிர்த்து அனைத்தையும் கூறினாள்.. தன் தாத்தா தன்னால் தான் இத்தனையும் என மனவருத்தம் கொள்வார்.. என்றெண்ணியே அவ்வாறு மொழிந்தாள்.. தாத்தாவிடம் தான் நேற்று இரவு கூறிய திருமணத்திற்கு அங்கேயே தங்கியிருந்து மறுநாள் மதியம் இல்லத்திற்கு வருவதாக.. அனுமதி கேட்டதும்.. சரியென்று அவரும் அனுமதியளித்தார்.. தான் நாளை முகூர்த்த நேரத்தில் வந்துவிடுவதாக அவரின் தாத்தா கூறிவிட்டு போனை வைத்தார்..
ஷிவாக்ஷி அவர்களை பார்த்து போகலாம் எனக் கூறினாள்..
ஷ்ரித்திக் ஷிவாக்ஷியின்.. மருத்துவச் செலவைக் கட்டுவதைப் பார்தவள்.. "எவ்ளோ ஆயிடுத்து.. ??? " என ஷிவாக்ஷி சற்று பயந்து கொண்டே வினவியதற்கு "10,000 " என்று ஷ்ரித்திக் அசால்ட்டாக கூறியபடியே பணத்தை செலுத்தி வந்தான்.. "10,000 மா ... !!!கணக்குல வைச்சுக்கூங்கோ.. நா கண்டிப்பா.. கட்டிடுறேன்.. " என்று ஷிவாக்ஷி கூற..
"தெய்வமே.. நீங்க மெதுவாவே குடுங்க நா ஒன்னும்.. கந்துவட்டிக்கு காசு குடுக்கல.. " என்று ஷ்ரித்திக் ஷிவாக்ஷியிடம் திரும்பி கரத்தைக் குவித்து கேளி செய்தான்..
அதற்கு ஷிவாக்ஷி தன் இதழ்களை அப்படியும் இப்படியும் சுளித்து.. கழுத்தை தோள்பட்டையில் இடித்தாள்..
அவளின் மச்சம் கொண்ட இதழ்களை ரசித்தவன்.. திடீரென தன் தவறை உணர்ந்து.. சுதாரித்து கொண்டவன்..
"பாத்து.. வாய் சுளிக்கிக்க.. போகுது.. " என்று ஷ்ரித்திக் ஷிவாக்ஷியிடம் மறுமொழி தந்துவிட்டு புன்னகையுடன் காரை தன் பண்ணை வீட்டுக்கு ஒட்டினான்..
"நா 1 க்வுஸ்ஷின் கேட்கலாமா.. ?? " என்று ஷிவாக்ஷி வினாவினை எழுப்பினாள்..
"கேளு.. " என்று ஷ்ரித்திக் அனுமதியளித்ததும்..
"இல்ல.. நேக்கு போட்டுகறத்துக்கு.. ட்ரஸ் எடுக்கனுமே.. நா வேணா.. ஆத்துக்கு போயிண்டு அப்படியே வந்துடறேனே.. ?? என்ன சொல்றேள்.. ?? " என்று தான் அணிந்திருந்த ஷ்ரித்திகின் மேலாடையை பார்த்து விட்டு ஷிவாக்ஷி ஷ்ரித்திக்கிடம் கூறிவிட்டு பதிலுக்காக காத்திருந்தாள்..
"அதெல்லாம்.. ஒன்னும் தேவை இல்லை.. போட்டுக்க.. ட்ரஸ் வேணும் அவ்வளவுதான.. என்னோட உடன் பிறப்புகள் இரண்டும் நிறைய காஸ்ட்யூம்ஸ் வைச்சுருப்பாங்க.. இல்லைனா.. புதுசாக் கூட வாங்கிக்கலாம்" ஷ்ரித்திக் காரின் ஸ்டியரிங் வளைத்து கொண்டே கூறினான்..
'கிருஷ்ணா.. என்ன இப்படி... எல்லா... வழியும் அடைச்சுடறேள்.. தாத்தாவாவது... ஏதாவது தடை சொல்லுவா.. அப்படின்னு பாக்கறச்சே. அவாளும்.. போன்னு சொல்றா.. இவாளும் வந்தே ஆகணும்னு கூடவே இருக்கா.. ??? நா இப்ப என்ன பண்றது.. ?? கன்னியாதானத்துக்கு.. போய்தான் ஆகணுமா.. ??? ' என்னவளின் மனமோ யோசனையில் மூழ்கியது...
ஷிவாக்ஷி பின்னால் அமர்ந்து இருந்தாள்..
ஷ்ரித்திக்கோ 'நா என்ன பண்றேன்.. ?? எனக்கு ஒன்னும் புரியலையே.. ?? நா ஷிவுவ பாக்கற விதம் சரியில்ல.. ?? நா என்ன பண்றேன்.. ??' என்று ஷ்ரித்திக் தன் யோசனையில் உளன்றான்..
காரின் முன்பக்க கண்ணாடி வழியாக பார்த்த
விக்ரம்மின் பார்வை முழுதும் ஷிவாக்ஷி அணிந்து இருந்த ஷ்ரித்திகின்... ஜாக்கெட் மீதே..
'எனக்கு என்னன்னா.. ஒருவேளை ஷ்ரித்திக் ஷிவாக்ஷிய லவ் பண்றானோ.. அவங்கள அவ்ளோஓஓஓ.. வெறித்தனமா.. அடிச்சானே..'
என்று நினைத்த மறுநொடியே.. 'விக்ரம் கண்டுக்காத .. கண்டுக்காத... என்ன தான் நடக்கும்.. நடக்கட்டுமே.. ' என்று தன் மனதில் நினைத்துக் கொண்டே அவர்களுடன் பயணித்தான்..
ஒவ்வொருவரும் அவரவர்களின் யோசனையுடனே பயணத்தை மேற்கொண்டனர்...
To be continued..
______________
( Hii.. my Dear dudzz.. again oru ud.. ennala mundinja alavukku konjam long ud ya dhan kuduthu irukean apdinu nenaikirean.. so padikira.. Ella readers um comment pannunga.. epdi irukku.. ??? Any corrections .. yedhavadhu sollunga... Anything ?? Neenga sollunga NAA thiruthikirean... And tq to all readers , voters ., etc..)
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro