அத்தியாயம் - 7 🙂
தன்னுடைய அக்னிக் கிளைகளில் படர்ந்திருந்த ப்ராகாசம் மலரில்.. தேனெடுக்க வந்த பூமியின்.. மேல் இருந்த மகரந்த துகள்கள்.. வெளிச்சத்தை பூமியெங்கும் பரப்பின..
காட்டு வழிப் பாதை.. அமைதியே.. அதன் பண்பாயிருக்க.. ஆனால்.. அதைக் குழைக்கும் வண்ணம்.. வேகமாக ஒடும் அவளின் பாதங்களில் இலைச் சறுகுகள் மிதிப்படும் ஒலியால் களைத்தாள்.. ஷிவாக்ஷி..
கருநீலவிழிகளோ.. மிரண்ட வண்ணம்.. பின்னால் திரும்பிப் பார்த்துக் கொண்டே ஓடினாள்.. ஷிவாக்ஷி.. பின்னால் சிறிது தூர இடைவெளியில்..
"ஏய்.. நில்லு.. ஒடாத.. கையில சிக்குன.. ஏய்.." என்று காட்டு மிராண்டி குரலில்.. காடுகளுக்கு வாயிருந்தால்.. "ஏன்.. நாங்கள் அதிரும் படி உன் கரகர குரலால் கத்துகிறாய்..?" கேட்டிருக்குமோ.. என்றெண்ணும் வண்ணமிருக்க.. ஆனால்.. இதையெல்லாம் கண்டுக் கொள்ளும் நிலையில் ஷிவாக்ஷி இல்லை..
அந்த காட்டு மிராண்டிக் கூட்டமோ.. இரையை கண்ட மிருகங்களைப் போல துரத்த.. அவர்களிடமிருந்து தப்பிக்கும் வழியறியாமல் ஓடும் பேதையவளின் நா வற்ற.. தன் உடலிலிருந்து வேர்வை ஆறாக பெருக்கேடுக்க.. கண்களிருந்து கண்ணீரோ.. அருவி போல வழிய.. மூச்சுக்காற்றுக்காக அவளின் உடலும் தவிக்க.. இதையெல்லாம் விட தப்பிப்பதே உசிதமென.. எதையும் கவனிக்காமல் அறக்க பறக்க ஓட.. அவளுடன் தாவணியும் காற்றில் பறந்து.. "என்னை நெருங்காதே.." என்று தாவணியும் எச்சரிக்க..
ஆனால் ஷிவாக்ஷியை நெருங்க சில அடிகளே மீதமிருக்க.. காற்றில் பறக்கும் அவளின் தாவணியை ஒரு தடியன் பிடிக்க முயற்சிக்க..
கீழே படர்ந்திருந்த மர வேரினை கவனிக்காமல் ஓடிய அவளின் கால்களை தடுக்கி.. அதில் நிலை தடுமாறிய ஷிவாக்ஷி... சரிவில் உருண்டு விழுந்தாள்..
அச்சரிவானது.. சற்றே சிறியது ஆதலால்.. சிறு சிராய்ப்புகளுடன் அவள் வலியில் முனகியபடியே எழுந்தாள்.. ஷிவாக்ஷி..
அந்த ரவுடிகள் ஷிவாக்ஷி கீழே விழுந்ததால் .. அவள் நிச்சயம் மயக்கமடைந்தோ அல்லது தலையில் அடித்து மயங்கிய நிலையில் இருப்பாள்.. என எண்ணி அவளிருக்கும் இடத்தை தேடிச் சென்றனர்.. ஏனெனில் அதொரு புதர் நிறைந்த சரிவு..
ஷிவாக்ஷியோ.. அந்தப் புதருக்கு அருகிலிருந்த மரத்தில் ஒளிந்திருக்க.. அந்த ரவுடிகளின் அரவம் அவளருகே கேட்க.. வாயை தன்னிரு கைகளால் பொத்தி.. அவளின் மூச்சு விடும் ஒலியால் கூட நெருங்கிவிடுவார்களோ... என்றெண்ணி ..பயத்தில் மூச்சைக் கூட வெளியிடாமல்.. வெளரி இருந்த அவளின் விழிகளில் கண்ணீர் வழிய.. ஷிவாக்ஷியின் நினைவுகள் பின்னோக்கி நகர்ந்தன..
நேற்று...
ஷிவாக்ஷி.. நிச்சயதார்த்தத்தில் விக்ரம், ருத்ரா, ரித்துலின்.. நினைவுகளிலே.. தன்னில்லத்தை அடைந்தவள்.. அவர்களின் நினைவில்.. புன்னகையால் நிரம்பிய முகம்.. சட்டென்று சுவரில் மாட்டியிருந்த நாட்காட்டி அவளின் இதழை சுருக்கியது..
காரணம்... நேற்று கந்து வட்டிக்காரன்.. கொடுத்த காலக்கெடு இன்றோடு முடிவடைகிறது..
"அட ஈஸ்வரா.. நான் மறந்துன்டேனே... இப்ப நான் என்ன செய்வேன்.. அந்த கடங்காரன்.. நேத்து பாத்த பார்வையே.. சரியில்லையே.. பகவானே... என்ன இப்படி சோதிக்கறேளே... " என்று பயத்தில் புலம்பியவாரே... ஷிவாக்ஷி.. பக்கத்து வீட்டுக்கு சென்றாள்... அவளுக்கு வேறு யாரிடமும் உதவி கேட்க அவளின் மனமும் ஒப்பவில்லை...
அதேசமயம்... அவளுக்கு சொந்தமாக இருக்கும்.. இவ்வீட்டை.. அடகு வைக்கவும்.. மனம் வரவில்லை... இது அவர்கள் பாரம்பரிய வீடு... வேறுவழியின்றி.. தன்னுடைய தோழியை அணுகலாம்...
ஷிவாக்ஷிக்கு... அவளின்.. கல்லூரி தோழி.. ஸ்டேஃபி.. அவளிடம் உதவி கேட்டால்.. நிச்சயம் செய்வாள்.. என்றெண்ணினாள்... ஏனெனில் அவள் சற்று வசதியான குடும்பம்.. அது மட்டுமல்லாமல்... ஷிவாக்ஷியின் நெருங்கிய தோழியும் கூட... எப்பொழுதும் அவளுக்கு துணையாக இருப்பவளும் கூட...
இரவு என்றும் பாராமல்.. பக்கத்து வீட்டு கதவைத் தட்டினாள்... "வரேன்" என்று கூறிக்கொண்டே கதவைத் திறந்தாள்... "என்னடி.. இந்த நாழில .. ??" என்று கொட்டாவி விட்டுக்கொண்டே கேட்டாள்.. கவிதா..
"சித்த அத்திம்பேள கூப்படறேளா...???" என்று ஷிவாக்ஷி கூறினாள்..
"ம்ம்ம்.. சரி இரு... ஏண்ணா... உங்கள ஷிவா.. கூப்புடரா.." என்று கவிதா விழித்தாள்.. அவளின் கணவனும் சுந்தரும் "என்னடி.. மனுஷாள.. தூக்கத்துல எழுப்பிண்டு.. " என்று புலம்பியபடி.. வந்தவன்.. ஷிவாக்ஷியை கண்டு.. "என்னம்மா.. என்னாயிடுத்து.. ?? இந்த நேரத்துல ??" என்க..
"மன்னிச்சுடுங்கோ... அத்திம்பேள்... இந்நேரத்தில எழுப்பிண்டேன்.. ஆனா நேக்கு வேற வழி தெரியல.. " என்று ஷிவாக்ஷி நடந்ததை கூறியவள்... தனியாக இரவில் செல்ல பயமாக இருப்பதாக துணையாக தோழியின் இல்லத்திற்கு அழைத்து செல்லும்படி வேண்டினாள்..
"நாந்தான்... அப்பவே.. சொன்னேனோன்லியோ.. அவா பார்வை சரியில்லை.. சட்டுன்னு கடனை அடச்சுடுங்கோன்னு கேட்டாரா உன்னோட தாத்தா.." என்று கவிதா கூற..
"ஹே.. என்ன இந்த நேரத்தில இப்படி பேசிண்டு.. இவாளும்... எவ்வளவோ கஷ்டப்படறான்னு.. பாத்துண்டு தானே இருக்கோம்..." என்று கூறியவர்
சற்று யோசித்து... "சரிடாம்மா... வா போலாம்.." என்று ஷிவாக்ஷியை அழைத்துக்கொண்டு போனார்...
அந்தோ பரிதாபம்... ஷிவாக்ஷியின் தோழியின் வீட்டினர் சுற்றுலா சென்றுள்ளதாக... வாட்ச் மேன்.. கூற.. ஷிவாக்ஷி பயத்தின் எல்லைக்கே சென்றாள்...
"என்னம்மா ... இப்ப என்ன பண்றது...?? இப்படியாயிடுத்தே... ???" என்று சுந்தரும் கூற...
"நேக்கும் என்ன பண்றதுன்னே தெரியலை... தாத்தா வேற ஆத்துல இல்ல.. நாளைக்கு பணத்தை கொடுக்கலைன்னா... அப்பறம்... " என்று ஷிவாக்ஷியின்... முகம்.. பயத்தில் வெளிர... உதடுகள் தந்தியடித்தன...
" ஹேய்... என்ன இது... " என்று கூறியவர்.. அவரின் கையில் மோதிரத்தையும்.. கழுத்திலிருந்த சேயினையும்.. கழட்டி அவளிடம்.. கொடுத்தவர்.. " இப்போதைக்கு இத வைச்சுண்டு... காசு வாங்கி.. கடனை அடச்சுடு... " என்க
அவர் தன்மீது வைத்திருக்கும் அன்பிலும் நம்பிக்கையிலும் நெகிழ்ந்த ஷிவாக்ஷியோ..." அக்கா பாத்தா... அவ்வளோ தான்... நீங்க உதவி செய்ய முன் வந்ததே... நேக்கு சந்தோஷம்... இந்தாங்கோ.. " என்று மீண்டும் அவரிடமே.. கொடுத்தாள்...
"என்னம்மா.. நீ... இத வைச்சுண்டு.. கடணை அடச்சுடு மா.... அவளை பத்தி நோக்கு தெரியாதா... இந்த விஷயம் தெரிஞ்ச மறுக்ஷணம்... இந்நேரம்... அவளே ... அவளோட நகை கொடுத்திருப்பா... " என்று.. சுந்தர் அவளின் நிலையை எண்ணி வருந்திய படியே கூற...
கவிதா வார்த்தைகளை தான் பட்டென்று கூறுபவளே ஓழிய.. அவளின் மனமோ அன்பினால் நிறைந்தது
"நேக்கு தெரியும்.. அத்திம்பேள்... இருந்தாலும்.. வேணா.. " என்று ஷிவாக்ஷி கூற...
சுந்தரும் .. வேறுவழியின்றி
"சரிம்மா... நீ வா.. நா உன்னைய ஆத்துல விட்டுடறேன்..." ஷிவாக்ஷியும்.. அவருடன் சேர்ந்து வீட்டிற்கு சென்றாள்... அவளிற்கும்... என்ன செய்வதென்று ஏதுமறியாமல்... கண்களில் வழியும்.. நீரைக் கூட துடைக்காமல்.. அழுத வண்ணமே இருந்தவள்..
இனியும் இப்படியே இருந்தால் வேலைக்கு ஆகாது.. என்றெண்ணி.. தன்னுடன் படித்த தோழிகளுக்கு.. இரவென்று தோண்றினாலும்.. வேறுவழியின்றி அழைக்க.. யாரும் உதவ முன்வரவில்லை.... ஸ்டேஃபிக்கு முயற்சி செய்தால்.. தொடர்பு எல்லைக்கு வெளியே உள்ளார்.. என்றே மொழிய..
வேறுவழியின்றி.. அழுதுகொண்டே... களைப்பில் உறங்கியும் போனாள்...
விடிந்தும் விடியாத அதிகாலை பொழுதில்.... திடுக்கிட்டு எழுந்த ஷிவாக்ஷி... விடிந்த விட்டதை.. பார்த்து.. இன்னும் அச்சம் கொண்டு.. மூச்சுத் திணரும் அளவில் பயம் கொண்டாள்.. " இப்ப நா என்ன செய்வேன்... தாத்தா வேற ஆத்துல.. அந்த கடங்காரன் வந்தா.. நா பண்ணுவேன்.. பகவானே.." மூச்சுத் திணறியபடி.. நினைத்து கொண்டே.. அலமாரியில்.. அவள் சேர்த்து வைத்த.. இரண்டு லட்சத்தை.. எடுத்துக் கொண்டிருந்த போதே.. திடீரென தன் முகத்தை.. யாரோ கைக்குட்டையை வைத்து அழுத்த.. தன் கைகளை பின்னிருந்து பிடிக்க.. அவர்களிடமிருந்து திமிற நினைக்கும் போதே.. தன் கண்முன்னே அனைத்தும் மங்கலாக தெரிய.. தன்னிரு விழிகளும் செயலிழந்து.. மயக்கமடைந்தாள்... ஷிவாக்ஷியை.. முகமறியா.. இருவர்.. யாருமறியா வண்ணம் தூக்கிச் சென்றனர்..
பறவைகளின்.. கீச்சிடும்.. ஒளியில்.. திடுமென விழித்தவள்.. தான் இருக்கும் இடம்.. இங்கு எப்படி.. என்று.. யோசித்தவளின்.. எண்ணங்களில்.. தன்னை யாரோ.. கடத்தியது.. நினைவுக்கு வர.. அவள் இருந்தது.. ஒரு காட்டுப் பகுதியில்.. இருக்கும்.. டென்ட்ல்.. எழுந்து வெளியே வந்தவள்.. சுற்றியும் முற்றியும் காண..
அதேசமயம்... பின்னிருந்த கொடூரக் குரலே கூறியது.. அது.. அக்கந்துவட்டிகாரனே..
" என்ன.. புள்ள.. நல்ல தூக்கம் போல.. நீ இப்ப ப்ரஷ்ஷா.. இருப்ப போல.. " என்று.. தன் கரகர குரலில்.. இழித்துக் கொண்டே அவன் பின்னே.. 10 தடியன்களோடு அவளருகே.. வர..
ஷிவாக்ஷியோ... அருவெறுப்பைப் பார்த்ததை போல.. பின் விலகிச் செல்ல..
" ஏன்.. புள்ள.. பின்னாடி போற.. இந்த நாளுக்காக.. நா எத்தன.. நாள் காத்திட்டி இருந்தேன்.. " என்று அருவெறுப்பாக அவளருகே.. நெருங்கியபடியே மொழிய..
"இங்க.. பாருங்கோ.. நா.. உங்க கடனை... அடச்சுடறேன்.. ஆனா.. சித்த அவகாசம்.. கொடுங்கோ.. " அழுக்குரலில் தன்னிரு.. கரங்களை குவித்து.. கெஞ்சியபடி பின்னே செல்ல..
"அட.. அதெப்படி.. முடியும்.. கண்ணு.. அதுக்காகவா.. உனக்கு அநியாய வட்டி.. போட்டேன்.. இங்கப் பாரு.. நீ கடனை அடைக்க வேண்டாம்.. அவ்ளோ.. ஏன்.. நீ எனக்கு காசுக் கூட தரவேண்டாம்.. ஆனா.. ஒன்னு.. " என்று அவளை ஒரு மார்கமாக.. பார்த்துவிட்டு...
"ஒரு ராத்திரி.. ஒரே ஒரு ராத்திரி மட்டும்.. நீ வேணும்.. என்ன சொல்ற.. " என்க..
" அடச் சீ.. நீயெல்லாம் மனுஷாலா.. ?? என்ன தைரியம் இருந்தா.. நீ இப்படி.. பேசுவேள்.. " என்று ஷிவாக்ஷி உமிழ் நீரை அவன் மீது துப்ப..
தன் கீழே வேலை செய்பவர்களின்.. முன்னே.. தன்னை அசிங்கப்படுத்தியதால்.. கோபத்தில்..
"ஏய்ய்ய்ய்... என்ன திமிரு டி உனக்கு... உன்ன.. " என்று... அவளின் முடியை கொத்தாக பிடித்து தரதரவென இழுத்துக் கொண்டு... அவளைக் மெத்தையில் தள்ளிவிட..
ஷிவாக்ஷியோ.. அவனைத் தள்ளிவிட்டு.. அங்கிருந்து ஓடினாள்..
"டேய்.. அவளப் பிடிங்கடா.. அவள இழுத்துட்டு வாங்கடா... " என்று.. 5 தடியன்களிடம்.. கட்டளை இட.. அக் காட்டுமிராண்டி கூட்டமும் .. அவளைத் துரத்தியது...
" எங்கடா.. போன அவ... " என்று.. அக்கூட்டத்தில் ஒருவனின் குரலே.. அவளைத் தன் நினைவுகளிலிருந்து.. விழித்தெழச் செய்ய.. தன் வாயைப் பொத்தியப்படி.. தான் பதுங்கியிருந்த இடத்திற்கு அருகில் கேட்க..
"இப்ப.. என்னடா.. பண்றது.. ??? அவ தப்பிச்சுட்டா.. அப்படின்னு.. அந்தாள்ட்ட.. சொன்ன.. அவ ஆடுவான்.. நாம தேடுவோம்.. காட்டுப் பாதைல.. அவ உருண்டு விழுந்து இருக்கறதுனால.. தலைல அடிப்பட்டு.. மயக்கமாகி இருப்பா... கண்டிப்பா இங்கதான் எங்கயாவது இருப்பா.." என்று அக்கூட்டத்தில் மற்றொருவன்.. பதில் மொழிய...
"ஆமாண்டா.. இவ சொல்றதும் சரிதான்.. கண்டிப்பா இங்க தான் இருப்பா.. இந்த மாதிரி அழகான பொன்னு எப்பயாவது தான் மாட்டும்.. அவ மட்டும் கிடைச்சா.. நமக்கும் சந்தோஷம் தானே.." என்று.. இன்னொருவன் வக்கிரமாக மொழிய..
"ஹாஹாஹா... " என்று அக்கூட்டமே சிரித்தபடியே ஆமோதித்து.. ஷிவாக்ஷியைத் தேட
இவர்களின்.. சம்பாஷனைகளை கேட்ட ஷிவாக்ஷிக்கு.. விழிகளே அருவியாக.. துடைக்கக் கூடத் தோன்றாமல்.. இக்கணம்.. நாம் மண்ணில் புதைய கூடாதா ??? ... எந்தப் பெண்ணுக்கும் என் நிலை வரக்கூடாது... நா எப்படி இங்க தப்பிச்சு போறது.. ??? என்றெண்ணிக் கொண்டிருந்த சமயம்...
ஷ்ரித்திக்... போன் பேசியப்படியே படிகளிலிருந்து இறங்கியவன்..
"ஓகே....ஓகே... I'll be there in 30 minutes ... I'll you call later.." என்று கூறிவிட்டு போனை வைத்தவன்...
"என்னடா.. மறுபடியும் வெளிய எங்கயாவது போறேன்னு மட்டும் என்கிட்ட சொல்லாத.. உன்ன வெளியே எங்கயும் விடறதா இல்ல... " என்று தாய் இந்திரக்கவி ... ஷ்ரித்திக் கூறுமுன்னே.. அவனிடம்.. கூற..
" என்னம்மா.. இது.. வெளியக் கூட போக விடலைனா.. என்ன அர்த்தம்... என்னோட business பார்ட்னர்ஸ் கூட வராங்க போய் அவங்கள கூட்டிட்டு வரனும்ல.. " என்று ஷ்ரித்திக் சிரித்தபடியே கூற..
"டேய்... இங்கப்பாரு.. நீ என்ன வேனாலும்.. சொல்லு.. பட் இதுக்கு.. நா ஒத்துக்க மாட்டேன்.. " என்று சித்தப்பா தேவ தேவன் கூற...
"சித்தப்ப்ப்ப்பாஆஆஆ... " நெஞ்சில் கைவைத்து அதிர்ச்சியடைந்தைப் போல் பாவனை செய்ய...
"டேய்... என்ன விளையாட்டா.. ஹ்ம்ம்ம்ம்.. இங்க பாரு.. நேத்து தான்.. நிச்சயம் ஆச்சு.. இனி வெளியே போகற வேலை வேண்டாம்.. ஓகே.. " என்று.. ஹாலில்.. அமர்ந்திருந்த.. தாத்தா பாட்டி ஒருங்கே கூற..
"திஸ் இஸ் டூ மச்.. , இதுக்கு முன்னாடி கூட.. வெளியே போயிருக்கேன்.. இப்ப எதுக்கு இவ்ளோ சீனு... ஓஹோ.. அதாவது.. முந்தின நாள் எனக்கு அடிப்பட்டது தான்.. ரிச்னா ... நா என்ன இப்ப செத்தா போய்டேன்.. " என்க..
"டேய்.. அப்படியே அறைஞ்சேன்.. வை.. " என்று தந்தை ராஜ தேவன் கையை ஓங்க.. பின்.. தன்னை அடக்கியவர்... " என்னடா.. என்ன பேச்சு பேசற.. பெரியவங்க முன்னாடி.. தோளுக்கு மேல வளந்த பிள்ளைய அடிக்க வேணாம்னு பாக்கறேன்.. " என்று ராஜ தேவன்.. கோபமாக கூற..
"என்ன மாமா.. நீங்க.. அவ வெளியே போக விடாம பண்றாங்க.. அப்படின்னு.. கோவத்தில பேசறான்.. நீங்களும் .. " என்று தேவிகா இழுக்கவும் " உனக்கென்ன பா.. வெளியே போனுமா.. போ.. போயிட்டு வா.. ஆனா.. கூட .. விக்ரம கூட்டிட்டுப் போ.. அவ்ளோதான்.. " என்று ஷ்ரித்திகின் சித்தி தேவிகா மேலோட்டமாக மொழிய..
அனைவரின் மௌனம் கூறியது கோபத்தின் அளவை.. தான் பேசியது தவறென்றும்.. புரிந்த மறுநொடி...
"சாரி.. என்னை மன்னிச்சிடுங்க... நா இப்படி பேசியிருக்கக் கூடாது... " என்று ஷ்ரித்திக் மன்னிப்பை வேண்ட..
அனைவருக்குமே
அவர்களின் முன் சிறு குழந்தையாக ஷ்ரித்திக் இருந்த போது.. பூந்தொட்டியை.. காரின்மேல் தள்ளிவிட்டு.. மன்னிப்பு வேண்டிய சிறு குழந்தையாக தோன்ற...
"சரி ... விடு.. நானும்.. கொஞ்சம் கோபமாயிட்டேன்... சாரி.. " என்று தந்தை ராஜ தேவன் கூற.. ஷ்ரித்திக் " அப்பா.. சாரி " என்க.. தந்தை "சரி.. விட்றா.. மவனே..." என்க.. அதில் மொத்த குடும்பமும் மென்னகைப் புரிய..
"அப்பன் மகன்.. சண்டை ஆரம்பம்லாம் நல்லாத்தான் இருக்கு... ஆனா.. ஃபினிசிங்.. சரியில்லைப்பா..." என்று... ஜானவி மொழிய... அனைவரும் புன்னகை புரிந்தனர்...
"என்ன பண்றது... ஜானு... நானும்.. பெருசா.. நடக்கும் னு பாக்குறேன்.. ம்ஹும்.. மாட்டேங்குதே..."என்று ராகுல் கூற...
"சரி.. அப்ப.. நான் கிளம்பவா.. ????"என்று ஷ்ரித்திக் சிரித்தபடியே வினவ..
"போயிட்டு வா.. விக்ரம கூட்டிட்டுப் போ.." என்று ஷ்ரித்திகின் தாத்தா பாட்டி ஒருங்கே கட்டளையிட.. சரியென்று.. அனைவரிடமும் கூறி.. விக்ரமை அழைத்துக் கொண்டு தன் Ferrariல் கிளம்பலானான்...
"சின்ன ராசாவே சிட்டெறும்பு என்ன கடிக்குது....
உன்ன சேராம அடிக்கடி ராத்திரி துடிக்குது.....
சின்ன ராசாவே சிட்டெறும்பு என்ன கடிக்குது..
உன்ன சேராம அடிக்கடி ராத்திரி துடிக்குது...."
என்று விக்ரம் கர்ணக் கொடூரமாக பாட...
"டேய்.. சனியனே. இப்ப மூடிட்டு வரியா.. இல்ல.. கார உன்மேல ஏத்தவா..." என்று ஷ்ரித்திக் காரை ஒட்டிக் கொண்டே கூற
"நா.. சூப்பர் சிங்கர் ஆகுறேன்..
என் ஆள நான் தூக்றேன்.." என்று விக்ரம் டி.ஆர் வசனம் பேச...
"நீ தூக்கறதும்.. ஒன்னு தான்.. அவ கயித்துல தொங்கறதும்.. ஒன்னு தான்.." என்று ஷ்ரித்திக் சிரித்தபடியே கூற..
"டேய்... உனக்கு பொறாமை டா.. எங்க என் பின்னாடி பொன்னுங்க வந்துடுவாங்க லோன்னு.. உனக்கு.. பயம்.. இந்த விக்ரம் னா பயம்.." என்று விக்ரம் தன் முகத்தை அவன் முகத்தருகே சென்று... ஹஸ்கி வாய்சில் மொழிந்த மறு நிமிடம்... "புஸ்ஸ்ஸ்...." என்ற சத்தத்துடன் கார் நின்றது..
"அப்பாலே போ சாத்தானே..." என்று ஷ்ரித்திக் விக்ரம் முகத்தை தள்ளிவிட்டு... கீழிறங்கி பார்க்க... கார் டையர்.. பஞ்சர்.. ஆகி.. இருந்தது...
"டேய்ய்ய்ய்.. டேய்.. டேய்.. டேய்.. டேய்.... எத்தன தடவ சொல்லி இருக்கேன்.. உன் மூஞ்சிய க்ளோஸ் அப்பில காமிக்காதன்னு... இப்ப பாரு..." என்று ஷ்ரித்திக் டையரை... காண்பிக்க..
விக்ரமோ... "இஸ் இட்.. ????" என்க.." சரி .. சரி.. டையரை.. மாத்து".. என்று மிடுக்காக விக்ரம் கூற
"டேய்.. என்ன... நீ.. தான் மாத்தற.." என்று ஷ்ரித்திக் கூற... "அதான.. பார்த்தேன்.." என்று விக்ரம் டையரை மாற்றும் வேலையில் இறங்கினான்...
"ஆமாண்டா... நேத்து... ஷிவாக்ஷி கூட... அப்பிடி... டேன்ஸ்.. ஆடுன..." என்று ஷ்ரித்திகின் குரலில் பொறாமையை மறைக்க முயன்று வெளிப்பட..
"உனக்கு வொய் பொறாமை... ???.." என்று விக்ரம் வினவ..
"பொறாமையா எனக்கா.. அதெல்லாம் இல்லை... என்கிட்ட.. பேசவே பயந்தா... உன் கூட டேன்ஸே ஆடுனா.. அதான்...." என்று ஷ்ரித்திக் இழுக்க...
"அதெல்லாம் ... இல்ல.. நான் அவகிட்ட ஃப்ரியா பழகுனேன்... அதான்.." என்று விக்ரம் மொழிந்தான்..
அவன் கூறியதைக் கேட்டு கொண்டு இருந்த நேரத்தில்... போன் வர... பேசிக் கொண்டே இருந்தவன்... சிக்னல்...தேடி அங்கும் இங்கும் அலைய...
அப்போது......
--------------
(Hi... Guyzzz.. IPA enakku avaloka time kedaikaradhu illa... Naa IPA clg la project padrathunala.. I've no time... NAA try pandrean ud thara... And I luv u all... Votes and comments dhan booste ... So ungalin aadharavirku.. kaathirukum ... Ungal anbu thozhi...
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro