Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

அத்தியாயம் - 5 🥰

தன்னுடைய சில்லறைகளை எப்போது வேண்டுமானாலும் சிந்துவதற்கு தயாராக இருந்தன.. கார்மேக உண்டியல்..

ஆதலால் விரைவாக இல்லத்திற்கு செல்ல வேண்டுமே.. என்று.. நினைத்துக் கொண்டே நதியோரம்.. நடந்தாள் ஷிவாக்ஷி..

அதே நேரம்..  "ஷ்ரித்திக்.. ஷ்ரித்திக்.. "என்று அவனின் தாயோ இல்லம் முழுக்க அவனைத் தேட.... ஷ்ரித்திகின் சித்தப்பா "என்ன அண்ணி.. ஷ்ரித்திக்கையா.. தேடறீங்க.. ? அவன்‌ தான்.. விக்ரம் ஏதோ பார்ட்டிக்கு கூப்டான்னு..  இவன் அப்பவே போயிட்டானே... " என்க

"என்ன.. முன்னாடியே கிளம்பிட்டானா... தலைவலிக்குதுன்னு சொன்னான்.. சரி அவனுக்கு போன் பண்ணி எங்கிருக்கானு கேளுங்க..?.. அப்பதான் எனக்கு நிம்மதி.."என்று ஷ்ரித்திக்கின்‌ தாய் கூற

"சரி இருங்க பண்றேன்.. அண்ணி.." என்று ஷ்ரித்திக்கின் சித்தப்பா ஷ்ரித்திக்கிற்கு அழைக்க..  அவனின் கைப்பேசியோ கிளைகளின் இடையில் படுத்துக் கொண்டு சிரித்தபடியே இருந்தது..

"புல் ரிங் போய் கட்டாயிடுச்சு‌ அண்ணி" என்று தேவ தேவன் சற்று கவலையாக கூற.. "என்ன போன் எடுக்கலையா.. எப்பையுமே இப்படி பண்ணமாட்டானே.. எவ்வளவோ பிஸியா இருந்தாலும் போனயெடுத்து.. ரிசன் சொல்லுவானே..?!!" என்று பெற்ற மனம் பதற

"எனக்கென்னவோ பயமாயிருக்கு... பா.. ஜோசியர் சொன்ன மாதிரி ஏதாவது.. ?" என்று ஷ்ரித்திகின் தாய் இந்திரகவி பதற..

"அண்ணி .. அந்தமாதிரி எதுவும் ஆகாது" என்றுக் கூறினாலும்.. தேவ தேவன் சித்தப்பாவாக சற்று கவலையாக உணர.. 

அப்போது அங்குவந்த ஷ்ரித்திக்கின் தந்தை ராஜ தேவன் .. "என்னாச்சு.. ரெண்டு பேரோட முகம் சரியில்லையே..?" என்று வினவ

தேவ தேவன் ஷ்ரித்திக் பற்றிய கவலையை கூற.. அதை அறிந்தவர் பதற்றமாக "என்ன கவி..‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌ இப்படித் தான் கவனக் குறைவாயிருப்பியா.. ? என்று தந்தையாக கத்த.. அவரின் கூச்சாலால்..  "டேய்.. ஏன்டா..என்‌ மகளைத் திட்டர.. ?" என்று ஷ்ரித்திகின் தாத்தா அமரேந்திர் வினவ.. நடந்தவற்றை கூறியதும் குடும்பத்தினர் அனைவர் முகத்திலும் பதற்றம் தொற்றிக் கொண்டது..

மாயாவோ "என்ன ஷ்ரித்திக்கு ஏதாவது ஆச்சுனா.. ? அப்பறம் நடக்கிறதே வேற.. " என்று அவளும் கத்த

"இப்ப எல்லாரும் கத்துனா மட்டும்.. என் பேரன் வந்துடுவானா.. போயெல்லாரும்.. தேடுங்க.." என்று ஷ்ரித்திக் பாட்டி தேவசேனா கூற அனைவரும் ஷ்ரித்திகை தேடி விரைந்தனர்...

இப்பவா ... அப்பவா.. என்றிருந்த கார்மேகம்.. சடாரென தன் சில்லறைகளை கனமாக சிதறவிட..

மொத்தமாக நனைந்தாள்.. ஷிவாக்ஷி.. 

"சரி.. முழுசா நனைஞ்சாயிடுத்து.. அப்பறமென்ன.. மெதுவாகவே.. ஆத்துக்கு போவோம்.. என்ன தாத்தா பார்த்த திட்டுவா..?!!" என்று தனக்குள் கூறியபடி.. மழையை ரசித்து கொண்டே .. தன்னில்லம் நோக்கி நகர்ந்தாள்..

மழை கனமாக பொழிய.. ஆற்றில் வெள்ளப்பெருக்கு... ஏற்பட்டு.. ஆற்று நீர் கரைபுரண்டு ஓட..

ஷ்ரித்திக் ஆற்று நீரில் அடித்துச் செல்லப்பட.. வழியிலிருந்த பாறைகளில் மோதி அவனின் உடலில் சீராய்ப்புகள் ஏற்பட்டு.. வலியை அதிகரிக்க..  அந்த வெள்ளத்திலிருந்து மீள நீச்சலடித்து முயற்சிக்க.. பாறையில் இடுக்கில் வளர்ந்த கிளையினை பிடித்து.. தன்னை சமன் செய்து கொண்டான்..

"ஸ்ஸ்ஹாஹா.. "என்றவன் வலியில் முனக..

ஷிவாக்ஷி.. மழையை ரசித்து கொண்டே நடந்த சமயம்... ஆற்றிலிருந்து.. யாரோ ஒருவர் மகிழ்வாக.... மழையின் காரணமாக ஷ்ரித்திக்கின் முகம் தெளிவாக தெரியவில்லை... ஆற்றில் மழையை ரசித்து கொண்டே நீச்சலடிப்பதுப் போல் தோன்ற...

"ஐஐஐஐ... !!!! நாம தான் அசடுன்னு.. நினைச்சா.. ஸ்ருஷ்டியில.. பாதிப் பேர்.. அப்படித்தான் போலயே.. யாரோ ஒரு ஆம்படையான் நன்னா மழையை ரசிஞ்சுண்ட.. ஆத்துல நீச்சலடிக்கறா ...!!!!" என்று நினைத்து கொண்டிருந்த சமயத்தில்.. அவரோ கிளைகளை பிடித்திருப்பதைப் பார்த்தவள்..

"ஏதோ சரியில்லையே.. ஏன் அந்த ஆம்படையாள்.. அந்தக் கிளைய பிடிச்சுண்டு.. "என்றவள் யோசித்து முடிக்கும் வேளையில்..

ஷ்ரித்திக் பிடித்திருந்த கிளையானது.. அவனின் கனம் தாங்காமல் ஒடிய.. ஷ்ரித்திக் மீண்டும் நீரில் தத்தளிக்க ஆரம்பித்தான்..

"அட ஈஸ்வரா... நான் தான் தப்பா நினைச்சுண்டேனா... ? அந்த ஆம்படையான் வெள்ளத்துல மாட்டின்டாளா..." என்று நினைத்து கொண்டே அவள் ஷ்ரித்திக் செல்லும் திசையை நோக்க 

பதற்றமாக முகமறியாதவனை காக்க விரைந்தாள்... ஏனெனில் அவன் அடித்துச் செல்லப்படும் திக்கோ.. செங்குத்தான பாறைகள் நிறைந்தவை... அவன் மரணதிசையில் செல்வதை உணர்ந்தவள்...

சாதுர்யமாக அவன் செல்லும் திசையில் முன்னே வந்தவள்... அவனைக் காப்பாற்ற வேறு வழியின்றி.. ஆபத்திற்கு பாவமில்லை.. என்று நினைத்தாலும்.. 

" வேறொர் ஆடவன் முன்பு எப்படி... ?" என்றவளின் பெண்மனம் யோசிக்க..

 இது அதற்கான நேரமில்லை.. என்று.. மனமேயில்லாமல்.. தான் அணிந்திருந்த தாவணியை கழற்றி.. தன் கால்களையும்.. மரத்தையும் சேர்த்து இறுக்கமாக கட்டிய மறுநிமிடம்.. கீழே பாறையின் மேல் படுத்து தன் கரங்களை நீட்டிய அந்நேரம்..

ஷ்ரித்திக்... நிலைமை கைமீறிச் செல்வதால் .. ஏதேனும் செய்தாக வேண்டும் என்றெண்ணி... பிடித்தத்திற்காக.. பாறையில் தன் கையை ஊன்ற... 

பாறைக்கு பதிலாக மென்பஞ்சை தொட்ட உணர்வு ஏற்பட... நிமிர்ந்தவனின் பார்வை..  மருதாணியிட்ட வெண் கரங்களை தீண்டியது..

அவனின் விழிகளோ.. தனக்கு உதவ வந்த தேவதை காண விழைய.. ஷ்ரித்திக் கண்டதோ.. ஷிவாக்ஷியின் மருண்ட கருநீல விழிகளைக் கண்டு.. சற்றே‌ அதிர்ந்தவன்.. !! மழைநீர் வடியும் தாமரை முகத்தினைக் கண்டவன்.. பலமாகவே அதிர்ந்தான்.. !!!!தன்‌னுடைய கனவு தேவதை .. தன் கனவில் தோன்றியதைப் போலவே.. கண்முன்னிருக்க.. செவ்விதழ்களில் உள்ள மச்சம்.. !!!அதுவே அவனை இன்னும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது..!!!!!

"புஜ்ஜு..." தானாகவே அவனிதழ் மொழிய.. ஷ்ரித்திக்கின் மனம்.. அவன் வசமில்லை.. தான் காண்பது... எனக்கு எப்போதும் வரும் கனவா.. ? இல்லை நனவா... ? !! என்றும் தன்னுள் வினா எழ..

ஷிவாக்ஷியோ.. அவனின் கரம் பற்றிய சமயம் அவளுள் மின்சாரம் பாய்ந்தை உணர்ந்தாள்... அவனின் விழிகளைத் கண்டவள்... அதிலே இருந்த ஏதோ ஒன்றால் அவனை விட்டு விழியகல மறுக்க.. ஆனால் இது சில நொடிகளிலே.. வானின் இடி முழக்கமே இவர்களை மீட்ட..

"என்‌ கைய கெட்டியா பிடிச்சுண்டு மேல வாங்க" என்று ஷிவாக்ஷி கூற

"இல்ல.. வேணாம்.. என் வைட்ட உன்னால தாங்க முடியாது.. நீ விட்டுறு.."என்று ஷ்ரித்திக் கூற

"உங்கள விட்டுட்டேனா.. அவ்வளோ தான்.. அங்க நிறைய செங்குத்தான பாறைகள்... வெள்ளம் வேற‌‌ .. சொல்லவே வேண்டாம்... அவ்ளோ தான்.." ஷிவாக்ஷி மொழிய

"உன்னால... முடியுமா.. ?" என்று ஷ்ரித்திக் வினவ

"என்னால உங்கள அப்படியே விட்டுவிட்டு போக முடியாது.. இது காட்டு வழிப் பாதை  உதவிக்கு இங்கு யாரும் இல்லை...என்னை நம்பி உங்க இன்னொரு கையக் குடுங்க.."‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌என்க 

ஷ்ரித்திக் தன்னிரு கரங்களையும் அவளின் கரத்தில் பதித்து.. காலூன்றி மேலேற... ஷிவாக்ஷி.. உதவிப் புரிந்தாள்...

மேலேறியவன் கால் தடுமாறி ஷிவாக்ஷி மேல் விழுந்தான்.. ஷ்ரித்திக்.. 

அவளின் முகத்தை வெகு அருகாமையில் கண்டவன்... அப்படியே அவளின் மேலே கண்மூடி சரிந்தான்..

அவன் விடும் மூச்சுக் காற்று தன்‌மீது.. உரச... அவனின் விழிகளோ தன் முகத்தையே ஆராய்வதைப் போ‌ல தோன்ற.. திடீரென தன்மேல் ஏதோ கனப்பதைப் போல உணர.. அப்போது தான் அவ்வாடவன் மயங்கியுள்ளான்.. என்பதை அறிந்தாள்.. ஷிவாக்ஷி..

அவன்‌ கன்னத்தைத் தட்டி எழுப்ப முயற்சிக்க.. அவனின் விழிகளோ சற்றும் திறந்தபாடில்லை... ஆற்று நீரை குடித்திருப்பான.. என்றெண்ணி.. ஷிவாக்ஷி .. கோர்ட் அணிந்திருந்தபடியே அவனின் வயிற்றை அமுக்கி.. நீரை வெளியேற்றினாள்.. ஆனால் அப்போதும்.. ஷ்ரித்திக் விழித் திறவாமல் இருக்க.. இனியும் இப்படியே விடயிலாது.. தன்‌ தாவணியை அணிந்து மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல ஆயத்தமானார் ....அவனின் கரங்களை தன் தோல்மேலிட்டு..  மற்றோர் கரத்தால்.. அவனிடையைத் தாங்கி.. கைத்தாங்கலாக அழைத்துச் சென்றாள்..

"கோவிந்தா.. ஹப்பா.. என்ன பா.. இப்படி கனக்கறேள்.. ?!!" என்று அவன்‌ பாரம் தாங்காமல் புலம்பிய படியே ஷ்ரித்திக்கைத் தாங்கிச் சென்றாள்.. அவனோ மயக்கத்தின் பிடியிலிருக்க.. அவனின் உடலோ ஷிவாக்ஷி மேலிருக்க..  அவனை விலக்கவும் முடியாமல்.. அவஸ்தையாக நெளிந்தாள்...

அவர்களிருந்த காட்டு வழிப் பாதையில் சற்றருகே சிறிய அளவிலான க்ளினிக் ஒன்றிக்கு அவனை அழைத்துச் சென்றாள்...

மருத்துவர்..‌ அந்த ஆடவனிற்கு.. சிகிச்சையளித்துக் கொண்டிருக்க.. இவளோ..‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌வெளியே "ஈஸ்வரா.. அவாளுக்கு நன்னா காயம் ஆயிடுத்து போலேயே... அதான் நன்னா மயங்கிட்டா..."என்று அந்த முகமறியாதவனை‌ எண்ணி கவலையுற...

வெளியேறிய மருத்துவரிடம்... "டாக்டர்... டாக்டர்... அவா நன்னா இருக்காளா... அவாளுக்கு என்னாயிடுத்து... ?" என்று‌ முகம் முழுக்க பதற்றத்தை நிரம்பி... தன் முன்.. ஈரமான உடையுடன் நிற்பவளை.. கண்ட அம்மருத்தவர்... 

"கவலைப்படாத மா... அவங்களுக்கு ஒன்னுமில்ல...அதிர்ச்சில வந்த மயக்கம்.. அதுவுமில்லாமல் கொஞ்சம் சீராய்ப்பு வேற.. அதான் மயக்க மருந்து கொடுத்துருக்கோம்... இன்னும் 2 மணி நேரத்தில கண் முழிச்சுடுவாங்க...டோட் வொரி... ஹ்ம்ம்.. பீஸ் மட்டும்.. ரிஷப்ஷனிஸ்ட்கிட்ட கட்டிடுங்க..." என்றுக் கூறிவிட்டுச் செல்ல

"என்ன.. அவாகிட்ட காசில்லைபோல.. அதான்.. என்கிட்ட கட்ட சொல்லிண்டு போற... " என்று தன்னுள் எண்ணிக் கொண்டு அவனை காண விழைய.. தலையிலும், கையிலும்.. சிறு கட்டுகளுடன்.. நிர்மலமாய் உறங்கும் அவனின் தலையை தடவிக் கொடுத்தாள்..." உங்களுக்கு ஒன்னுமாகாது.. நீங்க ஷேமமா இருப்பேள்... உங்க ஆத்துல உங்கள தேடுவா.. ஆனா.. எப்படி அவாகிட்ட தகவல் சொல்லுவேன்.."என்று கூறிவிட்டு.. பணத்தை கட்டி விட்டு.. இல்லத்திற்கு சென்றாள்..

"ஏன்.. டி.. அசடு.. எத்தனை தடவை சொன்னாலும்.. நோக்கு ஞானமே வராதா.. மழையில நனைஞ்சுண்டு வர.. அசமஞ்சம்.. அசமஞ்சம்.." என்று தாத்தாவின் வசவு மொழிகள் வரவேற்க..

எப்போதும் போல கேட்டும் கேளாமல்.. அவள் செல்ல.. "ஒரு மனுஷா.. கத்திண்டு இருக்கறது..நோக்கு காதுல விழறதா.. இல்லையா..? களி‌முத்திடுத்து..." என்று.. தாத்தா இராமானுஜ ஐயங்கார் கூற..

"அச்சோ.. தாத்தா.. வழியில ஒருத்தர்.. உயிருக்காக போராடிட்டிருந்தா.. நா அவாள ஹாஸ்பிடலில் சேர்த்திண்டு வந்தேன்.. போதுமா.. அதனால் தான் இப்படி.. புரியறதா.. ?" என்று ஷிவாக்ஷி மொழிய

"அச்சச்சோ .. அவாளுக்கு ஏதும்..." என்று தாத்தா இழுக்க.. "ஆகல.. அவா இப்ப நன்னா இருக்கா.. "என்றவள் முடித்து வைத்தாள்..

"சித்த இருங்கோ.. சாதத்தை எடுத்து வைக்கறேன்.. சாப்பிடுவேளாம்..." என்று கூறி .. தாத்தாவுக்கு சாதம் பரிமாறி.. தானும் உண்டு உறங்கினாள்.. ஷிவாக்ஷி

ஷ்ரித்திகின் இமைகள் அசைய.. சாடரென மயக்கத்திலிருந்து விழித்தெழுந்தவன்.. "தான் இருக்கும் இடம், நான்‌ எப்படி‌ இவ்விடத்தில்... ?" தெரியாமல் விழிக்க.. 

"அந்த பொன்னு.. நான் கனவுல பார்த்த அந்த பொன்னு... எப்படி இது சாத்தியம்.. ? என்னால நம்பவே முடியல.. 

ஒருவேளை நான் இப்பவும் கனவுல தான் இருக்கேனா..? வலியில் ஸ்ஸ்ஹாஹா... என்றவன் தலையில் கண்டிருந்த கட்டு ..இல்ல நிஜந்தான் என. சொல்லாமல் சொல்ல ..

அதுவும் உதட்டுல அந்த மச்சம்.. நா கனவுல எப்படி பாத்தேனோ அப்படியே..? ... இட்ஸ்.. இம்பாஸிபிள்.. பட்.. எப்படி..? ... " என்றுத் தன்னுள் பேசியப்படியே இருந்த நேரம்.. மருத்துவர்.. உள்ளே நுழைய.. 

"ஹலோ மிஸ்டர்.. ஆர் யூ ஃபில் பேட்டர் நவ்..?"என்று மருத்துவர் வினவ...

"மச் பேட்டர்.." என்று ஷ்ரித்திக் கூற

"உங்களை கஷ்டப்பட்டு ஒரே ஆளா நின்னு.. ஒரு‌பொன்னுதான்.. கொண்டு வந்து சேர்த்து.. பணமும் கட்டிட்டு போச்சு.. " என்று மருத்துவர் கூற..

"என்ன .. நிஜமாவா.. !!!? " , ச்சே.. அந்தப் பொண்ணுக்கு தேங்ஸ் கூட சொல்ல முடியாம போச்சு.. என்றுத் தன்னுள் நினைத்துக் கொண்டான்...

"எஸ் மிஸ்டர்.." என்று டாக்டர் கூறிச் சென்றார்... அப்போது அங்கு வந்த நர்ஸிடம்..

"சிஸ்டர்.... உங்க போன் தர்றீங்களா... என்னோட வாலட், மொபைல்.. எல்லாமே மிஸ் ஆயிடுச்சு.." என்று ஷ்ரித்திக் வினவ

"என்னைய நர்ஸ்னு கூப்பட வேண்டியது தான... அதென்ன சிஸ்டர்... ?"என்று ஒரு அழகான ஆடவன் தன்னை சிஸ்டர் என்றழைத்த கோபத்தில் சிடுசிடுத்துக் கொண்டே தன்னுடைய போனை தர..

 ஷ்ரித்திக் " நான் என்ன கேட்டுட்டேன்.. ? இப்படி பண்ணுது.. ?" என்று நினைத்து கொண்டே தன் உறவும் நட்புமாகிய கார்த்திக் மற்றும் மகேந்திரன் அழைக்க..

அதுவரை ஷ்ரித்திக்கை தேடிக்கொண்டிருந்த குடும்பத்திற்கு .. அவனின் அழைப்பு ஆறுதல் தர.. ஆனால் வேறோர் எண்ணிலிருந்த அழைப்பும்.. அவன் தன்னுடைய பொருட்களனைத்தும் தொலைத்தாகவும் கூறியது.. சற்று பீதியை கிளப்பியது..

வந்த இருவரும் ஷ்ரித்திகின் நிலைக் கண்டு..  "என்னாச்சு மச்சி.. ?!!" என வினவ.. "மச்சி ... வீட்டுக்கு போய் பேசிக்கலாம்.. "என்க

அவனின் மொத்தக் குடும்பமும் ஒன்றாக ஷ்ரித்திகை தாங்க ... "ஷ்ரித்து.. என்னாச்சுப்பா.. என்ன தலையில கட்டு..அச்சோ.. என்னாச்சு ப்பா..." என்றனைவரும் ஒன்றாக கேள்விக் கணைகளைத் தொடுக்க.. அவர்களின் அன்பில் நெகிழ்ந்தவன்.. நடந்தவற்றை சுருக்கமாகக் கூற.. அதைக் கேட்ட அனைவரும் அதிர்ச்சியில் உறைந்தனர்.. 

"நல்லவேளை அந்த பொன்னு மட்டுமில்லைனா... ? ஹையோ.. " என்று.. அச்சத்தில் பாட்டி பதற..

"பாட்டி....  "என்று.. கோபத்தில் ஷ்ரித்திக் கத்த

"விடுங்க.. அத்தை.. நம்ம பசங்களுக்கு கடவுளோட ஆசி இருக்கு.. எதுவுமாகாது.." என்று சித்தி தேவிகா.. அனைவறையும் தேற்ற.. அனைவரும் சற்று சமாதானமாயினர்..

"ஷ்ரித்திக்.. " என்று மாயா விளிக்க.. 

"போச்சுடா.." என்று ஷ்ரித்திக் மனதுள் நினைக்க

"உனக்கு.. ஏதாவது ஆயிருந்ததுனா.. நா.... " என்று மாயா இழுக்க.. தன் தங்கையின் அறுவையை அறிந்த மகேந்திரன் ஷ்ரித்திகை காக்கும் பொருட்டு.. "அதெல்லாம் ஒன்னுமாகாது.. அவனை தனியா விடுங்க கொஞ்சம் ரெஸ்ட் எடுக்கட்டும்.. என்க

அது நடு இரவு என்பதால்.. அனைவரும் அவரவர் அறைக்குச் சென்றனர்..

"ஷ்ரித்திக் என்னாச்சு ப்பா.. உன் முகமே சரியில்லையே.. என்னப்பா.. ?" என்று இந்திரக்கவி.. தன் மகனை மடியில் சாய்த்து வினவ .. ராஜ தேவன் அவனின் காலடியில் அமர்ந்து அவன் கால்களை அழுத்திக் கொடுக்க.. "சொல்லுப்பா.. என்னாச்சு...? " என்க.. 

"அம்மா.. நா அவளப் பார்த்தேன்.. என் கனவுல வந்த பொன்னை.. !!!!"என்று ஷ்ரித்திக் கூற.. தாய் தந்தை இருவரும் உறைந்தனர்..

"நம்ப முடியலை இல்ல.." என்று ஷ்ரித்திக் வினவ தாய் தந்தை இருவரும் ஆம் என தலையசைக்க.. "என்றாலும் தான் ...நான் என்னோட கனவுல எப்படிப் பாத்தேனோ.. அப்படியே .. I just can't believe it.., அவதான் வெள்ளத்துலிருந்து காப்பாத்தி.. மயங்கி இருந்த என்னை தனியாவே க்ளினிக்ல சேர்த்து.. என்னைக் காப்பாத்துனா.." என்றவன் ஆச்சர்யரியத்தின் பிடியிலிருந்து விலகாமல் மொழிய..

"என்ன... ஒரு தேங்ஸ் கூட சொல்லமா விட்டுட்டேன்... நா முழிச்சு பாக்கும்போது அவளக் காணாம்.. ஹ்ம்ம்..."என்ற ஷ்ரித்திக்.. தன் தாயின் மடியில் முகத்தை புதைத்தான்...

"அந்தப் பொன்னுக்கு ஏதாவது.. பண்ணணுமே.. உனக்கு எவ்ளோ பெரிய உதவி பண்ணிருக்கா...உதவின்னு கேட்டாக் கூட யோசிக்கற... இந்த காலத்தில ... கேக்காமலே உனக்கு உதவி பண்ணிருக்கா..." என்றவனின் தந்தை கூற

"ஆமாங்க... சரியா சொன்னீங்க.. " என்று ஷ்ரித்திகின் தலையை தடவிக் கொடுத்தப்படியே தாய் கூற

"மறுபடியும் ... அந்தப் பொன்ன பாப்பேனான்னே.. தெரியலை.. பாப்போம்.." என்று படுத்துறங்கினான்...

பகலவன் தன் கரத்தால்.. பூமியவளைத் தீண்ட ... நாணத்தால் கருமை மாறி வெண்ணிறமாக சிவந்தாள்.. 

பால்கனியில் அமர்ந்து பகலவனின் உதயத்தை‌ ரசித்தான்.. ஷ்ரித்திக் ஆரிஷ்.. 

"ஷ்ரித்திக் .. அங்கேன்ன வேடிக்கை.. வாப்பா கோயிலுக்கு போலாம்...  " என்று அவனின் பாட்டி அழைக்க..

"வரேன்.. ஸ்வீட்டி.. " என்று மொத்த குடும்பமும் நேற்று நிகழ்ந்தை நினைத்து கோவிலுக்கு விரைந்தனர்... 

அனைவரும் முன்னே செல்ல.. ஷ்ரித்திகிற்கு முக்கியமான ஒரு போன் வர.. பேசி முடித்து விட்டு கோவிலுக்குள் நுழைந்தான்..

மூலவர்.. கிருஷ்ண பரமாத்மாவை வணங்கி..  மொத்த குடும்பத்திற்கும்.. அர்ச்சனை செய்தாள்.. தீவா..

கொஞ்ச நேரத்தில் மீண்டும் அதே போன் கால்.. வர.. கோவிலுக்குள் கால் போன திசையில் பேசிக்கொண்டே மரத்தின் அருகே சென்று நின்று..பேசி முடித்தவன்.. வந்த வழியில் திரும்ப.. 

"ஹே.. நில்லுனு சொல்றேன்ல..." என்று மரத்திற்கு பின்னிருந்து ஒரு இனிமையான குரலில் கோபத்தை கலக்க முயன்றுத் தோற்க.. ஷ்ரித்திகோ ..நம்மல இல்ல.. என்றெண்ணி மீண்டும் திரும்ப... 

"ஏய்... நில்லுனு.. சொன்னது காதுல விழல... நீ பாட்டுக்குப் போற.. ?" என்று மீண்டும் மொழிய.. ஷ்ரித்திகோ.. பொறுமையிழந்து ..யார்ரா அது.. என்றெண்ணி மரத்திற்குப் பின்னால் காண.. அவனின் விழிகளோ மகிழ்வில் விரிய.. தன் கனவு தேவதை கண் முன்னால்.. நிற்கிறாள்..

வெள்ளை மற்றும் நீல நிற பாவாடை தாவணியை அணிந்து கொண்டு... இடுப்பில் கை வைத்து.. தன் கரு நீல விழிகளால்.. முறைக்க முயல..மேலே நோக்கிய வண்ணமிருக்க..

"உனக்கு தீணி வேணும்னா.. என்ன பண்ணிருக்கனும்... என்கிட்ட வந்து கேட்டிருக்கனும்..அதவிட்டுட்டு.. என்ன ப்ளக் மெயில் பண்ற.." என்று ஷிவாக்ஷி.. மேலேறி கீழிறங்கும் வழியறியாமல் முழிக்கும்.. தன் செல்ல முயல்குட்டியிடம்.. பேசிக் கொண்டிருப்பதைக் கண்டவனின் இதழ்கள்.. புன்னகையால் விரிய

"என்ன.. முழிக்கற... கோபத்தல மேல ஏறி.. நீயும் பயந்து.. என்னையும் பயமுறுத்துற.. அதனால.. இன்னிக்கு பூறா அங்கேயே இரு.." என்றவளின் மொழிக்கு.. முயலோ.. இன்னும் நடுங்க.. "சரி சரி.. வரேன்"என்று.. அவள் மரத்தின் மீது லாவகமாக ஏறி முயலை கையிலேந்தி.. "அம்மு... இப்படி பண்ணுவியா. பண்ணுவியா..?" என்று.. காதை மெலிதாக திருகினாள்.. கொஞ்சிக் கொண்டே.. இறங்கி.. அவ்விடம் விட்டு நகர..

ஷ்ரித்திக் அவளின் பாதையில் குறுக்கிட..‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌ ஷிவாக்ஷி.. சட்டென பயந்து விலக .. தன் வழியில் யாரது.. என்றெண்ணிக் கொண்டே நிமிர்ந்து நோக்க.. இரவில் நடந்த நிகழ்வுகள் நினைவு வர.. அவன் நலமாக இருப்பதைக் கண்டு.. நிம்மதியடைய ..இருப்பினுமஏதோ.. நெருட.. ஒன்றுமறியாதவள் போல் முகத்தை வைத்துக் கொள்ள.. அவ்வழிவிட்டு.. நகர.. ஷ்ரித்திகே ஆரம்பித்தான்..

"நான் யாருன்னு உங்களுக்கு தெரியுதா..?" என்று ஷ்ரித்திக் வினவ

"நேக்கு .. தெரியல.."என்று அவள் கூறிக்கொண்டே விலக.. " பொய்.. ஏன் பொய் சொல்ற.. ?" என்றவனின் குரலில்.. உரிமையே வெளிப்பட .. ஷ்ரித்திக் அவள் பின்னே சென்றுக் கொண்டே.. வினவ.. அதில் சற்று கோபமுற்றவள்..

"எதுக்கு.. என் பின்னாடியே வரேள்..?" என்றுக் ஷிவாக்ஷி கோபமாக கூற

ஷ்ரித்திக் "நான் actually thanks சொல்லனும்... ஆனா.. எதுக்கு பொய் சொல்ற.. " என்க.. " ஹப்பா.. சாமி.. நாந்தான்.. உங்களை காப்பாத்துனேன்.. அதுக்காக இப்படியா.. ? பின்னாடியே வந்து வழிய மறைச்சுண்டு இருப்பேளா..?" என்று ஷிவாக்ஷி பதிலுக்கு கூற

"நீங்க... ப்ராமீன்னா..?" என்று ஷ்ரித்திக் வினவ.. விக்கிரகங்களை வணங்கிக் கொண்டிருந்தவள்..அவனின் வினாவில் "உங்களுக்கு எப்படித் தெரியும்?".. என்று ஷிவாக்ஷி அதிர்ச்சியில் கேட்க

"அதான்.. நீ.. பேசற பாஷையே சொல்லுதே.." என்று ஷ்ரித்திக் மறு‌மொழிக் கூற.. தன்னையே நோந்துக் கொண்டவள்..

"பாக்கறவாலாம்.. என்ன நினைப்பா.. என்னோட மாமா பாத்தா.. அவ்ளோதான்..?" என்று ஷிவாக்ஷி.. கூறி கொண்டே வர

"உன்‌ மாமாங்ற.. கல்யாணம் ஆயிடுச்சா..?" என்றவன் அவள் பின்னே நடந்துக் கொண்டே வினவ... 

"ஐஐ".. இப்படியே சமாளிப்போம்... என்றெண்ணி.. "ஆமா ..ஆயிடுத்து" என்றவள்.. தன்னுடைய பக்கத்து அக்காவின் கணவர்.. மிகவும் நெருக்கமானவர் என்பதாலே உறவாக நினைத்து அவர்களை அத்திம்பேள் என்றேதான் அழைப்பாள்... ஆனால் அவளின் பேச்சு வழக்கில்லாமல் சாதாரண மொழியில் கூறியதை தவறாக புரிந்துக் கொண்டான் என்று .. பதட்டத்துடன் நடந்து கொண்டே கூற

"மறுபடியும் பொய்யா... நீ தாவணிப் போட்டுருக்க.. கழுத்துல தாளி இல்லை.. இதெல்லாம் நான் நம்பனுமா... ?" என்று.. ஷ்ரித்திக் ...அவளின் பொய்யை கூறிய விதத்தை எண்ணி.... புன்னகையோடே கேட்க.. 

பொயை பொறுந்தக் கூறாமலிருந்ததும்... கண்டுபிடித்துவிட்டானே.. என்ற கடுப்பிலும்..

"என்னோட ஆத்துக்காரர் பத்தி கேட்க.. நீங்க யாரு..? நீங்க மூனாவது மனுஷா.. உங்ககிட்ட நான் எதுக்கு.. பொய்.. சொல்லனும்.. ?" என்று திரும்பி நின்று ஒற்றை விரல் நீட்டி கேட்க.. அதில் அவன் முகம்.. சற்று கோன..  

எப்பயுமே.. கோபப்படாத.. நான்..‌எதுக்கு... இப்படி கோபப்படறோம்.. என்று தன்மீதே கோபம் கொள்ள.. ஷிவாக்ஷி..

 "சாரி.. நானும் என்னோட ஆத்துக்காரரும்.. காதலிச்சு.. கன்னியாதானம்.. பண்ணின்டோம்.. அவாளுக்கு இன்னிக்கு பிறந்தநாள்.. நான் தாவணியை கட்டிண்ட.. அவாளுக்கு ரொம்ப பிடிக்கும்.. அதுக்கு தான்... அப்பறம்.. என்ன கேட்டேள்...என்னோட ஆத்துக்காரர் வேற மதத்தவா.. அதான்.. தாளியில்ல.. மோதிரம்.." என்று தான் அடுஅடுக்காக.. பொய்யை நம்பும்படியாக கூறிய தன்‌ திறமையை மெச்சிக்கொண்டே.. தன் விரலை ஷ்ரித்திகிடம்.. காண்பித்தாள்..

"ஹோ.. லவ் மேரேஜ் ஆ.. சூப்பர்..நான் சாரி கேட்டுக்கறேன்.. கேள்விமேல கேள்வி கேட்டதுக்கு... அண்ட்.. உன் ஹஸ்பண்ட் கிட்ட என்னோட பிறந்தநாள் வாழ்த்துக்கள சொல்லிடு.. நாம் ஜஸ்ட் பேசிட்டு தான இருக்கோம்.. ? உன்னோட மாமா பாத்தா என்ன.. ? அப்பறமென்ன நீ என்ன மாமா கூப்படற.. ? சாதாரணமா ப்ராமீன்லாம்.. வாங்கோன்னா.. போங்கோன்னா.. தான சொல்லுவாங்க.. ?" என்று ஷ்ரித்திக் மொழிய

"ஹ்ம்ம்.. அவருக்கு பொஸஸிவ்னஸ் ஜாஸ்தி.. நா மாமான்னு கூப்டறது தான்.. அவருக்கு பிடிக்கும்.. சரி நா கிளம்பறேன்.. " என்று ஷிவாக்ஷி நகர..  

"உய்.. நில்லு.. நா இன்னும் பேசியே முடிக்கல.." என்று இருக்கைகளையும் நீட்டி வழிமறித்து நின்றான்.. ஷ்ரித்திக்

ஷிவாக்ஷி "இன்னுமென்ன..." என்க 

ஷ்ரித்திக் "நான் இன்னும் தேங்ஸ் சொல்லவே இல்லையே..?" 

"அச்சோ.. சரி சொல்லுங்க..."என்று ஷிவாக்ஷி கூற

"அதுக்கு உன் பேர் தெரியனுமே.. ?"என்று ஷ்ரித்திக் இதழ்கள் விரிய வினவிய அதே நேரத்தில்...

அவளின் முழியும்.. அவள்‌ கைகளிலே ஏந்தியிருந்த... முயல் குட்டியின் முழியும்.. ஒன்றுப் போலவே தோன்ற.. அவளின் செயல்களை ரசிக்க ஆரம்பித்தவன்.. நிற்பதோ காதலின் முதல் படியில்.. ஆனால் அதையவன் உணரும் நிலையில் இல்லை...

"அதுக்கெதுக்கு.. என்னோட பேர்.. ஒரு மூனாவது மனுஷாலுக்கு எப்படி சொல்லுவீங்களோ அப்படியே சொல்லுங்க.. ?.. நா எதையும் எதிர்பார்த்து உதவி செயலை.. தெரிஞ்சுக்குங்க "என்றவள் முழித்துக் கொண்டே வினவ..

"நீ ஒன்னும் மூனாவது ஆள்ளில்ல... என்னோட காப்பாத்துன.. தே... பொன்னு நீ.. ஞாபகம் வைச்சுக்கோ.." தேவதை என்று கூற வந்து.. மழுப்பினான்.. ஷ்ரித்திக்

"அதெல்லாம் ஒன்னும் வேணாம்.. நான் கிளம்பறேன்.." என்று கிளம்பும் சமயம்.. "ஷிவாக்ஷி.. வா.. அங்க.. ப்ராசதம் தரா.. வா போலாம்.." என்று பக்கத்து வீட்டு குழந்தை கண்ணன்.. தன் மழலை மொழிகளில்.. கரம் நீட்டி அழைக்க.. 
ஷ்ரித்திக்கைப் பார்த்து.. "ஈஈஈஈஈஈஈ" என தன் பற்களை காட்டி சமாளிக்க...

"நீ வா.. ஷிவாக்ஷி.. இல்லைன்னா.. என்னோடத எடுத்துக்குவ.. " என்று மீண்டும் அச்சிறுப் பிள்ளை.. அழைக்க..

"ஷிவாக்ஷி... "தன்னுள் ஷ்ரித்திக் சொல்லிப் பார்த்துக் கொண்டிருந்த நேரம்.. 

"போடா.. நான் வரேன்னு சொல்றயோன்லியோ.. போடா.." என்று ஷிவாக்ஷி அவனிடம் கத்திக் கொண்டே செல்ல..

"ஹேய்.. ஷிவு.. நில்லு... இன்னும் நா முடிக்கல.." என்று ஷ்ரித்திக் கூற.. "ஹையோ.. இன்னுமா.. " என்று கூறினாலும்.. "என்னது ஷிவு வா.." மனதுள் நினைத்து கொண்டே ..ஷிவாக்ஷி சலித்துக் கொள்ள..

"ஷிவு.. ரொம்ப தேங்க்ஸ்.. அப்படின்னு சொல்ல மாட்டேன்.. பிகாஸ்  நீ என்னோட ஃப்ரண்ட்.. இருந்தாலும்.. அந்த சமயத்தில நீ செஞ்சது.. ரொம்ப பெரிய விஷயம்..  என் வீட்டில.. எல்லாரும் உன்ன‌ பாக்கனும்னு ஆசப்படறாங்க.. so.." என்று ஷ்ரித்திக் இழுக்க.. "அதுக்கு.." என்று ஷிவாக்ஷி வினவ..

"இல்ல.. எனக்கு.. இன்னிக்கு ஈவ்னிங் engagement..so.. நீ கண்டிப்பா.. வரனும்.."என்று ஷ்ரித்திக் அழைப்பு விடுக்க..

"என்ன விளையாறேளா... ? நீங்க யாரு.. ? உங்க பேரு ..? ஊரு.. ? எனக்கு எதுவுமே தெரியாது.. ?" என்று கூறிக் கொண்டிருந்த நேரம்.. ஷ்ரித்திக்கும்.. "அவ்ளோதான.. என் பேரு.. ஷ்.."என்று ஆரம்பத்திலே ஷ்ரித்திகை கையமர்த்தி.. "தெரிஞ்சுக்க வேண்டிய அவசியமில்லை.." என்று ஷிவாக்ஷி சற்று கடுப்பாகவே மொழிய..

"நா வரமாட்டேன்.. என் ஆத்துல கேட்டா..‌‌‌‌நா என்ன சொல்லுவேன்.. ? ஹ்ம்ம்.. " என்று ஷிவாக்ஷி பதிலுக்கு வினவ..

"இதென்ன கேள்வி.. நா என்ன உன்ன லவ் பண்ணா வா.. கூப்டேன்.. என்னோட எங்கேஜ்மேன்ட்க்கு தான கூப்டேன்.. இரு.. "என்ற ஷ்ரித்திக் தன் கோர்ட்டிலிருந்து.. நிச்சயதார்த்த மற்றும் கல்யாண பத்திரிகை எடுத்து.. ஷிவாக்ஷியிடம் நீட்டி.. "இந்தா.. எங்கேஜ்மேன்ட்க்கு நீ கண்டிப்பா வரனும்.." என்று கொடுக்க..

"இல்ல.. நா.." என்று ஷிவாக்ஷி தயங்க.. 

"இங்க பாரு நான் என்ன மிருகமா.. உன்ன கடிச்சா வைக்கப் போறேன்.. இன்னிக்கு எங்கேஜ்மேன்ட்.. நாளை மறுநாள் மேரேஜ்.. மூனு நாளும்.. தங்கியிருந்துட்டு தான் போனும்.. என்னோட உயிரக் காப்பாத்திருக்கே.. இனி உனக்கு என்ன உதவினாலும்.. என்கிட்ட தயங்காமல் கேளு.. ஏன்னா.. இனிமேல் நான் உன்னோட  friend.. did u got it.. ? இடம் எங்கனு தெரியுமா.. இந்த ஊர்ல பெரிய பண்ணை வீடுன்னு எங்கனு கேட்டா.. சொல்லுவாங்க.. யார் வர்லைனாலும் பரவால்ல.. நீ கண்டிப்பா வரனும்.. உன்னை எதிர்ப்பாப்பேன்.. ஹான் உன்னோட ஹஸ்பண்டையும் கூட்டிட்டு வா.. he is very lucky.. உன்ன மாதிரி ஒரு அழகான வைஃப்க்காக.. போஸ்ஸஸிவ் ஆகறதுல தப்பே இல்ல .. சரி அப்ப நா கிளம்பறேன்.. கண்டிப்பா வரனும்.. "என்று.. அவள் கையிலிருந்த முயலைக் கொஞ்சிவிட்டு.. புன்னகையுடன் சென்றான்..

ஜானவி... "அண்ணா.. யாரோ ஒரு பொன்னு கிட்ட பேசுனா மாதிரி தெரிஞ்சுது ..  ஆனா .. நா நம்பல ஏன்னா.. நீதான் பொன்னப் பார்த்தாலே.. மண்ணைப் பாக்குற சங்கமாச்சே.. ?.." என்று கிண்டலாக கூற..

"ஹே வாலு.. நேத்து என்னை ஒரு பொன்னு காப்பாத்துனான்னு சொன்னேன்ல..அந்தப் பொன்னுதான்.. அவகிட்ட தான் பேசுனேன்.." என்று ஷ்ரித்திக் கூற

"என்ன அண்ணா.. சொல்ற.. மொத்த குடும்பமும் இங்க தான இருக்கு.. கூப்ட்டு வந்து இருக்கலாம் ல..?" என்று ராகுலும்.. சஞ்சையும்.. ஒருங்கே வினவ.. 

"இல்ல.. பா.. நா கூப்டேன்.. அந்தப் பொன்னு கொஞ்சம் பயந்தவ போல.. சரி .. evening engagementக்கும்.. marriageகும்.. கூப்பிட்டு இருக்கேன்.. பாப்போம்.."என்று ஷ்ரித்திக் கூற

"கவலைப்படாத அண்ணா.. அந்தப் பொன்னு கண்டிப்பா வருவா பாருங்க.."என்று வர்ஷா கூற.. "ஹ்ம்ம்ம்ம்.... ???" என்று ஷ்ரித்திக் புருவத்தை உயர்த்தி வினவ

"ஹ்ம்ம்.." என்று தலையசைத்துக் கூறினாள்.. வர்ஷா..

மொத்த குடும்பத்திடமும்.. நிகழ்ந்தைக் கூறினர்.. அவனின் உடன் பிறப்புகள்.. "அந்த பொன்னுக்கு ஏதாவது பண்ணணுமே.. "என்று.. தாத்தா அமரேந்திர் கூற.. "ஆமாம் பா.. இதப் பத்தி நானும் அண்ணனும் பேசுனோம்.. "என்று ஷ்ரித்திகின் சித்தப்பா தேவ தேவன் கூறினார்..

"அதிருக்கட்டும்.. யவ அவ ..? என்ன விட அழகா..?"  என்று மாயா தன்‌ அதிமுக்கியமான கேள்வி எழுப்ப

அவளின் பூமுகம் தன் மனதை நிரப்ப.. "very beautiful.." என்று உள்ளார்ந்துக் கூற

"என்னைய வெறுப்பேத்தலனா.. உனக்கு தூக்கம் வராதே.." என்று ஷ்ரித்திகை அடிக்க வர.. 

"ஹாஹா.. " என்று ஷ்ரித்திக் புன்னகைத்தான்..

யாதவன்.. "என்னம்மா அங்க சத்தம்.. ??" என்று வினவ.. "பேசிக்கிட்டிருக்கோம் மாமா..." என்று ஷ்ரித்திக் கூற

தீவா.. "டேய்.‌.. உனக்கு ரொம்ப கூடிடுச்சு.. " என்க..

"என்னது.. ??"என்று கார்த்திக் வினவ.. "என்ன தான் இருந்தாலும் என்னோட தம்பிக்கு.. கொழுப்புன்னு.. நா எப்படி சொல்லுவே.." என்று தீவா நாடகபாணியில் கூற அனைவரின் முகமும்.. புன்னகையால் விரிந்தது...

ஷிவாக்ஷி.. அந்த பத்திரிகையை தன் தாத்தாவிடம் நீட்ட.. தாத்தாவோ.. "அந்த பிள்ளையாண்ட.. நேர்ல வந்து.. பத்திரிகை குடுத்து இருக்காளோன்னோ.. ஆத்தையும் பாத்துக்கோடாம்மா... விஷேசத்துக்கு போய்ட்டு வா.. நேக்கும்.. சித்த வேலை இருக்கறது.. ஊருக்கு போயிட்டு நா நேரா கன்னியாதானத்துக்கு.. வந்துடறேன்.." என்று ..எப்போதும் வேண்டாமென மறுக்கும் தன் தாத்தா ஏனோ இன்று அனுமதியளிக்க... அவளும் மாலை வேளையில் நிச்சயதார்த்தத்திற்கு செல்ல தயாரானாள்...

----------

Hiii readers... Konjam late ud Ku sorry... Ooruku ponadhala.. tharamudila.. IPA konjam ennala mudinja alavukku long ud kuduthurukkean... Tq for ur kind support.. yedhavadhu nirai kurai irundha sollunga.. guyz.. tq for all...😍

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro