Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

அத்தியாயம் - 4 😍

விடிந்தும் விடியாத அதிகாலை பொழுது...  அந்த அடர்ந்த காடுகளில் விழைந்த இலைத்தழைகளில் மார்கழி மாதம் முடிந்து சில தினங்களே ... ஆனதால் பனித்துளிகள்... படர்ந்திருக்க... 

அந்த அடர்ந்த காட்டு வழிப் பாதையில்... ஒர் பருவ மங்கை.. 🤩

தன் பாவாடை காற்றில் அசைந்தாட... இலவம் பஞ்சு பாதங்கள்.. அதில் சற்று தெளிவாக தெரிய..  ஈரப்பதம் குறையாத பாதையில் .. இலவம் பஞ்சுகளை வேகமாக பதித்து ஒட..🥰

மலர்களை தீண்டிச் சென்றது.. அவளின் வெண்பிஞ்சு கரங்கள்..

ஒர் கரம்.. கைப் பையைத் தாங்க.. மற்றொர் கரம் .. 🌼பனித்துளிகளை தனதாக்கிக் கொண்டது..

வேகவேகமாக ஓடிச்சென்று பையை கீழே விட்டு ..மற்றொர் கையால் தன் மேலாடையை எடுத்து எறிந்து விட்டு.. 

தொப்பக்கடின்னு ஆற்றில் குதித்து விட்டாள்...😘

(ஐய்யய்யய்ய.. தப்பா புரிஞ்சுக்கிட்டிங்க ...மேடம் குளிக்கறதுக்கு.. இந்த அலப்பறை...)

இடையை தாண்டிய நீண்ட கார்மேகம் கூந்தலால் நீரினை சுற்றிலும் பரவவிட்டு ... ஆற்றில் இருந்து எழுந்தாள்.. ஷிவாக்ஷி..

பிறை போன்ற நெற்றியிலிருந்து உருண்டோடிய நீரானது..  வளைந்த புருவத்தில் இறங்க அவளின் நீலக் கண்களானது.. நட்சத்திரங்கள் மின்னுவதை தோற்கடிக்க.. 

அந்நீரானது உருண்டு அவளின் இதழ்களை தீண்டும் சமயம்.. பன்னீர் ரோஜா இதழ்களில்.. பனித்துளிகள் உருண்டோடுவதைப் போல் தோன்றச் செய்கிறது...

அதிலும் இதழ்களிலேயே மச்சம் .... கூடுதல் அழகு...🤩😍🥰

நம் கதையின் நாயகி.. ஷிவாக்ஷி ஐயங்கார்..😍🥰

(நீலக் கண்ணோட உதட்டுல மச்சம் இருக்கற பொன்னு.. எங்கயும் கிடைக்கல .. அதனால இந்த பொன்னுக்கு இந்த மாதிரி கற்பனை பண்ணி பாத்துக்கோங்க...)

பெயரிலேயே தெரிந்திருக்கும் அக்ரஹாரத்து பெண்.. இவள் படித்தது ஓவியத்தை பற்றி.. B.A., (arts) அதனாலேயே படிப்பிற்கேற்ற சரியான வேலை கிடைக்கவில்லை.. ஓவியத்தின் மீது அதீத ஆர்வம்..

தன்னுடைய அபார ஒவியத் திறமையால்.. சில பல உலக சாதனையை செய்தவள்.. அதன்மூலம் பெயரும் புகழுமே மிச்சம்.. 

அது அவளின் கவலையை போக்கவில்லை..😟

இவளும் கடன் வட்டி போன்ற பள்ளத்தில் விழுந்து வெளியேற போறாடுபவள்..

அதற்காக தான்.. சங்கீதமும் நாட்டியமும் குழந்தைகளுக்கு பயிற்று வித்தும்.. பால் விற்பனைச் செய்தும்.. தோட்டத்தில் மலரும் பூக்களை விநியோகம் செய்தும் பணம் ஈட்டுகிறாள்..

நம் கதா நாயகி சற்றே பயந்த மற்றும் கூச்ச சுபாவம்.. அதற்காக ஏமாளி அல்ல.. எந்த நிலையானலும் எதிர்த்து போராடி நிற்கும் சுயமரியாதை நிறைந்த பெண்....

அவளுக்கு கல்லூரியில் நெருங்கிய தோழிகள் உள்ளனர்.. அவளின் பக்கத்து வீட்டில் வசிக்கும் கண்ணண் என்றால் அவளுக்கு கொள்ளை பிரியம்.. தன் மழலை மொழி பேச்சாலே அவளை கவர்ந்தவன்...

இவளுடன் தாத்தா இராமானுஜ ஐயங்கார்.. கண்டிப்புமிக்கவர்.. அதற்காக அன்பிற்கு குறையேதுமில்லை. ஆனால் அவ்வப்போது தான் வெளிக் காட்டுவார்..

குளிர்ந்த நீர் உடலெங்கும் பரவ... அதில் சிலிர்த்து உற்சாகமாக நீரினை தன்னிரு கரங்களால் அடித்து விளையாடினாள்.. சிறு குழந்தை போலே...😁

விரைவாக குளித்து முடித்து.. தன்‌ கூந்தலை துவட்டி .. சந்தன நிற பாவாடை தாவணியை அணிந்து.. கோவிலுக்குள் நுழைந்தாள்..

வெண்ணைத் திருடனின் எளிமையான அழகில்.. தன்னை மறந்து விழியகலாமல்.. அவனை தன்னுள் வைத்துக்கொண்டு.. உன்னை யாருக்கும் தரமாட்டேன்... என்று கண்ணணிடம் கூறினாள்...

🌼 ஸமஸ்த கோபநதனம் ஹ்ருதம்புஜைகமோஹனம்..
நமாமி குஞ்ஜமத்யகம் ப்ரஸன்ன பானுசோபனம்..
நிகாமகாம தாயகம் த்ருகந்தசாருஸாயகம்...
ரஸாலவேணுகாயகம் நமாமி குஞ்ஜநாயகம்...🌼

தேனினை குரலில் குழைத்து மந்திரங்களை பாட..🎶🎵🎵

தன்னிரு கரங்களை குவித்து.. என் கவலைகளை தீர்க்க நீ வர வேண்டுமென மனமுருக வேண்டினாள்..

கவலைகளை தீர்க்க உன்னை நாடி வருகிறேன்... என்று தன் புன்னகை தவழும் இதழுடன் அருள் பாலிக்கிறார்..

"என்னம்மா.. குழந்தை.. இன்னிக்கு சீக்கிரமா வந்துன்ட போலயே.." என்று பூஜை செய்யும் ஐயர் வினவ

"ஆமாம் .. சாமி.. நான்தான் குழந்தைங்களுக்கு சங்கீதமும் நாட்டியம் சொல்லிக் கொடுக்கறது.. நோக்கு தெரிமோன்லியோ.. அவாளுக்கு இன்னிக்கு அரங்கேற்றம்.. நானும் அவாளோடு போனுமே.. அவாளெல்லாம்.. நன்னா ஆடனும்.. அதுக்கு தான் பகவான சேவிச்சுண்டு போலாம்னு வந்தேன்.." என்று கூற

" ஹோ.. கவலைப்படாத குழந்தை.. நீ போற வேலை ஷேமமா நடக்கும்.." என்று நன்மொழிக் கூற

"உங்க வாய் முகூர்த்தம்.. பளிக்கட்டும்.. நேக்கு வேற நிறைய வேலை இருக்கறது.. கிளம்பறேன்.." என்று கூறிவிட்டு வீட்டை நோக்கி ஓடினாள்.. ஷிவாக்ஷி..

விரைவாகவே இல்லத்தில் நுழைந்தவள்.. இல்லத்தின் பின்புறம் மாட்டுக் கொட்டகையிலிருந்து கறந்து வைத்த பாலினை சோசைட்டியில் கொடுத்துவிட்டு ..

தன் இல்லத்தின் தோட்டத்தில் அன்று மலர்ந்த மலர்களை.. மலர் சந்தையில் கொடுத்து பணம் பெற்று வந்தாள்.. 

குழந்தைகளை அரங்கேற்றத்திற்கு அழைத்துச் சென்று.. அவர்களை நன்முறையில் ஆட ஊக்கமளித்தாள்... 

"அக்கா பயமா இருக்கு..!!" என்று பயத்தில் குழந்தைகள் அனைவரும் கூற 

"பயப்படாதீங்க.. பா.. என் முன்னாடி எப்படி ஆடுவீங்களோ.. அந்த மாதிரி இங்கேயும் ஆடுங்க" என்று அவர்களை ஆதரவாக அணைத்துக் கூற .. குழந்தைகள் சற்று அமைதி அடைந்தனர்...

ப்ராமீன் மொழியை அவ்வப்போது அவளையறிமாலே கோபத்திலோ உணர்ச்சிவசப்படும்போது தான் பேசுவாள்... கல்லூரியில் அவளின் பேச்சு வழக்கை ஏளனம் செய்ய.. அதிலிருந்து அவளின் வழக்கை மாற்ற முயற்சி செய்தாள்..  ஆனால் அவளால் முழுதாக மாற்ற முடியவில்லை.. அவளின் இயற்கை ஆயிற்றே..

குழந்தைகளின் அரங்கேற்றம் சிறப்புற நிறைவடைய மாலை வேளையானது...

குழந்தைகளை தத்தம் அவரவர் இல்லத்தில் பாதுகாப்பாக விட்டுச்சென்றுக் கொண்டிருந்தாள்...

மனம் போன போக்கில்...

அவளின் சிந்தனை முழுதும்.. நேற்று அவளிடம் அந்த கந்துவட்டி க்காரன் கூறிச் சென்ற அவ்வார்த்தைகளிலே..

எப்போதும் போல அவள் தன் நண்பர்களாகிய பசுமாடுகளிடம் பேசிக் கொண்டே தீவனங்களை இந்துக் கொண்டிருந்த சமயத்தில்.. வந்த கந்தவட்டிக்காரன்..

"என்னம்மா.. எனக்கு காசுத் தரலாங்கற எண்ணமிருக்கா.. இல்லையா...?" என்று தன் இயற்கையாகவே சிவந்த விழிகளில் காமத்தை நிறைத்து வினவ..

"என்ன இப்படி கேக்கறேளே.. ? உங்களுக்கு காசு தரத்துக்குத்தானே.. நான் நாய் படாத பாடு பட்டுண்டிருக்கேன்.. நான் எவ்வளவு சீக்கிரம் முடியரதோ அவ்வளோ சீக்கிரம் தந்துடரேன்.. நம்புங்கோ..." என்று அவரின் பார்வை போகும் திக்கை எண்ணி பதற்றமாக கூற

"ஒன்னா இரண்டா.. அப்படியே விடுவதற்கு .. முழுசா.. ஐஞ்சு லட்சம்.. எவ்வளவு நாள் நானும் பொறுத்து போகிறது.. உன் பாட்டிக்கு உடம்பு சரியில்லைனு உன் தாத்தா வந்து கடன் வாங்கி.. கடைசியில உன் தாத்தாவுக்கு கடைசியில இதயநோய் வந்து ...அவரால அடைக்க முடியாத கடன நான் அடைக்கறேனு சொன்னே.. நான் உன்னால அடைக்க முடியாதுன்னு நான் சொன்னதுக்கு.. நான் அடைக்கறேன்னு சொன்னியே.. இப்ப என்னாச்சு.. ஹ்ம்ம்..?" என்று ஏளனத்துடன் வினவ

"என்னோட தாத்தா வாங்குனது ஒன்றரை லட்சம்.. ஆனால் நீங்க அநியாய வட்டி போட்டுண்டு .. இப்போ ஐஞ்சு லட்சம் ஆயிடுத்து... அதிலும் கணக்கு போட்டுப் பார்த்தால் பாதிக்கு மேல கட்டியாயிடுத்து.. ஆனாலும்..உங்க அநியாய வட்டியால வட்டி மட்டும் தான் கட்டமுடியறது.. என்ன பண்ண சொல்றேள்..? அதுவுமில்லாமல் நா அப்போ சின்ன பொன்னு.. என் தாத்தா தான் கடனை பார்துண்டு வந்தா... ஹ்ம்ம்..நேக்கு இன்னும் கொஞ்சம் கால அவகாசம் கொடுங்கோ.. நா சீக்கிரமா உங்ககிட்ட பணத்தை கொடுத்துடறேன்.." என்று அவள் கெஞ்சும் குரலில் வினவ

"அதெல்லாம் தெரிஞ்சுதான.. கடன் வாங்குனிங்க.. இப்ப வந்து குத்துதே .. குடையுதேன்னா என்ன பண்ண முடியும்..?.. அதெல்லாம் எனக்கு தெரியாது.. நாளை மறுநாள் காலையில் என் பணம் வந்தாகனும்.. இல்ல நான் சொல்வதைத் தான் நீ கேட்க வேண்டும்.." என்பதை நாக்கில் நஞ்சினை தடவிய வார்த்தைகளால் .. ஒரு மார்க்கமாக கூறிவிட்டுச் செல்ல..

அவன் பார்வை செல்லும் திசையை கண்டு.. அவளின் உடலில் புழுக்கள் வீழ்ந்ததைப் போல .. அருவெறுப்பாக உணர்ந்தாள்..

என்று நேற்று நிகழ்ந்தை நினைத்தால் இப்போதும் அவளின் உடல் கூச.."அபச்சாரம்.. அபச்சாரம்.. இந்த கடங்காரன்.. நின்ன இடத்த நன்னா கழுவனும்.. "என்று தனக்குள் கூறிக்கொணடாள்..

"நாளை மறுநாளைக்குள் எப்படி அவ்வளவு பணம்... எப்படி யோசிச்சாலும்.. ஒன்னும்.. தோன மாட்டறதே... " என்று பேசியப்படியே தன் விரலை சொடுக்கெடுத்துக் கொண்டே.. ஒத்த அடிப்பாதையில்... நடந்து செல்ல

அப்போது.. அவ்வழியே வளர்ந்த ஆலமரத்தின் விழுதில்.. புறா ஒன்று சிக்கிக் கொண்டிருந்த தன் கால்களை விடுவிக்க சிறகடித்துப் போராட..

அதைப் பார்த்த ஷிவாக்ஷி .. தன் நிலையை போன்றே.. என்ன நான் கந்துவட்டி கடனில்... இப்பக்ஷியோ.. விழுதுகளில்.. ஹ்ம்ம்..

என்றெண்ணி அப்புறாவை விடுவிக்க அதனருகே சென்று.. விழுதோடு பின்னி பிணைந்த அதன் கால்களை விடுவிக்க..

புறா தன் கால்கள்.. விடுபட்ட மகிழ்வில்.. சிறகடித்துப் பறக்க..

அதைப் அவளின் கருநீல விழியகல பார்க்க.. "உன்னை காக்க நான் வந்தேன்.. என்னை காக்க யார் வருவா...?"என்று தன்னுள் வினவிய அதே சமயம்..

"நான் வரேன் " என்று தன் ஆருயிர் நண்பன் விக்ரமிடம்.. ஷ்ரித்திக் கைப்பேசியில் கத்திக்கொண்டே படியிலிருந்து  இறங்க..

 விக்ரம்.. 

"நீ மட்டும் வரல.. நான் உன்னோட ஃப்வரைட் ஹவுஸ் ... க்ளப் ஹவுஸா மாத்திடுவேன்..."என்று பொய்யாக மிரட்டல் விடுத்தான்.. விக்கிரம தேவன்..

"சரி.. சரி.. வந்துத் தொலைக்கிறேன்..." என்று ஷ்ரித்திக் கடுப்பாக கூற

"நண்பேண்டா.." என்று தனக்கு சரக்கு நிச்சயம் என்ற மகிழ்வில் விக்ரம் கத்த

"கருமம்டா.."என்று தன் தலையில் ஷ்ரித்திக் அடித்துக் கொண்டு போனை வைக்க

"என்ன மச்சி என்னாச்சு..?" என்று கிண்டலாக கார்த்திக் வினவ கார்த்திக், மகேந்திரன், ஷ்ரித்திக் மற்றும் விக்ரம் ஒத்த வயதினரே.. நால்வரும் ஒன்றாகவே கல்லூரி காலங்களை களித்தனர்.. 

கார்த்திக் மகேந்திரன்.. இருவரும் காதலித்து மணந்துள்ளனர்..

"ஏன்பா.. கடுப்படிக்கற... அந்த எருமை இருக்குல்ல.. அதான் விக்ரம்.. கல்யாண மாப்பிள்ளை bachelor's party வைச்சே ஆகனும்.. இல்லனா.. உன்னோட ஃப்வரைட் ஹவுஸ்.. களப் ஹவுஸ் ஆயிடும்னு மிரட்ரான்.. அங்க இது வரைக்கும் நான் யாரையும் நுழைய விடாமல் இருக்க.. இவன் நாசம் பண்ணுவேன் சொல்றான்.. ஒருநாளில்ல ஒருநாள் நான் அவன செய்யப்போறேன்.. பார்த்துட்டே இரு.." என்று புலம்பலாக கூற

"Bachelor's party ஆஆஆ.... டேய் டேய்.. அப்டினா நானும் வரேன்டா..." என்று கார்த்திக் ஷ்ரித்திகிடம் கெஞ்சலாக கூற

"Only for bachelor's, not for married.."என்று கிண்டலாக சிரித்தபடியே கூற..

அதிர்ந்து நோக்கியவன்.."டேய் .. என்ன நா உன்னோட முறை பொண்ணு நேஹாவ கட்டிக்கிட்டேன்ங்றதுக்காக.. இப்ப நீ பழி வாங்கலாமா..? இது உனக்கே நியாயமா..? " என்று கார்த்திக் வினவ..

அனிச்சையாக அவ்வழியே வந்த ருத்ரா.. இதை கண்டவன்.. நேராக தாயிடம் தந்தையின் பெருமைகளை எடுத்து விட..

நேஹா பின்னிருந்து தன் மணாளனை முறைக்க.. இதைக் கண்ட ஷ்ரித்திக்.. "மச்சி..... இன்னிக்கு நீ பஜ்ஜி தான்... " என்று ஷ்ரித்திக் வில்லத்தனமாக கூற.. 

"என்ன.. வில்லன் கேரக்டர் ஆ.. தூதூஉஉஉஉ... செட் ஆகல.. குடுத்த கேரக்டர ஒழுங்க பண்ணுடா... வென்று.."என்று கார்த்திக் ஷ்ரித்திகை நன்றாக கழுவ

ஷ்ரித்திக், தெரிக்காத எச்சிலை.. பட்டுவிட்டதை போல் துடைத்துக் கொண்டே.. "நான் செய்யறது இருக்கட்டும்.. இன்னிக்கு உன்னை செய்யப்போற.." என்று கூற

"என்னடா ஒளர்ற..?" என்று கார்த்திக் வினவ

"Above turn .." என்று ஷ்ரித்திக் கூற

கார்த்திக் பின்னே திரும்ப.. அங்கே அவனின் தேவதை..  கனிவை பொழியும் விழிகளோ.. அக்னியை கக்க..

அதிர்ந்தவன்... !!!தன்னை சமன் செய்து "டார்லு.. நீ என்னடா இப்படி நிக்கற.. ?!!!" என்று சமாளிக்க முயற்சி செய்ய..

அவனின் காதைப் பிடித்துத் திருகினாள்.. நேஹா.. "ஹோ.. சார்க்கு.. இன்னும் பேச்சிலர்னு‌ நினைப்பா ..?‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌ அப்பறம் என்ன சரக்கு வேணுமா.. ? உள்ள வா.. நீ போதும் போதும்னு.. சொல்றளவுக்கு தரேன்.. " காதை திருகிய படியே இழுத்துச் செல்ல.. கார்த்திக்கின் நிலை சொல்லவும் வேண்டுமோ..?

"என்னடா.. எங்கயோ கிளம்பற மாதிரி தெரியுதே..?" என்று தன் சித்தப்பா வினவ.. "ஆமாம்..பேச்சுலர்ஸ் பார்ட்டி நீ வைச்சே ஆகனும்.. இந்த விக்ரம் எருமை ஒத்தக் கால்ல நிக்குது.. போய்ட்டு வரேன்.. "என்று கூறிச் சென்றான்

நடந்ததை கண்டு புன்னகையுடன் பேச்சுலர்ஸ் பார்ட்டிக்காக காரை நோக்கி சென்றான்.. ஷ்ரித்திக்.. 

வாவென்று சிரித்தபடியே விதி தன்னிரு‌ கரங்களை நீட்டி வரவேற்கிறாள்...

வானம் சற்று மழையை விட்டுவிட்டுப் பொழிய..

காட்டு வழிப் பாதை.. குறுக்கு வழி என்று தன் பேன்ஸ் காரில் பயணம் மேற்கொள்ள.. 

அப்போது தீடீரென ஷ்ரித்திகின் வழியில் குறுக்கிட்ட ஆட்டுக்குட்டியால்.. தன்‌நிலை தடுமாற... ஆட்டுக்குட்டி மேல் ஏற்றாமலிருக்க‌ நினைத்து  தன் காரினைத் திருப்ப..அது சற்று ஈரப்பதமிக்க சரிவான பாதை ஆதலால்... மரத்தின் மீது மோதி.. நிலை தடுமாறிய ஷ்ரித்திக் .. காரிலிருந்து கீழே விழுந்தவன்.. உருண்டு திரண்டு.. ஒடும் ஆற்றில் விழுந்தான்...

ஒடும் ஆற்றில் அவனும் அடித்துச் செல்லப்பட.. ஷ்ரித்திக் அதிலிருந்து நீச்சலடித்து போறாட.. மழைப் பெய்தமையால்... நீரோட்டம் அதிகமாகவே இருந்தமையால்.. அவனின் முயற்சிகளை அது தோற்கடிக்க..

நீரில் தத்தளித்தான்.. ஷ்ரித்திக்....

--------------

Hiii.. guyz.. sry for late update.. konjam long aa ud venumnu ketanga.. but ennala avalo long aa thara mudila.. sorry for that.. ennala mudinja alavukku kuduthurukkean.. konjam personal work.. so.. and edhavadhu kuraigal therinja sollunga... NAA pora route crct aanu sollunga ..  and tq dudes.. for giving ur kind support.. and I luv u all...😍

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro