Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

அத்தியாயம் - 31 😍

காதல்.. ஒரு மாய நதி.. அம்மாய நதியில் பலரும் மூழ்கி இருக்கின்றனர்.. ஆயினும் யாரும் யார் நேத்திரத்திற்கும் புலப்பட மாட்டார்கள்.. புலப்படவும் முடியாது.. அந்நதி செய்யும் மாயம்.. நாம் மட்டுமே அங்கிருக்கிறோம்.. என்ற எண்ணத்தை உருவாக்கும்.. அந்நதியில் இருந்து மீண்டு வந்தாலும்.. உயிரும் எண்ணமும் அந்நதி இழுத்துக் கொள்ளும்..

அந்த மாயையில் இருந்து முழுமையாக வெளி வரும் வழி தெரியாததால் தான்.. காதல் என்னும் சுகமான இன்ப வேதனையை இப்புவி ஜீவன்கள்.. அனுபவிக்கின்றனர்..

ஷிவாக்ஷியும் அந்த இன்பமான வேதனையில் தான்.. மூழ்கி போனாள்.. தற்சமயமாக..

அவளுக்கு அது பிடித்தும் இருந்தது..

ஷ்ரித்திக்கையே சுற்றி வருகிறது.. அவளின் கரு நீல விழிகள்..

ஷிவாக்ஷிக்கு இப்பொழுது மாதவிடாய் காரணமாக வரும் வயிற்று வலி பறந்து விட்டது..

இஷானி வெகு நேரமாக ஷிவாக்ஷியுடன் உரையாடலை தொடர்ந்து கொண்டே இருந்தாள்..

ஷ்ரித்திக்.. அங்கு திறன் பேசியில் ஆழ்ந்து விட்டிருந்தான்.. தொழில் முறை சம்பந்தமான பேச்சில் இருந்து விட்டிருந்தான்..

அப்போது.. ஷ்ரித்திக்கின் விழிகளை அணைத்தது.. இரு வலிய கரங்கள்..

அக்கரத்தின் குரல்.. பெண் குரலாக ஒலித்தது.. "ஹே.. ஷ்ரித்திக்.. டார்லிங்.. நான் யாருன்னு சொல்லு பாப்போம்.. ??" என குழைந்தது.. அந்த குரல்.. சந்தேகமேயின்றி.. விக்ரமின் குரல்.. தான்.. 😜😜

ஷ்ரித்திக் அதை கண்டு பிடித்து விட்டான்.. ஆனால் தெரியாததை போல காட்டிக் கொண்டான்..

அவனின் கரத்தை பற்றி.. "ஹே.. மை டார்லிங்.. எங்க இருந்த நீ.. உன்ன எவ்ளோ நாளா தேடிட்டு எங்க போயிருந்த.. ?? ஐ மீஸ் யூ டி செல்லமே ?? முன்னாடி வா டி.." என்று அவனின் கையை பிடித்து இழுத்தான்.. 😜😜😜

ஷ்ரித்திக் அப்படி மொழிந்ததும்
விக்ரமின் முகம் பேயறைந்தார் போலாயிற்று.. 😱 'அடப்பாவி.. எனக்கு தெரியாமா.. ?? யாரு டா.. ?? அந்த டார்லிங்.. ?? உன்ன நல்லவன்னு நினைச்சேனே.. ??' என்று தன்னுள் நினைத்துக் கொண்டான்.. 🤨🤨

"நோ.. டா.. நோ.." என இன்னும் குழைந்தது.. விக்ரமின் குரல்.. பெண் குரலாக.. 😜😜

ஷ்ரித்திக்.. இழுக்கவும்.. விக்ரம் அப்படியே தம் கட்டி நின்று கொண்டிருந்தான்.. ஆனால்.. ஷ்ரித்திக்கின் வலிமையில்.. விக்ரம் தோற்றான்..

விக்ரம் நேராக ஷ்ரித்திக்கின் மடியிலே விழுந்து விட்டான்..

அவர்களின் கூத்தை ஷிவாக்ஷி பார்த்து பளீரென்று சிரித்துக் கொண்டிருந்தாள்.. சிரித்து சிரித்து.. கண்களில் நீர் வழிந்து.. வயிற்றை பிடித்து சிரித்துக் கொண்டிருந்தாள்.. 😂😂😂😂

இஷானி கேட்க.. அவளுக்கு பதில் கூட மொழிய இயலவில்லை.. பதில் சொல்ல முயன்று.. தோற்று.. அதற்குள் நகையும் இணைய.. பதில் கூற முடியாது.. திசையை மட்டுமே காண்பிக்க முடிந்தது..

இஷானி.. அவள் காண்பித்த திசையை பார்த்து.. தன் தலையை தானே அடித்துக் கொண்டாள்.. "அட சனியனே.. இந்த கருமத்தையா.. நான் லவ் பண்ணிட்டு இருக்கேன்.. ??" என உரக்கக் கத்தினாள்.. 😳😳

இஷானியை கடுப்பேற்றியது.. ஷிவாக்ஷியின் சிரிப்பு சத்தம்.. "ஹாஹாஹா.." என்றவள்.. பலமாக சிரிப்பதை நிறுத்தவே இல்லை.. 😂😂

"மூடுறியா.. ??" என அவளின் வாயை கை கொண்டு பொத்தினாள்.. 😠

இஷானி.. அவ்விருவரின் முன் சென்று.. "என்ன டா நடக்குது இங்க.. ??!!!" என மெல்லமான குரலில் அதிர்வை கலந்து மொழிய.. 😳😳

அதே சமயம் தான்.. ஷ்ரித்திக்கின் மடியில்.. விக்ரம் விழுந்திருந்தான்.. இஷானியின் விளிப்பில் அவள் பக்கம் திரும்பினான்.. ஷ்ரித்திக்கின் மடியில் அமர்ந்த படியே..

"ஹாய்.. பாப்பு.. வாங்க.. எங்க வந்திருக்கீங்க.. ?? நீங்க இங்க என்ன பண்றீங்க.. ??" என குழந்தையிடம் கொஞ்சுவதை போல ஷ்ரித்திக்கின் மடியில் அமர்ந்த படியே கேட்டான்.. 😜😜

"டேய்.. என்ன டா.. ?? என்ன கோலம் இது.. ?? எனக்கு துரோகம் பண்ண உனக்கு எப்படி டா மனசு வந்துச்சு.. துரோகி.. துரோகி.. துரோரோரோகி.. !!" என நாடக பாணியில் வசனம் பேசினாள்.. 😜😜

விக்ரம் ஷ்ரித்திக்கின் கழுத்தில் தன் கரத்தை மாலையாக போட்டு விட்டு..
"ஹேய்.. நீ டிஸ்டர்பன்ஸா இருக்க.. என் செல்லத்துக் கூட.. டைம் ஸ்பெண்ட் பண்ண விடு.." என்று பெண் குரலில் விக்ரம் ஷ்ரித்திக்கின் மீசை திருகி விட.. 😜😜😜

ஷிவாக்ஷி.. இதை பார்த்து வயிற்றை பிடித்து சிரித்துக் கொண்டே இருந்தாள்.. 🤣🤣🤣

ஷ்ரித்திக்கும்.. "ஹான் ம்மா.. நானும் கொஞ்சம் டைம் ஸ்பெண்ட் பண்ணணும்னு நினைக்கிறேன்.. கேன் யூ கெட் அவுட் ஆஃப் ஹீயர்.. ??" என்று விட்டு அவனை அணைத்துக் கொள்ள.. 😜😜😜

"அப்ப.. அவனுங்களா.. ?? நீங்க.. ??" என தூர தள்ளி மொழிந்து விட்டு.. அங்கிருந்து ஓட.. 😝😝

இஷானி கூறியதன் அர்த்தம்.. சில நொடிகள் கழித்து தான் புரிந்தது.. இருவருக்கும்..

ஷ்ரித்திக்கிற்கு புரிந்த மறுநொடி.. விக்ரமை கீழே தள்ளிவிட்டு இருந்தான்.. "பாவி பயலே.. என் புஜ்ஜி இருக்கிற வேண்டிய இடத்தில உன்னை எல்லாம் உக்கார வெச்சிட்டு..  த்தூஉஊஊ.." என்றுவிட்டு  படுத்திருந்த அவனை தாண்டி சென்றான்... 😝😝

விக்ரம் தன்னவளை நோக்கி நகர்ந்து சென்றான்.. "இஷா.. ஹேய்.. நில்லு‌.. ஜஸ்ட் ஃபார் ஃபன் தான.." என கூவிக் கொண்டே சென்றிருந்தான்.. 😁😁

ஷ்ரித்திக்கின் பார்வை தன் மீது படவும்.. அதுவரை தன்னை மறந்து புன்னகைத்து இருந்தவளின் இதழ்கள் தானாய் சுருங்கியது.. 😐

ஷ்ரித்திக்.. அவளருகே வந்து நின்று.. "புஜ்ஜி.. இப்ப ஓகேவா.. ?? வயித்து வலி.. ??" என்றவன் கேட்டதில்.. முழுக்க முழுக்க அன்பும் அக்கறையும் மட்டுமே தெரிந்தது.. 🥰🥰

ஷிவாக்ஷி.. உடனடியாக மண்டையை ஆட்ட தான் போனாள்.. ஆனால்.. சரியானது என்று உரைத்தால்.. 'எங்கே தன்னை தூக்க மாட்டானோ.. ??' என்றெண்ணி.. இடம் வலமாக மண்டையை ஆட்டி.. வயிறு வலிப்பதை போல பாவனை செய்தாள்.. 😜😟

ஷ்ரித்திக்கிற்கு.. தெரியும்.. அவளுக்கு வலி வந்தால்.. ஷிவாக்ஷி கத்த மாட்டாள்.. வலியை அடக்கிக் கொண்டு.. கண்களில் வலியை தெரிவிப்பாள்.. 🥺🥺

ஆனால்.. நேத்திரத்தில்‌‌.. வலியின் சுவடே இல்லை.‌.. ஆனால்.. கிட்டத்தட்ட கூச்சலிட்டாள்‌.. "ஆஆ.. அச்சோ.. வலிக்கறது.. ??!!" என்றுவிட்டு அவனின் முகத்தை பார்த்தாள்.. 😜😜

ஷ்ரித்திக்கிற்கு புரிந்து விட்டது.. அவளை தான் அள்ளிக் கொள்ள வேண்டும்.‌.. இது தான் அவளுடைய எண்ணம்.. அதற்காகத் தான் இந்த நாடகம்.. 😜😜😎😎

ஷ்ரித்திக்.. அவளிடம் ஊடுருவும் பார்வையை செலுத்தவும்.. அதில் சற்று உடல் சில்லிட்டு போனது‌.. இருப்பினும்.. தன்னுடைய நடிப்பை தொடர்ந்தாள்.. 😜😜

"சத்தியமா வயித்து வலி.. ??!!.." என முகத்தை பாவம் போல வைத்து மொழியவும்.. 🥺🥺

ஷ்ரித்திக்கின் இதழ்கள் தானாய் வளைந்து கொடுத்தது.. ☺️

ஷ்ரித்திக்.. அவளை அள்ளிக் கொண்டான்.. இதை எதிர்பார்க்காதவளோ.. கொஞ்சம் மிரண்ட பார்வையை தான் வீசினாள்.. 😳

"ஏலே ஏலே யே லே லே
யே லே லே யே லே லே
யே லே லே யே லே லே லே

இப்படியே எங்க வேனா
தூக்கி கிட்டு போ
என்ன இன்ச்சு இன்ச்சா
கை புடிச்சு கூட்டிக்கிட்டு போ..."

என்ற பாடல்  தானாய் அவளின் மனதில் ஒலிக்கச் செய்தது.‌. 😍😍

ஏதேனும்.. பேசிவிட்டு பின் தான் தன்னை தூக்குவான்.. என்றெண்ணினாள்.. ஆனால் நடந்ததோ வேறு..

ஷ்ரித்திக்.. ஷிவாக்ஷியை இருக்கரங்களிலும் தூக்கிக் கொண்டு நடந்து சென்றவனினை விழி விரித்து.. விழித்தாள்.. இஷானி.. வாயையும் விரித்து விட்டாள்.. ஆச்சரியத்திலும்.. அதிர்விலும்.. 😲😲

இஷானி.. தன்னவனை நோக்கி சரமாரியாக அடித்தாள்.. "அங்க பாருடா.. அங்க பாருடா.. உன் பிரண்டு எப்படி தன் பொண்டாட்டிய தூக்கிட்டு போறான்.. நீயும் தான் இருக்கீயே.. ??" என விக்ரமின் காதை திருகினாள்.. 😠😠

இஷானிக்கு துளி கூட வருத்தம் இல்லை.. அவளுக்கு தன் தோழியின் மகிழ்வில்.. அவளுக்கு மிகவும் மகிழ்ச்சி தான்.. விக்ரமிடம் சண்டையிட காரணம் தேடியவளுக்கு அகப்பட்டது.. இந்த காரணம்.. இஷானிக்கு தன்னவனிடம் சண்டையிட வேண்டும்.. சீண்டி பார்க்க வேண்டும்.. நிச்சயம் இது செல்ல சண்டை தான்.. இது விக்ரமிற்கும் தெரியும்.. அவனுக்கும் இது பிடித்தே இருந்தது..

"ஹே.. லூசு.. அவங்க புருஷன் பொண்டாட்டி.. நாம ஜஸ்ட் லவ்வர்ஸ்.. தான.. ??" என விளக்கம் கொடுக்கிறேன் என்று தானாக மாட்டிக் கொண்டான்.. ☺️☺️😜

"ஓஓ.. அதென்ன.. ஜஸ்ட் லவ்வர்ஸ்.. லவ் பண்றது அவ்ளோ பெரிய குத்தமா.. ??" என்று விட்டு இஷானி விக்ரமை முறைத்தாள்.. 😠

"பலியாடு தானே ஸ்டவ்ல ஏறி உக்காந்த கதையாயிடுச்சே.. ??!!.." என முணுமுணத்தான்..  விக்ரம்.. 😁😁

"ஏது.. ??" என இஷானி புருவத்தை உயர்த்தி கேட்கவும்.. 🤨

"அது நத்திங்.. நத்திங்.." என சமாளித்து இளித்தான்.. 😁😁

"அவனவன்.. எப்பா டா.. டைம் கிடைக்கும்.. தான் ஆள தள்ளிட்டு போலாம்னு இருக்காங்க.. நீயும்தான் இருக்கீயே.. ??" என்று இஷானி விக்ரமின் மண்டையில் வலிக்காமல் கொட்டினாள்.. 😠😠😜

"ஹே.. அது டைம் பாஸ் லவ்.. நான் உன்னை கல்யாணம் பண்ணிட்டு முழுசா லவ் பண்ணனும்னு நினைக்கிறேன்.. நீ  கல்யாணத்துக்கு அப்புறம் பாரு முழுசா என்னை பத்தி தெரிஞ்சுப்ப.. ??" என்று கண்ணடித்து.. முழுசா.. என்பதில் அழுத்தம் கொடுத்து.. இரட்டை அர்த்தத்தில் கூறி இஷானியை முகம் சிவக்க வைத்தான்.. 🥰🥰

இதில் சற்று தடுமாறி போனாள்.. நாணத்தில் முகம் சிவந்து போனது.. முகத்தை வேறு புறம் திரும்பி.. "பாத்து பாஞ்சிற கிஞ்சிற போற.. ??" என இஷானி.. அதற்கும் கிண்டலடித்தாள்.. 😍😍 வெட்கத்தை மறைக்க பெரும் பாடு பட்டாள்..

விக்ரம் தன்னை கட்டுபடுத்த முடியாமல் திணறினான்.. அவளின் முகச்சிவப்பு.. வெட்கத்தை.. கண்டு தாள முடியவில்லை‌‌.. காதல் இச்சையாக.. அவளருகே நெருங்கி கரத்தை பற்றியவன்.. அவளின் பூக்கரத்தில் முத்தத்தை பதிக்க.. 😍😍🥰🥰.. இஷானி தன் வசம் மொத்தமாய் இழந்தாள்.. 🥰🥰 வெட்கத்தில்.‌. அவன் மார்பில் ஒளிந்துக் கொண்டாள்..

விக்ரம் அவள் கழுத்தில் முகத்தை புதைத்துக் கொண்டான்.. இஷானி.. அவன் மார்பின் வாசனை ரசித்து நுகர்ந்து கொண்டு.. அவன் மார்பில் முத்தத்தை பதித்தாள்.. 🥰🥰

விக்ரம்.. "இஷூ.. நீ இங்கிருந்து போ.. ஐ காண்ட் கண்ட்ரோல் மைஷல்ஃப்.." என கிரக்கமாக கதைக்க.. அதற்கு மேல் அவள் அங்கு.. நிற்காமல்.. வெட்கத்தை மறைத்து ஓடிவிட்டாள்.. 🥰🥰

ஓடும் அவளையே விழி மூடாமல் ரசித்திருந்தான்.. 😍😍😍

ஷிவாக்ஷியை.. தூக்கிக் கொண்டு வந்தவன்.. வரவேற்பறையில் இருக்கும் சோஃபாவில் அமர வைத்தான்..

வரவேற்பறையில் யாரும் இல்லை.. சிலர் சமையலறையிலும்.. சிலர் அவரவர் அறையிலும் இருந்தனர்..

தன்னை தூக்கிக் கொண்டு வந்தவனை ரசித்துக் கொண்டே இருந்தது.. ஷிவாக்ஷியின் விழிகள்.. 😍😍

ஷ்ரித்திக்.. அவளுக்கு எதிரே மண்டியிட்டு அவளையே நோக்கினான்.. முழுக்க முழுக்க காதலாக.. 😍😍

ஷிவாக்ஷிக்கு வெட்கம் பிடுங்கி தின்றது.. கரம் கொண்டு அவன் விழியை மறைத்தாள்.. 😍😍

ஷ்ரித்திக்.. முறுவல் கொண்டு.. அவளின் கரத்தை விலக்கினான்.. 🥰🥰

ஷிவாக்ஷியால் அவன் பார்வை வீச்சை தாங்க முடியவில்லை.. 'என்ன இது.. ?? பார்வையா.. ?? இல்லை தொட்டாக்காளா.. ??  உயிரை துளைத்து செல்கிறதே.. ??' என்றவளால் நினைக்காமல் இருக்க முடியவில்லை.. 😍😍

ஷிவாக்ஷியால் அதற்கு மேல் முடியாமல்.. தலையை குனிந்தவாறே "ஏ.. ஏ.. ஏன்.. இப்.. இ.. இப்படி பாக்கறேள்.. ?? இ.. இ.. இப்ப..டி.. பா..க்காதேள்.. ?? நே.. நேக்கு எ..என்ன..வோ ப..ண்றது.‌. ??" என திக்கி விக்கி.‌. தட்டுத்தடுமாறி.. மெல்லமாக.. அவனுக்கே கேட்காத வண்ணம் கதைத்தாள்.. 🥰🥰

ஷ்ரித்திக்.. அவள் உதட்டசைவில் கூற வந்ததை தெரிந்து கொண்டான்.. அப்படி கூறியதும்.. ஷ்ரித்திக் நாணம் கொண்டான்.. தன் நாண நகையை அடக்கி.. தன் தலையை இடம் வலம் திருப்பி.. தன் நாணத்தை மறைக்க முயன்றான்.. 🥰🥰

ஷிவாக்ஷிக்கு.. ஷ்ரித்திக்கின் நாணம் புதிது.. கம்பீரமாக.. வலம் வருபவன்.. தீர்க்கமாக.. இருப்பவன்.. தீட்சண்ய பார்வையை வீசும் விழிகள்.. இன்றோ ஓரிடத்தில் இல்லை..

அப்பொழுது தான்.. உணர்ந்தாள்.. பெண்களின் நாணத்தை பற்றியே பேசும் இக்கவிதை உலகம்.. ஆண்கள் நாணம் கொள்ளும் தருணத்தை.. எழுத மறந்ததா.. ?? உண்மையில் பெண்களின் வெட்கத்தை காட்டிலும்.. ஆண்களின் நாணம் கொள்ளும் தருணம் அழகானவை.. என்று பட்டிமன்ற தீர்ப்பினை எழுதி முடித்தாள்.. 😍😍😍 அக்கணத்தை இழக்கக் கூடாதென.. அவனை இமை மூடாது ரசித்தாள்..

ஷ்ரித்திக்.. திடீரென.. அவளின் இடை பற்றி தன்புறம் இழுத்தான்.. இங்கு இடை.. இருக்கிறதா.. ?? என்ற சந்தேகம் வேறு எழுந்தது.. அவ்வளவு மென்மையை உணர்ந்தான்.. 😍😍

இச்செயல் எதிர்பார்க்கவில்லை.. என அவள் மருண்ட விழிகள் கதை பேசியது.. 😳😳

ஷிவாக்ஷி.. விக்கித்து போனாள்.. வெகு அருகில் அவன் முகம்.. ஒரு நிமிடம் மூச்சு விட மறந்து போனாள்.. 😳😳

ஷ்ரித்திக்.. அவள் முகத்தை கரத்தில் ஏந்தியவன்.. தன் நீண்ட முத்த கவிதையை.. அவன் இதழ்களால்.. அவள் கண்ணத்தில் தீட்டினான்.. 😘😘😘

ஷிவாக்ஷிக்கு ரோமக் கால்கள் எல்லாம் குத்திட்டு நின்றது.. அவனின் நான்கு நாள் தாடி வேறு.. அவளின் கண்ணத்தை உரசியது கூச்சத்தில் நெளிந்தாள்.. அவள் இதயம் ❤️ செயல் பட மறந்து போனது.. அவளின் விழிகள்.. விரிந்தது அதிர்வில்.. இமை மூட மறந்தது..

வெகுநேரமாகியும்.. ஷ்ரித்திக்கின் இதழ்கள்.. அவள் கண்ணத்திலே மையமிட்டு இருந்தது.‌.. எடுத்து விட்டால்.. இக்கணம் விரைவில் நகர்ந்து விடும் என்ற எண்ணம்.. அவனுள்.. 😘 அவள் கண்ணங்களின் மென்மையை உணர்ந்தான்..

ஷிவாக்ஷியும் தடுக்க வில்லை.. தடுக்க வில்லை என்பதை விட.. அவளே செயல் பட வில்லை எனலாம்.. 🥰

மனமேயின்றி.. தன் இதழ்களை பிரித்தான்.. அவள் கண்ணத்தில் இருந்து.. 😘😘🥰🥰

"அபிஷ்டு.. அபச்சாரம்.." என அவள் வீரென கூச்சலிட்டு... எழுந்து ஒட முயற்சித்தாள்.. 😳.. ஷ்ரித்திக் விடுவேனா.. ?? என்றிருந்தான்.. 😎

ஆனால் ஷ்ரித்திக்.. அவளின் கூச்சலையெல்லாம் மதிக்கவேயில்லை..

ஷிவாக்ஷியின் அதிர்வு நிறைந்த விழிகளை கண்டதும் சிரிப்பு தான் வந்தது‌‌.. ஷ்ரித்திக்கிற்கு.. 😄

ஷ்ரித்திக்.‌. அவளின் கண்ணங்களை தாங்கி.. "புஜ்ஜூ.. சாரி கேட்க மாட்டேன்.. என்னால இப்ப எல்லாம் கண்ட்ரோல் பண்ண முடியறதில்லை.. கண்ணுக்கு முன்னாடி பிரியாணிய வைச்சிட்டு சாப்பிடாம இருக்கிற மாதிரி இருக்கு டி.. அதான்.. டி.." என கிரக்கமாக.. கொஞ்சுதலாக கூறும் மொழிகளை கேட்டபின் நிகழ்வுக்கு வந்தாள்.. 😳🙂

அவளுக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை.. ?? ஷ்ரித்திக்கின் மீது காதல் இருப்பது உறுதி தான்.. ஆனால்.. ஏதோ.. ஏதோ இடையில் அவனுடன் ஒன்ற விடாமல் தடுக்கிறது.. 😐😐

ஷிவாக்ஷியின் பேந்த பேந்த விழிக்கும் பார்வையை கண்டு..   முத்தங்களை வாரி இறைக்க வேண்டும் என தோன்றியது.. 😍🥰🥰😘

அவளுக்கு சிறு அவகாசம் தேவைபடுகிறதோ.. ?? என்றெண்ணி.. அவளை விடுவித்தான்.. 😎😎 மண்டியிட்டு இருந்தவன்.. எழுந்து.. "சரி.. இஷானிட்ட பேசிட்டு வா சாப்பிடலாம்.. ஹ்ம்ம்ம்ம்.." என நகர்ந்தான்.. 😎

ஷிவாக்ஷிக்கு இப்போது தான் மூச்சே வந்தது.. 🌬️

சரியாக.. இஷானியும் வந்து சேர்ந்தாள்..

இஷானி பொதுவாக பேசவும்.. ஷிவாக்ஷி மெதுவாக இயல்புக்கு திரும்பினாள்.. 🙂

"ஏன் டி.. அப்பா எப்ப வருவா.. ?? நானும் வருவா வருவான்னு பாத்துண்டே இருக்கேன்.. ஆளக் காணோம்.. பாத்தே பல நாள் ஆயிடுத்து.." என ஷிவாக்ஷி புலம்பல் போல மொழிந்தாள்.. 🙂🙂

"வருவாரு.. டி.. அப்பா ஏதோ.. பேங்க்ல முக்கியமான வேலைன்னு அலைஞ்சுட்டு இருக்காரு.. என்கிட்ட நல்ல பேசியே.. இரண்டு நாளாச்சு.. நான் அழைச்சிட்டு வரேன்.." என வாக்களிப்பதை போல கதைத்தாள்.. இஷானி.. 🙂🙂

"இஷா.. ரேஸூக்கு போயிட்டு இருக்கியா.. ??" என ஷிவாக்ஷி.. அவளிடம் வழக்கமான கேள்வியை.. முன் வைத்தாள்.. 🙂🙂

"ஹான்..‌ போயிட்டு தான் இருக்கேன்.. மச்சி.. நாளைக்கு ஒரு ரேஸ் இருக்கு.. போலாமா.. ?? நீயும் வந்து ரொம்ப நாளாச்சு போலாம் வா.. ??" என கட்டளையாக தன் தோழியை அழைத்தாள்.. ☺️☺️

"நாளைக்கா.. ??" என்று விட்டு யோசனையில் இறங்கினாள்.. 🤔🤔

"என்ன யோசனை.. ??" என்றவளின் மண்டையில் தட்டினாள்.. இஷானி.. 😜😜

"இல்ல இந்த மாதிரி நாட்கள்ல.. ?? அதான் யோசிச்சேன்.. ??" என ஷிவாக்ஷி கவலை போல் கூறிய அவள் குரல் பம்மியது.. 😔😔

"என்ன இந்த மாதிரி நாளுன்னு யோசிக்கிற.. ?? யூ நோ.. சூப்பர் வுமேன் படம் தெரியுமா.. ?? அந்த படம் நடிக்கும் போது அந்த ஹீரோயின் கன்சிவ்வா இருந்தாங்க.. தெரியுமா.. ??" என தான் அறிவுரை வழங்குகிறோம்.. என நினைத்து.. கர்வமாக மொழிய.. 😎😎

ஷிவாக்ஷி.. அவளை ஏற இறங்க பார்த்து விட்டு.. 🤨
"ஷனியனே.. நான் என்ன மலையா நிமித்த போறேன்.. ?? என்னாண்ட மோட்டிவெஷனல் ஸ்பீச் நடத்துற.. ?? அஷடு.." என
அவளை உதைத்தாள்.. 😜

"இல்ல.. ரொம்ப நாள் முன்னாடி யோசிச்சது‌‌.. எப்ப சொல்லலாம்னு பாத்தேன்.. இப்ப தான் சொல்ல டைம் கிடைச்சது.." என இளித்து வைத்தாள்.. இஷானி.. 😁😁

இந்த பதிலில் கடுப்பானவள்..
அவளின் தலையை தள்ளினாள்.. ஷிவாக்ஷி..
🤨

அப்போது விக்ரம்.. வரவும்.. "இஷூ.. வரியா.. உன்னை வீட்ல ட்ராப் பண்ணிடறேன்.. இல்ல நீயா.. போயிடுவியா.. ??" என வினவினான்.. அவளின் பதிலுக்காய் காத்திருந்தான்.. 🙂🙂

"இரு விக்கி.. வரேன்.. சரி அத்து.. நாளைக்கு நானே வந்து உன்னை கூட்டிட்டு போறேன் ரெடியா இரு.. பை" என்று விட்டு விக்ரமுடன் நடந்தாள்..

விக்ரமும் ஷிவாக்ஷியிடம் சொல்லிக் கொண்டு நகர்ந்தான்.. 🙂🙂

ஷ்ரித்திக்.. ஷிவாக்ஷியை தூக்கிக் கொண்டு சாப்பாட்டு மேஜையில் அமரச் செய்தான்..

"இதுக்கு அப்பறம்.. நானே நடந்துக்கறேன்.. நீங்க இவ்ளோ தாங்கனும்னு.. அவஷியம் இல்ல‌..‌ இது சாதாரணமா எல்லா பொம்மனாட்டிக்கும் வரது தான்.. நேக்கு ஒன்னும் இல்ல.. வயிறு வலிக்கும் அவ்ளோ தான்.. படுத்து தூங்கினா சரியாயிடும்.." என தரையை பார்த்து சொல்லவும்.. 🙂🙂..

ஷிவாக்ஷி.. அவனுக்கு மேலும் சிரமம் கொடுக்கிறேன் என நினைத்து தான் அப்படி சொன்னாள்..

அதை புரிந்து கொண்டவனும்
"சரிங்க மகாராணி.. சீக்கிரம் சாப்பிட்டு மேல போயிடலாம்.. எல்லாரும் அவங்க சாப்பிட்டுகட்டும்.." என்று விட்டு ஷ்ரித்திக்.. அவளுக்கு தட்டில் பட்டர் நான்னும் பன்னீர் பட்டர் மசாலாவும் கொண்டு வந்து.. ஷிவாக்ஷி எவ்வளவு மறுத்தும்.. அவளுக்கு ஊட்டி விட்டான்.. 😎😎

மதியமும் ஷ்ரித்திக் தான்.. ஊட்டி விட்டான்..

ஷிவாக்ஷி சாப்பிட்டு முடிக்கவே அரை மணி நேரம் ஆனது.. "ஏன் புஜ்ஜூ.. இவ்ளோ மெதுவா சாப்பிடற.. ??" என ஷ்ரித்திக்.. சாப்பாட்டு மேஜையின் அருகில்.. இருந்த நாற்காலியில் அமர்ந்து சாப்பிட்ட படியே கேட்டான்.. 😎🤨

"அது.. அப்படியே பழகிடுத்து.. மெதுவா தான் சாப்பிடறது.. என்னால வேகமா சாப்பிட முடியல.. ட்ரைப் பண்ணேன்.. தொண்டை வலிக்கிறது‌‌.. அதான்.. இப்படி.." என அவனருகில் சாப்பாட்டு மேஜையின் மேலே அமர்ந்தவாறே.. நீரை பருகியவாறே கதைத்தாள்.. 🙂

"ஹோ.." என்று விட்டு.. உண்பதை தொடர்ந்தான்.. 😎

இருவரும் உணவை முடித்த பின்னர்.. ஷ்ரித்திக் அவளை தாங்கி தான் சென்றான்‌‌.. ஷிவாக்ஷியின் மொழிகள் எடுபடவில்லை.‌.

"இங்க பாரு.. என் பொண்டாட்டிய இப்படி எல்லாம் தாங்கனும்னு என்னோட ஆசை.. அதை தடுக்காத.." என்று கட்டளை போல சொல்லவும்.. ஷிவாக்ஷியால்.. எதுவும் பேச முடியாது போயிற்று.. 😐😐

இருவரும் தங்களின் அறைக்கு சென்று படுத்து உறங்கினர்..

அதிகாலை வேளை.‌. சில்லென்ற காற்று தென்றலாய் கதைப் பேச.. உறக்கத்தில் தவழ்ந்த உதயன் மெல்ல விழிகளை திறந்து பிரகாசத்தை வழங்கிய அற்புதமான காலை பொழுது.. 🌄

முதலில் எழுந்தது ஷிவாக்ஷிக்கு.. குளித்து முடித்தவள்.. கரு நிற குர்த்தியில்.. லெக்கின்ஸ் அணிந்து..  இருந்தவளை.. மென்று விழுங்கியது.. ஷ்ரித்திக்கின் விழிகள்‌‌.. 😍😍

அப்போது தான் விழித்தவனின்.. விழிகளில் விழுந்தாள்.. ஷிவாக்ஷி..

அவள் அணிந்திருந்த ஆடை.‌. அவளை இன்னும் அழகாய் காட்டியது.. போனி டெயிலில்.. வலம் இடம் இருபக்கமும்.. நெற்றியில் சரிந்து விழுந்தது.. முன் நெற்றி முடிகள்.. அது இன்னும் அழகை கூட்டியது.. 😍😍

ஷிவாக்ஷி.. ஷ்ரித்திக் உறங்கிக் கொண்டிருக்கிறான்.. என்றெண்ணி.. அவள் இயல்பாய் இருந்தாள்.. அந்நேரம் பார்த்து அவளின் திறன் பேசி..

"ரகிட ரகிட ரகிட..
ஊஊஊ..
ரகிட ரகிட ரகிட..
ஊஊஊ…
ரகிட ரகிட ரகிட..
ஊஊஊ..
ரகிட ரகிட ரகிட..
ஏ என்ன வேணா நடக்கட்டும்
நா சந்தோசமா இருப்பேன்..
உசிருக்கு வேறென்ன வேணும்
உல்லாசமா இருப்பேன்..
என்ன வேணா நடக்கட்டும்
நா சந்தோசமா இருப்பேன்..
உசிருக்கு வேறென்ன வேணும்
உல்லாசமா இருப்பேன்..
ஏதா பஞ்ச்சா போட்டு வுடு மாப்ள..
எனக்கு ராஜாவா நான்..
எனக்கு ராஜாவா நான்..
எனக்கு ராஜாவா நான்… வாழுறேன்.
எதுவும் இல்லன்னாலும் ஆளுறேன்..ரகிட ரகிட ரகிட..
ஊஊஊ..
ரகிட ரகிட ரகிட..
ஊஊஊ…
ரகிட ரகிட ரகிட..
ஊஊஊ..
ரகிட ரகிட ரகிட.."

ஷிவாக்ஷி.. அதற்கேற்றாற் போல.. ஆட்டம் போட்டுக் கொண்டு இருந்தாள்..

அவள் பாட்டுக்கு ஆடவில்லை.. பாடலுக்கு ஏற்ப கிட்டத்தட்ட நவீன நடனத்தையும் கலந்து ஒரு குத்தாட்டத்தை போட்டுக் கொண்டிருந்தாள்.. 🥳🥳

ஆடிக் கொண்டே.. திறன் பேசியில் பேசினாள்.. இஷானி தான் அழைத்திருக்கிறாள்.. உன் இல்லத்திற்கு வெளியே நிற்பதாக கூறி வர சொன்னாள்..

ஷிவாக்ஷியும் ஆட்டத்தை நிறுத்திக் கொண்டாள்‌.. மெத்தையில் ஷ்ரித்திக்கிடம் தெரிந்த அசைவை கண்டு.. தான்..

கரு நீல விழிகளே அழகு.. அழகை மெருகூட்டும் பொருட்டு.. மையை தீட்டினாள்..

அவ்வழகில் சொக்கிப் போனான்.. கண்ணாடியை பார்த்து.. மையை தீட்டிக் முடித்தவள்.. அதில் ஷ்ரித்திக்கின் பிம்பம் தெரியவே.. இளித்து விட்டு.. மையை மேஜையில் தயக்கத்தோடும் நாணத்தோடும் வைத்து விட்டு நகர்ந்தாள்..

ஷ்ரித்திக் தன்னிடம் அவனின் சேட்டைகளை காட்டப் போகிறான்.. என்றவனின் பார்வையை வைத்தே யூகித்தாள்.. அவனை தாண்டி..
கீழே போகலாம்.. என்று வேகமாக நகர்ந்தவளின்.. கரத்தை பற்றி  இழுத்தது ஷ்ரித்திக்கின் கரம்.. 😎😍

நான் நினைத்ததை.. அப்படியே செய்கிறானே.. கள்வன்.. என மனதில் செல்லமாய் திட்டிக் கொண்டு‌‌..
"ஹான்.. என்ன பண்றேள்.. ?? விடுங்கோ.." என ஷிவாக்ஷி ஷ்ரித்திக்கிடம்.. கைகளை விடுவிக்க போராடினாள்.. 😕

ஷிவாக்ஷி அப்படி சொன்னதும்.. உடனே கைகளை விடுவித்தான்.. "சரி.. எனக்கு எது பிடிச்சிருக்கோ.. அத பிடிச்சிக்கறேன்.." என்று விட்டு.. அவளின் இடையை பற்றி தன்னை நோக்கி இழுத்து கொண்டான்.. 😎😎

ஷிவாக்ஷி தான்.. முதலில் அவன் மொழிந்தவை புரியாது விழிக்க‌‌.. ஷ்ரித்திக்கின் செயலில் திணறி போனாள்.. இதயமே வெளியே குதித்து விடும் அளவுக்கு தடதடத்து கொண்டிருந்தது.. 😱

ஷிவாக்ஷியின் இப்பார்வை.. புதிது.. மிரண்ட பார்வையில் காதலும் கிரக்கமும் நிறைந்து இருந்தது..

ஷ்ரித்திக்கிற்கு.. உள்ளுக்குள் ஏதேதோ  ரசாயன மாற்றங்கள் வேறு உலகிற்கு அழைத்துச் சென்றது..

புதிய அர்த்தத்தை.. தேடியே அவள் இதழ்களை நோக்கி குனிந்தான்.. ஷ்ரித்திக்..

---------------

To be continued .... 😉

Word count 2283

Vote 😍😍😍

Comment... 👍🙂

(Sry nanbargale.. sila personal problems nala story ezhudha mudila.. adhukaga.. enna unga V2 pullaiya nenachu mannichi vitrunga.. 😁😁 neraiya perukku story marandhu irukkum.. apdi marandhirundha.. munnadi poi padichitu vaanga.. thadagalukku varundhugirean.. ini ungal sachu.. eppodhum pola.. kadhaiyai ezhudhuvaal enbadhai.. therivithu kolgirean... 😁😁😁.. unga aadharavu indha ponnuku thevai so paathu pannunga makkale... 😍😍🥰🥰🥰😁)

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro