Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

அத்தியாயம் - 26 🥰

நயனங்களில் உன்னை நிறைத்து.. வைத்தமையால்..

பணியில் கவனம் செலுத்த மறுக்கிறது..

என் மனம்..

எங்கே.. மறைந்து விடுவாயோ.. ??

என்றே.. 🥰

விக்ரம்.. பார்வையாலேயே.. தன்னவளின் கண்ணங்களில்.. உடலின் மொத்த ரத்த ஓட்டத்தையும்.. வரச் செய்தான்.. அவன்.. 😍

அகத்தில் காதலும்.. முகத்தில் நாணமும் குடியேறி.. மலர்ந்து நின்றது அவளிடம்.. 🥰🥰

விக்ரமிற்கு.. இஷானியை.. இப்போதே.. அள்ளிக் கொள்ள வேண்டும் என்றே தோன்றியது.. 😍😍

இதே வேறு யாரேனும்.. அங்கு இருந்திருந்தால்.. அவை யாவும்.. அவன் கருத்தில் பதிந்திருக்காது.. தன்னவளை நெருங்கிருப்பான்.. கண்ண கதுப்புகளின் சூட்டை உணர்ந்திருப்பான்.. காதலாக.. 😍😍

ஆனால்.. தன் மாமனாரின் முன்.. மரியாதை நிமித்தமாக அமைதியாக இருந்தான்.. இல்லை..‌ இல்லை.. தன்னை அடக்கிக் கொண்டு இருந்தான்.. 😍😍

விக்ரமே பேச்சை தொடங்குவார்.. என்று எதிர்பார்த்திருந்தவர்.. அவனின் பார்வை தன் புதல்வியிடம் இருப்பதை கண்டு.. 'ம்ஹூம் இது.. வேலைக்காகது.‌.' 🥱🥱.. "அப்பறம்.. மாப்பிள்ள.. எப்ப கல்யாணத்த வைச்சுக்கலாம்.. அத பத்தி பேச.. உங்க வீட்ல இருந்து வருவாங்க.. ?? ஏன்னா அது தான் முறை.." என்று ஜான் தன் மகளின்.. திருமணத்தை காண எதிர்பார்ப்பும்.. ஆசையும் நிரம்பிருந்தது‌‌.. அவரின் வார்த்தைகளில்.. 😀😀

விக்ரம்.. அவரின் ஆசையை.. தற்சமயம் நடவாத ஒன்றென்பதால்.. சிறிது.. மௌனித்து.. பின்.. கூற விழைந்தான்.. "அது மாமா.. இப்போதைக்கு.. கல்யாணம் வேணாம் மாமா.. எனக்கு ஒரு ஒன் இயர் டைம் கொடுங்க.. ??" என்று அவரிடம் அவகாசம் கேட்டு நின்றான்.. 😟😕

ஜான் மில்டனே.. ஏன் என்ன.. ?? என்ற கேள்வியை பார்வையால் வினவி.. பேச துவங்கும் முன்.. விக்ரமே அதற்கான.. காரணத்தை முன் மொழிந்தான்.. "மாமா.. நான் இன்னும்.. என் அப்பாவோட பிஸ்னஸ் தான்.. பாத்துட்டு இருக்கேன்.. எனக்குன்னு தனி அடையாளத்தை உருவாக்கவே இல்லை.. அதுக்கு அப்புறம் கல்யாணத்த நான் சந்தோஷமா.. முழு மனசோட பண்ணிப்பேன்.. ஐ மீன் நா என் சொந்தக் காலுல நிக்கனும்னு நினைக்கிறேன்.. சோ ப்ளீஸ்.." என்று விக்ரம் கெஞ்சுவதை போல கேட்டு நின்றான்.. 😔

ஜான் மில்டன்.. சற்று சிந்திக்கலானார்.. தன் மகளின் வாழ்வாயிற்றே.. சிந்திப்பது தானே.. உத்தமம்..

விக்ரமுடைய.. ஒற்றை வார்த்தை.. ஜானை சம்மதிக்க வைத்தது.. அது தான்.. 'கல்யாணத்த முழு மனசோட பண்ணிப்பேன்..' என்றே அது..

"சரி.. மாப்பிள்ளை.. ஆனா ஒரே ஒரு வருஷம் தான்.. அதுக்கு மேல என்னால் பொறுத்திருக்க முடியாது‌‌.. என் பொண்ணுக்கு கல்யாணம் பண்ணி பார்க்கணும்னு ஆசையிருக்காதா.. ?? சீக்கிரமா.. உங்க வேலைய முடிச்சிடுங்க.." என்று... விக்ரமிற்கு.. சம்மதத்தை வழங்கி.‌. நிபந்தனையோடு.. முடித்தார்.. ஜான்.. 🤓

"கண்டிப்பா மாமா.. அப்பறம்.. இஷுக் கூட தனியா பேசணும்.. நீங்க அனுமதிச்சா.. ??" என.. விக்ரம் தலையை சொறிந்து தன் மாமனாரின் அனுமதியை வேண்டி நின்றான்.. 😁😁 இளித்த நிலையில்..

ஜானிற்கு.. தன் மருமகனும்.. மாப்பிள்ளையுமான விக்ரமின் இளித்த நிலையை.. கண்டவரால்.. சிரிப்பை கட்டுப்படுத்த முடியவில்லை.. வெடித்து விட்டார்.. 😂😂
"ஹாஹாஹா.. மாப்பிள்ளை.. உங்க வருங்கால பொண்டாட்டி எப்ப வேணும்னாலும் கூட்டிட்டு போங்க.. ஆனா.. ஒன்னு.. எல்லை மீறாம இருக்கணும்.." என்ற சிரித்துக் கொண்டே.. நாசுக்காக எல்லை மீறாமல் நடந்துக் கொள்ளுங்கள்.. கூறிய விதம்.. விக்ரமை வெகுவாக ஈர்த்தது.. 🤓

"கண்டிப்பா.. என்னைய நம்பி அனுப்பறீங்க.. எப்படி இருக்காளோ.. அதே மாதிரி உங்க கிட்ட திரும்பி வருவா.. கவலை வேண்டாம்.." என விக்ரம்.. அவரின் நம்பிக்கையை.. காக்க வேண்டும் என்ற எண்ணம் பிறந்திருந்தது.. அவனிடம்.. ☺️☺️

ஜான் தன் மகளிடம்.. பார்வையை செலுத்தி.. "மாப்பிள்ளைய மாடிக்கு கூட்டிட்டு போடாம்மா.." என்று மொழிந்ததும்.. 🤓🤓

இஷானி.. தன் தலையை ஆட்டி.. தலையை குனிந்த வாக்கிலே விக்ரமிடம்.. கண்களால்.. மேலே வருமாறு சைகை செய்து விட்டு.. மாடிக்கு சென்றாள்.. 😌😌

விக்ரமும்.. இஷானியின் பின்னோடே.. சென்றான்.. 😍😍

இஷானி.. சுவற்றில் சாய்ந்து நின்ற அதே வேளை.. விக்ரம்.. தன்னிரு கைளால்.. தன் காதலியோடு.. சுவற்றில் அணைப் போட்டான்.. 😍😍

விக்ரம்.. இஷானியை காதலின் அனல் பார்வையால் வீசி.. தன்னவளை பனித்துளியாய் கரையச் செய்து கொண்டிருந்தான்..

இஷானியும்.. அவனின் பார்வையை எதிர் கொள்ள முடியாமல்.. எங்கோ பார்த்த படி.. விக்ரமின் தோளில் கைப் போட்டு.. இழுத்துக் கொண்டாள்.. 😍😍

தன்னோடு.. அணைத்து.. அவனோடு கரைந்திட.. 🥰🥰

நிமிடங்களும்.. நொடிகளும்.. தங்களின்.. வாழ்நாளில் இத்துனை அழகாக.. இனிமையாக நகருமா.. ?? என்றவனும் அவளும்.. இம்மியளவும் எண்ணவில்லை.. 😘😘

விக்ரமின் மார்பில்.. முகத்தை புதைத்து கொண்டிருந்தாள்.. வெளி வரவே கூடாது என்ற எண்ணத்தோடு..

விக்ரம்.. இஷானியை தனக்குள்ளே.. சிறைப் பிடிக்கும் முயற்சியாக மேலும் இறுக்கினான்..

நீண்ட நேரமாக.. நீண்டிருந்த அணைப்பு..

சிட்டுக்குருவிகளின் கானம்.. மெய்யிற்கு கொண்டு வந்தது.. 😁😁

இருவருக்கும் இடையில் இடைவெளி விட்டு..‌ அவர்கள்.. மாடியின் தடுப்பு சுவரில் சாய்ந்து நின்றிருந்தனர்..

இருவரும்.. ஒருவரையொருவர் பார்த்து.. அசடு வழிய இளித்து வைத்தனர்.. 😁😁

"சரி.. ஏன் ஒரு வருஷம்.. டைம் கேட்ட.. ?? நிஜமா.. அது தான்.. ரிசன்னா.. ??" என்ற இஷானிக்கு.. விக்ரமின் மொழிகளில் ஏற்பட்ட சந்தேகத்தை.. அப்படியே கேட்டாள்.. 🤔🤔

"ஹே.. நிஜமா.. அது தான் ரிசன்.. நான் சொந்த கால்ல நிக்கவே இல்ல.. அதுக்குள்ள.. லவ் பண்ணிட்டேன்.. உண்மையாவே..எனக்கு லவ் பண்ற ஐடியாவே.. இல்ல.. உன்னை மீட் பண்ற வரை.. சரி.. மெதுவா நாம பிஸ்னஸ் ஸ்டார்ட் பண்ணலாம்னு ஒரு தாட் இருந்தது.. ஷ்ரித்திக் கூட அடிக்கடி சொல்லுவான்.. பண்றா.. இப்பவே ஸ்டார்ட் பண்ணு.. டைம் சீக்கிரமா போயிடும்னு சொன்னான்.. நான்தான் கேக்கல.. இப்ப தோணுது.. முன்னாடியே ஸ்டார்ட் பண்ணிருக்கலாம்னு.. அப்படி பண்ணிருந்தா.. இந்நேரம்.. என் இஷுக் கூட கல்யாணம் நடந்து.. ம்ம்ம்ம்ம்ம்.." என விக்ரம் அசடு வழிந்து படியே.. இஷானிக்கும் தனக்கும் இருக்கும் இடைவெளியை குறைத்துக் கொண்டே.. வந்தான்‌.. 😍😍

இஷானி.. அவனின் நோக்கம் அறிந்து நகர்ந்துக் கொண்டே சென்றாள்..

விக்ரம் "இஷு.. எதுக்கு இந்த கேப்.. ??" என்று மீண்டும்.. அவளோடு ஒண்ட நினைக்க.. 😍😍

இஷானி தள்ளிப் சென்ற படியே.. "சார் தான.. உங்க பொண்ணு போன மாதிரியே திரும்பி வருவான்னு..‌ வாக்கெல்லாம் கொடுத்த.. ??" என்க.. 😜

"அது... ஆஃப் அன் ஹவர் முன்னாடி.. பாஸ்ட் இஸ் பாஸ்ட்.‌. நவ் மை டைம் இஸ் ஸ்டார்ட்.." என்றபடியே விக்ரம் நெருங்கிய நேரம்.. இஷானியும்.. கண்களை மூடி.. அவனை ஏற்கும் நேரம்..

இஷானியின் தந்தை‌ ஜான் மில்டன்.. "மாப்பிள்ளை.. சாப்பாடு ரெடி.. சாப்பிட்டுட்டு போலாம்.." என உற்சாக.. மொழிந்த படியே மாடியேறியதும்..

அவர் பார்ப்பதற்குள்.. இருவரும்.. விலகி நின்றனர்..

இஷானி விக்ரமை தள்ளி விடவும்..😳

"மாமா.. மாமா.. மாமா.. ஏம்மா.. ஏம்மா.. ??" என்று பாடலை முணுமுணுத்துக் கொண்டு.. நகர்ந்துக் கொண்டான்.. விக்ரம்.. 😜😜

"வாங்க மாப்பிள்ளை.. ??" என்று உற்சாகமாக உணவருந்த அழைத்தார்.. அவர்.. 🤓🤓

"ஹான்.. வரேன் மாமா.. நீங்க போங்க.." என்ற விக்ரம்.. கூறியதும்.. ☺️☺️

இஷானியும்.. விக்ரமோடு.. இணைந்து "ஆமாப்பா.‌.. நீங்க போங்க வந்தரேன்.." என்றதும்.. சரியென ஜானும் கீழே.. சென்றார்.. ☺️☺️

"என்ன இஷு.. இந்த மாமானோட மனசு புரிஞ்சுடுச்சா.. ?? என்ன.‌. ??" என விக்ரம் சிரித்துக் கொண்டே.‌.. இஷானியை நெருங்க.. 😜

"மண்ணாங்கட்டி.. ஆமா.‌. உன் ஃப்ரண்ட் என்ன.. பெரிய இவரா.. ?? பாவம் ஷிவு.. நேத்து எவ்ளோ கஷ்டப்பட்டிருப்பா.. ?? எனக்கு இருந்த கோபத்துக்கு.‌. அவன நல்லா கேட்டிருப்பேன்.‌. ஆனா.. ஷிவு முந்திக்கிட்டா.." என்று தன் மனக்குமுறலை முன் வைத்தாள்.. நேற்று நிகழ்ந்த நிகழ்வை மனதில் வைத்து.. 🤨🤨

"ஹ்ம்ம்ம்ம்.. ஆமா.. ஷ்ரித்திக் அப்படி பண்ணிருக்க கூடாது தான்.. எனக்கும் கோவம் வந்தது உண்மை.. பட்.. ஐ நோவ்.. ஷ்ரித்திக்கோட ஒவ்வொரு மூவ்ஸ்க்கும் அர்த்தம் இருக்கும்.. அவன புரிஞ்சுக்கறது கஷ்டம்.. அதே மாதிரி இதுக்கும் அர்த்தம் இருக்கும்னு.. நினைச்சு.. நா அமைதியா.. இருந்தேன்.." என்று ஷ்ரித்திக்கை விட்டுக் கொடுக்காமல் வெளியே சிரித்து.. உள்ளுக்குள் நெருடிய படியே.. பேசினான்.. விக்ரம்.. 😏😏

விக்ரமுள்.. ஒரு பதற்றம்.. எங்கே.. ?? தன் தேவதையே.. 👼 தன் தோழனின் நட்பை முறிக்கச் சொல்லி விடுவாளோ.. என்றே அது.. 😟😟

"ஒரு ஃப்ரண்டுக்கு அழகு எதுன்னு தெரியுமா.‌. ?? தன்னோட நண்பன் தப்பு பண்றான்னு தெரிஞ்சதும்.. தட்டி கேக்கறதும்.. அவனுக்கு புரிய வைக்க முயற்சி பண்றதும்.. ஆனா.‌. நீ இப்படியே.. அமைதியாவே இருக்கறது.. ரொம்ப தப்பு விக்கி.. ஒரு நாள் இல்லைனா.. ஒரு நாள்.. உன் அமைதி.. பெரிய தப்ப உருவாக்கும்.. ஷ்ரித்திக்கிட்ட இருந்து பெரிய வார்த்தை வெளிய வரும்.. அப்ப அந்த தப்ப சரி பண்ண ரெண்டு பேரும் ரொம்ப கஷ்டப்படுவீங்க... உன்னோட அமைதியை அப்ப நீ உடைச்சாலும்.. ஷ்ரித்திக் அத கேக்காத நிலமை வரும் போது உனக்கு தெரியும்.." என்று இஷானி.. விக்ரமின் தவறை எடுத்து கூறினாள்.. அதனால் வரும் விளைவுகளை.. குருடனின் போக்கில்.. 🤨🤨

அந்த வார்த்தைகளை தெரிந்து கூறினாளோ.. தெரியாமல் கூறினாளோ.. ?? ஆனால்.. அது உண்மையாகப் போவதையும்.. அதனால்.. ஷ்ரித்திக்கின் வாழ்வில்.. பெரும் புயல் சூறையாடுவதையும்.. அந்த பரமேஸ்வரன் மனது வைத்தால் தான் மாற்ற முடியுமோ.. ?? 🤔🤔

இஷானியின் மொழிகளில்‌.. திடுக்கிட்டு
"ஹேய்.. ஏன் டி.. இப்படியொரு சாபத்தை கொடுக்கற.. உண்மையாவே.. ஷ்ரித்திக் எந்தவொரு தப்பும் பண்ணதில்‌‌ல.. அவன் எடுக்குற முடிவெல்லாம் சரியா இருக்கும் போது.. என்னால என்ன பேச முடியும்.. ??" என்று தன் போக்கிற்கான காரணத்தை கூறியதும்.. 😟😟😰😰

"ஹான்.. நம்பிட்டே இரு.. அவன் தப்பு பண்ண மாட்டான்னு.. ஆனா.. காலம் எல்லாத்துக்கும் பதில் சொல்லும்.. எனக்கும் புரியுது.. உன் ஃப்ரண்ட் நல்லவர் தான்.. அத்துழாய்க்கு.. அவரைவிட ஒருத்தர்.. பொருத்தமா.. இருப்பாங்களான்னு கூட தெரியல.. நா அத்து கிட்ட சொல்லிட்டே இருப்பேன்.. உனக்கு ஷ்ரித்திக் விட வேறொருத்தர் கிடைக்க மாட்டாருன்னு.. பட்.. சம்டைம்ஸ்.. ஷ்ரித்திக்கோட செயல்.. எனக்கு ஒரு வித பயத்தை குடுக்குது.. எங்க.. இதனால ஷிவாக்ஷி பாதிக்கப் படுவாளோன்னு.. நீ கேப்ப.. ?? ஒரு ஃப்ரண்டா.. உனக்கு எதுக்கு அவ்ளோ அக்கரை அப்படின்னு.. ஆனா.. உனக்கு.. தெரியாது.. அவ சின்ன வயசுல இருந்து பட்ட கஷ்டத்தை நான் பாத்திருக்கேன்.. பாசம் பற்றி தெரியாமலே வளந்துட்டா.. அட்லீஸ்ட் என்னால முடிஞ்ச அளவுக்கு அவள சிரிக்க வைப்பேன்.. அவக் கூடயே இருக்கிற மாதிரி தான் நான் பாத்துப்பேன்.. என்னால.. அவ கஷ்டப்படறத தாங்கிக்க முடியாது.‌. கிட்டத்தட்ட அத்து.. எனக்கொரு அம்மா மாதிரி.. முதல்ல அத்து.. அப்புறம் தான் எல்லாரும்.. உன்னையும் சேத்து தான்.." என்று இஷானி.. விக்ரமிடம்.. தன் மனதுள் இருந்த அச்சத்தையும்.. தனக்கும் ஷிவாக்ஷிக்கும் இடையில் இருக்கும் உறவை கூறிய படியே.. திரும்பி மாடிப் படியில் இறங்கத் தயாரானாள்.. 😏😏

விக்ரமிற்கு.. ஏனோ.. இஷானியின்.. வார்த்தைகள்.. கலக்கத்தை கொடுத்தது.. அந்த வார்த்தைகளே ரிங்காரமிட்டது.. 😟😟

இஷானி.. திரும்பி.. விக்ரமை நோக்கி.. "கவலப்படாத.. உனக்கும் உன் ஃப்ரண்ட்கும் மிடில்ல இருக்கிற ஃப்ரண்ட்சிப்ப கட் பண்ண சொல்ற அளவுக்கு.. நா சேடிஸ்ட் இல்ல.. அது உன்னால முடியாது.. ஆனா.. ஜாக்கிரதையா இரு.‌. தட்ஸ் இட்.." 🤨🤨

விக்ரம்.. ஆச்சரியம் கலந்த அதிர்வு.. அடைந்தான்.. 'தன்னுள் இருந்த நெருடலை சரியாக கணித்து விட்டாளே..' என்று தான்.. 😯

பெரு மூச்சு விட்டவள்.. "சரி சாப்பிட வா.." என்று விட்டு கீழே சென்றாள்.. இஷானி.. ☺️

விக்ரமும்.. அவர்களோடு.. கலகலப்பாக உண்டு முடித்து‌‌.‌.. வெளியே தன் மகிழுந்தில் பயணித்த போதும்.. இஷானி உதிர்த்த அவ்வார்த்தைகள்.. அவனை எதிலும் கவனம் செலுத்த விடாமல் தடுத்தது..

மகிழுந்தை.. சாலையோரத்தில் நிறுத்தி.. வெளியே வந்து நின்றவன்.. மகிழுந்தின் சக்கரத்தை எட்டி உதைத்தான்.. தன்னை நிலைப்படுத்திக் கொள்ள.. முயற்சித்தான்..😥😥

ஓரளவுக்கு சாத்தியமானது.. விக்ரமிற்கு.. 'ஏன் இஷானி.. இப்படியொரு வார்த்தையை இறைத்தாள்.. மனம் அலைப்பாய்கிறதே.. ??? ஒரு மாதம் மட்டுமாவது.. தான் ஷ்ரித்திக்குடன்.. இருப்பதே.. சிறந்தது.. அப்பொழுதாவது.. முடிந்த மட்டும்.. ஷ்ரித்திக்.. தவறு செய்ய மாட்டான்.. ஆனால்.. அறியாமல் செய்யும் தவறுகளையும்.. தன் நண்பனையும்.. திருத்த வேண்டும்..' என்று மனம் யோசனை கொடுத்த பின்பே.. விக்ரமால் மூச்சை நிம்மதியாய் விட முடிந்தது.. 🙂

தன் நண்பனை நோக்கி நகர்ந்த பாதங்களை இழுத்துக் கொண்டார்.. விக்ரமின் தந்தை.. ரிஷிநந்தன்..

அவசர வேலை வந்து விட்டதாகவும்.. விரைவாக.. அலுவலகத்துக்கு வர வேண்டும் என்ற ஆணையோடு.. கைப்பேசியை அணைத்தார்..

அப்போது‌‌.. தோன்றியது.. "ச்சே.. ஷ்ரித்திக் மாதிரி.. சொந்த தொழில்னா.. நம்ம இஷ்டத்துக்கு இருந்திருக்கலாம்.. ம்ப்ச்.. என் அப்பனோட தொழில் ஆச்சே.." என்று விக்ரம் முதல் முறையாக.. தன்னுடைய சோம்பேறி தனத்தை எண்ணி சலித்துக் கொண்டான்.. 😕

இஷானிக்கும் அதே நிலை...

'ஏன்.. நான் அப்படியொரு மொழிகளை.. அவனின் செவிகளில் நிறைத்தேன்.. விக்கி ஆசையாக உரையாடிக் கொண்டிருந்தான்.. அவனின்.. உற்சாகத்தை பறித்து வைத்தாற் போல் ஆயிற்றே..' என்று வருத்தத்தோடு.. யோசனையாய் நடந்தாள்.. இஷானி.. அவளின் அறையில்.. அங்குமிங்கும் அலைந்து கொண்டிருந்தாள்.. 😟😟

அப்போது.‌.. சரியாக அவளின் அலைபேசியும்.. 'என்னை பாரேன்..' என்று கூவியதும்..

இஷானி.. தன்னுடைய அலைபேசியில் மிளிர்ந்த.. அத்துழாய்யின் (ஷிவாக்ஷியின்).. பெயரை.. கண்டதும்.. உள்ளத்தில்.. பரவிக் கொண்டிருந்த.. வருத்தம் அகன்று.. இன்ப உணர்வு சுரந்தது.. அவளுக்குள்.. 😃

"ஹேய்.. அத்து.. என்ன மேடம்.. எனக்கு போன் பண்ணி இருக்கீங்க.. ?? இல்ல ஏதாவது.. பிரச்சினைனா மட்டுந்தான்.. நானெல்லாம் உன் கண்ணுக்கு தெரிவேனே.. அதான் கேட்டேன்.." என்று.. வழக்கம் போல இஷானி.. ஷிவாக்ஷியை பேச விடாமல்.‌. அவளே பேசிக் கொண்டிருந்தாள்.. ☺️☺️

ஷிவாக்ஷி.. தங்களின் அறையின் பால்கனியில் இருந்த சோஃபாவில் அமர்ந்து..

"ஆமா.. உன்னாண்ட தான் வருவேன்.. நேக்கு வேற யார் இருக்கா... ??" என ஷிவாக்ஷி.. மொழிந்ததில்.. தன் தோழி என்ற உரிமையிருந்தது‌‌.‌. ☺️☺️

"சரி.. ஏய்.. இந்த பிராமின் ஸ்லாங்க விடலாம்ல.. நீ.. இன்னும்.. அந்த அதிர்ச்சியில இருந்து வரலன்னு.. உன்னோட இந்த ஸ்லாங்கே சொல்லுது‌‌.. ப்ளீஸ்.." என்று இஷானி.. கெஞ்சும் குரலில். இறைத்தாள்.. 😕😕

"என் வாழ்க்கையில நேக்கே.‌. தெரியாம ஏதேதோ.. அதிர்ச்சி எல்லாம் நடக்கறது.. ?? நீ எந்த அதிர்ச்சிய சொல்லுற.. ?? நேத்துக் கூட ஒன்னு நடந்தது.. ?? ம்ப்ச்.. நேக்கு எதுவுமே.. புரியல.. இஷா.. ??" என ஷிவாக்ஷி விரக்தியாகவும்.. அதே வேளை பதற்றத்தோடு மொழிந்தாள்.. கசந்த புன்னகையோடு.. 😏😏

நேற்று.. வித்யுத்தின் செயல்களை பற்றி கூறுகிறாள்.. என நினைத்து இஷானி..
"ஹேய்.. நீ தான்.. சொல்லுவியே.. நடக்கறதெல்லாம்.. நல்லதுக்கு தான்.. இப்ப நீ இப்படி சொன்னா என்ன அர்த்தம்.." ஷிவாக்ஷிக்கு ஆறுதல் வார்த்தைகளை பொழிந்தாள்.. 🙂🙂

ஆனால்.. ஷிவாக்ஷி கூறியதென்னவோ.. ஷ்ரித்திக் தெரிவித்த காதலை நினைவு வைத்தே..

"சரி.. அதெதுக்கு.. இப்ப.. ஆத்துல அப்பா.. எப்படி இருக்கா.. ?? நன்னா இருக்காளா.. ??" என்றாள்.. ஷிவாக்ஷி.. பேச்சை மாற்றும் பொருட்டு.. இஷானியின் தந்தையின் நலனை விசாரிக்க வேண்டும்.. என்ற எண்ணமும் இருந்தது.. அவளிடம்..

"அவருக்கென்ன நல்லா தான் இருக்காரு.. அப்பறம்.. நான் உன்கிட்ட ஒரு விசயம் சொல்லனும்.. அது.. விக்கி இருக்கான்ல.." என இஷானி.. தன்னவன்.. வந்ததை பற்றி உரைக்க எண்ணினாள்.. ☺️

ஆனால்.. ஷிவாக்ஷி.. நடுவில் நுழைந்து.. "இரு.. இரு.. முதல்ல நா சொல்லிடறேன்.. அப்புறம் தான்.. நீ.. நா ஓப்பனா.. பேசப் போறேன்.. தப்பா நினைக்கக் கூடாது.." என தடையிட்டாள்..

இஷானி... "நா.. எண்ணிக்கு டி உன்ன தப்பா நினைச்சேன்.. நீ சொல்லு.." என்றவளும்.. ஷிவாக்ஷி கூறட்டும் என வழிவிட்டாள்.. 🤨🤔

இஷானியின் மொழியில்.. தன் நட்பு அப்படி என்ன கூறிவிட போகிறாள்.. ?? என்று.. விட்டேற்றியாக இருந்தாள் இஷானி.. 🤔🤔

நேற்று ஷ்ரித்திக்.. தன்னிடம் காதலை தெரிவித்த விதத்தையும்.. அதை தான்.. நம்பாததையும்.. மீண்டும் காலை வேளையில்.. ஷ்ரித்திக்.. காதலை நினைவு கூர்ந்து கேட்டதும்.. அப்போது தான்.. அவளுக்கு புரிந்தது.. என்றனைத்தையும்.. மொழிந்தாள்.. 😕😕

"நா முதல்ல.. அவா.. விளையாடறான்னு.. நினைக்கறச்ச.. அவாளே.. வந்து.. நா லவ் பண்றேன்.. அப்படி இப்படி ‌சொன்னா.. நேக்கு தான் விளங்கல.. அப்புறம்.. அவா.. என்னை கட்டி எல்லாம்.. பிடிக்கறா.. இறுக்காம.. நேக்கு இடுப்பு தான்..‌ ஒடியல.." என்று ஷிவாக்ஷி.. குற்றப் பத்திரிகை போலே.. அனைத்தும்.. கூறிய விதம்.. 😒😒

இஷானிக்கு.‌. சிரிப்பை கட்டுபடுத்த.. பெரும் திட்டாமாகி போனது.. "ஏய்.. லூசு.. ஐ யம் ஹாப்பி ஃபார் யூ.. நல்லது தான.. ?? ஆமா நீ என்ன சொன்ன.. ?? கட்டிப் பிடிக்கறதெல்லாம்.. எதுக்கு டி சொல்ற.. ??" என்றாள்.. சிரிப்பை அடக்கிய நிலையில்.. 🤭🤭

இஷானி.. முதலில் ஏனோ.. தானோ என்று கேட்டவளின்.. செவிகளில் விழுந்த.. அத்தனை இனிமையாய் இருந்தது.. இனி அவளை பற்றி கவலை தேவையில்லை என நினைத்துக் கொண்டாள்.. ☺️☺️

"நா என்ன சொல்லுவேன்.. உன்னாண்ட சொன்னதை தான்.. அவாக்கிட்டயும் சொன்னேன்.. அதுவுமில்லாம.. நா.. உன்னாண்ட எதையுமே மறைச்சதில்ல.. அதான்.." என்ற ஷிவாக்ஷி.. இஷானி.. மனதிலிருந்ததை அப்படியே கூறினாள்.. 🙂🙂

"அட லூசு.. ஏன் டி.. ?? இப்படி சொன்ன.. ?? இப்ப தான் உன்னை நினைச்சு சந்தோஷப் பட்டேன்.. அதுல தண்ணி தெளிச்சு.. புஸ்ஸாக்கிட்ட.. ?? இங்க பாரு.. அத்து‌‌.. உனக்கொரு.. நல்ல வாழ்க்கை கிடைச்சிருக்கு.. அத மிஸ் பண்ணாத.." என வழக்கம் போலே.. தன் நட்பிற்கு அறிவுரை வழங்கினாள்.. இஷானி.. 🤨🤨

"அதெல்லாம் வேண்டா.. இஷா.. அவா எங்க நா எங்க.. ?? இதெல்லாம் ஒத்து வராது.." என்று ஷிவாக்ஷி.. மறுப்பாக மொழிந்தாள்.. 😟😟

இஷானியின் பொறுமையும் பறந்து விட்டது.. அவளுக்கு.. அவளுள் இருக்கும் காதலை உணர செய்யும் வேலையில் இறங்கி விட்டாள்.. 😠😠

"ஏய்.. அத்து.‌. என் வாய்ல நல்லா வந்துரும்.. உனக்கு இன்னுமா.. புரியல.. நீ உன் புருஷனை லவ் பண்ற டி.." என்று கோபத்தில் அலறினாள்.. இஷானி.. 😠😠

இஷானியின் மொழிகள்.. செவியில் நிறைந்த மாத்திரமே.‌. அவளுக்கு தூக்கி வாரி போட்டது போலானது.. "ஹேய்.. என்ன நீ.. ?? இல்லாததெல்லாம் சொல்லிண்டு.. அதெல்லாம் கிடையாது.. அந்த மாதிரி.. எல்லாம்.‌. சொல்லாத.. நேக்கு ஹார்ட் பீட் எகறது.." என பதற்றத்தோடும்.. அச்சத்தோடும் தந்தியடிக்க.. வந்து விழுந்தது.. ஷிவாக்ஷியின் வார்த்தைகள்.. 😰😰

"என்ன அதெல்லாம் கிடையாதா.. ?? சரி.. யாருன்னே தெரியாத ஷ்ரித்திக்கிட்ட.. எப்படி கழுத்த நீட்டின.. ?? இதே.. விக்ரம்.. அம்மாவோ.. இல்ல வேற யாராவது.. இந்த மாதிரி பிளாக் மெயில் பண்ணி.. கேட்டா.. ?? போய்.. கழுத்தை நீட்டிருப்பியா.. ?? தாலிய கட்டுன்னு.." என்று அனல் பறக்க.. தன்னுடைய காதலனை இணைத்தும் கேட்டாள்.. இஷானி.. 😠😠

அந்த பேச்சு.. இஷானிக்கு.. சற்றும் பிடிக்கவில்லை.. ஆயினும்.. புரிய வைக்கும் முயற்சியாக.. வினவினாள்..

இஷானியின் எண்ணத்தை பொய்யாகவில்லை..

ஷிவாக்ஷிக்கு.. அந்த பேச்சு.. அவ்வளவு உவர்ப்பாக இருந்தது.‌. 'என்ன இப்படியெல்லாம் பேசுகிறாள்.. ??' ஏதோ.. அவளுக்கு அசூசையாக தெரிந்தது.. அக்கேள்வி..

"என்ன.. இஷா.. ?? அஷடாட்டம் பேசிண்டு இருக்கே.. ?? இந்த மாதிரியெல்லாம் பேசாத.." என ஷிவாக்ஷி.. மறுமொழி தருவதை மறுத்தாள்.. 😣😣

இஷானி.. "இந்த டகால்டி வேலையெல்லாம் என்கிட்ட வேணாம்.. பதில சொல்லு.. இதோ.‌.‌ இப்ப நீயே சொன்ன.. அவர் என்னை கட்டிப் பிடிக்கிறாரு.‌. இறுக்கமா.. கழுத்தில முகத்தை வைக்கறாரு.. அப்படி இப்படின்னு சொன்ன.. ?? அந்த இடத்தில வித்யுத்.. இருந்திருந்.." என்றவள்.. சொல்லிக் கூட முடித்திருக்கவில்லை..

ஷிவாக்ஷிக்கு.. இஷானி என்ன கூற வருகிறாள்.. என புரிப்பட்ட மாத்திரம்.‌. "ஏய்.. நிறுத்திரு.. இஷா.. ?? கிருஷ்ணா.." என்று கைப்பேசியில் அலறியே விட்டாள்.. 😠😰😰

சீற்றத்தை விட.. இஷானியின் மொழிகளை.‌. அவளால் கற்பனை கூட செய்திருக்க முடியவில்லை.‌. அத்துனை அருவெருப்பு அவளில் முகத்தில்.. அப்போது பார்த்திருக்கலாம்..

உலகில் படைக்கப் பட்ட அருவெருப்பான.. அனைத்தும்.. அவள் மேல் இறைத்ததை போல.. அசூசையாக உணர்ந்தாள்.. 🤢🤢

"இப்ப தெரியுதா.. ?? நீ உன் புருஷனை லவ் பண்றேன்னு.. உன்னை கட்டிப் பிடிச்சதுக்கு.‌.. நீ அவர தள்ளிவிட்டு.‌. உன் கோபத்தை காமிச்சியா.. ?? இல்லையே.. என்கிட்ட தான சொல்லிட்டு இருக்க.. இதுலயே.. உனக்கு புரியலையா.. ??" என்று இஷானி.. புரிய வைக்க அத்துனை முயற்சியையும் சரியாகவே செயல் படுத்தினாள்.. 😠😠

ஆனால்.. ஷிவாக்ஷிக்கு புரிந்தும்.. புரியாததை போல.. இருந்தது..

அவளும் கிட்டத்தட்ட தன் மனதிற்கான விடையை நெருங்கிக் கொண்டிருந்தாள்.. இஷானியின் வார்த்தைகள்.. ஷிவாக்ஷியை இழுத்துச் சென்றது..

இஷானியின் சொற்களை அசைப் போட்டவளுக்கு.. 'ஒரு வேளை.. நான் காதலிக்க..' என்ற வார்த்தையை எண்ணும் போதே.‌. இதயத் துடிப்பு.. நொடிக்கு பல முறை அதிகரித்தே சென்றது.. அப்போது.‌. அவளின் அறிவும் விளித்துக் கொண்டது..

'வேண்டாம்.. ஷிவாக்ஷி.. இவையாவும்.. உனக்கு புரியாத நிலையிலே இருக்கட்டும்.. இந்த காதல்  வலையில் மாட்டிக் கொண்டால்.‌. மீளவே முடியாது போய்விடும்..' என்ற.. ஷிவாக்ஷியின் அறிவு.. அவளின் மண்டையில் தட்டி இடித்து உரைக்கவும்.. 😰😰😰

அவளின்.. மனம் செல்லும் திசையை அடைத்துக் கொண்டாள்.. ஷிவாக்ஷி..

இஷானி.. 'அவளுடைய காதலை உணர்ந்திருப்பாள்.‌. இந்நேரம்.. தன்னிடம் அவள் கூறுவதற்கு தயங்குகிறாளோ..‌.' என்ற நினைப்பில்.. மறுப்பக்க.. அழைப்பில் காத்திருந்தாள்.‌.

"இ.. இ.. ஷா.. இஷா.. நா.. நா.... அப்.. அப்பு...றம்.‌. கூ......ப்படறேன்.‌. வை..ச்.." என்றவள் சொல்லி முடிப்பதற்குள்ளே.. ஷிவாக்ஷி.. இஷானியின் தொடர்பை துண்டித்தாள்.. 😰😰

இஷானிக்கு.. ஷிவாக்ஷியின் பதற்றமான மொழிகள்.. 'அவளுக்கும் அவளுடைய காதலை உணர.. சிறிது அவகாசம் கொடுக்க வேண்டும்.. யோசிக்கட்டும்.. அவள் யோசிக்க ஆரம்பித்து விட்டாள்.. இனி அவளுக்கு தானாய்.. அனைத்தும் விளங்கும்..' என்று நினைத்து ஷிவாக்ஷியின் காதலை உணர வைத்த திருப்தியில்.. .‌.. அமைதியானாள்.. 🙂🙂

ஆனால்.. ஷிவாக்ஷி.. அவளுக்கு நேர்மாறான மனநிலையில்.. தவித்திருந்தாள்..

இஷானி எடுத்துரைத்த அனைத்தும்.. ஷிவாக்ஷியின்.. இதயத் துடிப்பை அதிகரிக்கவே செய்தது.. மூச்சு முட்டுவதை போலே.. தவித்தாள்..

தன்னை சமன் செய்யும் அனைத்து முயற்சியும் தோல்வியை தழுவின.. ஷிவாக்ஷிக்கு.. 😰😰

அப்போது தான்.. அலுவலக வேலையை முடித்து விட்டு.‌. நிம்மதியாக.. உற்சாகத்தோடு தன் அறைக்குள்.. நுழைந்தான்.. ஷ்ரித்திக்.. 😎😎

உள்ளே வந்த ஷ்ரித்திக்கின் நயனங்களில்.. பால்கனியிலிருந்த சோஃபாவில் கையை ஊன்றி அமர்ந்து.. மூச்சுக்காக தவிக்கும்.. ஷிவாக்ஷியை படவும்.. அதிர்வில்.. துடிதுடித்து போனான்.. ஷ்ரித்திக்.. 😰😰

உடனே.. ஷ்ரித்திக் அருகிலிருந்த குவளையில் தண்ணீரை நிரப்பி.. அவளுக்கு கீழே மண்டியிட்டு அமர்ந்து.. குவளையில் இருந்த தண்ணீரை அவளுக்கு கொடுத்தான்..

ஷிவாக்ஷியும்.. மறுக்காமல் தண்ணீரை பெற்று குடிக்க.‌. வேகவேகமாக.. தண்ணீரை குடித்ததால்.‌. புரையேறிது.. நாசியிலும் நீர் ஏறிவிட்டது‌‌.. பலமாகவே.. இரும்மினாள்.. 🤧

ஷிவாக்ஷியின் கருநீல விழிகள்.. ரத்தமென சிவந்து போனது.. ஏற்கனவே சிவந்திருக்கும்.. கண்ணமும் நாசியும்.. இன்னும் சிவந்து போனது.. இதழ்கள்  நடுங்கின...

ஷ்ரித்திக் பதறிப் போனான்.. அவனின் கண்களிலும்.. கண்ணீர் துளிகள்.. சுரந்து விட்டது.. தலையை தட்டி.. அவளின் நெஞ்சை நீவிக் கொடுத்தான்..

ஷிவாக்ஷி இருந்த நிலையில்.. அதெல்லாம் கருத்தில் பதியவே இல்லை..

சிறிது தியாளத்திற்கு பிறகே.. அவளால்.. சீராய் மூச்சை இழுத்து விட முடிந்தது.. 😌😌

அப்போது தான் கவனித்தாள்.. ஷ்ரித்திக்கின் நேத்திரத்திலும்‌‌.. சில துளிகளை கண்டவள்.. வெகுவாக அதிர்ந்தாள்.. 'இந்த கண்ணீர் துளிகள் தனக்காக துளித்தவையா.. ?? தன் மீது.. இத்தனை காதலா.. இவருக்கு.. ?? ஒரு உயர் தோற்ற மனிதன்.. தனக்காக கண்ணீர்.. ?? எனக்காக.. கண்ணீர் சிந்தும் அளவிற்கு ஆட்கள் இருக்கிறார்களா.. ??' என்றெண்ணிக் கொண்டது.. அவள் மனம்..

ஷிவாக்ஷியின் பூக்கரம்.. அந்த கண்ணீரை எப்போதோ.. தொட்டு விட்டது.. தன்னிச்சையாக.. 😌😌😌

ஷிவாக்ஷியின் இச்செயல்.. இதழோர குறு நகையை உருவாக்கியது.. ஷ்ரித்திக்கிற்கு..

ஷ்ரித்திக்கே துவங்கினான்.. "எதையாவது நினைச்சு மனச போட்டு.. குழப்பிக்கற.. ?? ஹ்ம்ம்.. ஏன்.. புஜ்ஜு.. நமக்கு நடந்த கல்யாணத்தை நினைச்சா.. ?? இல்ல நேத்து வித்யுத் நடந்துக்கிட்டதுக்கா.. ?? இல்ல.. நா ப்ரபோஸ் பண்ணதுக்கா.. ?? என்ன நினைச்ச.. ?? அதெல்லாம் நீ சொல்லனும்னு நினைச்சா மட்டும்.. புரியுதா.. நினைச்சா மட்டும்.. சொல்லு.. மத்தபடி ஒன்னுமில்ல.. மனசு ஒரு விட்டில் பூச்சி மாதிரி... இந்த யோசனை, குழப்பம் இதெல்லாம்.. சிலந்தி வலை மாதிரி.. அதுல இருந்து வெளி வர நினைக்கனுமே தவிர.. பயப்பட வேண்டாம்.. உன்கிட்ட தைரியம் இருக்கு.. ஆனா அதே அளவு.. பயம் கூச்சமும் இருக்கு.. என்ன நடந்தாலும்.. நா உன் கூடவே இருப்பேன்.. உனக்கு எதுவும் ஆக விட மாட்டேன்.." என்று ஷ்ரித்திக்.. ஷிவாக்ஷியின் கைகளை மென்மையாக பற்றிக் கொண்டு.. அவளுக்கு தான் உன்னுடன் எக்கணமாயினும் துணை நிற்பேன் என ஷ்ரித்திக் கூறியதும்..

ஏனென்றே அறியாமல்.. ஷிவாக்ஷியின் மனதில் நிம்மதி வந்து குடியேறியது.. இவ்வளவு நேரம் முடிச்சுகள் இருந்த வில் போன்ற புருவம்.‌. முடிச்சிகளை அவிழ்த்தது‌‌.. ஷ்ரித்திக்கின் மொழிகள்..

ஷிவாக்ஷியின் கையில் இருந்த.. கீபேட் மொபைலை பார்த்தவன்.. அதை அவளிடம் இருந்து பெற்று.. அதில் இருந்த சிம் கார்டை.. தன்னிடம் இருந்த ஆப்பிள் ஐ போனில் போட்டு.. ஷிவாக்ஷியிடம் நீட்டினான்..

ஷிவாக்ஷி அர்த்தம் புரியாத பார்வையாக நோக்கியவளை..

"மேடம்.. புது போன் தான்.. உனக்காக வாங்கிட்டு வந்தேன்.. அந்த கீபேட் போன் ஆ ஊன்னா.. சார்ஜ் நின்றுதுன்னு.. சொன்னேல்ல அதான்.. இத வைச்சுக்கோ.." என்று ஷிவாக்ஷியின் பார்வைக்கு பதிலளித்து.. விட்டு.. ஷ்ரித்திக் நீட்டவும்.. 😎

"இல்ல.. வேண்டா.." என்று மறுத்தவளின் கைகளில் திணித்தான்.. ஷ்ரித்திக்..

அவளின் கீபேட் மொபலையும் அவன் எடுத்துக் கொண்டான்..

ஷிவாக்ஷி.. பாவம் போல பார்த்து வைக்க.. சாதாரணமாகவே கரைபவன்.. இப்போது.. உருகிக் கொண்டிருந்தான்.. அவள் பார்வையின் அழகில்.. 😍😍

ஷ்ரித்திக்..
"இதுக்கெல்லாம்.. நா அசைய மாட்டேன்... யூஸ் பண்ணு..." என்றதும்.. 😎

ஷிவாக்ஷி வேறு வழியின்றி.. வாங்கிக் கொண்டாள்..😕

ஷிவாக்ஷியின் பார்வையில் ஷ்ரித்திக்.. வெகு நேரமாக.. தன்முன் மண்டியிட்டு.. அமர்ந்திருப்பது.. இப்போது தான் பட்டது..😕😕

பதறிப்போய் எழுந்து நின்றாள்..

ஷிவாக்ஷி.. குளித்துவிட்டு மெல்லிய புடவை ஒன்றை அணிந்து.. சில மணி நேரங்களே ஆனது..

அவளின் மெல்லிடை.. அவளின் ரகசியழகு அவனுக்கு அப்படியே விருந்தானது..

"என் முன்னாடி இப்படி மண்டி போட்டு இருக்கேளே.. எதிர்ல உக்காரலாமொன்னோ.. எந்திரிச்சு நில்லுங்கோ.." என்ற கண்டிப்பாக ஷிவாக்ஷியின் மொழிகள்.. அவனின் செவிகளை அடைந்திருக்குமா.. ?? என்பதே.. சந்தேகம்.‌.

ஷ்ரித்திக்கிற்கு.. அப்படியே.. அவளின் இடையில்.. தன் முகத்தை புதைத்து.. ஸ்பரிசத்தையும், சுகந்தத்தையும்.. தெரிந்துக் கொள்ள.. அவனின்‌ இருக்கரங்களும்.. பரபரக்க.. அவனின் உள்ளமும் படபடத்தது.. 😍😍🤩🤩

ஆனால்.. அனைத்தையும் கட்டுக்குள் கொண்டு வர பிரம்ம பிரயத்தனம்.. செய்ய வேண்டியதாய் இருந்தது.. ஷ்ரித்திக்கிற்கு..

அவளுடைய காதலின்றி அவ்வாறு செய்தால்.. தவறாகவே புலப்படும்.. அவளின் நயனங்களில்.. என்றே.. தன்னை கட்டுக்குள் கொண்டு வந்தான்... ஷ்ரித்திக்..

ஷ்ரித்திக்.. தன் நேத்திரத்தை வேறு புறம் சுழல விட்டு..
அவளின்.. பஞ்சுக் கரத்தை பற்றி இழுத்து.. ஷிவாக்ஷியை அமரச் செய்தான்.. ஷ்ரித்திக்.. 😌

அப்போது.. தான்.. ஷ்ரித்திக்கும்.. பெருமூச்சுடன் அமைதியடைந்தான்..

"எனக்கொன்னும் இல்ல.. முதல்ல நீ உக்காரு.. இந்த போன்ன முதல்ல யூஸ் பண்ணு.." என்றபடியே.. அவளருகே வந்தமர்ந்தான்.. ஷ்ரித்திக்..

ஷிவாக்ஷி அந்த ஐபோனை திருப்பி திருப்பி.. பார்த்தாளே தவிர.. அதை எப்படி பிரயோகிக்க வேண்டும்.. என்று தெரியவில்லை..

ஷ்ரித்திக்.. தன்னையே பார்ப்பதை புரிந்து... ஷ்ரித்திக்கை பார்த்து.. தன்‌ அத்தனை பற்களையும் காண்பித்து.. இளித்து வைத்தாள்.. 😁😁😁

ஷிவாக்ஷியின் இந்த நகையை கண்டு.. அவளின் தோளில் கைப் போட்டு.. பக்கென்று சிரித்தான்..

ஷிவாக்ஷி.. ஷ்ரித்திக்கின் புன்னகையை ஆழ்ந்து ரசித்தாள்.. 🤩🤩

ஷிவாக்ஷி.. முதன் முறையாக.. மிக அருகில்.. அவனின் மலர்ச்சியை காண்கிறாள்..

ஷ்ரித்திக்.. அவள் கையிலிருந்த.. ஐ போனை.. எப்படியெல்லாம் பயன்படுத்தலாம் என்று அனைத்தையும் கூறினான்..

"நேக்கு.. இது அவசியம் தானா.. ??" என்று ஷிவாக்ஷி.. கையில் இருந்த.. ஐ போனை காண்பித்து கேட்கவும்.. 😕

"அவசியம் தான்.." என்று ஷ்ரித்திக்.. எழுந்து உடையை மாற்றச் சென்றான்..

ஷிவாக்ஷிக்கு இவையனைத்தும்.. மூச்சை அடைப்பது போல் தான் இருந்தது.. 'ஏன்.. ?? எனக்கு இவையனைத்தும் நடைப் பெற வேண்டும்.. ?? கிருஷ்ணா.. முடிந்தவரை இதை தவிர்க்கவே நான் நினைக்கிறேன்.. என்னோடு துணையாக இருக்க வேண்டுகிறேன்..' என்றவள்.. இஷ்ட தெய்வத்தொடு வேண்டுதலை முன் வைத்தாள்.. 😕😟🤗 அவள் வரைந்து வைத்திருந்த.. கோவிந்தன் முன்னிலையில்..

வாசுதேவனோ.. 'நிகழ்பவை அனைத்தும் நல்லவைக்கே..' என சொல்கிறார்.. அவருடைய.. தெய்வீக சிரிப்பால்.. 😇😇

கருமையை விலக்கவே.. பிறை நிலவு.. சிறிதளவு‌‌.. ப்ராகசத்தை.. அண்டத்திற்கு வழங்கி..
இரவு வேளை.. என்று உணர்த்தியது..

ஷ்ரித்திக்.. மெத்தையில் ஒரு ஒரத்தில்.. மடிக்கணினியோடு.. அமர்ந்து‌.. வேலையில் மூழ்கி இருந்தான்... 😎😎

ஷிவாக்ஷி.. இரவு உடைக்கு மாறி.. ஷ்ரித்திக்கின் அருகே வந்து நின்றாள்..

ஷ்ரித்திக்.. என்ன.. என்பதை போல.. ஷிவாக்ஷியை பார்த்தான்.. 🤨

"அது.. நமக்கு நடந்த கலியாணத்துக்கு அப்புறம்.. அம்மாவாண்ட நீங்க.. பேசி நா பாக்கல.. ஏன் பேசாம இருக்கேள்னு.. நா கேக்க மாட்டேன்.. நேக்கு தெரியும்.. அம்மா.. மணமேடையில என்னை அழைச்சிட்டு வந்தது.. அதுக்கப்புறம் நேக்கு நடந்தத மனசுல வைச்சிண்டு தான் இப்படி பண்றேள்னு.. ஆனா.. சூழ்நிலை அப்படி அமைஞ்சுடுத்து.. என்ன பண்றது.. ?? அந்த நாழில நா கூட தான் மணமேடைக்கு வந்து தப்பு ம்ப்ச்.. 
அதுக்காக.. அவா மேல கோபப்படறது.. நேக்கு சரியப்படல.. அவாளோட முகத்தை பாக்க கஷ்டமா இருக்கறது.. பேசிருங்கோளேன்.." என கெஞ்சுவதை போல.. அனைத்தும்.. ஷ்ரித்திக் யோசிப்பதை பார்த்து.. புரிய வைத்து விட்டதாக நினைத்து அமைதியானாள்.. 🙂🙂

ஷ்ரித்திக்கிற்கும்.. அது புரிந்தே தான் இருந்தது.. தன் மீதுள்ள கோபத்தை.. தன் தாயின் மீது செலுத்துவதில்.. தவறென்று.. அவனுக்கும் தெரியும்..

உண்மையில்.. ஷ்ரித்திக்கிற்கு.. தன் மீது தான் கோபம்.. ஆனால்.. தன் தாயை.. அத்துனை பேரின் முன்பு அவமதித்தது.. அவனுக்கு குற்ற உணர்வாகி போனது..

குற்ற உணர்வில்.. தன் தாயை நேராக காண முடியாது.. தவித்தவன்.. கோபம் என்ற முகமூடியை அணிந்துக் கொண்டான்..

யாருமறிந்து இருக்கவில்லை.. என நினைத்தவனுக்கு.. ஷிவாக்ஷிக்கு தெரிந்தது.. கொஞ்சம் அதிர்வு தான்.. அதை நினைத்துக் கொண்டே.. அவளை காண..

ஷிவாக்ஷி.. அமைதியாய்.. உறக்கத்தின் பிடியில் ஆழ்ந்துவிட்டாள்.. 😴😴

அவளை பார்த்துக் கொண்டே.. உறக்கத்தை தழுவினாள்..

ஆகாயமெனும்.. சிம்மாசனத்தில்.. ஜம்பமாய் வந்து அமர்ந்த பகலோன்.. தன் ஆட்சியை.. ஒளியின் மூலம் வாரி வழங்க தொடங்கினான்.. 🌞🌞

இளஞ்சிவப்பு நிறத்தில் புடவையை அணிந்து.. அதற்கு ஏற்றார்.. போல தங்க நிற ரவிக்கை அணிந்து.. நீண்ட கருங்கூந்தலை.. க்ளிப்பில் அடக்கி.. முதுகில் படற செய்திருந்தாள்.. ஷிவாக்ஷி..

காலை வேளையில்.. பரபரப்பாக.. உற்சாகத்துடன் தயாராகிக் கொண்டிருந்தாள்..

இருக்காதா.. ?? முதன்முறையாக.. அவளுக்கு வேலை கிடைத்த உற்சாகம்.. அவளை தொற்றிக் கொண்டிருக்கிறதே..

விரைவாக உணவை உண்டு முடித்தவளிடம்..

இந்திரகவி.. தன் மருமகளிடம்.."அம்மா.. ஷிவு.. இந்தா.. புலாவ் பண்ணிருக்கேன்.. டைமுக்கு சாப்பிட்ரு.. வேலை வேலைன்னு இருக்காதா.." என்றபடியே.. அவளுடைய.. கைப்பையில் வைத்தார்.. அவளின் மாமியார்.. 🙂🙂

"சரிம்மா.. நீங்களும்.. வேளைக்கு சாப்டுருங்கோ.." என்று பதில் மொழியை உதிர்த்தாள்.. 🙂🙂

"ஆமா.. ஷிவு.. இந்தா.. வாட்டர் பாட்டில்.. அப்புறம்.. கொஞ்சம் ஸ்நாக்ஸ் இருக்கு.. அதையும் சாப்பிடு.." என்று சித்தி தேவிகாவும்.. ஷிவாக்ஷியிடம்.. அறிவுரையோடு கூறவும்.. 🙂🙂

"நா ஸ்நாக்ஸ் சாப்பிடறதில்லம்மா.. பரவால்ல.. நீங்க குடுக்கறதால சாப்பிட்டுக்கறேன்.." என இன்முகமாக பதிலளித்தாள்.. ஷிவாக்ஷி..

பாட்டி.. தேவசேனா.. "இங்க பாரும்மா.. போர இடத்துலே ஜாக்கிரதையா இருக்கனும்.." என்று தன் பங்குக்கு அவரும்.. கூறினார்.. 🙂🙂

அனைத்திற்கும் சரியென்று.. தலையாட்டி கொண்டே வந்தாள்.. ஷிவாக்ஷி..

"ஷ்ரித்திக் கண்ணா.. ஷிவாக்ஷியை பத்திரமா.. கூட்டிட்டு போயிட்டு.. கூட்டிட்டு வந்துடு.. அம்மா.. ஷிவு.. ஜாக்கிரதையா போயிட்டு வா.." என்று தாத்தா அமரேந்திரர்.. ஷ்ரித்திக்கிடம் ஆரம்பித்து.. ஷிவாக்ஷியிடம் முடித்தார்.. 🙂🙂

ஷ்ரித்திக்கும் சரியென சம்மதமாய் தலையசைத்தான்..

ஷிவாக்ஷி பூஜையறையில் நுழைந்து.. கடவுளிடம் பிரார்த்தனை செய்தவள்.. அங்கு.. இறைவனின் பாதத்தில் ஷிவாக்ஷி வைத்திருந்த.. வேலை நியமன கடிதத்தை எடுத்துக் கொண்டாள்..

குடும்பத்தில் இருந்த பெரியோர்களை நிற்கச் சொன்னாள்..

தாத்தா , பாட்டி.. இந்திரகவி , ராஜ தேவன்..
தேவிகா , தேவ தேவன்..

தனித்திருந்த யாதவனையும் சமீராவையும் அழைத்து நிற்க சொன்னாள்.. ஷிவாக்ஷி..

ஏன் என்றே தெரியாமல்.. அவர்களும் வந்து நின்றனர்..

அனைவரின்.. பாதங்களிலும்.. விழுந்து ஆசிர்வாதம் செய்யுமாறு வேண்டவும்..

அவர்களும்.. மென்னகையோடு.. ஆசிர்வதித்தனர்..

சமீராவும்.. வேண்டா.. வெறுப்பாக.. அவளும் செய்தாள்..

தீவா, நேஹா, கார்த்திக், மகேந்திரன், ஷிவாக்ஷிக்கு வாழ்த்து தெரிவித்தனர்..

இளசுகளும்.. விதிவிலக்கல்ல..

ஷிவாக்ஷிக்கு அனைத்தும் கடந்து வருவதற்குள்ளே.. அப்பாடா என்றானது..

ஷ்ரித்திக்கும்.. ஷிவாக்ஷியும்.. மகிழுந்தில் பயணமாயினர்..

ஷ்ரித்திக்கே.. ஆரம்பித்தான்.. "ஷிவு.. நானும் நேத்து சாயந்திரத்தில இருந்து உன்னை பாத்துட்டு தான் இருக்கேன்.. வாட் ஹேப்பன்டு.. ?? யாராவது ஏதாவது சொன்னாங்களா.. ?? உன் முகமே சரியில்ல.. ?? ஏதோவொரு யோசனையிலையே இருக்க.. ??" என்று தன்னவளிடம்.. கேள்வியை தொடுத்தான்.. 😎😎 மகிழுந்தை இயக்கியபடியே..

"ச்சே.. ச்சே.. அதெல்லாம் ஒன்னுல்ல.." என்று ஷிவாக்ஷி மறுப்பாக தலையசைத்தாள்.. 🙂🙂

ஊடுருவும் பார்வையை.. அவளிடம் செலுத்தினான்.. பெரு மூச்சு விட்டு..
"தேவையில்லாதது எல்லாம் யோசிச்சுட்டு.. மண்டைய குழப்பிட்டு இருக்காத.. ஷிவு.. பீ ஃப்ரீ.." என்று.. ஷ்ரித்திக்.. அழுத்தமாக கூறினான்.. 😎

அதற்குள்.. ஷிவாக்ஷியின் கண்களில்.. கோவில் தெரியவும்..

"ஹான்.. இங்க நிறுத்துங்கோ.. பிள்ளையார மட்டும் சேவிச்சுண்டு வந்துடறேன்.." என்று ஷ்ரித்திக்கிடம் கேட்டுவிட்டு இறங்கினாள்..

தொப்பையப்பனின்.. தெய்வீக நிலை.. அவளை மனதில் புதுவித.. புத்துணர்வை தர.. அவரிடம்.. தன்னோடு எக்கணமும் துணை நிற்க வேண்டினாள்..

அவரை..
வணங்கிவிட்டு.. மகிழுந்தை ஷ்ரித்திக் திறந்து விடவும்.. ஷிவாக்ஷி வந்தமர்ந்தாள்..

ஷிவாக்ஷி.. ஷ்ரித்திக்கின் நெற்றியில்.. பிரசாதத்தை வைத்து விட்டாள்.. 😇😇

ஷ்ரித்திக்கும் இளநகையோடு.. பெற்றுக் கொண்டான்.. 😎😎

ஷ்ரித்திக்.. அவளை.. அரசுப் பள்ளியில் வண்டியை நிறுத்தினான்..
ஷிவாக்ஷி.. திரும்பி நடக்க போனாள்..

ஷ்ரித்திக்.‌.. ஷிவாக்ஷியை அழைக்கவும்.. திரும்பி.. மகிழுந்தின் ஜன்னல் வழியாக ஷ்ரித்திக்கை பார்த்தாள்.. 

"ஹலோ.. மேடம்.. நா வந்து கூட்டிட்டு போறேன்.. போன் பண்ணு.. மேக்ஸிமம்.. ஜாக்கிரதையா இரு.. எனக்கு கொஞ்சம்.. எதிரிங்க ஜாஸ்தி.. ஓகே.. அப்புறம்.. ஆல் தி பெஸ்ட்.. ஹேவ் அ நைஸ் டே.. பை" என்று ஷ்ரித்திக்.. அவளிடம்.. அறிவுரை போல கூறினான்.. 😎😎

ஷிவாக்ஷிக்கு.. "பை.." என்று கையசைத்து அனுப்பி வைத்தாள்..

ஷ்ரித்திக் கூறிய.. அவையனைத்தும்.. காதில் வாங்கியதாகவே தெரியவில்லை..

ஷ்ரித்திக்கும்.. சரி நான் கூறுவது.. அவள் நம்பவில்லை.. போலும்..  நாம் பார்த்துக் கொள்ளலாம்.. என்று நினைத்து விட்டு.. நகர்ந்தான்.. மகிழுந்தில்..

ஷிவாக்ஷி.. அந்த உயர்நிலை பள்ளியின் வாயிலில் நின்றிருந்தாள்.. மனதில் பலவித எதிர்பார்ப்புகளோடு.. தன் இஷ்டமான.. கிருஷ்ணனை கண்களை மூடி.. நினைத்துக் கொண்டே.. அந்த வாயிலில் காலடியை பதித்தாள்.. 🙂🙂

அந்த பள்ளியில்.. கூச்சல்களோடும்.. ஆரவாரத்தோடும்.. வாசலை தாண்டி உள்ளே நுழையும்.. குழந்தைகளும்.. பதின் பருவத்தினரும்.. கண்டு.. ஷிவாக்ஷிக்கு உற்சாகம் பிறந்தது..

அந்த கட்டிடத்தில்‌ விரிசல்களும்.‌.. இடிந்திருந்த நிலைப்பாடு.. இது.. பல வருட பழமையான கட்டமைப்பு என்று காட்டிக் கொடுத்தது.‌.

பழமையான கட்டிடங்கள் இன்னமும் இருந்தது..  ஆச்சரியம் தான்..

இப்பொழுதெல்லாம்.. அரசுப் பள்ளிகளை.. புதுப்பிக்கின்றனரே..

இங்கும்.. கட்டிட வேலைகள் நடைபெற்று கொண்டு தான் இருக்கிறது.. என அங்கிருந்த.. செங்கல்களும்.. மணலையும் நிரப்பி இருந்த விதமே கூறியது..

ஷிவாக்ஷி.. இதையெல்லாம் பார்த்துக் கொண்டே வந்த வண்ணம் இருந்தாள்..

நேரே.. அந்தப் பள்ளியின்.. அலுவலக அறைக்குள் நுழையும் நேரம்..

"மேடம்.. வைட் பண்ணுங்க.. ஹச்.எம் வர கொஞ்சம் நேரமாகும்.." என்ற இனிமையான.. குரல் அவளுக்கு தடையிட்டது.. 🙂🙂

அந்த இனியக் குரலுக்கு சொந்தக்காரியை கண்டதும்.. மெல்லிய இன்ப அதிர்வு.. இருவரும்.. ஒன்று போலே.. புடவை அணிந்ததே.. அதற்கு காரணம்.. 😮

இருவரும்.. ஒருவரையொருவர் பார்த்து புன்னகைத்து கொண்டனர்..

ஷிவாக்ஷி.. அவரை.. அளவிட்டு கொண்டிருந்தாள்.. கழுத்தில் மாங்கல்யம், நெற்றியில் குங்குமம், கால் விரலில் மெட்டி.. என அனைத்தும்‌‌.. அவர் திருமணமானவர்.. என்றே கூறியது..

இனிய குரலுக்கு சொந்தக்காரியோ.. "நீங்க... ??" என்று.. ஷிவாக்ஷியை பற்றி.. விசாரிக்க..

"நா.. ஷிவாக்ஷி.. இங்க.. புதுசா ஜாயின் பண்ண போற.. ட்ராயிங் டீச்சர்.." என்று தன்னை அறிமுகப்படுத்தி கொண்டாள்.. இன்முகத்தோடு.. 🙂🙂

"ஹோ.. அது நீங்க தானா.. ?? உங்கள பத்தி நிறைய எங்க ஹேட் மாஸ்டர் சொன்னாரு.. என் பேரு.." என தன்னை அறிமுகம் செய்வதற்குள்.. உள்ளிருந்த.. மற்றொரு ஆசிரியர் அழைப்பை விடுக்கவும்..

ஷிவாக்ஷியை.. வெளியே இருந்த இரும்பு இருக்கையில் அமரச் சொல்லி விட்டு சென்றார்.. அந்த இனியக் குரல்..

ஷிவாக்ஷிக்கு தான்.. அமர விருப்பமில்லை.. அந்த தலைமை ஆசிரியர் அறையின் வாயிலில்.. பக்கவாட்டில்.. சாய்ந்திருந்தாள்..

சிறிது நேரம் கழித்து வந்தார்.. தலைமை ஆசிரியர்..

தன்னுடைய.. இருசக்கர வாகனத்தில்.. முப்பது வயதை நெருங்கியவன்.. கம்பீரமாக.. சீரான.. சுருக்கம் இல்லாத சட்டை.. பேன்ட்..  கண்களில் கனிவும் அன்பும்.. பொங்க‌‌.. வந்திறங்கியது‌‌.. தலைமை ஆசிரியரே..

அவருக்கு.. ஷிவாக்ஷி பின்பக்கமாகத் தான் தெரிந்தாள்.. 'என்ன இவ்வளவு.. நீள முடி இவளுக்கு வந்து விட்டதா.. ?? பால் நிறமென சருமம் மின்னுகிறதே.‌.. ?? என்ன மாற்றம் வந்தது அவளிடம்.. ??' என்றவர்.. நினைத்துக் கொண்டார்.. அவர்.‌. வேறொருவரை மனதில் வைத்து..🤩🤩

ஷிவாக்ஷியை உரசுவதை போல.. அவளிடம்.. ரகசியம் போல.. "ஏன்.. இங்க நிக்கற.. உள்ள வா.." என தலைமை ஆசிரியர்.. போகிற போக்கில்.. கூறினார்.. 😍 ஆனால்.. ஷிவாக்ஷியின் முகத்தை பார்க்கவே இல்லை..

அவரின் அறைக்குள்..‌ நுழைந்து விட்டார்.‌.

ஷிவாக்ஷிக்கு.. பக்கென்று ஆனது.. 'என்ன இவர்.. இவ்வளவு அருகில் வருகிறாரே.. ??' என்று தான்.. 😧

ஷிவாக்ஷியும்.‌.. தன்னை தானே அழைத்தார்.‌. என்றும் சாதாரணமாக உள்ளே நுழைந்தாள்..

நுழைந்த அம்மாத்திரமே.. அவளின் கையைப் பிடித்து இழுத்தார்.. தலைமை ஆசிரியர்..

ஷிவாக்ஷி.. அலறிய படியே நிலை தடுமாறினாள்.. ஆனால்.. அவர் மேல் விழுந்து விடக்கூடாது என்ற கவனம் இருந்தது குறிப்பிடத்தக்கது..

அப்போது தான்.. ஷிவாக்ஷியின் முகத்தையே.. பார்த்தார்.. அவர்.. பார்த்த உடனே.. கையே விட்டு விட்டாரே.. பார்த்தவருக்கு.. அதிர்வில்லை என்றால் தான் ஆச்சரியம்..

பயந்து விட்டாரே.. அவர்..
'வேறொரு பெண்ணின் கையை பிடித்து விட்டோமே.‌.‌ என்ற குற்ற உணர்வு எழுந்தது.‌. அந்த பெண் தன்னை பற்றி இகழ்ச்சியாக நினைப்பாளே.. ??' என்று..‌ கலக்கம் கொண்டார்..

"ஐயோ.. என்னை மன்னிச்சிடுங்க.‌.. நா என் பொண்டாட்டின்னு.. இதே சேலை.. என் பொண்டாட்டின்னு நினைச்சு.. என்னை மன்னிச்சிடுங்க.. வேணும்னு‌‌.. பண்ணல.." என தடுமாறியபடி.. வார்த்தைக்கு வார்த்தை மன்னிப்பை கொட்டினார்..

அவரின்.. கண்களில் தெரிந்த உண்மையை உணர்ந்து.. அமைதியானாள்.. ஷிவாக்ஷி..

ஷிவாக்ஷி..
"பரவாயில்லை.. விடுங்கோ.‌. ஒன்னும் ஆகல.." என்றதும் தான் சாந்தமடைந்தார்.. 😌😌

"சாரிங்க.. என் வைஃப்னு நினைச்சேன்.‌. ஆனா நீங்கன்னு தெரியாது.. என் வைஃப் இங்க வொர்க் பண்றாங்க.. அதனால தான்.." என்று மீண்டும் மீண்டும் மன்னிப்பையே யாசித்தார்.. 😕😕

ஷிவாக்ஷியும்.. ஒன்றுமில்லை என்று சமாதானமாக கூறினாள்.‌. 🙂

ஷிவாக்ஷியை.. யாரென்று.. வினவினார்..‌ அந்த தலைமை ஆசிரியர்..

அவள் கையில் இருந்த வேலை நியமன கடிதத்தை.. அவரிடம்.. கொடுத்தாள்.. ஷிவாக்ஷி..

அதை படித்தவர்.. இன்முகமானார்.. "ஹோ.. அது நீங்க தான.. உங்கள பத்தி நிறையா கேள்வி பட்டிருக்கேன்.. நீங்க பெரிய ஆர்டிஸ்ட்.. எதுக்கு இந்த சின்ன வேலை.. ??" என்று.. ஷிவாக்ஷியை நோக்கி.. கேள்வியை வைத்தார்.. 🤔

ஷிவாக்ஷி.. "அது.. குழந்தைங்க.. ஸ்கூல்‌‌.. நன்னா இருக்குமே.. அதான்.. சார்.." என்றாள்.. பணிவோடு.. 🙂🙂

அவளின்.. சொற்களை கேட்டவருக்கு.‌. இளநகையே பூத்தது.. "சரி.. எனிவே.. நா அபி.. அபிநந்தன்.. இந்த ஸ்கூல் ஹேய் மாஸ்டர்.. நீங்க இங்க பசங்களுக்கு தாராளமா.. ஓவியத்தை கத்து கொடுங்க.. மேக்ஸிமம்.. உங்க பிரியட்.. கடன் வாங்குவாங்க.. அட்ஜஸ்ட் பண்ண வேண்டியது இருக்கும்.. நீங்க இங்க தான்.. சிஸ்டம்ல வொர்க் பண்ற மாதிரி தான் இருக்கும்.. பட் இன்னிக்கு ஃபர்ஸ்ட் டே.. சோ.. அவ்ளோ வேலை இருக்காது.. மத்தத.. உங்களுக்கு.. ப்யூண் சொல்லுவாரு.. என்ன ஹேல்ப் வேணும்னாலும்.. என்னை கேளுங்க.." என்று விட்டு.. ப்யூனிடம் ஷிவாக்ஷியை பற்றி கூறி.. அவளை அழைத்துச் சென்றார்.. 🙂🙂

ஷ்ரித்திக்.. அலுவலகத்தில்.. அவனுடைய அறையில்.. வேலை முடிக்கவிருந்த.. மாலை நேரம்..

அப்போது.. அவனுக்கு வந்த ஒரு அழைப்பை.. வேலையில் யாரென்று பார்க்காமல் காதில்.. வைத்தான்.. "ஹலோ.. யாரு.. ??" என்றான்..‌ கம்பீரக் குரலில்.. 😎😎

"உங்கொத்தை.. டேய்.. ஏதோ.. என் பொண்டாட்டி தான்.. பெரிய.. இவ.. உலகத்துல யாருக்கும் கிடைக்காத அப்பாவிங்கற.. ரேஞ்சுக்கு பேசுன.. ?? இப்ப அந்த அப்பாவி.. என் கைல.." என கேலியாக..  கதைத்தது.. வேற யாருமன்றி.. ஷ்ரித்திக்கின் அத்தை சமீராவே தான்..

ஷ்ரித்திக்.. அதை நம்பவில்லை.. "நீங்க சொல்றதுக்கு எல்லாம் நம்ப நா தயாரா இல்ல.. போய் வேலைய பாருங்க அத்தை.." என்று விட்டேற்றியாக கதைத்தான்.. 😎😎

ஷ்ரித்திக் நம்பவில்லை என்ற போது.. வித்யுத்.. பேச தொடங்கினான்.. "உன் பொண்டாட்டி.. பிங்க் கலர் புடவையில.. இப்ப தான் உனக்காக வாசல்ல காத்துட்டு இருந்தா.. நான் தான் நம்ம பசங்கல வைச்சு தூக்குனேன்.. இடுப்புல ஒரு மச்சம் இருக்கு.. கெண்டை காலுல.. ஒரு தழும்பு இருக்கு.. அப்புறம்.. தொடையில.." என்று.. இன்னும் பேசபோனவனை.. தடுத்தது.. ஷ்ரித்திக்கின்.. குரலில் பதற்றம் இருந்தாலும்.. நிதானமாகவே அவனிடம் கத்தினான்..

வித்யுத்.. ஷிவாக்ஷியின் அங்க அடையாளங்களை.. அவளுடைய டிசியில் படித்து தெரிந்து கொண்டான்.. அதை தான்.. கதைத்திருந்தான்..

ஷிவாக்ஷியின்.. அங்க அடையாளங்களை.. சரியாக.. கூறியது.. ஒரு புறம் இருந்தாலும்..

ஷ்ரித்திக்கிற்கு.. அசூசையாக தெரிந்தது.. தன்னவளின்.. அங்க அடையாளங்களை.. எப்படி தெரிந்து கொண்டான்.. இவன்.. ?? வித்யுத்தின் மீதிருந்த கோபம்.. பல்மடங்கு பெருகியது என்று சொன்னால் அது மிகையாகாது..

"நிறுத்து.. டா.. ?? என் பொண்டாட்டியோட.. அடையாளம் உனக்கெப்படி தெரியும்.. ?? என் ஷிவுவ.. என்ன பண்ண.. ??" என்று அலறினான்.. ஷ்ரித்திக்.. 😟😟

"அது எதுக்கு.‌. நீ என் பொண்ண.. கல்யாணம் பண்ணிக்கோ.. அவள நா விட்டுடறேன்.. அது வரைக்கும் அவ இங்க தான் இருப்பா.. ஆனா பொணமா.." என்று சமீரா.. ஆங்காரமாக.. கத்த.. 👿

"ஷிவு.. என் கைல பூ மாதிரி இருக்கா.. கசக்கறதுக்குள்ள.. போய் மாயா கழுத்தில தாலி கட்டு.. இன்னும் ஒரு மணி நேரம்.. இல்லல்ல.. இன்னும் உனக்கு அரைமணி நேரம் டைம் தரேன்.. அதுக்குள்ள.. மாயா கழுத்தில தாலி கட்டல.. இங்க.. அவளோட விரல்.. கை, காலு, கண்ணுன்னு.. பார்சல் பண்ண வேண்டியதா இருக்கும்.. அதுக்கு முன்னாடி.. என் பெட்ல இருப்பா.." என்று வித்யுத்.. வார்த்தைகளில்.. வஞ்சத்தை தடவி கூறியவன்.. 👿👿 மட்டும் நேரில் இருந்திருந்தால்.. கொன்று புதைக்கும் உத்வேகம் அவனுள்..

ஷ்ரித்திக்.. அத்தை மட்டும் கூறியிருந்தால்.. நம்பிருக்க மாட்டான்.. ஆனால்.. வித்யுத்.. அதை செய்யக் கூடியவனே..

ஷ்ரித்திக்கிற்கு.. ஷிவாக்ஷியிடம் மட்டும்.. அவனுடைய அறிவு வேலை செய்ய மறுக்கிறது..

ஷ்ரித்திக்கிற்கு.. ஷிவாக்ஷி எப்படி எல்லாம் பயந்திருப்பாள்.. என்ற எண்ணம் உருவான.. வேளையே.. பயமும் பதற்றமும்.. ஒருங்கே சேர்ந்து.. நற்தனமாடியது.. அவனுள்..

இவையனைத்தும் பொய்யாக இருக்கக் கூடாதா.. ?? என நினைத்து..
ஷிவாக்ஷியின் கைப்பேசியை தொடர்பு கொள்ள முயற்சிக்க.. சுவிட்ச் ஆப் என்றே ஒலித்தது‌...

ஷ்ரித்திக்.. உடனாடியாக.. ஷிவாக்ஷி சென்றிருந்த அரசு பள்ளியில்.. விசாரிக்க..

அதற்குள் பலநூறு முறை.. அவனின்.. இதழ்கள்.. 'புஜ்ஜூ.. புஜ்ஜூ..' என்று கூப்பாடு போட்டது..

ஷிவாக்ஷி.. எப்போதோ.. கிளம்பி விட்டாள்.. என்ற செய்தியையே தந்தது.. அங்கு..

ஷ்ரித்திக்கிற்கு.. அழுகை உருவாக.. இன்னும் சில மணி நேரங்களே இருந்தது..

ஷ்ரித்திக்.. நேரே.. இல்லத்தில்.. வந்தவன்.. மாயா ஹாலில் இருப்பதை.. கண்டு.. பார்வையாலே.. எரித்து விட்டு அவளருகே சென்றான்..

---------------------

To be continued.. 😉

(Hii.. dudz.. comments and vote marandhuradhinga..) 🤩🤩😍😍

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro