அத்தியாயம் - 25
காதல் காவியம்..
சிந்தும்.. என் நயனங்கள்.. சந்திக்க ..மறுக்கும்..
உன் விழிகள்..
எதிர்ப்பார்போடு என் நெஞ்சம்..
குழப்பத்தில் சிக்கிய..
உன் மனம்.. 😘
வாழ்க்கை தான் மனிதருக்கு எத்தனை பாடங்களை.. கற்பிக்கிறது.. ஒருவர் வாழ்வில் ஒரு முறையெனும்.. இன்பத்தை அடையாமலில்லை. அதே போலே.. வாழ்வில் ஒரு முறையெனும்.. துன்பத்தை அடையாமலில்லை..
பெரியோர்களின் வார்த்தை போலே.. வாழ்க்கை ஒரு வெற்று புத்தகம் தான்.. அதில் முதல் மற்றும் கடைசி பக்கத்தை இறைவனே எழுதி வகுத்து விட்டான்.. மீதம் இருக்கும் பக்கங்களை மகிழ்ச்சியாலும் புன்னகையாலும் நிரப்புவது.. நம் எழுது கோலிலே...
ஞாயிறவன்.. மேலெழுந்து.. ஜகத்திற்கு.. ஒளியை வாரி வழங்கி வீசிக் கொண்டிருந்த.. பொன்னிற வேளை.. 🌞🌞
ஷிவாக்ஷி.. ஷ்ரித்திக்கின் அலுவலக அறையில் இருந்த ஒரு சுவர் முழுவதும்.. தங்க பதக்கங்களாலும், சான்றிதழாலும், கோப்பைகளாலும் நிறைந்திருந்தது.. 🥇🏅
ஷிவாக்ஷிக்கு இத்தனை நாட்களாக இவையாவும்.. கருத்தில் பதியவில்லை.. நேற்று மதியவேளையில்.. ஷ்ரித்திக் கல்வியிலும், அறிவுக்கூர்மைலும் சிறந்தவன் என்று ஷ்ரித்திக்கின் புகழை பரப்பியதால்.. ஷிவாக்ஷியின் ஆச்சரியம் பார்வையில் விழுந்தது..😃😃
கீழுதட்டை மடித்து... கைகட்டி ஒரு ஆச்சரியமாக பார்த்திருந்தாள்..😃😃
அனைத்தையும்.. கையை உயர்த்தி மெல்லியதாக தடவிய நேரம்.. 🙂🙂
ஷ்ரித்திக்.. ஷிவாக்ஷியை பின்னே வந்து.. தன்னுள் அடக்கிக் கொண்டான்.. அவளின் தோளில் தன் நாசியால் தீண்டி.. அவளின் ஸ்பரிசத்தையும்.. அவளிடம் புறப்படும்.. விசேஷ நறுமணத்தில்.. ஆழ்ந்து உணர்ந்தான்.. 😘😘
ஏதோ..
இவ்வுலகில் அனைத்து சுகமும் தனக்கு கிட்டிய உணர்வு.. நறுமணம் பரப்பிய பூக்குவியலை அணைத்த உணர்வு.. 😍😍😍
ஷ்ரித்திக்.. அப்போது.. தான்.. அலுவலகம் செல்ல வேண்டி.. தயாராகிக் கொண்டிருந்தவன்.. நீண்ட கூந்தலை அள்ளி க்ளிப்பில் அடக்கி.. கரு நிற மேலுடையும், இளஞ்சிவப்பு நிறத்தில் ஸ்கர்ட்டும் அணிந்து நின்றிருந்தவளை.. விழி மூடாது ரசித்தான்.. இப்போது அவனின் அணைப்பில் அவள்.. 😍😍
திடீர் அணைப்பில் திடுக்கிட்டாள்.. ஷிவாக்ஷி.. ஷ்ரித்திக்கை தன்னிடம் இருந்து.. பிரிக்க முயன்ற அனைத்தும் தோல்வியே தழுவியது.. 😕😕
ஆனால்.. அவளுக்குள் சினம் மட்டும் உருவாகவேயில்லை.. திடுமென அணைத்ததில் வந்த குறுகுறுப்பு.. ஒரு ஆடவன் தன்னை அணைத்திருக்கிறான்.. என்ற சங்கடம் மட்டுமே.. அதில் வெட்கமும் வெளிப்பட்டதோ.. ??
"விடுங்கோ.. விடுங்கோளேன்.." என்று மிகுந்த போராட்டத்திற்கு பிறகும்.. அவளை விடுவிக்க வில்லை.. அவளை திருப்பி தன்னோடு அணைத்த படியே சுவரில் அவளுடன் சாய்ந்துக் கொண்டான்.. 😍😍😍 ஷ்ரித்திக்..
அவனின்.. செய்கையில்.. சிறிது எரிச்சல் மூண்டது.. ஆனால்.. குனிந்த நிலையில் "ஏன்.. இப்படி பண்றேள்.. ?? உங்க நடவடிக்கை.. சரியில்ல.. ?? என்னை விடுங்கோ.." என்றதை அன்பாகவே சொன்னாள்.. ஆனால்.. அவனிடம் தன்னை விடுவிக்கும் முயற்சியை கை விடவில்லை.. ஷிவாக்ஷி.. 🤔🤔..
அவனிடம் கோபம் கொள்ள என்ன இருக்கிறது.. ?? என்றார் போல் இருந்தது அவளின் செய்கை..
ஷ்ரித்திக்கும் அதை உணர்ந்து கொண்டான்.. ஆனால் அதை வெளிப்படுத்த வில்லை.. 😎😎
"நேத்து சொன்னதுக்கு என்ன இன்னும் பதிலையே காணோம்.. ??" என்று ஷிவாக்ஷியை காதல் விழிகளால்... பருகிக்கொண்டே வினவினான்.. 😍😍
அப்போது.. ஷ்ரித்திக்கின் விழிகளை ஏறிட்டவள்.. திகைத்தாள்.. அவனின் கண்களில் தெரிந்த காதலை தேக்கி வைத்து.. கேட்ட விதத்தில்.. தன்னை மறந்து திகைத்து நின்றாள்... 😍😍
இதற்கு முன் .. கம்பீரமும், ஊடுருவும் பார்வையும், தீட்சண்யமும் வீசும் விழிகளில்.. இப்போது காதலை அள்ளி வீசுவதை முதல் முறையாக பார்க்கிறாள்.. 😃😃
ஷ்ரித்திக்கை..
இது போல் பார்த்ததில்லை.. ஷிவாக்ஷி..
ஷிவாக்ஷியின் பார்வை வேறு புறமாக இருந்தது.. நெஞ்சில் எழுந்தது.. அவ்வினா.. 'அப்படியென்றால்.. நேற்றிரவு.. உண்மையாகவே.. ?? காதலை தெரிவித்தாரா.. ?? எனக்கு தான்.. ஒன்றும் தெரியவில்லையா.. ?? நான்.. எவ்வளவு அசடாக இருந்திருக்கிறேன்.. ??'.. என நினைத்ததை.. கேட்டு விட்டாள்.. அவள்..
"அப்ப.. நிஜமாவே.. நேக்கு ப்ரபோஸா.. பண்ணேள்.. ??" என நம்பாத பாவனையோடு.. தாடையில் விரல் வைத்து கேட்டு கேட்டாள்.. 🤔🤔
இப்போது.. அதிர்ச்சிக்குள்ளாவது.. ஷ்ரித்திக்கின் முறையாயிற்று.. "அடிப்பாவி.. நேத்து.. நா எவ்ளோ.. ரொமாண்டிக்கா.. ப்ரபோஸ் பண்ணேன்.. அப்ப நான் ப்ரபோஸ் பண்ணத நீ.. நம்பவே இல்லையா.. ??" என்றவனின் பிடி இளகியிருந்தது.. 🤨..
அந்த இடைவெளியில்.. அவனிடம் தள்ளி வந்து.. ஷ்ரித்திக்கை.. நோக்கி.. "இல்லையே.. உங்க லவ் ப்ரபோஸ்.. வேற மாதிரி இருக்கும்னு நினைச்சேன்.." என்று தோளை குலுக்கினாள்..🤗
புருவ சுளிப்புடன்..
"வேற மாதிரியா.. ?? அப்படின்னா.. பெருசா.. எதிர்பாத்தியா.. ??" என்று ஷ்ரித்திக்.. அவள் கேட்பதை செய்திட வேண்டும் என்ற எண்ணம் இருந்தது.. 🤔🤔
ஷ்ரித்திக்.. கேட்கும் பொழுது ஷிவாக்ஷி.. அலுவலக அறையை விட்டு வெளியே நடந்துக் கொண்டிருந்தவள்..
திரும்பி.. "நா எதுக்கு எதிர்பாக்கனும்.. ??" ஷ்ரித்திக்கை விளங்காத பார்வையோடு.. கேட்டாள்.. 🤔🤔
ஷ்ரித்திக்.. மெல்லிய சினம்.. எட்டிப் பார்க்க.. கோபப் பெருமூச்சை இழுத்து விட்டவாறே.. 😤 "ஷிவு.. நா உன்ன லவ் பண்றேன்.. அது உனக்கு புரியுதா.. ?? இல்லையா.. ??" என்று அவளை கூர்ந்து நோக்கினான்.. 🧐🧐
ஷிவாக்ஷிக்கு.. ஷ்ரித்திக்கின் கூற்று.. அச்சுறுத்துவதாக தோன்றியது.. சலிப்பு தட்டி உச்சி கொட்டினாள்.. "ம்ப்ச்.. இங்க பாருங்கோ.. இந்த லவ் எல்லாம்.. செட் ஆகாது.. நோக்கு வேற ஏதாவது.. பொம்மனாட்டி பிடிச்சிருந்தா சொல்லுங்கோ.. ?? நா பேசறேன்.." என எளிதாக.. கூறியவளை.. 🙂🙂
கதமாக (கோபம்) பார்வையை வேறு புறம் திருப்பினான்.. 😠
எங்கே.. தன்னுடைய.. கோபத்தை அவளிடம்.. கொட்டி விடுவோமோ.. என்று அங்கிருந்து.. செல்ல நினைத்தான்.. ஷ்ரித்திக்.. 😡😡
ஷிவாக்ஷி.. தான்.. ஷ்ரித்திக்கை நிறுத்தி வைத்தாள்.. "இப்படி.. எதுவும் சொல்லாம போனா.. என்னன்னு எடுத்துக்கறது... சொல்லுங்கோ.. ??" என்றாள்.. 😕
ஷ்ரித்திக்.. அவளை ஒரு பார்வை பார்த்து.. "அப்படின்னா.. எனக்கு அதுல விருப்பம் இல்லன்னு அர்த்தம்.. உன் பேச்சு போற திசை எனக்கு பிடிக்கலன்னு அர்த்தம்.. உன் மேல கோபத்தை காட்ட பிடிக்கலன்னு அர்த்தம்.." இடைவெளியை விட்டு.. தன் தலையை அழுந்த கோதி தொடர்ந்தான்.. 🤨
அவனின் குரல் கோபத்தை வெளிப்படுத்தவில்லை.. ஆனால்.. அழுத்தமும்.. உறுதியும்.. நிறைந்திருந்தது..
"இங்க பாரு.. ஷிவு.. நமக்கு கல்யாணம் ஆயிடுச்சு.. இந்த பொண்ணு பாக்கறேன்.. பண்ணு பாக்கறேன்னு மூட்டாள் தனமான பேச்சை இத்தோட நிறுத்திடு.." என்று ஷ்ரித்திக் முடிக்கவில்லை.. 🤨🤨..
ஷிவாக்ஷி இடையில் வந்தாள்.. "ஆனா.. இது ஒரு ஆக்சிடென்ட்.." என்று இன்னும் பேசப்போனவளை.. கையை உயர்த்தி.. தடுத்தான்..😕😕
"ஆக்சிடென்ட்னாலும்.. நா கட்டுன தாலியும்.. உன் நெத்தில நா வைச்ச குங்குமமும்.. பொயில்லயே.." என்று ஷ்ரித்திக்கின் கூற்றுக்கு மறுக்குரல்.. என்ன கூறுவது.. ?? என்று புரியாமல் முழித்தாள்.. 🤨🤨 ஷிவாக்ஷி..
அதற்காக.. திருமணம் நடந்ததால்.. ஏதோ கடமைக்காகவோ.. ஊர்க்காகவும்.. வாழும் வாழ்க்கையை அவள்.. விரும்பவில்லை.. அதிலும் ஷ்ரித்திக்.. தனக்கு அதிகப்படியானவன்.. என்ற எண்ணம் அவளுள்.. 😕😕 அவனுடைய தகுதிக்கும்.. நிலைக்கும் தான் சற்றும் பொருத்தமற்றவள்.. என்ற நினைப்பே.. அவளின் மனம் முழுதும் பரந்திருந்தது..😔
அதுவே.. ஷ்ரித்திக்கிடம்.. நெருங்க விடாமலும்.. அவனின் மீதுள்ள காதலையும்.. உணரவிடாமல் தடுக்கிறது.. 😔
"அண்ட்... மோர் ஓவர்.. நீ.. எனக்கானவள்.. நீயே நினைச்சாலும்.. என்னை விட்டு போக முடியாது.. போகவும் விடமாட்டேன்.. நீ என்ன விட்டு போகறதுக்கான உரிமை கூட உனக்கில்லை.. மைன்ட் இட்.." என்று ஷிவாக்ஷியிடம்.. தீர்க்கமாக ஊசி துளைக்கும் பார்வையோடு.. அகன்றான்.. ஷ்ரித்திக்.. 🤨🤨
ஷிவாக்ஷிக்கு தான்.. வியப்பாகவும்.. அதிர்வாகவும்.. இருந்தது.. ஷ்ரித்திக்கின் வார்த்தைகளின் தாக்கம் அவளிடம் இருந்தது.. இன்னும்..
'அப்படியென்றால்.. நான் இங்கே.. மாட்டிக் கொண்டேனா.. ?? என்னால்.. தப்பிக்க முடியாதா.. ??' என்று பொறியில் சிக்கிய எலியாக அணுக்கம் (பயம்) கொண்டாள்..😟😟
ஷ்ரித்திக் சென்றதும்.. திரும்பி.. கண்ணாடியில் தன் பிம்பத்தையும் முகத்தையும் மாறி மாறி.. உற்றுப் பார்த்து... தன் புருவத்தை விரலால் ஏற்றி இறக்கி விட்டு.. 'என்னான்ட என்ன இருக்குன்னு.. இவா.. இப்படி சொல்லிண்டு போறா.. ?? நாம அவ்ளோ வொர்த் இல்லயே.. ?? இவா.. சொல்றத பாத்தா.. என்னால.. இங்கிருந்து போக முடியாது போலவே.. ?? என்று தன்னுள் நினைத்து அனுக்கம் கொண்டாள்.. 😟😟
இதுவே.. அவளுக்கு சொர்க்கமாக தெரியும் போது.. இந்த அச்சம் இருக்குமா.. ?? 🤭🤭
ஷிவாக்ஷியும்.. கீழே சென்றாள்.. ஷ்ரித்திக் சென்றதும்..
ஷிவாக்ஷியிடம்.. இக்குடும்பத்தில் பெண்கள்.. தான் சமைப்பார்கள்.. நீ தினமும் சமைக்க வேண்டிய அவசியம் இல்லை.... எதற்கு உனக்கு இந்த சிரமம்.. என்று பாட்டி கூறியதால் சரியென்று ஒத்துக் கொண்டாள்..
ஷ்ரித்திக்கும்.. மொத்த குடும்பமும்.. சாப்பாட்டு மேஜையில் அமர்ந்து.. உணவை சுவைத்து கொண்டிருந்தனர்..
அப்போது.. ருத்ரா குட்டி ஆராவின் தட்டில் இருந்த லட்டுவை அவள் திரும்பிய நேரத்தில் எடுத்துக் கொண்டான்.. திருட்டு
முழியோடு.. 🙄🙄
ஆரா குட்டி தன் தட்டில் இருந்த லட்டுவை காணாது குட்டி விழிகளில் 'என் லட்டுவை திருடுனவனை.. கண்ல காட்டு.. கடவுளே.. ??' என நெற்றியில் விரலை பதித்து.. தேடியவளின்.. கண்களில் விழுந்தது.. 🧐🧐
லட்டுவை சுவைத்து கொண்டிருந்த.. ரித்துக் குட்டி..
அந்த வேளையில்.. தான் லட்டுவை சப்புக் கொட்டிக் சுவைக்க வேண்டி நா ஊற பாத்திருந்தான்.. 😋😋
ஆரா.. ரித்துலின் தலையை பிடித்து ஆட்டினாள்.. "என் லட்டுவை ஆட்டைய போட்டுட்டு.. அத நீ திங்கறீயா.. ?? குடுடா.." என்றவன் கையிலிருந்ததை பிடுங்கினாள்.. 😤😤
"நானா.. ?? ஆத்தைய போத்தேனா.. ?? லத்து.." என்று அழுவதை போல.. முகம் சென்றது.. ரித்துலிற்கு.. 😖😖
"என்ன நத்துச்சு.. ??" என்று அவன்.. விழித்துக் கொண்டிருப்பதை கண்டு.. மொத்த குடும்பமும்.. கொல்லேன சிரித்தனர்.. 😂😂
ருத்ரா இதற்கும் தனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பதை போல.. மேலே பார்த்துக் கொண்டிருந்தான்.. 🙄🙄🙃🙃
ருத்ராவின் குறும்பு தனத்தை கண்டு கொண்டே இளமுறுவலோடு அவனருகே வந்தாள்.. 🤭🤭
"டேய்.. வாலு.. உன் குறும்பு தனத்துக்கு அளவே இல்லயா.. ?? ஹ்ம்ம்.." என ஷிவாக்ஷி.. அவன் தோளில் கைப் போட்ட படி கேட்டதும்.. 'ஈஈஈஈஈஈஈ....' என இளித்து வைத்தான்.. 😁😁😁
மழலைகள் ஒழுங்காக அணியாத சீருடை சொல்லியது.. அவர்கள்.. பள்ளிக்கு செல்ல ஆயாத்தமாவது.. 🙂🙂
"ஹேய்.. ஸ்கூல் போக போறேளா.. ?? நாளைலிருந்து நானும் ஸ்கூலுக்கு போக போறேனே.." என்று குழந்தை போலே.. தலையை ஆட்டிக் கொண்டு.. கூறியவளை.. 😃 ஆசையாக ரசித்தான்.. ஷ்ரித்திக்.. யாருமறியாது.. 😍😍
தான் வேலைக்கு செல்ல போவதை தான் அவ்வாறு.. குறிப்பிட்டாள்... ஆனால்.. அவளை கேலி செய்வதில்.. மூண்டனர்.. அவ்வாண்டுகள்.. 🤪🤪
"ஹே.. ஷிவு.. ஸ்கூலெல்லாம்.. குழந்தைகளுக்கு தான்.. வளந்த எரும மாட்டுக்கு இல்ல.." என்று ஷிவாக்ஷியை கிண்டலாக.. ருத்ரா.. கூறியதும்.. இளசுகளும்.. குழந்தைகளும்.. வெடித்து சிரித்தனர்.. பெரியோர்கள்.. சிரிப்பை அடக்கிக் கொண்டிருந்தனர்.. 😂😂
ஷிவாக்ஷிக்கு.. அதில் துளியும் வருத்தம், கோபம் எதுவும் இல்லை.. ஆனால் கோபமாக.. விழிகளை சுருக்கி.. உதட்டை இறுக்கி.. முறைத்தாள்.. இளசுகளை..🤨 பொய்யாக..
"ருத்துக் குட்டி.. இப்ப தான்.. கரெக்ட்டா பேசிருக்க.." என்று சஞ்சையும்.. அவனோடு சேர்ந்து கொண்டான்..😂😂
ஷ்ரித்திக்.. "ருத்ரா.." உருமியதும்.. அனைவரும் அமைதியாயினர்.. 🙁🙁
தீவா.. தன் மகனை நோக்கி.. "டேய்.. வரவர.. உனக்கு வாய் ரொம்ப அதிகமாயிடுச்சு.. ஷிவாக்ஷி உன்ன விட வயசுல பெரியவ.. அவள எருமேன்னு சொல்ற.. இனி இப்படி பேசுன.. பல்ல தட்டி கையில கொடுத்துடுவேன்.." என்ற.. கண்கள் இடுங்க.. ருத்ராவை.. உண்மையான கோபத்தில்.. கடிந்தார்.. 😡😡
"திஸ் தி லிமிட்.. ருத்து.. பீ கேர்ஃபுல்.." என்று ருத்ராவின் தந்தை கார்த்திக்கும் இணைந்து கொண்டான்.. 😡😡
அதில்.. ருத்ராவின்.. முகம்.. கூம்பி போனது.. அதை தாங்காத பேதை மனம்..
"அச்சோ.. ஏன்.. கொழந்தையை திட்றேள்.. நேக்கு.. கொழந்தை சொன்னதுல.. எந்த வருத்தமும் இல்ல.. இவா.. என்னோட ஃப்ரண்ட்.." என்று கொண்டே.. ருத்ராவை தூக்கி.. தன் இடையில் வைத்துக் கொண்டாள்.. அவனை உற்சாகமூட்டும் விதமாக.. 😃😃
ருத்ராவை.. கிச்சு கிச்சு மூட்டி.. சிரிக்க வைத்து.. சமாதானம் செய்தாள்.. 😂
அவ்வளவு தான் குழந்தைகள்.. அவர்களை சமாதானம் செய்ய.. பெரிதாக.. எந்த ஒரு லஞ்சமும் தேவையில்லை..
அன்பை வாரி வழங்கினாலே.. போதும்.. 😘
"சரிம்மா.. ?? என்ன ஸ்கூலுக்கு போறத பத்தி ஏதோ.. சொல்ல வந்தியே.. ??" என்றும் மாறாத இளநகையோடு.. வினவினார்.. ஷ்ரித்திக்கின் தந்தை.. ராஜ தேவன்.. 😎
"அது.. வந்துப்பா.. நேக்கு.. இங்க பக்கத்துல இருக்குற.. கவர்ன்மென்ட் ஸ்கூலுக்கு.. டீச்சரா.. வேலை கிடைச்சுடுத்து.. அதை தான்.. அப்படி சொன்னேன்.." என்றாள்.. ஷிவாக்ஷி.. புதிய உற்சாகத்துடன்.. 😃😃
"என்ன.. கவர்மெண்ட் ஸ்கூலுக்கு டீச்சரா.. ?? நமக்கு இருக்குற பணத்துக்கு அங்கெல்லாம்.. போகனுமா.. என்ன.. ??" என்று.. தாத்தா அமரேந்திரர்.. குரலில்.. பணம் இருக்கும் மிதப்பு தெரிந்ததோ.. 🤔🤔
"அதானே.. நீ எதுக்கு அங்கெல்லாம் போகனும்.. நம்மகிட்ட.. இருக்குற பணமே.. இன்னும்.. பல தலைமுறைக்கு.. வரும்.. அதெல்லாம் வேண்டாம்மா.." என்று தடை போட்டார்.. பாட்டி தேவசேனா.. 🙂🙂
அதை அன்பாக தான்.. கூறினார்.. தன் பேத்தி எதற்காக.. சிரமப்பட வேண்டும் என்ற அன்பும் பாசமும் நிறைந்திருந்து.. அவர் வார்த்தைகளில்.. 🙂🙂
தேவிகாவும்.. "வேணாம்மா.. ?? எதுக்கு கஷ்டப்படற.. ?? உன்ன தாங்கறதுக்கு ஷ்ரித்திக்.. இருக்கான்.. எல்லாத்துக்கும் மேல.. நாங்க இருக்கோம்.. பணம் கொட்டி கிடக்குது.. நீ எங்கக்கூட இருந்தாலே.. போதும் டா.. கண்ணா.." என்று.. மென்மையாக.. கூறி புரிய வைக்க முயன்றார்.. 🙂🙂
இவர்களின்.. சொற்களில்.. ஒன்று மாத்திரம்.. ஷிவாக்ஷிக்கு புரிந்தது.. இனி.. தம்மை வேலைக்கு செல்ல விடமாட்டார்கள் என்றே அது.. ஆதலால்.. ஷிவாக்ஷியின்.. இதழ்கள் குறுகி.. சிறியதாக.. நேத்திரத்தில்.. கண்ணீர் பந்து உருவானது.. அவள் விழிகளில்.. ஆனால்.. கண்சிமிட்டி.. உள்ளிழுத்துக் கொண்டாள்..
ஆனால்.. ஷிவாக்ஷியின்.. நினைப்பை... பொய்யென.. மாற்றினான்.. அவளவன்.. 😍😍
ஷ்ரித்திக்.. அவர்கள் பேசுகையிலே.. இடையில் நுழைந்தான்.. "சீ.. அவ.. வேலைக்கு போகனும்னு ஆசைப்படறா.. போகட்டுமே.. இங்க இருந்து.. நேரம் வெட்டியா போறதுக்கு.. அங்க தேவலைன்னு.. அவளுக்கு தோனுது.. பண்ணட்டுமே..
அண்ட் மோர்ஓவர்.. அவ வேலைக்கு போகனும்னு நினைக்கிறது.. அவ இஷ்டம்..
இப்ப நானே.. இருக்கேன்.. சொத்து பத்து.. இருக்குன்னு.. நானும் ஊதாரி தனமா.. திரிஞ்சிருக்கலாம்.. ஆனா.. அதுல என் சந்தோஷம் இல்லன்னு.. நானே.. என் சொந்த உழைப்பில.. எனக்குன்னு தனி ராஜ்ஜியத்தையே.. உருவாக்கி இருக்கேன்.. தட் இஸ் மை பேசன்.. சேம்.. அதே மாதிரி தான்.. ஷிவாக்ஷியும்.. அவ வேலைக்கு போறேன்னு சொல்றது.. பணத்துக்கு இல்ல.. மனத்திருப்திக்கு.." என்று நிதானமாக.. நீளமாக எடுத்துரைத்தான்.. 😎😎
ஷ்ரித்திக்.. அவனின் குடும்பத்தோடு இவ்வளவு நீளமாக உரையாற்றியது.. இதுவே முதன் முறை..
அவளின்.. வாடிய முகம்.. அவனுக்குள் ஏதோ.. சுருக்கென்ற வலியை உருக்கியது.. போன்றொரு உணர்வு.. ஷ்ரித்திக்கிடம்.. 😍😍
ஷ்ரித்திக்.. எப்பொழுதும்.. மற்றவர்களிடம்.. உரையாடி.. நேரத்தை.. வீணடிப்பதை.. விட.. தாமே.. களத்தில் இறங்கிவிடலாம் என்று நினைப்பவன்.. இதுவரை.. ஷ்ரித்திக்கின் செய்கைகள் எல்லாம்.. அப்படி தான்.. இருந்தது..
ஆனால்.. ஷிவாக்ஷிக்காக.. தங்களிடம்.. பேசுபவனை கண்டு... அனைவருக்கும் பிரமிப்பு.. ஒவ்வொரு நாளும்.. ஷ்ரித்திக் வித்தியாசமாக தெரிகிறானே.. என்றிருந்தது அவர்களின் பார்வை.. 🙂🙂
சித்தப்பா தேவ தேவனும்.. "நானும்.. இதத்தான்.. சொல்ல வந்தேன்.. அம்மா.. ஷிவு.. நீ வேலைக்கு போடாம்மா.. அது உன் இஷ்டம்.. ஹ்ம்ம்ம்ம்.." என்றதும்.. ஷிவாக்ஷிக்கு அப்படியொரு ஆனந்தம்.. 😃😃😃
ஷ்ரித்திக்.. அதை ரசித்து.. மெல்லிய நகையை சிந்தினான்.. 😍😍
இந்திரகவி.. "ஆமா.. அப்பா.. ஷ்ரித்திக்.. சொல்றதும் சரி தான்.. அவ போகட்டுமே.. என்னாயிட போகுது.." தன் மாமானாரிடம்.. மருமகளுக்காக.. சிபாரிசு.. செய்ததும்.. 🙂🙂
தன் மருமகளின் தலையை தடவி.. ஒப்புக் கொண்டார்.. தாத்தா அமரேந்திரர்.. 🤓
அனைவரும் சரியென்று ஒப்புதல் வழங்கினர்..
ரித்துல்.. "அப்ப.. மலர் தீச்சர்.. மாதிரி.. ஷிவு.. தீச்சர்.." என்று ஷிவாக்ஷியோடு.. இணைந்து.. ஹைஃபை அடித்துக் கொண்டனர்.. இருவரும்.. 😃😃
"சரி.. வாங்கோ.. உங்கள நா ரெடி பண்றேன்.." என்று நால் வாண்டுகளையும்.. அழைத்துக் கொண்டும்.. தூக்கிக் கொண்டும்.. சென்றாள்.. ஷிவாக்ஷி.. 🙂
ஆம்.. அக்குழந்தைகளை.. நான்.. ஒப்பனை செய்து விடுகிறேன்.. என்று தினமும்.. குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பும் வேலையை ஷிவாக்ஷி எடுத்துக் கொண்டாள்.. 🙂🙂
ஷிவாக்ஷி.. ஆராவிற்கும், தியாவிற்கும்.. ஜடையை பின்னி விட்டு.. ஆடையை சரி செய்து விட்டாள்..
ரித்துலிற்கு.. தலையை வாரிவிட்டவள்.. ருத்ராவிற்கு தலையை வாரிவிட்ட படி.. கோதியும் விட்டவள்..
"நா உங்க வயஷுல.. பூஸ்ட் தான்.. சாப்பிண்டு இருப்பேன்.. ஆனா.. நோக்கு ப்ளாக் ஃபாரஸ்ட் கேக்.. ஃபாலுதா.. ஹாட் சாக்லேட்.. ஹ்ம்ம்ம்ம்.." என்று பெருமூச்சு விட்டாள்.. ஷிவாக்ஷி.. 😜😜
"நீ கொடுத்து வைச்சது.. அவ்ளோதான்.."என்று ஆரா கதைத்ததும்.. மற்ற மூவரும்.. நகைத்தனர்.. 😆😆
"ஹ்ம்ம்ம்ம்.. பேசு.. பேசு.. பேஷா பேசு.. சரி.. நேக்கு தெரியும்.. நீங்க எல்லா.. ஃபன்காக.. தான் இந்த மாதிரி பேசறேள்னும், பண்றேள்னும்... ஆனா.. அது மத்தவா தப்பா பாக்கறாளே.." என்று ஷிவாக்ஷி.. அவர்களோடு.. கண்ணத்தில் கை வைத்து.. குழந்தை போலே.. கதைத்தாள்... 😜
"ஆமா.. ஷிவு.. உனக்கு தெது.. யாதுக்குமே தெதிய மாத்திக்குது.." என ரித்துல்.. குற்ற பத்திரிகை வாசிக்க..🙁
"இன்னிக்கு கூட.. நா உன்ன.. விளையாட்டுக்கு தான் அப்படி சொன்னேன்.. ஆனா.. அதுக்கு அம்மா.. அப்படி திட்டுது.." என்று ருத்ராவும்.. தன் குழந்தை பேச்சால்.. கவலையை உரைத்தான்.. 🙁
அவர்களை தன்னோடு.. அணைத்தவள்.. "ஹ்ம்ம்ம்ம்.. நோக்கே.. தெரியுதோன்லியோ.. ?? நீங்க பேசுனத.. ராகுல்.. இல்ல வர்ஷாவோ பேசிருந்தா.. அது வேற.. நீங்க பேசுறது வேற.. ?? இதுல இருந்து நோக்கு என்ன தெரியறது.. ??" என்று அவர்களிடம்.. கேள்வியை வைத்தாள்.. ஷிவாக்ஷி.. 🙂
"வயசுக்கு மீறுற பேச்சு தப்புன்னு சொல்ல வரீயா.. ??" என்று தியா குட்டி.. சரியாக கூறினாள்.. கேள்வியின்.. வடிவாக.. 🙁🙁
"தியா.. எல்லா.. சொல்றச்சே கூட நம்புல.. நீ புத்திசாலி தான்.." என தியாவிடம் கூறிவிட்டு.. குழந்தைகளிடமும்.. பார்வை ருத்ராவிடம்.. இருக்கும் படி.. தொடங்கினாள்.. "கரெக்ட்.. வயஷுக்கு மீறி பேசுனா.. ?? அது சில சமயம் தான் ரசிப்பா.. ஆனா.. எல்லா நேரத்திலையும்.. அப்படியில்ல.. அந்த பேச்சு.. தொடர்ந்தா.. இந்த வயஷூலேயே.. என்ன பேச்சு பேசறா.. ?? முளைச்சு மூணு இலை விடல.. இவாளுக்கு.. எல்லாம்.. பணத்திமிர்.. இப்படியெல்லாம்.. பேசுனா.. நோக்கெல்லாம்.. பரவால்லியா.." என்று குழந்தைகளுக்கு.. புரியும் வண்ணம்.. எடுத்து கூறினாள்.. 🙂🙂
"ஐயோ.. அப்படியெல்லாம் கூட.. நினைப்பாங்களா.. ?? நாங்க ஜஸ்ட் ஃபார் ஃபனுக்கு தான்.. இப்படி பேசுவோம்.. நாங்க.. நீ சொன்ன மாதிரியெல்லாம் என்னிக்குமே நடந்துக்கிட்டதில்ல.. சின்ன வயசுல.. அம்மா.. அப்பா.. தான்.. நாங்க பண்ண சேட்டையெல்லாம்.. ரசிச்சாங்க.. அதனால தான்.. இப்படி.. மத்தபடி.. வேற எதுவும் இல்ல.." என ருத்ரா.. பதட்டமாக.. கதைத்தான்.. 😕😕
இது தான்.. பெற்றோர்கள் செய்யும்.. தவறு..
தான் பெற்ற மக்கள் சிரித்தாலே.. பெரிய சாதனை செய்தாற் போல நினைப்பவர்கள்.. தன் மக்களின் குறும்பு தனத்தை லயித்து.. ரசித்திருப்பர்..
தன் பெற்றோர்கள் கவனிக்கிறார்கள்.. தங்களை ரசிக்கிறார்கள்.. என்று.. அக்குழந்தைகளும்.. தங்கள் ஈன்றோரின் கவனம் ஈர்க்க.. திரும்ப திரும்ப அதையே செய்து.. ஒர் கட்டத்தில் அது அவர்களின் பழக்கமாகவே மாறிவிடுகிறது..
இதைப் பற்றி..
பெற்றோர்களிடம் கேட்டால்.. தன் மக்களை குற்றம் சாட்டுகின்றனர்..
ஆனால்.. அவர்களின்.. தவறும் அடங்கும் என்று.. அவர்களுக்கு புரியவே பல நிலைகளை கடந்திருப்பர்..
"கண்டிப்பா.. நினைப்பா.. அவ்ளோ.. ஏன்.. முத தடவை.. உங்கள பாக்கறச்சே.. நானும் அப்படி தான்.. நினைச்சேன்.. ஆனா.. அதுக்கு அப்புறம்.. தான் நேக்கு புரிஞ்சது.. நீங்க விளையாடுறேள்னு.." என்று ஷிவாக்ஷி.. மொழிந்ததும்.. 🙂🙂
"என்ன.. ஷிவு.. நீயே.. இப்படி சொல்ற.. ?? அப்ப எங்கள மாற சொல்றீயா.. ??" என்று ஆரா.. அப்பாவியாக.. வினவினாள்.. 😕
"கண்டிப்பா.. ஆறுல வளையாதது.. அறுபதுலயும்.. வளையாது.. இப்ப மாறுனாத உண்டு.. எல்லாருக்கும்.. உங்கள விட சின்னவாளுக்கும் கூட மரியாதை குடுத்து பேசணும்.. புரியறதா.." என உறுதியாக.. கட்டளையிட்டாள்.. மழலைகளிடம்.. ஷிவாக்ஷி.. 🙂🙂
"சரி.. நீ.. தொல்லித்த.. நா.. மாதுதேன்.." என ரித்தல்.. ஷிவாக்ஷியின் மொழிகளுக்கு செவி சாய்த்தான்.. 🙂🙂
"சரி.. ஷிவு.. சாரி அத்தை.. இனிமேல்.. நீ சொல்ற மாதிரியே இருக்கோம்.." என்று ருத்ரா.. தலை குனிந்த வாக்கிலே.. தன் சம்மதத்தை கதைத்தான்.. 😔
"நானும்.. நானும்.." என்று ஆராவும் தியாவும் இணைந்து பதிலளிக்கவும்..🙂🙂
"ஹான்.. வெரி குட்.. வெரி குட்.. ஆனா.. என்னை எப்பவும் போல ஷிவுன்னே கூப்பிடுங்க.. ஆனா.. மத்தவாளாண்ட மட்டும்.. மரியாதை.. ஓகே.." என்று.. மழலைகளை அணைத்துக் கொண்டாள்.. 🙂🙂
மழலைகளும்.. அவளுடன்.. ஒண்டிக் கொண்டனர்.. 😃😃
ஷிவாக்ஷி.. கொத்தமல்லியிடம்.. குழந்தைகளுக்கான.. மதிய உணவை வாங்கி.. அவர்களின் பையில் வைத்து.. குழந்தைகளை ட்ரைவரிடம் கூறிவிட்டு.. குழந்தைகளை கையசைத்து அனுப்பி வைத்தாள்.. 🙂🙂
ஷ்ரித்திக்.. வரவேற்பறையில்.. அமர்ந்து கோப்புகளை.. புரட்டி.. சரி பார்த்துக் கொண்டிருந்தான்..😎😎
சித்தப்பாவும்.. ஷ்ரித்திக்கின் அப்பா.. ராஜ தேவனும்.. யாதவன் மூவரும்.. தொழில் சம்பந்தமாக பேசிக் கொண்டிருக்க..
தாத்தா பாட்டி இருவருமே.. கடந்த காலத்தை நினைத்து.. புன்னகையை சிந்த..
ஷ்ரித்திக்கின் அம்மா இந்திரகவியும், சித்தி தேவிகாவும்.. சமீராவும் குடும்ப விஷயங்களை பற்றி பேசிக் கொண்டிருக்க..
ராகுலும்.. சஞ்சையும்.. புத்தகத்தை புரட்டிக் கொண்டிருந்தனர்..
தீவா, நேஹா, கார்த்திக், மகேந்திரன்.. அலுவலகம் செல்ல ஆயத்தமாயினர்..
மாயா மாத்திரம்.. தனித்து.. அமர்ந்திருந்தாள்..
அவ்வேளையில்.. அங்கு நடனத்திற்கு ஒத்திகை பார்த்துக் கொண்டிருந்தனர்.. வர்ஷாவும்.. ஜானவியும்.. 🙂🙂
அவர்கள்.. இருவரும்.. பரத நாட்டிய பயிற்சியில் ஈடுபாட்டுடன்.. ஈடுபட்டிருந்தனர்.. 😃😃
ஷிவாக்ஷிக்கு தான்.. நாட்டியம்.. கைவந்த கலையாயிற்றே.. 😃😃 அவளுக்கு.. பிடித்தமான ஒன்று என்பதாலே.. அவர்கள் அருகே.. நகர்ந்தாள்..
அவ்விருவரும்.. ஆடுவதையே.. சுவாரசியமாக.. கண்டுக் கொண்டிருந்தாள்.. 🙂😃
அவர்கள்.. ஆடிய படியே.. "என்ன ஷிவு.. அப்படி.. பாக்கற.. ??" என கேட்டாள்.. ஜானவி..🙂
"ஆமா.. காலேஜ்.. போகலியா.. ??" என்று.. வினாயிட்டாள்.. ஷிவாக்ஷி.. 😃😃.. ஆர்வம் வழிந்த விழியோடு..
"அதுவா.. எங்களுக்கு.. இன்னும் இரண்டு நாளுல அரங்கேற்றம் இருக்கு.. ஷிவு.. அதான்.. நாங்க போகல.. நாங்க பரத நாட்டியம் கத்துக்கிறோம்.." என்று வர்ஷா.. விடையளித்தாள்.. ஆட்டத்தை விடாது.. 🙂🙂
ஷிவாக்ஷி.. "ஹோ... சூப்பர்.. சூப்பர்.. கங்காரிலையன்ஸ்.." என்றதும்.. பக்கென சிரித்து விட்டனர்.. 😆😆
(காங்கரேஜ்லேஷன்ஸா.. கங்காரிலையன்ஸ்.. சொல்லுது.. பாருங்க..) 🙄
சிரித்திருந்தாலும்..
ஆனால்.. அவ்விருவரும்.. இன்னும் நாட்டியத்தை விடவில்லை..
திடீரென.. ஷிவாக்ஷியின் நயனங்கள்.. அவர்களை குற்றம் சாட்டும் பார்வையை செலுத்தியது.. 🤨🤨
ஷிவாக்ஷி.. "ஹேய்.. முத்திரையை தப்பா.. போடாதேள்.. நேக்கு பிடிக்காது... சரியா விரல பிடிங்கோ.." என்றவளின்.. குரல்.. இப்போது.. கண்டிக்கும் தோனியாக..🤨🤨
பிரம்மஸ்சரியா.. முத்திரை தேனியை குறிக்கும்.. முத்திரை..
பிரம்மஸ்சரியா முத்திரையை.. அவர்கள்.. விரலை சரியாக.. மடக்காமல் இருந்ததே.. அதற்கு காரணம்..
அதுமட்டுமல்ல.. இருவரும்.. பல முத்திரையை.. தவறாகவே விரல்களில் நிறுத்தினர்..
ஷிவாக்ஷிக்கு.. முத்திரையை தவறாக வைத்தால் பிடிக்காது. அது அவளுக்கு.. சற்று கோபத்தை உருவாக்கும்.. முத்திரையை தவறாக வைத்தால்.. அதன்.. அர்த்தமே மாறிவிடும்.. என்பதால்.. அதில் மிக கவனமாக இருப்பாள்.. 🤨🤨
"உனக்கு தெரியுமா.. ??பின்ன.. எப்படி வைக்கனும்.. ??" என கேட்டாள்.. வர்ஷா.. 🤔🤔
"எங்களுக்கு.. இந்த முத்திரால கொஞ்சம் சந்தேகம் இருக்கு.." என்று ஜானவியும் அவளோடு இணைந்து கொண்டாள்.. 🙄
"ஹோ.. மேடம்க்கு.. இத பத்தி தெரியுமா.. நாட்டியமென்ன என்னன்னு தெரியுமா உனக்கு.. ?? அதுவொரு அற்புத கலை.. அதப்பத்தி நீ பேசி.. கலங்கப்படுத்தாத.. எங்க உன்னால.. அதுல ஒரு ஸ்டேப் கூட போட முடியாது.. நீ பேசறீயா.. ??" என்றிடையே.. மாயா மூக்கை நுழைத்தாள்.. வெறுப்போடு.. 😡😡
இவர்களின்.. செயலை மொத்த குடும்பமும் பார்த்துக் கொண்டு தான் இருந்தது..
மாயா.. அளவுகடந்து செல்கிறாள்.. என்பதை அனைவரும் உணர்ந்து தான்.. இருந்தனர்..
ஏற்கனவே.. நேற்று நடந்த சங்கடத்தில்.. ஷிவாக்ஷியின் மனம் ஆறியிருக்காது.. அதில் மேலும்.. ஊதி ஊதி.. காயத்தின் வீரியத்தை அதிகரிக்கிறாளே... என்று சித்தப்பா.. பேச விழைந்தார்..
"மாயா... என்ன வார்த்தை பேசிட்டு இருக்க.. வார்த்தைய அடக்குன்னு.. உனக்கு பல முறை சொல்லிருக்கோம்.. நினைவிருக்கா.. ??" என்று சித்தப்பா தேவ தேவன்.. உரக்க கத்தினார்.. 😡😡
மாயா.. "மாமா.. நீங்க.. சொல்றத கேக்கற ஐடியா.. எனக்கில்ல.." என்று விட்டாள்.. விட்டேற்றியாக.. 😡😡
சமீராவிற்கு பெரும் கோபம்.. தன் சகோதரனை எப்படி தன் மகள் இவ்வாறு.. கூறலாம்.. ?? என்ற கோபம் அவருள்..
என்ன தான்.. மாயாவின் கோபத்திற்கு துணை போனாலும்.. தன் சகோதரனின் மீது பாசமும் பற்றுதலும் மாறாவில்லை அவருக்கு..
சமீரா.. தன் மகளிடம்.. நகர்ந்தார்.. ஆவேசமாக.. "ஏய்.. மரியாதையா பேசு.. அவர் என் அண்ணன் ஜாக்கிரதை.." என்று கண்கள் சிவக்க.. விரல் நீட்டி எச்சரித்தார்.. 😡😡
மாயா அதற்கெல்லாம்.. செவி மடுக்கவில்லை..
ஷ்ரித்திக்.. நடப்பவையெல்லாம்.. அமைதியாக பார்த்திருந்தான்... 😎😎
தன்னை.. நாட்டிய கலையின் கலங்கம்.. என்ற அவ்வார்த்தை..
ஷிவாக்ஷிக்கு கடும் கோபம் உருவானது.. ஆனால்.. அதை வெளிப்படுத்த வேண்டாம் என அவள்.. அமைதியானாள்..🙂🙂
மாயா.. "என்னை எல்லாரும் வில்லி ரெஜ்சுக்கு பாக்க வைச்சிட்டல்ல.. உனக்கு நாட்டியத்தை பத்தி.. என்ன தெரியும்.. எங்க நமஸ்காரமாவது.. பண்ணத் தெரியுமா.. ??" என்று இறைத்தாள்.. மாயா.. எரிச்சலாக.. 😡😡
மாயா.. இப்படி பேசுவதன்.. காரணம்.. அவளுக்கு.. பரத நாட்டியம்.. தெரியும் என்ற கர்வம்..
ஷிவாக்ஷிக்கு.. நிச்சயம் தெரிந்திருக்காது.. என்ற மிதப்பு..
கையை கட்டிக்கொண்டு..
"அப்படின்னா.. ஆடிப் பாத்துடலாம்.. என்ன சொல்றேள்.. ??" என்று மாயாவை நாட்டியத்திற்கு அழைத்தாள்.. அது ஷிவாக்ஷியின்.. கோப வெளிப்பாடே.. ஆனால்.. நிதானமாக கையாண்டாள்.. 🤨🤨
"வேணாம்.. ஷிவு.. அப்பறம் என்கிட்ட மூக்குடைபடப் போற.." என்று நக்கலாக.. மொழிந்தாள்.. 😏
"அதையும் பாத்துடலாமே.. !!" என்று சாதாரணமாக கூறினாள்.. ஷிவாக்ஷி.. 🙂🙂
ஸ்கர்ட் அணிந்திருந்தாள்.. கழுத்தைச் சுற்றி கட்டிருந்த துப்பட்டாவை.. நாட்டியம் ஆடுவதற்கெற்ப.. இடையை சுற்றி இறுக்கி கட்டினாள்.. ஷிவாக்ஷி..
மாயாவும்.. துப்பட்டாவை.. எடுத்து இறுக்கிக் கட்டிக் கொண்டாள்..
மாயாவே.. திரைப்படப் பாடலை ஒளிக்கச் செய்தாள்..
இருவரும்.. பூமித்தாயை நமஸ்கரித்து.. நற்தனத்தை தொடங்கினர்..
ஹர ஹர ஹர ஹர ஹர ஹர ஹர ஹர மஹாதேவ்...
ஓம் பைரருத்ராய.. மஹாருத்ராய... காலருத்ராய... கல்பாந்தருத்ராய..
வீரருத்ராய.. ருத்ரருத்ராய.. கோரருத்ராய.. அகோரருத்ராய..
மார்தாண்டருத்ராய.. அண்டருத்ராய.. ப்ரமாண்டருத்ராய...
சண்டருத்ராய.. பிரசண்டருத்ராய... தண்டருத்ராய...
சூரருத்ராய.. வீரருத்ராய.. பவருத்ராய.. பீமருத்ராய..
அதலருத்ராய.. விதலருத்ராய.. சுதலருத்ராய.. மஹாதலருத்ராய..
தசாதலருத்ராய.. தலாதலருத்ராய.. பாதாளருத்ராய...
நமோ நமஹ...
ஓம் சிவோஹம்... ஓம் சிவோஹம்.. ருத்ரநாமம் பஜே ஹம்..
ஓம் சிவோஹம்.. ஓம் சிவோஹம்.. ருத்ரநாமம் பஜே ஹம்...
வீரபத்ராய.. அக்னிநேத்ராய... கோரஸௌஹாரஹா..
சகலலோகாய... சர்வபூதாய. சத்யசாக்ஷாத்கரா...
சம்போ.. சம்போ.. ஷங்கரா...
அ…ஓம் சிவோஹம் ஓம் சிவோஹம் ருத்ரநாமம் பஜே ஹம்
பஜே ஹம்..🎶🎵🎶
ஷிவாக்ஷி.. முறையாக.. அதேசமயம் அந்த பாடலுக்கு.. ஏற்ப நற்தனம் ஆடுவதை கண்டு.. விக்கித்து.. போனாள்.. மாயா..🙄🙄
அவளின்.. வேகத்திற்கும்.. நடன பாவத்திற்கும்.. கண்கள்.. பேசும்.. கதைக்கும்..ஈடுகொடுக்க முடியாமல்.. தடுமாறினாள்.. 🙄
ஷிவாக்ஷியின் விழிகளின் அசைவு.. முகபாவம்.. விரல்களின் முத்திரையால்.. அனைவரின் கண்களையும் கவர்ந்து வைத்துக் கொண்டாள்..😍
ஆனால்.. மாயாவின்.. விழிகள்.. ஷிவாக்ஷியை தோற்கடிக்க வேண்டும் என்றே தோன்றியதொழிய.. கண்களில் உயிரில்லை..😡
பல இடங்களில்.. முத்திரையை.. நாட்டிய சாஸ்திர முறையும் விதியும் தவறாகவே நடனத்தில் ஆடினாள்.. மாயா..
ஷ்ரித்திக்கிற்கு.. ஷிவாக்ஷி நடனமறிந்தவள்.. என்று தெரியாது..
ஷிவாக்ஷியின்.. நடனத்தில்.. பிரம்மிப்பாக தன்னவளை நோக்கியவன்.. தன்னிரு விழிகளில்.. அவளின் முகபாவத்தை நிறைத்துக் கொண்டான்.. அவன்.. 😍😍
அந்த திரையிசை பாடலுக்கு.. கேற்ப பரதத்தை ஆடியவள்.. திடீரென சுந்தர தெலுங்கின்.. குச்சிப்புடி நடனத்திற்கு மாறினாள்..🙂
அது பரதம் இல்லையென.. உணர்ந்ததால்.. அப்படியே தன் ஆட்டத்தை நிறுத்தி விட்டாள்.. மாயா..😕🙄
சஞ்சையும்.. ராகுலும்.. அந்த நடனத்தை யுகித்தனர்.. "ஹேய்.. இது குச்சிப்புடி.." என்று வியப்பாக நோக்கினர்.. 😳
அதே வாக்கில்.. கேரள நாட்டிளத்தின் மோகினி ஆட்டத்தை ஆடினாள்... ஷிவாக்ஷி..
வர்ஷா.. "இது.. மோகினி ஆட்டம்.." என்றாள்.. ஆச்சரியம் விலகாமல்.. 😳
இறுதியாக பாடல்.. வரிகளுக்கு ஏற்ப மீண்டும்.. வட இந்தியர்களின்.. எட்டு நடனங்களுள்.. ஒன்றான.. கதக் நடனத்தில்.. பல முறை சுற்றி.. விட்டு கண்ணசைவுகளால்.. நடனத்தை.. அழகாக முடித்து வைத்தாள்.. ஷிவாக்ஷி..
மாயாவின்.. இதழ்கள்.. "கதக்.." என தானாய் உதிர்த்தது.. 🙄
அனைவரும்.. எங்கே.. விழியை மூடினால்.. அந்த சிறு இடைவெளியில்.. நடனத்தை முடித்து விடுவாளோ.. ஷிவாக்ஷியை.. விழி எடுக்காமல்.. ரசித்தனர்..😍
மாயா நினைத்திருந்தாள்.. ஷிவாக்ஷிக்கு.. எங்கே இந்த நடனமெல்லாம்.. தெரிய போகிறது.. ?? என்று ஏளனமாக நினைத்திருந்தாள்.. ஆனால்.. ஷிவாக்ஷிக்கு இத்தனை நடனம் தெரிந்திருந்ததில்.. பெரும் வியப்பு.. அதே.. சமயம்.. கோபமும் எரிச்சலும் பொறாமையும்.. அவமானமும்.. ஒருங்கே அனுபவித்தாள்..
நடனமாடிய களைப்பில் மூச்சு வாங்கிக் கொண்டே.. மாயாவின் அருகே.. வந்தவள்.. "நேக்கும்.. பரதம், குச்சிப்புடி, கதக், கதகளி, ஒடிசி.. நடனமும்.. ரொம்ப இல்லைனாலும்.. நேக்கு சித்த தெரியும்.. என்னை கோபப்படுத்தறதுக்கு.. நாட்டியத்துக்கு கலங்கம் அப்படி இப்படின்னு. பெரிய பெரிய வார்த்தையெல்லாம்.. சொல்லாதேள்.. நீங்க.. தான்.. நாட்டியத்தை.. நிறைய இடத்துல தப்பா ஆடினேள்.. உங்களை திருத்திக்கோங்கோ... அப்புறம்.. ஊருக்கு உபதேசம் பண்ணுவேளாம்.." மாயாவின் முகத்தை பார்க்காமலே.. கோபத்தை வெளிப்படுத்தாமல்.. பொறுமையாக கதைத்து விட்டு அங்கிருந்து நகர்ந்தாள்.. 😏
மாயாவிற்கு.. அங்கிருந்து வெறுப்போடு நடந்தாள்.. அனைவரின் முன் இப்படி அவமானமாகி போனதை எண்ணி வெறுப்போடே சென்றாள்.. 😤
ஷ்ரித்திக்.. எதுவுமே நடவாததை போல தன் கோப்புகளை எடுத்துக் கொண்டு நகர்ந்தான்... 😎
அவனின்.. குடும்பத்தினர்.. இவனை புரிந்து கொள்ளவே.. தனியாக ஒரு அகராதியே
படைக்க வேண்டும் போல என்றெண்ணிக் கொண்டு நகர்ந்தனர்..
ஷ்ரித்திக்.. தன் மகிழுந்தில்.. கோப்புகளை வைத்து விட்டு.. நிமிரவும்.. ஷிவாக்ஷி அவனருகே ஒடி வரவும் சரியாய் இருந்தது..
ஷிவாக்ஷி.. வருவதை கண்டதும்.. சிறு அரும்பு துளிர்த்தது.. அவனிதழில்.. 😍
அவன் அறிந்ததே.. தன்னவள்.. தன்னகத்தே வருவாள்... என்று..
ஷிவாக்ஷி.. அவனருகே.. வெகு நேரமாக தலை கவிழ்ந்து.. மௌனித்தே நின்றாள்..🙂🙂
ஷ்ரித்திக்.. அவள் உயரத்திற்கு குனிந்து.. அவளின் முகம் காண.. முகத்தை தள்ளிக் கொண்டே போனாள்..
ஷ்ரித்திக்கும்.. அவள் நகர்வுகளுக்கு.. அவனும்.. நகர்ந்தினான்.. தன் முகத்தை..
ஷிவாக்ஷி இளமுறுவலோடு.. ஷ்ரித்திக்கின் முகத்தை.. தள்ளிவிட்டாள்.. மெதுவாக.. ☺️
ஷ்ரித்திக்கும்.. மெல்லிய நகையை கொண்டவன்.. அவளின் இடையை பற்றி தன்னோடு அணைத்துக் கொண்டான்.. 😍
அவனுள்.. தான் பிடித்தது இடையா.. இல்லை இளவம் பஞ்சா.. ?? இத்துனை மென்மையாக உள்ளதே.. ?? என்ற சந்தேகம் எழுந்தது.. 'ஹோ காட்.. ஷீ மேக்ஸ் மீ க்ரேஸி !!!' என நினைத்துக் கொண்டான்.. 😍😍
வழக்கம் போல நம் கதாநாயகி எதிர்பார்க்கவில்லை..
"விடுங்கோ... எல்லாரும் பாக்கறா.." என்றபடியே திமிறினாள்.. ஷிவாக்ஷி.. 😟
"அப்ப.. யாரும் இல்லன்னா பரவால்லியா.. ??" என குறும்பாக கண் சிமிட்டினான்.. 😉
ஷ்ரித்திக்கின் செயல்கள்.. ஷிவாக்ஷியின் இதயத்தை தாறுமாறாக துடிக்க வைத்தது..
"ரொம்ப நல்ல ஆடின.. !! என்னால கண்னை உன்னவிட்டு எடுக்க முடியல.. என் பொண்டாட்டி இவ்ளோ திறமையானவளா.. ?? அப்படின்னு.." என்று ஷ்ரித்திக் அவளின் நடனத்தை பற்றி புகழ்ந்து பாடினான்.. 😎
ஷிவாக்ஷி.. அதை மறுத்தாள்.. "ஹான்.. நீங்க சொல்றளவுக்கு எல்லாம்.. இல்ல.. ஏதோ.. .தெரியும் அவ்ளோ தான்.. ஆனா.. தேங்க்ஸ்.. அப்புறம்.. இன்னோரு.. தேங்க்ஸ்.. என்னை வேலைக்கு அனுப்ப.. பேசுனதுக்கு.." என்று இன்முகமாக நகைத்தாள்.. 🙂
"புருஷன் பொண்டாட்டிக்குள்ள.. எதுக்கு அதெல்லாம்.. ஆனா.. அதுக்கு கண்டிப்பா வட்டியோட வசூல் பண்ணிக்கிறேன்.. சரி... கிளம்பறேன்.. டைமாச்சு.." என்று தன் மணிக்கட்டை பார்த்து அவளை விடுவித்து விட்டு.. மகிழுந்துக்குள் அமர்ந்து கொண்டான்.. 😎
மகிழுந்தின் தோற்றத்தை மனதில் வைத்து..
"நான்.. ரொம்ப நாளா. உங்களாண்ட இது பத்தி கேக்கணும்னு நினைச்சேன்.. அதென்ன.. உங்க கார்.. ரொம்ப வித்தியாசமா இருக்கறது.. அதான்.." என்று மகிழுந்தில் அமர்ந்திருந்த ஷ்ரித்திக்கிடம் ஜன்னல் வழியாக கேட்டாள்.. 🤔🤔
"ஹோ... இதுவா.. உனக்கு ஃபெராரி பத்தி தெரியுமா.. ??" என ஷிவாக்ஷியை நோக்கி.. கேள்வியை வீசவும்.. 😎
"எங்கேயோ.. கேள்வி பட்ட மாதிரி தோன்றது.. ??" என்றிவள்.. கண்ணத்தை தட்டி தட்டி யோசித்தாள்.. 🤔🤔
"இது ஃபெராரி ரேஸ் கார்.. ஒன் ஆஃப் மை ஃபைவரைட்.. கார்.. உலகத்தில இருக்கிற காஸ்ட்லியஸ்ட் கார்ல இதுவும் ஒன்னு.." என்று.. ஷிவாக்ஷிக்கு தன் மகிழுந்தை பற்றி உரைத்தான்..😎😎
ஷ்ரித்திக்கின் பதிலில்
பிரமித்து போனவள்..
"எதுக்கு.. இவ்ளோ காஸ்ட்லியா.. ?? வொல்க்ஸ் வேகன்.. இந்த மாதிரி வாங்கிருக்கலாமே.. ??" என்று ஷிவாக்ஷி அர்த்தமற்ற கேள்வியை எழுப்பினாள்.. 🤔🤔
"ஹ்ம்ம்ம்ம்.. உனக்கு புரியற மாதிரி சொல்லனும்னா.. என் மானத்தை மறைக்க கோமணமே போதும்.. எதுக்கு.. இந்த கோர்ட் சூட்.. சேலை எல்லாம்.. அந்த மாதிரி தான்.. இதுவும்.. இந்த கார் வாங்கனும்னு என் ஆசை.. என்னோட மனத்திருப்திகாக.. சரி ரொம்ப டைமாச்சு கிளம்பறேன்.. மீட்டிங் இருக்கு.." என ஷிவாக்ஷியின் பதிலை கூட எதிர்பாராது கிளம்பினான்...😎.. ஷ்ரித்திக்..
இங்கே... விக்ரம்.. தன் காதலியும்.. வருங்கால மனைவியுமான இஷானியை காண.. அவள் இல்லத்திற்கு ஆவலாகச் சென்றான்.. 😍
தன்னுடைய ஆடி மகிழுந்தில்.. புன்னகைத்துக் கொண்டே.. ஸ்டியரிங்கை வளைத்து.. அவள் இல்லத்தின் வாசலில் நிறுத்தினான்.. 😎
அந்த இல்லம்.. நடுத்தர வர்க்கத்தினர் இல்லம்.. என சொல்ல தேவையின்றி.. காட்டியது..
கதவருகே.. விக்ரம் வரவும்.. அங்கே முட்டை பறந்து.. அவனருகே விழ சில அடி தூரமே இருந்தது..
விக்ரம் சுதாரித்து தள்ளிக் நின்றதால்.. அவன் மீது முட்டை படாமல் தப்பித்தான்..
விக்ரம்.. 'அப்பாடா.. நல்ல வேளை.. தப்பிச்சேன்.. இல்லைனா.. முட்டை கறையாகி.. ஷர்டே நாஸ்தியாகி இருக்கும்..' என்று பெருமூச்சு விட்டான்.. 😤
கதவு திறந்திருக்க.. எப்படி முட்டை வந்தது.. என நோக்க.. தன் தலையை உள்ளே நுழைத்தான்.. அங்கு நிகழ்ந்ததை பார்த்தவன்.. அசையாது நின்றான்.. 😳 'என்னடா நடக்குது இங்க... ???!!!!' என நினைத்திருந்தான்..
"ஹேய்.. டாடி.. வாட் இஸ்.. திஸ்.. ?? யூ... பாக்க பெரிய மனுஷன் மாதிரி இருந்துட்டு.. சின்ன புள்ள மாதிரி.. என் டெய்ரி மில்க் சாக்லேட் ஆட்டையா போட்டு இருக்கீங்க.. ??" என்றவள்.. தந்தையின் மீது அடிக்க.. கையில் முட்டை குவியலே வைத்திருந்தாள்...🤨
"ஏன்.. பெரிய மனுஷங்களுக்கெல்லாம்.. ஆச பாசம் எல்லாம் இருக்கக் கூடாதா... ?? வீட்ல ஒரு வேளையும் பண்றதில்ல.. போற வீட்ல என்னை தான்.. குத்தம் சொல்லுவாங்க.. இதுல என்னை சொல்றீயா.. நீ.. ??" என்று.. இஷானியின் தந்தை இஷானி வீசும் முட்டைகளை.. நான் ஸ்டிக் பேனால்.. எதிர் தாக்குதல்.. புரிந்தார்.. 🤓
விக்ரமிற்கு அப்போது தான்.. தெரிந்தது அவர் இஷானியின் தந்தை..
கனிவும் அன்பும் தழும்பும் கண்கள், அதற்கு அரணாக முக கண்ணாடி அணிந்திருந்தார்.. ஐம்பதை தொட்டுவிட்டார் என சொல்லும்.. முகச்சுருக்கம்.. மரியாதைக் உரியவராகவே.. விக்ரமின் கண்களுக்கு தென்பட்டார்.. ஆனால்.. அவரோ.. சிறுப்பிள்ளை போல தன் மகளுடன் விளையாடுவதை கண்டு.. மென்னகை காட்டியது.. விக்ரமின் இதழ்கள்.. 🙂
"நா எதுக்கு.. வேலை.. பண்ணனும்.. ?? எனக்கு வரப் போற.. என்னோட புருஷன்.. எனக்காக எல்லாமே பண்ணுவான்.." இஷானி.. கோபமே இல்லாமல்.. கூறியதும்.. 🤨🤨
விக்ரம்.. கதவை நொண்டிக் கொண்டே.. வெட்கச் சிரிப்பை உதிர்த்தான்...☺️☺️
அவளின் தந்தை.. "நானும்.. பாக்கறேன்.. உனக்கு வாய்க்கப் போற அந்த இளிச்ச வாயன.." என்றவர்.. உரைத்ததும்..😜
விக்ரமிற்கு புரையேறியது.. 🥴🥴
அது.. இருவரின் கவனத்தையும் ஈர்த்து விட்டது.. யாரென.. தெரியாமல்.. விழித்தார்.. இஷானியின் தந்தை.. 🙄
முதலில் வரவேற்றது... இஷானி தான்.. இதழை விரித்து.. "ஹே.. விக்கி.. வா.. ஏன் அங்கேயே நின்னுட்ட.. ??" என்கவும்.. 😀
இஷானியின்.. தந்தைக்கும் அப்போது.. தான்.. புரிந்தது.. தன் மகளின் காதலன் என்று.. "ஹோ... வாங்க.. வாங்க.. நீங்க தான.. அது.. உங்கள பத்தி நிறையா சொல்லிருக்கா.. சும்மா சொல்லக்கூடாது.. மாப்பிள்ளை ரொம்ப கம்பீரமா.. லட்சணமா.. தான் இருக்காரு.." என உற்சாகமாகவே.. விக்ரமை இல்லத்திற்குள்.. அழைத்தார்.. 🤓🤓
"என்னன்னு.. என்னை இளிச்சவாயனா.. ??" என.. புன்னகையோடே வினவினான்.. விக்ரம்.. 😀
தங்களின் விளையாட்டு பேச்சுக்களை.. தவறாக நினைத்து விட்டாரோ.. என்று அச்சம் கொண்டார்.. இஷானியின்... தந்தை..
"அது.. வந்து மாப்பிள்ளை.. விளையாட்டுக்கு சொன்னது.. தப்பா நினைச்சுக்காதீங்க.." என்றவர்.. தலையை சொரிந்த படியே.. கூறி முடிக்கவில்லை.. 🙄
"அட.. அது எனக்கு தெரியும்.. சும்மா விளையாட்டுக்கு சொன்னேன்.." என்று விக்ரம் உரைத்ததும் தான்.. ஆசுவாசம் கொண்டார்.. 🤓🤓
இஷானியை.. தேநீரை தயாரிக்க செய்ய சொல்லிவிட்டு..
இஷானியின்.. தந்தை விக்ரமை அழைத்து.. சோஃபாவில் அமர செய்தார்..
"சரி.. என்னைப் பத்தி.. சொல்லிடறேன்.. என் பேர் ஜான்.. ஜான் மில்டன்.. பேங்க் மேனேஜர்.. என் பொண்ணு ஸ்டேஃபி இஷானி.. அவ அம்மா.. சின்ன வயசுலேயே.." என்றவர்.. தொண்டை அடைக்க.. நிறுத்திவிட்டு.. மீண்டும் தொடர்ந்தார்.. 😔
விக்ரமும்.. அவரின் கையே பற்றினான்.. ஆறுதல் கூறும் விதமாக.. இது.. இஷானியின் தந்தை மனதை தொட்டது..😌
"இவங்கம்மா.. பயந்த சுபாவத்தாலேயே.. இறந்துட்டாங்க.. இஷானி அம்மா.. வெளியே கடைக்கு.. போனா.. பின்னாடி.. யாரோ நாலு பேர் துரத்துராங்கனு.. பயத்திலே.. கார் எதிர்ல வர்றது கூட தெரியாம.. மோதி.. ம்ப்ச்.. முடிஞ்சுத பத்தி.. ஏன் சொல்றன்னு யோசிப்பீங்க.. ?? அதனால தான்.. என் பொண்ண கொஞ்சம் தைரியமா வளத்திட்டேன்..." என்று கூறிக் கொண்டிருக்கும் போதே.. இஷானி.. தேநீர்.. கொண்டு வந்து.. அவர்களுக்கு தந்து விட்டு.. அவளும்.. அமர்ந்தாள்.. 🙂🙂
"எடுத்துக்குங்க.. நான் ஏன் சொல்றேன்னா.. அது திமிரு.. அப்படின்னு நினைக்கக் கூடாதுல.. அதுக்கு தான்.. என் பொண்ணு.. எந்த முடிவெடுத்தாலும்.. சரியா எடுப்பா.. அந்த மாதிரி தான் நீங்களும்.. என்ன தான்.. இஷானிய அம்மா இல்லாத குறை தெரியாம வளத்தினாலும்.. அவளுக்கும் ஒரு ஒரத்தில.. அந்த ஃபீல் இருக்கு.. அத நீங்க எல்லாமுமாக... அவ கூட இருந்து போக்கனும்.. நீங்க பணக்காரங்க.. நாங்க கிருஷ்டின்.. உங்களுக்கு அதுல.." என்று இஷானியின்.. தந்தை ஜான் பேசிக் கொண்டே மதத்தை முன்னிறுத்தி கேள்வியை எழுப்பினார்.. 🙂🙂
"ச்சே.. ச்சே.. அதெல்லாம்..
நானும் சரி.. வீட்லயும் சரி இந்த ஜாதி மதம்.. எதுவும்.. பாக்க மாட்டோம்.. அது பிரச்சினையே.. இல்ல.. என் வைஃப் நா நல்லா பாத்துப்பேன்.. கவலப் படாதீங்க.. மாமா.." என்று.. விக்ரம்.. அவர் முகத்தில் புன்னகை அரும்பு துளிர்த்தது.. 😀
"என்னை பத்தியும்.. சொல்லிடறேன்.. என் பேரு விக்ரம தேவன்.. அப்பாவோட பிஸ்னஸ பாத்துக்கறேன்.. அம்மா.. ஹவுஸ் வைஃப்.. இஷுக்கு முன்னாடி லவ்வெல்லாம் கிடையாது.. பட் சைட் அடிப்பேன்.. எப்பையாவது.. லைட்டா குடிப்பேன்.. தம்மும் எப்பையாவது தான்.. தப்பா நினைச்சுக்காதீங்க.. உங்களுக்கு என்னை பிடிச்சிருந்தா தான்.. உங்க பொண்ண கல்யாணமே பண்ணிப்பேன்.. சொல்லுங்க.. உங்களுக்கு பிடிச்சிருக்கா.. ??" என்று விக்ரம்.. அவரின் முகத்தையே ஆர்வமாக நோக்கினான்.. 🧐🧐
"உங்கள எனக்கு ரொம்ப பிடிச்சு போச்சு.. குடிக்கறத.. பத்தி எல்லாமே வெளிப்படையா சொல்றதும்.. உங்க விளையாட்டு சுபாவம்.. எல்லாமே எனக்கு பிடிச்சு போச்சு.. நீங்க தான்.. என்னோட மாப்பிள்ளை.." என புன்னகையோடே.. விக்ரமின் தோளில் கைப் போட்டார்.. 😄
விக்ரமும்.. அவரின் பதிலில்.. மகிழ்ச்சியடைந்து.. பதிலுக்கு.. அவரின் தோளில் கைப் போட.. 😀
இஷானியின் தந்தை.. விக்ரமை பார்த்ததும்.. இளித்துக் கொண்டே கையை விலக்க போக.. இஷானியின் தந்தை ஜானே.. திரும்பி விக்ரமின் கையை தன் தோளில் வைத்துக் கொண்டு.. புன்னகைத்தார்.. 😄😄
விக்ரமும் பதிலுக்கு வெடித்து சிரித்தான்.. 😄
இவர்களை கண்டு.. இஷானிக்கு.. ஆனந்த கண்ணீர் அரும்பி.. புன்னகை பூத்து நின்றாள்..🥺
விக்ரம்.. இஷானியை பார்த்து கண்ணடிக்கவும்..😉 இஷானிக்கு.. வெட்கத்தில் கண்ணம் சிவந்து.. விக்ரமை காதலாக பார்த்தாள்...☺️☺️🥰🥰
--------------------
To be continued... 😉
(Hiiii.. dudzz.. College la.. prj work la konjam busy aayitean.. adhukaga.. enakku kudukura aadharava.. niruthiradhinga.. plzzz.. support pannunga.. kandippa vote and comments.. romba mukiyam.. marandhuradhinga.. 🥰🥰🥰)
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro