அத்தியாயம் - 24 😟
நீ எனக்கு என்ன உறவென்றே..
அறியாமல்..
எந்தன் கடைசி நம்பிக்கையாக நினைத்து வந்தேன்..
உலகின் மொத்த வலிகளை ஒற்றை வார்த்தையில் தெளித்ததன்.. நியாயம் என்ன.. ??? 😰
🌞 வெய்யோன்.. தன் ஒளிக் கீற்றுகளை உள்ளிழுத்து.. 🌃 இரவென்னும்.. கரு வண்ண பொடியை வாரி இறைக்க தயாரானான்..
வித்யுத்தின் திட்டம் இதுவே..😈
ஷிவாக்ஷியை எப்படியாவது.. வரவேற்பறையில் இருக்கும் அறைக்குள் வர வைத்துவிட்டால்.. வித்யுத்தும் அவ்வறைக்குள் நுழைந்து விட்டால்.. போதும்.. ஷிவாக்ஷியை தவறாக எண்ண வைக்க.. 👿
இதை ஷ்ரித்திக்கின் குடும்பத்தினர் இருக்கும் மட்டும் செய்தால்.. இதன் வீரியம்.. குறைவு..
ஆனால்.. இத்தனை பெரும் புள்ளிகளும், விருந்தினர்களும், உறவினர்களும்,.. இருக்கும் இச்சபையில் அவர்களின் திட்டம் ஈடேறினால்.. ஷிவாக்ஷியை நிச்சயம் தூற்றுவார்கள்.. திரும்பவும் ஷ்ரித்திக்கிடம் நெருங்கும் வாய்ப்பற்று போய்விடும்.. ஷ்ரித்திக்கே கோபத்தில் வெளியேற்றி விடுவான்.. இதன் வீரியம் பெருமளவு என்ற குரூரமான எண்ணம் தான்.. இதனால்.. வித்யுத்தை தவறாக எண்ணுவதும்.. அவனை வெளியேறச் சொல்வதைப் பற்றிய கவலை அவனிடம் இல்லை.. 😈😈
அவர்கள் மூவரும் நினைத்ததை போலே.. எண்ணம் ஈடேறிய ஆணவச் சிரிப்பு இருக்கும் இதழ்கள்.. ஷிவாக்ஷியை துச்சமேன உதிர்க்கும் பார்வையுமாக இருந்தனர்.. சமீராவும்.. அவளின் மகள் மாயாவும்..🤨🤨
ஷிவாக்ஷியை உள்ளே அனுப்பி விட்டு.. நகர்ந்த சமீரா.. நேரே தன் அண்ணியாரும்.. ஷ்ரித்திக்கின் அன்னையுமான.. இந்திரகவியிடம் வந்தவர்.. "அண்ணி.. ஷிவாக்ஷி எங்கே.. ?? அவளே காணோம்.. நா அவளுக்கு செயின் கிஃப்ட் பண்றதுக்காக தான் கேட்டேன்.." என்று ஒன்றும் அறியாதவராக.. வினா எழுப்பினார்.. சமீரா.. 🙂
தன் உறவினர்களுடன் கதையளத்துக் கொண்டிருந்த இந்திரகவி.. தன் நாத்தனாரும், மாயாவின் அன்னையுமான.. சமீராவிடம்.. "என்ன.. சமீரா.. நீ.. ?? இதெல்லாம் செய்யனுமா என்ன.. ?? அவ இவ்வளோ நேரம் இங்க தான்.. ஷ்ரித்திக் கூட தான இருந்தா.. ?? எங்க போனா.. ??" என்று இந்திரகவி ஒரு புறம்.. ஷிவாக்ஷியை தேடினார்.. ☺️
சித்தி தேவிகாவிடம் இந்திரகவி விசாரிக்கவும்.. "ஷிவுவ.. நா கவனிக்கலையே.. ?? ஷ்ரித்திக் கூட தான் கடைசியா.. பாத்தேன்.." என்றதும்.. 🙁
இந்திரகவி.."எங்க போனா.. ??" என்று வாய்விட்டு யோசிக்கவும்.. சமீரா.. "இருங்க அண்ணி.. நா ஷ்ரித்திக்கிட்ட கேக்கறேன்.." என்று ஷ்ரித்திக்கின் அருகே வந்து வினவினார்.. 🙂
ஷ்ரித்திக்.. 'இவரோடு தானே கதையளத்தாள்.. ஷிவாக்ஷி.. ?? இப்போது இவரே வந்து வினவுகிறாறே.. ?? ஏதோ.. சரியில்லை..' என்று மனதில் நினைத்தாலும்..🤔 வெளியே நிமிர்வாகவே.. சாதாரணம் போல் பதிலளித்தான்.. 😎 "அந்த பக்கம் தான் போனா.. அத்தை.." என்று கூறுவதற்கும்.. ஷ்ரித்திக்கின் அம்மா இந்திரகவி வருவதற்கும் சரியாக இருந்தது.. 🙁🙁
இந்திரகவி.. தன் மகனின் சொற்களை கேட்டு கொண்டு தான் அங்கு வந்தார்.. "என்ன.. எங்க போனா இந்த பொண்ணு.. ?? ஹ்ம்ம்ம்ம்.. ??" என்று இந்திரகவி புலம்பலாக மொழிந்தார்.. 🙁🙁
தான் பெற்ற மக்களிடம் கேட்கலாம்.. என்று நினைத்ததும்.. இந்திரகவி முன் நின்றனர்.. சஞ்சையும் ராகுலும்.. ☺️☺️
சஞ்சை.. "அம்மா.. அங்க அப்பா உன்ன கூப்பிடுறாரு.. நீ இங்க என்ன பண்ற.. ??" என்று வினாவை எழுப்ப.. 🤨
ராகுல்.. குறுக்கிட்டான்.. "அம்மா.. என்ன உங்க முகமே சரியில்ல.. ?? அத்தையோட முகமும் சரியில்ல.. ?? அண்ணா என்னாச்சு.. ??" என்று.. தன் பெரியாம்மாவிடமும் தன் தமையனிடமும் வினவினான்.. 🤔🤔
இந்திரகவி.. "அந்த அளவுக்கு எல்லாம் ஒன்னும் ஆகல.. ஆமா.. ஷிவு எங்க.. ?? அவள பாத்தீங்களா.. ??" என்று.. திருப்பி கேள்வியை கேட்டார்.. 🤔
அப்போது அங்கு வந்துச் சேர்ந்த மாயா.. "ஹோ.. இந்த வீட்டோட மருமக.. மகாராணி.. அவளைத் தானா தேடுறீங்க.. ?? இதோ.. அந்த கெஸ்ட் ரூம்க்குள்ள தான் போனா.." என்று எகத்தாளமாக கூறினாள்.. 🤨
"ஏய்.. நீ சொன்னா.. நா அத நம்பணுமா.. ?? உன் வேலைய பாத்துட்டு போ.." என்று சமீரா.. இடையில் புகுந்து கண்டித்தார்.. மாயாவிடம் கண்ணடித்தார்.. 😈😉
தன் தாயின்.. நடிப்பை மெச்சிக் கொண்டும்.. அவரின் சமிக்ஞை அறிந்த மாயா.. "எனக்கென்ன வந்துச்சு... ?? உங்ககிட்ட போய் சொன்னேன்ல.." தன் தலையை அடித்துக் கொண்டு.. கழுத்தை இடித்து நகர போக இருந்தவள்.. வர்ஷாவின் மொழிகளில் "நான்தான் சொன்னேன்ல.. ??" என்று குற்றம் சாட்டி விட்டு நகர்ந்தாள்.. 😈
அங்கு அவர்களின் உரையாடலை கேட்டுக் கொண்டே.. வந்து சேர்ந்த.. வர்ஷா.. "ஷிவுவ.. தானே தேடறீங்க.. அந்த கெஸ்ட் ரூம்க்குள்ள தான் போனா.." என்று அவர்களின் கேள்விக்கு பதிலளித்தாள்..☺️☺️
சமீரா.. தூண்டிவிடும் முயற்சியாக.. "அந்த ரும்ள என்ன பண்றா.. ?? இங்க இத்தனை பேர் இருக்காங்க.." என்க.. 😠
இந்திரகவி.. "போய் அவள கூட்டிட்டு வா.." என்று வர்ஷாவிடம் ஷிவாக்ஷியை அழைத்து வர உரைத்தார்..☺️
வர்ஷா.. அந்த அறையின் கதவை திறக்க முயற்சித்தாள்.. அது உள்பக்கம் தாழிட்டு இருந்ததாக நினைத்து.. ராகுலை அழைத்தாள்.. 🤔
வர்ஷா.. "ராகுல்.. கதவு திறக்க முடியல.. ?? இந்த ரூம்ல வேற நாம கூப்படறது உள்ள கேக்காது.. இப்ப என்ன பண்றது.. ??" என்று ராகுலிடம் மொழிய..😕
ராகுல்.. வர்ஷாவின் மண்டையில் தட்டி.. "ஹே லூசு.. யாரோ.. கதவை பூட்டி இருக்காங்க.. ?? இதோ.. சாவி இங்கயே இருக்கு.." என்று கதவின் அருகிலிருந்த மேஜையில்.. சாவியை எடுத்து.. கதவை திறந்தான்..☺️☺️
சாவியை.. வேண்டுமென்றே.. அந்த அறையின்.. முன்னேயே வைத்திருந்தாள்.. மாயா.. 😡
ஷ்ரித்திக், விக்ரம், இஷானி.. மொத்த குடும்பமும்.. விருந்தினர்களும்.. குழுமியிருந்த வேளையில்..
கதவை திறந்ததும்.. ராகுல்.. மட்டுமல்லாது.. அனைவரின் பார்வையும்.. திடுக்கிட்டு திரும்பி பார்க்கச் செய்தது.. ஷிவாக்ஷியின் கோலம் மற்றும் வித்யுத்தின் செயல்.. 🤯🤯
ஷிவாக்ஷியின்.. பின் புற ரவிக்கை கிழிந்து.. தொங்கிக் கொண்டிருக்க.. வித்யுத்தின் பார்வை.. ஈயாய் மேய்ந்தது அவளிடம்.. 😰
அப்போது வித்யுத் உதிர்த்த அவ்வார்த்தை ஷ்ரித்திக்கை மேலும் சூடேற்றியது.. "என்ன.. ஷிவாக்ஷி.. ?? நான் தான் இப்ப வேணாம்னு சொன்னேன்ல இப்ப பாரு.. இப்படி ஆயிடுச்சு.." என்று துளியும் கோபமற்று கொஞ்சல் போல ஷிவாக்ஷியிடம் இறைத்தான்.. வித்யுத் 😈😈
ஷிவாக்ஷி.. உச்சக்கட்ட அதிர்வலைகளில் சிக்கி பின்னி பிணைந்திருந்தாள்.. எந்தவொரு பாவைக்கும் இப்படியொரு நிலை வரவேக் கூடாது.. ?? அனைவரின் முன்னிலையிலும்.. இப்படி நிகழ்ந்து.. என் மானம் பறிபோனதே.. ?? என் மேனியை மறைக்கும் வஸ்திரம் கூட இல்லாதது.. என் துரதிர்ஷ்டமா.. ?? என்று அவமானத்தை தாங்காது துடிதுடித்து கொண்டிருந்தாள்.. 😰😰😰 சுவற்றில் சாய்ந்து மண்டியிட்ட படியே கீழே அமர்ந்து.. தன் தலையை அடித்துக் கொண்டு.. தன் கரத்தில் முகத்தை பதித்து.. தேம்பி தேம்பி கதறினாள்.. 😭😭😭
ஷ்ரித்திக்.. இதை முற்றிலுமாக எதிர்பார்க்க வில்லை என்பதை அவன் பார்வையே குற்றம் சாட்டியது.. தன்னவளா.. ?? இந்நிலையில்.. ?? ஷ்ரித்திக்கின் மனதுள் ஆயிரம் கேள்விகள்.. அவனுக்குள் பூகம்பமே நிகழ்ந்தேறியது.. அவனுக்குள் இப்போது.. கோபம் உலைக்களமாய்.. ஷ்ரித்திக்கின் நேத்திரம் அனலை வாரி இறைத்தது..😠😠
குடும்பத்தினர் மிரட்சியாக பார்த்தனர்.. அவர்களுக்கு தெரியும்.. ஷிவாக்ஷி நல்ல பெண்.. என்று.. ஆனால் இத்தனை ஆட்கள் மத்தியில்.. இப்படி நிகழ்ந்து விட்டதே.. ? என்ற கவலை ஒரு பக்கம்.. ?? எப்படி நடந்தது.. ?? என்கிற பரிதவிப்பு ஒரு புறம்.. ஷிவாக்ஷிக்கா.. இப்படி நடக்க வேண்டும்.. ?? என அவளுக்காக மனம் உருகியது.. அவர்களுக்கு..😟😟😟
ஷ்ரித்திக்.. ஷிவாக்ஷியின் செயலை தாங்காது.. வெளியேறி விடு.. என கோபத்தில் சொற்களை கொட்டி விட்டான்..
ஷ்ரித்திக்கை.. தன்னுடைய ஒரே நம்பிக்கைக்கு உரியவனாக.. நினைத்திருந்தாள்.. தன்னை நம்புவான் என்று நினைத்தாள்.. 😭😭.. அதெல்லாம்.. நீரில் வரைந்தவை என்று ஷ்ரித்திக்கின் அவ்வார்த்தை தெரிய வைத்தது.. ஷிவாக்ஷிக்கு.. 😭😭 ஏற்கெனவே.. அவமானத்தால்.. கூனி குறுகியவள்.. அவ்வார்த்தையில் உயிரையே இழந்தார் போல.. வலியில் அவளின் உயிர் கண்ணீர் வாயிலாக வெளியேறுவதாக உணர்ந்தாள்.. அவ்வார்த்தைக்கு பதிலாக அவ்விடத்திலே.. தன்னுயிரை எடுத்திருக்கலாமே.. ?? என்றவளின் மனமே கேள்வியை தொடுத்தது.. கேட்கத் தான்.. நா பிரளவில்லை..😭😭
ஷிவாக்ஷி.. இஷானியோடு.. நடக்கும் போது.. ஷ்ரித்திக் விரலை சொடுக்கிட்டு தடுத்தான்.. 😎😡
திரும்பி பார்த்த.. இருவரும்.. "உன்.. ஃப்ரண்ட்.. ஷிவாக்ஷியோட.. ட்ரெஸ், திங்ஸ்.. எல்லாம் எடுத்துட்டு போக சொல்லு.. அப்பறம்.. அதெல்லாம்.. அவளையே வைச்சுக்க சொல்லு.. கோவில் வாசல்ல இருக்கிறவங்களுக்கு பிச்சையா போட்டேன்னு நினைச்சுக்கறேன்.." என்று ஷ்ரித்திக்.. அவர்களை பார்க்காமல்.. ஆத்திரத்தில்.. வார்த்தைகளை கண் மண் தெரியாமல் கொட்டினான்.. 😡😡
ஷிவாக்ஷிக்கு.. ஷ்ரித்திக்.. உதிர்த்த வார்த்தைகளில்.. ஏற்கெனவே துவண்டு கிடந்தவளுக்கு.. விரக்தி நகையே அவள் இதழ்கள் அப்பியது.. 😏
இஷானியால்.. இதற்கு மேலும் பொறுக்க முடியாமல் கத்தினாள்.. 😡😡 "வார்த்தைய அளந்து பேசுங்க.. மிஸ்டர்.. நீங்க எல்லையே மீறி போறீங்க.. யாருக்கு வேணும் நீங்க போடற அந்தப் பிச்சை.. இன்னும் கொஞ்ச நாள்ல என் அத்து உங்ககிட்ட பணத்த குடுத்துருவா.." என்று விரல்களை நீட்டி எச்சரித்து.. இன்னும் பேச போன.. இஷானியை கை உயர்த்தி நிறுத்துமாறு தடுத்தான்.. ஷ்ரித்திக்..🤚😎
ஷ்ரித்திக்.. இப்போதும் அவர்களை பார்க்காமல்.. "உங்க வார்த்தைய கேக்கறதுக்காக.. ஒன்னும் நா இந்த வீட்ட கட்டல.. நீங்க.." என்று ஷ்ரித்திக் உரைத்த படியே.. வாசலை நோக்கி கைகாட்டினான்.. 😡😎
இஷானிக்கு கோபத்தில் முகமே சிவந்து போனது.. "ஏய்.. இன்னும் எதுக்கு டி.. இங்க நிக்கற.. ?? இன்னும் அவங்க உன்ன அசிங்கப் படுத்தவா.. ?? வா டி.." என்று இஷானி ஷிவாக்ஷியை இழுத்து கொண்டு விருட்டென்று நடந்தாள்.. 😡😡
ஷ்ரித்திக்.. வித்யுத்திடம் திரும்பி.. "என்ன.. ?? உனக்கு தனியா.. சொல்லனுமா.. ?? வெளியே போடா.." என்று வித்யுத்திடம் கர்ஜித்தான்.. 😡
சமீரா.. மாயாவின் முகத்தில்.. அவ்வளவு நிம்மதி.. விஷ நகையும் நிறைந்திருந்தது.. 😈😈
வித்யுத்.. அவர்களை பார்த்து.. கண்ணடித்து சமிக்ஞை செய்தபடியே நகர்ந்தான்.. 😉.. அவனின் முகத்திலும்.. 'இனி.. ஷிவாக்ஷி எனக்கு தான்..' என்ற வெற்றி களிப்பு நிறைந்து.. விஷம நகையை சிந்திக் கொண்டிருந்தது..😈
வித்யுத்தும்.. நகர்ந்து செல்ல நினைக்கும் போது.. "என்ன வித்யுத்.. ?? நீ நினைச்ச மாதிரி எல்லாம் பேசினேனா.. ?? இன்னும் ஏதாவது பேசனும்னா சொல்லு.. பேசிடலாம்.." என்று ஷ்ரித்திக்.. இப்போது.. ஊடுருவும் பார்வையை.. வித்யுத்திடம் வீசினான்..😎😕😡
ஷ்ரித்திக்கின் சொற்களை எதிர்பார்க்கவில்லை என்று வித்யுத் முகமே காட்டிக் கொடுத்தது.. 😟😟
திடுக்கிட்டு திரும்பினர்.. சமீராவும் மாயாவும்.. 😰😰 ஒருவரையொருவர் பார்த்து அச்சமடைந்தனர்..
வித்யுத்தின் முகம் வெளிறி வெலவெலத்துப் போய் இருந்தது.. 'ஷ்ரித்திக்கிற்கு அனைத்தும் தெரிந்து விட்டதா.. ?? இனி இவன் என்ன செய்ய போகிறான்.. என்று நினைத்தாலே.. பயமாக இருக்கிறதே.. ??' என்று அச்சத்தில் உறைந்து போய் நின்றான்.. வித்யுத்.. 😰😰
ஷ்ரித்திக்கின் வார்த்தைகள்.. ஷிவாக்ஷி, இஷானியின் செவிகளையும் தீண்டியது.. ஷிவாக்ஷி அங்கிருந்து சென்றால் போதுமேன்றே குறியாய்.. இஷானி தான்.. ஷிவாக்ஷியை இழுத்து பிடித்து நிற்க வைத்து கொண்டிருந்தாள்..🤔🤔 யோசனையின் இழையோடு..
வித்யுத்தின் மீது.. இப்போது அனல் தகிக்கும் பார்வையாய்.. ஷ்ரித்திக்..😡😡
ஷிவாக்ஷி.. இஷானி கொடுத்த.. துப்பாட்டாவை அணிந்திருந்தாலும்.. முழுவதுமாக.. அவள் உடலை மறைக்க முடியவில்லை.. அந்த துப்பாட்டா.. ஓரத்தில் தான் பட்டு போன்று ஜரிகை அமைத்து கெட்டியாக இருந்தது.. நடுவே மென்மையாக இருந்ததால்.. ஷிவாக்ஷியின் உடலை அப்படியே காட்டியது..😖😖
அதை கவனித்த..
ஷ்ரித்திக் தன் கோர்ட்டை கழட்டி.. இஷானியிடம் கொடுத்து.. ஷிவாக்ஷிக்கு அணிவிக்குமாறு.. கூறிவிட்டு..
ஷ்ரித்திக்.. வித்யுத்தின்.. தலையை கொத்தாக பிடித்து இழுத்து.. சுவற்றில் பலமாக மோதினான்.. சுவரே சிதைந்து போயிருந்தது.. ஷ்ரித்திக்கின் அடியில்..🤕🤕
ஷிவாக்ஷிக்கு.. இப்போது மானம் காப்பதே பிரதானம் என்பதால் மறுக்காமல்.. ஷ்ரித்திக்கின் ஆடையை அணிந்து கொண்டாள்..🙁
ஷ்ரித்திக்கின் அடியை பார்த்த.. ஷிவாக்ஷிக்கு.. பெரும்.. ஆச்சரியம்.. ஷ்ரித்திக்கிற்கு சண்டையிட தெரியுமா.. ?? என்பது தான் அது.. 😜
(இந்த ரணகளத்துலையும்.. ஒரு கிளுகிளுப்பு.. 🤨)
அவளின் விளையாட்டு தனமான.. மனம்.. அதை யோசித்திருந்தாலும்..
மனம் முழுக்க.. அந்த காயத்தின் வலியால்.. துடித்துக் கொண்டு இருந்தாள்.. 😖😖
அவமானத்தின் காயம்.. அவ்வளவு விரைவாக ஆறக் கூடிய ஒன்றா.. ?? பெண் மனமே ஒரு பூவை காட்டிலும் மென்மையானது.. அந்த மென்மையை கசக்க கூர் ஆயுதம் தேவையில்லை.. சிறிய கீறலே (சொல்லே) போதுமானது..
ஆனால்.. அப்படி பட்ட மெல்லிய மென்மையை.. அழிக்க.. எடுக்கும் பிரம்மாஸ்திரமே.. பெண்மையை அழிக்க எண்ணும் வக்கிர எண்ணம்..
அதில்.. தன்மானம் என்பதை பறித்துவிட்டால்.. நேரடியாக அவமானம் என்ற காலடியில் இட்டு மிதித்து கசக்கி.. குப்பைகளுக்கு இருக்கும்.. மரியாதை கூட.. அதில் அடிப்பட்டவர்களுக்கு இல்லாமல் போவதன் காரணம் என்னவோ.. ??
காலப் போக்கில் மறந்தாலும்.. ஒரு சிலர் நினைவு கூர்ந்து கேட்கும் போது.. அப்பொழுது.. அனுபவித்த அதே வலியை உணரும் அவ்வேளையில்.. இன்னுமா.. பிரபஞ்சத்தில் இருக்கிறோம்.. ?? என்றே தோன்றுமல்லவா..
இஷானியோ.. 'போடு.. இன்னும் நாலு சேத்தி போடு..' என்று மனம் கூப்பாடு போட்டது.. தன் தோழியை அவமானத்தின் உச்சிக்கே அழைத்து சென்றவனை.. அப்படியே விட அவளுக்கு மனம் வருமா.. ??😠😠
வித்யுத்தின் தலையில் இருந்து ரத்தம் வழிந்த வண்ணம்.. வலியில் துடித்துக் கொண்டிருந்தான்..🤕
சமீராவும்.. மாயாவையும் கேட்கவும்.. வேண்டுமா.. ?? அவர்களின் நிலையை சொல்லவும் வேண்டுமா.. ?? அவர்கள் முகமே அச்சத்தை விரவிக் கொண்டிருந்தது.. மற்றொரு.. பக்கம்.. எப்படி இத்திட்டம் ஷ்ரித்திக்கிற்கு தெரிந்தது.. ?? இப்படியொரு நல்லத் திட்டம் பாழானதே.. ?? என்ற பெரும் கவலை அவர்களுள்.. 😰🥴🤔
குடும்பத்தினர்.. அனைவரும் இன்னும் புரியாத நிலையிலே.. 'அவன் தான்.. தன் மனைவியை திட்டினான்.. ?? இப்போது அவனே.. வித்யுத்தையும் அடிக்கிறான்.. ?? இவனை புரிந்து கொள்ளவே.. தனியாக ஒரு பிறவி எடுக்க வேண்டும் போலே.. ??' என்று நினைத்திருந்தனர்.. அவர்களுக்கு புரியவில்லை. இப்போது.. நாம் என்ன உணர்வை வெளிப்படுத்துவதென்று.. ??😕😕
குடும்பத்தினருக்கே புரியவில்லை.. விருந்தினர்களுக்கு புரிந்திருக்குமா.. ?? வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர்.. அறசல் புரசலாக பேசிக் கொண்டே..
வித்யுத்.. எதிர்த்தாக்குதலாக.. கையை உயர்த்தி.. அடிக்க வந்தவனை.. லாவகமாக கையாண்டான்.. அவனின்.. கையை பற்றி கரும்பை உடைப்பதை போல.. அவனின்.. கையை உடைத்தெடுத்தான்..🤕😎
வயிற்றிலும்.. மார்பிலும்.. எட்டி மிதித்துக் கொண்டே இருந்தான்.. வெறியும் கோபமும் அடங்குமட்டும்.. 😡😡😡 ஷ்ரித்திக்..
ஷ்ரித்திக்கின் தாக்குதலில்.. மொத்தமாக துவண்டு போனான்.. வித்யுத்.. ரத்தம்.. வழிந்த நிலையில்.. கீழே விழுந்திருந்தான்.. தட்டு தடுமாறி எழுந்து நின்றான்.. வித்யுத்..🤕
"ஷிவாக்ஷியை.. கடவுளே.. ஏன்.. ஷிவுவே வந்து நா தப்பானவன்னு சொன்னாளே நா நம்ப மாட்டேன்.. கேவளம்.. நீயெல்லாம் சொல்லி.. நா நம்பி.. அவள.. வெளியே அனுப்பிடுவேனா.. ?? எனக்கு ஆரம்பத்தில இருந்தே.. உன் மேல ஒரு கண்ணு.. என்ன எனக்கு எப்படி தெரியும்னு யோசிக்கிறீயா.. ??" என்று அவனிடம் கதைத்து விட்டு..
ஷிவாக்ஷிக்கு... ஷ்ரித்திக்கின் வார்த்தைகள்.. காயம் பட்ட நெஞ்சில் மயிலிறகால் வருடியதாக இருந்தது..🥰
"விக்ரம்.." என்று தன் நண்பனை அந்த இல்லமே அதிரும் படி கர்ஜித்ததும்.. விக்ரமும்.. அதற்காகவே காத்திருந்ததை போல.. ஆப்பிள் ஐ பேட்டை திருப்பி.. அவ்வறையில் நிகழ்ந்ததை அப்படியே காண்பிக்க செய்தான்.. ஷ்ரித்திக்..😎😎
அனைவரும்.. பார்வையும் அருவெறுப்பாக நோக்கியது.. வித்யுத்தை..🤢
வித்யுத்திற்கு.. பெரும் குழப்பம்.. 'எப்படி இது சாத்தியம்.. ?? இந்த இல்லத்தில் கண்காணிப்பு கேமரா வெளியே மட்டும் தானே பொருத்தப்பட்டுள்ளது.. எந்த அறைக்குள்ளும் கிடையாதே.. ?? இது எப்படி.. ??' என்று குழம்பி தவித்தவனுக்கு.. விடையாய் அமைந்தது.. ஷ்ரித்திக்கின் மொழிகள்..
அனைவரும்.. வித்யுத்தை.. ஏளனமாகப் பார்த்து.. அவனை.. திட்டித் தீர்த்தனர்.. 😡😡
"இந்த வீட்ல.. வெளிய தான் சிசிடிவி கேமரா.. ரூம்குள்ள.. கிடையாதுன்னு.. நினைச்ச.. ?? ஆனா.. எப்படி இந்த ஃபுட்டேஜ்னு யோசிக்கறீயா.. ?? எனக்கு உன் மேல ஒரு சந்தேகம்.. அதான்.. ஷிவாக்ஷி கையிலிருந்த பேக்ல.. கேமரா ஃபிக்ஸ் பண்ணிருந்தேன்.. அது.. உன்னோட பேட் லக்.. அவ பச்சமண்ணு டா.. அது தான்.. அங்க நடந்தது.. நான் பாக்காமலே.. அப்படியே காமிச்சேன்.. அவளப் போயி.." என்று விட்டு.. ஷ்ரித்திக்.. முஷ்டியை இறுக்கி.. வித்யுத்தின் முகத்தில் சில குத்துக்களை தர.. அதில் சில பற்கள்.. கொட்டி போனது..🥴🥴
வித்யுத்தால்.. எதிர் தாக்குதல்.. புரிய இயலாத நிலையில் இருந்தான்.. 🥴🥴
ஷ்ரித்திக்கின் பார்வை.. அனலாக.. "என் பொண்டாட்டியவே அவமானப்படுத்த நினைச்சே.. உன்ன.." என்று ஆத்திரத்தில்.. வித்யுத்திடம்.. கத்திவிட்டு.. "விக்ரம்.." என மீண்டும் அதிரும் படி கத்தியதும்..😎😎
விக்ரம்.. ஷ்ரித்திக்கின் தூப்பாக்கி சேகரிப்பில் இருந்த.. ஒரு தூப்பாக்கியை எடுத்து வந்தவன்.. ஷ்ரித்திக் உயர்த்தி இருந்த கையில் தூப்பாக்கியை வைத்து.. "போட்டு தள்ளு மாப்ளே.." என்று விட்டு நகர்ந்தான்.. விக்ரம்..😠😠
குடும்பத்தினரும்.. விருந்தினர்களும்.. பயத்தில் உறைந்து விட்டனர்.. 😱😱
ஷிவாக்ஷியும்.. இஷானியும். ஒருவரையொருவர் பார்த்து கொண்டு.. அச்சத்தில் இருந்தனர்.. 😱😱
ஷ்ரித்திக்கின் அன்னை.. இந்திரகவி.. தன் தம்பியின் மகனா இப்படி.. ?? என்று ஒரு புறம் கோபமிருந்தாலும்.. மற்றொரு புறம்.. தன் தம்பிக்கு வாரிசாக இருப்பது.. இவன் ஒருவனே.. இவனும் போய்விட்டால்.. தன் சகோதரன் நிற்கதியாகிவிடுவானே.. ?? என்ற பயத்தில்.. தன் மகனிடம்.. கெஞ்சினார்..😰😰
"ஷ்ரித்திக்.. அவன விட்ருப்பா.. அவன் இனிமேல் நம்ம வீட்டுக்கே வரமாட்டான்.. நீ கொன்னுட்டா.. ?? நா என் தம்பிக்கு என்ன பதில் சொல்றது.." என்று தன் தாயின் கதறல்கள்.. ஷ்ரித்திக்கின் செவிகளை எட்டவில்லை..😰😰
உடன்.. ஷ்ரித்திக்கின் தந்தை.. தேவ தேவனும்.. "வேண்டா.. ஷ்ரித்திக்.. அம்மா பேச்ச கேளு.." என்று பதற்றம் கொண்டார்.. 😰
தன் அத்தை இந்திரகவி.. ஷ்ரித்திக்கை தடுப்பதால்..
வித்யுத்.. ஷ்ரித்திக்.. தன்னை கொல்ல மாட்டான் என்ற மிதப்பில் சிரித்து வைத்தான்.. "டேய்.. டேய்.. நீ அவ்ளோ வொர்த் இல்ல.. என்னை எல்லாம் நீ சுட மாட்ட.." என்று மிதப்பாக சொல்லிக் கொண்டு இருக்கும்போதே.. 😜😜
ஷ்ரித்திக்.. மேலிழுத்து.. க்ளாக்கை விடுவித்து.. சரியாக.. குறிப் பார்த்து சுட்டு விட்டான்..😎
அவையில் இருந்த அனைவரும்.. பயத்தில் கத்தியும்.. கண்களையும் காதுகளையும் மூடிய நிலையில் இருந்தனர்..😖😖😵
ஷிவாக்ஷி மட்டும்.. தன்னால் ஒரு உயிர்.. போய்விடக் கூடாது என்ற அச்சத்தின் வெளிப்பாடாக.. "அச்சோ.. வேண்டா.." என்று கத்தினாள்.. 😖😖
ஷ்ரித்திக் செவிகள்.. ஷிவாக்ஷியின் மொழிகளை ஆமோதிக்க தொடங்கியது.. 😎
வித்யுத் பயத்தில்.. வெளறி போய்.. சுட்டு விட்டானே.. குண்டு எங்கே.. ?? தோட்டா எங்கே.. ?? என்று தேட.. அப்போது தான் வயிற்றில் இருந்து சற்றே விலகியிருந்த.. வித்யுத்தின் ஆடையில் சுட்டிருப்பது.. தெரிந்தது.. அப்போது தான் ஆசுவாசமானான்..😱😱😵
தூப்பாக்கியை தன் தலையில் சாய்த்து.. வித்யுத்தை ஒற்றை புருவத்தை உயர்த்தி.. 🤨 "பயமா.. என் அம்மாவும் பொண்டாட்டியும் சொன்னதுனால.. உன்ன உயிரோட விடறேன்.. இன்னிக்கு நீ உயிரோட இருக்கறது.. நா உனக்கு போட்ட பிச்சை.. இன்னொரு தடவை ஷிவாக்ஷி பத்தி நினைச்சாலே.. உன் உடம்புல ஒடற ரத்தம்.. தரையிலே சிதறி ஓடும்.. எந்திரிச்சு பே.." என்று துச்சமாக.. கண்கள் சிவக்க.. வித்யுத்திடம் கர்ஜித்தான்.. 😡😡 ஷ்ரித்திக்..
வித்யுத்தே.. பயந்து போனான்.. இது நாள்.. வரை ஷ்ரித்திக்கை இப்படியொரு கோலத்தில் பார்த்ததில்லை.. அவன் கண்களில் தெரிந்த அந்த ஆத்திரத்தை.. கண்டு உடலெல்லாம் சில்லிட்டு போனது.. 😨 தட்டு தடுமாறி.. எழுந்து நடக்க முடியாமல்.. ஷிவாக்ஷியை வெறித்து பார்த்து விட்டு வெளியேறினான்.. வித்யுத்..🤕🤕
வந்திருந்த.. விருந்தினர்களையும்.. அவர்களுள்ளே பேசிவிட்டு.. ஷ்ரித்திக்கிடம் விடைபெற்று அவர்கள் அனைவரும்.. களைந்து சென்றனர்.. விக்ரம் தான் செல்ல வைத்தான்.. 🙂
நான் இனி இங்கு இருக்கக் கூடாது.. என நினைத்தவள்..
ஷிவாக்ஷி.. இஷானியிடம்.. 'போலாம்..' என்று இழுத்துக் கொண்டு நகர விழைந்தாள்.. 🙁🙁
இஷானியும்.. எந்த எதிர்ப்பும் தெரிவிக்காமல்.. ஷிவாக்ஷியின் இழுப்புக்கு நகர்ந்தாள்..😐
தன் தோழிக்கு நேர்ந்த அவமானத்தை கண்டு.. இஷானியால்.. மறுப்பேதும் சொல்ல முடியவில்லை..
சித்தி தேவிகா.. "எங்க.. போற.. ஷிவாக்ஷி.. ??" என்று
கேட்டு வைத்தார்..🤔
ஷ்ரித்திக்கிற்கு அப்போது தான்.. ஷிவாக்ஷி வெளியேற நினைப்பது.. தெரிந்தது.. 🤨
"இதுக்கு மேல.. இங்க இருக்கறது.. ?? நேக்கு சரியாப்படல.. நா இஷானியோட போயிடறேன்.." என்றவள்.. யாரின் பதிலையும் எதிர்ப்பார்க்கவில்லை.. ஷிவாக்ஷி.. தன் தோழியோடு.. நடையை கட்டினாள்.. ஷிவாக்ஷி.. 😒😒
"ஷிவு.. நில்லும்மா.. போகாத.. நாங்க.. அமைதியா இருந்தது.. தப்பு தான்ம்மா.." என்று ஷிவாக்ஷியை தடுத்தார்.. ஷ்ரித்திக்கின் அம்மா இந்திரகவி.. 😕😕
ஷிவாக்ஷியின் மனமறிந்து உதிர்த்த வார்த்தைகளில்..
இஷானியும் ஷிவாக்ஷியும்.. திரும்பி அவரை பார்த்தனர்..😒🙁
ஷ்ரித்திக்கின் சித்தப்பா.. தேவ தேவன்.. "நடந்தது எதுவுமே புரியாம இருந்தோம்.. அதுக்காக உனக்கு சப்போர்ட் பண்ணாம இருப்போமா.. ?? நாங்க பேசறதுக்குள்ளயே.. என்னென்னவோ நடந்துருச்சு.. ??" என்று ஷிவாக்ஷியிடம் சமாதானமாக மொழிந்தார்.. 🙁
தாத்தா அமரேந்திரர்.. "தப்பு.. நடந்துருக்கு.. யார் பேசலைனாலும்.. நா கண்டிப்பா.. உனக்காக.. பேசிருப்பேன்.. ஆனா.. ஷ்ரித்திக் இப்படியொரு சீன் கிரியேட் பண்ணுவான்னு.. தெரியலை.. அதுக்காக வீட்ட விட்டு போறது.. தீர்வாகாது.." என்க..🙁
அனைவரும்.. ஒரு புறம்.. சமாதான மொழிகளை தெளிக்க.. ஷ்ரித்திக்கின் அமைதி.. வேறெங்கோ நோக்கும் அவனின் விழிகள்.. தனக்கு இதில் சம்பந்தம் இல்லை என்றார் போல் இருந்த அவனின் செயலில்.. எப்போதும் கோபமடையாத ஷிவாக்ஷிக்கே கோபத்தை ஏற்படுத்தியது.. 😡
ஷிவாக்ஷியின் பார்வை இப்போது.. பொறி பறக்க நோக்கியது.. ஷ்ரித்திக்கிடம்..😡😡
ஷிவாக்ஷியால் பொறுக்க முடியாமல்.. ஷ்ரித்திக்கின் அருகே சென்று சட்டையை கொத்தாக பற்றினாள்..😡😡
இதை தானே.. ஷ்ரித்திக் எதிர்பார்த்தது.. 😎 அவளுடைய கோபத்தை மறைக்காமல்.. தன் மீது கொட்ட வேண்டும்.. என்று தான்..
எதிர்பாரா திருமணத்தில்.. ஷிவாக்ஷி தன் கோபத்தை வெளிப்படுத்தாமல்.. இருந்த நிலை.. ஷ்ரித்திக்கை பெரும் சங்கடத்தில் தள்ளியது..😒
இதை ஷிவாக்ஷியிடம் கேட்கையில்.. "உரிமை இருக்கும் இடத்தில் தானே.. கோபம் கொள்ள முடியும்.." என்று புன்னகையோடே உரைத்து விட்டாள்..🙂
இப்போதோ.. ஷிவாக்ஷியின் கோபத்தில்.. மகிழ்ச்சி தான் அடைந்தான்.. ஆனால்.. வெளிப்படுத்த வில்லை.. இதுவும் ஒரு வகையில்.. அவளுக்கு தன் மீதுள்ள விருப்பத்தையும்.. உரிமையையும் வெளிப்படுத்தும் முயற்சியே..😎
ஷிவாக்ஷி.. "ஏன்.. இப்படி பண்ணேள்.. ?? ஏன்.. ?? ஒருத்தர் தப்பு செஞ்சாங்கிறதுக்காக.. என்னை ஏன் பகடையா .. ?? நான் என்ன பண்ணேன்.. ?? எல்லா.. என்ன எப்படி பாத்தான்னு நோக்கு தெரியுமா.. ?? நேக்கு எவ்ளோ அவமானமா இருந்ததுன்னு தெரியுமா.. ?? முன்னாடியே.. கேட்டிருப்பேன்.. எல்லாரும்.. உங்க மேல அவ்ளோ மரியதை வைச்சிருக்கா.. அதை நா கெடுக்க விரும்பல.." என்று ஷ்ரித்திக்கின் சட்டையை பற்றி.. கதறினாள்.. ஷிவாக்ஷியின் கோபம்.. வெளிப்பட்டது.. கண்ணீராய்.. 😭😢
மாயாவும், சமீராவும்.. இதில் கோபமுற்று.. "ச்சே.." என்று நகர்ந்து சென்றனர்.. 😡😡
விக்ரம்.. இப்போதும் ஷிவாக்ஷியை தடுக்க போனான்.. தன் நண்பனை திட்டுவதை பொறுக்காது.. இஷானியின் விக்ரமின் கரம் பிடித்து தடுத்தாள்..😕😕
இஷானி.. "என்ன.. போய்.. என் ஃப்ரண்டா போல யாரு மச்சான்னு பாட போறீயா.. ?? புருஷன் பொண்டாட்டி நடுவுல நாம செகண்ட் பர்சன் தான்.. அதுமட்டுமில்ல.. இப்ப தான் அத்து.. கரெக்ட்டா பேசறா.." என்று கூறியதும்.. அதில் இருந்த உண்மையை உணர்ந்து அமைதியானான்.. விக்ரம்..🤔🙂
இருவரையும்.. தனித்து விடும் பொருட்டாய்.. மொத்த குடும்பமும் கலைந்து போக நினைத்தது..🙂
ஷ்ரித்திக் மீண்டும்.. கர்ஜித்து.. "யாரும் இங்கிருந்து போக கூடாது.." என்கவும்.. 🤨 அனைவரும் அவனின் சொல்லுக்கு கட்டுப்பட்டு அப்படியே நின்றனர்..
ஷிவாக்ஷிக்கு இருந்த கோபத்தில்.. அதெல்லாம் கண்களுக்கு தெரியவில்லை.. கண்ணீர் திரையிட்டிருந்ததே.. "வேற யார் இப்படி.. பேசிருந்தாலும்.. ?? கண்டுக்க மாட்டேன்.. போயிருப்பேன்.. ஆனா.. கட்டிண்ட ஆத்துக்காரே.. அவா பொம்மனாட்டிய நம்பலைன்னா.. ?? ஸ்ருஷ்டியில வேற யார் நம்புவா.. ?? நான் உங்கள.. அவ்ளோ நம்புனேன்.. நீங்க சொன்ன அந்த வார்த்தையில.. கிட்டத்தட்ட என் பிரானமே போயிடுத்து.. எல்லாரும்.. என்னை.. அவமானத்துல எனக்கு உடம்பே கூசிடுத்து.. கன்னியாதானத்திலயும் இப்படி.. இப்ப இங்கேயும் இப்படி.. ஏன் நேக்கு அவமானத்தையே தொடர்ந்து தரேள்.." என்று ஷிவாக்ஷி அழும் குரலில்.. கண்ணீரை துடைத்துக் கொண்டே கூறியதும்.. 😭😭.. 😩😫
ஷ்ரித்திக் துடிதுடித்து போனான்.. 😢😢 இப்போதும்.. வெளிப்படுத்தவில்லை.. 😎
"எனக்கு இந்த மாதிரி நடக்கும்னு தெரியாது.. எனக்கு உன்மேல நம்பிக்கை இருந்ததுனால தான்.. நான் கெஸ்ட் ரூம்ல நடந்தத.. நான் பார்க்காமலே.. எல்லாருக்கும்.. காட்டுனேன்.. நான் உன்ன எந்த காலத்திலும்.. ஹர்ட் பண்ண கூடாதுன்னு நினைச்சேன்.. ஆனா நானே உன்ன ஹர்ட் பண்ணிட்டேன்.. அதுக்காக.. .. என்ன மன்னி.." என்று மன்னிப்பை வேண்ட நினைத்தான்...😓 ஷ்ரித்திக்..
அதற்குள்.. ஷிவாக்ஷி.. ஷ்ரித்திக்கின் இதழ்களை பொத்தி விட்டாள்.. 😕
ஷிவாக்ஷி.. ஷ்ரித்திக்கை தடுத்தான்.. "நா உங்ககிட்ட மன்னிப்பு எதிர்பாக்கல்ல.. இனி இப்படி செய்யாதேள்..நேக்கு.. அது தாங்குற தெம்பில்ல.. நா எத்தனையோ நாள் தனியா இருந்திருக்கேன்.. நிறையா கஷ்டத்தை அனுபவிச்சு இருக்கேன்.. ஆனா ஒரு நாளும்.. நா செத்திடனும்னு.. பகவானான்ட வேண்டல.. முத முறையா.. வேண்டுனேன்.. செத்திடனும்னு " என்று இதழ்கள் துடிக்க.. கதறியவளை..😖😩😫 ஷ்ரித்திக்.. தாங்க முடியாமல்.. கட்டிக் கொண்டான்.. 😖
ஷ்ரித்திக்கின் விழிகளிலும்.. நீர் அரும்பியது.. அதை யாருமறியாமல்.. துடைத்து விட்டதாக நினைத்தான்.. ஆனால்.. அனைவரும்.. அவனையே விழியெடுக்காமல் பார்த்தனர்..😢
ஷிவாக்ஷியும்.. அணைப்பில் அடங்கியவள்.. பின் நினைவுக்கு வந்து தள்ளி நின்றாள்.. 😕
ஷிவாக்ஷி.. "இதுக்கு மேல.. நா இங்க தங்கறது.. நன்னாயிருக்காது.. நா கிளம்பறேன்.." என்று.. பட்ட அவமானங்கள்.. அவளுக்கு பாடம் புகட்டியதால்.. எடுத்த முடிவு..😕😕
ஷ்ரித்திக்.. இப்போது.. ஷிவாக்ஷியை முறைத்து வைத்தான்.. "நீ.. போகக் கூடாது.. நீ என்னோட பொண்டாட்டி.. நீ இந்த வீட்டில் தான் இருக்கனும்.." என்று பொறுமையிழக்காமல்.. அழுத்தம் நிறைந்ததாக..🤨🤨
"நேத்து ஜாமத்துல பேசுனத மறந்துட்டேளா.. ?? நான்.. உங்க.. பொம்மனாட்டி.." இல்லை என்று கூறவந்து.. அவர்களுக்குள்.. நேற்று நடந்த பேச்சு வார்த்தையை நினைவு படுத்த நினைத்தாள்.. ஆனால்.. சுற்றிருந்த உறவுகள் சொல்லவிடாமல் தடுத்தது.. 😕
அதற்குள்.. இந்திரகவி, சித்தி தேவிகா, வயதான பாட்டி முதற்கொண்டு அவளிடம் மன்னிப்பை யாசித்து.. கெஞ்சி கொஞ்சி நின்றனர்.. "நீ இந்த வீட்ட விட்டு போக மாட்டேன்னு சத்தியம் பண்ணத மறந்துட்டியாம்மா.. ??" என்று இந்திரகவி ஒரு புறம்.. 😓
"நீ இந்த மூத்த மருமகம்மா.. இந்த வம்சத்தோட குல விளக்கே நீ தாம்மா.." என்று சித்தி தேவிகாவும்.. சேர்ந்து கொள்ள..😒
"தப்பு தான்.. அதுக்காக மன்னிப்பு கேட்டுக்கறோம்.. ஆனா.. வீட்ட விட்டு மட்டும் போகாதம்மா.." என்று 😖 வயதானவர் முதற் கொண்டு கொஞ்சலாக.. கண்களில் கவலையின் இழையோடும்.. குற்ற உணர்வையும் தேக்கி கெஞ்சியதும்.. ஷிவாக்ஷியால்.. மறுப்பேச்சு பேச முடியவில்லை.. வேறு வழியின்றி இன்னும் சில தினங்கள் தானே என்று சகித்துக் கொண்டாள்.. 😒
ஆனால்.. தன் வாழ்நாள் முழுவதும் இங்கே தான்.. என்று அவள்.. உணரும் வேளை வெகு தூரம் இல்லை.. 😉
இதன் பொருட்டே.. ஷ்ரித்திக்.. அனைத்து உறவுகளையும் போக விடாமல் தடுத்ததன் காரணம்.. 😎
விக்ரமும்.. இஷானியும்.. சொல்லிக் கொண்டு கிளம்பி சென்றனர்.. 🙂🙂
ஷ்ரித்திக்.. ஷிவாக்ஷியோடு தன்னறைக்கு செல்ல முற்பட்டபோது.. வழியில்.. சமீரா அத்தையின் அறை தாழிடாமல் இருந்ததால்.. அங்கு.. சாய் நாற்காலியில் சமீரா.. ஆத்திரம்.. அடங்காமல்.. சாய்ந்தாடிக் கொண்டிருந்தார்..😡😡
"என்ன.. நல்ல பிளான்ன.. நான் கெடுத்துட்டேன்னு.. ரொம்ப கோபமா இருக்கீங்க போல.. அத்தை.. ??" என்றபடியே.. அவரறைக்குள் நுழைந்தான்.. ஷ்ரித்திக்..😎
தன் குட்டு வெளிப்பட்டு விட்டதே.. என்ற வருத்தம் துளிக்கூட இல்லை.. சமீராவிடம்.. 😕
"வாடா.. நல்லவன்னே.. என்ன உன் பொண்டாட்டிய.. காப்பாத்திட்டேன்னு ஆணவமா.. ?? ரொம்ப சந்தோஷப்படாத.. அது ரொம்ப நாளுக்கு இல்ல.. எனக்கு தெரியும்.. எப்ப நீ வித்யுத்தோட.. திட்டம் உனக்கு தெரிஞ்சுதோ.. அப்பவே.. எல்லாத்தையும் கண்டுபிடிச்சிருப்பேன்னு எனக்கு தெரியும்.." என்ற சமீராவின் குரலில்.. அத்தனை வக்கிரம்.. 😈
"ஏன்.. அத்தை.. ?? அவ ஒரு அப்பாவி.. அவ மேல ஏன் இத்தனை கோபம்.. ??" என்று ஷ்ரித்திக்.. பொறுமையாக பேசினான்.. 😤
ஷ்ரித்திக்.. பொறுமையாக பேசுவது.. அரிதான ஒன்று..
இன்று.. அந்த பொறுமையை இழுத்து பிடிப்பதற்கான காரணம்.. சமீரா அத்தை நல்லவர் என்பதாலே.. என்ன சற்று சுயநலமும்.. பிடிவாத குணமும்.. அதிகம்.. 😈😈
"என் பொண்ணு இடத்துல.. அந்த நாய் இருக்கே.. அந்த நாய்காக.. என்னையே எதிர்த்து பேசுனே.. என் புருஷனை அத்தனை பேர் முன்னாடி அவமானப்படுத்துன.. என் பொண்ணு.. அத்தனை பேர் முன்னாடி அடிச்சே.. அவள அவமானமும் படுத்துன.. அந்த கோபத்தை உன் மேல காட்ட முடியாது.. ஏன்னா.. அந்த நாய்காக.. தான இப்படி பண்ண.. என்னோட மொத்த கோபம்.. ஆத்திரம் எல்லாம்.. அவ ஒருத்தி மேல மட்டுந்தான்.." என்று.. கூச்சலிட்டார்.. சமீரா..😈😈
வார்த்தைக்கு வார்த்தை.. தன் மனைவி.. ஷிவாக்ஷியை.. நாய் என்று அழைத்தது.. ஷ்ரித்திக்கிற்கு பெரும் கோபம்.. சினம் பெருக்கெடுத்தது.. 😡😡😡
"வேணாம்.. அத்தை.. திஸ் இஸ் தி லிமீட்.. எனக்கு கொடுக்குற அதே.. மரியாதையை.. என் பொண்டாட்டிக்கும் கொடுத்து தான் ஆகணும்.." என்று ஆணித் தரமாக.. அழுத்தமாக கூறினான்.. ஷ்ரித்திக்..🤬🤬
சமீரா.. ஷ்ரித்திக்கை பார்த்து ஏளன நகையை சிந்தி.. "நேத்து.. வந்த பச்சா.. நீ.. நீ.. சொல்லி.. நா செய்வேனா.. ?? போயும் போயும் அவளுக்கு நா மரியாதை தருவேனா.. ?? போடா.." என்றார்.. 😏🤬😡
ஷ்ரித்திக்.. "நீங்களே.. ஷிவாக்ஷிக்கான மரியாதையை கொடுக்கணும்.. கொடுக்க வைப்பேன்.." என்று இப்போது.. ஷ்ரித்திக்கின் குரல்.. இப்போது.. தீர்க்கமாக.. 😎
சமீரா.. மீண்டும் அதே.. ஏளனநகையோடு.. "வாய்ப்பேயில்லை.. நடக்காது.." என்று.. இவரும்.. உறுதியாக.. 😈
சமீராவை.. நோக்கி.. ஊடுருவும் பார்வையை வீசி.. "நடக்கும்.. நடக்க வைப்பேன்.." என்று விட்டு நடந்தான்.. அதே உறுதியோடு..😎
சமீரா.. ஷ்ரித்திக்கின் வார்த்தைகளின் தாக்கம்.. ஏற்கெனவே கோபத்தில் கொதித்து கொண்டிருந்தவரின் ஆத்திரத்தை மேலும் உயர்த்தியது.. ஆத்திரத்தில்.. அங்கிருந்த.. பொருட்களை சிதறடித்து..தலையை பிய்த்து கொண்டார்.. 😡😡
ஷிவாக்ஷிக்கு நடந்த நிகழ்வுகளால்.. மனமும்.. உடலும் சோர்ந்திருந்ததால்.. குளித்தால் தேரும் என்று.. நினைத்து.. ஷ்ரித்திக்கின் அறைக்குள் சென்றாள்.. ஷிவாக்ஷிக்கு இன்னும் அது ஷ்ரித்திக்கின் அறை தான்..😏
ஷிவாக்ஷி.. குளியலறையில் புகுந்து.. குளிர்ந்த நீரை தன்னுடல் முழுக்க படர விட்டு.. இன்று தன் மேல் வாரி இறைத்த அவமானம் என்னும் அழுக்கை சுத்தம் செய்ய.. அழுத்தி தேய்த்தாள்.. வித்யுத்.. தன் மேல் கரம் பதித்த இடமெல்லாம்.. அழுந்த தேய்த்து குளித்தாள்.. தன் மேல் ஏதோ.. சாக்கடை பட்ட உணர்வு அவளிடம்.. 🤢🤮
குளித்து முடித்து.. இரவு ஆடையில் தன்னை நுழைத்துக் கொண்டாள்.. ஷிவாக்ஷி.. 🙂
அதே நேரம்.. ஷ்ரித்திக் உள்ளே நுழைந்தான்.. நேராக குளியலறையில் புகுந்தான்..😎
ஷிவாக்ஷி.. கண்ணாடியின் முன்னிருந்த மேஜையில் சாய்ந்து.. யோசனையில் சிக்குண்டாள்..🤔
'இன்று காலையிலிருந்தே அனைத்தும் வித்தியாசமாக.. தெரிந்தது.. ஷ்ரித்திக்கின் ஆளுமை, வித்யுத்தின் செயல், நேர்ந்த அவமானம்..
ஹ்ம்ம்ம்ம்.. ஷ்ரித்திக்கை அனைவரும் கண்டு பயப்படுவது ஏன்.. என்று இப்போது தானே தெரிகிறது.. எவ்வளவு கோபம் அவர் முகத்தில்.. அனைவரும் கூறியது போல் முசுடு தான்.. இன்று.. அவரின் மீது.. எனக்கு ஏன் அத்தனை கோபம் உருவானது.. ?? அத்தனை பேரின் மத்தியில்.. அப்படி நடந்து கொண்டேனே.. ?? என்ன நினைத்திருப்பார்கள்.. என்னைப் பற்றி.. ?? தவறிழைத்து விட்டேனே..' என்று கவலைக் கொண்டாள்.. உச்சு கொட்டி.. மீண்டும் யோசனையில் தாவினாள்.. 'ஷ்ரித்திக்.. எப்போதும்.. தள்ளியே நிற்பவர்.. இரு வேறு சமயத்தில் நானே என்னை மீறி அவரின் அணைப்பை ஏற்றது வேறு.. இன்று என்னை அனைவரின் முன்பாக அணைத்துக் கொண்டார்.. அந்த அணைப்பில்.. ஏதோ ஒன்றை உணர்ந்தேனே.. ?? ஆனால்.. ஏன் கோபம் உருவாகவில்லை.. ?? அதன் சூட்சமம் என்ன.. ?? வேறு எந்த ஆடவனையும்.. என்னை தொடுவதையே அனுமதிக்காத நான்.. ஷ்ரித்திக்கின் அணைப்பை எப்படி ஏற்றுக் கொண்டேன்.. ??' அதை யோசித்தவளுக்கு..🤔🤔 விடை கிட்டாததால்.. வேறு யோசனைக்கு தாவினாள்.. 'முக்கியமாக.. வித்யுத்தின் செயல்.. முற்றிலும் எதிர்பாராத ஒன்று.. ஏன் என்னை அனைவரும் தவறாகவே.. பார்க்கின்றனர்.. ?? என்னுடைய ஒவ்வொரு செயலிலும்.. ஒழுக்கத்தையும் கட்டுப்பாட்டையும் கடைபிடிக்கிறேனே.. இருந்தும் ஏன்.. ?? எனக்கு எப்படி பட்ட அவமானத்தை ஏற்படுத்த நினைத்தான்.. ??' என்று நினைக்கும் போதே.. அவளுள் பயமும் பதற்றமும் உருவாக தொடங்கியது..😖
ஷ்ரித்திக்.. குளித்து முடித்து வெளியே.. வந்தவனின் பார்வையில் விழுந்தாள்.. ஷிவாக்ஷி..
அவளை கண்டதும்.. எங்கிருந்து தான்.. இத்தனை காதலும்.. உற்சாகமும் சுரக்கிறது என்று தான்.. ஷ்ரித்திக்கிற்கு தெரியவில்லை.. 😍😍
ஷிவாக்ஷியை நோக்கி எட்டுக்களை வைத்து..
யோசனையின்.. பிடியில் இருந்தவளை.. பின்னிருந்து இடையில் கைப்போட்டு தன் அணைப்பில் கொண்டு வந்தான்.. ஷ்ரித்திக்.. 😍😍
ஷிவாக்ஷி.. இன்று நிகழ்தேறிய அவமானத்தை எண்ணியிருந்தமையால்.. ஷ்ரித்திக் அணைத்திருப்பது அவளுக்கு.. உணர்த்தவில்லை..🤔🤔
இன்னும்.. யோசனையில் உளன்றவளின்.. கழுத்தில் முகம் பதித்து.. "என்ன.. இன்னிக்கு நடந்ததையே.. யோசிக்கறீயா.. ??" என்று தாழ்ந்த குரலில் கிசுகிசுத்தான்.. 🥰🥰😘
ஷிவாக்ஷி.. ம்ம்ம் கொட்டினாள்.. ஷ்ரித்திக்கின் புறம் திரும்பி.. "நான் நன்ன பொம்மனாட்டியா ஒழுக்கமா தானே இருக்கேன்.. அப்புறம் ஏன் என்னை தப்பாவே பாக்கறா.. ?? இப்படியெல்லாம் கூட மனுசாளா இருப்பாளா.. ??" என்று தன் மனதில் எழுந்ததை.. ஷ்ரித்திக்கிடம் கேட்டாள்.. 😒😒 ஷிவாக்ஷி.. இன்னும்.. ஷ்ரித்திக்கின் அணைப்பை உணரவில்லை..
ஷ்ரித்திக்.. பெருமூச்சு விட்டு.. "அழகா இருந்தாளே.. அதை பறிச்சுக்க நினைக்கும்.. இந்த.. உலகம்.. நீ வேற கண்னை பறிக்கற மாதிரி.. இருக்க.. சொல்லவே வேணாம்.. ஆட்டைய போட தான் ட்ரைப் பண்ணுவாங்க.." என்று கிண்டல் போல் மொழிந்தான்..😉 அவள் கழுத்தில் இருந்த முகம் எடுக்காமலே.. 😍
ஷிவாக்ஷி.. கண்னை சுருக்கி முறைக்கும் வேளையில்.. தான் அணைத்திருப்பது.. தெரிந்தது.. "என்ன நீங்க.. ?? கட்டிப் பிடிச்சிண்டு இருக்கேள்.. ?? விடுங்கோ.." என்ற ஷிவாக்ஷியின் மொழகளில்.. அசைவேனா.. என்று இருந்தான்.. ஷ்ரித்திக்.. மேலும் இறுக்கினான்.. ஷிவாக்ஷியை.. 😎😍😍
அதை எதிர்பாராத.. இறுக்கத்தால்.. மெல்லிய ஒசை அவளிடம்..
"விடுங்கோ.. நானும்.. காலைல இருந்து பாத்துட்டு தான்.. இருக்கேன்.. என்னை கட்டிப் பிடிச்சிண்டே இருக்கேள்.. ஏன் இப்படி பண்றேள்.. ??" என்ற ஷிவாக்ஷியின் குரலில் துளியும் கோபமில்லை.. 🤨🤨
"சரி.. காலைல.. நா லவ் பண்ற பொண்ணு யாருன்னு கேட்டல்ல.. ??" என ஷ்ரித்திக் அவளின் தோளில் தாடையை வைத்து வினவ.. 😎😎
"நா.. என்ன கேட்டா.. ?? நீங்க என்ன பேசறேள்.. ??" என்று ஷிவாக்ஷி பதிலுக்கு வினவினாள்.. ஷ்ரித்திக்கின் அணைப்பில்.. விடுபட முயற்சித்த படியே.. 😕
"சம்பந்தம் இருக்கு.. சொல்லு.. பாக்கனுமா.. ??" என்று ஷ்ரித்திக்.. ஷிவாக்ஷியின் முயற்சியை.. முறியடித்த படியே.. 😎😎
"எதுக்கு.. கேட்டா.. சஸ்பென்ஸ்னு சொல்லுவேள்.. எனக்கு எதுக்கு.. ??" என ஷிவாக்ஷி.. சிலுப்பிக் கொண்டாள்.. ஷ்ரித்திக்கிடம் இருந்து விடுபட முடியாமல்.. சோர்ந்தே பதிலளித்தாள்.. 😕😕
ஷ்ரித்திக்.. மெல்லிய நகையை சிந்தி விட்டு.. "சரி அங்க பாரு.." என்று கை காட்டினான்.. கண்களில்.. குறும்பும் காதலும் போட்டி போட்ட வண்ணம்.. 😉😍
ஷ்ரித்திக்.. கைகாட்டிய திசையை ஆர்வமாக நோக்கினாள்.. அப்போது தானே.. அவரோடு பேசி புரிய வைக்க முடியும்.. என்ற நோக்கத்தோடு.. 🙂🙂
ஷ்ரித்திக் காண்பித்த திசையானது.. அவர்களுக்கு நேர் எதிரே இருந்தது.. விஸ்தாரமான முகம் பார்க்கும் கண்ணாடி.. 🔎🔎
இப்போது ஷிவாக்ஷியின் முகத்தில் ஏமாற்றம் அப்படியே.. கண்களை சுருக்கி.. ஷ்ரித்திக்கை முறைத்தாள்.. "நேக்கு தெரியும்.. சஸ்பென்ஸ் சொன்ன மாதிரி.. முகம் பாக்குற கண்ணாடிய காட்டிண்டு.. என்னை மொக்கை பண்றேள்.. இதிலென்ன என் முகமும்.. உங்க முகமும்.." என பேசிக் கொண்டிருந்தவளுக்கு.. அப்போது தான் மெல்ல மெல்ல.. புரிய ஆரம்பித்தது..என்று ஷிவாக்ஷியின் கண்ணச் சிவப்பு காட்டி கொடுத்தது.. பேசிக் கொண்டிருந்த இதழ்கள் அமைதியாக துடிக்க.. பேச்சின் சுவாரஸ்யத்தில்.. ஆடிய கரங்கள்.. அப்படியே இறங்கின..🥰🥰..
அதை ஷ்ரித்திக்கும் உணர்ந்து கொண்டான்.. "என்ன மேடம்.. புரிஞ்சிருச்சா.. ?? நா உன்ன பாத்தா நாள்ல இருந்தே.. உன்ன லவ் பண்றேன்.. ஐ'யம் இன் லவ் வித்யூ.. அண்ட் ஐ லவ் யூ.. ஷிவு.." என்று ஷ்ரித்திக்.. ஷிவாக்ஷியின் முகத்தை.. கண்ணாடியில் ரசித்து படியே.. குழைவான குரலில்.. கூறி விட்டு.. அவள் பின் பக்கமாக இருந்த.. ஷ்ரித்திக்.. அவள் கழுத்தில்.. முகம் புதைத்தான்..😍😍🥰🥰😘😘😘
ஷிவாக்ஷிக்கு.. அதிர்வு, ஆச்சரியம், இன்பம் என அனைத்து உணர்வுகளும்.. அவள் முகத்தில் அப்படியே தெரிந்தன.. ஏனோ.. மனம் பறப்பது போல் உணர்ந்தாள்.. ஆனால்.. ஏன் இந்த இன்பம்.. ?? என்று அவளுக்கு புரியவில்லை.. 🥰🥰🤔 பிரதானமாக.. ஆச்சரியமும் அதிர்ச்சியும் வியாப்பித்து இருந்தது..
அதிர்ச்சியில்.. தந்தியடித்தது.. "என்.. என்.. என்ன சொல்றேள்.. ?? விளையாடறேள் தான.. ??" என்று ஷிவாக்ஷி.. ஷ்ரித்திக்கின் அணைப்பில் இருந்த படியே.. ஷ்ரித்திக்கின் முகத்தை பார்த்து கேட்டாள்.. 😳😳
ஷிவாக்ஷி.. ஷ்ரித்திக்கின் சொல்லை.. நம்பவில்லை என்றே.. அவளின்.. குரலே.. சொன்னது...
"ஒய்.. நிஜமா தான்.. இதுல யாராவது.. பொய் சொல்லுவாங்களா.. ??" என்று ஷ்ரித்திக்.. ஷிவாக்ஷி தன் புறம் திரும்பி.. இரு கைகளையும்.. சுவற்றில் சாய்த்து அணையிட்டான்..🥰🥰
"சொல்லு.. எனக்கு.. எப்ப ஓகே சொல்ல.. போற.. ??" என்று ஷ்ரித்திக்.. ஷிவாக்ஷியிடம் நெருங்க நினைக்க.. 😍😍
ஷிவாக்ஷி.. ஷ்ரித்திக்கின் மார்பில் கை வைத்து தடுத்தாள்.. பயமும் பதற்றமும் கலந்த நயனத்தோடு.. 😟😳
காற்றுக்கு வேலி கட்டுவதை போலிருந்த.. ஷிவாக்ஷியின் செயலில்.. இளமுறுவல் மூண்டது.. 😉
ஷிவாக்ஷியின் உள் மனமோ.. 'வேண்டாம்.. ஷிவாக்ஷி.. நாம்.. இவருக்கு தகுதியற்றவர்.. இவருக்கு ஏற்ற துணையை நீதான் அமைத்துத் தரவேண்டும்.. இந்த வார்த்தைகளுக்கெல்லாம்.. மயங்காதே. மயங்கினாள்.. எழுவது கடினம்..' என்று தனக்குள்ளே.. மாநாட்டை நிகழ்த்தி.. தன் மனதுக்கு கடிவாளமிட்டாள்.. 😕😕
ஷிவாக்ஷி ஒன்று சொல்ல நினைத்தாள்.. ஆனால் வேறொன்றாக.. அவளின்.. நா சொல்லி விட்டது..
"கொஞ்ச.. நாள் போகட்டும்.." என்று வார்த்தைகள்.. தந்தி அடித்தது.. 😟😟
ஷ்ரித்திக்.. அவளின் சொற்களை கேட்டு.. "உனக்கு.. கொஞ்ச நாள் போகட்டும்.. நா இனிமே உன்ன விட்டு தள்ளி போ மாட்டேன்.. இன்னும்.. நெருங்கி.." என்ற தன் சொல்லிற்கேற்ப.. ஷிவாக்ஷியை நெருங்கவும்.. மீண்டும்.. கைகளை.. ஷ்ரித்திக்கின் நெஞ்சில் கை வைத்து தடுத்தாள்.. 😟😟
"முன்னெச்சரிக்கை.. ஹ்ம்ம்ம்ம்.. என்கிட்ட லவ் சொன்னதுக்கு அப்பறம்.. இதுக்கெல்லாம் சேத்தி.. உனக்கிருக்கு.." என்று விட்டு.. ஷ்ரித்திக் நகர்ந்ததும்.. தான்.. 😎😍🥰
ஷிவாக்ஷி.. நிம்மதி.. பெரு மூச்சு விட்டாள்.. 😤
ஷிவாக்ஷியால்.. இன்னும் நம்ப முடியவில்லை.. 'ஷ்ரித்திக் தன்னிடம் காதலை வெளிப்படுத்தியது.. உண்மையா.. ?? ஷ்ரித்திக் தன்னையா.. காதலிப்பது.. ?? இல்லை இருக்காது.. நிச்சயம் இருக்காது.. இன்று ஈடேறிய சம்பவத்தை மறக்க.. நம் மனதை திசை திருப்பும் முயற்சியாய்.. விளையாடுகிறார்.. ஆம் அப்படித்தான்.. என்னை போய் யாராவது காதலெல்லாம்.. ??" என்று ஷிவாக்ஷி தன்னை தாழ்த்தி.. அவளுள்ளே.. ஒரு முடிவெடுத்து கொண்டாள்.. ஷிவாக்ஷி.. 🙂🙂
ஷ்ரித்திக்கிடம் இருந்து தள்ளி இருக்க வேண்டும்.. என்று தன்னுள் நினைத்து.. உறுதி கொண்டாள்.. ஷிவாக்ஷி..🙂
ஷ்ரித்திக்.. சோஃபாவில் படுத்துறங்க.. ஆயத்தமாவதை கண்ட.. ஷிவாக்ஷி.. 'இன்றோடு.. இதற்கு முடிவு கட்ட வேண்டும்..' என்றெண்ணி.. ஷ்ரித்திக்கின் அருகில் சென்றார்..🤨🤨
ஷ்ரித்திக்.. ஷிவாக்ஷியை கண்டு.. "என்ன.. ?? மேடம்.. லவ் ப்ரபோஸ் பண்ணதுல.. என்ன விட்டு.. தள்ளி இருக்க முடியலையா.. ??" என்று குறும்பாக.. கண்ணடித்து.. வினவினான்.. 😉
ஆனால்.. ஷிவாக்ஷி அதை கவனிக்கவில்லை.. "என்ன.. நினைச்சிண்டு இருக்கேள்.. ?? போங்கோ.. போய்.. பெட்ல படுங்கோ.." என்று கூறியதும்.. 🤨🤨
ஷ்ரித்திக்கிற்கு ஷிவாக்ஷியிடம்.. "நா பெட்ல படுக்கணுமா.. ?? அப்படின்னா நீயும் மேலே படு.." என்று ஷிவாக்ஷியிடம் வாதிட்டான்.. 🤨🤨
ஷ்ரித்திக்கிடம் திரும்பி.. "என்ன.. இதுக்கு முன்னாடி.. தனியா தானே படுத்திருந்தேள்.. ?? இப்ப எதுக்கு.. நா மேலே.. படுக்கணும்.." என்று வாக்குவாதம் புரிந்தாள்.. 😕
ஷ்ரித்திக்.. "இதுக்கு முன்னாடி நா.. தனியா படுத்திருந்தேன்னா.. ?? அப்ப கல்யாணம் ஆகல.. பொண்டாட்டி இல்ல.. இப்ப தான்.. நீ இருக்கியே.." என்று பதிலுக்கு பதிலாக.. பேசினான்.. 🤨🤨
ஷிவாக்ஷிக்கு.. இப்போது.. சலிப்பு தட்டியது.. ஷ்ரித்திக்கின் வார்த்தைகளில்.. "ம்ப்ச்.. இப்ப முடிவா என்ன சொல்றேள்... ??" என்று வினவினாள்.. 😕😕
ஷ்ரித்திக்.. "நீ.. மேலே படுத்தின்னா.. நானும் படுப்பேன்.." என்கவும்..😎
பட்டென்று பதில் வந்தது.. "மாட்டேன்.." என்று விட்டாள்.. ஷிவாக்ஷி.. 😕
ஷிவாக்ஷியை சம்மதிக்க வைக்கும் பொருட்டு.. என்ன பேசினால்.. ?? ஷிவாக்ஷி.. வழிக்கு வருவாள்.. என்று தெரிந்து கொண்டே.. வேண்டுமென்றே பேசினான்.. மெத்தையில் அமர்ந்த படி.. "சோ.. அப்படின்னா.. ?? உனக்கு உன் மேல நம்பிக்கை இல்லை.. உன்னால உன்னை கண்ட்ரோல் பண்ணிக்க முடியாது.. அதான் இப்படி சொல்றேன்னு எனக்கு புரியுது.. ஷிவு.." என்றதும்.. 😉😉.. ஷிவாக்ஷிக்கு ரோஷம் பொத்துக் கொண்டு வந்தது..
"ஹ்ம்ம்.. நேக்கா.. ?? நா ஒன்னும் அப்படி.. பட்டவா இல்லை.. நேக்கு என் மேல நம்பிக்கை ஜாஸ்தியா இருக்கறது.. நோக்கு பயமா.. இருந்தா வேணா.. சொல்லுங்கோ.." என்று விட்டு ஷிவாக்ஷியும்.. ஷ்ரித்திக்கோடு.. மெத்தையில் அமர்ந்துக் கொண்டாள்.. 😠😠😤😑
முதல் முறையாக.. விலையுயர்ந்த மெத்தையில் அமர்ந்ததும்.. அது ஷிவாக்ஷியை உள்வாங்கியதை போல உணர்ந்து.. "ஹ்ம்ம்ம்ம்.. என்ன உள்ள.. இழுக்கறது.. இந்த மெத்தை.. ?? ஆனா.. நன்னா இருக்கறது.." என்று.. அந்த மெத்தையில் குதித்து கொண்டே கதைத்தவளை.. கண்டு.. 🤪🤪
இதற்கு முன்.. இது போன்ற.. சொகுசு மெத்தையில் அமர்ந்ததில்லை.. ஷிவாக்ஷி..
ஷ்ரித்திக்.. வெடித்து சிரித்தான்..😆😆
ஷிவாக்ஷி.. ஒத்துக் கொண்டதற்கான.. மற்றொரு.. காரணம்.. அந்த மெத்தை மிகவும் விஸ்திரமாக இருந்ததால்.. தான்..
இருப்பினும்.. ஷிவாக்ஷி.. அங்கிருந்த.. தலையணையை.. தடுப்பணையாக.. வைத்தாள்..😤😤
ஷ்ரித்திக்.. இதை பார்த்து.. "உனக்கு உன் மேல நம்பிக்கை இல்லை.." என்றதும்.. 😜
ஷிவாக்ஷி.. "ஹான்.. இந்த டகால்டி வேலையெல்லாம் என்னாண்ட நடக்காது.. நேக்கு உங்க மேல தான் நம்பிக்கை இல்லை.." என்று கதைத்ததும்.. 🤨
ஷ்ரித்திக்.. "அடிப்பாவி.. இப்படியெல்லாம்.. பேசுனா.. உனக்கு தரவேண்டியத.. தர மாட்டேன்.." என்றவன்.. கையில் இருந்த.. தபாலை ஆட்டினான்..😜😜
ஷிவாக்ஷி.. என்னவென தெரியாமலே.. "எதுவா இருந்தாலும்.. வேணாம்.." என்று படுத்துறங்குவதிலே.. குறியாய்.. இருந்தாள்..😤
ஷ்ரித்திக்.. "அப்ப உனக்கிது.. வேணாம்.." என்று.. ஒரு தபாலை தூக்கி போட்டு விளையாடிக் கொண்டிருந்தான்..😜😜
இப்போது.. தான்.. ஷிவாக்ஷிக்கு.. அது என்னவென்று.. விசாரிக்க தோன்றியது.. "என்ன.. அது.. ??" என்க.. 😕
"நீ தான்.. வேணாம்னு.. சொன்னேன்ல.. ?? உனக்கு எதுக்கு.. ??" என்று.. ஷ்ரித்திக்.. வம்பிழுத்தான்.. 😜😜
ஷிவாக்ஷி.. அதை வாங்க கையை நீட்ட.. ஷ்ரித்திக் அவளிடம்.. வம்பிழுத்து விளையாட நினைத்து.. கையை உயர்த்தியதும்.. ஷிவாக்ஷியால்.. அந்த தபாலை பிடிக்க முயற்சிக்க.. ஷ்ரித்திக் விடுவதாயில்லை..🤪😝😜
ஷிவாக்ஷி.. "குடுங்கோ.. குடுங்கோளேன்.." என ஷ்ரித்திக்கிடம்.. நெருங்கி.. அந்த தபாலை பிடிக்க முயற்சித்தாள்..😕😕
ஷ்ரித்திக்.. "முடிஞ்சா.. எடுத்துக்கோ.." என.. மேலும் கையை உயர்த்தியதும்..😝😝
இருவரும்.. மெத்தையில்.. உருண்டு பிரண்டனர்.. ஷிவாக்ஷிக்கு வழக்கம் போலே.. எதுவும் தெரியவில்லை.. அவளுக்கு அந்த அஞ்சலில் மட்டுமே.. கவனம்.. ஷ்ரித்திக்.. ஷிவாக்ஷியிடம்.. வம்பிழுத்து விளையாடி.. மகிழ்வாக உணர்ந்தான்..😃😃
அவளின்.. ஸ்பரிசமும்.. அவளிடம் புறப்படும்.. சீயக்காய் மற்றும் கடலை மாவின் நறுமணம்.. ஒன்றிணைந்து அவனை கிறங்கடித்தது.. 😍😍🥰🥰🥰
அதில்.. மயங்கிருந்தவனை நினைவுக்கு கொண்டு வந்தாள்.. ஷிவாக்ஷி..🥰🙂
ஏனெனில்.. அவள்.. அந்த அஞ்சலை அவனிடமிருந்து பெற்று விட்டாள்..😃😃
ஷ்ரித்திக்கின் மார்பின் மேல் ஷிவாக்ஷி மண்டியிட்டு அமர்ந்திருந்த படியே.. அந்த அஞ்சலை என்னவென்று பார்த்துக் கொண்டிருந்தாள்..🤔🤔.. தன் கற்றை கூந்தல்.. ஷ்ரித்திக் உடனான போராட்டத்தில்.. கலைந்திருக்க.. அதை ஒதுக்கிக் கொண்டே.. அந்த தபாலை பிரிக்கப் போனாள்..🤔🤔
நினைவுக்கு வந்து ஷ்ரித்திக்.. "ஹேய்.. பிரிக்காதா.. இரு.. இரு.. கங்கிராட்ஸ்.. டீச்சர் மேடம்.. நீ நினைச்ச மாதிரி டீச்சர் ஆயிட்ட.." என்று.. கை கொடுத்து.. ஷிவாக்ஷிக்கு வாழ்த்துக்களை தெரிவித்தான்..🤩🤩
அப்போது தான்.. அது அவளுக்கு வந்திருந்த.. வேலை வாய்ப்பு நியமனம் என்று தெரிந்தது.. அதை பிரித்து படித்ததும்.. அவள் அடைந்த இன்பத்திறகு அளவே இல்லை..😃😃
அவள் ஒவிய ஆசிரியையாக.. அரசு பள்ளியில்.. வேலை நியமித்திருப்பாத கடிதம் வந்திருந்தது.. நாளை மறுநாள்.. வேலையில் சேர்ந்து கொள்ளலாம்.. என்றிருந்தது.. அக்கடிதத்தில்..
"கிருஷ்ணா.. நேக்கு வேலை கிடைச்சிடுத்து.. நாளை மறுநாள் ஜாயின் பண்ண சொல்லி ஆர்டர்.. ஹூ.. நா வேலைக்கு போகவா.. ??" என்று உற்சாகமாக காலிடையில் இருந்த ஷ்ரித்திக்கை பார்த்து கூவினாள்.. 😃😃
"இங்க.. பக்கத்துல தான்.. இந்த கவர்மெண்ட் ஸ்கூல் இருக்கு.. நல்ல ஸ்கூல் தான்.. அது உன் இஷ்டம்.. தாராளமா போ.. பட் முதல்ல என்ன விடறியா.. ஒரு சின்ன பையன.. என்ன பாடுப்படுத்துற.." என்றதும் உடனே.. ஷ்ரித்திக்கை விட்டு எழுந்தாள்..🤪🤪
ஷிவாக்ஷிக்கு.. அப்போது தான் தெரிந்தது.. ஷ்ரித்திக்கின் மீது அமர்ந்திருப்பது.. ஷ்ரித்திக்கை கெஞ்சும் பார்வையாக.. மன்னிப்பை யாசித்தாள்.. 😔
ஷிவாக்ஷியின்.. பார்வையை உணர்ந்து.. ஷ்ரித்திக்.. "சாரியெல்லாம்.. கேக்காத.. காலைல தான்.. ஆர்டர் வந்ததா.. வாட்ச் மேன்.. குடுத்தாரு.. ஓகேவா.. போய் படுத்து தூங்கு.. குட் நைட்.." என்றதும்..
ஷிவாக்ஷியும்.. இளமுறுவலோடு.. நாளைய விடிலை எதிர்நோக்கி.. படுத்துறங்கினாள்.. 😴😴
ஷ்ரித்திக்கும்.. ஷிவாக்ஷியை.. பார்த்து அவனும் உறங்கி போனான்.. அம்மெத்தையில்.. 😍😍😴😴
------------------
To be continued.. 😉
(Hiii.. guyz.. phone makar panniduchu.. adhan late ud.. padichitu epdi irukkunu sollunga.. marakama vote pannunga and comment pannunga.. 😉😉🤩🥰)
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro