Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

அத்தியாயம் - 22

ஒன்று சேர நினைத்த.. இந்த காதல் கொண்ட மனதை.. கொன்றுப் போட்டது.. உன் கூர் வாள் சொற்களை மனதில் இறக்கியதால்.. 💔

ஷ்ரித்திக்.. ஷிவாக்ஷியின் வார்த்தைகளின் தாக்கத்தில் வெளி வர முயற்சித்துக் கொண்டிருந்தான்..😳🤯

அவனால்.. நம்ப முடியவில்லை.. தன்னவளின் இதழ்களில் வெளி வந்த வார்த்தைகளா.. இவை.. ?? இல்லை இருக்காது.. ?? தன்னுள் மருண்டு போனான்..🤯😢

இருப்பினும் ஒரு முறை தெளிவு படுத்தவே.. ஷிவாக்ஷியிடம் கேட்டான்.. "என்ன சொன்ன.. ??" என்று கேட்டான்.. அவனின் குரலில் பதற்றம் தெரிந்தது..🤨

"இல்ல.. நோக்கு ஏதாவது.. பொன்ன பிடிச்சிருந்தா.. ?? என்கிட்ட வந்து சொல்லுங்கோ.. நா அம்மா கிட்ட.. பேசிண்டு.. உங்களுக்கு கன்னியாதானம் பண்ணி வைச்சுடறேன்.." என்று ஷிவாக்ஷியின் சொற்கள் இப்போது தைரியமாக வந்தது..🤗🙂

ஷ்ரித்திக்.. ஷிவாக்ஷியின்.. வார்த்தைகளில்.. தெரிந்த உறுதி.. அழுத்தத்தில் துவண்டு போய் விட்டான்.. மற்றொரு புறம்.. சினம்.. கிளைகளை பரப்பிக் கொண்டிருந்தது‌..😕😧😠

ஷிவாக்ஷியை விட்டு தர அவன் மனம் ஒப்பாது.. அவள் எனக்கானவள்.. எனக்கு மட்டுமே உரியவள்.. என ஷ்ரித்திக்கின் மனம்.. கோபத்தில் ஆரவாரமிட்டது... ஆனால் ஷிவாக்ஷியிடம் வெளிப்படுத்த வேண்டாம் என நினைத்தான்..😡😡😖😖

ஷிவாக்ஷியிடம் வெளிப்படுத்த முடியாமல்.. தன்னை கட்டுக்குள்.. வைக்க பெரும் பாடுபட்டான்.. தன் தலையை அழுத்தி சமன் செய்து கொண்டான்.. "என்ன.. ஷிவு.. விளையாட்றீயா.. ?? இதோட பின் விளைவு புரியாம பேசிட்டு இருக்க.. ??" என்று ஷ்ரித்திக் புரிய வைக்கும் விதமாக கூற முயன்று.. அது கர்ஜனையாக வெளிப்பட்டது..🤬

"அதப் பத்தி.. கவலப்படாதீங்கோ.. நா பாத்துக்கறேன்.. நீங்க சொல்லுங்கோ.. ??" என ஷிவாக்ஷி ஷ்ரித்திக்கின் மனதை அறியாது.. அவன் குரலில் வெளிப்பட்ட கோபத்தை உணராது.. புன்முறுவளோடு.. ஷ்ரித்திக்கின் ஆசையை அறிய விழைந்தாள்...🙂🤗

பறக்கவிருக்கும் பொறுமையை இழுத்து பிடித்து கொண்டான்.. ஷ்ரித்திக்.. "ஷிவு உன் மேல கோபப்படக் கூடாதுன்னு நினைக்கிறேன்.. என்னைய ரொம்ப சோதிக்கற.. என்ன நினைச்சிட்டு இந்த முடிவை எடுத்த.. ?? இந்த முடிவால உன் வாழ்க்கையே ஒன்னுமில்லாம போயிடும்.. நீ இந்த மாதிரி முடிவை எடுப்பேன்னு தெரிஞ்சிருந்தா.. நா உனக்கு தாலி கட்டி இருக்கவே மாட்டேன்.. எங்கிருந்தாலும்.. வாழ்கன்னாவது இருந்திருப்பேன்.." என்று கொட்டி தீர்த்தான்..😠😤

ஷிவாக்ஷியை காண.. அவளோ.. மௌனமே உருவாய்..😶

கோபத்தில் பெரு மூச்சு விட்டான்.. தொடர்ந்தான்.. "உனக்கெப்படி.. இந்த மாதிரி லூசுத் தனமான.. முடிவெடுக்க தோனுச்சு.. ?? தனியா பித்து பிடிச்சவ.. மாதிரி இருந்தியே.. அப்பவா.. ??" என்று அவன் பாட்டுக்கு கத்தினான்..😤😠

ஷிவாக்ஷி.. எதற்கும் அசையவில்லை..😶

"நீ.‌.. இந்த முடிவ எடுக்கறளவுக்கு.. வீட்ல யாராவது உன்ன தப்பா நடத்துனாங்களா... ?? அப்பாவா.. ?? அம்மாவா.. ?? இல்ல சமீரா அத்தையா.. ?? மாயாவா.. ?? இல்லனா.. நா ஏதாவது தப்பா நடந்துகிட்டேனா.. ?? சொல்லு.. என்கிட்ட ஒப்பனா சொல்லு.. ??" என்று ஷ்ரித்திக் எங்கே.. ஷிவாக்ஷி தன்னை விட்டு விலகி சென்று விடுவாளோ.. என்று பதற்றத்தோடு சீறியது.. ஷ்ரித்திக்கின் குரல்..😡😡

ஷிவாக்ஷியோ.. கண்களாலே.. அதெல்லாம் இல்லை என்று கூறினாள்..👁️

ஷ்ரித்திக்.. ஷிவாக்ஷியின் விழிகளில் இருந்து பார்வை விலகவில்லை.‌.🧐 ஷிவாக்ஷியை உற்றுப் பார்த்தான்.. பெருமூச்சு விட்டபடி தொடர்ந்தான்..😤 "சரி.. இந்த முடிவுக்கு பின்னாடி என்ன காரணம்.. ??" என ஷ்ரித்திக் விளித்தான்..😕

ஷிவாக்ஷி மறுக்க நினைத்தாள்.. அதே அவளின் முகமும் பிரதிபலித்தது.. 😟

ஷ்ரித்திக்.. இம்முறை கத்தியே விட்டான்.. "இல்லன்னு சொல்லாத.‌.. கண்டிப்பா காரணம் இருக்கும்... சொல்லு.‌.. ?? சொல்லுங்கறேன்ல.. ??" என்றான்...🤬

ஷிவாக்ஷி.. அவனின் சீற்றத்தில் பயந்து அவளின் உடல் அதிர்ந்தது.. தன்னை சமாளித்து கொண்டு.. "நா.. நா... நா.. நோக்கு தகுதியானவா.. கிடையாது.. அவ்ளோ தான்.." என்று இமைகள் படபடவேன அடித்து கொண்டது.. தயக்கத்தினோடே ஷிவாக்ஷி மொழிந்தாள்...😓

ஷ்ரித்திக்.. ஷிவாக்ஷியையே.. ஊன்றி கவனித்தான்.. கோபம் புயலாக மாறியது.. அவனுள் சுழற்றி அடித்தது..😡😡

கோபத்தை அடக்கிக் கொள்ள.. பெருமூச்சை இழுத்து இழுத்து விட்டு கொண்டிருந்தான்.. "இங்க பாரு.. ஷிவு.. இதனா.." என்று ஷ்ரித்திக் அவளுக்கு புரிய வைக்க முயன்றான்.. ஆனால் ஷிவாக்ஷி கை காட்டி இடை மறித்தாள்..😠😠😤😤

ஷிவாக்ஷிக்கு ஷ்ரித்திக்கின் மறுப்பு.. பயம், கோபம், பதற்றம் என்றனைத்து உணர்வுகளும்.. ஒருங்கே உருவானது.. ஷிவாக்ஷியால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.. ஷ்ரித்திக் கூறுவந்ததை தடுத்தாள்.. 😑

"இங்க.. பாருங்கோ.. என் வாழ்க்கை.. நான் பாத்துக்குவேன்.. நீங்க இப்ப குழம்பி போயிருக்கேள்.. ராத்திரியெல்லாம் யோசிண்டு.. நன்னா முடிவா எடுங்கோ‌‌.. நேக்கு தூக்கம் வர்றது.. குட் நைட்.." என்று ஷ்ரித்திக்கின் பதிலை கூட எதிர்பாராமல்... படுக்கை தரையில் விரித்து படுத்துறங்கினாள்.. 😴😴

எங்கே இன்னும் நின்று கொண்டு இருந்தால்.. ஷ்ரித்திக் மறுத்து விடுவானோ.. என்றச்சத்திலேயே படுத்து உறங்குவதை போல இருந்தாள்..😥

ஷிவாக்ஷி.. தன் முடிவில் இத்தனை உறுதியாய் இருப்பதை கண்டு மலைத்து போனான்.. ஷ்ரித்திக்..😕

இஷானி கூறியது.. எத்துனை உண்மை என்று தன் தலையில் சம்மட்டியால் அடித்ததை போல இப்போது உணர்ந்தான்.. 😒😏

ஷிவாக்ஷி ஷ்ரித்திக்கின் மறுப்புறம்.. திரும்பி படுத்திருந்தாள்.. ஷிவாக்ஷியையே பார்த்திருந்தான்..😴😴

'ஷிவாக்ஷி.. நீ எனக்கு தான்.. நீ எனக்கு மட்டும் தான்.. என்னிடம் இருந்து விலகுவதாற்கான உரிமை உனக்கு கூட இல்லை.. என்னவள்.. என்னை விட்டு பிரிந்து செல்லவதற்கு.. ஒரு நாளும் அனுமதிக்க மாட்டேன்.. இனியும் தாமதியாது.. உன்னிடம் என் காதலை தெரிவிக்கவேண்டும்..' என்று தன்னுள்.. ஷிவாக்ஷி பார்த்து கொண்டே நினைத்துக் கொண்டான்..😠😠😘

ஷ்ரித்திக்கோ.. உறக்கமில்லாமல் பிரண்டு கொண்டிருந்தான்.. ஷிவாக்ஷியோ.. அவனின் உறக்கத்தை பறித்துக் கொண்டு.. நித்திரா தேவியிடம் தஞ்சம் புகுந்திருந்தாள்..😴😴

ஷ்ரித்திக் பால்கனியே தஞ்சமென்று எல்லையில்லா வானத்தை வெறித்திருந்தான்.. 🙄

இஷானியோ.. இங்கு இரு வேறு மனநிலையும் ஒன்றே சங்கமித்து பயணித்தாள்.. படுக்கையில் சாய்ந்த படியே.. 😒😘

ஒருபுறம் தன் தோழியின் வாழ்வை எண்ணி.. மற்றொரு புறம் தன் காதல் நாயகனை எண்ணி.. 😣😘

இஷானி.. ஷிவாக்ஷியின் இல்லத்தை விட்டு கிளம்பிய பின் நடந்த நிகழ்வுகளை அசை போட்டாள்.. 😇

-------------------

இஷானியால் வண்டியை ஓட்ட முடியவில்லை.. ஷிவாக்ஷி கூறிய முடிவை எண்ணி தவித்தாள்.. இஷானியால் வண்டி ஓட்டுவதில் கவனம் செலுத்த முடியவில்லை.. ஆதலால்.. சாலையோரத்தில் வண்டியை தள்ளிக் கொண்டே நடந்த வண்ணம் இருந்தாள்..😇😇

அப்போது சர்ரென ஒரு ஆடி மகிழுந்து இஷானியின் முன் வந்து நின்றது.. பயந்தால் அது ஷிவாக்ஷி ஆயிற்றே.. 😋

இஷானிக்கு "யார்ரா அவன்.. சொங்கி.. ??" என்று கிட்டத்தட்ட கத்தி திட்டியேவிட்டாள்..😠

அங்கே.. விக்ரம்.. இஷானியின் இனிய சொற்களை கேட்ட படியே மகிழுந்தை விட்டு கம்பீரமாக இறங்கி வருபவனை கண்டதும்.. இஷானி.. இளித்து வைத்தாள்.. 😎

"அது.. அது.. வந்து.‌.. யாருன்னு தெரியாமா.. ??".. என்று மண்டையை சொறிந்து கொண்டே.. இளித்தாள்..😁

விக்ரம் தன் குளிரூட்டும் கண்ணாடியை.. கழற்றிய படியே.. "தெரிஞ்சிருந்தாலும்.. அப்படி தான்.. பேசி இருப்ப.." என்று சலித்து கொண்டான்.. இஷானியின்.. உதடு சுருங்கியது..😐

"சரி.. வா.. என்கூட கார்ல் போலாம்.. ஏதோ‌.. என் பங்கு உன்கிட்ட பேசனுமாம்.. வா.." என்று இஷானியின்.. பதிலை கூட எதிர்பாராது மகிழுந்தை நோக்கி நடந்தான்..😎

"உன்ன பத்தி விசாரிச்சு.. தெரிஞ்சுகிட்டது.. ரைட் தான் போல‌‌... ??" என்று இஷானி கத்தி கூறினாள்..🤓

விக்ரம் திரும்பி.. இஷானியை.. கேள்வியோடு நோக்கினான்.. என்ன தெரிந்து கொண்டாய்.. ?? என்று கேட்டது.. அவன் பார்வை.. 🤨

விக்ரமின்.. நடையில் மயங்கி இருந்தவள்.. இப்போது பார்வையில் தொலைந்தாள்.. அதை வெளியே காண்பிக்கவில்லை.. 😍😍🤩

"ஹ்ம்ம்ம்ம்.. நீயொரு கழண்ட கேஸ்னு‌.." என்ற இஷானியின்.. கண்களில் காதல் வழிந்தது.. 😉

விக்ரம் அதை புரிந்து கொள்ளாமல்.. அவளோடு வாதிட முனைந்தான்.. "ஏய்.. என்ன நீ.. நானும் அப்பத்துல இருந்து பாரத்துகினே இருக்கேன்.. என்னை என்ன.. கேனைனு நெனச்சியா.. ?? சும்மா.. லூசு.. கழண்டவன்னே சொல்லிட்டு இருக்க.. இதெல்லாம் நல்லா இல்ல.. பாத்துக்கோ.." என்று கடுகடுவென பொரிந்தான்..😠😤🤕🥵

"நா லூசுன்னு சொல்லாத மாதிரி நடந்துக்கோ.‌. என்கிட்ட ஸ்கூட்டி இருக்குல்ல.. ஹ்ம்.. நா எப்படி உன் கார்ல வருவேன்.. ??" என்று இஷானி விக்ரமிடம் கூறினாள்..🙂

"அவ்ளோதான.. என்னோட ஆளுங்க கிட்ட சொல்லி.‌. உன் வீட்ல விட சொல்லிடறேன்.. சிம்பிள்.. இதுக்கா.. என்ன லூசுன்னு சொன்ன.. சரி இந்த கடைக்கு முன்னாடி பார்க் பண்ணிட்டு வந்து வண்டில ஏறு.." என்று விக்ரம்.. இஷானியிடம் கூறிவிட்டு.. கைப்பேசியில் வேலையாளிடம்.. ஸ்கூட்டியை இஷானி குடுத்த முகவரியில் விட்டு விடுமாறு ஆணையிட்டான்..🙂

இஷானி.. விக்ரமின் பக்கத்து இருக்கையில் அமர்ந்து கொண்டாள்.. விக்ரம் வண்டியை உசுப்பினான்.. 🙂

விக்ரம் மிகவும்.. பதற்றமாக உணர்ந்தான்.. அவனுக்குள்.. ஒரு படபடப்பு.‌. தன் காதலை எப்படியாவது‌‌.. அவளிடம் தெரிவிக்க வேண்டும்.. அதை அவள் ஏற்று கொள்ள வேண்டும் என்ற ஒரு வேண்டுதலையும்.. இறைவனிடம் வைத்தான்.. தன் காதல் நாயகி.. அருகே அமர்ந்திருக்கிறாள்.. இதுவே தக்க சமயம்.. தன் காதலை தெரிவிக்க.. என்று வண்டியை ஓட்டிக் கொண்டே சிந்தித்தான்.. ஆனால் காதலை தெரிவிக்க தான்.. தைரியம் தொலைந்தவனாக இருந்தான்.‌. 😭😭😰😰🥰🥰

நேற்றே.. தன் இனியவளுக்காக தேடி அலைந்து ஒரு வைர மோதிரத்தை வாங்கி வைத்தான்.. இஷானியிடம் தன் காதலை தெரிவிக்கும் சமயம்.. அவளுக்கு பரிசாக தரவேண்டுமென்று.. அதை கைகளில் வைத்து உருட்டி கொண்டிருந்தான்..🙄🙄😰😰

விக்ரம் மகிழுந்தில் கவனம் இருந்தாலும்.. இஷானியிடம் தெரிவித்து விடவேண்டும் என்று அவனின் மனம் அடித்து கொண்டது..😢😢

இஷானியோ.. விக்ரமை பார்த்தவள்..
என்ன இவன்.‌. ஏதோ.. பதற்றமாக இருப்பதை போல நகைச்சுவை செய்து கொண்டிருக்கிறானே.. ?? என்று தன்னுள் நினைத்து
இஷானியே விக்ரமை அழைத்தாள்.. 🤔🤨

விக்ரம் திரும்பி.. என்ன என்பார் போல இஷானியை காண.. 🤨

இஷானி.. தன் பையில் எதையோ தேடி.. திடீரென ஒரு ரோஜா மலரை அவன் முன் நீட்டி.. "நாம கல்யாணம் பண்ணிக்கலாமா... ?? எனக்கு உன்ன பாத்ததும் பிடிச்சிருச்சு.. சரி சொல்லு.. கல்யாணம் பண்ணிக்கலாமா.. ??" என்று இஷானி கண்களில் காதல் வழிந்தொட மொழிந்தாள்.. இஷானியின் மனதில் தன் காதலை விக்ரம் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்ற தவிப்பும் அடங்கி இருந்தது..😍😍🥰🥰

விக்ரம்.. சட்டென மகிழுந்தை நிறுத்தினான்.. அது ஒரு ஆள் நடமாட்டம் இல்லாத நெடுஞ்சாலை..😳🤯

விக்ரம் சொல்லாதொரு இன்ப அதிர்வில் மிதந்தான்.. தன் காதல் தேவதையே தன்னிடம் காதலை தெரிவிப்பது அத்தனை மகிழ்ச்சி அவனுக்கு.. ஏதோ இவ்வுலகமே தன் வசமானதை போல்.. 😉🥰

ஆனால்.. எப்படி என்னைப் பற்றி ஏதும் அறியாது.. காதலை தெரிவித்தாள்.. ?? என்று விக்ரம் அவனுள் யோசனையில் உளன்றவனை கலைத்தது.. இஷானி விரல் சொடுக்கிட்ட சத்தம்..🤨

"என்ன நீ.‌.. ?? நேத்து ஏதோ.. சும்மா பாத்துகிட்டோம்.. இன்னிக்கு தான்.. உன்ன முழுசா பாத்தேன்.. என் பேரு மட்டும் தான் உனக்கு தெரியும்.. அதுக்குள்ள எப்படி.. ??" என்று விக்ரம் இஷானி கையில் இருந்த பூவை வாங்கிய படி பிதுக்க பிதுக்க முழித்தான்..🙄🙄

இஷானி.. விக்ரமை ஒரு மார்க்கமாக பார்த்து...
"அதனால.. என்ன.. ?? எனக்கு உன்ன பிடிச்சிருச்சு.. உன் கூட வாழ்ந்தா.. என் லைஃப் நல்லா இருக்கும்னு தோனுச்சு அதான்.. இப்ப கூட நா உன்கிட்ட கல்யாணம் பண்ணிக்கலாமான்னு.. கேட்டிருக்க மாட்டேன்.. ஆனா.. நீ உன் மனசுல என்ன நினைச்சுட்டு இருக்கேன்னு தெரியாம.. நா பாட்டுக்கு உன்ன நினைச்சு உருகிட்டு இருக்குறது.. எனக்கு தப்புன்னு தோனுச்சு.. அதனால தான்.." என்று இஷானி சர்வ சாதாரணமாக கதைத்தாள்..🙂🙂🙂

"ப்ரபோஸ்.. பண்றியே.. சப்போஸ்.. நா உன்ன ஏமாத்திட்டா.. ??" என்று விக்ரம் விளையாட்டாக கேட்டு வைத்தான்..😊😍

"நீ யாரா இருந்தாலும் சரி.. நீ எப்படி பட்டவனா இருந்தாலும் சரி.. என்னை ஏமாத்துறது நீயா இருந்தாலும் சரி.. நீ எப்படி இருக்கியோ.. உன்ன நா அப்படியே ஏத்துக்கறேன்.. நீயும் என்ன லவ் பண்ற தான.. ??" என்று இஷானி கண்களில் எதிர்பார்ப்போடு கேட்டாள்...😍😍🥰🥰

விக்ரம்.. இஷானியின் வார்த்தைகளில் கரைந்து விட்டான்.. எத்தனை பெண்கள் தங்களின் காதலனை அப்படியே ஏற்கின்றனர்.. என்று அவனுக்குள் ஒரு இருமாப்பு..😎😎😎😉😉

என்ன நினைத்தானோ.. விக்ரம்.. "கீழ இறங்கு.. இறங்கு.‌." என்று இஷானி ஏன் என்ற பார்வைக்கு இறங்கு என்பதே விக்ரமின் மொழியாய்..🤔

இஷானியும் அந்த நெடுஞ்சாலையின் ஒரு பக்கத்தில் சென்று நின்றாள்.. விக்ரம் இவளருகே வந்தான்..☺️

சில மணித்துளிகள் அமைதியிலேயே கரைந்தது.. விக்ரம்.. சன்னமாக சிரித்து வைத்தான்..🙂

இஷானி.. "ஏன் சிரிக்கற.. ??" என்று அவன் புன்னகையில் தவழ்ந்து கொண்டே வினவினாள்..🙂🙂🤔

"ஷிவு.. சொன்னது.. சரி தான்.. நீ தைரியமான பொண்ணு தான்.. ஆனா இவ்ளோ தைரியமா இருந்திருக்கக் கூடாது.. நான் உன்கிட்ட ப்ரபோஸ் பண்ணி.. உன் பின்னாடி லவ்காக அலையணும்.. அப்படின்னெல்லாம்.. ஆசைப்பட்டேன்.. கெடுத்திட்டியே.." என்று விக்ரம் தன் காதலை உணர்த்தியதில் வெட்கம் உண்டானது..☺️☺️☺️😍😍🥰🥰

இஷானி.. வெட்கச் சிரிப்பை உதிர்த்து..
"இப்ப மட்டும் என்ன.. ?? என் பின்னாடியே சுத்து.. எனக்கு இன்னும் நீ ப்ரபோஸே பண்ணல.. நீ வெட்கப்படாத.. என்னால என்னை கண்ட்ரோல் பண்ண முடியல.." என்று இஷானியும் வெட்கத்தை மறைக்க பெரும்பாடு பட்டாள்..🥰🥰☺️☺️😘😘

விக்ரம் இஷானியின் அருகில் கிட்டத்தட்ட மெதுவாக ஒடி வந்து.. தயக்கமாக இஷானியை கண்டு.. "கட்டிக்கலாம்ல.." என்று விழிகளில் காதலை தேக்கி வைத்து அனுமதி கேட்டு நின்றான்.. ☺️

இஷானி கைகளை உயர்த்தி வா என்றார் போல அனுமதித்து.. அழைத்தாள்..

விக்ரம்.. இஷானியை அணைத்து.. தட்டமாலைமாக தூக்கி சுற்றினான்.. இஷானியும்.. விக்ரமின் அணைப்பில் புன்னகையோடே ஆழ்ந்தாள்.. இறக்கி விட்டவன்.. ஆனந்தமாக.. தன் இனியவளின் அனுமதி தந்துவிட்டாள்.. என்ற மகிழ்வடைந்து அவளை இறுக்கி அணைத்து.. "இஷு.. ஐ லவ் யூ.. ஐ லவ் யூ.." என்று இறுக்கிக் கொண்டான்..😍😍🥰🥰🥰 அப்படியே அவள் விரல்களில் மோதிரத்தை மாட்டிவிட்டான்..

இஷானியும்.. விக்ரமின் நெற்றியில் தன் முதல் இதழ் முத்திரையை அச்சிட்டு.. "ஐ லவ் யூ.." என்று சன்னமாக.. அவள் உரைத்தது.. அவளுக்கே கேட்கவில்லை.. ஆனால்.. புரிந்து கொண்டான்.. அவளின் மனதை மயக்கிய கள்வன்.. விக்ரமிற்கு சந்தோஷம் தாளவில்லை.. வெகு நேரமாக இருவரும் அணைப்பில் மெய்யை மறந்து இருந்தனர்..🥰🥰

இருவரையும்..
உலகிற்கு இழுத்தது.. விக்ரமின் கைப்பேசி ஓசை..
ஷ்ரித்திக் தான்.. அழைத்தது.. ஏன் இத்தனை தாமதம்.. ?? விரைவாக வாருங்கள் என்று கூறிவிட்டு வைத்தான்..☺️

விக்ரமும்.. இஷானியும்.. மகிழுந்தில் ஏறியமர்ந்து.. ஷ்ரித்திக்கின் அலுவலகம் நோக்கி பயணித்தனர்..☺️☺️

வழியில்.. விக்ரம்.. ஷ்ரித்திக்கின் திருமணத்தை பற்றி கூற விழைந்தான்.. இஷானி.. "உன் ப்ரண்ட்ட பத்தி இப்ப என்கிட்ட சொல்லாத‌‌.. முதல்ல.. அவன் ஃப்ரண்ட்சிப்ப கட் பண்ணு.." என்று கத்தி மறுத்து விட்டாள்.. காரணம்.. தன் தோழியின் முட்டாள் தனமான முடிவிற்கு தள்ளியது.. அவன் தானே.. என்ற கோபம் ஷ்ரித்திக்கின் மீது பாய்ந்தது.. 😠😠

"ஏன்டி.. இப்ப தான.. அப்படியே ஏத்துக்கறேன்னு சொன்னா.. ?? அதுக்குள்ள.." என்று விக்ரம் இழுத்தான்.. இஷானி விக்ரமை முறைத்துக் கொண்டிருந்தாள்..🤨🤨

"பின்ன என்னங்க டா.‌. என் அத்துவோட லைஃபே போச்சுல.. பேசாதே.‌. பேசாதே‌‌.. உன் ஃப்ரண்ட பத்தி இப்ப எதுவும்.. சொல்லாத.. அப்ப தான்.. நேர்ல போய்.. உரைக்க உரைக்க கேட்க முடியும்.." என்று இஷானி விக்ரம் நடுவில் பேசுவந்தவனை இடையிட்டு கருவினாள்.. 😠😠

விக்ரம்.. 'ஆத்தி.. பெரிய லம்பாடி பொண்ணா இருப்பாளோ.. ??' என்று நினைத்து கொண்டான்..🙄

விக்ரமை பார்த்து..
"ஏய்... என்ன நினைக்கறேன்னு எனக்கு தெரியும்... ரெண்டு கண்ணனையும் நொண்டிப் புடுவேன்.. ஜாக்கிரதை.." என்று மிரட்டினாள்..🤨

விக்ரம்.. 'எப்படி கண்டுபிடிச்சா.. ??' என்று அவனுள் ஓடியது..🤔

ஷ்ரித்திக்கின் அலுவலகத்தை இருவரும் அடைந்து.. அவனின் அலுவலக அறைக்குள் இருவரும் நுழைந்தனர்..🙂🙂

ஷ்ரித்திக் அப்போது.. தன் தனிக்கை செயலாளரிடம் பேசிக் கொண்டிருந்தான்..😎😎

விக்ரமும் இஷானியும் வருவதை கண்டு தனிக்கை செயலாளரை வெளியே அனுப்பி வைத்து.. இருவரையும் அமர செய்தான்.. ஷ்ரித்திக்..😎

"என்ன.. இஷானி‌.. உன் லவ்வ சொல்லிட்ட போலயே.. ?? இவன் மூஞ்சி ப்ரைட்டா இருக்கே.." என்று ஷ்ரித்திக் சரியாக கணித்து கேட்டதில்.. வாயை பிளந்தாள்.. இஷானி..🙂😎

விக்ரம்.. "பங்கு.. நா கமிட்டட் டா.. வழக்கம் போல கரெக்ட்டா சொல்லிட்ட.. பட்.. நா லவ் பண்றது உனக்கு தான் தெரியுமே.. இஷானி தான் சொன்னானு.. எப்படி கரெக்ட்டா சொன்ன.. ??" என்று விக்ரம் வினவினான்..🤔

"ஹ்ம்ம்ம்ம்.. சாப்பிடும் போது தான் பார்த்தேனே.. இஷானி உன்னையே வச்ச கண்ணு வாங்காம பாத்தா.. அதுல தான் தெரிஞ்சுக்கிட்டேன்.." என்று ஷ்ரித்திக்.. தன் கணிப்பை பற்றி கூறினான்..🤔😎

"அது முக்கியம் இல்ல.. எதுக்கு என்ன பாக்க கூப்பிட்டிங்க.. அதுக்கு பதில் சொல்லுங்க.. அதுக்கு மட்டுமில்ல.. இன்னும் நிறைய கேள்விக்கு பதில் சொல்ல வேண்டியிருக்கு.." என்று இஷானி.. எண்ணெயில் போட்ட கடுகாக கடுகடுத்தாள்..😠😠

ஷ்ரித்திக்கால்.. இஷானியின் கோபத்தை புரிந்து கொள்ள முடிந்தது.. தன் தோழியின் வாழ்வை கெடுக்கவே இருக்கிறான்.. என்று இஷானி.. நினைத்து ஷ்ரித்திக்கின் மீது கோபம் கொண்டாள்..😠😠

"இங்க பாரு.. இஷானி.. இது ஆக்சிடென்ட் தான்.. ஆனா.. அன்னிக்கு ஸ்ச்சுவேஷன்.. அப்படி.." என்று ஷ்ரித்திக் முடிப்பதற்குள் இஷானி கத்தரித்து... பேச தொடங்கினாள்.. "இல்ல என்ன.. என்ன ஸ்ச்சுவேஷன்.. ?? நிலைமைனுட்டு.. தப்பு பண்ற எல்லாரும் சாக்கு சொல்லிட்டு தான்.. இருப்பாங்க.. அதுக்காக.. இவன்.. (விக்ரம்) சொன்னான்.. வர வழில.. நீங்க ரொம்ப தைரியசாலி.. அப்படி இப்படின்னு.. சரி.. ஓகே.. கல்யாணம் பண்ணிட்டிங்க.. அட்லீஸ்ட்.. அவளுக்கு.. நீங்க யாருன்னு ஐ மீன்.. ஃப்ரண்டா, புருஷனா இல்ல தர்ட் பர்சனா.. அப்படின்னு ஏதாவது சொன்னீங்களா.. ?? எனக்கு என்னவோ.. நீங்க வேணும்னு பண்ண மாதிரி தான்.. இருக்கு.." என்று இஷானி அனைத்தையும் கொட்டித் தீர்த்தாள்..🤬🤬

விக்ரம்.. இஷானியை தடுக்க தடுக்க.. அவன் கையை உதறிவிட்டு.. "நீ பேசாத.. நா என் அத்துக்காக பேசறேன்.." என்று விக்ரமிற்கு பதிலளித்து.. ஷ்ரித்திக்கிடம் கத்தினாள்..😡

ஷ்ரித்திக்.. பொறுமையாக.. கைகளை கட்டி கொண்டு.. இஷானி சொல்ல வந்ததை எல்லாம் கேட்டுக் கொண்டிருந்தான்.. இஷானி கூறிய வேளையில் தான்.. நான்.. இன்னும் ஷிவாக்ஷியிடம்.. தான் அவளுக்குள் யாரென்று விதைக்கப்படவில்லை என்று உணர்ந்தான்.. தன்னுடைய தவறையும் அறிந்து கொண்டான்.. ஷ்ரித்திக்..😕

இஷானி பேசி முடித்ததும்.. தன்னருகில்.. குவளையில் இருந்த நீரை.‌. இஷானியின் புறம் தள்ளி வைத்தான்.. எடுத்து குடி என்பார் போல.. இஷானியும்.. எடுத்து குடித்தாள்..🤨

விக்ரம்.. இஷானியிடம்.. "இங்க பாரு.. நீயும் நிலமை தெரியாம பேசாத... அன்னிக்கு என்னாச்சுன்னு உனக்கு தெரியுமா.. ?? என் பங்கு என்ன மனநிலைல இருந்தான்னு தெரியுமா.. ?? நீ மட்டுந்தான்.. உன் ஃப்ரண்ட்காக பேசுவியா.. ஏன் எனக்கு பேச தெரியாதா.. ?? என் பங்கு முன்னாடி.. நிக்கறதுக்கே.. அத்தன பேரும் பயப்படுவாங்க.. என்னையும் சேர்த்து தான்.. ஆனா.. உன்னை இவ்வளோ.. தூரம்.. பேச விட்டு பாத்துட்டு இருக்கான்னா.. அது நீ பொண்ணுங்கறதுனாலோ.. இல்ல என் லவ்வர்ங்கறதுனாலோ இல்ல.. ஷிவாக்ஷியோட ஃப்ரண்ட் அந்த ஓரே ஒரு காரணத்துக்காக மட்டுந்தான்.. நானும் பாத்துட்டு தான் இருக்கேன்.. நீ தைரியமான பொண்ணுன்னா.. என்ன வேணாலும் பேசுவியா.. ?? யார்கிட்ட எப்படி பேசனுங்கறத முதல்ல கத்துக்கோ.." என்று விக்ரமும் கைகளை நீட்டி எச்சரித்து இஷானியிடம் கண்கள் சிவக்க கோபத்தில் கத்தினான்.. 😡

ஷ்ரித்திக்.. விக்ரமை கை உயர்த்தி.. அமைதியாக இருக்கும்படி சமிக்ஞை செய்தான்.. 🖐️

இஷானி கிட்டத்தட்ட பயந்து விட்டாள்.. விக்ரமை பைத்தியம்.. என்று திட்டும் போதேல்லாம்.. போது அமைதியாக இருந்தவன்.. அவன் நண்பனை திட்டுவதை பொறுக்காமல் தன்னிடம் எகிறுபவனை.. பயம் கலந்த பார்வையுடன் விக்ரமை நோக்கினாள்.. இஷானி..👀

ஷ்ரித்திக்.. "டேய்.. விடுடா.. நீயும் கத்தினா.. அவங்களுக்கும் நமக்கும் என்ன வித்தியாசம்.. ?? அவங்க கேக்கறதிலயும்.. நியாயம் இருக்குல்ல.." என்று.. விக்ரமை பார்த்து உரைத்து விட்டு.. இஷானியை நோக்கி.. தீட்சண்யமான பார்வை வீசி.. பதிலளித்தான்.. 😎

"கேட்டிங்கல்ல.. இஷானி.. வேணும்னு பண்ணேன்னு சொன்னீங்கல.. ஆமா.. வேணும்னு தான் பண்ணேன்.. எனக்கு ஷிவு வேணும்னு தான் பண்ணேன்.. ஆக்சுவல்லா.. ஷிவு.. மணமேடைக்கு வந்த வரைக்கும் தான் ஆக்சிடென்ட்.. அதுக்கு அப்புறம் நானே தான்.. நா நினைச்சிருந்தா.. கல்யாணம் நிப்பாட்டி இருப்பேன்.. ஷிவாக்ஷிக்கு பதிலா வேற யாராவது இருந்திருந்தா.. ??" என்று அன்று நடந்ததையும்.. ஷ்ரித்திக் கூறி முடித்தான்..😎

இஷானி.. இப்போது அமைதியாக பேசினாள்.. "அன்னிக்கு.. உங்களால முடிவெடுக்க முடியாம இப்படி பண்ணிருக்கீங்க.. ஏன் அப்பயே கல்யாணத்த நிப்பாட்டி இருக்கலாம்ல.. ?? நீங்க லவ் பண்றது.. கல்யாணத்துக்கு முன்னாடி நாள் தான்.. உங்களுக்கே தெரியும்னு சொல்றீங்க.. அதையும்.. மீறி நீங்க மணமேடைக்கு போயிருக்கீங்கன்னா.. நீங்க ரொம்ப குழப்பத்தில இருந்திருக்கீங்க..ரைட்.." என்று இஷானி வெளியே பேசினாலும்.. 'ஓருவேளை.. ஷிவாக்ஷியின்.. மீது.. காதலா.. ?? அல்லது..' என்றார் போல மனதிற்குள் சந்தேகம் துளிர் விட்டது..🙄

ஷ்ரித்திக்.. "எக்ஸாக்ட்லி.. எனக்கு என்ன பண்றதுன்னு தெரியாம இருந்தேன்.. ஷிவு வந்ததுக்கு அப்பறம்.. என்னென்னவோ நடந்துருச்சு.. சந்தேகமே.. வேண்டாம்.. லவ் தான்.. ஷிவு மேல.." என்றவளின் மனதில் இருந்த சந்தேகத்தையும் சேர்த்தே தீர்த்தான்..‌ அதே ஊடுருவும் பார்வையோடு..😎🤨

இஷானி.. ஷ்ரித்திக்கின் கண்களில் ஷிவாக்ஷியின் மீதிருந்த காதலை தெள்ளத் தெளிவாக காட்டியதில்.. நிம்மதியும் மகிழ்வையும் ஒருங்கே அடைந்தாள்.. 🙂

"லவ்வா.. !! ஷிவு.. மேலயா.. ?? அது சரி.. அவ அழகுக்கு லவ் வராமா இருந்தா தான் ஆச்சரியம்.. சரி லவ் பண்றீங்கன்னா.. அத அவக்கிட்ட சொல்றத விட உங்களுக்கு என்ன பெரிய வேலை அப்படி.. ?? லவ் பண்ணுனா.. முதல்ல லவ் பண்றவங்க கிட்ட முதல்ல சொல்லுங்க.. அவ மனசுல என்ன நினைச்சிட்டு இருக்கான்னு தெரியுமா.. ??" என்று இஷானி ஷ்ரித்திக்கிடம் வினவினாள்..🙂

ஷ்ரித்திக்.. இஷானியின் கேள்விக்கு பதிலளித்தான்..
"நா கல்யாணம் ஆன அடுத்த நாளே சொல்ல நினைச்சேன்.. எங்க மேடம்.. பித்து பிடிச்ச மாதிரி இருந்தாங்க.. அதையும் மீறி நா லவ்வ சொல்லிருந்தா.. ?? என் லவ்.. ஷிவுக்கு லவ்வா தெரிஞ்சிருக்காது.. வேற மாதிரி தான் தெரிஞ்சிருக்கும்.. நீங்க சொன்னதுக்கு அப்பறம் தான் எனக்கு தெரிஞ்சுது.. நா அவளுக்கு யாருன்னே ஐ மீன்.. உரிமைய கூட சொல்லாம விட்டுருக்கேன்னு.." என்று பெருமூச்சு விட்டான்..😕😎

"பாருங்க.. அவ இன்னும்.. பிராமின் ஸ்லாங்க விடல.. அவ டென்சனா இருக்கும் போதோ.‌. இல்ல கோபத்துலயோ.. சோகத்துலயோ தான்.. அவளுக்கு அந்த ஸ்லாங் வரும்.. இல்லன்னா.. நார்மலா தான்.. நம்மள மாதிரி தான் பேசுவா.. இதுலேயே தெரியுது.. அவ எவ்ளோ.‌. டிப்ரஷன்ல இருக்கான்னு.. சீக்கிரமா போய்.. உங்க லவ்வ சொல்லுங்க.. " என்று ஷ்ரித்திக்கை துரிதப்படுத்தினாள்.. தன் நண்பியின் முட்டாள் தனமான முடிவை எண்ணி..😕

இஷானிக்கு.. ஷ்ரித்திக் கூறியதில் இருந்த நியாயம் விளங்கியதால்.. அமைதியாக பேசிக் கொண்டிருந்தாள்.. 🙂

விக்ரம் இடையில் புகுந்து.. "ஹேய்.. ஷிவு.. ஏதோ.. நினைக்கிறான்னு சொன்ன.. ?? என்ன அது.. ??" என்று ஷ்ரித்திக்கை பார்த்துக் கொண்டே கேட்டான்.. விக்ரம்..🙄

இஷானி.. ஷ்ரித்திக்கை நோக்கி.. "ஹ்ம்ம்ம்ம்.. உங்க பொண்டாட்டியே சொல்லுவா.. போய் கேட்டுக்குங்க.." என்று எகத்தாளமாக மொழிந்தாள்..😜

"சரி.. நீங்க.. லவ் பண்றீங்கன்னு சொல்றீங்க.. ஓகே.. ஆனா.. அத்து சந்தோஷமா.. இருக்கனும்.. உங்கள பத்தி.. வெளிய விசாரிச்சேன்.. உங்க வீட்டுக்கு வரத்துக்கு முன்னாடியே.. எல்லாரும் நல்ல விதமா தான் சொன்னாங்க.. அவ சந்தோஷமா இருக்கனும்.. அத்து சந்தோஷமா இருக்கற மாதிரி வெளியே காட்டிக்கிறா.. ஆனா.. உங்க முலமா அவ சந்தோஷத்த நா பாக்கனும்.. சரி அப்ப நா கிளம்புறேன்.." என்று இஷானி ஷ்ரித்திக்கிடம் மட்டுமே சொல்லிக் கொண்டு கிளம்பினாள்..😃

ஷ்ரித்திக்.. கண்களால்.. இஷானியிடம்.. வாக்களித்தான்.. என் தேவதையை நான் பத்திரமாக பார்த்துக் கொள்வேன் என்று.. அதில் தெரிந்த உறுதியும் தெளிவும் காதலும்.. இஷானிக்கு நிம்மதியை தந்தது..
🙂

ஷ்ரித்திக்.. "உனக்கு ஏத்த பொண்ணு தான்.. என்ஜாய்.. மச்சி.‌.. பட்.. இப்ப கோபமா போறா.. சமாதானப்படுத்து.." என்று விக்ரமிடம் புன்னகையோடு மொழிந்தான்..😜

விக்ரம்.. "என்னடா.. சொல்ற.. ?? கோபமா போறாளா.. ??" என்று முழித்தான்..🙄

ஷ்ரித்திக்.. "பின்ன.. என்ன.. ?? எனக்கு சப்போர்ட் பண்ணி ஏன் பேசுன.. சாரி.. திட்டுன.. ?? அதான்.. கோச்சுகிட்டாங்க.." என்று விக்ரமிடம்.. உரைக்கவும்..😉

அப்போது தான் உணர்ந்தான்.. விக்ரம்.. இஷானியின் பின்னே ஓடினான்.. சமாதானம் செய்ய..😟

"இஷு.. சாரி.. இஷு‌.. டக்குன்னு கோபம் வந்துருச்சு.. சாரி.. சாரி.." என்று விக்ரம் இஷானியின் பின்னே.. கத்திக் கொண்டே வந்தான்..😰

இஷானி.. "எதுக்கு கத்துற.. இது ஆஃபிஸ்.. எனக்கு கோபமெல்லாம்.. இல்ல.‌. நீ சாரி சொல்லாத.. என் மேலயும் தப்பு இருக்கு.. உன் ஃப்ரண்ட் ரொம்ப பெரிய ஆள்.. நான் கத்தி இருக்கக் கூடாது.. நீ சொல்றதும் சரி தான்.. யார்கிட்ட எப்படி பேசனும்னு தெரிஞ்சு பேசுனும்.." என்று குற்ற உணர்வில் தன் தலையில் குட்டிக் கொண்டாள்.. 😕

விக்ரமும் இஷானியை அழைத்து கொண்டு.. அவளின் இல்லத்தில் விட்டு வந்தான்..🙂🤗

---------------

இஷானி.. ஷிவாக்ஷியை எண்ணி கவலை கொண்டாள்.. 'ஏன் இவள்.. இப்படி இருக்கிறாள்.. ?? நல்வாழ்வு அவளை தேடி வந்தாலும் கூட.. அவளே விரட்டி விடுவாள் போலிருக்கிறதே.. என்னவோ..' என்று தன் நினைத்து சலித்து கொண்டாள்.. அப்படியே உறங்கியும் போனாள்..🤗

ஷ்ரித்திக்.. அவன் மனதுள் உதித்த யோசனையை செயல் படுத்த விழைந்தான்.. தன் தாத்தா பாட்டியிடம் கூறினாள் மட்டுமே.. மறுபேச்சின்றி நிகழும் என்பதால்.. அவர்களின் அறையை நாடினான்..🙂

ஷிவாக்ஷி.. உறக்கத்தின் பிடியில் இருந்தாள்..😴

கிழக்கில் உதயமானான்.. உதயன்.. கரு மேகங்களை விலக்கி.. ராஜனாக உதயமானான்..🌞

ஷிவாக்ஷி நெட்டி முறித்துக் கொண்டு.. எழுந்தாள்.. இன்னும் அவள் கண்களில் தூக்கம் கலையவில்லை.. கண்களை கசக்கிக் கொண்டாள்..🙂🤗

கண்களை கசக்கிக் கொண்டவளின் கண்களில் விழுந்தது.. கண்ணாடியின் முன்பு ஒப்பனையில் பெண்களை சுண்டி இழுக்கும் பேரழகனாக.. கருப்பு நிற கோட் சூட்டில் மிளிர்ந்தான்.. ஷ்ரித்திக்.. 😍🤩


ஷிவாக்ஷி.. வாயை பிளந்தாள்.. "என்ன இவ்வளோ.. சீக்கிரம் எழுஞ்சிட்டேள்.. வெளியே கிளம்புறேளா.. ?? என்ன எழுப்பி இருக்காளாமோன்னோ.." என்று கொட்டாவி விட்டு கொண்டே கேட்டாள்.. 😃

"தூங்கட்டும்னு தான்.." என்ற ஷ்ரித்திக்கின் கவனம் கை மடிப்பதில்..😎

"சரி.. நானும் ஸ்நானம் பண்ணின்டு வரேன்.." என்று ஷ்ரித்திக் கூற வருவதைக் கூட கேட்காமல்.. குளிக்க சென்றாள்..🙂

ஷிவாக்ஷி.. குளித்து முடித்து.. அடர் சிவப்பு நிறத்தில் சுடிதாரை அணிந்து.. அடர் கருங்கூந்தலை க்ளீப்பில் அடக்கி.. கொண்டு வெளியே வந்தாள்..😊


ஷ்ரித்திக்.. இப்போது.‌. அலுவலக அறையில்..😎

ஷிவாக்ஷி.. ஷ்ரித்திக்கை பார்த்து விட்டு.. வெளியேறினாள்..😃

வெளியேறியவளுக்கு பெரும் அதிர்ச்சி.. எங்கு பார்த்தாலும் தொங்கும் தோரணமும்.. சம்பங்கி மலர்களும்.. துலக்க மல்லி மலர்களும்.. வாசனையை நன்கு நுகர்ந்து அனுபவித்தாள்.‌. மொத்தத்தில் கல்யாண இல்லத்திற்கான அனைத்தும் அங்கு அலங்காரத்தோடு வண்ணமயமான திரைச் சீலைகளோடு.. தொங்கிக் கொண்டிருக்கிறது.. இவையனைத்தும் அவளுக்கு புன்முறுவல் செய்ய வைத்தது..🤩🤩

வழியில் சென்றுக் கொண்டிருந்த.. தீவாவை மறித்து.. "என்ன விசேஷம்.. ?? கலை கட்டுறதே‌‌.. தோரணம்.. அலங்காரம்.. ?? என்ன.. ??" என்று புன்னகை மாற முகத்துடன் கேட்டாள்.. ஷிவாக்ஷி..😊

"ஹேய்.. என்ன நீ இப்படி இருக்க ரெடியாகலயா.. ?? ஃபங்ஷனோட ஹீரோயினே நீ தான்.." என்று தீவா.. ஷிவாக்ஷியிடம் சொல்லிக் கொண்டிருக்கும் போதே.‌. 🤩

பாட்டி தேவசேனா அழைக்கவும்.. ஷிவாக்ஷியிடம் சொல்லிக் கொண்டு கிளம்பினாள்..🙂

ஷிவாக்ஷிக்கு.. குழப்பம்.. ஏற்பட்டது‌‌.. நான் தான்.. விழாவின்.. நாயகியா.. ?? என்று புருவ முடிச்சுடன் யோசித்தாள்...🤔

கீழே.. பிரம்மாண்டமான அலங்காரத் தோரணை.. லயித்தாள்.. ஷிவாக்ஷி..🤩🤩

ஷிவாக்ஷியை கண்டதும்.. ஜானவியும் சஞ்சையும்.. "ஹே.. புதுப் பொண்ணே‌‌.. மருமகளே.. மருமகளே.. வா.. வா.. உன் வலது காலை எடுத்து வைத்து வா.. வா.." என்று சிரித்துக் கொண்டே.. ஷிவாக்ஷியை கேலி செய்தனர்..🤪🤪

வர்ஷா.. "ஷிவு.. வா.. சேலை கட்டிக்கலாம்.. உனக்கு செம்மையான இருக்கும்.." என்று குதுகலமாக.. கதைத்தாள்..😘

ராகுல்.. "பாத்தியா.. அண்ணா.. ஷிவுக்கு... சர்ப்ரைஸ்.. தரத்துக்கு.. என்ன பிளான்.. பண்ணிருக்காங்க.." என்று அவர்கள் பாட்டுக்கு பேசிக் கொண்டே போனார்கள்..😝

அவர்களை தடுத்தது.. சித்தி தேவிகா தான்.. "ஹே.. வாலுங்களா.. ?? ஓடுங்க.." என்று விரட்டினார்..😛

"என்னம்மா.. நீ சுடிதார்ல இருக்க.. ?? போய் ஏதாவது.‌. க்ரேண்டானா.. சேலையை கட்டிக்கோ.. நீ அதுல தேவதை மாதிரி தெரியனும்.." என்று சித்தி தேவிகா கூறவும்..😘

"நடக்கறத.. பேசுங்கோ.. அத்தை.. நா தேவதையா.. ?? இது நோக்கே.. சித்த ஓவரா தெரியல.. ??" என்று ஷிவாக்ஷி சலித்து கொண்டாள்..🤨

"அதுல என்ன.. சந்தேகம்.. ?? என் மக தேவதை தான்.. சரி.. ரெடியாகி வா.. நீ இன்னும் சுடிதார்ல இருக்க.. ??" என்றபடியே.. அங்கு வந்து சேர்ந்தார்.. இந்திரகவி.. 🤨

"இன்னிக்கு என்ன விசேஷம்.. ?? அம்மா.. ??" என்று புருவ மத்தியில் முடிச்சிட வினவினாள்..😕

"என்ன.. ஷிவு.. தெரியாத மாதிரி பேசற.. ?? இன்னிக்கு உனக்கும் ஷ்ரித்திக்கும்.. ரிசெப்ஷன் பார்ட்டில.. ஏன்.. ஷ்ரித்திக் உன்கிட்ட சொல்லலையா.. ??" என்று மாயாவின் அம்மா சமீராவும் அவர்களோடு.. இணைந்து கொண்டார்..😊

சமீராவும்.. அவரின் கணவர் யாதவனும் நேற்று இரவே குடும்பத்தினர் அனைவரிடமும் மன்னிப்பு கோரி.. சகஜமாய் பேசத் தொடங்கி விட்டனர்..

ஷிவாக்ஷிக்கு சிறு அதிர்வு தான்.. ஆனால் வெளிப்படுத்தவில்லை.. என்ன இது.. ?? எனக்கு தெரியாமல்.. இந்த இல்லத்தில் ஏதேதோ.. நடக்கிறதே.. ?? உடனடியாக.. ?? இதை தடுத்தாக வேண்டும்.. ?? ஆனால்.. அது ஷ்ரித்திக்கால் மட்டுமே சாத்தியம்.. என்று ஷிவாக்ஷி ஷ்ரித்திக்கிடம்.. பேச வேண்டும் மனதிற்குள் நினைத்துக் கொண்டிருந்தாள்.. 🙄

ஷ்ரித்திக்.. நேற்று தன் தாத்தா பாட்டியிடம் பேசியது இது தான்..
-------------
நேற்றிரவு.. தாத்தாவுடைய அறையின் கதவை தட்டி.. உள்ளே நுழைந்தான்.. ஷ்ரித்திக்..

"சொல்லுப்பா.‌. என்ன விஷயம்.‌. ??" என்று தாத்தா அவர் வயதிற்கேற்ற கம்பீரத்தோடு வினவினார்..🙂

"தாத்தா.. எனக்கு கல்யாணம் சிம்பிளா தான்‌‌.. நடந்தது.. இன்னும் எனக்கு கல்யாணம் ஆனது.‌. நிறைய பேருக்கு தெரியாது.. இன்குளுடிங்.. மை பிஸ்னஸ் பார்ட்னர்ஸ்.. சோ.. நாளைக்கு கண்டிப்பா.. ரிசெப்ஷன் மாதிரி ஒரு பெரிய பார்ட்டி வைச்சிரலாம்னு நினைக்கிறேன்.. நாளைக்கே நடக்கனும்.. தாத்தா.." என்று தான் வந்த விஷயத்தை பட்டென உடைத்து விட்டான்..🤨

"என்ன.. ஷ்ரித்திக்.. ?? நாளைக்கு வைக்கணும்னு.. நடு ராத்திரியில வந்து சொல்ற.. ??" என்று பாட்டி தேவசேனா கேட்டதற்கு.. எங்கோ பார்த்துக் கொண்டிருந்தான்.. ஷ்ரித்திக்..🤨

"சரி.. இது.. பர்மிஷன்னா.. ?? கட்டளையா.. ??" என்று ஷ்ரித்திக்கை ஊன்றி கவனித்தார்.. தாத்தா அமரேந்திரர்..🤨🧐

"ஓகே.. அதுக்கான ஏற்பாடுகள பண்ண சொல்லிடலாம்.. முக்கியமா.. க்ரண்டா நடக்கணும்.. ஆனா.. உன் பிஸ்னஸ் பார்ட்னர்ஸ்.. அப்பாவோட பார்ட்னர்ஸ்.. சித்தப்பாவோட பார்ட்னார்ஸ்.. எல்லாரையும்.. நீ தான் கூப்பிடனும்.. அதுவும் ஒரே ராத்திரில.. உன்னால முடியும்னா.. ?? நா இந்த பார்ட்டி நடத்த சம்மதிப்பேன்.." என்று தாத்தா கால் மேல் கால் போட்டு படியே கேட்கவும்..🤨

பாட்டி.. "என்ன நீங்க.. ?? அவன் சின்ன பையன்.. புரியாம பேசறான்னா.. ?? நீங்களும்.." என தடுக்க வந்தவரை.‌. தாத்தா.. கையமர்த்தி.. ஷ்ரித்திக்கை ஊடுருவி பார்த்தார்..🙄

ஷ்ரித்திக் தானும்.. சளைத்தவனில்லை.. என்று அவரையே தீட்சண்யமாக பார்த்து.. சம்மதத்தை தெரிவித்தான்.. தாத்தாவும் ஒத்துக் கொண்டார்..🙂
-----------------

ஆனால்.. ஷிவாக்ஷியின் யோசனையை வேறு விதமாக நினைத்துக் கொண்டார்.. சமீரா.. தன்னை அவள்.. தவறாக நினைத்து கொண்டிருக்கிறாள்.. என்று நினைத்தார்.. "என்ன.. ஷிவாக்ஷி.. ?? முன்னாடி ஒரு மாதிரி நடந்துக்கிட்டா.. ?? இப்ப ஒரு மாதிரி நடந்துக்குறான்னு பாக்கறீயா.. ?? அது பொண்ணு மேல இருக்குற பாசத்துல.. நா அப்படி நடந்துகிட்டேன்.. தப்பு தாம்மா.. மன்னிச்சுக்கோ.." என்று.. குற்ற உணர்வில்.‌ ஷிவாக்ஷியின் கைகளை பிடித்து கொண்டார்.. சமீரா..😢

"என்னம்மா.. பெரிய பெரிய வார்த்தையெல்லாம் பேசிண்டு.. நா அப்படியெல்லாம் நினைக்கவே இல்ல.." என்றபடியே.. ஷிவாக்ஷி.. சமீராவை சமாதானம் செய்தார்..☺️

சமீரா... ஷிவாக்ஷியை பார்த்து புன்முறுவல் செய்தார்..

"சரி.. என்ன வளவளன்னு பேசிட்டு.. போய் ரெடியாகு ஷிவு.. ஜானவி.. இங்க வா.. ஷிவுக்கு சேலையை கட்டி விட்டிரு.." என்று பாட்டி தேவசேனா.. ஷிவாக்ஷியிடம் சொல்லியபடியே அங்கு வந்தார்..☺️

பாட்டி கூறியதும்.. அனைவரும்.. கலைந்து சென்றனர்.. ஷிவாக்ஷி ஜானவியிடம்.. "ஜானு.. சித்த வெய்ட் செய்.. நானே கூப்படறேன்.." என்று ஷிவாக்ஷி.. அறக்க பறக்க ஷ்ரித்திக்கிடம் ஓடினாள்..😟

ஷ்ரித்திக்கின் அலுவலக அறைக்குள் நுழைந்து.. ஷ்ரித்திக்கை தொண்டையை கணைத்து அழைத்தாள்..😟

ஷ்ரித்திக்கும் திரும்பி.. ஷிவாக்ஷியை என்ன என்பதை போல பார்த்தான்..🤨

"என்ன நடக்கறது‌‌.. இங்க.. ?? நேக்கு தெரியாமா.. என்னென்னவோ.. நடக்கறது.. ?? ஹ்ம்ம்ம்ம்.. இப்போ.. எதுக்கு இந்த ரிசெப்ஷன் பார்ட்டி.. ??" என்று ஷிவாக்ஷி படபடக்க வினவினாள்.. கோபமும் பதற்றமும் ஒருங்கே இணைந்து..😟

ஷிவாக்ஷியை.. எந்தவொரு பதற்றமும் இல்லாமல் நிதானமாக.. "ரிசெப்ஷன் பார்ட்டி.. என் முடிவில்ல.. என் தாத்தாவொட முடிவு.. என்னை என்ன பண்ண சொல்ற.. ??" என்று பொய்யை உதிர்த்தான்..😉

"சரி.. போனது போகட்டும்.. இப்ப.. இந்த பார்ட்டி நடக்க விடமா பண்ணுங்கோ.. ?? நீங்க சொன்னா.. மறுப்பேச்சு ஏதும் சொல்ல மாட்டாளே.. ?? பேசுங்கோ.. ??" என்று பதற்றத்தோடு சீறினாள்.. ஷிவாக்ஷி..😑

ஷ்ரித்திக்.. ஷிவாக்ஷியின்... மறுப்பை எதிர்பார்த்தது தான்.. என்று அமைதியாக பதிலளித்தான்..😎

"சான்ஸ்லெஸ்.. என்னால முடியாது.. ??" என்று மறுத்து விட்டான்.. ஷ்ரித்திக்..😠

ஏன் என்பதை போல ஷிவாக்ஷி கூர்மையாக.. பார்த்தாள்.. அவளின் வார்த்தைகள்.. இப்போது கோபத்தோடு வந்தது..🤨

"நீ சொல்ற.. எல்லாத்துக்கும் என்னால தலையாட்ட முடியாது.. ஷிவாக்ஷி.. என் பிஸ்னஸ் பார்ட்னர்ஸ் எல்லாரையும் இன்வைட் பண்ணிருக்கேன்.. இந்த பார்ட்டி கரேண்டா.. நடக்க ஏற்பாடு பண்ணிருக்கேன்.. இப்ப நான் வேண்டாம்னு சொன்னேன்னா.. ?? அது என் பிஸ்னஸ பாதிக்கும்.." என்று அழுத்தமாக கூறினான்.. ஷ்ரித்திக்..😎😠

"இந்த.. பார்ட்டி நடக்கக் கூடாது.. அப்படி நடந்துடுத்துன்னா.. நா உங்களோட ஆத்துக்காரின்னு தப்பா நினைச்சுக்குவா.. ?? அப்பறம்.. நா எப்படி.. உங்களுக்கு.. பொண்ணு பாக்கறது.. கன்னியாதானம்.. பண்றது.. நா நேத்து ஜாமத்தில பேசுனத மறந்துட்டேளா.. ??" என்று ஷிவாக்ஷி பொரியத் தொடங்கினாள்..🤨

ஷ்ரித்திக்கிற்கு இப்போது.. கோபம் பரவத் தொடங்கியது.. "என்னால.. என் ஷிவாக்ஷியோட வாழ்க்கை.. ஒன்னுமில்லாம போறத.. பாத்துட்டு இருக்க முடியாது‌.. உன்னோட இந்த கேனத் தனமான முடிவுக்கு நான் என்னிக்கும் ஒத்துக்க மாட்டேன்.." என்று ஷிவாக்ஷியிடம்.. கத்தினான்.. ஷ்ரித்திக்.. 😠

ஷ்ரித்திக் மொழிந்த.. என் ஷிவாக்ஷி என்பதில் அத்தனை அழுத்தம்.. ஆனால்.. ஷிவாக்ஷி அதை கவனிக்க மறந்தாள்..

ஷ்ரித்திக்கின் சொற்களில் ஷிவாக்ஷி ஆடிப் போனாள்.. தன் முடிவையே முதன்மையாக கருதியவன்.. இப்போது என்ன ஆனாது.. ?? ஷ்ரித்திக் ஒரு முடிவெடுத்தால் அதிலிருந்து மாறுவது அவ்வளவு கடினம்.. என்று ஷ்ரித்திக்கின் அம்மா இந்திரகவி மொழிந்தது நினைவிலாடியது..😟

"இங்க பாருங்கோ.. நா ஏன்.. அப்படி சொன்னேன்னு.. முதல்ல யோசிங்கோ.. ?? நா சொல்ல நோக்கு நன்னா புரியும்.." என்று ஷிவாக்ஷி ஷ்ரித்திக்கிடம் புரிய வைக்கும் விதமாக கூற.. ஷ்ரித்திக்.. நிறுத்து என்பதை போல கை உயர்த்தினான்..😠

"தேவையில்லாதெல்லாம் பேசாத.. இன்னிக்கு இந்த பார்ட்டி நடக்கும்.." என்று ஷ்ரித்திக் உறுதியாக அழுத்தமாக கர்ஜித்து.. ஷிவாக்ஷியின் பதிலை கூட எதிர்பாராது நடந்தான்..😠

ஷிவாக்ஷி.. "நான் இந்த பார்ட்டிக்கு வரமாட்டேன்.. நா இத ஒத்துக்க மாட்டேன்.." என்று அவளும்.. சென்றுக் கொண்டிருந்த ஷ்ரித்திக்கிடம் பதிலுக்கு பதிலென்று நின்றாள்.. 😠

நடந்துக் கொண்டிருந்த ஷ்ரித்திக்.. ஷிவாக்ஷியை நோக்கி திரும்பி..
"நீ வருவ.. வர வைப்பேன்.. நீயா வந்தா.. பிரச்சினை இல்லை.. நானா வர வைச்சன்னா.. ??" என்று விரல் நீட்டி எச்சரித்தவன்.. பின் தலையை தட்டி.. "அப்படி பண்ண மாட்டேன்னு நினைக்குறேன்.. சீக்கிரம் வந்து சேரு.. அண்ட்.. உனக்கு தேவையானது எடுத்துக்கோ.. இப்ப போனா நைட் தான் வரமாதிரி இருக்கும்.." என்று ஷ்ரித்திக் கோபத்தில் கத்தி விட்டு நகர்ந்தான்..😠

ஷிவாக்ஷி.. கோபத்தில்.. ‌‌செல்லும் அவனை கொல்வதை போல கையை கொண்டு சென்று.. பின் தன் மண்டையை சொறிந்தாள்.‌. சரி தன்னுடைய தோழியிடம் சொன்னால்.. ஏதேனும் தீர்வு கிடைக்கும் என்று.. இஷானியை தொடர்பு கொண்டாள்..

இஷானியை பேசக் கூட விடாமல்.. "ஹலோ.. இஷா.. இங்க என்னென்னமோ நடக்கறது.. ??" என்று ஆரம்பித்து.. விருந்தினர் கூட்டம் நடைபெறுவதை பற்றி கூறி முடித்தாள்..😟

"இஷா.. ஏதாவது.. ஐடியா குடேன்.. இந்த பார்ட்டிய நிறுத்த.. நேக்கு இதுல இஷ்டம் இல்ல.." என ஷிவாக்ஷி பாட்டுக்கு சொல்லி கொண்டே போனாள்..😟😟

"ஹேய்.. என்னை கொஞ்சம் பேச விடு அத்து.. இங்க பாரு‌‌.. எனக்கு தெரியும் முன்னாடியே.. உன் ஆத்துக்காரர் என்னை கூப்புட்டாரு.. கண்டிப்பா.. நா உன்னோட முட்டாள்தனமான ஐடியாவுக்கு ஒத்துப்போக மாட்டேன்.. உன்னால ஆனத.. பாத்துக்கோ.. அப்பறம் இன்னொன்னு.. நான் விக்ரம் கிட்ட லவ்வ சொல்லிட்டேன்.. நேத்து காலைல தான்.. சொன்னேன்.. விக்ரமும் ஓகே தான்.." என்று இஷானியும்.. அவள் தரப்பில்.. கத்திவிட்டு.. தன் காதலை பற்றி கூறிவிட்டு கைபேசியை வைத்தாள்..😠😑

ஷிவாக்ஷிக்கு இப்போது என்ன செய்வது என்று தெரியாமல் விழித்தாள்.. ஷ்ரித்திக் எச்சரித்தது வேறு அவளின் கண்முன் வந்து வந்து சென்றது.. நினைத்துக் கொண்டிருந்தாள்.. ஆனால்.. ஷ்ரித்திக் வந்தே விட்டான்..😟

"என்ன.. அப்போ.. நீ வரமாட்ட.. அப்படி தான.. ??" என்று ஷ்ரித்திக்கின் குரல்.. மிரட்டலாக..😠

"இல்லல்ல.. வரேன்.. வரேன்.." என பயந்தவாறே மொழிந்தாள்..😰😰

"குட்.. சரி.. வா.. உனக்கு காஸ்ட்யூம் நா சூஸ்.. நீ சிம்பிளா தான்‌‌ போடுவா.. சோ நா சூஸ் பண்றேன்.." என்று ஷ்ரித்திக் ஷிவாக்ஷியை இழுத்து கொண்டு.. உடை மாற்றும் அறைக்கு அழைத்துச் சென்றான்.. அங்கிருக்கும் உடைகளை பார்த்துக் கொண்டிருந்தான்..😎

ஆனால்.. ஷிவாக்ஷி யாருக்கு வந்த விருந்தோ.. என்பதை போல.. பின்னால் கையை கட்டிக் கொண்டு.. அவள் பின்னே இருந்த கண்ணாடி வழியாக.. கையை பார்த்து கொண்டிருந்தாள்..☺️🤪

ஷ்ரித்திக்.. ஷிவாக்ஷியிடம்.. ஒரு உடையை காட்டுவதற்கு திரும்ப.. இவளின் சேட்டையை ரசித்து.. 'இவளை என்ன செய்வது.. ஒழுங்காக கோபப்பட கூட விடுகிறாளா.. ??' என்று நினைத்து.. தொண்டையை கணைத்தான்.. 😎

அதில் திரும்பிய ஷிவாக்ஷி.. "இந்த ட்ரெஸ் போட்டுட்டு வா.." என்று ஆடையை அவள் பக்கம் தள்ளினான்.. ஷ்ரித்திக்..😎

அதை பார்த்தவள்.. விழி விரித்தாள்.. ஏனெனில் அந்த.. லெஹங்கா ஆடை.. சற்று கவர்ச்சியாக இருக்கும்.. அவளின் இடை அப்பட்டமாக தெரியும்.. அதற்கு மேலாடை இருப்பினும்.. வலை போன்ற ஆடை என்பதால்..🤔🙄 "மாட்டேன்.. நா இத போட மாட்டேன்.. நா சேலை கட்டிக்கிறேன்.." அவள் அதை உடுத்த மறுத்தாள்..🙄

ஷ்ரித்திக்.. "இதை தான் போடனும்.." என்று ஆணையிட்டு.. அலமாரியை பூட்டிவிட்டான்.. வேறு ஆடை எடுக்காதவாறு..😎

ஷ்ரித்திக்.. வெளியே அமர்ந்திருக்க.. அந்த அறையிலே உடையை மாற்றிவிட்டு வந்தாள்.. ஷிவாக்ஷி.. 😊

அவளின் அங்கங்களை மறைப்பதற்கு பெரும்பாடு பட்டாள்.. ஷ்ரித்திக் எடுத்து கொடுத்த ஆபரணங்களையும்.. அணிந்து.. கண்ணுக்கு மையிட்டு வந்தவளை விழியகலாது.. பார்த்தான்.. ஷ்ரித்திக்.. 😍😍😍

உலகின் அத்தனை அழகும்‌.. அவள் ஒருவளிடம் மட்டுமே கொட்டிக்கிடப்பது போன்ற பிரம்மை.. அவனுக்கு.. கண்களில் காதல் ரசம் சொட்டியது..😍😍😍😍

ஷிவாக்ஷி.. "நா.. அப்பவே.. சொன்னேனொன்லியோ.. இது நேக்கு நன்னாவே இல்ல.." என்று தன்னுடைய சோக கீதத்தை வாசித்தாள்..😟

ஷ்ரித்திக்.. "இது உனக்கே.. ஓவரா இல்ல.. இதுல தேவதை மாதிரி இருக்க.. அப்புறமென்ன... ??" என்று ஷ்ரித்திக் ஷிவாக்ஷியை அழைத்துச் சென்றான்..😍🥰

அதே சமயம்.. விருந்தினர் அனைவரும்.. வருவதற்கும் சரியாக இருந்தது..

வந்தவர்கள்.. அனைவரும்.. அவர்களின் ஜோடி பொருத்தம் காண கோடி கண் வேண்டும் என்று புகழ்ந்திருந்தனர்.. குடும்பத்தினர் அனைவருக்கும் மனநிறைவே..😄😄

விருந்தினர்கள்.. ஷிவாக்ஷியின் அழகை பற்றி வர்ணிக்கவும்.. ஷ்ரித்திக் கொடுத்து வைத்தவன்.. என்றெல்லாம் பேச ஆரம்பித்தனர்.. சிலர்.. பொறாமையும் கொண்டார்கள்.. அவர்கள் பெண்கள் என்பதில் ஐயமில்லை..😜

ஷ்ரித்திக் ஷிவாக்ஷிக்கு பரிசு கொடுத்து வாழ்த்தி சென்றனர்.. இஷானி ஷிவாக்ஷியின் அருகிலே தான் இருந்தாள்..

மாயா.. அங்கு கொதித்து கொண்டிருந்தாள்.. தான் இருக்க வேண்டிய இடம்.. என்ற எண்ணமே.. அவளுக்குள்.. கோபம் சுரக்க ஆரம்பித்தது..👿👿

வித்யுத்.. ஷிவாக்ஷியை பார்த்து எரிந்து கொண்டிருந்தான்..😈😈

----------------------

To be continued.. 😉

(Hiii.. guyz.. padichitu epdi irukkunu sollunga.. comment pannunga.. vote pannunga.. 🥰😍😇)

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro