அத்தியாயம் - 20 😀
எந்தன்...
புன்னகையை வெளி கொணர்வது..
உந்தன்.. விழியோர கள்ளப் பார்வையே.. கருநீல விழி காதலை வீசும்.. நாளை...
காண நாட்களை கடத்துகிறேன்... 😉
நீருக்குள்.. அமுக்கும் பந்தை போல.. கடலில் உதயன் அஸ்மித்துக் கொண்டே இருக்கும் அழகான மாலை வேளை..
ஷிவாக்ஷி தன்னை மறந்து ஷ்ரித்திக்கின் அணைப்பில் கட்டுண்டிருந்தாள்.. ஷ்ரித்திக் தன்னவளின் அணைப்பை ஆழ்ந்துணர்ந்தான்.. அவனின் அணைப்பில் இறுக்கமில்லை.. முற்றிலும் காதலே நிறைந்திருந்தது..😍🥰
வெய்யொன்.. தன்னொளி கீற்றுகளை உள்ளிழுத்து கொள்வதை போல.. ஷிவாக்ஷியின் மனமும் மெய்யை உணர்ந்ததும்.. தன்னுணர்வுகளை உள்ளிழுத்து.. ஷ்ரித்திக்கை தள்ளிவிட்டாள்.. 😟
ஷ்ரித்திக்.. 'அவளின் அனுமதியை பெறாது.. தன் காதலை அவளுள் விதைக்காது.. அவளை அணைத்தது..' தவறென உணர்ந்தான்.. ஷிவாக்ஷியின் உணர்வுகளை புரிந்து அமைதி காத்தான்.. 🙂
ஷிவாக்ஷியோ.. தன் தலையை பிடித்து கொண்டாள்.. 'தன்னுணர்வுகள்.. தன்னுடைய கட்டுப்பாட்டை.. இவரருகில் இழக்கிறதே.. இதென்ன விந்தை..' என தன்னை நொந்துக் கொண்டாள்.. ஷிவாக்ஷி தன்னுணர்விற்கேற்ப.. முகம் பாவனைகளையும்.. நவரசத்தையும்.. கொட்டிக் கொண்டிருந்தது..😟😦😮😲
ஷ்ரித்திக்.. ஷிவாக்ஷியின் முக பாவனைகளை ரசித்தான்..வெளிப்படுத்தாது உள்ளுக்குள்.. 🤫😍
ஷிவாக்ஷி.. 'இனி இதுபோல்.. நடக்க விடாதே.. நடக்கக் கூடாதென..' கடவுளையும் தன் மனதையும் சேர்த்தே அதட்டினாள்.. அப்பாவை.. 😔🤔
ஷ்ரித்திக்.. தன் இருப்பை.. இருமி தெரிய வைத்தான்.. 😤
ஷிவாக்ஷி.. "ஹான்.." என பார்த்தாள்.. ஷ்ரித்திக் 'உள்ளே செல்லலாமா.. ?' என்பார் போல கையை இல்லத்தை நோக்கி கையை காட்டினான்.. 👉
ஷிவாக்ஷியும்.. தலையை ஆட்டி ஷ்ரித்திக்குடன் சென்றாள்..🙂
மாயா ஒரு பக்கமும்.. வித்யுத் ஒரு பக்கமும்.. நின்று.. இருவரையும் வெறித்து.. கோபத்தில் கொப்பளித்தனர்..😡😡
வெறித்திருந்த வித்யுத்தின்.. தோளைத் தொட்டான்.. விக்ரம்.. 😠😤
விக்ரம்.. "அங்க.. என்ன டா.. லுக்கு... அவங்க புருஷன் பொண்டாட்டி.. அவங்களுக்குள்ள ஆயிரமிருக்கும்.."😉🥰 என்றவனின் மொழிகளில் குரோதம் ஒரு பக்கம் கிளைகளை பரப்பி எரிந்தது.. 😡😡மறுபக்கம் மாயா என்ன ஆனாள்.. ?? மற்றொர் புறம்.. தனக்கானவள்.. எப்படி எப்படி இது நடந்ததென.. ?? குழப்பம் ஒரு புறம் என தன் மனதிற்குள் தவித்தான்.. வித்யுத்..😤
அதை கேட்டே விட்டான்.. வித்யுத்.. "என்ன புருஷன் பொண்டாட்டியா.. ?? அப்ப மாயா எங்கே.. என்ன ஆனா.. ?? அவ எப்படி.. இங்க.. ??" என்று விசாரித்தான்.. வித்யுத்..🤨🧐
வித்யுத்தின் கேள்வியில்.. சற்று யோசிக்கலானான்..🙄 ஏதோ.. ஷிவாக்ஷியை தெரிந்தவன் போல.. உரிமையாக கேட்டவனை.. புரியாத பார்வை பார்த்து வைத்தான்.. "என்ன.. அவ எப்படின்னு கேக்கற.. ?? அப்படின்னா.. உனக்கு.. ஷிவாக்ஷிய முன்னாடியே.. தெரியுமா.. ??" என்று.. விக்ரம் ஒரு புறம் கேள்வி எழுப்பினான்..🤨🧐
"ம்ப்ச்.. அதை நா அப்புறம் சொல்றேன்.. இப்ப.. இந்த கல்யாணம் எப்படி நடந்துச்சுன்னு.. சொல்லு.." என நடந்ததை தெரிந்து கொள்ள.. கோபத்தை மறைத்து வினவினான்.. வித்யுத்..🤔😵
விக்ரம் நடந்ததை கூற விழைய.. அதேசமயம் ஷ்ரித்திக்கின் சித்தப்பா தேவ தேவன் வித்யுத்தை கண்டவுடன்.. "டேய்.. வித்யுத்.. எப்ப டா.. வந்த.. எப்படி இருக்கே.. ??" என நலம் விசாரித்துக் கொண்டே.. வித்யுத்தை அணைத்துக் கொண்டார்.. 🤗🤗
"நல்லா.. இருக்கேன்.. மாமா.." என புன்னகையை பூசிக் கொண்டான்.. வித்யுத்..😏
அதேசமயம் மொத்த குடும்பமும் அவனை கண்டு.. "டேய்.. வாப்பா.. இப்ப தான் கண்ணு தெரிஞ்சுதா.. ??" என தாத்தா அமரேந்திரர் கேலிக் கோபமாக வினவினார்.. 😑
"சாப்டியா.. ?? ஆமா ஏன் கல்யாணத்துக்கு வரல.. கூப்டோம்ல.. ??" என ஷ்ரித்திக்கின் அப்பா ராஜ தேவன் கோபித்துக் கொண்டார் அவர்.. 😐
வித்யுத்.. வரவேற்பறையில் அமர்ந்திருந்த அவர்களின் அருகே மண்டியிட்டு அமர்ந்து.. "இல்ல.. மாமா.. கொஞ்சம் வேலை விஷயமா வெளியூர் போயிட்டேன்.. தவிர்க்க முடியல.. அப்பானால போக முடியாது.. அதான் நா போக வேண்டியதாயிடுச்சு.." என சமாதானம் கூறினான்..😁
"சரி.. போனா.. போகுதுன்னு மன்னிச்சு விடறேன்.. எப்படி இருக்கான்.. என் தம்பி.. அதான்.. உன் அப்பன்.. ?? அவனுக்கென்னவாம்.. கல்யாணத்துக்கு வந்திருக்கலாம்ல.." என இந்திரகவி கோபத்தின் இழையோடு வினவினார்.. 🙄😊
"இல்ல.. அத்தை.. அப்பாக்கு தான் உடம்பு சரியில்லாம போச்சே.. ஹாஸ்பிடல்ல சேத்துட்டோம்.. அப்பாவ பாத்துக்க.. எனக்கு அம்மாவும் இல்ல.. அதான் வரமுடியாம போச்சு.." என்று தன் நிலையை விளக்கினான்.. வித்யுத்..🙂
"ஏன் டா.. இதெல்லாம் சொல்லக் கூடாதா.. ??" என பாட்டி தேவசேனாவும் கோபத்துடன் கேட்டார்..😲😠
"அதான.. ?? ஏன்டா.. இவ்வளோ.. நடந்திருக்கு.. ஒரு வார்த்தை சொல்றதில்ல.." என மாயாவின் அம்மா சமீராவும் இணைந்து கொண்டார்.. 😠
சமீரா.. சாதாரணமாக பேசுவதை கண்டு.. அனைவரும் அவரையே ஆச்சரியம் கலந்த பார்வையை செலுத்தியது.. அக்குடும்பம்..😳
அமைதியாக விக்ரம்.. அங்கு நடக்கும்.. கூத்தையெல்லாம் கண்டு.. சிரித்துக் கொண்டிருந்தான்..🤭
"தேவையில்லாதெல்லாம்.. பேசுறது.. இத சொல்றதில்ல.." என சித்தி தேவிகா மொழியால்.. குடும்பத்தை இயல்புக்கு கொண்டு வந்தார்.... என அனைவரும் வித்யுத்தை வசவு மொழிகளால் நிறைத்து கொண்டிருந்தனர்..
😕
"நீங்களே.. ஷ்ரித்திக் கல்யாண வேலைல பிஸி இருப்பீங்கன்னு.. தான்.. அப்பாவே.. சொல்ல வேண்டாம்னு சொன்னாரு.. நான் என்னப்பா.. பண்றது.." என்றவனின் மொழிகளை கேட்ட பின் தான் சமாதானம் ஆயினர்.. 😌
ஷ்ரித்திக்கும் ஷிவாக்ஷியும்.. அதே நேரத்தில் வரவேற்பறையில் வந்தனர்..🥰🥰
சித்தி தேவிகா.. இருவரும் வருவதை கண்டு..
"இதோ.. அவங்களே.. வந்துட்டாங்க.. வித்யுத்.. பேரு ஷிவாக்ஷி.. இவ தான் இந்த வீட்டோட மருமகள்.." என வித்யுத்திடம் கதைத்தார்..😊😊
தனக்கு.. ஏதோ... அறிமுக இல்லாதவளை.. அறிமுகம் செய்து வைப்பவரை.. பார்த்து விரக்தியில் புன்னகைத்து கொண்டான்.. வித்யுத்..😏
ஷிவாக்ஷியிடம்.. திரும்பிய இந்திரகவி.. "அம்மா.. ஷிவாக்ஷி.. இவன் என் தம்பியோட பையன்.. பேரு.. வித்யுத்.." என ஷிவாக்ஷிக்கு அறிமுகம் செய்து வைத்தார்..🙂
ஷிவாக்ஷி.. அலட்சிய பார்வையை வீசினாள்.. அவனை நோக்கி.. 😒
வித்யுத்.. அவளின் பார்வையில் கொதித்து போனான்.. நிலைமை கருதி அமைதி காத்தான்..😠
"மாயா.. என்ன ஆனா.. ?? அவளுக்கும்.. ஷ்ரித்திக்கும் தான கல்யாணம்னு பேசி இருந்தீங்க.. தென்.. ஹவ் டிட் திஸ் ஹேப்பன்.. ??" என வித்யுத் தன் மனதில் அரித்த கேள்வியை எழுப்பினான்..🤔🤨
ஷிவாக்ஷி முழித்தாள்..
அக்கேள்வியில்.. அதேசமயம் அங்கிருந்த யாதவனும் சமீராவும்.. கூனி குறுகினர்.. அதை கண்ட ஷ்ரித்திக்.. விக்ரமிடம் கண்னை காட்டினான்.. 🙄
அவனின் பார்வையை புரிந்து கொண்டு..
இவ்வளவு நேரம் அமைதி காத்த.. விக்ரம்... "டேய்.. அத நா சொல்றேன்.." என விக்ரம் அவனை தனியே அழைத்துச் சென்று நடந்தவற்றை அச்சு பிசகாமல் அப்படியே கூறினான்.. ஷ்ரித்திக்கின் காதலை தவிர்த்து.. எவ்வாறு திருமணம்.. நிகழ்ந்தது என்பதை மட்டும் உரைத்தான்.. 🙂
ஷ்ரித்திக்கின் காதலை வித்யுத்திடம் கூறுவது.. அவ்வளவு உசிதமானதாக தோன்றவில்லை..🤔 ஏனோ.. வித்யுத்தின் நடவடிக்கைகளும், ஷிவாக்ஷியிடம் வீசும் பார்வையும்.. அவனுக்குள்.. விளங்காதொரு சந்தேகத்தை விதைத்தது..🧐 அதுமட்டுமின்றி அவனுடைய தீய குணமும்.. அதற்கொரு காரணமே.. ஏனெனில்.. வித்யுத் ஏதேனும் அழகான பெண்களை கண்டு விட்டால்.. அந்த பெண் உடனே.. அவனின் படுக்கையிலே தான்.. அது மட்டுமல்லாமல் குடி போதை.. என தீய பழக்கத்திற்கும் அடிமையவன்..😶
எத்தனையோ முறை.. ஷ்ரித்திக்கும்.. விக்ரமும்.. குடி போதை பழக்கத்தை மாற்ற முயற்சித்தனர்..😐 ஆனால் அவனுடைய ஒத்துழைப்பும் அதில் முக்கியம் அன்றோ.. வித்யுத் அப்பழக்கத்தை விடுவதாயில்லை.. அவர்களின் அறிவுரையை அலட்சியம் செய்தான்.. ஷ்ரித்திக்கும் அச்சமயத்தில்.. வேலை வேலை என்றலைந்ததால் கவனிக்காமல் விட்டுவிட்டான்.. அது வளர்ந்து முற்றி பெண்களிடம்.. வந்து நின்றது.. இது குடும்பத்தினர் யாரும் அறியாத.. ஷ்ரித்திக் விக்ரம் மட்டுமே அறிந்த அவனின் மறுபக்கம்..😔
விக்ரமின் மொழிகளில்.. மாயாவின் மேல்.. அளவற்ற சினம் உருவானது.. அவனுள்.. 😠😡🤬
அவனின்.. கோபச் சீற்றத்தால்.. விக்ரமிடம் ஏதும்.. பேசாமல்.. அவன் பாட்டுக்கு நடக்கலானான்.. வித்யுத்..😑
மாயா.. தோட்டத்தில் உலாவி விட்டு.. மெதுவாக.. உள்ளே நுழைந்தாள்...😈
அப்போது தான் உள்ளே நுழைந்த அவளை கண்டு அவளருகே வந்தவன்.. யாரும் பார்க்காதவாறு.. வரவேற்பறையில் இருந்தபடியே மறைவான இடத்திற்கு அழைத்து சென்று.. வித்யுத்.. 😈
மாயா வித்யுத்தை கண்டு...🙂 "ஹே.. விது... எப்படி இருக்கே.. ?" என அவனை பார்த்த மகிழ்வில் விசாரித்தவளின்... கண்ணத்தில் பளாரென்று அறைந்தான்.. வித்யுத்..👿
அவளுக்கு பொங்கி வரும் பாலில் தண்ணீர் தெளித்தாற் போல.. அவளின் மகிழ்வு குறைந்து... கோபம் பற்றிக் கொண்டது.. 🤬
"என்ன.. டா.. ?? ஆளாளுக்கு அடிக்கறீங்க.. ?? என் மேல கை வைக்கற உரிமை உனக்கில்ல.. மறுபடியும் என் மேல கை வைச்சா.. நடக்கிறதே வேற.. ஜாக்கிரதை.." என்று தன் ஒற்றை விரலால் எச்சரித்தாள்... மாயா..😤😡
அவளின் கையை பற்றி திருப்பி... "என்ன டி.. ?? மிரட்டுற.. ஹான்... நீ பண்ண தப்பால.. என் ஷிவாக்ஷி.. எனக்கு இல்லாம.. போயிட்டா.. போயும் போயும்.. அந்த ஷ்ரித்திக்குக்கு கல்யாணம் பண்ணி வைச்சிருக்காங்க.. நீ.. ஷ்ரித்திக்க லவ் பண்ணல்ல.. அப்புறம் என்ன இதுக்கு.. நீ.. வேறொருத்தனை லவ் பண்ணுன.. ??" என்று தன் கோபத்தை வார்த்தைகளில் கொட்டினான்..😠
கோபத்தில் கொதித்து கொண்டிருந்த மாயா.. வித்யுத்தின் வார்த்தைகளில் குழம்பினாள்.. "என்ன சொல்ற.. ?? உன் ஷிவாக்ஷியா.. ?? அப்ப அவள உனக்கு முன்னாடியே தெரியுமா.. ?? எப்படி.. ??" என தன் கையை விடுவித்து கொண்டு மனதில் உதித்ததை கேட்டாள்..😠😲🤨🙄
"எனக்கு அவள ஒரு வாரத்துக்கு முன்னாடியே தெரியும்.." என்றவன் ஷிவாக்ஷியின் உடனான தன் சந்திப்பை நினைவு கூர்ந்தான்..😔
-----------------
வித்யுத்.. தன் தந்தையின் வேண்டுகொளுக்கு இணங்கி.. கோவிலுக்கு சென்றான்.. வேண்டா வெறுப்பாக..🙁
உள்ளே.. நுழைந்து விட்டானே.. ஒழிய.. இறைவனை எப்படி.. வழிபடுவது என்பது கூட அவனுக்கு தெரியாமல்.. முழித்தான்.. தாயில்லாமல் வளர்ந்ததால் இப்படி.. சிறுவயதிலேயே வித்யுத்.. அவனின் அம்மா.. பிரசவத்தில் கோளாறால்.. இறையடி சேர்ந்தார்..😣
வித்யுத்.. என்ன செய்வது என தெரியாமல் விழித்தவனின் கவனத்தை ஈர்த்தது... சந்தேகத்திற்கு இடமின்றி ஷிவாக்ஷி தான்..🙄
கருவூலத்தை சுற்றி
சந்தன நிற பாவாடை தாவணியில் பால் நிற இரு பூக்கரங்களை கூப்பி.. பூமா தேவிக்கு வலிக்குமோ.. என்று வெண்பஞ்சு பாதங்களால் அடி மேல் அடி வைத்து.. செவ்விதழ்கள் மந்திரங்களை முணுமுணுத்து.. அடிப்பிரதற்க்ஷணம் செய்து கொண்டிருந்தாள்.. ஷிவாக்ஷி..😍🤩
வித்யுத்தின் கண்களுக்கு.. தேவலோக அழகிகள்.. ரம்பை, ஊர்வசி, மேனகை மூவரையும் குழைத்து உருவாக்கிய பேரிளம் மங்கையாக தோன்றினாள்.. கண்ணிமைக்காது நோக்கினான்.. அவன்..😍😍
அடிப்பிரதற்க்ஷணத்தை முடித்து கொண்டு.. சன்னதியில் நுழைபவளை.. பின்தொடர்ந்தான்.. வித்யுத்..🥰
ஷிவாக்ஷி.. சன்னதியில்.. வீற்றிருக்கும்.. கிருஷ்ண பகவானை நோக்கி.. தேனொளுகும் குரலில்..🤩
🌼 ஸமஸ்த கோபநதனம் ஹ்ருதம்புஜைகமோஹனம்..
நமாமி குஞ்ஜமத்யகம் ப்ரஸன்ன பானுசோபனம்..
நிகாமகாம தாயகம் த்ருகந்தசாருஸாயகம்...
ரஸாலவேணுகாயகம் நமாமி குஞ்ஜநாயகம்...🌼
மந்திரங்களை பாடலில்.. கிருஷ்ணனை மட்டுமல்லாமல்.. வித்யுத்தையும் மயக்கினாள்..😵
ஷிவாக்ஷியை கண்டு தான்.. இறைவனை வழிபடுவதையே தெரிந்து கொண்டான்..😌
ஷிவாக்ஷியும்.. இறைவனை பூஜிக்கும்.. ஐயரும்.. ஷிவாக்ஷியும் பேசிக் கொள்வதை வைத்து.. ஷிவாக்ஷி அக்ரஹாரத்து பெண் என்பதும்.. அவள் குழந்தைகளுக்கு நாட்டியம் கற்று கொடுக்கிறாள்.. என்பதும் அறிந்து கொண்டான்..😉
ஷிவாக்ஷியை விட்டு.. கண் பார்வை அகலவில்லை.. அவள் செல்வதை மெய்மறந்து கண்டவனுக்கு.. அவள் செல்கிறாள்.. என புரிவதற்குள்.. ஷிவாக்ஷி கோவிலை விட்டு வெளியே சென்றிருந்தாள்..😍
வித்யுத்.. நிலையை.. அறிந்து.. வேகமெடுத்து வெளியே சென்று ஷிவாக்ஷியை தேடினான்.. ஆனால்.. அவள் அவன் கண்பார்வையில் மறைந்து விட்டாள்..😒😣
வித்யுத்.. தலையை பிய்த்து.. கொண்டான்.. அவள் யாரென அறிந்து கொள்ள என்ன செய்வது.. என்று யோசித்தவனுக்கு.. பொறி தட்டியது.. 🤯
ஷிவாக்ஷி அந்த ஐயரிடம் பேசிக்கொண்டு இருந்தது நினைவுக்கு வந்தது.. அவரிடம் விசாரித்தால்.. அவளை பற்றி சகலமும் அறிந்து கொள்ள முடியும்.. என்றே அவனின் யோசனை..😇
அந்த ஐயர் மதிய நேரம்.. நடை சாத்தி.. தனிய வந்தவரை.. மிரட்டி.. ஷிவாக்ஷியை பற்றி அறிந்து கொண்டான்.. வித்யுத்..😈
அவளை சந்திக்க வித்யுத் விழையும்.. நேரத்தில்.. தந்தை படுக்கையில் சாய்ந்து கொண்டார்.. அவருடைய பொறுப்பு.. அவனுடையதானது.. வெளியூர் செல்ல நிர்பந்தத்தால் ஷிவாக்ஷியை சந்திக்க இயலவில்லை..😖😩
ஆதலால்.. வித்யுத்.. அந்த கடன்காரனை தன் வசப்படுத்தி கொண்டான்.. "ஷிவாக்ஷியை உன் கட்டுபாட்டில் வைத்திரு.. அதற்காக.. என்ன வேண்டுமானாலும் செய்யலாம்.. நான் உன் பின்னே இருப்பேன்.. ஆனால்.. ஷிவாக்ஷி அப்படியே வேண்டும்.." என கூறிச் சென்றான்.. வித்யுத்..
இது தான் சாக்கென.. அந்த கடன்காரன் ஷிவாக்ஷியை அடைய திட்டம் தீட்டினான்..😈 அது வித்யுத்திற்கு தெரியாமல்.. தெரிந்திருந்தால் தடுத்திருப்பானோ.. என்னவோ.. ??🤔
ஆனால்.. ஷ்ரித்திக் தக்க சமயத்தில் வந்து.. ஷிவாக்ஷியை காப்பாற்றினான்..😎
வித்யுத்.. பயணத்தை முடித்து வந்தவனுக்கு..
ஷ்ரித்திக் ஷிவாக்ஷியை காப்பாற்றியது.. தெரியாது.. அந்த கடன்காரனை ஷ்ரித்திக் அவனின் பிடியில் வைத்திருந்ததால்.. கடன்காரன் என்ன ஆனான்.. ?? ஷிவாக்ஷி என்ன ஆனாள்.. ?? ஒன்றும் புரியாதிருந்தான்..🙄
------------------
நேற்று ஷிவாக்ஷியை கண்டதும்.. அவளை கண்டு பிடித்து விடலாம்.. ஒரு நம்பிக்கை.. இன்று ஷிவாக்ஷியின் மாங்கல்யத்தை கண்டதும்.. தன் ஆசையும்.. கனவும் தவிடு பொடி ஆனதோ.. ?? என்று அச்சம் கொண்டான்..😰
அனைத்தையும் மாயாவிடம் கூறி முடித்ததும்.. ஷிவாக்ஷியை ரசித்து பார்த்தான்.. 😍
ஷ்ரித்திக் நிலைமை உணர்ந்து.. அனைவருக்கும் குழம்பியை தயாரித்து கொண்டு வா.. என்று ஷிவாக்ஷியிடம் ஆணையிட்டதால்...🙂
ஷிவாக்ஷி குழம்பியை தயாரித்து.. அனைவருக்கும் கொடுத்து கொண்டிருந்தாள்.. 😃
அவளை ரசித்து.. அவளின் அங்கங்களை உரசும்.. வித்யுத்தின்.. பார்வை ஏதோ.. சரியில்லை என அவளின் மனம்.. சொன்னதை.. கேட்டே விட்டாள்.. மாயா..🤨
மாயாவும் வித்யுத்தின் குணமறிந்தவள்.. தான்.. தன் கண் முன்னே.. ஒரு பெண்ணை தவறாக பார்ப்பது.. அவளுக்குள் உறுத்தியது.. 🤔🤨
அவளும் ஒர் பெண் தானே.. நாட்டின் நடப்புகளையும்.. பெண்களுக்கு நடக்கும் வன்முறைகளையும் அறிந்தவளாயிற்றே..😟
"விது.. நீ.. அவள பாக்குற.. பார்வை சரியில்ல.. அவள நீ தப்பா.. பாக்குற.. உன் கேரக்டர்.. எனக்கும்.. தெரியும்.. எனக்கு அவ மேல கோவம் தான்.. ஆனா.. அதுக்காக.. அவள நீ தப்பா பாக்குறத.. நா ஒத்துக்க..." என்றவள்.. முடிப்பதற்குள்.. வித்யுத்தின்.. கரம்.. அவளின் கழுத்தை இறுக்கியது..🤕
"அதெல்லாம்.. நீ சொல்லாத. எனக்கு அவ வேணும்.. அப்படியே வேணும்.. நீ பண்ண தப்பால.. இப்ப எனக்கு கிடைக்க வேண்டியவ.. ச்சே.." என வித்யுத் மாயாவை தள்ளிவிட்டு.. நகர்ந்து.. சிகரெட்டை பற்ற வைத்தான்..😈
மாயா.. வலியை சமன் செய்து.. தன் கழுத்தை பிடித்து கொண்டு..🥴 இரும்பினாள்.. "இங்க.. பாரு.. இதுக்கு மேல கை வைச்சின்னா.. நா நானா இருக்க மாட்டேன்.. நா ஒன்னும் தப்பு பண்ணல.. இந்த விஜய் கூட ப்ரெண்ட்லியா தான் பழகுனேன்.. பட் அவன் லவ்னு நினைச்சா.. நான் என்ன பண்றது.. அவன் மட்டும் நடுவுல வராம இருந்திருந்தா.. இந்நேரம்.. நான் இந்த வீட்டோட எஜமானியாயிருப்பேன்.. காரியத்தையே.. கெடுத்துட்டான்.. அவன் மட்டும் என் கையில கிடைச்சான்.." என அவள் புறம்.. கோபத்தில் கத்தினாள்..👿
"அவன்.. யாருன்னு சொல்லு.. உண்டில்லன்னு ஆக்கிடறேன்.." வித்யுத்தும்.. மாயாவுடன் இணைந்து கொண்டாள்..😈
"சரி.. விடு.. இப்ப எனக்கு.. ஷிவாக்ஷி வேணும்.. அதுக்கு என்ன பண்றதுன்னு சொல்லு.." என புகையை ஊதிக் கொண்டே கூறினான்..😤
"நா.. நீ சொல்றதுக்கு எல்லாம் தலையாட்டிட்டு இருப்பேன்னு நினைச்சியா.. விது.. சான்ஸ்லேஸ்... ஷிவாக்ஷிய நீ பாக்குற பார்வை சரியில்ல.. எனக்கு அவ மேல கோபம் தான்.. அதுக்காக.. என்னால.. ஒரு பொண்ணோட வாழ்க்கை நாசமாகறத.. நா ஏத்துக்க மாட்டேன்.." என மாயா பொறிந்து தள்ளினாள்..😑😤
வித்யுத்.. "ஹேய்... என்னைய என்ன.. ?? ஃப்ராடுன்னே முடிவு பண்ணிட்டியா.. ?? ஒத்துக்கறேன்.. நா.. இதுக்கு முன்னாடி எத்தனையோ பொண்ணுங்கள.. பாத்திருக்கேன்.. தப்பு தண்டா பண்ணிருக்கேன்.. ஆனா.. இப்ப ஷிவாக்ஷிய பாத்ததும்.. இவ வாழ்க்கை முழுக்க வேணும்னு தோனுது.. ஒவ்வொரு நாளும் இவ கூட வாழனும்.. அதுக்கு இவ எனக்கு பொண்டாட்டியா வேணும்.. நா ஷிவாக்ஷிய கல்யாணம் பண்ணிக்கனும்.." என்றவன் குழந்தைகளை கொஞ்சிக் கொண்டிருந்த ஷிவாக்ஷியை.. ரசித்துக் கொண்டே மொழிந்தான்.. 😍☺️
வித்யுத்தின் மொழிகளில்.. ஷிவாக்ஷியை வித்யுத் திருமணம் செய்து கொண்டால்.. என் பாதை மிகவும் சௌகரியமாகி விடுமே.. என இவளின் மனம் ஒரு கணக்கிட்டது..🤔
"நிஜமாவே.. ஷிவாக்ஷிய கல்யாணம் பண்ணிப்பல்ல.. ??" என சந்தேகத்தோடே மாயா கேட்கவும்.. 🤨😕
"நிச்சயமா.." என வித்யுத்.. கூறியபோது.. அவன் கண்களில் தெரிந்த.. உறுதியை கண்டு.. தெளிந்தாள்.. மாயா..😊
"அப்படின்னா.. ஓகே.." என மாயா வித்யுத்துடன் இணைந்து கொண்டாள்..👍
"சரி.. சொல்லு.. இது ஒரு அக்சிடென்ட் மேரேஜ்.. தான்.. இரண்டு பேரும்.. ஒன்னா.. ஐ மீன்.. வாழ ஆரம்பிச்சுட்டாங்கல.. ??" என வித்யுத்.. அவனுள்.. அரித்து எடுத்த கேள்வியை முன் வைத்தான்..😈😢
"என்ன.. கேட்டா.. ?? எனக்கென்ன தெரியும்.. ??" என மாயா.. ஏனோ தானோவென பதிலளித்ததை கண்டு.. வித்யுத்..😤
"ஹேய்.. ஏன் டி.. இப்படி.. சொல்ற.. ??" என்று புரியாது முழித்தான்.. அவன்..😳
"பின்ன.. ?? என்ன டா.. இவ என்னடான்னா.. இவ்ளோ அழகா இருக்கா.. இதுவரைக்கும்.. ஷ்ரித்திக் அவனோட ரும்க்குள்ள.. அவ அம்மாவ கூட உள்ள விட்டதுல்ல.. இன்குளுடிங் மீ.. அப்படி பட்டவன்.. ஷிவாக்ஷி கூட மூனு நாள்.. அவன் தங்கியிருக்கான்.. அதுவும் அவனோட ரும்ல.. இப்படி இருக்கும் போது நான் என்ன சொல்லுவேன்.." என்று தன் மனதிலிருந்த உறுத்தியதை கூறினாள்.. மாயா.. தொடர்ந்தாள்..😓
"ஷ்ரித்திக் என்கிட்ட.. முகூர்த்த நேரத்துக்கு முன்னாடி.. வந்து பேசும்போது.. யாரோயோ.. லவ் பண்றதாவும்.. கல்யாணத்த நிறுத்திறலாம்னு வந்து.. கேட்டான்.. நா முடியாதுன்னு சொல்லிட்டேன்.. ஒருவேளை ஷ்ரித்திக் லவ் பண்றதா.. சொன்னது.. ஷிவாக்ஷியா இருக்குமோ... ??" என தன் சந்தேகத்தை கூறினாள்.. மாயா..🤔
மாயாவின் சந்தேகம்.. வித்யுத்தை தொற்றிக் கொண்டது.. அது அவனுள் ஒரு பயத்தை கிளறியது.. ஷ்ரித்திக் ஏதேனும் ஒன்றை வேண்டுமென நினைத்தால் அதை அடைந்தே தீருவான்.. அதுவே அவனின் பயத்திற்கான காரணம்..😨😰
"அப்படியெல்லாம் இருக்காது.. நிச்சயமா இருக்காது.." என தன் தலையை பிடித்து அழுத்தமாக கோதிக் கொண்டவன்.. "எப்படி.. தெரிஞ்சுக்கறது.. ?? சொல்லு.. சொல்லு.. ??" என பித்து பிடித்தவன்.. போல கத்தியவனிடம்.. 😨😰🤯
"ஹ்ம்ம்ம்ம்.. அதுக்கு அவங்க.. பெட்ரும்ம தான் எட்டிப் பார்க்கனும்.." என கேலியாக கதைத்தாள்.. மாயா..😏
அவளின் பதிலில்.. கோபத்திற்கு மாறாக மகிழ்ச்சி அடைந்தான்.. மாயாவின் பதிலை செயல்படுத்தும் வேலையில் இறங்கினான்.. "ஓகே.. குட் ஐடியா.. அதையே பண்ணலாம்.." என உரைத்து அகன்றான்..😇
"டேய்.. டேய்.. விது.. நா சும்மா தான் சொன்னேன்.." என மாயா சொல்ல சொல்ல.. அங்கிருந்து நகர்ந்தான்..🤤🤤 வித்யுத்.. "என்ன இவன் இப்படி இருக்கான்.. ?? இவன் மட்டும் ஷிவாக்ஷிய தப்பா பாக்கறது.. ஷ்ரித்திக்கு தெரிஞ்சாலே அவ்ளோதான்.. இன்னும் என்னவெல்லாம் நடக்கப் போகுதோ.." என்றவள்.. தன்னுள் நினைத்து கொண்டாள்..😰😨
விக்ரம்.. ஷ்ரித்திக்கின் அருகே வந்தமர்ந்தான்.. விக்ரம் ஏதோ ஒரு யோசனையில் உளன்றவனை கலைத்தது.. ஷ்ரித்திக்கின் குரல்..🤔🧐
"டேய்.. என்ன டா.. ஏதோ.. ஒரு யோசனையில இருக்க.. என்ன.. ??" என ஷ்ரித்திக் விக்ரமின் தோளை தட்டினான்..😀
"மச்சான்.. எனக்கு.. வித்யுத்யோட நடவடிக்கை எல்லாம் வித்தியாசமா தெரியுது.." என ஷ்ரித்திக்கிடம் மனதில் நினைத்ததை ஒப்பு வித்தான்..🙁😕
"உனக்கிது இப்ப தான்.. தெரியுதா.. ?? எனக்கு ஷிவு கையில பளார்னு வாங்கும் போதே தெரிஞ்சுடுச்சு.. ஆமா.. என் கல்யாணத்த பத்தி எல்லாமே சொல்லிட்டியா.. ??" என ஷ்ரித்திக் சாதாரணமாக மொழிந்தான்..😒
"ம்ம்ம்.. சொன்னேன்.. அவன் ஏதோ.. ஷிவுவ தெரிஞ்ச மாதிரி கேட்டான்.." என்று வித்யுத்துடனான.. உரையாடலை அப்படியே கூறினான்.. விக்ரம்..😕
"டேய்.. வித்யுத்.. ஷிவுவ பாக்குற பார்வை சரியில்ல.. ஷிவாக்ஷிக்கு வித்யுத்த தெரியுமா டா.. ??" என விக்ரம் தன் கருத்தை முன்வைத்தான்.. விக்ரம்..😕😕
விக்ரமின் சொற்களில் யோசனையில் ஆழ்ந்தான்.. ஷ்ரித்திக்.. "ச்சே ச்சே.. வித்யுத்த ஷிவுக்கு தெரிஞ்சிருந்தா.. இப்படி ரியாக்ட் பண்ணிருக்க மாட்ட.. ஷிவு ரொம்ப அமைதியானவ.. அவளே.. அடிச்சிருக்கான்னா.. சம்திங் ஃபீஷி.. வித்யுத் மேல ஒரு கண்ண வை.. வந்ததுல இருந்து எனக்கும் அவன் மேல ஒரு சந்தேகம்.." என விக்ரமிடம் மொழிந்தான்.. விக்ரமும் அதை அமோதித்தான்..🙂🙂
"இந்தாங்கோ.. காஃபி.." என ஷ்ரித்திக்கிடம் நீட்டினாள்.. ஷ்ரித்திக் எடுத்துக் கொண்டான்.. விக்ரமிடம்.. குழம்பியை நீட்ட போனாள்.. பிறகு ஏதோ நினைவு குழம்பியை இழுத்துக் கொண்டாள்.. விக்ரம் குழம்பியை எடுக்க வந்து.. ஷிவாக்ஷி இழுத்துக் கொள்வதை கண்டு.. புரியாது விழித்தான்..🙄
"ஷிவு.. என்ன ஷிவு... ??" என விக்ரம் விழித்தான்..🙄🙄
ஷிவாக்ஷி.. "யாரு.. யாரு.. நீங்களா.. கூப்டேள்.. ??" என விக்ரமை நோக்கி.. தாடையில் விரல் வைத்து யோசித்து..🤔 ஷ்ரித்திக்கிடம் திரும்பி.. "ஆமா.. இவா.. யாரு.. உங்க ஃப்ரண்ட்டா.. ??" என கேலி இழையோடு கேட்டாள்..🤪
அவளின்.. கேள்வியில் பக்கென சிரித்துக் கொண்டான்.. ஷ்ரித்திக்..😆
"ஷிவு.. சாரி.. சாரி.. தப்பு தான்.. பாசமலரே.. வராமா போனது.. தப்பு தான் மன்னிச்சிடு.." என விக்ரம் ஷிவாக்ஷியின் கிண்டலை உணர்ந்து.. சரணடைந்தான்..🥴
"நா.. இந்த ஆத்துக்கு.. வந்து இரண்டு நாள் ஆயிடுத்து.. நோக்கு இப்ப தான்.. வர தோன்றதா.. ??" என ஷிவாக்ஷி இடையில் கை வைத்து.. விக்ரமை மிரட்டினாள்..🤨
"அதுவும்.. நா கூட்டிட்டு வந்ததால தான்.." என ஷ்ரித்திக்கும் விக்ரமை போட்டு கொடுத்தான்..😜
விக்ரமின் மனதில்..
துரோகம்.. துரோகம்.. துரோகம்.. துரோகம்..
நீ வாய் திறந்து கேட்டிருந்தால்
உயிரை கூட கொடுத்திரிருப்பேன்...
நீ ஒரு பார்வை பார்த்திருந்தால்
என்னை நானே எரித்திருப்பேன்...
துரோகம்... துரோகம்.. துரோகம்.. துரோகம்.. 🎶🎵
என்றவன் மனதும் இசை பாடியது.. ஷ்ரித்திக்கை பார்த்துக்கொண்டு இருந்தான்..😳🥺
ஷ்ரித்திக்கின்.. சொற்களில் இன்னும் கோபமடைந்தாள்.. ஷிவாக்ஷி..😠
"அவாளா.. சொல்ற வரைக்கும்.. நோக்கு தோனல.." என்றவள். முறைக்கவும்.. 😠😠
"அம்மா.. என்ன மன்னிச்சிடும்மா.. என்னால புருஷன் பொண்டாட்டி இரண்டு பேருக்கும் மாரடிக்க முடியாது.." என கையெடுத்து கும்பிட்டுக் கொண்டே விக்ரம் சரணடைந்தான்..🥵
விக்ரமின் நிலையை கண்டு.. ஷிவாக்ஷி கொல்லென சிரித்து விட்டாள்.. 🤣"சரி போனா போகுது.. உங்கள மன்னிச்சு விடறேன்.." என கூறினால் போதும் என்று நிமிர்ந்து நின்றான்.. விக்ரம்..😎
"சரி.. எப்படி இருக்க.. ?? நல்லா இருக்கியாமா.. ??" என்று விக்ரம் கேட்கவும்..😊
"ஹ்ம்ம்ம்ம்.. அதெல்லாம்.. பார்த்தா தெரியல.." என ஷிவாக்ஷி மண்ணையாட்டி கூறியதும்.. கிளுக்கென சிரித்துக் கொண்டான்.. விக்ரம்..😆
"உன் பெயிண்டிங்ஸ்.. எல்லாம்.. ம்ம்ம்ம்ம்ம்.. சூப்பரா இருந்துச்சு.. ஷ்ரித்திக் காட்டுனான்.." என கட்டை விரலை உயர்த்தி காட்டி கூறினான்.. 😇👍
ஷிவாக்ஷி.. புன்னகைத்து கொண்டாள்..😇 ஷ்ரித்திக்கின் அம்மா இந்திரகவி.. ஷிவாக்ஷியை அழைத்ததும்.. அங்கிருந்து அகன்றாள்..
இந்திரகவி மல்லிகை பூவை கட்டி கொண்டிருந்தார்.. அருகே.. ஷ்ரித்திக்கின் அப்பா ராஜ தேவனும் புத்தகத்தோடு அமர்ந்திருந்தார்..😇
ஷிவாக்ஷி.. இந்திரகவியின் அருகே சென்றமர்ந்தாள்.. "அம்மா.. கூப்டேளா.. ??" என்றாள்..😊
இந்திரகவி.."ஆமாம்மா.. பூ.. கட்டுவியா.. ??" என கேட்கவும்.. 🙂
"ஓஓஓஓ.. அதெல்லாம்.. குடுங்கோ.." என ஷிவாக்ஷி அவரிடம் இருந்து மல்லிகை பூ சரத்தை வாங்கி கட்டினாள்..😘
இந்திரகவி.. பாசமாக ஷிவாக்ஷியின் தலையை கோதினார்.. ஷிவாக்ஷியும்.. சிறு கீற்றாக நகைத்தாள்..😊😘
"ஷிவு.. ஹ்ம்ம்ம்ம்.. பண்றதெல்லாம் பண்ணிட்டு.. இப்படி நம்ம மாமியார் கேக்கறாங்களேன்னு.. நினைக்காத.. தாத்தா கிட்ட பேசுனியா.. ??" என குற்றவுணர்வில் தவித்தபடி கேட்டார்..😣
விரிந்திருந்த ஷிவாக்ஷியின் இதழ்கள்.. சுருங்கியது.. அவரின் கையை பற்றி..😟
"அம்மா.. என்ன நீங்க.. ?? பெரிய பெரிய வார்த்தையெல்லாம்.. பேசிண்டு.. உங்க இடத்தில வேற எந்த அம்மா.. இருந்திருந்தாலும்.. இப்படி தான் பண்ணியிருப்பா.. இதையெல்லாம் பெருசா எடுத்துக்காதேள்.." என்றவருக்கு ஆறுதலை கொடுத்து.. தொடர்ந்தாள்..🥺 "தாத்தா கிட்ட பேச முயற்சி பண்ணேன் அம்மா.. காலைல போன் பண்ணேன்.. ஆனா.. பக்கத்து ஆத்துல இருக்கற அக்கா.. தான் எடுத்தா.. திட்டி வைச்சுட்டா.. நா சொல்ல வரத.. அவா கேக்கக் கூட தயாராயில்லை.. ம்ப்ச்.." என மல்லிகை பூவை கட்டி கொண்டே புன்னகையை வலுக்கட்டாயமாக வரவைத்து கொண்டாள்..🥺
"சாரிம்மா.. நீ கவலப்படாத.. கொஞ்ச நாள் போனதும்.. உன் தாத்தா கிட்ட நா பேசறேன்.. எல்லாம் சரியாயிடும்.." என தன் மனைவி கவலை கொள்வதை கண்டு.. ஷிவாக்ஷியிடம் ஆறுதலாக கூறினார்..😒🙂
அவரின் சொற்களில் இருவரும்.. புன்முறுவல் பூத்தனர்..😊😊
"பரவால்லப்பா.. பாத்துடலாம்.. அம்மா நீங்க ரொம்ப லக்கிம்மா.." என்று ஷிவாக்ஷி இந்திரகவியை நோக்கி கூறினாள்.. 😝
ஷிவாக்ஷி அவ்வாறு கூறியதும்.. புரியாது விழித்தவரை பார்த்து..🙄 "இல்ல.. நீங்க கவலப்படறது.. உங்க ஆத்துக்காரர் பொறுதுக்க மாட்றாரே.. அதான் சொன்னேன்.." என ஷிவாக்ஷி கேலியாக கூறினாள்..🤪
இருவரும் இணைந்து சிரித்துக் கொண்டனர்..😁😁 "உங்க.. ஜோடிப் பொருத்தம்.. அமோகமா இருக்கறதே.. நேக்கு என்னவோ.. நீங்க இரண்டு பேரும் அந்த காலத்திலேயே.. காதல் புறாக்களா இருந்துப்பேள்னு.. தோன்றதே.. ??" என ஷிவாக்ஷி கண்ணத்தில் கை வைத்து கிண்டலாக சிரித்தபடியே கேட்டாள்..😜😜
"அந்த காலமென்ன.. அந்த காலம்.. இப்பவும் தான்.." என ஷ்ரித்திக்கின் அப்பா.. ராஜ தேவன்.. தன் மனைவியின் தோளை அணைத்துக் கொண்டே கூறினார்..😘😘 "என்னங்க.. இது மருமக முன்னாடி.." ஷ்ரித்திக்கின் அம்மா இந்திரகவி வெக்கத்தில் நெளிந்தார்...🤫😌
"போடு.. தகிட தகிட.. சொல்லுங்கோ.. உங்க காதல் கதைய சொல்லுங்கோளேன்.." என ஷிவாக்ஷி ஆவலாக கேட்கவும்.. 😋
"அதென்ன பெரிய கதை.. அப்ப தான் எனக்கு பொண்ணு பாத்துட்டு இருந்தாங்க.. அப்பா இந்த கோயம்புத்தூர்ல ஒரு பொண்ணு உனக்கு.. பாத்திருக்கோம் வான்னு அப்பா கூப்டாங்க.. சரின்னு இன்ட்ரஸ்டே இல்லாம தான் போனேன்.. அங்க போனா..
"பஞ்சு மிட்டாய்.. சேலை கட்டி..
பட்டுவண்ண ரவிக்கை போட்டு..."
பாடிக் கொண்டவர்...🎵🎶 "மல்லிகை பூ சர.. சரக்க... வந்தா பாரு.. அப்பவே மயங்கிட்டேன்..." என தன் கதையை எடுத்து விடவும்..😵😵 ஷ்ரித்திக்கின் அம்மா இந்திரகவி.. வெக்கத்தில் நெளிவதை கண்டு..😝
"அம்மா.. இவ்வளோ.. அழகா வெக்கப் படுவீங்களா.. ??" என அவர் முகத்தை திருப்பிக் கொள்ள.. அவரின் முகத்திற்கேற்ப.. தன் முகத்தை நகர்த்தி கொண்டு புன்னகை பூத்தாள்.. 😍😍
"அப்பா... நீங்க சிரிக்கும் போது அழகா இருக்கு.." என ஷிவாக்ஷி அவரின் புன்னகையை கூறியதும்..🤩🤩
"அப்படியா.. தேங்க்ஸ் மா.." என புன்னகையோடே ராஜ தேவன் கூறினார்..😘
"இப்ப தான்.. நேக்கு புரியறது.. அம்மா எப்படி மயங்குனான்னு.. ஹாஹாஹா... அம்மா.. ஒரு கேள்வி.. ??" என ஷிவாக்ஷி கூறிவிட்டு கோரிக்கையோடு பார்த்தாள்.. 😍🤨
"கேளும்மா.. ??" என இந்திரகவி அனுமதி தந்தார்..🤔
"இல்லம்மா.. காலைல சாப்டறச்ச.. உங்க பிள்ளையாண்டா.. கத்துனா.. அது மத்தவா.. எப்படி பாத்தான்னு தெரியல.. ஆனா அவா உங்க மேல கோவத்தில இருக்கறதா.. நேக்கு தோன்றது..." என்று ஷிவாக்ஷி கூறிக்கொண்டிரு நடுவே பேச வந்த இந்திரகவியை கண்டு.. "அதப்பத்தி எதுவும் பேச வேணாம்... நீங்க அதுக்கு வேற ஃபீல் பண்ணுவேள்... நா அவா கிட்ட பேசுறேன்... அவா.. புரிஞ்சிப்பா.." என ஷிவாக்ஷி கூறியதும்.. இருவரும் சிரித்து விட்டனர்..🤣🤣
"ஏன்.. சிரிக்கறேள்.. ?? நான் தப்பா எதும் பேசிட்டேனா.. ??" என்றவள்.. இருவரின் புன்னகையும் புரியாது வினவினாள்...🙄
"அதில்லம்மா... ஷ்ரித்திக் சொன்னது சரி தான்னு தோனுச்சு அதான்.." என ராஜ தேவன் கூறி மீண்டும் சிரிப்பை தொடர்ந்தார்..😂
"அவா அப்படி என்ன சொன்னா... ??" என விரலை சொடுக்கெடுத்து படியே கேட்டாள்.. ஷிவாக்ஷி...🙄
இந்திரகவி.. "உன்னை... குழந்தைன்னு சொன்னான்.." என்று புன்னகையுடன் கூறியதும்..😝😂😅
"நா ஒன்னும் குழந்தை இல்ல.. ஐ யம் 22.. நான் பெரிய பொண்ணு.." என ஷிவாக்ஷி உரைத்ததும்... இன்னும் சிரித்துக் கொண்டனர்..😉
"குழந்தை தான்.." என இந்திரகவி சிரித்த படியே.. ஷிவாக்ஷியை அணைத்து.. நெற்றியில் முத்தமிட்டார்..😂😂
ராஜ தேவனும் ஷிவாக்ஷியின் தலையை கோதினார்..😘
"ஷிவும்மா.. உனக்கு இந்த வீடு.. எங்கள பிடிச்சிருக்கா.. ??" என ஷ்ரித்திக்கின் ராஜ தேவன்.. கேட்டார்...😊
"என்ன.. ?? இப்படி கேட்டுட்டேள்.. ?? நேக்கு ரொம்ப பிடிச்சிருக்கு.. உங்க ஆத்துக்குள்ள வந்துண்டு.. பிடிக்கலன்னு சொல்லுவாளா.. என்ன.. ??" என சிரித்துக் கொண்டே கதைத்தாள்.. ஷிவாக்ஷி..🥰
ஷிவாக்ஷியின் பதிலில் இருவரும் திருப்தி அடைந்தனர்..😀
"அப்பா.. இப்பல்லாம்.. தலை பாராமா இருக்கறதுன்னு.. சொன்னேலொன்லியோ.. காலைல சுக்கு காபி குடிச்சா.. சரியா போயிடும்.. நா காலைலேயே குடுத்திருப்பேன்.. உங்களுக்கு பிடிக்காம போயிடுத்துன்னா.. ?? அதான்.. கேட்டேன்.. உங்களாண்ட ஒரு வார்த்தை.." என ஷிவாக்ஷி இழுக்கவும்..🙄
"என் மக.. குடுத்து வேணான்னு.. சொல்லிடுவேணா.. நீ குடும்மா.." என்றவர் கூறியதும்.. ஷிவாக்ஷிக்கு கண்களில் நீர் திரையிட்டது..😭
"தேங்க்ஸ்.. அப்பா.. என் மகள்னு சொன்னதுக்கு.." என ஷிவாக்ஷி கண்களை சிமிட்டி நீர் துளிகளை சமன் செய்து கொண்டாள்..😭
"நாங்க.. என்ன வாய் வார்த்தைக்கா.. மகள்னு சொல்றேன்னு நினைச்சியா.. ??" என்றதும்.. கண்களில் பொளுக்கென நீர் சொட்டியது.. 🙂🥺
"அச்சோ.. அழக் கூடாது.." என இந்திரகவி கண்களை துடைத்து விட.. ஷிவாக்ஷியை தன்னுடைய மடியில் சாய்த்து கொண்டார்.. ராஜ தேவன்..
"அப்பா.. எல்லாரும்.. என்ன தப்பா பாக்கறா.. நா சொல்ல வர்றத கூட கேக்க மாற்றா.." என ஷிவாக்ஷி கண்களில் அருவியானது.. 😭
இருவரும் செய்வதறியாது விழித்தனர்.. 🙄
"இதப்பார்ராஆஆ..." என சஞ்சையும் ராகுலும்.. ஷிவாக்ஷியும்.. தங்களின் பெற்றோரும் இருக்கும் நிலையை வாயை பிளக்க.. அதை வர்ஷாவும் ஜானவியும் மூடினர்..😮😳
"ஏன்.. டா.. மாமானரும் மருமகளும் ஒன்னா இருக்கக் கூடாதா.. ?? ஏன் டா இப்படி இருக்கீங்க.." என வர்ஷா கூறிவிட்டு ஜானவியோடு நகர்ந்தாள்..🤨
சித்தப்பா தேவ தேவனும்.. சித்தி தேவிகாவும் அவர்களருகே வந்தமர்ந்தார்கள்.. அவர்கள் வருவதை கண்டு ஷிவாக்ஷி எழுந்தமர நினைத்தாள்.. ஆனால்.. இந்திரகவி படுத்திருக்கச் செய்தார்..."உங்க பாசத்தை பார்த்து எங்களுக்கு புல்லரிக்குது.." என சித்தப்பா தேவ தேவன் மொழிந்ததும்..😋
"ஷிவு.. நீ அவங்களுக்கு மட்டுந்தானா.. எங்களுக்கு.. ??" என சித்தி தேவிகா கூறியதும்.. சங்கடமாக உணர்ந்தாள்..🙄🧐
"ஷிவு.. கூல்.. நாங்க ஃபன்னா தான் கேட்டோம்.." என ஷிவாக்ஷிக்கு சமாதான மொழிகளை உரைத்தார்...😊
"ஷிவு.. நீ.. ஃப்ரீயா இரு.. எங்கக் கூட இருக்குற மாதிரி.. இவங்க கிட்டயும் பழகு.." என ராஜ தேவன் சொற்களுக்கு.. தலையாட்டினாள்.. ஷிவாக்ஷி..☺️
கொத்தமல்லி.. "அம்மா.. வாங்க.. சாப்பாடு.. தயாராயிடுச்சுங்கோவ்.." என்றழைத்ததும்.. அனைவரும் உணவு மேஜையில் கூடினர்...☺️
ஷிவாக்ஷியும் கொத்தமல்லியும் உணவு பரிமாற.. அனைவரும் உணவை சுவைத்தனர்..😋😋
ஷ்ரித்திக்கிற்கு ஷிவாக்ஷி பார்த்து பார்த்து பரிமாறினாள்.. அருகே தந்தையும் தாயும்.. அவர்களை கவனியாது.. உணவின் மீது கவனத்தை வைத்திருப்பவனை.. விரக்தியோடு பார்த்தனர்.. ஷ்ரித்திக்கின் அம்மா இந்திரகவியும்.. ஷ்ரித்திக்கின் அப்பா ராஜ தேவனும்..😒😏
அவர்களின் பார்வையை புரிந்து கொண்ட ஷிவாக்ஷி.. நிலைமையை இலகுவாக்க..
"ஆமா.. நேக்கு.. ஒரு சந்தேகம் கேக்கவா.. ??" என ஷிவாக்ஷி கேள்வி எழுப்பினாள்...🤔
உணவின் மீதிருந்த கவனம்.. ஷிவாக்ஷியின் புறம் திரும்பியது.. ஷ்ரித்திக்கை தவிர்த்து..
வித்யுத்தும் மாயாவும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டனர்.. "என்ன கேக்கப் போறா.. ??" என்பார் போல..🧐
"நீ.. கேள்வி கேக்கப் போறதையே.. கேள்வியா கேக்கறவளே.. கேளுங்க.." என சஞ்சை கலாய்க்க.. ராகுலும் இணைந்து கொண்டான்..🤭
"கேள்விக்கு பொறந்தவளே.. நானும்.. பாத்துகினே.. இருக்கேன்.. எப்ப பார்த்தாலும் ஒரு கேள்வினு.. சின்ன பிள்ள மாத்.." என விக்ரம்.. கடிந்து கொள்ள..🤨 ருத்ரா.. 'என் ஷிவுவ ஏதாவது சொன்ன..' என்றார் போல விக்ரமை பார்த்து.. நாக்கை மடக்கி.. கையிலிருந்த ஃபோர்க்கை குத்துவதை காட்டியதும்..🍴😠
விக்ரம்.. "நீ.. கேளும்மா.. என்ன வேணும்னாலும்.. கேளும்மா.." என்று பம்ப ஆரம்பித்தான்..🥴
அவனின் மொத்த குடும்பமும் கொல்லேன வெடித்து சிரித்தனர்..😆😂
"நா பண்ண வேண்டியதை ருத்ரா பண்ணிட்டான்.." என ஷ்ரித்திக் கூறிவிட்டு.. ஷிவாக்ஷியிடம் திரும்பி.. 'கேள்..' என்பதை போல செய்கை செய்யவும்..😀
"இல்ல.. ஏன் எல்லாரும்.. இவாளா பாத்து பயப்படறேள்.. இவா ஐடி கம்பெனியில வெறும் ஈ.சி.ஓ தான.. ??" என ஷிவாக்ஷி கூறியது தான் தாமதம்.. ஷ்ரித்திக்கிற்கு பொறையேறியது..😱🤢🤮
சஞ்சையும் ராகுலும்.. குடித்துக் கொண்டிருந்த தண்ணீரையும் பழச்சாற்றையும் அவரவர்களின் முகத்தில் துப்பி கொண்டனர்..🤮
வர்ஷாவும் ஜானவியும் ஷிவாக்ஷியையே ஒரு மார்க்கமாக பார்த்தனர்..🙄
கொத்தமல்லி.. குழப்பத்தில் சட்னியை அளவுக்கு அதிகமாக சித்தப்பா தேவ தேவனின் தட்டில் கொட்டினான்..😨😱
ஷ்ரித்திக்கின் அப்பா ராஜ தேவன்.. விழி பிதுங்கி ஷிவாக்ஷியை பார்த்தார்..😳
ஷ்ரித்திக்கின் அம்மா இந்திரகவிக்கு.. கண்ணில் சாதம் பட்டு எரிந்தது.. 😢
தாத்தா அமரேந்திரரும்.. பாட்டி தேவசேனாவும் இவர்களின் சேட்டைகளை ரசித்தனர்..😜🤪
வித்யுத்தும் மாயாவும் கை வைத்து சிரித்துக் கொண்டனர்..🤭🤭
கலேபரங்கள்..
இவையனைத்தும்.. சில வினாடிகளில் நடந்தேறியது..
ஷிவாக்ஷிக்கு 'ஏன் இவர்கள் இப்படி நடந்து கொள்கிறார்கள்.. ??' என விளங்கவில்லை..🙄
பொறையேறியதில் தவித்த ஷ்ரித்திக்கை சமன் செய்ய தலையை மெதுவாக உச்சந்தலையில் தட்டினாள்.. பருக நீரை அவனுக்கு கொடுத்தாள்.. ஷிவாக்ஷி..😊
அனைவரும் தங்களை சமன் செய்து கொள்ள சில நிமிடங்கள் தேவைப்பட்டது..😯
ஷிவாக்ஷியே ஆரம்பிக்க நினைத்தாள்.. அதற்குள்.. ஷ்ரித்திக்கின் அப்பா ராஜ தேவனே... கேட்டு விட்டார்..☺️
"யாரும்மா.. அப்படி சொன்னது.. ?? ஷ்ரித்திக் வெறும்.. ஐடி கம்பெனியில ஈ.சி.ஓ ன்னு.. ??" என்று வினவினார்..🧐
ஷிவாக்ஷி.. என்ன விடை கூறுவதென.. முழி பிதுங்கினாள்.. ஏனெனில்.. அவளுள்.. ஷ்ரித்திக் ஏதோவொரு பெரிய நிறுவனத்தில் நல்ல உத்யோகத்தில் இருப்பான் என்று அவளாகவே நினைத்து கொண்டாள்..😜🙄
ஷிவாக்ஷி.. "அது.." என இழுக்கவும்..🙄🙄
இந்திரகவி..
"ஷிவு.. ஷ்ரித்திக்க என்னன்னு நினைச்சம்மா.. ?? அவ இந்த உலகத்தில தலைசிறந்த பிஸ்னஸ்மேன்ல அவனும் ஒருத்தன்.. ஹீ இஸ் டாப் லீடிங்.. பிஸ்னஸ் மேன் இன் தி வெர்ல்ட்.." என கூறிய போது.. தன் மகன் என்ற பெருமிதம் தெரிந்தது..🤩
"என் அண்ணா.. ஐடி கம்பெனியே வைச்சிருக்காரு.. நீ என்னடான்னா.. ஈ.சி.ஓன்னு சொல்ற.. ??" என ராகுல் பேசிவிட்டு.. சஞ்சையுடன் ஹைஃபை கொடுத்துக் கொண்டான்..😂🤭
"நீயும் அண்ணாவும்.. அன்னிக்கு போனிங்கல்ல.. மால்... அது அண்ணாவோடது.. தான்.." என ஜானவி கூறினாள்..🤩
கொத்தமல்லி.. "அம்மணி.. இந்த வீடே.. இவருது தானுங்கோவ்.." என அவனும் கதைத்தான்..😧
சித்தப்பா தேவ தேவன்.. "அதுமட்டுமில்ல.. ஷ்ரித்திக் பண்ணாத பிஸ்னஸே இல்ல.. நிறைய சோல்யூஷன்ஸ், கண்ஸ்ட்ரக்ஷன், மால்ஸ், புட் ப்ராடக்ட்ஸ்ன்னு.. ஏகப்பட்டது இருக்கு இவனுக்கு.. சொல்லிட்டே போலாம்.. அதெல்லாம் நம்ம சென்னைல மட்டும் இல்ல.. மும்பை, ஹைதராபாத், திருவனந்தபுரம், கொச்சின், டெல்லின்னு.. நிறைய இடத்தில வைச்சிருக்கான்.." என்றவர் உரைத்தார்..🙂
"அப்படி பட்டவன.. இப்படி சொல்லிட்டேயம்மா.. ??" என விக்ரம் ஒரு பக்கம் பாய்வதை போல பாவ்லா செய்தான்..😛
ஷிவாக்ஷிக்கோ.. அனைவரும் ஷ்ரித்திக்கின் புகழை கூற கூற.. தலை சுற்றியது...😵😞😱 இவர் இவ்வளவு பெரிய தனக்காரரா.. ??😱 இது தெரியாமல் இருந்து விட்டேனே... இவருக்கு நான் சிறிதும் தகுதியற்றவள்..😞😓😥 என அவளுக்குள் ஆழ்மனம் எடுத்துரைத்தது... அதை வெளிப்படுத்தாமல்.. வெளியே.. "ஈஈஈஈஈஈஈஈஈ...😬😬 அது.. அது.. அது வந்து..." என இளித்து வைத்தாள்..
ஷ்ரித்திக் ஷிவாக்ஷியை காண.. அவளோ.. தன்னுணர்வுகளை மறைக்க முயன்று.. புன்னகையை பூசினாள்..😏 அவளின் உணர்வுகளை புரிந்து கொண்டு.. "போதும்.. போதும்.. என் புகழ பாடுனது.. இப்ப கவனம் சாப்பாட்டுல வைங்க.." என்று ஆணையிடவும்... அமைதியாக உணவினை உண்டு முடித்தனர்..😋
அனைவரும் உண்ட பின்... ஷிவாக்ஷி... உணவினை தட்டில் வைத்து விட்டு.. கொத்தமல்லியின் அருகே சம்ணமிட்டு அமர்ந்தாள்...🙂
கொத்தமல்லி.. அப்போது தான்.. உணவை உட்கொள்ள அமர்ந்தவன்... எழுந்தான்.. தன்னருகே வந்தமர்ந்ததால்.. "என்னங்க.. அம்மணி.. நீங்க.. என் பக்கத்துல வந்து உக்காருறீங்க... இது.. ஐயாக்கு மட்டும் தெரிஞ்சுது.. அம்புட்டு தான்.." என பயத்துடன் கூறுபவரை... பார்த்தாள்..🙄
"அவா எதுவும்.. சொல்ல மாட்டா.. உக்காருங்கோ.. நேக்கு தனியா சாப்பிட சங்கோஜமா இருக்கறது.. அதான்.. சாப்பிடுங்கோ.." என்றவள் யதார்த்தமாக மொழிந்ததும்.. அமர்ந்தான்.. கொத்தமல்லி.. மாயாவை நினைத்து பார்த்தான்..🤔
ஒருமுறை... கொத்தமல்லி மாயா கேட்டாள்.. என்பதற்காக.. தேநீரை கலந்து தந்தான்.. அதை சுவைத்த மாயா.. "ச்சீ.. என்ன டீ இது.. உன் முகரை மாதிரியே இருக்கு.." என முகத்திலே ஊற்றி விட்டாள்..🥵
ஆனால்.. ஷிவாக்ஷி அன்பாகபொழுக.. யதார்த்தமாக பழக.. இவர் தான் நம் எஜமானிற்கு சிறந்த ஜோடி என தன்னுள் நினைத்துக் கொண்டான்.. 🥺🙂🤗
கொத்தமல்லியுடன் அமர்ந்து உணவை உண்டு முடித்து.. தன்னறைக்கு பாலோடு நகர்ந்தாள்..🙂
தன்னறையில் இருந்த அலுவலக அறைக்குள் கணினியில் மூழ்கி இருந்தான்.. ஷ்ரித்திக்..😇
ஷிவாக்ஷி வருவதை கண்டு... "வாங்க.. மேடம்.. சாப்டாச்சா... ??" என ஷ்ரித்திக் கணினியிலிருந்து.. பார்வை அவள் பக்கம் நகர்த்தி கேட்டான்..😎
ஷ்ரித்திக்கின் அலுவலக அறை கண்ணாடி சுவரால் ஆனதால்.. அவளின் வருகை அவனுக்கு தெரிந்தது..
"ஹான்.. அதெல்லாம்.. இந்தங்கோ.. பால்.." என ஷிவாக்ஷி ஷ்ரித்திக்கின் அலுவலக அறைக்குள் நுழைந்து கொண்டே உரைத்தாள்..🙂
ஷ்ரித்திக்.. உட்கார சொல்லவும்.. ஷிவாக்ஷியும் அமர்ந்தாள்.. 🙂☺️
ஷிவாக்ஷியே.. ஆரம்பித்தாள்.. "சாரி.. நான் தெரியாம.." என முடிக்கும் முன்னே.. ஷ்ரித்திக் குறுக்கிட்டான்..😕
"சாரியெல்லாம் வேணாம்.. நாம மீட் பண்ணியே ஜஸ்ட் ஒன் வீக் தான் ஆச்சு.. நாம இன்னும் நம்மள பத்தி முழுசா தெரிஞ்சுக்கவே இல்ல.. அதுக்குள்ள.. கல்யாணம்.. அது இதுன்னு.." என ஷ்ரித்திக் கூறிக் கொண்டு மீண்டும் கணினியில் மூழ்கினான்..😎😇
ஷிவாக்ஷி புன்முறுவல் செய்தாள்..😇
"ஆனா.. ஒன்னு.. எப்படி ஷிவு.. ?? என்ன பத்தி எதுவுமே தெரியாம கல்யாணத்துக்கு ஒத்துக்கிட்ட.. ??" என ஷ்ரித்திக் கணினியிலிருந்த பார்வை இப்போது அவளிடம்..😘
அப்பொழுதாவது.. ஷிவாக்ஷிக்கு தன்னை காதலிப்பதாக உணர்வாளா.. என்றே தான்..
ஷிவாக்ஷிக்கு என்ன பதில் சொல்வதென்றே தெரியவில்லை.. தான் எப்படி திருமணத்திற்கு சம்மதித்தோம்.. என அவளுக்கே புரியாத புதிரையல்லவா.. அவன் கேட்டிருக்கிறான்..🙄😕
ஷிவாக்ஷி.. திருதிருவென முழித்தாள்.. அவளின் பார்வையை தெரிந்து கொண்டான்..
ஷ்ரித்திக்.. "சரி.. விடு.." ஷிவாக்ஷியிடம் உரைத்ததும் தான்.. நிம்மதியடைந்தாள்..😇
"தூங்கலாமா.. ??" என்று ஷ்ரித்திக் கேட்கவும்.. மண்டையை ஆட்டி விட்டு.. படுக்கை விரித்து.. படுக்க ஆயத்தமானாள்..😴
ஷ்ரித்திக்கும் சோஃபாவில் தொப்பேன சாய்ந்து.. இரவு வணக்கத்தை தெரிவித்துவிட்டு.. இருவரும் படுத்துறங்கினர்..😴😴
நடுநிசி வேளையில்..
ஷ்ரித்திக்கின் அறைக்குள் பால்கனி வழியாக ஒரு உருவம்.. உள்ளே நுழைந்தது.. வந்து ஷிவாக்ஷியையும்.. ஷ்ரித்திக்கையும்.. தனித்தனியாக படுத்து இருப்பதை கண்டு திருப்தி அடைந்தது.. அது சந்தேகத்திறகு இடமின்றி வித்யுத் தான்..👻
நித்திரையில் ஆழ்ந்திருந்த ஷிவாக்ஷியின் புடவை சிறிது விலகி அவளின் கெண்டை கால்களும்.. இடையை அப்படியே காட்டியது.. வித்யுத்தின் பார்வை பழத்தில் ஈ மொய்ப்பதை போலே.. அவனின் பார்வையும் அங்கேயே மொய்ந்தது..🤤
ஷ்ரித்திக்கின் கனவில் அருவம் ஷிவாக்ஷிக்கு அருகில் அவளின் கழுத்தை நெரிப்பதை போல கனவில் கண்டு திடுமென எழுந்தான்..👻
அப்போது.. வித்யுத் அங்கே அமர்ந்திருப்பது.. ஷ்ரித்திக்கிற்கு உருவமாக தான் தெரிந்தது.. தன் தலையை தட்டி தூக்கத்தை விரட்டினான்.. அது யாரென அடையாளம் தெரியவில்லை.. ஏனெனில்.. வித்யுத்.. முகத்தை மூடிக் கொண்டு தான் வந்திருந்தான்..🙊
ஷ்ரித்திக்.. ஷிவாக்ஷியை அவ்வுருவம் நெருங்குவதை கண்டு கோபமுற்றான்..😠😤
வித்யுத் ஷிவாக்ஷியை நெருங்க.. ஷ்ரித்திக் தன் கரத்தால்.. வித்யுத்தின் பின் மண்டையில் பலமாக தாக்கினான்.. ஷ்ரித்திக்கின் எதிர்பாரா.. தாக்குதலில்.. ஷிவாக்ஷியின் காலுக்கு கீழே விழுந்தான்.. 🥵
ஷ்ரித்திக் வித்யுத்தின் பின்கழுத்தை பிடித்து.. இழுத்து.. சுவரோடு.. அணையிட்டான்.. 😠
"சொல்லு.. யார்ரா.. நீ.. ??" என ஷ்ரித்திக் விளித்தான்..😠
வித்யுத்.. ஷ்ரித்திக்கை தள்ளிவிட்டு.. பால்கனி வழியாக தப்பித்து சென்றான்..🤕
ஷ்ரித்திக்.. வெளியே.. ஆழ் வந்ததற்கான சுவடே இல்லாமல் இருந்தது..🤕
ஷ்ரித்திக்கின் மனமோ.. ஏதோ தவறாக நிகழ்கிறது.. ?? யாரவன்.. ?? ஷிவாக்ஷியை எதற்காக நெருங்கினான்.. ?? அதை விட தனக்கு பழக்கப்பட்டவன் போல தெரிந்ததே.. ?? ஷ்ரித்திக்கின் மொத்த குழப்பத்திற்கானா.. காரணம்.. ஷ்ரித்திக் ஷிவாக்ஷியை காண.. தூக்கத்தில் நெளிந்த போது.. அவளின் ஆடைகள் விலகி.. தங்கமேன மின்னும் அங்கங்கள் தெரிந்தது.. 😍🥰
ஷ்ரித்திக்.. ஷிவாக்ஷியின் அருகே நெருங்கி.. களைந்திருந்த.. அவளின் ஆடையை சரி செய்து.. போர்வையை போர்த்தி விட்டான்... 😊😊
ஷ்ரித்திக்கின் இரவு நித்திரை கலைந்து.. எண்ணம் முழுதும்.. அந்த அடையாளமறியா உருவத்தின் மீதே இருந்தது..🤔
காலை வேளை பரிதியவன்.. மேகக் கூட்டத்தை திரட்டி.. ஆலோசனை நடத்தி கொண்டிருந்தான்..
ஆனால்.. அதிலெல்லாம் அவனின் கவனம் இல்லை..
ஷ்ரித்திக் பால்கனியில் யோசனையில் உளன்றிருந்தான்.. நேற்று இரவு நடந்தவற்றை யோசித்த வண்ணமிருந்தான்.. 🤔🤨
அக்கணம்.. மேஜையில் ஷிவாக்ஷியின் கைப்பேசி இசைத்தது.. ஷிவாக்ஷி குளித்துக் கொண்டிருந்ததால்.. ஷ்ரித்திக் அவளின் கைப்பேசி எடுத்து பேச விழைந்தான்..🙂
"அறிவு கெட்டவளே.. பரதேசி.. லூசு.. ஒரு ஒன்னாரு ருவா.. இல்ல உன்கிட்ட.. போன் பண்ணி பேச உனக்கென்ன டி.. உன்னையெல்லாம்.. ஃப்ரண்டுன்னு சொல்லிக்கவே.. எனக்கு கேவளமா இருக்கு.. இப்ப பாரு.. போன் பண்ணிட்டு நான் தான் பேசிட்டு இருக்கேன்.. நல்லா இருக்கியான்னு ஆவது கேட்டியா.. ?? இல்ல.. நீயெல்.." என படபடவென.. கீச்சேன ஒலித்தது.. பெண்ணின் குரல்.. கைபேசியை செவியிலிருந்து விலகினான்.. விட்டால் பேசிக்கொண்டே இருப்பாளோ.. என்று ஷ்ரித்திக் தடுத்தான்..😎
"ஹலோ.." என ஷ்ரித்திக் பேசியதும்..😇
பேசிக் கொண்டே போனவள்.. ஒரு ஆடவனின் கம்பீரமான குரலை கேட்டதும்.. நிறுத்தி விட்டு.. "யாரு நீங்க.. ??" என கீச்சிட.. குரலை சரி செய்து விட்டு.. "யாரு நீங்க.. ?? என் ஃப்ரண்டோட போன் உங்க கையில எப்படி.. ??" என குரலை இயல்புக்கு கொண்டு வந்து கேட்டாள்..🤫😜
"நா.. ஷிவாக்ஷியோட புருஷன்.." என ஷ்ரித்திக் சாதாரணமாக கதைத்ததும்..🙂😎
அதிர்ச்சியின் உச்சிக்கே போனாள்.. அவள்.. "என்னஅஅஅஅதுதுஉஉஉ.. கல்யாணம் ஆயிடுச்சா.. ?? சொல்லவே இல்ல.." என ஏற்ற இறக்கத்தோடு.. கேட்டாள்.. 😳🤯
"ஆமா.. நாலு நாள் இருக்கும்.. உங்க பேரு என்ன.. ??" என்று ஷ்ரித்திக் கேட்டான்..🙂🤗
"நாலு நாள் ஆயிடுச்சா.. ?? சரி.. என் பேரு ஸ்டேஃபி இஷானி.. ஆமா.. எப்படி இதெல்லாம்.. ??" என அதற்கும் அதிர்ச்சி அடைந்து பதிலளித்தாள்.. அவள்..🤯😱
"ஹோ.. கிருஸ்டின்னா.. கல்யாணத்த பத்தி உங்க ஃப்ரண்ட் கிட்ட கேட்டுக்குங்க.." என ஷ்ரித்திக் கூறிவிட்டு திரும்ப.. ஷிவாக்ஷியை கண்டுவிட்டான்..😉
ஷிவாக்ஷி.. அப்போது தான் குளித்து முடித்து வந்தவள்.. ஷ்ரித்திக் பால்கனியில் கம்பீரமாக நிற்கும் விதம்.. ஷிவாக்ஷியின் மனதை ஏதோ செய்தது.. ஷ்ரித்திக்கை ரசித்துக் கொண்டிருந்தாள்.. திடீரென ஷ்ரித்திக் திரும்பவும்.. தன்னை சமன் செய்து கொண்டாள்..😍🤩🥰
ஷ்ரித்திக் புருவத்தை உயர்த்தி என்னவென கேட்கவும்.. ஓன்றுமில்லை என தலை ஆட்டினாள்..🤨
ஷ்ரித்திக் கைபேசியை நீட்டவும்.. தடுமாற்றத்துடனே கைப்பேசியை வாங்கி பெற்று.. பதற்றத்தோடு அங்கிருந்து விலகினாள்.. 😑
ஷ்ரித்திக் ஷிவாக்ஷியை வித்தியாசமாக பார்த்தான்..🙄
ஷிவாக்ஷி.. கைப்பேசியை காதில் வைத்ததும்.. படபடவேன பொரிந்தாள்.. "ஹே.. அத்து.. அப்படியே.. வாய்ல பொத்துன்னு போட்ருவேன்.. ஏன் டி.. கல்யாணம் ஆயிடுச்சுன்னு ஒரு வார்த்தை சொன்னியா.. டி.." என படபடவென பொரிந்தவளை.. "சாரி.. இஷா..." என மன்னிப்பை கூறிவிட்டு.. முதல் அத்தியாயத்தில் இருந்து.. நிகழ்ந்ததை அனைத்தும் கதைத்தாள்.. ஷிவாக்ஷி..🙄🙂🤗
"என்ன டி.. இவ்ளோ நடந்திருக்கு.. ஏன்டி என்கிட்ட சொல்லல.. ?? அந்த கடன்காரன் ராஸ்கல சும்மாவா விட்ட.. ஹ்ம்ம்.. நல்ல வேளை உன் புருஷன் இருந்தாரு... இல்லனா.. என்ன ஆகறது.. எப்படி நீ கல்யாணத்துக்கு சம்மதிச்ச.. ??" என அனைத்தையும் ஒருசேர கேள்வியாக கேட்டாள்.. 😠😘
"எப்படி சம்மதிச்சேன்னு.. நேக்கே தெரியல.. நானே.. பித்து பிடிச்சவ மாதிரி இருந்தேன்... நேக்கு அதிர்ச்சியில என்ன பண்றதுன்னு புரியல.. அதான்.. நோக்கு போன் பண்ணவே இல்ல.. நா கூட உன் ஆத்துக்கு வந்தேனே.. காசு கேக்கறதுக்கு.. ஆனா.. நீ ஊருக்கு போயிருந்த.. நான் மட்டும் என்ன பண்றது.. ??" என ஷிவாக்ஷியும் அவளின் கேள்விகளுக்கு ஏற்ப.. பதிலளித்தாள்..🥰🤗
"ஹோ.. அதுவே.. நான் வேளாங்கண்ணி போயிருந்தேன்.. அத்து.. பக்கத்து வீட்டுல நீ வந்திருந்ததா சொன்னாங்க.. அதான் போன் பண்ணேன்.. அப்புறம்.. கேக்கனுமே.. மாப்ள எப்படி.. ??" என்று ஸ்டேஃபி.. கேட்டாள்..
"ஹோ.. அப்படியா... அவாளா பத்தி.. கேக்கறீயா.. நீ வேற.. அவா.." என கூறிவிட்டு சுற்றும் முற்றும் பார்த்து விட்டு.. யாரும் இல்லை என்று.. "அவா.. ரொம்ப அழகா.. இருக்கா.. தெரியுமா.. நீ மட்டும் பாத்தா.. விழுந்துடுவே.. நானே சைட் அடிக்கிறேன்னா.. பாத்துக்கோ.." என ஷிவாக்ஷி புன்னகைத்துக் கொண்டே கூறினாள்..🤩😍😘🥰
ஷிவாக்ஷி இதுவரை எந்த ஆண்களை ஏறெடுத்தும் பார்த்ததில்லை.. தன் தோழியே இவ்வாறு கூறும் போது.. அவளுக்குள்.. ஆர்வம் பொங்கிற்று..
"அப்படியா.. ?? நீயே.. சைட் அடிக்கிறேன்னா.. நா அவர பாக்கனுமே.. ??" என்று ஸ்டேஃபி கேட்டதும்..🤔😘
"வா டி.. ஆத்துக்கு.. நேக்கும்.. உன்ன பாக்கனும்னு தோன்றது.. வாயேன்.. நா லோகெஷன சேர் பண்றேன்.." என ஷிவாக்ஷி கேட்டாள்..😍🤩
"சரி.. வரேன்.. இன்னிக்கு வரேன்.." என ஸ்டேஃபி இஷானி சொல்லிவிட்டு.. சிறிது நேரம் கதைத்து கைப்பேசியை அணைத்தாள்..🤩🤩🤩
ஷிவாக்ஷியின் இல்லத்தை நோக்கி கிளம்ப ஆயத்தமானாள்..☺️🤗
-----------------
To be continued.. 😉
ஷிவாக்ஷியின் இல்லத்தை நோக்கி கிளம்ப ஆயத்தமானாள்..☺️🤗
-----------------
To be continued.. 😉
(Hiii guys.. vazhakam Pola.. votes and comments marandhuradhinga.. 😜)
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro