அத்தியாயம் 2 🥰
சென்னை மாநகரம்... என்ன தான் காற்று மாசடைந்தலோ.. கூவம் கொப்பளித்தாலோ.. சென்னையின் பெருமை என்றுமே மாசடைவதில்லை...
ஆனால், சமீபத்தில்.. சென்னையும்.. காற்றால் மாசடைந்துள்ளது.. என்பது வருந்தத்தக்கதாகும்... காற்றின் மாசளவை கணக்கிடும்..
AQI கூறுவதாவது..
0-50 இன் காற்றின் தர குறியீடு (AQI) நல்லது என்று கருதப்படுகிறது; 51-100 மிதமானது; 101-150 என்பது உணர்திறன் குழுக்களுக்கு ஆரோக்கியமற்றது; 151-200 ஆரோக்கியமற்றது; 201-300 மிகவும் ஆரோக்கியமற்றது; 300 க்கும் அதிகமான AQI அபாயகரமானதாகும்...
இப்போது சென்னையின் காற்றின் அளவு 78 ஆக உள்ளதால்.. மிதமானதாக உள்ளது..
இதற்கு காரணம் அரசாங்கம் என்று ஒரு தரப்பும்.. மற்றொரு தரப்பு இது இயற்கையே என்று ஒருவர் மேல் ஒருவர் குறை கூறுகின்றனர்... ஹ்ம்ம்..
வந்தாரை வாழவைக்கும் ஊர் என்றால் அது நிச்சயம் நம் சென்னை மாநகரமே... எந்த தொழிலோடு இவ்வூருக்குள் நுழைந்தாலும் ... அவனை வரவேற்கும்... இந்த அழகிய மாநகரம்..
அவ்வூரில் செல்வந்தர் வாழும் இடத்தில்... ஒர் பிரம்மாண்டமான அரண்மனையில்..
🌼 கஜானனம் பூத கணாதி ஸேவிதம்....
கபித்த ஜம்பூ பலஸார பக்ஷதம்....!!!
உமாஸுதம் சோக வினாச காரணம்....
நமாமி விக்னேஸ்வர பாத பங்கஜம்...!!!!
ஓம் தத்புருஷாய வித்மஹே...
வக்ரதுண்டாய தீமஹி...
தன்னோ தந்தி ப்ரசோதயாத்....!!! 🌼
என்று வினைத் தீர்க்கும் கணபதியின் தெய்வீக மந்திரங்கள் ஐயர் ஓத அவ்வரண்மணையே... தெய்வீக மணத்தால் நிரம்பியிருக்க..
தன் முன் மனமுருக வேண்டி நிற்கும் யாரையும் கைவிட மாட்டேன் என்று... தன் கனிவான பார்வையுடனும்... அழகிய தொப்பையுடன் காட்சி தருகிறார்... ஈசனின் மைந்தன்...🌻
அங்கிருந்த அனைவரும் ஏகதந்தனிடம் வேண்டியது ஒன்றே... ஷ்ரித்திகின் திருமணம் எந்தவொரு பங்கமும் ஏற்படாமல் நிகழ வேண்டும் என்பதே அது...
(ஏன் இப்படி வேண்டிக்கிறாங்க.. அப்படின்னு நமக்கு தோனனுமே... சொல்லி முடிக்கல படிக்கிற வாசகர்கள்க்கு தோணிடுச்சு..)
இவ்வாறு வேண்டுவதன் காரணம்... அவனின் ஜாதகத்தில் உள்ள கிரக தோஷங்களால்... திருமணத்தில் தடைகள் ஏற்படும் என்பது தான்.. திருமணத்தின் தடையாக அவனின் உயிர் கூட ஊசலாடப்படும் ... என்பதே
இது மட்டும் காரணமல்ல... அவனின் 28ஆவது வயது முடிவதற்குள் திருமணம் நிகழாமல் போனால் ... ஷ்ரித்திகின் உயிரிற்கே ஆபத்து ஏற்படும் .... இதை அறிந்த குடும்பத்தினர்.. அதற்கு பரிகாரம் ஏதேனும் இருக்கிறதா..? என்று பார்த்தப் போது..
அதற்கு ஒரே பரிகாரம்.. அவனின் திருமணமேயாகும்.. என்று ஜோதிடர் கூற.. ஆனால் இதைப் பற்றி ஷ்ரித்திகிற்கு தெரியாமல் அவனிடம் 28ஆவது வயதில் திருமணம் முடிக்க வேண்டும் என்று மேலோட்டமாக கூறினர்...
அவனின் குடும்பமே.. ஷ்ரித்திகின் முறைப் பெண்.. இருக்க.. வெளியே எதற்கு தேட வேண்டும்..? என்று அவ்விருவருக்கும் மணமுடிப்பதைப் பற்றிப் பேச...
ஷ்ரித்திகின் நிலையோ ... 😲
கூறவும் வேண்டுமோ...?
.. பே என்று விழித்தான்..
அவனின் தாய் இந்திரக்கவியோ.. அவனின் முழியைப் பார்த்து.. "என்னடா.. இந்த முழி முழிக்கிற.. யவளையாவது லவ் ... கிவ்... பண்றியா..?"
ராஜ தேவன் .. அவன் தந்தையோ.." டேய் .. லவ் ..னா .. சொல்லிடு டா..? நாங்க என்ன வேணாம் னா சொல்ல போறோம்... சும்மா சொல்லு டா..?.. "என்று வினவ
ஷ்ரித்திகோ.. " சோ... பா.. சும்மா முழிச்சுது குத்தமா..?!!!, அம்மா ...உங்களுக்கு கொஞ்சமாவது மனசாட்சி இருக்கா..? நா போய் யாரையாவது" ... என்று கூறிக்கொண்டே திரும்ப.. குடும்பமே ஷ்ரித்திகை ஒரு மார்க்கமாக.. பார்க்க..🙄
"சரி... சரி.. என்னையப் போய்.. எந்த பொன்னாவது லவ் பண்ணுமா...?" என்று அவன் கூற
" இது என்னவோ வாஸ்துவம் தான்..." என்று அவனின் முத்த தலைமுறை (அவனின் தாத்தா பாட்டி) ஒருங்கே கூற..🤔
"என்னைய கலாய்க்கலைனா உங்க எல்லோருக்கும் தூக்கம் வராதே...?" என்று அவன் கடுப்பாக கூற
" அதெப்படி பா .. நீதான் பொன்னுங்கள பாத்ததும்.. பதறி அடிச்சுட்டு ஓடுறியே... அப்பறம் எப்படி.. இந்த விஷயத்தில உன்னை நீயே உயர்த்தி வேற பேசிக்கற...?" என்று அவனின் சித்தப்பா தேவ தேவனும் காலை வாற..
"போதும்.. போதும்.. இப்ப உங்க எல்லோருக்கும் பால்கோவா சாப்பிட்ட மாதிரி ஜம்முனு இருக்குமே...?" என்று அவன் கூறியதற்கு மொத்த குடும்பமே மண்டையை பலமாக ஆட்ட
"எல்லா எந்நேரம்" என்று அவன் சலித்துக் கொண்டான்... அவனின் பாட்டி தேவசேனாவே
"டேய் .. விளையாட்டு போதும்.. சொல்லு.. உன்னோட முறை பொண்ணு மாயாவ கல்யாணம் பண்ணிக்க சம்மதமா...? "என்று வினவ
"ம்ப்ச்.. ஸ்விட்டி.. எனக்கு இப்ப மேரேஜ் ல இன்டரஸ்டே இல்ல .. அதுவும்.. மாயாவ நா அப்படி பாத்ததே இல்ல...!!!?.. அதுவும் இல்லாம எனக்கு தங்கச்சி, தம்பி இருக்கும் போது ... நான் கல்யாணம் பண்ணிகிட்டா ... நல்லா இருக்காது...?!!!!"🥺
"டேய் ... அண்ணா.. எங்களை காரணம் காமிச்சு மேரேஜ் அ தள்ளி போடலாம் பாக்கிறியா...?!! செஞ்சுருவோம்..." என்று உடன் பிறப்புகள் நால்வரும் ஒரே போல் மாரி ஸ்டைலில் மிரட்டல் விடுக்க🤨
"அப்படி சொல்லுங்க டா.. என் தங்கம்..." என்று அத்தை சமீரா கூற
"நம்ம கூட தான இருந்தாங்க.. எப்படி டெவலப் ஆனாங்க...?!!!"என்று அவனுக்குள்ளெ முனுமுனுக்க🤔
"என்னப்பா.. பிடிக்கலையா...? .. நீ நல்லா இருக்கணும் னு தான நாங்க இப்ப உன் கல்யாணத்த பற்றி பேசறோம்... இது வரைக்கும் எல்லாம் உன் இஷ்டப்படி தான் நடந்தது.. இனிமேலும் நடக்கும்.. இல்லனு சொல்லலை.. ஆனா கல்யாணம் மட்டும் வேணாம்னு சொல்லாத....?!" என்று அவனின் சித்தி தேவிகா வாஞ்சையாக கூற🙂
அதில் மெல்ல மெல்ல உருகியவன் "actually ... I'm not interested.. but நீங்க எல்லாரும் சேர்ந்து சொல்றதுக்காக ஒத்துக்குறேன்..,but 1 condition .., I need to talk her"என்று ஷ்ரித்திக் கூற
"அதுக்கு என்னடா போய் பேசு ".. என்று மாமா யாதவன் பெண்ணின் தந்தையாக கூற
மாயாவும் ஷ்ரித்திகும் தனியாக தோட்டத்தை நோக்கி செல்ல...
ஷ்ரித்திகே தொடங்கினான்.." மாயா.. " என்றவன் விளிக்க
"சொல்லு .. ஷ்ரித்திக் "... என்க
"இங்க பாரு நான்... உன்னை கல்யாணம் பண்ணிக்கறது.. it's a second thing...நீ சொல்லு உனக்கு ஓகே வா...?"என்றவன் வினவ
"ஷ்ரித்திக்.. நா உன் மேல பைத்தியமா இருக்கேன்... சின்ன வயசுல இருந்தே.. தெரியுமா...?"என்று அவள் கண்கள் மின்ன கூற
"What....!!!!"என்று அவன் விழிக்க
"Yes... ஷ்ரித்திக்.. நா உன்கிட்ட எப்படி லவ் சொல்றதுன்னு முழிசிட்டு இருந்தேன்.. அதுக்குள்ள வீட்லயே...!!!!!" என்று அவள் குழைய
"Ok ok... எனக்கு அந்த மாதிரி எதுவும் இல்லை.. இப்ப ஓகே சொன்னது கூட எல்லாரும் சேர்ந்து சொல்றாங்கன்னு தான்.. otherwise nothing ..but I need sometimes.. before or after marriage.. ஏன்னா நான் இன்னும் கல்யாணம் வாழ்க்கைக்கு தயாராகல.. இப்ப வரைக்கும் இல்ல.. இனிமேல் நா என்ன மாத்திக்கிறேன்.. அது வரைக்கும்...?... நா சொல்ல வருவது புரியுதா...?" என்க
"ஹ்ம்ம்... நல்லா புரியுது... ஷ்ரித்திக்.. கல்யாணம் நடக்கட்டும்.. ஆனால், உன் மனசு அத ஏத்துக்கறத்துக்கு டைம் வேணும்னு சொல்ற .. ரைட்.., ஒன்னும் ப்ராப்ளம் இல்ல.. take your own time ஷ்ரித்திக்... "என்று அவள் புன்னகையுடன் கூற
"தெங்க்ஸ்.. என்ன புரிஞ்சதுக்கு.."என்று அவனும் புன்னகையுடன் கூற
"புருசன் பொண்டாட்டிக்குள்ள எதுக்கு பா தாங்ஸெல்லாம் ஷ்ரித்திக்.."என்று அவள் கூறிச் சென்றாள்...😍
உள்ளே நுழைந்த மாயா , புன்னகையுடன் அனைவரிடமும் ஷ்ரித்திக் சம்மதித்தை கூற .. அனைவரின் முகத்திலும் புன்னகையுடனான நிம்மதியால் நிறைந்தது..
"மாமா.. குழியில விழறதுக்கு தயார..? " நான்கு வாண்டுகளில் ஒருவனான ரித்துல் வினவ
"அப்படித்தான் போல"என்று மற்றொரு வாண்டு தியா அவர்களின் வினாவிற்கு விடை கூற
"அடிங்" என்று அவன் செல்லமாக மிரட்ட "ஐயோ... ! பயந்துடோம்..." பயமில்லாமல் கூறி ஓடினர்.. நால்வர் குழு
"நாம் எடுத்த முடிவு சரிதான்" என்று நிம்மதியான புன்னகை பார்த்து தன்னை சமன் செய்து கொண்டான்..
(நீங்க நினைக்கிறது கரக்ட் தான்)
அவனுக்கு இத்திருமணத்தில் விருப்பமில்லை.. குடும்பத்தினர்காக ஒப்புக்கொண்டான்.. அவர்களின் புன்னகையே அவனையும் நிறைவடைய செய்தது..
அதன் விளைவாகவே அவனின் நிச்சயதார்த்த விழா
நிச்சயதார்த்தம் நன்றாகவும்.. ஷ்ரித்திகிற்கு ஏதும் கேட்டது நிகழாமல் காக்க வேண்டி .. இந்த கணபதிப் பூஜை..
பூஜையில் அனைவரும் ஆழ்ந்திருக்க .. ஷ்ரித்திகின் ஷர்வானியை பிடித்து இழுத்த ஆரா
கணபதியப்பனின் முன் படைக்கப்பட்டிருந்த லட்டுக்களை காண்பித்து..
"மாமா .. எனக்கு அந்த லட்டு எடுத்துத் தரியா...? "என்று தன் சிறு கண்களை உருட்டி கேட்க
அந்த அழகில் விழுந்தவன்.."லட்டு வேனுமா.. என்னைய கல்யாணம் பண்ணிக்கறேன்னு சொல்லு.. எடுத்துத் தரேன்.."என்று அவன் குறும்பாக கூற😉
"நீதான்.. மாயாவ கல்யாணம் பண்ணிக்க போறியே..? அப்பறம் எப்படி.. ?" என்று தன் மழலை மொழியில் கூற
"அவ சும்மா.. நீ சொல்லு கல்யாணம் பண்ணிக்கறியா... ???" என்று சிரிப்புடன் கூற
"ஐய்ய.. எனக்கு ஆள் எப்பவோ ரெடி .. ருத்ரா இருக்கான்.. தெரியும்ல..?" தன்னுடைய தோழன் மற்றும் உறவாகிய ருத்ரனைக் குறிப்பிட
"அப்ப நானு...?!!" அதிர்ந்தைப் போல் நடிக்க
"போ .. நானே சாமிக்கிட்ட இருந்து லட்டை எடுத்துக்கறன்"என்க
"ஹா ஹா... இரு எடுத்து தரேன்"என்று எடுத்துக் குடுக்க
"Thank you மாமா..."என்று கன்னத்தில் முத்தம் கொடுத்து விட்டு செல்ல🥰😍
அவன் புன்னகையுடன் திரும்ப குடும்பமே அவனை முறைக்க
"டேய்.. கொஞ்சமாவது சீரியஸா இருடா.. ஏன் டா இப்படி இருக்க..?"என்று அவனின் தாத்தா அமரேந்திரன் வசவ
"சரி சரி...சாரி" என்று ஷ்ரித்திக் கூற
"அதில்லப்பா... நாங்க இப்படி சீரியஸா இருக்கோம்.. ஆனால் நீ அப்படி இல்லனு கவலை தான் வேற எதுவும் இல்லை" என்று அவனின் தாய் கூறி கொண்டே பிரசாதத்தை ஊட்டி விட
"அப்படியெல்லாம் இல்லை... மா.. நா ஃப்ரியா இருந்தது குத்தமா..?" என்று கூற
"சரி விடுங்க மா.. அண்ணா எப்பயும் போல இருந்தது.. அதுக்கு போய்.." என்று வர்ஷா பரிந்து கூற
அதற்குள்.. திருமணத்திற்கு வேலையாட்கள் வர.. அனைவரின் கவனமும் திரும்பியது...
(Hi frndzz.. nethu ud kudukka mudila.. konjam tinkering velai.. adhan IPA potutean.. padichitu epdi irukku sollunga.. mistakes irundha plzz.. sollunga.. NAA Enna pandreanu apadhan theriyum.. ungaloda adharavukku romba nandri)
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro