அத்தியாயம் - 19 😊
தோழன் என்னும் உரிமையை மனதில் பதிக்கும் தருவாயில் நெஞ்சில் பதிந்தது மங்கல நாண் ..
குழம்பிய குட்டையாய் நான்..
தெளிவாய் நீ.. 🤔
பரிதியவன்.. உச்சியில் இருந்து தன் உக்கிரத்தை வெளிப்படுத்துவதை போலே... ஷிவாக்ஷியின் மனமும் உக்கிரமாக தான் இருந்தது.. ஊமையாய்..
ஷிவாக்ஷி.. மடியில் முயல் குட்டிகள் அவளிடம் கொஞ்சி விளையாடிக் கொண்டிருந்தது.. ஆனால் அதிலெல்லாம் கருத்தில் பதியவில்லை..
மனைவி என்னும் இடத்தில் ஒருவள் இருக்கும் பொழுது எப்படி வேறொருவளை தன் இடத்தில் அழைத்துச் செல்வதை ஸ்த்ரீ என்பவள்.. எப்படி பார்த்துக் கொண்டிருப்பாள்..
பலரின் குடும்ப வாழ்வில் பிரச்சினை உதிப்பதற்கு காரணமே.. நம்பிக்கையின்மை தான்..
ஆனால்.. அதை கணவன் மனைவி இருவரும் உணராமல் சண்டையிடுவதிலே குறியாய் இருந்து.. தங்களுக்குள் இருக்கும் சிறு விரிசலையும் மேலும் பிளந்து கொள்வர்..
தன்னவருக்கு நம்பிக்கையும் அன்பையும் விதைப்பது அவர்களின் கடமையன்றோ..
இப்பொழுது அதே நிலையில் தான் இருந்தாள்.. ஷிவாக்ஷி..
தனக்கான நம்பிக்கையும் உரிமையும் இன்னும் அவளுக்கு சொல்லப்படவும்.. இல்லை..
அவளுள் விதைக்கப்படவும் இல்லை.. அவளும் என்ன தான் செய்வாள்..
'ஏன் நான் இப்போது கோபம் கொள்கிறேன்.. இது அவசரத்தில் விழைந்த திருமணம்.. கிட்டத்தட்ட விபத்து போலவே.. ஆனால் நான் அதில் உரிமை பாராட்டுவது பெரும் தவறு.. மாயா அவரோடு இணைந்து சென்றால் என்ன தவறு.. ?? ஒருவேளை என் எண்ணம் காதல் என்ற தவறான பாதையில்...' என நினைக்கும் போதே அவளுக்குள்.. அச்சமும் பதற்றமும் ஒருங்கே இணைந்து அவளை படுத்தியது.. 'வேண்டாம் ஷிவாக்ஷி.. காதலெல்லாம் நமக்கு வேண்டாம்.. இந்த திருமணம் ஒரு விபத்தே.. யாரோ ஒருவருக்கு கிடைக்க வேண்டிய தங்க தட்டு.. உன் மடியில் தவறுதலாக விழுந்ததால்.. அது உன்னுடையது சொந்தம் கொண்டாடுவது எத்துனை பெரும் தவறு.. அதை நீ செய்யக் கூடாது..' என தன்னுள் பேசிக் கொண்டு தன் மனதுக்கு கடிவாளமிட்டாள்..
ஏற்கனவே விரைவில் முடிவான திருமணம் அவளுள் சொல்லாதென குழப்பத்தை ஏற்படுத்தி இருக்கிறது.. இப்பொழுது அதோடு.. அவளின் கோபத்திற்கான குழப்பமும் சேர்ந்து அவளுள் மேலும் குழப்பத்தையும் யோசனையும் அதிகப்படுத்தியது..
மாயா.. ஷ்ரித்திக் உடன்.. வெளியே சென்றுவிட்டு.. மதிய வேளையில் தான் வந்தாள்..
ஷ்ரித்திக் வெகுவிரைவில் தான் இறக்கி விட்டான்.. ஆனால்.. ஷிவாக்ஷியை வெறுப்பேற்றவே.. வெளியே சுற்றி விட்டு.. மெதுவாக வந்தாள்.. மாயா..
வந்தவள்.. அப்படியே சென்றிருந்தாள்.. பரவாயில்லை.. அவளோ.. ஷிவாக்ஷியை வெறுப்பேற்றவும்.. கோபத்தை தூண்டவும் அவளருகே வந்தமர்ந்தாள்..
"ஹப்பா.. செம.. டயர்ட்.. ஷ்ரித்திக் சொல்ல.. சொல்ல கேக்காம வெளிய கூட்டிட்டு போய் சுத்திட்டு.. இப்ப தான் அவன் ஆஃபிஸ்கு போனான்.. சுத்துன எனக்கே டயர்ட்.. எப்படி ஷ்ரித்திக் வேலை செய்வானோன்னு.. தெரியல.." என மாயா தன்னோடு பேசுவதை போல.. ஷிவாக்ஷிக்கு தெரிவித்தாள்..
ஷிவாக்ஷிக்கு.. ஒரு பக்கம் கோபம்.. உதிர்த்தாலும்.. தன் மனதிற்கு கடிவாளமிட்டாள்..
மாயா ஷிவாக்ஷியின் முகத்தை பார்க்க.. அவளோ.. எந்தவொரு உணர்வை வெளி காட்டாதிருந்தாள்..
இப்போது.. பேசினாள்.. நேரடியாக.. "ஹேய் லுக்.. தெரிஞ்சுக்கோ.. ஷ்ரித்திக்.. ஹீஸ் மைன்.. அவன் எனக்கு தான்னு.. இப்ப உனக்கு புரியுதுல.." என்றுரைத்தாள்.. மாயா..
"ஹ்ம்ம்ம்ம்.. ஏன்.. இப்ப இத என்கிட்ட சொல்றேள்.. ?? இங்க பாருங்கோ.. நீங்க.. அவா கூட சுத்துங்கோ.. இல்ல என்ன வேணாலும்.. பண்ணிக்கோங்கோ.. நேக்கு கவலையே இல்ல.. இந்த கன்னியாதானம்.. ஒரு ஆக்சிடென்ட்.. அதுவும் உங்க தப்பால வந்தது தான்.. நியாயபடி.. பாக்கறச்ச.. இந்த இடத்தில நான் தான் கோபப்படனும்.. ஆனா தலை கீழா இருக்கறது.. திரும்ப.. என்கிட்ட வந்து சொல்லின்டே இருக்கேளே.. நீங்க தான் அவாள லவ் பண்றேளே.. ?? ஏன்.. உங்க லவ் மேல நோக்கு.. நம்பிக்கை இல்லயா.. ??" என ஷிவாக்ஷி தன் கோபத்தை மறைத்து சிரித்தப் படியே கேட்டாள்..
மாயா.. வெகுவாக ஷிவாக்ஷியின் அழகில் பொறாமை கொண்டாள்.. பாலையும் அவள் சருமத்தையும் அருகே வைத்து எது வெண்மை என கேட்டால் குழம்பிடும் அளவிற்கு.. வெண்மையானவள்.. முத்து மாலை போன்ற வரிசையான பற்கள்.. இதழ்களில் மச்சம்.. நீண்ட கருங்கூந்தல்..
இத்துணைக்கும் ஷிவாக்ஷி தன் அழகை வெளிப்படுத்தாமலே.. தங்கப் பதுமை என ஜொலித்தாள்.. வெளிப்படுத்தினால்.. என நினைக்கும் போதே.. ஷ்ரித்திக் அவள் பக்கம் முற்றும் சாய்ந்திடுவான்.. என்று தனக்குள்ளாக பேசிக் கொண்டாள்..
"உனக்கு.. அழகு மட்டுமில்ல.. திமிரும் ஜாஸ்தி தான்.. உன்ன அப்பறம் கவனிச்சுக்குறேன்.." என மாயா அவ்விடம் விட்டு அகன்றாள்.. காரணம்.. தாத்தா அமரேந்திரர் வருவதை கண்டு..
சோஃபாவில் சாய்ந்திருந்தாள்..
ஷிவாக்ஷியை ருத்ரா குட்டியும் ரித்து குட்டியும் விளையாட அழைக்க.. ஏதோவொரு யோசனையிலே இருந்ததால்.. அவள் கவனிக்கவில்லை..
அவர்கள் அவளை உலுக்கிய பின் தான் தெளிந்தாள்..
"வா.. ஷிவு.. விளையாஆஆஆடலாம்.." என ருத்து குட்டி ஏற்ற இறக்கத்தோடு கூறவும்..
ஷிவாக்ஷி கிளுக்கென சிரித்தாள்.. "சரி வரேன்.. என்ன விளையாடலாம்.. சொல்லு.. ??" என ஷிவாக்ஷி கேட்டுக் கொண்டு இருக்கும் போதே..
ருத்ராவையும் ரித்துலையும்.. "டேய்.. பொடியனுங்களா.. தீனி இருக்கு..வந்து கொட்டிக்குங்க.." என தீவா அழைக்கவும்..
"தேய்.. ருத்து.. தீனி தா.. வாதா.. நமக்கு நம்ம கதமை தான் முக்கியம்.. போலாம்.." என ரித்துவும்.. ருத்துவும் தங்களின் கடமை முடிக்க நகர்ந்தனர்..
"ஆமாம்மா.. நமக்கு தீனி தான் முக்கியம்.. போலாம் போலாம்.." என ருத்ராவும் அவனுடன் செல்லவும்..
"ஹேய்.. என்ன விளையாட அழைச்சுண்டு.. இப்போ.. சாப்பிட போறேள்.. ??" என விளையாட்டாக ருத்ராவின் கையை பற்றி நகர விடாமல் பிடித்துக் கொண்டாள்.. ஷிவாக்ஷி
"ஷிவு.. விடு.. தீனி.. ஷிவு... நா கேட்டாலும் தரமாட்டாங்க.. விடு ஷிவு.." என ருத்ரா கதறுவதை போல பாவனை செய்ய.. அதற்குள் ரித்துல் சிற்றுண்டியின் அருகே சென்று.. ருத்ராவின் சிற்றுண்டியில் சிறிது எடுத்துக் கொண்டதை கண்ட.. ருத்ரா.. "ஐயோ.. போச்சே.. ஷிவு.." என கத்தினான்..
"ஹான்.. என்ன அன்னிக்கு ரூம்ல வைச்சு பூட்டேன்லோன்லியோ.. ?? அனுபவி.. நன்னா அனுபவி.." என ஷிவாக்ஷி அவனை தடுத்து சிரித்துக் கொண்டே கதைத்தாள்..
ருத்ராவின் கையை... ஷிவாக்ஷி விடுவித்ததும்.. விட்டால் போதுமென ரித்துலிடம் ஓடினான்.. அவனிடம் சண்டை பிடித்துக் கொண்டிருந்தான்..
ஷிவாக்ஷி அவர்களின் சண்டையை புன்னகையுடன் பார்த்து கொண்டே இருந்தாள்..
ருத்ரா "டேய்.. எருமை.. எதுக்கு டா.. என் தீனிய எடுத்த.. ?? உனக்கு தான் தனியா தீவா அத்தை தீனி குடுத்தாங்கள்ள.. டா.." என்க..
"வாய்ப்பும் சோதும்.. கிதைக்கும் போது ஏத்துக்கனும்னு நீ தான் தா.. சொன்ன.." என்று வசனம் பேசியவனை.. கொலை வெறியோடு பார்த்து கொண்டிருந்தான்..
"டேய்... உன்னஅஅஅஅஅஅஅ.." என ருத்ரா கத்தியபடி இருவரும் உருண்டு பிரண்டு கொண்டிருந்தனர்..
அதே நேரத்தில் தியாவும் ஆராவும்.. அவ்விடம்.. வரவும் சரியாய் இருந்தது..
"என்ன.. தியா.. இப்படி சண்டை போட்டுட்டு இருக்.." என கூறிக் கொண்டே.. சாப்பாட்டு மேஜையை கண்டு பேச்சை பாதியில் நிறுத்தி.. இளிக்க ஆரம்பித்தாள்.. ஆரா
"ஏய்.. ஏன்டி பேச்ச பாதியில நிறுத்.." என தியாவும் சாப்பாட்டு மேஜையில் கண்டு ஆராவுடன் இணைந்து கொண்டாள்.. தியா..
அவர்கள் இருவரும் கண்டது.. சாப்பாட்டு மேஜையில் இருந்த.. உருளைக்கிழங்கு சீவல்கள், இனிப்பப்பம், சமோசா, டேய்ரி மில்க் சாக்லேட் போன்ற தீனிகள் இருந்ததை.. கண்டு இருவரின் மனதிலும் ஒடியது..
கிஸ் மீ... க்ளோஸ் யுவர் ஐஸ்..
மிஸ் மீ.. க்ளோஸ் யுவர் ஐஸ்..
ஐ கேன் ஃபீல் யுவர் லிப்ஸ்..
ஆன் யுவர் ஃபிங்கர் டீப்ஸ்..
ஐ கேன் ஃபீல் யுவர் ஸ்மைல்..
கமான் மை லிப்ஸ்.. அண்ட் ஹேப்பீனஸ் இன் யுவர் லைஃப்..
என்ற பாடலை மனதில் ஒட விட்ட படி.. தீனியின் அருகே நெருங்கி.. அதனை ருசி பார்த்து கொண்டிருந்தனர்.. ருத்ராவும் ரித்துலும் சண்டையில் மூழ்கியதால்.. இவர்களை கவனிக்க தவறினர்.. அந்த இடைவேளையை பயன்படுத்தி தியாவும் ஆராவும் ஒட்டு மொத்தமாக உண்டு முடித்தனர்..
ஆராவும் தியாவும்.. ஒரே சமயத்தில்.. "ஏஏஏஏஏஏஏஏப்ப்ப்.." என உண்டு ஏப்பம் இட்டனர்..
சண்டையில் ஈடுபட்டு இருந்த இருவரின் கவனத்தை ஈர்த்தது.. அந்த ஓசை.. ரித்துலும் ருத்ராவும் அவர்கள் இருவரும் கேக்கின் க்ரீமை நக்கி கொண்டிருப்பதை கண்ட போது.. ஒருங்கே.. "ஆஆஆஆஆஆஆ..." என கத்திக் கொண்டே ஆரா தியாவின் அருகே வந்தனர்..
"அடிடிஇஇஇஇப்பாவி.. இதென்ன.. தட்ட கழுவி வைச்சிருக்க தியா.. கூடப் பொறந்த அண்ணனுக்கு ஒரு பீஸ் வைக்கணும்னு கூடவா தோணல உனக்கு.." என ருத்ரா கத்தினான்.. தியாவோ.. எதுவும் அறியாததை போல கை விரல்களை சூப்பிக் கொண்டிருந்தாள்..
"ஆரா.. யூ டூ.." என ருத்ரா.. மூழித்தான்..
"நீ படுத்து தூங்கிட்டு இருக்கும் போது.. எனக்கு மட்டும் வாங்கிட்டு வந்திருந்த ஹாட் சாக்லேட்ட.. என் தங்கச்சிக்கும் வேணும்னு நீ முழிக்கற வரைக்கும் வைட் பண்ண.. இந்த அண்ணனை உன் கண்ணுக்கு தெரியலை.." என்றவன் வசனம் பேசினான்.. ருத்ரா..
தியாவோ.. க்ரீமை ருசிப்பதிலே குறியாய்.. தன் தோளை குலுக்கினாள்.. "அடி.. குந்தானி.. உன்ன.." என ருத்ரா தியாவையும் ஆராவையும் அடிக்க போக.. இருவரும்.. ருத்ரா வருவதை அறைக்குள் ஒடினர்.. ருத்ரா பின்னால் துரத்திச் சென்றான்.. ரித்துல் "நாம எதுக்கு ஓடுதோம்.. ??" என தெரியாமலே அவர்களின் பின்னே ஓடினான்..
அறையில் நுழைந்த ஆராவும் தியாவும் மீண்டும் ஓடும் வழியறியாது.. சுற்றி சுற்றி ஆரம்பித்த இடத்திற்கே வர.. ருத்ரா பொறுமையிழந்து தலையணைகளை கொண்டு தாக்க ஆரம்பித்தான்..
தியாவும் தலையணைகளை கொண்டு ருத்ராவை குறி வைத்து தூக்கி வீசினாள்.. ருத்து குனிந்து கொள்ள.. ரித்துலின் மூக்கில் சரியாக அடித்தது..
ரித்து எழுந்து மூக்கை சரி செய்து கொண்டே.. "தேய்.. தேய்.." என ஒற்றை விரலை ஒவ்வொரு திசையில் காண்பித்து மிரட்டுவதை போல பாவனை செய்தான்..
அவனும் தலையணையை எடுத்து.. ராணுவ வீரனை போல சோஃபாவை மறைவிடம் போல் வைத்து தலையணையை எரிந்தான்.. ஆராவை நோக்கி..
ஓடிக் கொண்டிருக்கும் ருத்ரா... "சார்.. என்ன பண்றீங்க.. ??" நின்று கேட்கவும்..
ரித்து குட்டியோ.. கிளுக்கென சிரித்து.. "குறி பாக்குதேன்.." என பெருமையாக கூறியதை கேட்டு.. ருத்ரா.. "சோஓஓஓஓஓ..." என இடையில் கைவைத்து சலித்து கொண்டே.. "க்ர்ர்ராராஆஆஆஆஆஆ.. த்து.. த்து.. உஉஉ.." என ரித்துலின் சட்டை பையில் உமிழந்து மீண்டும் ஓட ஆரம்பித்தான்..
ரித்து குட்டி அவனை முறைத்த படியே.. "பொதாமை.." என தனக்குள் பேசி விட்டு.. மீண்டும்.. குறி பார்க்க.. ஆரம்பித்தான்.. ஆரா அவனின் பின்னே தலையணையை கொண்டு அடிக்க தொடங்கினாள்.. "டேய்.. என்ன ஏன் டா.. அடிச்ச.. ??" என ரித்துலை பிடித்து மொத்திக் கொண்டு இருக்க.. ருத்ரா தியாவை அடித்துக் கொண்டே நால்வரும் ஒரு சேர புரண்டனர்..
தியா.. கத்தினாள்.. "டேய்.. ருத்து அண்ணா உனக்கும் கேக்க எடுத்து வைச்சிருக்கேன்.." என ருத்ராவிடம் கூறியதும்..
"நிஜமாவா.. ??!!" என ருத்ரா தலையணையால் அடிப்பதை நிறுத்தி கேட்டான்..
இது தெரியாமல் தன் பாசமிகு தங்கையை தவறாக நினைத்து விட்டேனே.. தன்னை எண்ணி நொந்து கொண்டான்..
"ஐ எம்.. சோரிஇஇஇ.." என குற்ற உணர்வு பொங்க.. தன் தங்கையின் மேலிருந்து எழுந்து அமர்ந்த நிலையில் கூறியதும்..
"ஆன்.. ஆன்ன்.." என எகத்தாளம் நிறைந்து வந்தது.. தியாவிடம் இருந்து..
"ஆமா.." என ஆரா.. திசையை காட்டினாள்..
ஆரா காட்டிய திசையை நோக்கியவனுக்கு இன்னும் கோபம் வந்தது.. ருத்ராவிற்கு.. "ஐ யம்.. சோர்ரி.." என மன்னிப்பு கேட்டதை நினைத்து இன்னும் கோபம் ஏறியது.. அதை நினைத்து.. தியாவை முறைத்தான்.. ருத்ரா..
ருத்ரா முறைப்பதை கண்டவள்.. தியா "ஆத்தி... என்ன பண்ண போறானோ... ???" என நினைத்து வாயை கோனையாக்கி அழுவதை போல் வைத்து கொண்டாள்..
ருத்ரா.. தலையணைகளை கொண்டு அடிக்க ஆரம்பித்தான்.. சிறு துண்டை அதுவும் க்ரீம் இல்லாமல் வைத்திருந்தது தான்.. அவனின் கோபத்திற்கு காரணம்..
ரித்துலும்.. ருத்ராவுடன் சேர்ந்து அடிப்பதை பார்த்த ஆரா.. "டேய்.. ருத்து அடிக்கறதுக்கு ஒரு ரிசன் இருக்கு.. நீ ஏன் அடிக்கற.. ??" என்றவள் கேள்வி எழுப்பினாள்..
"அதெதுக்கு.. வா நாமலும் என்ஜாய்.. பண்ணலாம்.." என ரித்துல் அவர்களுடன் உருண்ட படி கூறினான்.. ஆராவும்.. இணைந்து கொண்டாள்..
இவர்களின் சேட்டை எல்லாம்.. தொலைவில் இருந்து வயிற்றை பிடித்து சிரித்துக் கொண்டே பார்த்த ஷிவாக்ஷி.. இதற்கு மேலும் பொறுக்காது.. என அவர்களுக்கு இடையே வந்தாள்..
"போதும்.. போதும்.. சண்டைய நிறுத்துங்கோ.." என ஷிவாக்ஷி தடுக்க விழைந்தாள்..
"நீ பேசாத.. ஷிவு.. எனக்கு கேக் கிடைக்காம போனதுக்கு.. நீ தான் காரணம்.." என ருத்ரா அப்பக்கம் திரும்பிக் கொண்டு ஒப்பாரி வைத்தான்..
"தட்டிப்பாத்தேன் கொட்டாங்குச்சி... தாளம் வந்தது பாட்டை வைச்சி.. தூக்கி வளத்த அன்பு தங்கச்சிஇஇஇஇ.." என தியாவின் கண்ணத்தை இடித்து விட்டு.. 'ஆஆஆஆ...' என தேம்பி அழுவதை போல்.. செய்தவன்... "அன்புத் தங்கச்சி... தூக்கி ஏறிஞ்சா கண்ணு குளமாச்சி.."
ஷிவாக்ஷிக்கு சிரிப்பு தாங்கவில்லை.. அதை அடக்குவதில் பெரும் சிரமம் கொண்டாள்..
மற்ற மூவரின் நிலை கேட்கவும் வேண்டுமோ.. பித்து பிடித்தாற் போல தலையை சொறிந்தனர்..
குறிப்பாக தியா.. கண் மணிகளை நடுவே நோக்குவதை போல பாவனை செய்தாள்..
ஷிவாக்ஷி.. சிரிப்பை கைகளால் மறைத்துக் கொண்டு.. ருத்ராவை சமாதானம் செய்ய விழைந்தாள்..
"ருத்துக் குட்டி.. பட்டுக் குட்டி.. இப்ப என்ன.. ?? உனக்கு கேக் வேணும் அதான.. ?? நா பண்ணி தரேன்.." என ஷிவாக்ஷி ருத்ராவை அணைத்து சமாதான மொழிகளை வைத்தாள்..
"போ.. ஷிவு.. நீ ப்ரஷர் குக்கரில தான் வைப்ப.. அதுவும் எக்லேஸ்.. எனக்கு ப்ளாக் ஃபாரஸ்ட் கேக் தான் வேணும்.." என ஷிவாக்ஷியிடம் கதைத்தான்..
"அவ்ளோ தான.. நேக்கு ப்ளாக் ஃபாரஸ்ட் கேக் பண்ண தெரியும் பா.. நா எதுக்கு குக்கர்ல வைக்க போறேன்.. இங்க தான்.. மைக்ரோவேவ் ஓவன் இருக்குல்ல.. நோ வொர்ரி.. என் ருத்துக் குட்டி சமத்துல்ல.." என ருத்ராவின் தாடையை பிடித்து கொஞ்சினாள்..
"என்னாஆஆஆஆதுதுஉ.." என ரித்துல், ஆரா, தியா, மூவரும் ஒருசேர அதிர்ச்சி அடைந்தனர்.. யாருமறியா வண்ணம் மெதுவாய் கத்தினர்..
"ஷிவு.. எனக்கும் வேணும்.. எனக்கும் வேணும்.." என மூவரும் ஷிவாக்ஷியை சூழ்ந்து கொண்டனர்..
ஷிவாக்ஷி ஏது செய்வதென புரியாது விழித்தவளை.. பார்த்தவன்.. ருத்ரா.. 'இவ பாக்கறத பாத்தா.. அவங்களுக்கும் குடுத்துடுவா..' என நினைத்தவன்..
"ஷிவு.. இங்க.. பாரு.. அவங்களுக்கு எதுவும் செஞ்சு தரக் கூடாது.. எனக்கு வைக்காம சாப்பிட்டாங்க.. சோ.. நோ.." என ருத்ரா.. அவர்கள் மூவரையும் விலக்கி.. ஷிவாக்ஷியின் இடையை கட்டிக் கொண்டு கூறினான்..
"அதெப்படி.. ருத்துக் குட்டி.. உனக்கு செஞ்சு கொடுத்திண்டு.. அவாளுக்கு செய்யாம இருந்தா.. நன்னா இருக்காதொன்லியோ.. ?? வேணா.. அவாளுக்கு ஒரு பீஸ் கொடுத்திடலாம்.. நோக்கு தான் மொத்தமா.. புரியறதா.." என ஷிவாக்ஷி ருத்ராவிடம் விளக்கினாள்..
ஷிவாக்ஷியின் மொழிகளை கேட்டு.. ரித்துல், ஆரா, தியா, மூவரும்.. "ஷிவுவுஉஉஉஉஉஉ...." என ராகமாக இழுத்தனர்..
"என்ன.. ஷிவு.. ?? ஹான்.. நீங்க ருத்துக் குட்டிக்கும் வைச்சிருந்தேள்னா.. உங்களுக்கும் நிறையா கொடுத்திருப்பேன்னோ.. பாரு பட்டு குட்டி முகம் எப்படி வாடி போயிடுத்து.." என ஷிவாக்ஷி ருத்ராவை பார்க்கவும்.. முகத்தை பாவம் போல வைத்து கொண்டே.. ஷிவாக்ஷி மறுப்பக்கம் திரும்பியதும்.. ருத்ரா.. அவர்கள் மூவரையும் "லொல்லுல்லே.." கையை தலையில் வைத்து பழித்து காண்பித்தான்..
அவர்கள் மூவரும்.. ருத்ராவை முறைத்தனர்.. "உனக்கு ருத்துவை தான் பிடிச்சிருக்கு.. அதான் இப்படி பண்ற.." என ஆரா பாவமாக முகத்தை வைத்து கூறியதும்..
"அச்சோ.. அப்படி இல்ல.. செல்லம்.. அவன் கேக்க நீங்க சாப்டேளேன்னு தான் சொன்னேன்.. நீயும் என் செல்லம் தான்.." என ஆராவையும் தூக்கிக் கொண்டாள்..
"சரி வாங்க.. கேக் செய்யலாம்.." என நால்வரையும் அழைத்து கொண்டு.. சமயலறைக்குள் நுழைந்தனர்..
"வாங்க.. அம்மணி.. என்ன வேணுமுங்க.." என கொத்தமல்லி கேட்கவும்..
"நத்திங்.. நானே பாத்துக்குறேன்.. நீங்க நேக்கு தேவையானத எடுத்து கொடுங்கோ போதும்.." என ஷிவாக்ஷி கூறிக் கொண்டே.. கேக் செய்வதற்கு ஆயத்தமானாள்..
கொத்தமல்லி ஷிவாக்ஷிக்கு தேவையானவற்றை எடுத்து கொடுத்தும்.. உதவி செய்த படியும் இருந்தார்..
"நேக்கு ஹேல்ப் பண்ணுவேளாம்.. நா கேக்கறதெல்லாம்.. எடுத்து கொடுங்கோ.." என ஷிவாக்ஷி அவர்களோடு கதைத்தும்.. அவர்களுக்கு க்ரீமை பூசிவிட்டு விளையாடிய படியே.. அனைத்து சேர்வையுறுப்புகளையும் கலந்து கேக்கை செய்து முடித்தாள்.. க்ரீமையும்.. கலந்து கேக்கில் பூசினாள்..
ஷிவாக்ஷி செய்திருப்பதும்.. வெதுப்பகத்தில் செய்வதற்கும்.. வித்தியாசம் கண்டுபிடிக்க இயலாதவாறு.. மிக அழகாக நேர்த்தியாய் செய்திருந்தாள்..
"கேக்.. ரெடியாயிடுத்து.." என கூறிக் கொண்டே.. ரித்துல், ஆரா, தியா.. மூவருக்கும்.. அவள் செய்திருந்தவற்றில்.. சிறிய துண்டுகளாக.. அவர்களுக்கு வெட்டி கொடுத்து விட்டு.. ருத்ராவிற்கு முழுவதும் கொடுத்து விட்டாள்..
ரித்துல், ஆரா, தியா.. மூவரும்.. ஷிவாக்ஷியினுடைய கேக்கை உச்சு கொட்டி கொண்டே.. ரசித்து ருசித்தனர்..
"கேக்.. நன்னா இருக்கறதா.. ??" என ஷிவாக்ஷி கேட்டதும்..
"ஷிவு .. கேள்வியே தப்பு.." என தியா கூறியதும்.. புரியாது பார்த்த ஷிவாக்ஷியிடம்.. "மிச்சம் இருக்குமா.. ?? இப்படி தான் கேக்கனும்.. அவ்ளோ.. சூப்பரா இருக்கு.. தோ.. என் நொண்ணன பாரு.." என நக்கி கொண்டே கூறவும்.. ஷிவாக்ஷி.. அவனை பார்த்தாள்..
ருத்ராவை பற்றி கேட்கவும் வேண்டுமோ.. வழித்து நக்கி கொண்டிருந்தான்.. ஒரு பிடி பிடித்துக் கொண்டிருந்தான்..
ஷிவாக்ஷிக்கு புன்னகையை முகத்தில் பூசிக்கொண்டாள்..
ருத்ராவை கண்டு மூவரும் பொறாமை கொண்டனர்..
ஆரா.. "ச்சே.. பேசாம ருத்துக்கும்.. கொஞ்சம் வைச்சிருந்தா.. இப்ப டேஸ்டான.. கேக் மிஸ்ஸாகி இருக்காது.." என ஆரா சலித்து கொண்டாள்..
ரித்துல்.. "ஹ்ம்ம்ம்ம்ம்.. ஹ்ம்ம்ம்ம்.. பேக்கரில இருந்து வாங்குனத விட சூப்பரா இருக்கு.." சப்பிக் கொண்டே வழி மொழிந்தான்..
தியா.. "ஷிவு.. இன்னும் ஒரு பீஸ்.. ??" என தட்டை நீட்டவும்.. ஷிவாக்ஷி பதிலளிக்கும் முன் முந்திக்கொண்டு.. "நோ.." என கூறினான்..
தியாவின் சுருங்கியது..
ஷிவாக்ஷிக்கு தான் பாவமாகி போனது.. ருத்ராவிற்கும்.. ஒரு மாதிரி ஆனது.. "சரி.. அதுக்கு ஏன்.. மூஞ்சிய அப்படி வைச்சுக்குற.. இந்தா.." என ஒரு பெரிய பீஸை வெட்டி கொடுத்ததும்... தியா.. முகம் பளிச்சிட்டது..
"டேய்.. சாரி டா.. இனிமேல் உனக்கு வைச்சிட்டு சாப்பிடறேன்.." என தியா மன்னிப்பு கோரினாள்..
"பரவால்ல.. பரவால்ல.." என ருத்ரா சாப்பிட்டு கொண்டே கூறினான்..
"ஷிவு.. நீயும்.. சாப்பிடு.." என ஒரு பீசை வெட்டி கொடுத்தான்..
"தேங்க்ஸ்.. ருத்து.. நீங்க யாராவது.. என்ன சாப்பிட சொன்னேளா.. ?? என் ருத்து குட்டி தான் குடுத்துருக்கா.. நேக்கு வேண்டா.. நீங்க சாப்பிடுங்கோ.. நீ கேட்டதே.. நேக்கு வயிறு நொம்பிடுத்து.." என ஷிவாக்ஷி வேண்டாமென ஒதுக்கியதும்.. ரித்துல் எடுத்துக் கொண்டான்..
அவர்கள் சாப்பிட்ட தட்டுகளை கண்ட
ஷிவாக்ஷி.. "மல்லி.. இந்த தட்டை எல்லாம்.. எடுத்துண்டு.. போயிடுங்கோ.." என அவரிடம்.. கூறியதும்.. கொத்தமல்லியும் எடுத்து வைத்தான்..
"நான்.. உங்களான்ட.. ஒன்னு கேக்கனுமே.. ??" என ஷிவாக்ஷி கொத்தமல்லியிடம் கேள்வியை முன் வைத்தாள்..
"கேளுங்க அம்மணி.." என சிரித்துக் கொண்டே கேட்டார்.. கொத்தமல்லி..
"உங்க.. பேர்.. மல்லிகை வேந்தன்.. ஆனா.. ஏன் உங்கள.. எல்லாரும்.. கொத்தமல்லின்னு கூப்படறா.. ??" என ஷிவாக்ஷி தாடையில் கை வைத்து கேட்கவும்.. நால்வரும் ஒருவரையொருவர் பார்த்து கேலியாக புன்னகைத்து கொண்டனர்..
"அது ஏன் மா கேக்கறீங்க.. ?? அதொரு பெரிய கதை.. நா இந்த வுட்டுல பத்து வருஷமா வேலை செய்யுறேனுங்க.. அப்ப எல்லாம் இப்படி ஆனதில்லிங்க..." என கொத்தமல்லி..
என் சோக கதைய கேளு தாய்க்குலமே..
நால்வரும்: ஆமாம் தாய்க்குலமே...
அத கேட்டாத்தான் தாங்காதம்மா உங்க மனமே..
நால்வரும்: ஆமாம் உங்க மனமே...
என பாடிய உடன்.. மழலைகள் நால்வரும்.. நடுவே குழுவாக கொரஸ் பாடினர்..
ஷிவாக்ஷி வாயில் கை வைத்து.. சிரிப்பை அடக்கிக் கொண்டு இருந்தாள்..
கொத்தமல்லி அவர்களை அடக்கி விட்டு.. மேலே பார்த்தான்.. அவரை புரியாததை போல பார்த்த ஷிவாக்ஷியை..
"நீங்களும்.. பாருங்க.. அம்மணி.. ஃப்ளாஷ் பேக்.." என கொத்தமல்லி கூறியதும்.. ஷிவாக்ஷியும் மேலே பார்த்தாள்..
-------
ஒரு வருடத்திற்கு முன்...
"அங்கிள்.. பூஸ்ட்.." என காலை பதினொன்றரை மணிக்கு வந்து கேட்டனர்..
அப்போது.. தான் சமையலை முடித்து பாத்திரங்களை விளக்கிவிட்டு வந்து அமர்ந்தவனுக்கு அக்குழந்தையின் மொழிகள்.. ஒரு வித கடுப்பையே உண்டாக்கியது..
"அதெல்லாம் முடியாது.. பே.." என கோபமாக இரைத்து விட்டான்..
அதை கேட்டு மழலைகள் நால்வரும்.. கொத்தமல்லியை வில்லத்தனமான பார்வை வீசினர்..
"தேய்.. ருத்து.. நாம யாதுன்னு தெரியனும்.." என ரித்துல் ருத்துவிடம் கூறவும்..
"செஞ்சிட்டா போச்சு.." என ருத்ரா வில்லத்தனமான மொழியில் கூறினான்.. நால்வரும்.. வட்டமாக நின்று சூழ்ந்து திட்டம் தீட்டினர்..
கொத்தமல்லி இவர்களை ஒர் மார்க்கமாக.. பார்த்துக் கொண்டே உள்ளே நுழைந்தான்.. சமயலறையில்..
கொத்தமல்லி
சமயலறையில்.. இந்திரகவி சமீராவிடம்.. பேசிவிட்டு.. அன்றைய நாளுக்கான சமையலை பற்றி பேசிக் கொண்டிருந்தனர்..
தீவா.. அப்போது தான்.. ருத்ராவிற்கும்.. ரித்துலிற்கும்.. பால் கொடுத்து விட்டு அப்போது தான் அகன்றனர்..
சமயலறையின் வாசலில்.. ருத்துவும் ரித்துவும் அமர்ந்திருந்தனர்.. சிறிது தூரம் தள்ளி ருத்துவிற்கு நேரெதிராக.. ஆராவும் தியாவும் கையில் சட்னியுடன் காத்திருந்தனர்..
சமையலறையை விட்டு வெளியேற எண்ணிய கொத்தமல்லிக்கு.. இவர்கள் அமர்ந்திருக்கும் விதமே ஏதோ.. சரியில்லாதது போல் தோன்றியதும்.. ஆவது ஆகட்டும்.. என வெளியேற நினைத்தான்..
பால் குவளை சரியாக கொத்தமல்லி வரும் நேரம் பார்த்து.. கீழே வைத்துவிட்டு.. "பாலை.. தத்திதாதேஏஏஏஏஏ.." என ரித்துல் கத்தியதும்.. கொத்தமல்லிக்கு பதற்றத்தில்.. நிற்கவும் முடியாமல்.. நடக்கவும் முடியாமல்.. தடுமாறி கீழே தொப்பேன விழுகும் நேரத்தில்.. ஆரா.. சரியாக.. கொத்தமல்லி சட்னியிருந்த கப்பை.. தள்ளிவிட்டாள்..
முகம் முழுக்க சட்னியால்.. முக்கி எடுத்ததை போலாயிற்று..
கீழே விழுந்த கொத்தமல்லியின் முகத்திற்கு நேராக.. சட்னியை தள்ளிவிட்டதால்.. இப்படி..
பழிக்கு பழி.. வாங்கியதால்.. ரித்துலும்.. ருத்ராவும்.. "ஆப்பரேஷன் சக்சஸ்.. வௌவாலுக்கு ரெக்க முளைத்திடுத்து.. பறந்துடுத்து.. ஹூ..உஉஉ.." என இருவரும் குதூகலமாக கத்தினர்..
கொத்தமல்லி.. "அடப்பாவிகளா.. பால் தரலைங்கறத்துக்காக.. இப்படியா... ஹ்ம்ம்ம்ம்.." என சட்னியை துடைத்த படி தன்னுள் நினைத்து குமறிக் கொண்ட படியே.. எழுந்து நின்றார்..
அவர்களின் சிரிப்பை கண்டு.. "சிரிங்க..டா.. நல்லா.. சிரிங்க.. உஉஉஉஉஉஉ.." என அழுதார்.. கொத்தமல்லி
"சாதா.. மல்லியா இருந்தவரு.. இப்ப கொத்தமல்லி ஆயிட்டாரு.. இல்ல ருத்து.." என ஆரா சிரித்துக் கொண்டே மொழிந்ததும்... தியா.. நடுவே புகுந்து.. "ஹே.. நல்லாருக்கு.. இனிமே.. இவர் பேரு.. கொத்தமல்லி.." என தியா கத்திய.. அதே சமயம்.. ஏதோ.. சத்தம் கேட்டதென ஷ்ரித்திக்கின் அம்மா இந்திரகவியும், சித்தி தேவிகாவும்.. வந்து பார்க்கவும்.. கொத்தமல்லியின்.. கோலம்.. அவர்களை.. வெடித்து சிரிக்க வைத்தது..
"என்ன.. மல்லி.. என்ன கோலம் இது.. ??" என சிரித்துக் கொண்டே கேட்டார்.. ஷ்ரித்திக்கின் அம்மா இந்திரகவி..
"நா சொல்தேன்... பால் கேத்தோம்.. ததல.. கோதமா.. பேசுனார்.. அதா.. நாங்க யாருன்னு காமிச்சோம்.." என ரித்துல் குதித்து கொண்டே கூறியதை.. கேட்டபடியே.. அங்கு வந்தார்.. தீவா..
தீவா.. தன் மகனின் செயலில் கோபத்தில் கொதித்து போனார்.. "என்ன டா பண்ணி வைச்சிருக்க.. சின்ன பிள்ளைங்கன்னு.. உங்களுக்கு செல்லம் கொடுத்தது தப்பா போச்சு.. நாம பண்ற சேட்டைங்க.. மத்தவங்கள தொந்தரவு செய்யாத மாதிரி இருக்கனும்.. ஆனா.. நீங்க.. ??" என கூறிக் கொண்டே.. ரித்துல் ஆராவின் காதை திருகினார்..
நேஹாவும்.. விஷயம் அறிந்து ருத்ராவையும்.. தியாவையும் அதட்ட போக..
"விடுங்கம்மா.. சின்ன பசங்க.. அப்படி தான் இருப்பாங்க.." என தேவிகா.. சமாதானமாக கூறினார்..
நேஹா.. தீவிரமாக..
"நீங்க.. செல்லம் கொடுத்து தான்.. இவங்க இந்த சேட்டைய பண்றாங்க.. பாருங்க.. கொத்தமல்லிய.. ச்சே.. மல்லிய.." என அவர் முகத்தில் இருந்த கொத்தமல்லி சட்னியை வைத்து அவ்வாறு நாக்கை கடித்து விட்டு.. கூறியதும்..
நால்வரும்.. கொல்லேன சிரித்தனர்..
இந்திரகவியும்.. தேவிகாவும்..
விதிவிலக்கு அல்ல..
தனக்காக.. பரிந்து பேசுகிறார்களே.. என முகத்தை பாவம் போல் வைத்தவர்.. பட்டென தன்னை கலாய்த்ததும்.. "நீங்களுமா.. ??? அவ்வ்வ்.." என பார்த்தான்..
---------
கொத்தமல்லி மேலே பார்த்துக் கொண்டே.. "இப்படி தாங்க.. அம்மணி.. என் பேரு மாறுச்சு.." என மேலே பதிந்திருந்த.. தன் பார்வையை ஷிவாக்ஷியின் புறம்.. திருப்ப.. சத்தமே வராமல்.. வயிற்றை பிடித்துக் கொண்டு.. சிரித்துக் கொண்டிருந்தாள்..
தன் நிலையை எண்ணி.. கொத்தமல்லி.. "என்ன கொடுமை சார் இது.. ??" என தன் தலையில் அடித்து கொண்டான்..
ஷிவாக்ஷி குழந்தைகளோடு.. ஹைஃபை கொடுத்துக் கொண்டாள்..
"ஷிவு.. ஷிவு.. இனிமே.. நீயே எங்களுக்கு.. ஸ்னேக்ஸ்.. செஞ்சு குடேன்.." என ஆரா ஷிவாக்ஷியின் கண்ணத்தை பற்றி கேட்கவும்..
மழலையின் கொஞ்சலில் மயங்காதவறும் உண்டோ..
"நோக்கு இல்லாததா.. ?? என் செல்லம்.." என ஆராவை அணைத்துக் கொண்டாள்.. ஷிவாக்ஷி..
ஷிவாக்ஷியிடம்.. "நானு.. நானு.." என மூவரும்.. ஷிவாக்ஷியை அணைத்த படியே.. அவளை கீழே தள்ளி விட்டு மேலே படுத்தனர்..
அப்போது கார்த்திக்கும்.. மகேந்திரனும் வந்தனர்.. தங்கள் குழந்தைகள் ஷிவாக்ஷியை படுத்தும் நிலையை கண்டு..
"அடப்பாவிகளா.. என்ன டா பண்றீங்க.. அவள.. ???" என கார்த்திக் கத்தினான்..
மகேந்திரன்.. "விடுங்க டா.. டேய்.." என நால்வரையும் ஷிவாக்ஷியிடம் இருந்து பிரித்துக் கொண்டே கூறினான்..
ஷிவாக்ஷி.. "கிருஷ்ணாஆஆஆ.." என முனகியபடியே எழுந்தாள்..
"ஷிவு.. நாங்க.. வெளியே.. போறோம்.. நீயும்.. வா.. சீக்கிரமா வா.." என கத்திக்கொண்டே ஓடினான்.. ருத்ரா.. பின்னே.. மூவரும் ஓடினர்..
எழுந்து கொண்டே.. மகேந்திரனையும் கார்த்திக்கையும் கண்டு.. "வாங்கோ.. என்ன நேத்தெல்லாம்.. ஆளையே.. காணல்ல.. ??" என ஷிவாக்ஷி கேள்வி புன்னகையோடே கேள்வி எழுப்பினாள்..
"என்னம்மா.. பண்றது.. ?? உன் புருஷன் கல்யாணத்துக்கு.. ஆஃபீஸ் போகாமா இருந்தது தான்.. அதுல தான் நிறைய வேலை சேந்திடுச்சு.. க்ளைட் எல்லாம் பாத்துட்டு மீட்டிங் முடிச்சுட்டு.. சோப்பாஆஆஆஆ.." என சலித்து கொண்டான்.. மகேந்திரன்..
"நாங்க பிசினஸ் பார்ட்னர்ஸ்.. சோ ஒன்னா தான் சுத்துவோம்.." என கார்த்திக்கும் இணைந்து கொண்டான்...
"அச்சோ... அவ்ளோ வேலையா.. ?? சாப்டேளா.. ?? கை கால நன்னா அலம்பிண்டு வாங்கோ.. நா சாதத்தை பரிமாறுறேன்.." என ஷிவாக்ஷி சாப்பிட அழைத்தாள்..
இருவரும்.. கண்கள் மின்ன ஷிவாக்ஷியை பார்த்தனர்.. கனிவான அவளின் அக்கறை நிறைந்த சொற்கள் அவர்களுக்கு இதமாக இருந்தது..
ஏனெனில்.. அவர்களும் வேலை வேலை என்று அதிலே அலைவதாலும்.. அவர்களின் மனைவியும் திருமணமான புதிதில் சில மாதங்களுக்கு நன்றாகவே கவனித்துக் கொண்டனர்.. அதன் பிறகு.. அவர்களின் பிள்ளைகள், அவர்களின் வேலை என மனைவிமார்களும் இருந்து விடுவதால்.. நேரம் சரியாய் இருந்ததால்.. கணவனை கவனிக்க அவர்களுக்கு நேரம் போதவில்லை..
ஆதலால்.. அவர்களுக்கு அது ஒருவகையில் இதமாய் தான் இருந்தது..
ஷிவாக்ஷி.. தான் சாதாரண மொழிகளை தானே உதிர்த்தோம்.. என விளங்காது நோக்கினாள்.. "என்னாயிடுத்து.. ஏன்.. நீங்க.. இப்படி பாக்கறேள்.. ?? நான் தப்பா எதும் கேக்கலியே.. ??" என வினா தொடுத்தாள்..
"அதில்லம்மா.. ?? ரொம்ப நாள் கழிச்சு சாப்டியா.. அப்படின்னு கேட்டியா.. அதான்.. ??" என மகேந்திரன்.. தலையை சொறிந்த படியே கூறியதும்..
"ரொம்ப நாள் கழிச்சு.. இந்த வீட்ல.. எங்கள.. சாப்டியா.. ?? அப்படின்னு கேட்டதுக்கு.. ரொம்ப தேங்க்ஸ் மா.. தேங்க்ஸ்.." என கார்த்திக்.. நீர் வழிவதை துடைத்துக் கொள்வதை போல பாவனை செய்தான்..
"என்ன ஏதோ.. எங்கள பத்தி பேசற மாதிரி இருக்கே.. ??" என்று ராகமிழுத்தபடியே தீவாவும் நேஹாவும் அங்கே நுழைந்தனர்..
"ஒன்னுமில்லாம்மா.. சும்மா பேசிக்கிட்டு இருந்தோம்.. ஈஈஈஈஈஈ.." என கார்த்திக் சமாளித்து இளித்தான்..
"உங்கள பத்தி பேசிட்டு.. இந்த இடத்தில நிக்க முடியுமா.. ??" என மகேந்திரனும் இணைந்து ஒத்து ஊதினான்..
ஷிவாக்ஷி கை வைத்து சிரித்துக் கொண்டாள்..
"ஹான்.. சரி எப்ப வந்தீங்க.. ??" என நேஹா.. கையை கட்டிக்கொண்டு கேட்டாள்..
"ஜஸ்ட் நௌவ்.." என தோளை குலுக்கினான்.. கார்த்திக்..
"மீட்டிங் எப்படி போச்சு.. ??" என தீவா.. மகேந்திரனிடமிருந்து பெட்டியை வாங்கிக் கொண்டு கேட்டாள்..
"குட்.. நாட் பேட்.." என்றவன் கதைத்தான்..
"சரிப்பா.. நாளைல இருந்து.. நான் ஆஃபிஸ் வரேன்.. ஓகேவா.. ??" என நேஹா வினவும்..
"வா.. யுவர் விஷ்.." என கார்த்திக் சொல்லவும்..
"மஹி.. நானும்.. நாளைலயிருந்து ஹாஸ்பிடல் போறேன்.. ஓகேவா.. ??" என தீவாவும் சேர்ந்து கொண்டாள்..
"கார்த்திக் சொன்ன பதில் தான் உனக்கும்.. அதெல்லாம் உன் இஷ்டம்.. நா தலையிட மாட்டேன்" என டையை தளர்த்தியபடி கதைத்தான்..
ஷிவாக்ஷி.. நாம் எதற்கு என விலக நினைத்து.. அகல போனவளை.. தடுத்தாள்.. நேஹா..
"ஷிவு.. வா பூ பறிக்கலாம்.. பூ கட்டலாம்.." என நேஹா அழைத்தாள்..
"உனக்கும் பொழுது போகும்.. வா.." என தீவாவும் இணைந்தாள்..
ஷிவாக்ஷி.. இதழ்களை விரித்து வருவதாக தலையாட்டினாள்..
"வாங்கோ.. சாதம் பரிமாறுறேன்.. சாப்பிடுவேளாம்.." என மகேந்திரனையும் கார்த்திக்கையும் அழைத்தாள்..
இருவரும் வருவதாக தலையாட்டி விட்டு.. கை கால்களை சுத்தம் செய்து விட்டு.. அமரவும்.. ஷிவாக்ஷி அவர்களுக்கு பரிமாறினாள்..
அவர்கள் பேசிக் கொண்டே உண்டு முடிக்கவும்.. நேஹாவும் தீபாவும் வரவும் சரியாய் இருந்தது.. அவர்களோடு இணைந்து பூ பறிக்க சென்றாள்..
கண்களில்.. காதலும் கனவும் நிறைந்து வழிந்தது..
விக்ரமிற்கு.. ஷ்ரித்திக்கின் அலுவலக அறைக்குள் பாடுவதை போல பிதற்றிக் கொண்டே நுழைந்தான்.. அவன்..
"சோஓஓஓஓஓஓ... இவனுக்கு.. இதே வேலை.." என சலித்து கொண்டே.. கணினியில் பார்வையை செலுத்தினான்.. ஷ்ரித்திக்..
"தாரமே தாரமே வா..
வாழ்வின் வாசமே.. வாசமே..
நீ தானே தாரமே தாரமே வா...
எந்தன் சுவாசமே சுவாசமே
நீ உயிரே வா...
உன்னை பார்த்திருப்பேன்
விழிகள் மூடாது..
உன்னை தாண்டி
எதுவும் தெரியகூடாது..."
ஹ்ம்ம்ம்ம்.. அதுக்கு அவ மறைச்சிட்டு தான் நிக்கனும்.." என எந்த உணர்வின்றி.. கணினியில் இருந்து பார்வையகலாது கேலி செய்தான்..
பக்கத்தில் இருந்த.. ஷ்ரித்திக்கின் தனிப்பட்ட செயலாளர் கையை பொத்திக் கொண்டு சிரித்தாள்...
அதை கண்டு விட்டு...
"போடா.. டேய்... உனக்கென்ன.. மச்சா நீ டபுள்ஸ் ஆயிட்டே.. ஆனா.. நா பாத்தியா.. மொரட்டு சிங்கிளாவே இருக்கேன்.. " என விக்ரம் ஷ்ரித்திக்கை திட்டி விட்டு.. மீண்டும்.. தன் கனவில் ஆழ்ந்தான்..
ஷ்ரித்திக்.. கணினியில் இருந்து பார்வையகலாது.. தன் தனிப்பட்ட செயலாளரை வாசலை நோக்கி கைகாட்டவும்.. "எஸ் சார்.." என வெளியே நகர்ந்தாள்..
"யாரந்த பொண்ணு... ??" என ஷ்ரித்திக் கணினியில் இருந்த பார்வை இப்போது.. கோப்புகளில் தாங்கி இருந்தது..
"பங்கு.... ????!!!!!! எப்படி பங்கு.. ??" என ஷ்ரித்திக்கிடம் ஆச்சரியமாக கேட்டான்.. விக்ரம்..
"அதான்.. உன் முகரை பார்த்தாலே தெரியுது.. சொல்லு.." என கோப்புகளில்.. படித்து கையொப்பமிட்ட படியே கதைத்தான்...
"ஒரு.. பொன்ன பாத்தேன் டா... அவ அழகான ரெண்டு கண்ண பாத்தேன் டா.." என கனவில் ஆழ்ந்த படி கூறியதும்..
ஷ்ரித்திக்கின் பொறுமை பறந்தது.. கோப்புகளை மேஜையில் வீசிவிட்டு.. "என் வாய்ல அசிங்கமா ஏதாவது.. வந்தற போது.. மூடிட்டு சொல்லு.." என்றிரைத்ததும்..
"சரி.. சரி சொல்றேன்... அதுக்கு ஏன்.. கோபப் படற டார்லிங்..." என விக்ரம்.. மலரும் நினைவுகள் மொழிய தொடங்கினான்..
--------------
விக்ரம்.. மகிழுந்தில் ஷ்ரித்திக்கின் அலுவலகத்திற்கு சாலையில் சென்று கொண்டிருந்தான்..
அப்போதென போக்குவரத்து சாலைகுறியீடுகள்.. சிவப்பு விளக்கை ஒளிந்திருந்தது.. விக்ரம் பச்சை ஒளியாக மாறுவதற்கு காத்திருந்தான்.. பேருந்தின் சற்றே தொலைவில்..
அதே வேளையில்.. பேருந்தில் ஜன்னல் ஓரமாக.. கற்றை கூந்தல் காற்றில் பறக்க.. சிறிய விழிகள்.. வளைந்த புருவம் நீண்ட நயனம், ரோஜா இதழ்கள் என... பேரழகி இல்லை என்றாலும்.. அழகி தான்.. ஆனால்.. விக்ரமிற்கு வான் அழகியை போல தெரிந்தாள்.. அவளையே வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தான்.. அதே வேளை அந்த பெண்ணும் விக்ரமை பார்த்து கண்ணடித்தாள்.. விக்ரம் சிறு அதிர்வுடன் தன்னையல்ல வேறு யாரோ என திரும்பி பார்த்து விட்டு.. மீண்டும் அவளை காண.. அந்த பாவை.. ஆள்காட்டி விரலை அவனை நோக்கி காட்டி.. 'உன்னை தான்..' என உதடசைத்து மீண்டும் கண்ணடித்தாள்...
விக்ரமிற்கோ.. அவனுக்குள்... சந்தோஷ மேகங்கள் மழையை பொழிந்து இடி இடித்து ஆரவாரமிட்டது.. அவன் இதழ்கள் விரிந்து.. அவளையே வட்டமிட்டது...
போக்குவரத்து சாலைகுறியீடுகள்.. பச்சையாக மாறியதும்.. அப்பேருந்து.. புறப்பட்டது..
விக்ரம் அந்த பேருந்தை பின்தொடர்ந்து தன் மகிழுந்தை இயக்கினான்..
அந்த பெண்ணிடம் பேச வேண்டும் என விக்ரமின் மனம் தவித்தது.. தொடர்ந்து வேகமாக செல்ல விழைய.. ஆனால்.. சில வாகனங்கள் முன்னே.. சென்று அவனை போக விடாமல் தடுத்தது.. இருப்பினும்.. தொடர்ந்து செல்ல.. அவன் மனம் கவர்ந்தவள்.. பயணித்ததோ அரசுப் பேருந்து... வேறொரு அரசுப் பேருந்தும் அதை தொடர்ந்து இடம் வலம் என மாறி மாறி பயணிக்க.. விக்ரம் சற்று தடுமாறினான்...
வேறொரு போக்குவரத்து சாலைகுறியீடுகளில் விக்ரமின் மகிழுந்து... மாட்டிக் கொண்டது..
அந்தப் பேருந்து.. நகர்ந்து சென்றது.. அவன் மனம் கவர்ந்தவளையும் சேர்த்து..
------------
"ஹ்ம்ம்ம்ம்..." என விக்ரம் கண்ணத்தில் கை வைத்து கனவு கண்டவனை... என்ன செய்வது இவனை என்பார் போல பார்த்தான்... ஷ்ரித்திக்..
"சோ... உனக்கு.. அந்த பொண்ணு எந்த ஊரு.. பேரு.. ?? எதுவுமே தெரியாது.. ரைட்.." என ஷ்ரித்திக் எந்த உணர்வின்றி கேட்டான்..
விக்ரம்.. "எக்ஸாட்லி.. மச்சான்.." என சிரித்துக் கொண்டே கூறியதும்..
பேப்பர் வைட்டை அவனின் காலிடுக்கை நோக்கி வீசினான்.. ஷ்ரித்திக்.. திடுக்கிட்டு... விக்ரம்.. "ஏய்.. எங்க வீசுற.. ??" என விக்ரம் கேட்ச் பிடித்து கொண்டு கதைத்தான்..
"பின்ன.. என்னடா ?? யாரு என்னன்னு தெரியாம இருக்க.. ??" என ஷ்ரித்திக் கோபமாக எழுந்து நின்றான்..
"டேய்.. என்னைய என்ன பண்ண சொல்ற.. ?? இட்ஸ்.. அன்எக்ஸ்பேக்டட்.. நீ கூட தான் உன் பொண்டாட்டி உன்ன காப்பாத்துனதுக்கு.. தேங்க்ஸ் சொல்றதுக்கு.. அவ யாரு என்னன்னு தெரியாமா இருந்த.. அதே மாதிரி தான்.. இதுவும்.." என விக்ரம் சாக்கு சொன்னான்..
அப்போது என் நிலை என்ன.. உன் நிலை என்ன.. என தன்னுள் அவன் நாக்கை நினைத்து சிரித்துக் கொண்டான்... ஷ்ரித்திக்..
"ரொம்ப அழகோ.. ??" என ஷ்ரித்திக்.. விக்ரமின் பித்து பிடித்த பாவனை பார்த்து கேட்டான்..
"ச்சே.. ச்சே.. கண்டிப்பா.. உன் பொண்டாட்டி அளவுக்கு இல்ல.. ஆனா எனக்கு பேரழகி தான்.." என விக்ரம் அவளை நினைத்துக் கொண்டே கூறினான்..
ஷ்ரித்திக்.. "ஏதோ.. உங்க அப்பா.. கம்பெனிக்கும்.. என் கம்பெனிக்கும்.. டீலர்சீப் வெச்சிகிட்டு.. இருக்கறதுனால.. அடிக்கடி வர.. இல்லைனா.. அதுவும் இல்ல.." என ஷ்ரித்திக் சோஃபாவில் அமர்ந்த படி கதைத்தான்..
"உனக்கென்னப்பா.. ?? நீ தனியா நின்னு.. இந்த காம்ப்ளக்ஸ், மால், கன்ஸ்ட்ரக்ஷன்ஸ், சோல்யூஷன்ஸ், இவ்ளோ பெருசா.. கொண்டு வந்திருக்க.. எனக்கு அந்தளவுக்கு ரிஸ்க் எடுக்க தைரியம் இல்லப்பா.." என விக்ரம் கதைத்தான்..
"டேய்.. அதான்.. நா இருக்கேன்ல.. பேசாம பிஸ்னஸ ஆரம்பி.. இன்னும் எவ்ளோ.. நாளைக்கி அப்பாவோடதையே பாத்திட்டு இருப்ப.. உனக்குன்னு.. ஒரு அடையாளத்தை உருவாக்கிக்கோ.." என ஷ்ரித்திக் கூறியதும்..
விக்ரம்.. "ஹான்.. பாக்கலாம்.. பாக்கலாம்.." என்றவன் நாட்டமில்லாததை போல் கதைத்தவனை.. பார்த்து சிரித்துக் கொண்டான்..
"சரி.. நீ.. என்னவோ.. பண்ணு.. பட் நா ஒரு நீயூ பிஸ்னஸ்.. ஸ்டார்ட் பண்ணலாம்னு.. நினைக்கிறேன்.." என ஷ்ரித்திக் தன்னிருக்கையில் அமர்ந்து கொண்டே.. கதைத்தான்..
"இஸ்.. இட்.. ??" என்றவன் வினவவும்..
ஷ்ரித்திக்.. "எஸ்.. ஒரு ஃபுட் ப்ராடக்ட்.. ஆரம்பிக்கலாம்னு நினைக்கிறேன்.." என்று கூறியதும்..
விக்ரம்.. "டேய்.. ஆனா... நீ ஆல்ரெடி.. ஃபுட் ப்ராடக்ட்ஸ் பண்ணிட்டு தானே.. உங்க மாந்தோப்புல விளையுற மாம்பழம், தோட்டத்தில விளையுற திராட்சை, கொய்யா, பேரிச்சம் பழம் இதுலேலாம்.. ஜூஸ் அது இதுன்னு பண்ணிட்டு தான இருக்க.. ??" என விக்ரம் கேள்வி எழுப்பினான்..
"இல்லல்ல.. நா பண்ண போற இந்த ப்ராடக்ட் கொஞ்சம் இன்னோவேடிவ்வா இருக்கனும்.. அட் த சேம் டைம்.. ஆர்கானிகாவும், ட்ரேடிஷனலாவும் இருக்கனும்னு நினைக்கிறேன்.." என ஷ்ரித்திக் தன் யோசனையை முன் வைத்தான்..
"ஆர்கானிக்.. ட்ரேடிஷனல்.. கொஞ்சம் கஷ்டம் போல.. ??" என விக்ரம்.. மண்டையை சொறிந்தான்..
"பார்ப்போம்.. கொஞ்சம் பெருசா.. டிஃப்ரன்ட்டா ஏதாவது.. ஐடியா கிடைக்கும்.." என ஷ்ரித்திக் கூறிக் கொண்டிருக்கும் போதே.. கைப்பேசி அலறியது..
கைப்பேசியில் ஒளிர்ந்த பெயரை பார்த்ததும்.. இதழ்கள் புன்னகையால் விரிந்தது..
விக்ரம்.. "யாருடா.. ??" என வினவினான்..
கைப்பேசியை திருப்பி காண்பிக்கவும்.. வித்யுத் என காண்பித்தது.. அதை கண்டு விக்ரமிற்கு சந்தோஷம் தாங்கவில்லை..
எடுத்து பேசினான்.. ஏன் திருமணத்திற்கு வரவேயில்லை என கோபத்தில் ஆரம்பித்து.. வீட்டிற்கு வா.. என கட்டளையில் முடித்தான் ஷ்ரித்திக்..
பேசி முடித்ததும்.. என்னவென்று கேட்டான்.. விக்ரம்..
"இப்ப வீட்டுக்கு வரானாம்.. சரி.. கிளம்பலாம்.." என ஷ்ரித்திக் கூறி விக்ரமுடன் தன் இல்லத்திற்கு கிளம்பினான்..
ஷிவாக்ஷி ரித்துல், ஆரா, ருத்ரா, தியா...
கண்ணாமூச்சி ஆட்டம் ஆட ஆரம்பித்தனர்..
"ஹேய்.. என்ன பண்றேள்.. ??" என ஷிவாக்ஷி கேட்டாள்..
"இல்ல.. இன்க்கி பிங்கி..போடலாம்னு.." என தியா இழுக்கவும்..
"என்ன பண்றேள்.. ஹான்.. நாமேல்லாம்.. பெரியவா.. இப்படி அசமஞ்சம் மாதிரி நடந்துண்டு.. ??" என அதட்டினாள்.. அவர்கள் நால்வரும் கீழே குனிந்து.. அவளின் திட்டுகளை பெற்றனர்..
ஷிவாக்ஷி.. "சாட் புட் த்ரீச்.. போடுங்க.." என கையை வைத்தாள்..
ஷிவாக்ஷியின் செய்கையில் அங்கிருந்த கொத்தமல்லி வெடித்து சிரித்தான்.. அவன் மட்டுமல்லாது.. தொலைவில் இருந்த.. மொத்த குடும்பமும்.. கொல்லேன சிரித்தது.. ஷிவாக்ஷி கண்களை சுருக்கி பார்வை பார்த்து.. "உங்கொய்யா கிட்ட சொல்லிடுவேன்.." என்றதும்.. அமைதியானான்.. கொத்தமல்லி..
கொத்தமல்லி, ஷிவாக்ஷி, ருத்ரா, ஆரா, தியா, மற்றும் ரித்துல் சாட் பூட் த்ரீச் போட்டதில் ருத்ரா தோற்க.. ருத்ரா சுவற்றில் சாய்ந்து எண்ண ஆரம்பித்தான்..
சிரிப்பு சத்தமே எங்கும் எதிரொளித்தது.. இவர்களின் ஆட்டத்தை பால்கனியில் இருந்து ஷ்ரித்திக்கின் அம்மா இந்திரகவியும், அப்பா ராஜ தேவனும் புன்னகையோடு பார்த்துக் கொண்டிருந்தனர்..
ருத்ரா.. சுவற்றில் திரும்பி ஒன்றிலிருந்து ஐம்பது வரை எண்ணிக் கொண்டு இருந்தான்..
அப்போது சரியாக.. காரிலிருந்து இறங்கினான்.. ஒரு ஆடவன்.. புன்னகை சத்தமே அவன் காதில் நிறைத்தது..
அவன்.. ஷிவாக்ஷி ஓடிவருவதை.. கண்டு அவன் இன்ப அதிர்ச்சியடைந்தான்.. ஷிவாக்ஷியை கண்டதும் நேற்று நடு பிரதான சாலையில் உருண்டு பிரண்டது நினைவு வந்தது.. தன்னுடைய தேவதையை இத்துனை விரைவாக தன் கண்முன் வருவதில் மிகுந்த ஆனந்தம்.. அவனுக்கு.. அவனின் பார்வை.. வெறி நிறைந்ததாக இருந்தது.. அவள் தனக்கானவள்.. தனக்கு மட்டுமே உரியவள்.. என்றார்.. போல்.. அது நிச்சயமாக காதல் பார்வை அல்ல.. அது தனக்கான அடிமை என்றார் போல.. அதில் நிறைந்தது முழுக்க ஆபாசமான காம பார்வை தான்.. அந்த பார்வை.. அவளின் அங்கங்களை உரசிச் சென்றது..
இதையேதும் அறியாது.. விளையாடுவதிலே குறியாய் இருந்தாள்..
ஓடிவந்து ஒளிவதற்கு இடத்தை தேடி கொண்டிருந்தவளின் பாதையில் பூந்தொட்டியை இருந்ததை கவனிக்க தவறினாள்.. அவள்..
ஷிவாக்ஷி நிலை தடுமாறி.. கீழே விழப் போனவளை வந்து ஒரு வித வெறியோடு அணைத்துக் கொண்டான்..
ஷிவாக்ஷி.. யார் தன்னை அணைத்தது.. என பார்க்க விழைந்தவளை.. பார்க்கக் கூட விடாது.. இழுத்து.. இறுக்கிக் கொண்டான்.. அவளின் அங்கங்களை தழுவியது.. அவனின் கரம்.. கண நேரத்தில் நடந்தது.. இவையெல்லாம்..
யாரோ ஒரு ஆடவன் தன்னை அணைத்திருப்பது அவளுக்குள்.. புழு உருவதை போல அருவருப்பாக உணர்ந்தாள்.. அந்த முரட்டுத்தனமான பிடியில் சிக்குண்டாள்.. அந்த அணைப்பில் இருந்து விடுபட முயற்சித்தாள்..
குடும்பத்தினர்.. குழந்தைகளின் சேட்டையை ரசித்திருந்தமையால்.. கவனிக்க தவனினர்..
ஷிவாக்ஷிக்கு.. கோபமும் பதற்றமும்.. ஒருங்கே இணைந்தது.. அவளுக்குள்..
"ஹே.. விடுங்கோ.. விடுங்கோன்னு.. சொல்றேனோன்லியோ.. ??" என தன் மொத்த பலத்தை பயன்படுத்தி தன்னை விடுவித்து கொண்டு.. அவனை கிட்டத்தட்ட தள்ளிவிட்டாள்..
அவன் எழுந்து ஷிவாக்ஷியை திட்ட நினைக்க.. ஆனால்.. ஷிவாக்ஷிக்கு கோப ஜூவாலை.. பற்றி எரிந்தது.. அவனைக் கண்டு..
அவன் பேச ஆரம்பிப்பதற்குள்.. ஷிவாக்ஷி அவனின் கண்ணத்தில் தன் கரத்தை பளாரென பதித்தாள்.. ஷிவாக்ஷி அரைந்ததில்.. அவனின் கண்ணத்தில் ஐந்து விரல்களும் பதிந்து சிவந்து இருந்தது..
ஷிவாக்ஷிக்கு.. அடித்ததில்.. அவளின் கையே.. வலியில் சிவந்து போயிருந்தது..
ஷிவாக்ஷியின் இந்த தாக்குதலை சற்றும் எதிர்பார்க்கவில்லை.. ஏனெனில் இயல்பிலேயே சாந்த குணம் அவள்.. அதிர்ந்து கூட பேசமாட்டாள்.. என்றே அவன் கேட்டறிந்தது..
ஷிவாக்ஷி அவனை ஒற்றை விரலை நீட்டி அவனை ஆட்டி காண்பித்து எச்சரித்தாள்..
அப்போது தான்.. ஷிவாக்ஷியின் கழுத்தில் இருந்த மஞ்சள் கயிற்றையும் நெற்றியில் குங்குமமும் அப்போது தான் பார்த்தான்.. பார்த்தவன்.. அதிர்ச்சியின் உச்சிக்கே போனான்.. அவனால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை..
ஷிவாக்ஷி அந்த ஆடவனை அடிக்கும் போதே வந்து விட்டனர்.. ஷ்ரித்திக்கும் விக்ரமும்..
"ஷிவு.. என்னதிது.. ?? எதுக்கு வித்யுத்த அடிச்ச.. ??" என்ற படியே ஷிவாக்ஷியின் அருகே வந்து நின்றான்.. விக்ரம்..
ஷ்ரித்திக் எந்தவொரு பதற்றமும் இல்லாமல் நிதானமாக வந்தான்..
ஷிவாக்ஷி.. வித்யுத்தையே பார்வையால் அனலை கக்கிக் கொண்டிருந்தாள்.. ஆதலால்.. விக்ரமின் கேள்வி அவளுள் எங்கோ ஓர் குகையில் இருந்து பேசுவதை போல் இருந்தது..
ஷ்ரித்திக் அமைதியாக இருப்பதை கண்டு.. 'நிச்சயமாக.. ஷிவாக்ஷியின் பக்கம் தான் நிற்பான்..' என்றறிந்த விக்ரம்.. வித்யுத்தை சமாதானம் செய்து அழைத்துச் சென்றான்..
வித்யுத்.. ஷிவாக்ஷியை வெறி பிடித்த பார்வையை வீசிச் சென்றான்.. இதை.. ஷ்ரித்திக்கும் கவனித்து தான் இருந்தான்.. அவனின் பார்வையின் அர்த்தம் புரியாது நோக்கினான்..
ஷ்ரித்திக்.. ஷிவாக்ஷியின் அருகே நின்றுக் கொண்டிருந்தான்.. ஷிவாக்ஷி திரும்பி செல்ல நினைத்து.. திரும்ப ஷ்ரித்திக்கின் மீது.. மிதமாக மோதி நின்றாள்..
ஷிவாக்ஷிக்கு அப்போது தான் ஷ்ரித்திக் வந்தது தெரிந்தது..
"யார் அவா.. ??" என ஷிவாக்ஷி அந்த கோபத்தின் சூடு குறையாமல் கேள்வி எழுப்பினாள்..
அவன் எந்தவொரு உணர்வின்றி..
"என் முறைப் பையன்.." என கேலியாக பதிலளித்தான்..
ஷ்ரித்திக்.. ஷிவாக்ஷி திரும்பி ஷ்ரித்திக்கை முறைக்கவும்.. புன்னகைத்து கொண்டான்..
"நிஜமாவே.. முறைப் பையன் தான்.. அம்மாவோட தம்பி அதாவது.. என் மாமாவோட பையன்.. சின்ன வயசுல இருந்தே ஃப்ரண்ட்.. பட் அவ்ளோ க்ளோஸ் இல்ல.." என ஷ்ரித்திக் விளிக்கி கூறியதும் அமைதியானாள்..
"என்னாச்சு.. ??" என்ற ஒற்றை வார்த்தையை உதிர்த்தான்..
"குழந்தைங்க கூட.. விளையாடறச்ச... விழ போனேன்னா.. ?? திடுதிப்புன்னு வந்து கட்டி பிடிச்சிண்டா.. ?? அதுவும் இறுக்கி பிடிச்சிண்டா.. நேக்கு கோவம் வந்துடுத்து.. அதான் அடிச்சிண்டேன்.." என ஷிவாக்ஷி வலிக்கும் தன் கையை உதறினாள்..
ஷ்ரித்திக் வலிக்கும் அவளின் கையை பற்றி.. தேய்த்து கொடுத்தான்..
"பரவால்ல.. விடு.. அதெல்லாம் ஒன்னும் இல்லை.. அவன் கீழ விழாம இருக்கறதுக்கு.. பிடிச்சிருப்பான்.. அதுக்குப் போ.." என ஷ்ரித்திக் முடிக்கும் முன்னே.. குறுக்கிட்டாள்..
"இல்ல.. அப்படிச் சொல்லாதீங்கோ.. ஒரு ஆம்படையான்.. ஒரு பொம்படையான எப்படி பாக்கறான்னு.. அவா பார்வையிலே தெரியும்.. இவா.. பார்வையே.. சரியில்ல.. நேக்கு இவாள சுத்தமா பிடிக்கல.. இவா.. என்னைய பிடிக்கறச்சே.. உடம்பெல்லாம்.. புழு ஊர்ற மாதிரி இருக்கறது.." என முகத்தில் ஒட்டுமொத்த அருவெருப்பையும் கொண்டு வந்து கூறினாள்..
கோபத்தில் கண்களில் நீர் கோர்த்தது.. மேலும் பேச போனவளை இழுத்து அணைத்துக் கொண்டான்..
ஷ்ரித்திக்..
அவளின் உணர்வுகளை தன்னுள் உணர்ந்தான்.. அவன்..
அவளின் கண்ணீரை துடைத்து விட்டான்.. ஷ்ரித்திக்..
ஆறுதலை தேடியது.. ஷிவாக்ஷியின் மனம்.. ஆதலால்..
ஷிவாக்ஷிக்கும் அந்த அணைப்பு வேண்டியதாய் இருந்தது.. இருவரும் தங்களின் உலகில்.. மெய்யை மறந்து.. உயிரால் இணைந்து அணைந்திருந்தனர்...
இதை தொலைவில் பார்த்து எரிந்தது.. இரு ஜோடி கண்கள்..
------------------
To be continued... 😇
(Hiii.. dudz... Enakku udambu seri illama poiduchu.. so ennala ud kuduka mudila.. kandippa enmela sema Ganda irupinga.. I'm really sorry.. pa... Vazhakam Pola unga support kandippa venum.. kandippa votes and comments marandhuradhinga.. luv u guys.. ♥️😇)
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro