Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

அத்தியாயம் - 18 😇

உன் விழி
பொழியும் மொழிகளை...
மனக்கூட்டில் கோர்க்கிறேன்..👁️

மணமாலையாய்.. 🌼

எனையே அறியாது.. உந்தன் கழுத்தை சார்ந்தது.. விதியின் விளையாட்டு.. 🤔

ஷ்ரித்திக் பால்கனியில் அமர்ந்து மடிக்கணினியில் ஏதோ.. வேலையில் ஈடுபட்டிருந்தான்.. 😊

ஷிவாக்ஷி யோசனையோடே அவர்களின் அறை கதவை திறந்து உள்ளே நுழைந்தாள்..🤔 ஷ்ரித்திக்கின் விழிகள் மடிகணினியில் இருந்தாலும்.. கவனம் என்னவோ.. தன் கனவு தேவதையிடமே.. 😕 அவளின் யோசனை தேங்கியிருந்த முகம்.. ஷ்ரித்திக்கின் நெற்றியை சுருக்கிட்டது..

இருப்பினும் ஷ்ரித்திக் ஏதும் கேட்கவில்லை.. ஷிவாக்ஷி ஷ்ரித்திக்கின் அருகே வந்தாள்.. ஷ்ரித்திக் வேலையில் இருப்பதை கண்டு.. தொந்தரவு செய்ய வேண்டாம் என நினைத்து தன் கைகளில் இருந்த பால் குவளையை அவன் முன் வைத்து விட்டு அகன்றாள்..😇

ஷ்ரித்திக் ஷிவாக்ஷியின் ஒவ்வொரு செயலையும் கவனித்து தான் வந்தான்.. 🧐

ஷிவாக்ஷி மெத்தை போன்ற விரிப்பை தரையில் விரித்து படுத்துறங்க ஆயத்தமாவதை கண்டவன்.. பொறுமையிழந்து.. ஷிவாக்ஷியை அழைத்தான்.. ஷ்ரித்திக்..🙂

"ஷிவு.." என்க.. பதிலுக்கு ஷிவாக்ஷி ஷ்ரித்திக்கை ஏரிட்டாள்..🙂

"கொஞ்சம்.. பேசலாமா.. ??" என்றவன்.. பால்கனியில் சோஃபாவில் மடிக்கணினியை மடித்துக் கொண்டே கேட்க..☺️ ஷிவாக்ஷியும்.. இதழ்களில் சிறு புன்சிரிப்புடன் மண்டையை உருட்டினாள்..😀

ஷ்ரித்திக்கும்.. பால்கனியில் அமர்ந்த படியே ஷிவாக்ஷி.. வாவென தனக்கு எதிரில் இருந்த சோஃபாவை கைகாட்டினான்..😇 ஷிவாக்ஷியும் தன்னுடைய முயல் குட்டிகளுடன் வந்தமர்ந்தாள்..🐰🐰


ஷ்ரித்திக் தாடையில் தன்னிரு கைகளையும் குவித்து ஷிவாக்ஷியையே விழியகலாது பார்த்தான்..😍

அதை கண்டவளோ..🙄 நெளிந்து கொண்டே தான் அணிந்திருந்த ஆடையை சரி செய்யவும்.. ஷிவாக்ஷியின் செயல்களில் சிரித்துக் கொண்டான்.. ஷ்ரித்திக்..

"ஏன்.. சிரிக்கறேள்.. ??" என ஷிவாக்ஷி கேள்வியாக நோக்கினாள்..😕

"சும்மா பாத்ததுக்கே.. இப்படி கூச்சப்படறியே.. அதான்.. ?? சரி.. என்ன மேடம் ஏதோ தீவிர யோசனையில இருக்கீங்க.. ??" என ஷ்ரித்திக் சாதாரணமாக கண்களை பார்த்து கேட்டான்..😉

ஷிவாக்ஷி கண்களை விரித்து காண்பித்தாள்.. "நா.. யோசனையில இருக்கறது நோக்கு எப்படி தெரியும்.. ??" என வினவ..😲

"பெரிய கண்டுபிடிப்பு.. இந்த முகம் இருக்கே.. இது பளிங்கு முகம்.. நீ உன் மனசுல நினைக்கறத.. அப்படியே உன் முகம் காமிக்குதே.." என ஷ்ரித்திக்கின் விரல்கள்.. ஷிவாக்ஷியின் முகத்தை சுட்டி காட்டி வட்டமிட்டு மிதந்தது.. ஷிவாக்ஷியின் கண்களும்.. அவன் விரல்களோடே பயனித்தது.. அதை கண்டவன் புன்முறுவலே வந்தது..😍

"சரி.. என்ன யோசனை.. ??" என ஷ்ரித்திக் மீண்டும் வினவினான்..🤔

"இல்ல..." என ஷிவாக்ஷி இழுக்க.. 🙄

அவளை பேச விடாது.. இடை புகுந்து.. "இல்லையா.. ?? ஓகே லிவ் இட்.." என ஷ்ரித்திக் திரும்பிக் கொள்ள..🙃😉

"அச்சோ.. அது இல்ல.." என ஷிவாக்ஷி சிணுங்க..😝

அவளின் சிணுங்களை ரசித்துக் கொண்டே.. "அதுவும் இல்லையா.. ??" என ஷ்ரித்திக் மீண்டும் வம்பிளுக்க..😜

"அச்சோ.. என்ன சித்த பேச விடுங்கோ.." ஷிவாக்ஷி என்கவும்.. 😌

ஷ்ரித்திக்கும் "சரி.. சரி .. சொல்லு.. என்ன யோசனை.. ??" என அவன் விளித்தான்..☺️

"மாயா.. அவங்கள பத்தி உங்க அபிப்பிராயம்.. ??" என ஷிவாக்ஷி கேள்வியை ஷ்ரித்திக்கின் முன் வைத்தாள்..🙄🤔

புருவ முடிச்சுடன் ஷ்ரித்திக்.. "எதுக்கு கேக்கற..‌ ??" என ஷ்ரித்திக் கேள்வி எழுப்பினான்..🧐🤨

"சும்மா.. சொல்லுங்கோ.." என கேட்டாள்.. அவள்..🙂

ஷிவாக்ஷியையே உற்று நோக்கியவன்...😌
"ம்ம்ம்ம்ம்ம்.. என்ன சொல்றது.. ?? வீட்ல எல்லாரும் அவள நல்லவனு சொல்றாங்க.. பட் நா பாக்கும் போதெல்லாம்.. அவ யார் கூடயாவது சண்டை போட்டுட்டு இருப்பா.. தலகணம் கோவம் எல்லாம் அதிகம்.. தான்.. மாமாக்கு கடைசி பொண்ணு இல்லையா.. கொஞ்சம் செல்லம் கொடுத்து வளத்திட்டாங்க.. அவள தப்பு சொல்ல முடியாது.. மாயாவ அப்படி வளத்திட்டாங்க.." என
ஷ்ரித்திக் கூறவும்.. ☺️

அதை பற்றி யோசித்து கொண்டே.. வானத்தை பார்த்தாள்.. முயல் குட்டிகளுக்கு கேரட்🐰🐰🥕🥕🥦 கீரைகளை கொடுத்துக் கொண்டே வானத்தின் மிணுமிணுப்பை ரசித்தாள்..🌌

நிலவொளியின் வெளிச்சம் ஷிவாக்ஷியின் மூக்குத்தி கல்லில் பட்டு தெறித்து ஜொலித்தது.. அவ்வழகில் தன்னை மெய்மறந்திருந்தான்..🌕

பெண்கள் மூக்குத்தியில் இத்துனை அழகாக தெரிவார்களா.. ?? என அப்போது தான் அறிந்தான்..

ஷ்ரித்திக்.. தன் இல்லத்து பெண்கள் யாரும் மூக்குத்தி அணிவதில்லை.. அவர்கள் யாருரிடமும் கண்டிராத மூக்குத்தியின் அழகை அவளிடமே காண்கிறான்.. 🤩🤩

ஷ்ரித்திக்கின் பக்கம் திரும்பாமலே..
தன்னை உற்று நோக்குவதை உணர்ந்தவள்.. ஷ்ரித்திக்கை நோக்கி திரும்பினாள்..🤔🧐 அவளின் புறமிருந்து.. பார்வையை விலக்கினான்..
😜

ஷ்ரித்திக்.. "ஷிவு.. உனக்கு பெயிண்டிங் தெரியுமா.. ??" என ஷிவாக்ஷியிடம் கேட்க..🙄

ஷிவாக்ஷி வாயெல்லாம் பல்லாக இளித்தாள்..😃😄😁 தனக்கு பிடித்தமானதை கேட்டதால்.. இப்படி இளிக்கிறாள்.. "ஹையோ.. என்ன இப்படி கேக்கறேள்.. ?? நேக்கு பெயிண்டிங்னா.. இவ்ளோ இஷ்டம்.." என கைகளை முடிந்தளவு விரித்து காண்பித்தாள்..🥰😍🤩

"அப்பறம்.. ஏன் இதெல்லாம் என்கிட்ட சொல்லவே இல்ல.. ??" என ஷ்ரித்திக் நன்றாக சாய்ந்து கொண்டு கேட்டான்.. 😊

ஒரு முயல் குட்டி அவளின் கழுத்திலும் மற்றொன்று மடியிலும் அமர்ந்து கொள்ள..
"ச்சே.. ச்சே.. அப்படி இல்ல.. அத சொல்றதுக்கான.. சுச்வேஷன்.. அமையலையே.. இப்ப சொல்றேன்.. நா B.A., (Arts and Paintings) படிச்சிருக்கேன்.. உங்க தங்கச்சி சொன்ன மாதிரி நிறைய வொர்ல்ட் ரெக்கார்ட்ஸ் எல்லாம் பண்ணிருக்கேன்.. இருங்கோ.." என ஷிவாக்ஷி பேசிக் கொண்டே எழுந்து தன்னுடைய பெட்டியை எடுத்து வந்தாள்..😁

மண்டியிட்டு அமர்ந்து பெட்டியை திறந்து உள்ளே சுருட்டி வைத்திருந்த காகிதங்களை எடுத்து.. ஷ்ரித்திக்கின் முன் விரித்தாள்..‌ "இதெல்லாம் நா வரைஞ்சது.. எப்படி இருக்குன்னு சொல்லுங்கோ.. ??" என அனைத்தையும் ஒன்றன் பின் ஒன்றாக விரித்து காண்பித்தாள்..🤩

அந்த முயல் குட்டிகளோ.. அவளை விட அதிகமாக சேட்டையில் திரிந்தது.. ஷிவாக்ஷியின் பெட்டியில் தொபக்கென்று எட்டிப் பார்த்து விழுந்தது.. அவர்களை பிடித்து கொண்டு.. ஓவியங்களை காண்பித்தாள்.‌.

ஷ்ரித்திக்கோ.. அனைத்து ஓவியங்களையும் வியப்புடன் கண்டு கொண்டிருந்தான்..😍🤩 அனைத்து ஓவியங்களிலும் அத்துனை நுட்பமும் நுணுககமும்.. தத்ரூபமாக வரைந்திருந்தது..

கிருஷ்ண பகவானையும்.. சிவ பெருமானையும் இருவரையும் இணைத்து நவீனமாகவும் அதே சமயம் கண்ணை கவரும் விதமாக வரைந்திருக்கும் அவளின் கற்பனையில் வீழ்ந்தான்..🥴

பிஞ்சு குழந்தைகள்.. இயற்கையின் அழகு.. என அனைத்தையும்.. தன் வர்ண ஜாலங்களில் வியக்க வைத்திருக்கிறாள்..
எந்த உணர்வும் காண்பிக்காது.. உள்ளுக்குள் ஓவியத்தை ரசித்து வந்தான்..😍😍

ஷ்ரித்திக்கோ எந்தவொரு சலனமுமின்றி ஓவியத்தை கண்ட அவனை.. மனதிற்குள் திட்டினாள்.. 'இந்த ஆத்துல சொல்றச்ச கூட நம்பல.. உண்மையாலுமே இவா முசுடு தான்..' என அவனை வசை பாடிக் கொண்டிருந்தாள்..😏😑 தன் மனதிருப்திக்காக தான் ஓவியத்தை வரைவாள்..🙂 எப்போதும் மற்றவர்களின் புகழ் சொற்களை எதிர் பார்த்ததில்லை.. ஏன் அதை பற்றி யோசித்தது கூட இல்லை.. ஏனோ.. ஷ்ரித்திக் தன் ஓவியத்தை பற்றி ஏதும் கூறாதிருப்பது.. உள்ளுக்குள் உறுத்தியது.. பாவையவளுக்கு..

ஷ்ரித்திக் ஷிவாக்ஷியின் முகபாவனைகளை கவனித்து தான் கொண்டிருந்தான்..😝 தன்னை அவள் வசை பாடிக் கொண்டிருப்பதையும் அறிந்து தான் இருந்தான்..😉 ஓவியத்தை பார்த்து விட்டு..‌ அமைதியாக அவளிடம் திருப்பி கொடுத்து விடவே..
ஷிவாக்ஷியின் முகம் சுருங்கி விட்டது..😒 முடிவிலாவது ஏதேனும் கூறுவான் என அவனின் முகத்தையே பார்த்தவளுக்கு ஏமாற்றமே மிஞ்சியது..😔😣 கருநில விழிகளும் கரிக்க தொடங்கியது.. அதை மறைத்துக் கொண்டே..🥺 ஓவியத்தை வாங்கி பெட்டியில் வைக்க போனாள்.. ஷிவாக்ஷி

அவளின் கோபத்தை தூண்டி விளையாட தான் நினைத்தான்..😉😕😟 ஆனால்.. ஷிவாக்ஷியின் முகம் வாடுவதை கண்டு பொறுக்காது..😟
"ஷிவு.. பெயிண்டிங்ஸ் எல்லாம்.. அமேசிங்.. ரொம்ப நல்லா இருக்கு.. உன் கற்பனை எல்லாம்.. ம்ம்ம்ம்ம்ம்.." என ஷ்ரித்திக்😉😘 கட்டை விரலை உயர்த்தி கூறியவுடன் தான்.. ஷிவாக்ஷி முகம் புன்னகையால் நிறைந்தது..😃😀😄😁

"நிஜமா.. ??" என ஷிவாக்ஷி வினவ..🥰🥰

"நிஜமா தான்.. உன் பெயிண்டிங்ஸ பாத்துட்டு பிடிக்கலன்னு சொல்ல முடியுமா.. ?? ம்ம்ம்.." என ஷிவாக்ஷிக்கு பதில்
மொழிந்தான்.. ஷ்ரித்திக்..😘

"ஆமா உனக்கு நல்ல திறமை இருக்கு.. அதுக்கு பெரிய பெரிய ஜாப் எல்லாம் கிடைக்கும்.‌. ஆனா.. அத விட்டுட்டு.. டீச்சர் ஜாப் போறேன்னு மார்னிங் சொன்ன ??" என ஷ்ரித்திக் கேள்வியாக அவளை நோக்கினான்..🤔🧐

"அதுக்கெல்லாம் ட்ரைப் பண்ணேன்.. கிடைக்கலையே.. ம்ப்ச்.. என்ன பண்றது.. ?? ஆனாலும் டீச்சர் ஜாப் நன்னா தான் இருக்கும்.. பசங்க.. போர்ட்.. போய் பாத்துடலாமே.." என ஷிவாக்ஷி குதூகலமாக மொழிவதை சிரிப்புடன் பார்த்தான்.. ஷ்ரித்திக்..😃😃

ஷிவாக்ஷி ஓவியங்களை சுருட்டி பெட்டியில் வைப்பதை பார்த்து கொண்டே..
"ஆமா.. பெயிண்டிங்ஸ் எல்லாம் ஏன் சுருட்டி வைச்சிருக்க.. ??" என ஷ்ரித்திக் கேட்கவும்..🙄

"அதுவா.. தாத்தாக்கு நா இந்த படிப்பு படிச்சது பிடிக்கல.. ஒரு MCA MBA படிச்சிருந்தா.. பரவால்ல.. இத போய் படிச்சுண்டு.. பெயிண்ட் அடிக்க போறியான்னு.. திட்டுவா.. இதெல்லாம் வரைஞ்சு சுவத்துல தான் மாட்டிருந்தேன்.. அவா தான் கோபத்தில கண்ணு முன்னாடி வைக்காதன்னு சொல்லிட்டா.. அதான் சுருட்டி வைச்சிட்டேன்.." என ஷ்ரித்திக்கிடம் ஷிவாக்ஷி கூறினாள்..😛

"இது எவ்ளோ.. அழகா இருக்கு.. இதப் போய் சுருட்டி வைக்கற.. குடு நான் இத ப்ரேம் போட்டுட்டு இந்த ரூம்ல மாட்டி வைச்சிடறேன்.." என ஷ்ரித்திக் அவளின் ஓவியங்களுக்காக கையை நீட்டியபடி நின்றான்..🙂

யோசனையாக ஷ்ரித்திக்கை பார்த்துக் கொண்டே அத்தனை ஓவியங்களையும் தந்தாள்.. 🙄🤔

"ஒன்னு கேக்கவா.. ??" என ஷிவாக்ஷி ஷ்ரித்திக்கை பார்த்தபடி கேட்டாள்..🙄 என்னவென்பதை போல ஷ்ரித்திக் ஷிவாக்ஷியை கண்டான்..🧐

"ஏன்.. உங்கள பாத்து இந்த ஆத்துல எல்லாம் பயப்படறா... ?? என்னை தவிர.. என் கூட நன்னா தான் பழகறேள்.. அப்பறம் ஏன் உங்க ரூம்க்கு.. யாரும் வர மாட்டறா ஏன் அப்படி.. ?? " எனற்வள்.. தாடையில் தட்டி யோசனையில் இறங்கினாள்..🙄🤔

"ஹ்ம்ம்ம்ம்.. அது என் ரூம்ல யாரையும் அலௌவ் பண்ணதில்ல.. எனக்கு ப்ரைவேசி வேணும்.. ப்ளஸ் பிஸ்னஸ் விஷயம்.. நிறைய சீக்ரெட்ஸ் இதுக்கெல்லாம்.. ஐ நீட் ப்ரைவேசி ??" என ஷ்ரித்திக் ஷிவாக்ஷியிடம் மொழிந்தான்...😎

"ஹோ... அப்படியா.. நாவேனா.. வெளியே படுத்துக்கவா.. ??" என ஷிவாக்ஷி மொழிந்தாள்..😮

"ஹே.. அதெல்லாம் வேண்டா.. நீ இங்கேயே இரு.. உனக்கு என்ன பாத்து பயமே இல்லயா.. ?? கொஞ்சம் கூடவா.. ??" என ஷ்ரித்திக் மொழிந்தான்..😎

"இல்லையே.. நா சட்னு பயப்படறவா தான்.. ஆனா உங்கள பாத்து நேக்கு பயம் வரலையே.." என ஷிவாக்ஷி தாடையில் கைவைத்து கதைக்கவும்.. 🤫🤭

ஷ்ரித்திக் சிரித்துக் கொண்டான்.. ஷிவாக்ஷியும் அவளின் புன்னகையில் இணைந்தாள்..😄

ஷ்ரித்திக் ஷிவாக்ஷியின் புன்னகையில் உருவாகும் கண்ணக்குழியில் தன்னை புதைத்து கொண்டான்..😍

ஷ்ரித்திக் தன்னை மீட்டுக் கொண்டவன்.. "சரி படுக்கலாம்ல.. ??" என்க.. ஷிவாக்ஷியும் தலையை உருட்டினாள்..😴

ஷ்ரித்திக் போர்வை எடுத்துக் கொண்டு சோஃபாவிடம் நகர்வதை கண்டு.. "இங்க பாருங்கோ.. ?? ப்ளீஸ்.‌. பெட்ல படுங்கோ.. நேக்கு கஷ்டமா இருக்கு.." என ஷிவாக்ஷி கூறவும்..😞

"ஹே.. நீ ஃபீல் பண்ற‌ அளவுக்கு ஒன்னும் ஆகல.. நீ கீழ படுக்கறது பாத்து எனக்கு கஷ்டமா இருக்கு.. நா ஏதாவது சொன்னேனா.. ?! அது மட்டுமல்லாம எனக்கு இது சௌகரியமா தான் இருக்கு.‌.. நீ சும்மா படும்மா.. குட் நைட்.." என ஷ்ரித்திக் சாதாரணமாக கூறி படுத்துக் கொண்டான்..😴

ஷிவாக்ஷிக்கு மனதில் உறுத்தியது..😏😞 தன்னுடைய அறையில் பஞ்சு மெத்தை இருந்தும் சோஃபாவில் படுத்து கொள்வதை கண்டு.. இவ்வளவும் தன்னால் தான் என வருத்தம் கொண்டாள்..😞😓

'இதுக்கு ஏதாவது பண்ணனும்.. என்ன பண்ணலாம்.. ??' என யோசனையில் ஷிவாக்ஷி படுக்கையில் உருண்டு கொண்டு இருந்தாள்..🤔🤔 அவளோடு இரு முயல் குட்டிகளையும் சுற்றிக் கொண்டு.. அவளுடைய தலை மேட்டில் வந்து.. முயல் குட்டிகள் தட்டியதும் தான் முயல் குட்டிகளையும் படுத்தி கொண்டிருக்கிறோம்.. என புரிந்து.. படுத்து உறங்க முயற்சிக்க.. எப்போது உறங்கினாள் என்றறியாது உறங்கிக் போனாள்..😴😴 அவளையே சுற்றி கொண்டிருந்த முயல் குட்டிகளும் அவளருகில் தஞ்சமடைந்தது.‌.🐰🐰😴😴

ஷ்ரித்திக்கோ.. கண்களை மூடினாலும்..ஷிவாக்ஷியின் கண்களும்.. புன்னகைக்கும் கண்ணக்குழி முன் வந்து அலை கழிக்கவும்.. உறக்கமின்றி தவித்தான்.. சோஃபாவில் படுத்திருந்ததால் உருள முடியாது.. எழுந்தமர்ந்தான்‌...🤕🥴

அவனின் கண்களுக்கு நிர்மலமாய் முயல் குட்டிகளோடு உறங்கும் ஷிவாக்ஷி கண்களில் தெரிந்தாள்.. நிலவொளி வெளிச்சம் பால்கனியை தாண்டி அவளிடம் வந்தடைய.. பால் நிற சருமம் இன்னும் மினுமினுத்தது..✨

அவளருகே வந்தமர்ந்து.. உறங்கும் அவளையே விழியகலாது ரசித்திருந்தான்..😍 கற்றை கூந்தல் முகத்தில் ஆட.. அதை காதின் ஓரம் ஒதுக்கினான்.. "என்ன ஏன் டி.. தூங்க விடாம பண்ற.. ?? எப்படி இருந்தவன இப்படி ஆக்கிட்டீயே.. ??" என்ற படியே.. ஷிவாக்ஷியின் தாடையை பிடித்து கொஞ்சவும்.. தூக்கத்திலிருந்தவள்.. நெளிந்தாள்.. ஷிவாக்ஷி.. 😴🤫

அதில் ஷ்ரித்திக் சற்று சுதாரித்து ஷிவாக்ஷிக்கு போர்வை போர்த்தி விட்டு.. சிறிது தள்ளி அமர்ந்து அவளையே ரசித்து வந்தான்.. எவ்வளவு நேரம் அப்படியே அமர்ந்திருந்தானோ.. அவளை பார்த்துக் கொண்டே அப்படியே தரையிலே அவளருகே உறங்கிப் போனான்..😴😴

கிழக்கு மேகங்கள்..‌ பருவ மங்கை போலே மஞ்சளை அள்ளி பூசி கொண்டு..
உதயனை சீண்டிக் கொண்டிருக்கும்.. உதயன் உதயமாகி கொண்டிருந்த.. இனிய காலை வேளை.. 🌄

முயல் குட்டி ஷ்ரித்திக்கின் முகத்தை வந்து முகர்ந்து நாவினால் ஷ்ரித்திக்கை எழுப்பியது..🐰🐰 ஷ்ரித்திக்கும் உறக்கத்தை விடுத்து கண்களை திறவ.. கலைந்த கூந்தலோடு.. ஷிவாக்ஷியோ உறக்கத்தை விடாது அணைத்திருந்தாள்..👩‍🦰

அவளை கண்டு புன்னகைத்து.. எழுந்து காலை கடன்களை முடித்து வரவும்.. ஷிவாக்ஷி படுக்கை எடுத்து வைக்கவும் சரியாய் இருந்தது..🙂

டி சட்டையை அணிந்து வெளியே வந்து..
"குட் மார்னிங் மேடம்.." என ஷ்ரித்திக் தன் முகத்தை துவட்டி கொண்டே கூறினான்..🌄

கலைந்த கூந்தலோடு.. சுடிதார் போன்றொரு இரவு ஆடையில் இருந்தாள்..
"ஹ்ம்ம்ம்ம்.. மார்னிங் மார்னிங்.." என்றவள் மொழிந்தாலும்.. கவனம் என்னவோ கூந்தலிலே.‌. தன் நீண்ட கரிய கூந்தலை அள்ளி முடிய முயற்சிக்க.. மீண்டும் மீண்டும் சரிந்து விழவே.. எரிச்சலடைந்து.. 'பே..' என விட்டுவிட்டாள்..🥴

ஷ்ரித்திக்.. சப்பாத்தை அணிந்து கொண்டே.. (அதான் பா.. கால்ல போடற ஷூ..) ஷிவாக்ஷியை கண்டு இருந்தவனுக்கு சிரிப்பு வந்தது..
"ஹாஹாஹா.. ஹேய்.. என்ன பண்ற.. நீ.. ??" என்றவன் புன்னகைத்து கொண்டே கேட்டான்..🤭

கூந்தலை அந்நியன் விக்ரம் போல் வைத்து கொண்டு..
"ஹ்ம்ம்ம்ம்.. பார்த்தா.. தெரிலயா.. நோக்கு.. ?? முடிய அள்ளி முடிஞ்சுண்டு இருக்கேன்.. முடியல விட்டுட்டேன்.." என ஷிவாக்ஷி தன் கூந்தலை மீண்டும் அள்ளி முடிய முயற்சித்தாள்..🤕🥴

"ஹ்ம்ம்.. இவ்ளோ.. நீளமா.. கட்டையா முடி வைச்சிருந்தா.. அப்படி தான் இருக்கும்.. குடு நா வேணா க்ளீப்ல போட்டு விடறேன்.." என ஷ்ரித்திக் அவளருகே வந்து கேட்டான்..😛

தன்னிரு கைகளை தலையில் இருக்க..
"பொன்னு என்னாலயே.. போட முடியல.. நீங்க போடுவேளா.. ??" என ஷ்ரித்திக்கை ஏறிட்டு பார்த்துக் கொண்டே கேட்டாள்..‌ அவள்🤭😉

"குடு.. நா பண்றேனா.. இல்லையான்னு பாரு.." என ஷ்ரித்திக் கூறவும்.. ஷிவாக்ஷியும் தன் கூந்தலை ஏந்தியவாறு அவனருகே வந்து நின்றாள்.. 🙂

ஷ்ரித்திக் ஷிவாக்ஷியின் கூந்தலை அள்ளினான்.‌. கூந்தலில் இருந்து விபுதியும், சந்தனமும், சீயக்காய் என அனைத்தும் கலந்த வித்தியாசமான நறுமணம் வந்தது.. இதுவரை சுவாசிக்காத அந்நறுமணம்.. ஷ்ரித்திக்கின் மனதை மயக்கியது.. ஐயர் ஐயங்கார் இல்லங்களிலும்.. அக்ரஹாரத்திலும் சென்றவர்கள்.. அந்நறுமணத்தை அறிவர்.. 😍😍

ஷ்ரித்திக் வெகு சுலபமாக ஷிவாக்ஷிக்கு கொண்டை போல அள்ளி முடிந்து விட்டான்.. 🥰

"என்ன.. ?? அவ்ளோ தானா.. ?? இவ்வளவோ சீக்கிரமா.. ம்ப்ச்.. ஹ்ம்ம்ம்ம்.." என ஷிவாக்ஷி கொண்டை பார்த்து தொட்டு பார்த்துக் கொண்டே கண்ணாடியில் ஷ்ரித்திக்கின் பிம்பத்தை பார்த்து மொழிந்தாள்..🤩

கரங்கள் கூந்தல் விட்டு அகன்றாலும்.. அதன் நறுமணம் அவனின் கைகளில் ஒட்டிக் கொண்டார் போல வாசனை இன்னும் விடவில்லை..😋
"சரி.. விடு.. நா ஜிம் போயிட்டு வந்தறேன்.. பைய்.." என திரும்பி நடக்க போனவனை.. தடுத்தது அவளின் குரல்..

"நில்லுங்கோ.. ஜிம் போறேளா.. ?? அப்ப நானும் வரேன்.." என ஷிவாக்ஷி கூறினாள்..😊

"ஜிம் எல்லாம் போவியா.. ??" என்றவன் வினவ..
ஷிவாக்ஷி.. "ச்சே.. ச்சே.. அதெல்லாம் கிடையாது.. நா வாக்கிங் போவேன்.. சும்மா வாசல் வரை வந்துட்டு.. திரும்ப உங்க ஆத்துக்கே.. வந்துடுவேன்.." என்க..😝

"எது.. மாடி வரைக்குமா.. ??" என்று ஷ்ரித்திக் கிண்டலாக கேட்கவும்.. என்னவென விளங்காது.. பார்த்தாள்‌‌.. ஷிவாக்ஷி..🙄

"ஜிம்.. மாடில தான் இருக்கு.. அதான் சொன்னேன்.." என்று ஷ்ரித்திக்.. கூறவும்.. ஷிவாக்ஷிக்கு.. மெல்லிய அதிர்வு.. ஷ்ரித்திக்கையே பார்த்துக் கொண்டிருந்தாள்..
😳

"ஹே.. என்ன.. ??" என்று ஷ்ரித்திக் ஷிவாக்ஷியின் முன் சொடுக்கிட்டான்..☺️

"இல்ல.. நீங்க தனக்காரர்னு தெரியும்.. ஆனா.. ஆத்துலையே ஜிம் வைக்கற அளவுக்கு.. பெரிய ஆள்ன்னு தெரியாது.." என்றவளின் விழிகளில் ஆச்சரியம் விலகவில்லை..😯

"சரி.. அதெதுக்கு.. வா.. போலாம்.. நீ ட்ரெட் மில்ல வாக்கிங்.. பண்ணிக்கோ " என்றவனின் அழைப்புக்கு மீண்டும் புரியாத வீசினாள்..🙄🧐

"ட்ரெட் மில்னா... ??" என தாடையில் தட்டி யோசித்தவள்.. "ஹான்.. இந்த நிக்கற இடத்தில வாக்கிங் பண்ற மெசின் பேரு தான.. !!" என்க..😝😉

"ஹப்பா.. கண்டுபிடிச்சிட்டியா.. வா போலாம்.. டைம் ஆகுது.. மணி இப்பவே ஆறே கால் வா.." என்றான்.. ஷ்ரித்திக்..🤪

"யூ மீன்.. சிக்ஸே கால்.. ஹோ காட்.. நா வரல நீங்க.. போங்கோ.. டாட்.." என டாட்டா கூறி கையை ஆட்ட போனவளின்.. கரத்தைப் பற்றினான்.. அந்த விழி விரித்து அந்த கரத்தையே பார்த்தவள்.. 😳"வெரி சாரி.. வா போலாம்.." என ஷ்ரித்திக் இழுத்துச் சென்றான்..😍

அறையை தாண்டி அருகில் இருந்த தூணை பிடித்து.‌.
"அச்சோ.. கிருஷ்ணா.. நா வரமாட்டேன்.. ப்ளீஸ்.. ப்ளீஸ்.. விடுங்கோ.‌. நா இதுவரைக்கும் அந்த மெசின் எல்லாம் போனதில்ல.. விடுங்கோ.." என்று தூணை அணைத்துக் பிடித்து கெஞ்சினாள்.. 🤫😨

"இப்ப.. நீ வரல.. நா உன்னை தூக்கிட்டு போவேன்.." என ஷ்ரித்திக் சாதாரணமாக கூறினான்..😉

"யூ.. நோ.. மை வைட் இஸ்.. ஃபிப்டி.. என்னை தூக்கிடுவேளா.. ??" என்க..😝

ஷ்ரித்திக் .. நெளிந்து கொண்டே.. "யூ.. நோ.. எனக்கு பேசறதெல்லாம் விட.. செய்யறது தான் ஈஸி.." என பேசிக் கொண்டே அவளருகே நெருங்க‌.. எங்கே தூக்கி விடுவானோ என்ற பயத்தில் அவனுக்கு முன்னால் நடக்க ஆரம்பித்தாள்..🙄🧐😉

ஷ்ரித்திக்.. அவளின் செய்கையில் சிரித்துக் கொண்டே முன்னே சென்றான்.. ஷிவாக்ஷியும் அவனின் பின்னே சென்றாள்..😊

ஷ்ரித்திக்.. உள்ளே சென்று ட்ரேட் மில்லை ஆன் செய்ய.. அதில் உருவான மெல்லிய சத்தத்தில் மயக்கம் போட்டு ஷிவாக்ஷி சோஃபாவில் தொப்பேன விழுந்தாள்..😵

ஒரு பக்க புருவத்தை உயர்த்தி.. "ஷிவு.. நடிக்காத.. சகிக்கல.. " என ஷ்ரித்திக் இடையில் கை வைத்து அவளையே பார்த்தான்..🤨

ஷிவாக்ஷி கண்களை திறந்து நெளிந்து படியே எழுந்தமர்ந்தாள்.. "இருந்தாலும் இவ்வளவோ‌‌.. நடிச்சிருக்க கூடாது.. என்ன உக்காந்துட்ட.. வா.." என்றவன் ஷிவாக்ஷியை ட்ரெட் மில் அருகில் இழுத்தான்..🤨

"ப்ளீஸ்.. ப்ளீஸ்.. வேணாமே.. நேக்கு பயமா இருக்கறது.. இதெல்லாம் நா பண்ணதே இல்ல.. விட்ருங்கோ.." என ஷிவாக்ஷி பயத்தை அப்பட்டமாக காட்டினாள்.. 😰

அவளை அடக்கியது.. ஷ்ரித்திக்கின் ஒற்றை வார்த்தை..
"நா இருக்கேன்ல.. வா.." என ஷ்ரித்திக் கூறியதும்.. அமைதியானாள்..😌

ஷிவாக்ஷிக்கு இப்படி நிற்க வேண்டும்.. எப்படி இயக்க வேண்டும் என அனைத்தையும் கற்றுக் கொடுத்தான்.. ஷிவாக்ஷியும் அனைத்தையும் கவனத்தோடே தெரிந்துக் கொண்டு.. அவளும் இயக்கினாள்.. ஷ்ரித்திக் நடக்க கற்று கொடுக்க அவளுக்கு மிக அருகில் நின்றான் .. அவன் அவளுக்கு அச்சம் கொள்ளாமல் இருக்கவே நின்றான்.. சாதாரணமாக இருந்தாலும்.. ஷிவாக்ஷி தான் அவஸ்தையில் நெளிந்தாள்..😕

ஷ்ரித்திக் ஷிவாக்ஷியை நடக்க வைக்க.. அவளும் பயந்துக் கொண்டே.. கண்னை இறுக்கி முடி கொண்டு நடக்க முயற்சிக்க.. சர்ரென இழுப்பது போல் இருக்கவே விழப் போனவள்.. பயத்தில் ஷ்ரித்திக்கின் கரங்களை பிடித்துக் கொண்டாள்.. ஷ்ரித்திக்கும் அவளை பிடித்துக் கொண்டாள்..😱

"ஒன்னும் இல்ல.. ஒன்னும் இல்ல.. மெதுவா என்ன புடிச்சுட்டு நட.." என ஷ்ரித்திக் ஷிவாக்ஷி பயம் கொள்ள கூடாதென அமைதிப் படுத்தினான்.. ஷிவாக்ஷியும் அமைதியானாள்.. 🥵

ஷிவாக்ஷியும் மெதுவாக நடக்க ஆரம்பித்தாள்.. ஷ்ரித்திக் அவளை விட்டு மெதுவாக அகன்று நின்றான்.. ஷிவாக்ஷிக்கும் அதில் நடப்பது பிடித்துப் போனது.. "அச்சோ.. நா நடக்கறேன்.‌.ஹூஉஉ.." என உற்சாகமாக மொழிந்தாள்..😁😆

சிரித்து விட்டு ஷ்ரித்திக் நகர்ந்து உடற்பயிற்சி செய்ய ஆயத்தமானான்.. தன் சட்டையை கழட்டி விட்டு வெற்று மார்பில் உடற் பயிற்சி செய்ய போனான்..☺️

அந்த மெஷினில் மூழ்கி இருந்தவள்.. எதர்ச்சையாக திரும்ப.. வெற்று மார்பு கட்டுலை கண்டு விழி பிதுங்கி.. முழுவதுமாய் காணும் முன்னே "பெருமாளே... " என கண்களை கைகளால் மூடிக் கொண்டு விழப் போனாள்..😳

பின்னால் இரும்பு உபகரணங்கள் இருந்தது.. "ஹே..‌ஏய்.." என கத்தி கொண்டே.. ஷ்ரித்திக் அவள் விழப் போவதை கண்டு தாங்கி பிடித்தான்..😱

ஷ்ரித்திக் "ஹே.. கண்னை திற.. ஒன்னும் இல்ல.." என்க
இன்னும் கண்களை திறவாமல் இருந்தாள்..🙄🧐 "முதல்ல உங்க சட்டைய போடுங்கோ‌.." என மொழிந்தாள்..😑

"ஹோ.. இதான்னா.. சரி போடறேன்.. நீ போய் வொர்க் அவுட் பண்ணு.." என ஷ்ரித்திக் அவளை விட்டு அகன்று டி சட்டையை அணிந்து கொண்டான்..‌😐

"அம்மா.. தாயே.. போட்டாச்சு.. போட்டாச்சு.." என்கவும்😤 தான்.. விழிகளை திறந்தாள்..
அப்போது தான் சாதாரணமானாள்..🤕

"போய் .. வொர்க் அவுட் பண்ணு.." என்கவும் தான் போய் மீண்டும் ட்ரெட் மில் இயக்கி.. அதில் உடற்பயிற்சி செய்தாள்.. அவனும் பெக் ஃப்லை மெஷினில் உடற்பயிற்சி செய்தான்.. ☺️

ஷிவாக்ஷி.. ஆறே முக்கால் வரை நடை பயிற்சியில் ஈடுபட்டாள்.. அதன் பிறகு.‌. ஷிவாக்ஷி போதுமென நகர்ந்து விட்டாள்.. ஷ்ரித்திக் இன்னும் சிறிது நேரம் கழித்து வருவதாக கூறியதால் நகர்ந்து விட்டாள்..😊

ஷிவாக்ஷி சென்று காலை கடனை முடித்து.. குளித்து பச்சை நிறத்தில் இருக்கும் சுடிதாரில் தன்னை‌ புகுத்தி கொண்டாள்.. கூந்தலை தளர தளர பின்னினாள்..இடை தாண்டி தொடையை தொட்டது.. கருங் கூந்தல்.. நெற்றியில் பொட்டு வைத்து வெளியே வந்தாள்..👸

எழு மணிக்கு வெளியே வந்து.. விரைவில் வாசலில் மாக்கோலம் இட்டு முடித்தவள்.. பூஜையறையில் இறைவனை வழிபட்டு முடித்தாள்.. சமையல் கட்டில் நுழைந்து அனைவருக்கும் குழம்பியை தயாரிக்கவும்.. இந்திரகவியும் தேவிகாவும் வருவதற்கும் சரியாக இருந்தது.‌.

"அட.. நீயே பண்ணிட்டியா.. நாங்களே வரலாம்னு இருந்தோம்.." என ஷ்ரித்திக்கின் அம்மா இந்திரகவியும் உடன் சித்தி தேவிகாவும் வந்தார்..☺️😊

"வாங்க.. அம்மா.. இப்ப தான் வந்தேன்.. இந்தாங்கோ.. காஃபி எடுத்துக்குங்கோ.." என்றவள் நீட்டினாள்..☕

இருவரும் காஃபியை பெற்றுக் கொண்டு ருசித்தனர்.. "ஷிவு.. காஃபி சூப்பர்.. டீகிரி காஃபி மாதிரி இருக்கே.." என சித்தி தேவிகா கேட்டார்..

"ஆமா.. என் தாத்தாக்கு இதான் பிடிக்கும்.. இத போட்டே.. நேக்கு பழக்கமாயிடுத்து.. நேத்தே இத தான் வைச்சிருந்தேன்.." என ஷிவாக்ஷி கேட்டாள்..☕

"ஆமாம்.. நேத்தும் இதான் வைச்சே.. ஆனா சொல்றதுக்கு நீ அப்ப இல்ல.. அதான் இப்ப.. சொல்றோம்.." என ஷிவாக்ஷியிடம் கதைத்தார்.. இந்திரகவி..😉

"ஆமா.. என்ன நெத்தில குங்குமம் வைச்சுக்கல.. நா நேத்து குடுத்த குங்குமம சிமிழ்.. எங்க.. ??" என ஷிவாக்ஷியிடம் கேட்டார்.. சித்தி தேவிகா..🤗

"இல்ல.. பூஜையறையில வைச்சுருக்கேன்.. அம்மா.." என ஷிவாக்ஷி கூறியதும்.. உடனே சென்று குங்குமத்தை எடுத்து வந்தார்.. எடுத்து வந்ததும் மட்டுமல்லாமல்.. நெற்றியில் குங்குமம் இட்டார்.. சித்தி தேவிகா..🙂

"ஹ்ம்ம்ம்ம்.. இப்ப எவ்ளோ.‌. நல்லா இருக்கு.‌. நீ சேலை கட்டுனா‌‌.. இன்னும் நல்லா இருக்கும்.. கட்டலாம்ல.." என சித்தி தேவிகா வினவினார்..🙂

"இல்லம்மா.. நேக்கு சேலை கட்ட தெரியாது.."‌ என ஷிவாக்ஷி தயக்கத்தினோடே கூறினாள்..😟

சித்தி தேவிகா..
"இதுக்கு ஏன் தயங்குற.. ?? நான் கட்டிவிடுவேன்.. இவ கட்டிவிடுவா.. ஒன்னும் பிரச்சனை இல்லை.. வா உன் சேலை எடுத்துட்டு என் ரும்க்கு வா நா கட்டி விடறேன்.." என்க..😏

"இல்ல.. இதே இருக்கட்டுமே.." என தான் அணிந்திருந்த ஆடையை பார்த்து விட்டு கூறவும்..🙂

"அதான்.. உன்.. அத்தை சொல்றாங்கல்ல.. போய் கட்டிட்டு வா.." என ஷ்ரித்திக்கின் அம்மா இந்திரகவியும் கூறவும்.. சரியென சித்தி தேவிகாவுடன் நடந்தாள்..🤗🙂

படிக்கட்டில் ஏறி நடக்கப் போன.. ஷிவாக்ஷியை தடுத்தார்.. சித்தி தேவிகா..

"ஏம்மா.. ?? படிகட்டுல போற.. இங்க தான் லிஃப்ட் இருக்குல.. இதுல போம்மா.. உங்க ரூம்க்கு ரொம்ப தூரம்ல ஏறனும்.. இதுல போயிட்டு வா.." என்று உரைத்தார்..🙂

'ஏது.. இங்க லிஃப்ட் இருக்கா.. ?? சொல்லவே‌ இல்லை..' என்றவள் மனதில் நினைத்துக் கொண்டே..🙄 அவர் காட்டிய திசையை நோக்கி நடந்தாள்.. 'அட.. ஆமா.. ஹ்ம்ம்ம்ம்..' என மனதில் நினைத்துக் கொண்டே தங்களின் அறைக்கு செலுத்தினாள்..😊 ஷிவாக்ஷி.. அறையில் சென்று ஒரு சேலையை எடுத்துக் கொண்டு.. சித்தி தேவிகாவிடம் செல்ல.. அவர் அவளுக்கு சேலையை கட்டி விட்டார்..😍

சேலையில் .. மின்னியவள்.‌. புதுத் தாலி கழுத்தில் தொங்க.. இடையை தாண்டிய பின்னிய கூந்தல்.. மொத்தத்தில் குடும்ப பெண்ணாக லட்சணமாக இருந்தாள்..🤩🤩

"சேலையில.. நீ ரொம்ப லட்சனமா இருக்க.. வா.." என்று ஷிவாக்ஷியும் தேவிகாவும் வெளியே வந்தனர்..😍🥰

சித்தப்பா தேவ தேவனும்.. ஷ்ரித்திக்கின் அப்பா.‌. ராஜ தேவனும்.. நடை பயிற்சி அப்போது.. தான் முடித்து வந்தனர்..

ஷிவாக்ஷி சமயலறையில் வந்து.. கொத்தமல்லியிடம் செய்து வைத்திருந்த காஃபியை கொடுத்து அனுப்பினாள்..☕

கொத்தமல்லியை அனுப்பி விட்டு.. ஷிவாக்ஷி சமையல் செய்ய ஆயத்தமானாள்..
அப்போது இந்திரகவியும் தேவிகாவும் ஷிவாக்ஷியின் செயல்களை கண்டு.‌. "என்னம்மா பண்ற.. ??" என்று விசாரித்தனர்..

ஷிவாக்ஷி
"அம்மா.. நா சமச்சிடறேன்.. என்ன செய்யனும்னு மட்டும் சொல்லுங்கோ.." என்க..

இந்திரகவியும் தேவிகாவும் ஒரு மார்க்கமாக ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டனர்..😳😳
"இதெக்கு.. மா நீ செய்யற.. ஆளுங்க இருக்காங்க.. வாம்மா.." என இருவரும் இணைந்தே கூறியதும்..

அவர்களின் பார்வையை புரிந்து கொண்டு.. "கவலப்படாதீங்கோ.. நா நன்னா சமைபேன்.. என்ன செய்யனும்னு மட்டும் சொல்லுங்கோ.. போதும்.." என்றதும் தான்.. இருவரின் முகமும் சாதாரணமானது..😇

"அதில்லம்மா.. உனக்கு.. சேலை கட்ட தெரியாதுன்னு சொன்னல.. அதேமாதிரி..‌ உனக்கு சமைக்க தெரியாதுன்னு இவங்க நெனச்சுட்டாங்க.. அவ்ளோதான்.." என இந்திரகவி புன்னகையுடன் சமாளித்தார்..😁

'ஆஹான்...' என மனதில் நினைத்துக் கொண்டாள்.. ஷிவாக்ஷி..

சித்தி தேவிகா.. சைவத்தில் சிலவற்றை கூறி சமைக்க சொல்லிவிட்டு..‌ காய்கறிகளை நறுக்க ஆரம்பித்தனர் இருவரும்..

கொத்தமல்லி அவர்களருகே வந்து.‌. "வணக்கமுங்க.‌. ஏனுங்க அம்மணி.. எல்லா வேலையும் நீங்க பண்ண.. அப்ப இந்த வீட்ல வேலைக்காரன் நான் எதுக்குங்க.. ??" என ஷிவாக்ஷியிடம் கேட்டார்..🤨🤔

"நோக்கு யாரு.. வேலை இல்லன்னு சொன்னா.. ?? இங்க பாரு பாத்திரம் கழுவனும்.. பன்னீர் கட் பண்ணனும்.. எவ்ளோ வேலை இருக்கு.. வந்து பண்ணுங்கோ.‌." என ஷிவாக்ஷி அவரிடம் கூறினாள்..🤗

"அம்மணி.. ஐயர் வுட்டு காரங்களா.. ??" என ஆச்சரியமாக கேட்டார்..

"அதென்ன.. இப்படி கேட்டுட்ட.. ?? மேடம் ரொம்ப சுத்தம் பத்தம் பாக்கறவங்க.. தெரியும்ல.." என்றபடி சஞ்சை அங்கு வந்தான்..😉

"ஹாய்.. குட் மார்னிங்.. என்ன சீக்கிரம் எந்திரிச்சுட்ட மாதிரி இருக்கறதே.. ??" என ஷிவாக்ஷி அவனை பார்த்து கேட்டாள்..☺️

"நாளைல இருந்து காலேஜ் போனும்.. அதான்.." என கூறியபடி கொத்தமல்லியிடம் காஃபியை பெற்றுக் கொண்டான்..😊

"நாளைக்கு போறத்துக்கு.. இன்னிக்கு எதுக்கு.. ?" என ஷிவாக்ஷி காய்கறியை நறுக்கிய படி குழப்பமாக பார்த்தாள்..🙄

"கேள்வி பட்டதில்லையா.. ?? நாளைக்காக இன்றைக்கே.. டீன் டீன் ட டின்.." என காஃபியை உறிஞ்சி கொண்டே கூறவும்..😛 'அடப்பாவி..' என்ற எண்ணத்தில் அவளின் பார்வை இருந்தது.. "பிதாவே.. இந்த அற்ப ஜோக்களிடமும்.. இந்த பீடையிடமிருந்து.. என்னை ரட்சிப்பாயாக.." என ஷிவாக்ஷி கரங்களை மேலுயர்த்தி இயேசு நாதனை வேண்டுவதை போல பாவனை செய்தாள்..🤪

"நீ.. சமைக்க போறங்கற ஒரு காரணம் தான் என் கைய போடுது.." என சஞ்சை கைகளை உயர்த்தி காட்டி கூறவும்.. "கண்ணு தெரியாத கபோதி.. நல்லா பார்ரா.. கட்டவே இல்ல.." என ருத்ரா ரித்துவிடம் தன் கைகளில் கயிற்றை காண்பித்து கூறினான்.. அவன்..😉🙃

"அப்படியே.. உனக்கே.. பொருந்துற மாதிரி இருக்கு.. இல்ல சஞ்சு.." என ஷிவாக்ஷி வந்த சிரிப்பை அடக்கிக் கொண்டு தாடையில் கை வைத்து மொழிந்தாள்..😆

அது மேஜை போன்ற இடம் என்பதாலும்.. குனிந்தால் தெரிய வாய்ப்பில்லை.. என்பதாலும்.. "அடி.. ஆத்தி.. இவங்களா.." என கொத்தமல்லி பயத்தில் கீழே குனிந்து கொண்டான்..😢

சஞ்சை 'ஏதாவது.. பேசுனா.. கலாய்ச்சுடுவானுங்க.. நைசா.. கிளம்பிற வேண்டியது தான்..' அப்படியே அமைதியாக அங்கிருந்து நகர்ந்து சென்றான்..😲 "ஹாய்.. ஷிவு.. எனக்கு சுடசுட காம்ப்ளான் எடுத்து வை.." ருத்ரா கூற.. ரித்து.. "எனக்கு போர்ன்வீட்டா.." என கூறவும்.. ஷிவாக்ஷி செய்து கொடுத்தாள்..

பாலை குடித்து கொண்டே.. "எங்கே.. அந்த கொத்தமல்லி.. ??" என ருத்து ஷிவாக்ஷியை காண..🤨 அவளோ தனக்கு கீழே கண்டாள்.. ஷிவாக்ஷியின் காலருகில் ஒளிந்திருந்தவன்.. "அம்மணி.. சொல்லாதீங்க.. வேணாம்.." என செய்கை செய்தான்.. கொத்தமல்லி..😰

ஷிவாக்ஷியின் பார்வை திசையை கண்டு கொண்டான்.. ருத்ரா.. ரித்துல் ருத்ராவிடம்.. செய்கை செய்தான்..

'பேசுனா..‌ கண்டுபிடிச்சுடுவான்..'🤫🤐 என்று தெரியாதென..
தோளை குலுக்கினாள்.. ஷிவாக்ஷி.. 🙂🤗

"சரி..‌ அவன அப்பறம் பாத்துக்கறேன்.. நானும் நாளைக்கு ஸ்கூலுக்கு போனும்..‌ அதுக்கு எல்லாம் ரெடி பண்ணனும்.." என ருத்ரா அங்கிருந்து நகர்வதை போல பாவனை செய்யவும்.. ரித்துவும்.. அதை புரிந்து கொண்டு "டேய்..‌ இதுடா.. நானும் வதேன்.." என ரித்துவும் அவனோடு நகர்ந்தான்..🙂

கொத்தமல்லி அவர்கள் போய் விட்டார்கள் என்று.. 'அப்பாடா..' என எழுந்தான்.. ருத்துவும்.. ரித்துவும்.. "ஹே... ஹாஹாஹா.. பிளாக் ஷீப்.. கொத்து.. மேமேஹஹஹ.."🤪 என்றிருவரும் கொத்தமல்லியின் அருகில் வரவும்.. கொத்தமல்லி "ஆத்தி.. வம்பா..‌மாட்டிக்கிட்டோமே..‌"😨😰 என முகம் அழுவதை போலானது.. "எங்க..‌ ஒடற.. வா யானை சவாரி.. போலாம்.." ருத்ரா துரத்த.. ரித்து.. "இல்ல குதிதை சவாதி.." என இருவரும் துரத்தினர்..😤

"வேணா.. என்ன விட்ருங்க.." என்ற படியே ஓடினார்.. அவர்..😵

ஷிவாக்ஷி இவர்களின் செயல்களில் புன்னகையோடு.. சமையல் செய்து கொண்டிருந்தாள்.. 😂😂

ஷ்ரித்திக் .. மாடியிலிருந்து கீழே இறங்கி வந்து கொண்டிருந்தான்..😍 வரவேற்பறையில் ஷ்ரித்திக்கின் அப்பா ராஜ தேவனும்.. சித்தப்பா தேவ தேவனும் செய்தித்தாள்களை படித்து கொண்டிருந்தார்.. 😇

கொத்தமல்லி.. அறையை சுற்றி ஓடிக் கொண்டிருந்தான்.. ஷ்ரித்திக்கை கண்டதும் அமைதியானான்..

"வணக்கமுங்க.. ஐயா காஃபி குடிச்சிட்டிங்களா.. ??" என கேட்டான்.. கொத்தமல்லி..☕

"ஹ்ம்ம்ம்ம்.. குடிச்சாச்சு.. என்ன.. இன்னிக்கு டேஸ்ட் கொஞ்சம் டிஃப்ரன்டா.. நல்லா இருந்தது.." என ஷ்ரித்திக் கூறியதை கேட்டு..

"ஐயா.. அம்மணி தான் காபி தண்ணி போட்டாங்க.. இப்ப கூட அம்மணி தான் சமைக்குறாங்க.."‌ என்று கொத்தமல்லி கூறுவதை சிறு கீற்று புன்னகை உருவானது..☺️

ருத்துவும் ரித்துவும்.. கொத்தமல்லியை பிடித்து கொண்டு.. "மாட்னியா.. வா.. சவாரி போலாம்.." என இருவரும் இழுத்தனர்..😆

கொத்தமல்லி அழுதுகொண்டே அவர்களின் இழுப்புக்கு சென்று கொண்டிருந்தார்..

ஷ்ரித்திக் புன்னகையோடு அங்கிருந்து அகன்றான்..😆

ஷிவாக்ஷியை காண சமையலறை நோக்கி சென்றான்.. ஷ்ரித்திக்..😍

சமயலறையில்.. வேர்வை வழிய.. அதை முந்தானையில் துடைத்துக் கொண்டு.. இடையில் சொருகி கொண்டு சமையலில் மும்முரமாக ஈடுபட்டு கொண்டிருந்தாள்.. அவளின் வெண்ணிற இடையை ரசித்துக் கொண்டே அவளருகே வந்தான்.. 😍😍

அவளையே ரசித்துக் கொண்டே வந்தவனின்.. விழிகள்.. சமயலறைக்கு செல்லும் வழியில் படிக்கட்டை கவனிக்க தவறினான்..🤪🙄🤫🤐

அதில் சற்று தடுமாறி பின் நிதானித்து நின்றான்.. 'நல்லவேளை‌‌.. யாரும் பாக்கல..' என்றவன் நினைத்துக் கொண்டான்..🤫🤫 ஆனால்.. மொத்த குடும்பமும் அவனை தான் பார்த்துக் கொண்டிருந்தது.. அவனின் செயல்களில் வந்த சிரிப்பை கட்டுபடுத்தினார்கள்..🤭

வரவேற்பறையில் ஷ்ரித்திக்கின் அப்பா, அம்மா சித்தப்பா, சித்தி.. மாமா அத்தை.. தாத்தா, பாட்டி என அனைவரும் இருந்தனர்.. அவனையே கவனித்து வந்தவர்கள்.. அவனின் செயல்களில் சிரிப்பை கட்டுபடுத்தி தாங்கள் கவனிக்கவில்லை என ஒவ்வொருவரும் செய்தித்தாளிலும்.. தொலைக்காட்சியிலும்.. தங்கள் வேலையில் கவனம் இருப்பதை போல காட்டி கொண்டனர்..😇

ருத்ரா.. "மாம்ஸ்.." என ஷ்ரித்திக்கை அழைத்தான்.. கீழே குனிந்து பார்த்தான்.. "நீ.. பாத்தத.. நான் பாத்துட்டேன்.." என கண்ணடித்தான்.. 😉

"சரி யார் கிட்டயும் சொல்லாத.. நமக்குள்ளேயே இருக்கட்டும்.." என ஷ்ரித்திக் நகரவும்..😛

"அதுக்கு..‌ கொஞ்சம் செலவாகுமே.. ??" என ருத்ரா கதைக்கவும்..‌ ஷ்ரித்திக் சில ஒரு நூறு ரூபாய் தாளை பாக்கெட்டில் வைத்துச் சென்றான்.. 🤑

தீவாவும் நேஹாவும்.. சாப்பாட்டு மேஜையில் மாவு பிசைந்து கொண்டிருந்தனர்.. ஷிவாக்ஷிக்கு நறுக்கி கொடுத்து கொண்டிருந்தனர்.. 🤓🤓

ஷிவாக்ஷி கடாயில் பொறித்து கொண்டிருந்தாள்..
ஷிவாக்ஷி‌யின் பின்னால் வந்து நின்றவன்.. அவளை அணைத்துக் கொண்டு.. கழுத்தில் முகம் பதிக்க.. கரங்களும்.. காதல் கொண்ட உள்ளமும் பரபரத்தது.. அதை கட்டுப்படுத்த முயற்சித்தான்..
😍🥰🤩

அதேசமயம் தனக்கு பின்னால் யாரோ இருப்பது போல் இருக்கவே..திரும்பினாள்.. ஷிவாக்ஷி..🧐

"நீங்க.. என்ன இங்க.. ??" என ஷிவாக்ஷி கரண்டியால் சுழற்றிக் கொண்டே கேட்டாள்..😉

"சும்மா.. சேலையில சிம்பிளா.. அழகா இருக்க.. உன் இடத்தில என் லவ்வரோ பொண்டாட்டியோ இருந்திருந்தா.. பின்னாடி இருந்து ஹக் பண்ணி இருப்பேன்.. ஹ்ம்ம்ம்ம்.." என கூறிக் கொண்டே பெரு மூச்சு விட்டான்...😍🥰

"உங்க.. ஆத்துக்காரியாண்ட.. சொல்ல வேண்டியதெல்லாம்.. ஏன் என்கிட்ட.. ??" என கூறும்போதே நாக்கை கடித்து கொண்டாள்.. தான் தானே அவரின் மனைவி என எண்ணிக் வெட்கத்துடன்.. ஓரக்கண்ணால் பார்த்தாள்..🧐

ஷ்ரித்திக்கோ.. அவளை ஒரு மந்தகாச புன்னகையுடன் பார்த்தான்..🤩😘 ஷ்ரித்திக்கின் புன்னகையில் அப்புறம் திரும்பி.. தன் வெட்கத்தை அடக்கிக் கொண்டாள்.. இருப்பினும் கண்ணச் சிவப்பு காட்டி கொடுத்தது.‌.🥰

"மேடம்.. பசிக்குது.." என ஷ்ரித்திக் பேச்சை மாற்றினான்..🙂

"இரண்டு க்ஷணம்.. ஆமா உங்களுக்கு என்ன வேணும்னு சொல்லுங்கோ.. சமைச்சு தரேன்.." என ஷிவாக்ஷி விரல்களை உயர்த்தி கேட்டாள்.. 😇

"அப்படியா.. எனக்கு.. மட்டன்‌‌ சுக்கா, பெப்பர் சிக்கன்.." என கூறிக் கொண்டிருக்கும்🤑 போதே.. "பெருமாளே.. அபச்சாரம் அபச்சாரம்.. வ்ளக்.. அப்படி போங்கோ.." என்றுரைத்தாள்..😠

"ஹே.. சும்மா சொன்னேன்.." என கூறிவிட்டு..
அவளின் பாவனை ரசித்துக் கொண்டே அங்கிருந்து சாப்பாட்டு மேஜையில் வந்தான்..😍🤪😜

'என்ன.. என்கிட்ட இப்படி எல்லாம் பேசுறா.. ??' என ஷிவாக்ஷி நினைத்து கொண்டே சமையலை முடித்தாள்..🙄🤭

ஷ்ரித்திக்.. வந்தமர்வதை கண்டு.. "தீவா..‌ஒருத்தர்.. தான் பொண்டாட்டிய பாத்து வழுக்கி விழறத பாத்திருக்கியா.. பாத்துக்கோ.." என நேஹா ஷ்ரித்திக்கை கிண்டலடிக்க..🤭

அதை கேட்டு.. ஷ்ரித்திக் ருத்ராவிடம் திரும்ப.. அவனோ.. நூறு ரூபாய் தாளால் வீசிறிக் கொண்டிருந்தான்.. "துரோகி.." என ஷ்ரித்திக் முணுமுணுத்தான்.‌.🤑

ருத்ரா.. நாக்கை வெளியே நீட்டி பழித்து காட்டினான்.. 😜

"இப்ப என்னடான்னா.. தண்ணி குடிக்க கிட்செனுக்கே வராத ஆளு.. பொண்டாட்டிய பாக்க வராரு.. இல்ல.. நேஹா.." என தீவா.. அவளுடன் சேர்ந்து கொண்டாள்..🤭

"என்ன நாத்தனாரும்.. கொழுந்தியாலும்.. யாரையோ.. கலாய்க்குற மாதிரி இருக்கு.. ??" என உக்கார்ந்து கொண்டு கேட்டான்.. ஷ்ரித்திக்..🙂

"கேட்டுக்கோ.. தீவா.. அவர் காதுல விழுகலயாம்.. ஆன்.." என நேஹா தாடையை முன்னே கொண்டு வந்து ஒரு மார்க்கமாக மொழிந்தாள்..🤭🤫

"என்ன.. டா.. ?? இப்படி பொசுக்குன்னு மாறிட்ட.. ??" என தீவா.. கேட்கவும்..☺️ மௌனமே உருவாய்.. ஷிவாக்ஷியை ரசனையோடு பார்த்தான்..

"அவ்ளோ.. லவ்வா.. ??" என நேஹா ஆச்சரியமாக கேட்டாள்..😘

ஷ்ரித்திக் ஷிவாக்ஷியை பார்த்து கொண்டே
"அதெல்லாம்.. ரொம்ப.." என கூறினான்..😍

தீவா.. அவனின் பார்வை திசையை கண்டு..
"டேய்..‌ நாங்கெல்லாம் இருக்கோம்.." என்று மொழிந்தாள்..😍

"நீங்க.. இன்னும் போகலியா.. ??" என ஷ்ரித்திக் கிண்டலாக கேட்டான்..😆

"அடப்பாவி.. ம்ம்ம்.. நடத்து.. நடத்து.. ஆமா.. உன் லவ்வ சொல்லிட்டியா.. ?? அவகிட்ட எந்தவொரு அறிகுறியும் இல்லயே.." என நேஹா ஷிவாக்ஷியை பற்றி கேட்டாள்..🤔

"இன்னும் சொல்லல.. சொல்லனும்.." என ஷ்ரித்திக் ஷிவாக்ஷியை ரசனையோடு பார்த்தான்..😍

ஷ்ரித்திக் புன்னகையினோடே ஷிவாக்ஷியை பார்த்தான்.. இந்திரகவியும் தேவிகாவும் ஷிவாக்ஷியின் அருகே வந்தனர்.. "என்னம்மா.. ரெடியா.. வாசனை மணக்குது.." என இந்திரகவி சமையலை பற்றி கேட்டார்..😇

"ஹ்ம்ம்.. ஆச்சு.. எல்லாரையும்.. கூப்பிடுங்கோ.. சாப்பிடுவேளாம்.." என ஷிவாக்ஷி எடுத்து வைத்து கொண்டே கூறினாள்..😇

இருவரும் உணவை மேஜையில் எடுத்து வைக்கவும்.. குடும்பத்தினர் அனைவரும் மேஜையில் வந்தமர்ந்தனர்..😇

கொத்தமல்லியும் இந்திரகவியும் அனைவருக்கும் பரிமாறினர்.. ஷ்ரித்திக்கின் அருகில் வந்து பரிமாற போக.. ஷ்ரித்திக் திடீரென.. "ஷிவாக்ஷி.." என கத்தி அழைத்தான்.. ஷ்ரித்திக் அவ்வாறு கத்தியதும்..‌ குடும்பத்தில் அனைவரும் ஷ்ரித்திக்கை எரிட்டனர்..😌

சமையலறையில் தண்ணீர் ஊற்றி கொண்டிருந்தாள்.. திடீரென அவன் குரலில் தண்ணீரை கொட்டி விட்டாள்.. ஷிவாக்ஷி பதற்றத்துடன் வெளியே வந்தாள்.. ஷ்ரித்திக்கை எரிட்டாள்..🙄

"வந்து நீ.. பரிமாறு.." என ஷ்ரித்திக் ஷிவாக்ஷியிடம் கோபத்தோடு ஆணையிட்டான்..😕

ஷிவாக்ஷி என்னவென புரியாத பார்வையோடு.. ஷ்ரித்திக்கிற்கு பரிமாறினாள்..😕 ஷிவாக்ஷி மட்டுமல்ல.. மொத்த குடும்பமும் ஷ்ரித்திக்கை புரியாது தான் பார்த்துக்கொண்டு இருந்தனர்..

ஷிவாக்ஷி பரிமாறி‌ விட்டு உள்ளே செல்ல எத்தனிக்க.. "எங்கம்மா..‌ உள்ள போற.. ?? வா வந்து சாப்பிடு..‌" என ராஜ தேவன் கூறினார்..🙂

"இல்ல வேணாம்.. நீங்க சாப்பிடுங்கோ‌‌.. நா அப்பறம்.." என ஷிவாக்ஷி இழுக்கவும்..😇

"அட..‌ என்னம்மா.. வா வந்து உக்காரு..‌" என பாட்டி தேவசேனா தன் பக்கம் அமர வைத்தார்.. 😌

சித்தப்பா தேவ தேவன்.. "கூச்சப்படாம..‌ சாப்பிடும்மா.." என அனைத்தையும் அவளுக்கு பரிமாறினார்கள்.. அனைவரும்.. மாதவன் சமீராவை தவிர்த்து.. 😇

அனைவரும் தன்னையே கவனிப்பது.. ஒரு வித அவஸ்தையில் நெளிந்தாள்.. ஷிவாக்ஷி..

ஷிவாக்ஷி சாப்பாட்டில் கொரித்து கொண்டிருந்தாள்.. "என்ன.. சாப்பிடற..‌இரு.." என இந்திரகவி ஷிவாக்ஷிக்கு.. ஊட்டி விடவும்.. 😖

ஷிவாக்ஷிக்கு கண்கள் கரித்து..‌ நீர் கண்ணத்தில் உருண்டோடியது.. "ஏம்மா.. என்னாச்சு.. ??" என தாத்தா கேட்கவும்..🥺

"இல்ல..‌ நேக்கு.. நினைவு தெரிஞ்சு..‌‌ பாட்டி தான் கடைசியா ஊட்டி விட்டா.. அப்பறம் யாரும்.. ?? அதான்.." என ஷிவாக்ஷி தாடையில் கைகளை விரித்தாள்..

ஷிவாக்ஷி சொற்களில் சில நொடிகள் மௌனமாக கழிந்தது..😩😫

நினைவு தெளிந்து.. இந்திரகவி..
"யார் சொன்னாங்க..‌உனக்கு அம்மா அப்பா இல்லன்னு.. ?? நான் உனக்கு அம்மா.‌. இவர் உனக்கு.. அப்பா.." என தன் கணவரை காட்டி கூறியதும்..☺️😇

"ஆமாம்..‌ உனக்கு தாத்தா.. பாட்டி நாங்க இருக்கோம்ல அழக் கூடாது.." என பாட்டி கண்களை துடைத்து விட்டார்..😌

"நாங்க இருக்கோம்.. இதுக்கெல்லாம் ‌அழறதா.. ??" என சித்தி தேவிகா ஷிவாக்ஷியை சமாதானம் செய்து.. அனைவரும் ஊட்டி விடவும்.. ஷிவாக்ஷி புன்னகையுடன் வாங்கிக் கொண்டாள்..😌

இதையெல்லாம் ஷ்ரித்திக்கும் பார்த்துக் கொண்டே இருந்தான்..🙂 அனைவரும் ஷிவாக்ஷியை கவனிக்க வேண்டும் என்று நினைத்ததை குடும்பம் நடத்தி விட்டது..‌ என்று மகிழ்ச்சி அடைந்தான்..

ஆனால் ஷிவாக்ஷி ஷ்ரித்திக்கின் கோபம்,
தன் அன்னையை அருகே பரிமாற விடாதது, ஷ்ரித்திக்கிற்கு தன் அன்னையின் மேல் கோபம் இருப்பதாக ஷிவாக்ஷிக்கு
தோன்றியது..🤔

இந்த எண்ணம் ஷிவாக்ஷிக்கு மட்டுமல்ல.. ஷ்ரித்திக்கின் அம்மா இந்திரகவிக்கும்..‌ அப்பா ராஜ தேவனுக்கும் தோன்றிற்று..‌ இருவரும் ஒருவரையொருவர் அர்த்தம் பொதிந்த பார்வையை வீசினார்கள்..

மற்ற அனைவரும் ஷிவாக்ஷியை சாப்பிட வைக்க தான்.. ஷ்ரித்திக் இப்படி நடந்து கொண்டான் என நினைத்தது..☺️

குடும்பத்தில் அனைவரும்.. ஷிவாக்ஷியை தாங்குவதை கண்டு எரிச்சலில் கொதித்து கொண்டிருந்தாள்.. மாயா.. 😡👿

ஷ்ரித்திக் சாப்பிட்டு முடித்ததும்.. கைகளை கழுவிக் கொண்டு.. வெளியே வரும் போது.. மாயா வழிமறித்து நின்றாள்..
கிட்டத்தட்ட நெருக்கமாக வந்து நின்றாள்..😐

அப்போது தான் ஷிவாக்ஷி.. கை கழுவ வந்திருக்க.. புன்னகையால் விரிந்த இதழ்கள்😐 சுருங்கியது.. 'இவ.. எதுக்கு இவா கூட நிக்கறா.. ?? அச்சோ.. கையெல்லாம் பிடிக்கறா.. ??' மாயா ஷ்ரித்திக்கின் கரம் பற்றியதை பார்த்து மனதில் ஒரு பக்கம் கோபத்தால் எரிந்தது..😠😠 இதை பார்த்து கொண்டே வெளியேறி சமயலறையில் நுழைந்து கை கழுவிக் கொண்டாள்..

மாயா ஷ்ரித்திக்கின் கரம் பற்றிய படி வெளியே வந்தாள்.. ஷ்ரித்திக் அவளின் கைகளை உதறிவிட்டு அகன்றான்.. ஆனால் ஷிவாக்ஷியின் கண்களுக்கு.. கொஞ்சலாக விடுவதை போலே தோன்றியது..😠😤

'இவ.. எதுக்கு அவா கூட.. ?? ஹ்ம்ம்ம்ம்.. ஆமா..‌ கன்னியாதானம் இவ கூட நடக்கற மாதிரி தான் இருந்தது.. அவாளும் ஆசைபட்டிருப்பா.. தப்பில்ல.. நேக்கு கோபம் வர்றது தான் தப்பு..' என தன்னை திட்டிக் கொண்டாள்..🥴 ஷிவாக்ஷி..

"என்னம்மா கிச்சன்லேயே இருக்க.. வாம்மா.." என தாத்தா ஷிவாக்ஷியை அழைத்தார்..😇

"இருங்க.. வரேன் தாத்தா.." என ஷிவாக்ஷி.. ஷ்ரித்திக்கையும் மாயாவையும்‌ கோபத்தில் பெரு மூச்சு விட்டு அகன்றாள்..😠😫

தன்னறைக்கு சென்று இரு முயல் குட்டிகளையும் தூக்கி கொண்டு வந்தாள்.. 🐰🐰

அதை கண்டு ஜானவி.. "ஹே.. வர்ஷா.. இங்க பாரு டி முயல் குட்டி.. முயல் சூப் குடிச்சு எவ்ளோ நாள் ஆச்சு.. நீ சொல்லிட்டு இருந்தல்ல.." என அந்த முயல் குட்டிகளை தடவி கொண்டு கூறியதும்..🐰

"அபிஷ்டு.. என்ன பேசற.. ?? என் செல்லத்தை சூப் போடுவியா.. ?? கொன்றுவேன்.. அபச்சாரம்..‌ அபச்சாரம்.." என அவர்கள் இருவரின் மண்டையும் தட்டிவிட்டு அகன்றாள்..😠

"ஹே.. சும்மா சொன்னோம்.." என வர்ஷா.. அவள் பின்னே.. சென்றாள்..🤣🤣

"காலைல இருந்தே.. அபச்சாரமா பேசிண்டு இருக்கேள்.. அப்பறம்.. உங்கள கடிச்சு வைச்சடுவேன்.. பாத்துண்டே இருங்கோ.." என ஷிவாக்ஷி சமயலறையில் இருந்து.. கேரட் கீரை வகைகளை அவற்றுக்கு தந்தாள்..🥕🥕

"ஷிவு..‌ பேசாம நீ என்னை கல்யாணம் பண்ணிக்கோயேன்.. அச்சச்சோ.. இப்ப தான உனக்கு கல்யாணம் ஆச்சு... பேசாம நா உன்ன லவ் பண்ணட்டுமா.. ??" என தாத்தா குறும்பாக கேட்கவும்.. அதற்கு ஷிவாக்ஷி புன்னகையுடன் பதில் கூற முன்னே.. ருத்ரா தடுத்தான்..

"எல்லாரும்.. என்ன நினச்சுட்டு இருக்கீங்க.. ?? ஷிவு.. என் ஆளு.. உங்க எல்லார விடவும் நா.. சீனியர்.. தெரியுமா.. ?? ஷிவுக்கு கல்யாணத்துக்கு முன்னாடியே.. நா ப்ரபோஸ் பண்ணி இன்னும் எனக்கே எதுவும் சொல்லல.. ஷிவு.. என் ஆளு.." என ருத்ரா.. கையை கழுத்தில் வைத்து இழுத்து மிரட்டினான்..😠

ஷிவாக்ஷியோ.. 'அடப்பாவி..' 🥴 என்று பார்த்தாள்..

இவர்களில் உரையாடலை கேட்டு கொண்டிருந்தவன்.. "டேய்.. அவ என் பொண்டாட்டி டா.. உனக்கு அத்தை டா.." என ஷ்ரித்திக் அதிர்ச்சியாக இருப்பதை போல கூறினான்..🙄😕

"தப்பு தப்பு.. அது ஏன் நீ சொல்ற..‌ தப்பு தப்பு‌.. ஏய் தாய்கிளவி..‌உன் புருஷனை அதட்டி வை..‌ இல்ல நா அதட்டுவேன்.." என ருத்ரா பாட்டி திரும்பி ‌கிண்டலாக கூறவும்.. 😆

நேஹா ருத்ராவின் மண்டையில்.. தட்டி.. "பெரியவங்கள.. மரியாதை இல்லமா.. பேசுன.. சோத்துல விஷத்தை வைச்சுருவேன்.. ஜாக்கிரதை.." என கோபமாக கூறினாள்..😡

"என்னடா..‌ருத்து.. நம்மள.. ஹீரோயிஸம் பண்ண விடமாட்றாங்க.. ??" என ரித்துல் அவனிடம் வந்து கேட்டான்..😒 இப்போது தான் கொத்தமல்லியை சட்னி ஆக்கி விட்டு வந்தவன் வினவினான்.. ஷிவாக்ஷி கொத்தமல்லியை பார்த்தாள்.. உடலெல்லாம் சேரும் சகதியுமாய்.. வாயிலும் தலையிலும் இலை தழைகளோடு அவரின் கோலத்தை கண்டு குடும்பமே.. சிரித்தது..🥵

"டேய்.. விட்ரா.. விட்ரா.. இவங்க எல்லாம்.. நம்மள வளர விடாம தடுக்தற களைங்க.. அவங்கள நாம புடுங்கி எறியனும்.." என கதாநாயகன் போல ஏற்ற இறக்கங்களோடு கதைக்கவும்..😤

"அடிங்.. டேய்.. எருமைகளா.. உங்கள..‌ ??" என தீராவும் நேஹாவும் அவர்களை தூரத்தினர்.. 😡😡

மொத்த குடும்பமும் புன்னகைத்தது... 🤣🤣

ஷ்ரித்திக் ஷிவாக்ஷியிடம் செல்வதாக செய்கை காண்பித்தான்.. ஷிவாக்ஷி கண்ணசைக்கவும்‌ நகர்ந்தான்.. 😇😇

ஷ்ரித்திக்கின் பின்னே மாயா செல்வதை பார்த்தாள்.. ஷிவாக்ஷி..

ஷிவாக்ஷியும் அவர்கள் அறியாது.. வாசல் வரை அவர்களை பின்தொடர்ந்து சென்றாள்..😒

மாயா ஷ்ரித்திக்கின் காரில் ஏறுவதை ஒரு வித பயம் கோபம்..‌ கலந்த தவிப்புடன் நோக்கினாள்..😒😒

ஷிவாக்ஷிக்கு 'நான் ஏன் கோபப்படறே.. இது தப்பான்ணோ.. ?? நான் ஏன் இப்படி ஃபீல் பண்றேன்.. அவா எப்படி போனா.. நேக்கு என்ன.. ?? அவா கூட மாயா போனா என்ன.. ?? கன்னியாதானம் பண்ணின்டா.. நேக்கு என்ன.. ??' என வாசலின் தூணை தட்டிக் கொண்டு.. அவர்கள் செல்வதை வெறித்தாவாரே.. பார்த்தாள்.. தனக்கு காதல் வந்ததை அறியாது.. பாவையவள் இதென்ன உணர்வென புரியாது விழித்தாள்..🙄

மாயா.. கேட்டதெல்லாம் தான் செய்தது தவறென்றும்‌ ஆனால் தன் காதல் பொய்யில்லை என்றே.. அது மட்டுமல்லாமல்..‌ தன் மனதை திசை திருப்ப தன்னுடைய மேற்படிப்புக்கு ஏற்பாடு செய்யும் படி கேட்டாள்.. ஷ்ரித்திக் அதற்கு தான் அவளை தன்னுடன் அழைத்துச் சென்றான்.. அதற்காக விசாரித்து விண்ணப்ப படிவத்தை பெற்று விட்டு.. மாயாவை ஒரிடத்தில் இறக்கி விட்டான்.. அவளும் இல்லத்தை அடைந்தாள்..🤗

ஷ்ரித்திக் தன்னுடைய அலுவலகத்துக்கு நுழைந்தான்..

"ஹாய்.. டா.. என்ன சீக்கிரம் வந்துட்ட.. ??" என விக்ரம் விசாரித்தான்..🙂

"சும்மா தான்.." என தன்னிருக்கையில் அமர்ந்தவன்‌.. கணினியில் பார்வையை செலுத்தினான்..🙂

"என்ன..‌ டா வேலையா.. ??" என விக்ரம் வினவினான்..☺️

"ஆமாம் டா.. இன்னிக்கு கொஞ்சம் அதிகம் தான்.. அப்பறம் ஒரு ஹேல்ப்.. உனக்கு தெரிஞ்ச ப்ரேம் போடறவங்க இருந்தா சொல்லு.." என ஷ்ரித்திக் ‌தொலைபேசியில்.. தன் பெர்சனல் செக்ரெட்டரியை அழைத்த படி கூறினான்..🙂🤗

"ஏன்‌ டா.. ??" என விக்ரம் ஏரிட..🤔

"இல்ல..‌ என் பொண்டாட்டியோட பெயிண்டிங்ஸ ப்ரேம் போடலாம் தான்.." என ஷ்ரித்திக் கூறிக் கொண்டே ஓவியங்களை நீட்டினான்..😊

அதை பிரித்து.. அந்த ஓவியத்தில் வியந்த வண்ணம்.. 😍😍😍"என் தங்கச்சியா..‌ இப்படி வரைஞ்சது.. தங்கச்சி தங்கச்சிஇஇஇஇஇ.. 🎵🎶" என பாடலை ஆரம்பிக்க போனவனை..

"அட ச்சீ.. மூடு.. வந்து.. மிதிச்சுருவேன்.. தங்கச்சியாம்..‌ தங்கச்சி.. உன் தங்கச்சி.. வீட்டுக்கு வந்து இரண்டு நாள் ஆகுது.. வந்தியா.. ?? அவ என்னைய எங்க அண்ணாவ காணோம்னு கேட்டா தெரியுமா.. வந்துத் தொலை.." என ஷ்ரித்திக் கடுப்பாக கூறினான்..😡

"சரி.. டா.. வரேன்.. இன்னிக்கு வரேன் .. போதுமா.. பெயிண்டிங் எல்லாம் சூப்பரா‌ இருக்கே‌‌.. செம டேலண்ட் டா.." என விக்ரம்.. ஓவியத்தை திருப்பி ரசனையோடு பார்த்த படி கூறினான்..🤩🤩

"ஹ்ம்ம்ம்ம்.. ஆமா.. இத வீட்ல மட்டும் மாட்டி வைக்கறதுல எனக்கு விருப்பமில்ல .. ஏதாவது பண்ணனும்.. ??" என யோசித்த ஷ்ரித்திக்கிற்கு பொரி தட்டியது..😇

ஷ்ரித்திக் விக்ரமிடம் தன் யோசனையை முன் வைத்தான்.. "மச்சான்.. செம ஐடியா.. இது நடந்தா.. ஷிவாக்ஷி.. செம ஹேப்பி ஆயிடுவா.." என விக்ரம் புன்னகையுடன் மொழிந்தான்..😀😀

"ஹ்ம்ம்ம்ம்.. சரி இத பத்தி நா அவங்க கிட்ட பேசறேன்.." என ஷ்ரித்திக் கூறவும்.. அவனின் பர்சனல் செக்ரட்ரி வரவும் சரியாய் இருந்தது.‌.😄

"டேய்.. அப்பறம் உன்ன மாயா கூட பாத்தேனே.. ?? வர வழில.." என விக்ரம் யோசனையோடே கேள்வி எழுப்பினான்..🤔

"அதுவா.. மாயா என்கிட்ட வந்து.. நா பண்ணதெல்லாம்.. தப்பு.. ஆனா என் லவ் உன்மைனு சொல்ல.. எனக்கு கோவம் வந்து போகலாம்னு போறப்ப.. என் மைன்ட் டைவர்ட் பண்ண.. எனக்கு ஹையர் ஸ்டடிஸ்கு ஏற்பாடு பண்ணுன்னு சொன்னா.. சரின்னு நானும் கூட்டிட்டு போனேன்.. அவ்ளோதான்" என ஷ்ரித்திக் அனைத்தையும் கூறினான்..🤔

"ஹோ.. சரி.. ஆனா.. மாயா அவ்ளோ சீக்கிரம் மாறுற ஆளா டா.. ?? இல்ல ஏன் கேக்கறேன்னா.. நீயே சொல்லிருக்க.. அவளுக்கு ஒன்னு வேணும்னா.. அது அடையாம விடமாட்டான்னு.. அதான் கேட்டேன்.." என்று தன் சந்தேகத்தை முன் வைத்தான்.. விக்ரம்..🤔🤔

"தெரியல.. ஒரு சான்ஸ் குடுப்போமே.. சரி.. வேலை இருக்கு.. அப்பறம் பேசலாண்டா..." என தன் வேலையில் மூழ்கினான்.. ஷ்ரித்திக்..😕

விக்ரமும் அங்கிருந்து அகன்றான்..

-------------

To be continued..

(Sorry for late ud pa.. konja velaila busy aayitean.. padichitu epdi irukkunu sollunga.. vote and comments kaga wait pannuvean pa.. 😁😉😇🤩)

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro