அத்தியாயம் - 17 🙃
ஆனந்தமும்.. ஆசையும்.. வழிய வேண்டிய விழிகளில்..
கவலையே..
கண்ணீர் பதாகைகளாய் ஏந்துவதேனோ..
கண நேரத்தில்.. உபயமான.. அவசர மணத்தால் தானோ.. 😭
பரிதியவன் உச்சி பொழுதிற்கு நகர்ந்து கொண்டிருக்கும்.. காலை பதினொரு மணி நேரம்..
மக்கள் கூட்டம் சிறிதளவே குறைந்திருந்த வேளை.. சாலைகளில் வாகனங்கள் சென்ற வண்ணம் இருக்க.. அவற்றுள் நம் நாயகனும் நாயகியும் மகிழுந்தில் பயணித்தனர்..
ஷ்ரித்திக் தனக்கினிய ஃபெராரியை ஒர் கண்ணிலும்.. தனக்கினியவளை ஒர் கண்ணிலும்.. கவனித்து தான் வந்தான்..
"ஷிவு சாப்டியா... ??" என ஸ்டீயரிங்கை வளைத்து கொண்டே வினவினான்.. ஷ்ரித்திக்..
"இல்ல.. ஏகாதசி விரதம் அதான்.." என ஷிவாக்ஷி மறுமொழிந்தாள்..
"ஹ்ம்ம்ம்ம்.. இனிமேல்.. ஃபாஸ்டிங் .. இருக்கறத.. குறைச்சுக்கோ.. மார்னிங் ப்ரேக்ஃபாஸ்ட் ஸ்கிப் பண்ண கூடாது.." என ஷ்ரித்திக் சாதாரணமாக.. சாலையில் கவனத்தை பதித்து கூறினான்..
ஷிவாக்ஷியும் தலையை ஆட்டி... சாலையில் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாள்.. திடீரென திரும்பிய ஷிவாக்ஷி தன்னுடைய கைப்பையில் கையை நுழைத்து.. இரண்டு லட்சம் பணக்கட்டை எடுத்தவள்.. ஷ்ரித்திக்கின் முன் நீட்டினாள்..
ஷிவாக்ஷியை கவனித்து வந்தவனிற்கு .. அவளின் செய்கைகள் புருவ மத்தியில் முடிச்சிட.. அவளிடம்.. தன் புருவத்தை உயர்த்தி என்னவென வினவினான்.. ஷ்ரித்திக்..
அவனின் வினவலுக்கு.. "காசு.. நான் உங்களுக்கு தர வேண்டியது. இப்போதைக்கு இரண்டு லட்சம் வைச்சுக்குங்கோ.. அப்பறமா கொஞ்ச கொஞ்சமா தந்துட்ரேன்.." என ஷிவாக்ஷி கூறினாள்..
ஷிவாக்ஷியின் மொழிகளை கேட்டு ஷ்ரித்திக்கிற்கு சிறு கோபமும் வருத்தமும் எழுந்தாலும் வெளியில் காண்பிக்காது.. சாலையில் கவனத்தை செலுத்திய வண்ணமே பதிலளித்தான்..
"இங்க பாரு .. எனக்கு பணம் பெரிசில்ல.. தயவு செஞ்சு.. கடன் அது இதுன்னு சொல்லி.. பணத்தை என் கண்ல காட்டாத.." என இறுகிய முகத்துடன் கூறினான்..
"நீங்க.. அப்படி தான் சொல்லுவேள்.. அது உங்க பெருந்தன்மை.. அதுக்காக நான் பணம் தராம இருக்க முடியுமா.. ?? ப்ளீஸ் வாங்கிக்கோங்கோ.." என ஷிவாக்ஷி ஷ்ரித்திக்கிடம்.. கதைத்தாள்..
"ம்ப்ச்.." என ஷ்ரித்திக்கின் கோபம் சிறிது சிறிதாக உயர ஆரம்பித்தது.. அவன் கைகள் முறுக்கி கொள்வதிலும்.. மகிழுந்து வேகமெடுப்பதிலும் தெரிய.. அதை கட்டுபடுத்த பெரும் முயற்சி செய்தான்..
தான் கூறும் எந்தவோரு சமாதான மொழிகளையும் அவள் கேட்க போவதில்லை. என்றுணர்ந்தவன்..
"இங்க.. பாரு.. சரி.. நா பணத்தை வாங்கிக்றேன்.. மொத்தமா வாங்கிகறேன்.. இப்ப வேணாம்.. ஜஸ்ட் டேக் இட்.." என ஷ்ரித்திக் கோபத்தை மறைக்க முயன்றும் சிறிது இறைத்தது.. அவனின் குரல்..
ஷ்ரித்திக்கின் சொற்களை கேட்டு.. அதுவும் சரிதான் என தோன்றவே.. பணத்தினை.. எடுத்து தன் கைப்பையில் வைத்துக் கொண்டாள்.. ஷிவாக்ஷி ..
"ஆமாம்.. பணம் ஏது.. ??" என ஷ்ரித்திக் ஷிவாக்ஷியிடம் கேட்கவும்..
"என்னோடது தான்.. அந்த கடங்காரன் சண்டாளன் கிட்ட தரத்துக்காக கொஞ்ச கொஞ்சமா.. சேத்து வைச்சது.. அன்னிக்கு காட்டுல என்னைய காப்பத்துனேளா.. உங்க ஃப்ரண்ட் விக்ரம் அண்ணா தான் எடுத்து நேத்து தான் கொடுத்தா.. நல்ல வேளை .. விக்ரம் அண்ணா.. கொடுத்தா.. உழச்சு சம்பாதிச்சது.." என ஷ்ரித்திக்கிடம் ஷிவாக்ஷி மொழிந்த வண்ணம் இருந்தாள்..
"நீ இவ்ளோ.. காலைல அங்க.. ஐ மீன்.. எதுக்கு அந்த வேலைவாய்ப்பு ஆஃபிஸ்க்கு போன.. கொஞ்சம் க்ளீயரா.. சொல்லு.. ??" என ஷ்ரித்திக் ஷிவாக்ஷியிடம் வினவவும்..
"ம்ப்ச்.. அதுவா.. அது.. நேக்கு மூனு மாசத்துக்கு முன்னாடி போஸ்ட்ல ஒரு லெட்டர் வந்தது.. அது நேக்கு டீச்சர் வேலைக்கு கிடைச்சதா.. சொல்லுச்சு.. இத சம்பந்தமா அந்த அதிகாரிய பாருங்கோன்னு .. சொல்லிருந்ததா.. சரின்னு நானும்.. போனேன்.. அவா என்ன சொன்னா.. தெரியுமா.. ?? ரெண்டு சாய்ஸ் நேக்கு கொடுத்தா.. ஒன்னு கெஸ்ட் ஹவுஸ் வா.. இல்ல.. மூனு லட்சம் பணத்தை குடுன்னு சொன்னா.. நா முதல்ல பணத்தை கொடுத்துடலாம் தான் தோனுச்சு.. அதுக்கு அப்புறம் வேணா என்ன தப்பா வேறா பேசுனா.. காசு கொடுக்கறது.. தப்பு அப்படின்னு யோசிப்ப.. நேக்கு இந்த ஐடியா நேத்து தான் தோன்றச்சா.. உடனே அதை செயல்படுத்திண்டேன்.. அவ்ளோதான்.." என ஷிவாக்ஷி நீளமாக கதையை கூறி முடித்தாள்..
இதையெல்லாம் ஏதோ ஒர் கதையை போல கூறியதை.. கேட்டுக் கொண்டிருந்தவனுக்கு மென்னகை தான் உண்டானது.. மகிழுந்தை ஒட்டிக் கொண்டே.. ஷிவாக்ஷியை பார்த்தான்.. ஆனால் அவளோ.. சாலையில் கவனத்தை செலுத்தினாள்..
"நேக்கு இன்னும் கொஞ்ச நாள்ல.. ஏன் ஒரு வாரத்துல கூட வேலை கிடைச்சிடும்.. நா வேலைக்கு போலாம்ல.." என ஷ்ரித்திக்கிடம் ஷிவாக்ஷி அனுமதி கேட்டு நெளியவும்..
"ஹேய்.. அதெல்லாம் உன் இஷ்டம்.. இதுக்கெல்லாம் பர்மிஷன் கேக்கனுங்கற அவசியமில்லை.. ஆனா..ஒன்னு.. நீ வேலைக்கு போனுங்கற அவசியமில்லை.. பட் தட்ஸ் யுவர் விஷ்.." என ஷ்ரித்திக் ஸ்டீயரிங்கை வளைத்து கொண்டே மொழிந்தான்..
"இல்லங்க.. உங்களுக்கு நா பணத்தை கொடுக்கனும்.. அதுக்கு தான்.. வேலைக்கு போனும்னு சொல்றதே.. மொத்தமா கணக்கு போட்டு பாத்தா.. உங்களுக்கு எட்டு லட்சம் தரனும்.." என ஷிவாக்ஷி கூறியதை கேட்டவன்..
"வாட்.. ??" என சிறு கோபத்தில் கேட்டான்.. ஷ்ரித்திக்..
"ஆமா.. என்னோட.. கடன அடைச்சது... ஐஞ்சு லட்சம்.. நேக்கு.. ட்ரஸ்லாம் நேத்து வாங்குனதுல.. இரண்டு லட்சத்தி தொளாயிரம்.. நேக்கு ஹாஸ்பிடல் பில்.. பத்தாயிரம்.. மொத்தம் எட்டு லட்சம்.." என கணக்கு போட்டு மண்டையை தட்டி யோசித்து யோசித்து கூறுவதை பார்த்தவனுக்கு.. துளிர்விட்டிருந்த கோபம் இப்போது படர்ந்து.. முகம் இறுகியிருந்தது..
"ஏன்.. நேத்து கொட்டிகிட்டது.. முந்தா நாள் கொட்டிகிட்டது.. அதெல்லாம் கணக்குல இல்லையா.. ??" என கோபத்தை அப்பட்டமாக காண்பித்தான்..
"மறந்துட்டேன்.. !!" என தன் தலையை தட்டி... உதட்டை கடித்து கொண்டாள்..
"என் வாய்ல நல்லா.. வந்தற போது... என்ன பாத்தா.. உனக்கு எப்படி தெரியுது.. ?? ஹான்.. நா என்ன பணப்பேயா.. ?? அந்த கடன்காரன மாதிரி என்ன நினைச்சிட்டு இருக்கியா.. ?? இல்ல.. என்கிட்ட இல்லாத பணமா.. இனிமேல் என் முன்னாடி பணத்தை நீட்டுன.. அவ்வளோ தான்.." என ஷ்ரித்திக் கோபத்தில் அவளிடம் பொரிந்து தள்ளினான்..
ஷ்ரித்திக்கின் குரோதத்தை கண்டு.. "நா இப்ப என்ன சொல்லிட்டேன்னு.. நீங்க இப்படி கோவப்படறேள்.. ??" என ஷிவாக்ஷி புரியாது கேட்டாள்..
"ஜஸ்ட் சட் அப்.. நா கோபத்தில இன்னும் ஏதாவது பேசிடுவேனோன்னு பயமா இருக்கு.." என ஷ்ரித்திக் கோபத்தை அடக்க முயன்று தோற்றான்..
ஷ்ரித்திக்கின் கோப மொழிகளை புரியாது அடங்கினாள்.. ஷிவாக்ஷி..
காலை பதினொன்று மணி.. உதயனின் வெளிச்சத்தில் மின்னியது.. கோவிலின் கோபுர கலசம்.. கம்பீரமாக காட்சி தரும் கோயில் வாயிலை மனத்துள் வணங்கியபடி இருந்தாள்.. ஷிவாக்ஷி..
கோவில் வாயிலின் முன்பே மகிழுந்தை நிறுத்தினான்.. ஷ்ரித்திக்.. ஷிவாக்ஷி இறங்குவதற்கு வழிவகுத்தான்..
ஷ்ரித்திக்கின் கோபம் தணிந்ததா.. என்று பார்த்திருந்தவள்.. யோசனையோடே..
"வாங்கோளேன்.. ??" என ஷிவாக்ஷி ஷ்ரித்திக்கை அழைக்கவும்...
ஷ்ரித்திக் "வரேம்மா.. போ.." என தன்மையாக மொழிந்ததை கண்டவள்.. 'கோபம் போயிடுத்து..' என தன்னுள் நினைத்து அகன்றாள்..
ஷிவாக்ஷி இறங்கி கோவிலுக்குள் நுழைய நினைத்த போது.. கோவிலின் முன்பிருந்த கடைகளிலிருந்த துளசி மாலை கண்களில் தென்பட.. பகவானுக்கு வாங்க நினைத்தாள்.. ஆனால் அவள் செலவுக்கென்று வைத்திருந்த.. இருநூறு ரூபாயும்.. காலை போக்குவரத்துக்கு சரியாக போயிற்று.. தன்னிடம் வைத்திருந்த இரண்டு லட்சத்திலிருந்து பணம் எடுக்க மனம் வரவில்லை..
வேறு வழியின்றி..
கோவிலுக்குள் நுழைய முயன்றவளை தடுத்தது.. ஷ்ரித்திக்கின் குரல்..
அவள்.. ஐயங்கார் என்பதால் நிச்சயமாக கடவுளுக்கு ஏதேனும் வாங்கிச் செல்வாள் என நினைத்தான்.. ஆனால் ஷிவாக்ஷியோ வெறுங் கையோடு செல்வதை கண்டு...
"நில்லு.. ஷிவு.." என கூறியபடி அவளருகே வந்தான்.. ஷ்ரித்திக்..
"நீ.. சாமிக்கு இந்த பூ.. மாலை.. இதெல்லாம் வாங்க மாட்டியா.. ??" என ஷ்ரித்திக் ஷிவாக்ஷியிடம் வினவினான்..
அதற்கு மறுமொழியாய்.. "ஆத்துல தோட்டம் இருக்கறதனால.. வாங்க மாட்டேன்.." என பதிலளித்தாள்.. ஷிவாக்ஷி
அவளின் மொழிகளை கேட்டு.. "சோ.. பூ மாலை எல்லாம் சாமிக்கு போடுவ.. அதான் நம்ம கிட்ட.. பூ இல்லல்ல.. வாங்குனா.. என்ன.. ?? வா.." என ஷிவாக்ஷியை பூக்கடைகளின் அருகே அழைத்து சென்று.. துளசி மாலையை வாங்கி கொடுத்தான்..
அதை கண்டவள்.. சற்று ஆச்சரியம் தான் அடைந்தாள்.. 'நான் மனசுல நினச்சது.. எப்படி இவாளுக்கு தெரியும்.. ?? கோபமும் படறா.. பாத்து பாத்தும் செய்றா.. இவாளா புரிஞ்சுக்க முடியலையே.. ??' தன் மனதுள் நினைத்தது எப்படி சரியாக வாங்கி கொடுத்தார் என நினைத்தாள்..
ஷ்ரித்திக்கோ.. ஷிவாக்ஷி.. ஐயங்கார் என்பதாலும்.. சிலமுறை கிருஷ்ணா என உதித்ததை கேட்டவனுக்கு.. நிச்சயமாக துளசி மாலையை தான் வாங்குவாள்.. என்றெண்ணியே துளசி மாலையை வாங்கி கொடுத்தான்..
அந்த பூ கடையை விட்டு நகர நினைத்தவனை கலைத்தது.. மல்லிகை பூவின் மணம்.. அதை கண்டதும்.. ஷிவாக்ஷிக்கு வாங்கி தர வேண்டுமென நினைத்ததை செயல்படுத்தினான்... ஷ்ரித்திக்..
மல்லிகை பூவை இரண்டு சரம் வாங்கி அவளிடம் தந்தான்.. ஷ்ரித்திக்..
"ஷிவு.. இந்தா.. இத தலைல வச்சிக்கோ.." என வாங்கிய மல்லிகை மலரை அவளிடம் ஷ்ரித்திக் தன்னுடைய வெட்கத்தை மறைத்து.. சாதாரணமாக தரவும்..
ஷிவாக்ஷி முதல் முறையாக.. ஷ்ரித்திக்கை அப்போது தான்.. குறும்பும் காதலும் நிறைந்த கண்களோடு காண்கிறாள்.. ஷ்ரித்திக்கின் விழிகளில் சிறு வெட்கத்தை கண்டதால்.. தானோ.. ஷ்ரித்திக்கின் வெட்கம் .. ஷிவாக்ஷியை ரசிக்கத்தான் செய்தது..
இதுவரை தன் குடும்ப பெண்களில் சிலரை தவிர்த்து.. எந்த பெண்களிடமும்.. பேசாதிருந்தவன்.. முதல் முறையாக தன்னவளுக்கு மல்லிகை மலரை வாங்கி தருவதில்.. வெட்கம் உண்டாக.. அதை மறைக்க முயற்சித்தாலும்.. வெளிப்படத்தான் செய்தது..
ஷ்ரித்திக் கொடுத்த மலரை வாங்கி சூடிக் கொண்டாள்.. ஷிவாக்ஷி..
ஷிவாக்ஷியும் ஷ்ரித்திக்கும்.. ஒன்றாக கோவிலுக்குள் நுழைந்தனர்.. இருவரும் தொப்பைநாதனை வணங்கிவிட்டு.. மூலவரை தரிசிக்க விழைந்தனர்..
ஷிவாக்ஷி.. சன்னதிக்கு செல்ல விழைந்த போது.. ஷ்ரித்திக்.. ஒரிடத்தில் தூசி தட்டி அமர்ந்து கொள்வதை பார்த்து..
"என்ன.. நீங்க.. உள்ள வாங்கோ.. பகவான சேவிச்சுண்டு.. வந்துரலாம்.." என ஷிவாக்ஷி அழைத்தாள்..
"எது.. சேவிங்கா.. பகவானா... ??" என புரியாது விழித்தான்... ஷ்ரித்திக்..
"ச்சோ... சாமி.. சாமி கும்பிடலாம்.. வாங்கோ.. ??" என ஷிவாக்ஷி கண்ணத்தில் போட்டு கொண்டு.. கைகளை மேலுயர்த்தி வணங்கலாம் என செய்கை செய்து காட்டவும்..
ஷ்ரித்திக்கிற்கு.. சிரிப்பு வந்தது.. அதை அடக்கிக் கொண்டு மொழிந்தான்..
"இல்ல.. நா வரல.. நீ போய்ட்டு வா.. எனக்கு இதுல எல்லாம் நம்பிக்கை இல்லை.. நா கோவிலுக்கு வரதே.. கலை சிற்பங்கள பாக்க தான்.. வீட்ல கட்டாயப்படுத்துனா தான்.. சன்னதிக்கு வருவேன்.. இல்லன்னா.. அதுவும் இல்ல.. நீ போய் சேவிங் பண்ணிட்டு வா.." என ஷ்ரித்திக் கிண்டலாக கூறினான்..
ஷ்ரித்திக்கின் கிண்டல் சொற்களை கேட்டு.. கழுத்தை தோளில் இடித்து கொண்டு சன்னதிக்கு நகர்ந்தாள்.. ஷிவாக்ஷி..
சன்னதியில் நடுநாயனாக.. முகத்தில் புன்னகை தவழ.. கோபியர் கொஞ்சும் கோகுல நந்தன் கோபலான்.. காட்சி தருகிறான்..
கிருஷ்ணா பரமாத்மாவை
ஷிவாக்ஷி மெய்மறந்து ரசித்தவள்.. ஐயர் அருகே வந்ததும் தான் நினைவுக்கு வந்தாள்.. ஐயரிடம் துளசி மாலையை கொடுத்து விட்டு.. இருகரம் கூப்பி ரமணாவின் முன் வணங்கி நின்றாள்..
'கிருஷ்ணா.. இரண்டே நாள்.. என்னோட வாழ்க்கையோட திசை மாறிடுத்து.. என் வாழ்க்கைய பொறட்டி போட்டுதுத்து.. இப்ப நா இவா கூட இருக்கறது.. நேக்கு தப்புன்னு தான் தோன்றது.. கிருஷ்ணா.. நேத்து இவா ஆத்துக்கு போனா.. அங்க இருக்கிற எல்லா பொருள்ளயும்.. ஆடம்பரம்.. அதே சொல்றது.. நீ இந்த குடும்பத்துக்கு பொருத்தமில்லாதவன்னு..நா அவாளுக்கு கொஞ்சமும் பொருத்தமில்லதாதவான்னு என் மனசு கொட்டி சொல்றது.. ஆனா என்ன பண்றதுன்னே தெரியல.. ?? இந்த குடும்பத்த விட்டு போகலாம்ன்னு நினைச்சா.. ?? என்கிட்ட அந்தளவுக்கு பணமில்ல.. இந்த ஆத்த விட்டும்.. அவாள விட்டு.. போறதுக்கு.. நேக்கு ஏதாவது வழிய காட்டுங்கோ.. ??" என ஷிவாக்ஷி தன் மனக்குமுறலை கோபாலன் முன் வைத்து மனமுருகி வேண்டினாள்..
ஆனால்.. மாயக் கள்வனோ.. ஷிவாக்ஷியை கண்டு.. 'கிகிகி..' என பரிகாசித்து சிரித்துக் கொண்டார்..
கிருஷ்ணனை நினைத்து மந்திரங்களை ஓதி வேண்டியவள்.. கோவில் மணியின் ஒசையெழுப்பினாள்..
ஐயரிடம் பிரசாதத்தை பெற்றுக் கொண்டாள்.. சடாரியை (அதாங்க.. பெருமாள் கோவில்ல தலையில் வைப்பாங்கல..) தலையில் வைத்து ஆசி வாங்கிவிட்டு.. அவர்கள் தரும் தீர்த்தத்தை.. தலையில் தெளித்து குடித்துக் கொண்டாள்..
ஷிவாக்ஷி ஷ்ரித்திக்கிற்கும் சேர்த்து தீர்த்தத்தை வாங்கி விட்டு.. ஷ்ரித்திக் அமர்ந்திருக்கும் இடத்திற்கு வந்தாள்.. ஷ்ரித்திக் காதில் மாட்டிருந்த.. ப்ளுடூத்தில் யாருடனோ.. பேசிக்கொண்டு இருப்பதை கண்டு அவனருகே சென்றாள்..
ஷ்ரித்திக்.. ஷிவாக்ஷி வருவதை கண்டதும்.. கைப்பேசியை அணைத்தான்.. ஷிவாக்ஷி அவனருகில் வந்தமர்ந்து.. தீர்த்ததை காட்டி "தூத்தம் எடுத்துக்குங்கோ.." என நீட்டினாள்..
என்ன என்பது போல ஷ்ரித்திக் ஷிவாக்ஷியை பார்க்க.. "சரி.. சரி.. தீர்த்தம்.. தீர்த்தத்தை எடுத்துக்குங்க.." என ஷிவாக்ஷி தன் உதட்டை கடித்து கூறினாள்..
"சரி.. சரி.. அதுக்கு ஏன்.. உதட்டை கடிச்சுக்குற.." என கூறிக் கொண்டே ஷிவாக்ஷியின் பற்களுக்கு இடையில் மாட்டி சிவந்திருந்த அவளின் உதட்டை தன் விரல்களால்.. விடுவித்தான்.. ஷ்ரித்திக்..
தீர்த்தத்தை கொடுவென கைகளை நீட்டியிருக்க.. ஷிவாக்ஷி.. அதை கண்டு.. "இருக்கறதே.. கொஞ்சம்.. உங்க கையில மாத்துனா.. அதுவும் இருக்காது.. அப்படியே குடிங்கோ.." என ஷிவாக்ஷி ஷ்ரித்திக்கின் இதழ்களிடையே தன் பிஞ்சு கரங்களிலிருந்த தீர்த்தத்தை ஊட்டிவிட்டும்.. ஷ்ரித்திக்கின் தலையில் தெளித்தும் விட்டாள்..
ஷ்ரித்திக்.. தன் உணர்வுகளை கட்டுப்படுத்தும் அவனே.. ஷிவாக்ஷியின் செயல்களை வியப்பை விழிகளில் அப்பி.. கண்டான்.. 'நாம இப்படி நடந்துக்கோறம்னா.. நா இவள லவ் பண்றதுனால.. ஆனா.. இவ ஏன்.. இப்படி.. ?? ஒரு வேளை என்னை லவ் பண்றது.. நம்மள மாதிரி அவளுக்கும் தெரியலையோ.. அப்படி தான்..' என தன்னுள் நினைத்து சிரித்துக் கொண்டான்..
ஷிவாக்ஷி பிரசாதத்தை நீட்டியதை.. பெற்றுக் கொண்டு.. அவளிடம் பேச தொடங்கினான்.. ஷ்ரித்திக்..
"பகவானுக்கு சேவிங் பண்ணிட்டியா..." என ஷ்ரித்திக் கிண்டலாக கேட்கவும்..
ஷிவாக்ஷி படக்கென திரும்பி.. கண்களை சுருக்கி முறைத்து.. "இதுக்கு தான்.. நான் அந்த பாஷைய பேசறதில்ல.." என ஷிவாக்ஷி முகத்தை திருப்பிக் கொண்டாள்..
"ஹேய்.. ஜஸ்ட் ஃபார் ஃபன்.. சிரீயஸா எடுத்துக்காத.." என்றவன் தொடர்ந்தான்.. "ஷிவு.. நான் உன்கிட்ட கொஞ்சம் பேசணும்.. ??" என ஷ்ரித்திக் கூறவும்..
என்னவென.. ஷ்ரித்திக்கையே நோக்கினாள்.. ஷிவாக்ஷி.. "இந்த கல்யாணம்.. அம்மாவோட கட்டாயத்தால தான் நடந்தது.. உன் விருப்பம் இல்லாம தான் நடந்தது.. தப்பு தான்.. உனக்கு நிச்சயம் என்னை பிடிச்சிருக்காது.. ஐ நோ.. சோ.. உனக்கு என்ன பிடிக்கல அப்படின்னா.. தயவு செஞ்சு.. சொல்லு.. நீ என்னை விட்டு போயிடலாம்.. நா அதுக்கு ஏதாவது பண்றேன்.." என அவளின் விருப்பத்திற்காக.. தன் வருத்தத்தை பெரிதும் முயன்று மறைத்து.. குரல் கம்ம.. ஒரு வழியாக கூறி முடித்தான்..
ஷிவாக்ஷிக்கு ஷ்ரித்திக்கின் சொற்களை ஜீரணிக்க சிறிது நேரம் தேவைப்பட்டது..
ஷ்ரித்திக் கூறிய 'என்னை விட்டு போயிடலாம்..' என்ற வார்த்தை அவளுக்குள் எங்கோ பிசைந்தது..
நீண்ட மூச்சிழுத்து விட்டவள்.. "என்னால.. அப்படி போக முடியாது.. ?? நீங்க.. என்ன உங்க ஆத்த விட்டு போக்கறதுக்காக.. எந்த வழில யோசிச்சாலும்.. அது உங்களுக்கு மட்டுமில்ல... உங்க ஆத்துக்கே.. அவமானமாயிடும்.. அது நடக்காம இருக்கறதுக்கு தான்.. அம்மா.. கன்னியாதானம் பண்ணி வைச்சா.. அத கெடுத்துறாதேள்.. அப்பறம் நான் பட்ட கஷ்டத்துக்கு அவமானத்துக்கும்.. அர்த்தமில்லாம போயிடும்.. அது வேண்டா.. விட்ருங்கோ.. பகவான் பாத்துப்பா.." என ஷிவாக்ஷி நீளமாக கூறி முடித்தாள்..
"அப்பறம்.. உனக்கு பிடிக்காத ஒரு வாழ்க்கைய வாழுவியா.. ?? என்னை பிடிக்காம நீ எதுக்கு உன்ன கஷ்டப்படுத்திக்குற.. ?? ஷிவு.. சம்டைம்ஸ் என்னால தான் உனக்கு இந்த
கஷ்டம்னு தோனுது.. ஐ ஃபீல் கில்டி.." என ஷ்ரித்திக் தன் மனதிலிருந்ததை கூறினான்..
அதற்கு மறுமொழியாய்... சிறு கீற்று முறுவல் தோன்றியதவளுக்கு.. "நா எந்தவொரு கஷ்டமும் படல.. உங்க கூட இருக்கறதுல.. அப்பறம்.. என்ன சொன்னேள்.. ?? உங்கள பிடிக்காதுன்னா.. ?? உங்கள போய்.. எந்த பொம்படையாளுக்கும்.. பிடிக்காம போகுமா.. ?? என்னையும் சேத்தி தான் சொல்றேன்.." என ஷிவாக்ஷி கூறியதும்.. மெல்லிய இதமான சாரல் அவனை தீண்டியது .. ஷிவாக்ஷி தொடர்ந்தாள்.. "ஒரு மனுஷாளா.. உங்கள பிடிக்கும்.. ஆனா வாழ்க்கைன்னு வரப்ப.. நேக்கு தெரில.. சின்ன வயஷுல இருந்து தாத்தாவையும், அடுத்தாத்து அத்திம்பேளையும் தவிர மத்த எந்த ஆம்படையானும் நேக்கு தெரியாது.. அவ்ளோ ஏன்.. ஆம்படையான்னா என்னன்னே.. தெரியாது.. ஆனா உங்கள பாத்ததுக்கு அப்பறம் தான்.. ஆம்படையான்னா என்னன்னே தெரிஞ்சுண்டேன்.. நான் என் மனசுல இருந்ததை எல்லாத்தையும் உங்களாண்ட சொன்னதுக்கு அப்பறமும்.. நீங்க மனசுல போட்டு குழப்பிக்காதேன்னு சொன்னதுக்கு அப்பறம் தான்.. நான் கொஞ்சம் தெளிவானேன்.. எல்லாம் நீங்க பாத்துப்பேள்ன்னு நம்பிக்கை தான்.. என்னைய குழப்பிக்க வேணாம்னு சொன்னேள்.. ஆனா நீங்க குழம்பி நிக்கறேள்.. நா நினைக்கறதெல்லாம் ஒன்னே ஒன்னு தான்.. உங்களுக்கும் .. உங்க குடும்பதுக்கும் நா பொருத்தமில்லாதவா.. வேற வழி ஏதாவது இருக்கான்னு நா பாக்கறேன்.. நீங்க உங்க மைன்ட ரிலாக்ஸா வைச்சுக்குங்கோ.." என ஷிவாக்ஷி ஷ்ரித்திக்கின் மனகுமறலை போக்க நினைத்ததன் விளைவாய்.. அனைத்தும் கூறினாள்..
ஷிவாக்ஷியின் மொழிகளில் மகிழ்ச்சியும் வருத்தத்தையும் ஒருங்கே அனுபவித்தான்.. தன் மேல் அவள் வைத்திருக்கும் நம்பிக்கையும் மரியாதையும் கண்டு உள்ளம் பொங்க.. தன்னை விட்டு செல்கிறேன் என்றவுடன்.. அதற்கு தண்ணீர் தெளித்து அடைக்கியதை போலாயிற்று.. 'இந்த பொண்ணுங்களே இப்படி தான் போல..' என ஷ்ரித்திக் நினைத்துக் கொண்டான்..
"சரி.. சாரி.. நா கொஞ்சம் கோபத்தில பேசிட்டேன்.. மனசுல வைச்சுக்காத.." என ஷ்ரித்திக் மகிழுந்தில் வரும் போது கொண்ட கோபத்தை மனதில் வைத்து மன்னிப்பு வேண்டினான்..
"பரவால்ல.. பரவால்ல.." என தன் கரங்களை காற்றில் பறக்க விட்டு எகத்தாளமாக கதைத்தாள்..
அதை கண்டு ஷ்ரித்திக் புன்னகைக்க.. அவளும் அவனின் புன்னகையில் இணைந்தாள்...
"ஷிவு.. உனக்கு அக்கவுண்ட் இருக்கா.. பேங்க்ல.. ??" என ஷ்ரித்திக் வினவ.. மேலும் கீழுமாக மண்டையை ஆட்டி.. "ஓஓஓஓ.." என்க..
"அக்கவுண்ட் நம்பர் சொல்லு... ??" என ஷ்ரித்திக் கேட்கவும்..
"எதுக்கு.. ??" என ஷிவாக்ஷி குழப்பத்தை முகத்தில் வைத்து கேட்டாள்..
ஷ்ரித்திக்.. "சொல்லு.. ??" என்க.. 'செக் பண்றதுக்கு கேப்பா..' என ஷிவாக்ஷியும் கூறினாள்..
ஷிவாக்ஷி கூறிய சில மணித்தியாலங்களில் அவளுடைய கைப்பேசியில் மணியடிக்க.. எடுத்து பார்த்தவள்... வெகுவாக அதிர்ந்தாள்.. ஷிவாக்ஷியின் கைப்பேசி காண்பித்த செய்தி அப்படி.. அவளுடைய வங்கி கணக்கில் ஒரு கோடிக்கும் மேல் பணம் வந்திருந்தது தான் அதற்கு காரணம்....
"அச்சோ.. இங்க பாருங்கோ.. யாரோ.. மாத்தி பணம் அனுப்பிட்டா போல.." என ஷிவாக்ஷி பதறினாள்...
"ஓய்.. எதுக்கு இப்படி பதறுற.. நான் தான் பணம் அனுப்புனேன்.." என ஷ்ரித்திக் சாதாரணமாக கூறுவதை கண்டு..
"என்ன.. நீங்களா.. ?? ஏன் இப்படி.. பணத்தை எப்படி உங்களுக்கு திருப்பி அனுப்புவேன்.. உங்க அக்கவுண்ட் நம்பர் சொல்லுங்கோ.." என ஷிவாக்ஷி பதற்றம் குறையாது.. வினவ..
"ம்ஹும்.. சான்ஸ்லேஸ்.. உன் கிட்டயே கார்ட குடுத்திருப்பேன்.. நீ திருப்பி என்கிட்டயே தந்திருப்பே.. அதான் இப்படி.. இப்ப உன்னால முழுசா ஒரு கோடிய எடுக்கவும்.. முடியாதுல்ல.." என ஷ்ரித்திக் சிரித்துக் கொண்டே கூறவும்..
"ப்ளீஸ்.. எடுத்துக்குங்கோ.. வேண்டா.. இப்ப நீங்க எடுக்கலைனா.. நா இத தொடக்கூட மாட்டேன்.." என ஷிவாக்ஷி மிரட்டவும்..
"உன்ன நா யூஸ் பண்ண வெச்சுடுவேன்.. அது ஒன்னும் பெரிய விஷயமல்ல.. சரி இந்தா.." என மீண்டும் பணக் கட்டை ஷிவாக்ஷியின் கைகளில் திணிக்க..
"என்ன.. மறுபடியுமா.. ??" என ஷிவாக்ஷி தலையில் கை வைத்தாள்..
அவளின் கோலம் கண்டு சிரித்தவன்.. "பின்ன வெளிய போறத்துக்கு செலவுக்கு வேணும்ல.. இந்தா.." என ஷ்ரித்திக் ஷிவாக்ஷியின் கைகளில் திணித்தான்..
"சரி வா.. போலாம் கோவில் நடை சாத்திருவாங்க வா.." என ஷ்ரித்திக் எழுந்த வண்ணம் ஷிவாக்ஷியிடம் கூறவும்.. அவளும் எழுந்து அவனோடு நடக்க ஆரம்பித்தாள்..
ஷ்ரித்திக்கும் ஷிவாக்ஷியும் மகிழுந்தில் அமர்ந்ததும்.. வண்டியை நேராக இல்லம் நோக்கி விடுத்தான்..
ஷிவாக்ஷி காரின் ஜன்னலில்.. கைகளில் தலை வைத்து படுத்துபடி வேடிக்கை பார்த்துக் கொண்டே வந்தாள்..
ஷ்ரித்திக்கிற்கு அவளின் செய்கை கண்டு மென்னகை தோன்றியது..
போக்குவரத்து ஒளி சிவப்பை காண்பிக்க.. அனைத்து வாகனங்களும் அதன் ஒளி பச்சை நிறமாக மாற காத்திருந்தனர்..
அப்போது ஒரு ஜோடி கண்கள் சாதாரணமாக கண்களை சுழல விட.. ஜன்னலில் கற்றை கூந்தல் முகத்தில் தவழ.. வேடிக்கை பார்க்கும் ஷிவாக்ஷியை கண்டதும்.. முகத்தில் இனிய அதிர்ச்சி கண்கள் வெளிபடுத்த.. இதழ்கள் புன்னகை தவழ்ந்தது.. ஷிவாக்ஷியின் அருகே வர மகிழுந்தின் கதவை திறந்து வெளியே அனைத்து வாகனங்களின் வசைவு மொழிகளை கேட்டு கொண்டே.. கிட்டத்தட்ட ஓடி .. அவளை நெருங்கவும்.. போக்குவரத்து பச்சை நிறமாகி .. அனைவரையும் செல்ல சமிக்ஞை செய்யவும் சரியாய் இருந்தது..
அனைத்து வாகனங்களும் புறப்பட்டு கொண்டிருக்க.. ஷ்ரித்திக்கும் தன் மகிழுந்தை உசுப்பி விட்டு நகர்ந்தான்..
ஷிவாக்ஷியும் நகர.. அந்த மகிழுந்தை பின்தொடர்ந்தே.. "ஏய்.. ஏய்.." என கத்திக்கொண்டே ஓடினான்..
அப்போது ஒரு இருசக்கர வாகனம் வந்து அந்த ஆடவனை எதிர்பாராது மோதிவிட்டது..
அந்த அடையாளம் அறியாத ஆடவனோ.. கத்திக் கொண்டே உருண்டு விழுநதான்.. போகும் அவளின் வாகனத்தையே கண்டு.. "ஏய்.. நீ எனக்கு தாண்டி.. உன்னை விடமாட்டேன்.." என வெறிக் கொண்டு கத்தினான்.. அவன்..
இதை கவனியாது இருவரும்.. பயணித்தனர்.. தங்கள் யோசனையில் இருந்தனர்..
"ஷிவு.. ஐ ஹேவ் சம் இம்பார்டன்ட் வொர்க்.. சோ.. நா கிளம்பறேன்.. நீ பாத்துக்கோ.." என மகிழுந்தின் கதவை திறந்து
ஷிவாக்ஷியிடம் கூறி அவளை இல்லத்தில் இறக்கிவிட்டு விடைபெற்று சென்றான்.. ஷ்ரித்திக்..
ஷிவாக்ஷியும் இறங்கி ஷ்ரித்திக்.. செல்வதையே பார்த்து விட்டு உள்ளே நுழைந்தாள்..
ஷிவாக்ஷி உள்ளே நுழையவும்.. கொத்தமல்லி அவளை பார்க்கவும் சரியாய் இருந்தது..
"ஏனுங்க.. யாருங்க.. நீங்க.. ?? நீங்க பாட்டுக்கு உள்ள வரீங்க.. ??" என கொத்தமல்லி அவளை பேசவிடாது பொரிந்தான்..
அப்போது அவ்வருகே வந்த ஷ்ரித்திக்கின் அம்மா இந்திரகவி இதை கேட்க நேர்ந்தது..
ஷிவாக்ஷி பதில் கூறும் முன்.. வேகமாக அவர்களருகே வந்து "மல்லி.. என்ன நீ.. ?? இவ தான்.. இந்த வீட்டு மருமக.. ஒரு பொண்ணு கிட்ட இப்படி தான் பேசுவியா.. ?? இது மட்டும் ஷ்ரித்திக்குக்கு தெரிஞ்சுது.. நீ காலி.." என இந்திரகவி கோபத்தில் மிரட்டலாக கதைத்தார்..
இந்திரகவியிடம் .. கொத்தமல்லி..
"இல்லிங்க.. புது ஆளு நினைச்சு தான் .. இப்படி பேசிபுட்டேன்.. அம்மா.. அம்மணி மன்னிச்சுகுங்கோவ்.. ஐயா கிட்ட மட்டும் சொல்லிடாதீங்க.." என திரும்பி ஷிவாக்ஷியிடம் மன்னிப்பை கோரினான்..
"இல்ல.. பரவால்ல.. விடுங்கோ.." என ஷிவாக்ஷி மறுமொழி கூறினாள்..
இந்திரகவி கொத்தமல்லியிடம் வேலையை கூறிவிட்டு ஷிவாக்ஷியிடம் திரும்பினார்.. அதே சமயம் சித்தி தேவிகா ஷிவாக்ஷியின் அருகே வந்தார்..
"ஆமா.. சாப்டியாம்மா.. ??" என சித்தி தேவிகா ஷிவாக்ஷியிடம் வாஞ்சையாக கேட்டார்..
"இல்லம்மா.. இன்னிக்கு ஏகாதசி.. அதான்.. விரதம்" என ஷிவாக்ஷி மொழிந்தாள்..
"ஓஓஓ.. சரி.. அப்ப பால் குடிக்கலாம்ல.. மல்லி.. பாலுல நாட்டுச் சர்க்கரை போட்டு ஒரு கிளாஸ் கொண்டு வா.. அப்படியே.. இரண்டு காஃபியும் கொண்டு வா.." என இந்திரகவி கொத்தமல்லியிடம் சொல்லிட்டு.. ஷிவாக்ஷியிடம் திரும்பினார்..
"வாம்மா.." என ஷிவாக்ஷியை அழைத்து சோஃபாவில் அமருவதற்கும்.. கொத்தமல்லி பாலும் காஃபியை கொண்டு வருவதற்கும் சரியாயிருந்தது..
அம்மா இந்திரகவியும், சித்தி தேவிகாவும் காஃபியை எடுத்துக் கொண்டு..
ஷிவாக்ஷியிடம் பால் கிளாஸை நீட்டினான்.. இந்திரகவி.. தயக்கத்தின்னோடே அதைப் பெற்றுக் கொண்டாளவள்..
"எதுக்கு கூச்சப்படற.. ?? ஷ்ரித்திக் நேத்து சொன்னமாதிரி.. நீ தான் இந்த நாயக் குடும்பத்தோட மருமகள், ராணி, எல்லாம்.. பாலைக் குடிம்மா.." என சித்தி தேவிகா சிரித்துக் கொண்டே மொழியவும்..
"ஃப்ரீயா இரும்மா.. பாலைக் குடி.." என புன்னகையுடன் கூறினார்.. இந்திரகவி..
ஷிவாக்ஷியும் சரியென மண்டையை ஆட்டிவிட்டு.. பாலை ஒரே மடக்கில் குடித்து முடித்தாள்..
ஷிவாக்ஷியின் முகத்தை கண்டு இருவரும் சிரித்துக் கொண்டனர்.. ஏனெனில் ஷிவாக்ஷி பாலை குடித்த வேகத்தில்.. அவளின் மேல் உதட்டில் பால் மீசை போல ஒட்டியிருந்தது..
அவர்களிருவருக்கும்.. ஷிவாக்ஷியின் செய்கை குழந்தையை தான் நினைவுப்படுத்தியது.. ஷ்ரித்திக்கின் அம்மா இந்திரகவி.. சிரித்துக் கொண்டே ஷிவாக்ஷி வாயை துடைத்து விட்டார்..
ஷிவாக்ஷியும் தன் வாயை துடைத்துக் கொண்டாள்..
"இங்க பாரும்மா.. இது உன் வீடு.. நீ ஃப்ரீயா இரு.. இங்க யாரும் உன்ன எதுவும் சொல்ல மாட்டாங்க.. சொல்லவும் முடியாது.. ஏன்னா.. நீ ஷ்ரித்திக்கோட வைஃப்.." என சித்தி தேவிகா புன்னகை மாறாமல் மொழிய..
"தேவி.. கொஞ்சம் அமைதியா இரு.. இப்ப கொஞ்சம் பரவால்லையா.. ஷிவு.. நா உன்கிட்ட கொஞ்சம் பேசணும்.." என கூறவும்..
ஷிவாக்ஷி 'என்ன ஆளாளுக்கு பேசனும்.. பேசனுங்கறா.. ??' என நினைத்துக் கொண்டிருக்கும் போதே.. இந்திரகவி ஷிவாக்ஷியின் கரம் பற்றினார்.. அதில் மீண்டவள்.. அவரைக் காண... இந்திரகவியின் கண்களில் நீர் திரையிட்டது..
"என்ன மன்னிச்சிடும்மா.. நா என்னோட சுயநலத்துக்காக.. உன்ன என் பையனுக்கு கல்யாணம் பண்ணி வைச்சது.. ரொம்ப பெரிய தப்பு.. அதுக்காக என்ன மன்னிச்சிடு.. எனக்கு அந்த சமயத்தில என்ன பண்றதுன்னு தெரியாம.. இப்படி பண்ணிட்டேன்.. என்னால நீ நிறையா கஷ்டப்பட்டுட்ட.." என இந்திரகவி நீர் வழிய.. ஷிவாக்ஷியின் கரத்தை பற்றி.. மொழிந்தார்..
"அச்சோ.. என்னம்மா.. நீங்க.. ?? இதுக்கு போய்.. கண்ணுல தண்ணி விடறேள்.. நடந்து போயிடுத்து.. விடுங்கோ.." என ஷிவாக்ஷி அவரை ஆறுதல் படுத்தவும்.. தேவிகாவும்.. அவரின் தோளைப் பற்றி அணைத்துக் கொண்டார்..
"இந்த வீட்டுக்கு மாயா மருமகளா வந்திருந்தா.. என்ன சொந்ததத்துக்குள்ள இன்னும் நெருக்கம் உருவாகும்னு நினைச்சோம்.. ஆனா எல்லாம் மாறிப்போச்சு.." என சித்தி தேவிகா மொழிய..
"ஆனா ஒன்னு மாயா மருமகளா வந்திருந்தா.. கூட இவ்ளோ.. சந்தோஷப்பட்டிருக்க மாட்டோம்.. நாங்க எல்லாம் அவ்ளோ சந்தோஷமா இருக்கு.. ஏன்னு தெரில.. ??" என இந்திரகவி கண்களை துடைத்துக் கொண்டு ஷிவாக்ஷியையும் தேவிகாவையும் பார்த்து புன்னகையுடன் கதைத்தார்..
"அம்மா.. நான் ஒரு கேள்வி கேக்கவா.. ??" என ஷிவாக்ஷி கேள்வியாக பார்த்து கேட்டாள்.. என்னவென இருவரும் ஷிவாக்ஷியை நோக்கினர்..
"இல்ல.. கன்னியாதானத்தப்போ.. உங்க ஆத்துக்காரரே அவ்ளோ பேர் இருந்தா.. ?? உங்க சொந்தத்தை விட்டுண்டு ஏன்.. என்னை அவாளுக்கு கன்னியாதானம் பண்ணி வைச்சேள்.. ?? நா அவ்ளோ வொர்த் இல்லையே.. ??" என ஷிவாக்ஷி கேள்வி கணைகளை தொடுத்தாள்..
ஷிவாக்ஷியின் கேள்விகளுக்கு பதில் தெரிந்தாலும்.. கூற முடியாதே என நினைத்தார்.. இந்திரகவி.. "இந்த கேள்விக்கு பதில்.. உன் புருஷன் தான் சொல்லணும்.. அவன் சொல்றது தான் சரியாயிருக்கும்.. இப்ப சொல்லுவானான்னு தெரில.. ஆனா கொஞ்ச நாள் போனதும் உனக்கே தெரிஞ்சிடும்.." என இந்திரகவி ஷிவாக்ஷியின் தலையை கோதி மொழிந்தார்..
தேவிகா இந்திரகவியை பார்க்கவும்.. இந்திரகவி தேவிகாவை அர்த்தம் பொதிந்த பார்வையை வீசினார்..
அப்போது சஞ்சை, ராகுல், வர்ஷா ஜானவி.. பேசிக் கொண்டே வரவேற்பறைக்கு வந்தனர்..
"ஹே... ஷிவு.. எங்க போன.. ??" என கேட்டுக் கொண்டே.. வர்ஷா.. ஷிவாக்ஷியின் அருகே வந்தமர்ந்தாள்..
"ஏய்.. எரும.. என்ன டி.. அண்ணன் பொண்டாட்டிய பேர் சொல்லி கூப்படற.. ?? ஒழுங்கா அண்ணின்னு கூப்பிடு.." என சித்தி தேவிகா.. அவளின் காதை திருகினார்..
"ஸ்ஹாஆஆஆ.. சரிம்மா.. சரிம்மா.. விடும்மா.." என வர்ஷா தன் தாயிடம் இருந்து காதை விடுவித்து கொள்ள போராடினாள்..
உடன்பிறப்புகள் அவளை பார்த்து கொக்கலிக்கா காண்பித்து ... 'ப்பூ.. ப்பூ..' என கிண்டலாக சிரித்தனர்..
"ம்ம்ம்.. அண்ணின்னு கூப்பிடு.." என சித்தி தேவிகா.. அதட்டினார்..
"அச்சோ.. அம்மா.. அதெல்லாம் வேணாம்.. எங்களுகெல்லாம் ஒரே வயசு தான்.." என சித்தி தேவிகாவிடம் கதைத்துவிட்டு வர்ஷாவிடம் திரும்பி.. "வரு.. நீ எப்பவும் போல கூப்பிடு..." என ஷிவாக்ஷி அவர்களிடம் மொழியவும்...
"எதுக்கு அண்ணி.. நாங்க எல்லாம் அண்ணா கிட்ட நாங்க திட்டு வாங்க வா.. ?? அதெல்லாம் வேணா.. நாங்க அண்ணினே கூப்புட்டுகறோம்.." என சஞ்சை.. ஷிவாக்ஷி அமர்ந்திருக்க.. அவளுக்கு மேலே தலையை நீட்டி மொழிந்தான்..
ஷிவாக்ஷிக்கு சிரிப்பு வந்தது.. சஞ்சையின் செயலை கண்டு.. அவளும் அதே நிலையில்.. "நா உங்க அண்ணா கிட்ட பேசுறேன்.. நீங்க எப்பவும் போல கூப்பிடுங்கோ.." என ஷிவாக்ஷி அவர்களிடம் கூறவும்.. சகோதரர்கள் நால்வரும் தங்களின் அன்னையை பார்த்தனர்.. அவர்களின் அனுமதிக்காக..
இந்திரகவியும் தேவிகாவும் கண்களை முடி திறந்து .. அனுமதிக்கவும்.. ஷிவாக்ஷியிடம்.. "சரி.. ஷிவு.. நாங்க.. அப்படியே.. கூப்படறோம்.." என ராகுல் கதைத்தான்..
இவர்களின் மொழிகளை எல்லாம்.. மாயா ஒரு மூலையிலிருந்து கேட்டுக் கொண்டு தான் இருந்தாள்..
"மருமகளா நா வந்திருந்தா.. அவ்ளோ.. சந்தோஷப்பட்டிருக்க மாட்டிங்களா.. இந்த பட்டிக்காட்டு நாய் வந்ததுல அவ்ளோ சந்தோஷமா.. ஏய்.. ஷ்ரித்திக் உன் பக்கத்துல இருக்கான்னு ஆடாத டி.. எப்படி ஷ்ரித்திக்க உன் கிட்ட இருந்து.. என் பக்கம் கொண்டு வரதுன்னு எனக்கு தெரியும்.." என மாயா தனக்குள்ளாக குரோதத்தில் கரித்துக் கொண்டு அகன்றாள்..
ராகுல், சஞ்சை, வர்ஷா, ஜானவி.. நால்வரும் ஷிவாக்ஷியிடம் சகஜமாக சிரித்து பேசி மகிழ்ந்திருந்தனர்.. ஷிவாக்ஷியும் தன் தயக்கத்தை மறந்து.. அவர்களோடு நன்றாக.. ஒரே வயதினர்.. என்பதால் இன்னும் நெருக்கமாகவே பேசி வந்தனர்..
அப்போது தீவாவும் நேஹாவும் அங்கே வர.. அவர்களோடு இவர்களும் கலந்து கொண்டனர்..
"என்ன.. புது அண்ணியோட கூத்தா.. ??" என நேஹா அவர்களுருகே வந்தமர்ந்தாள்..
"கூத்தா.. பாத்தா அப்படி தெரியலியே.. ஷிவு.. ஆர் யு ஆல்ரைட் நவ்.. ??" என தீவா அவளருகே வந்தமர்ந்தாள்..
"பரவால்ல.." என ஷிவாக்ஷி மறுமொழிந்தாள்..
"ஹே.. அதென்ன .. ?? இவா இந்த ஆத்தோட மருமக தான.. ?? அப்பறம் ஏன் என்ன.. முத்த மருமகன்னு சொல்றேள்.. ??" என ஷிவாக்ஷி ஆர்வமாக வினவினாள்..
நேஹாவும் தீவாவும் அனைவரும் ஒருவரையொருவர் பார்த்து கொண்டனர்..
நேஹா.. "ஷிவு.. உனக்கு முதல்ல இருந்து சொன்னா தான் புரியும்.. எங்க சாரி.. நம்ம குடும்பம் ஒரு ராஜா பரம்பரை குடும்பம்.. தாத்தாவ அவங்க அப்பா அம்மா தவமிருந்து பெத்தாங்க.. ஆனா.. தாத்தாவையும்.. அவங்க அப்பா அம்மாவையும்.. தூக்கி கொண்டாடுர மாதிரி சொந்தம் பக்கத்துல இல்ல.. அதனால.. தாத்தா வோட அப்பா அம்மா தாத்தா கிட்ட சொன்னதெல்லாம் ஒன்னு தான்.. சொந்த பந்தங்களோட ஒன்னா.. கூட்டுக் குடும்பமா தான் வாழனும்னு.." என நேஹா கூறியதும்.. தொடர்ந்து.. சஞ்சை தொடர்ந்தான்..
"அதனால.. தாத்தா.. கொஞ்சம் பெரியவரா ஆனதும்.. பாட்டிய லவ் பண்ணி கல்யாணம் பண்ணிக்கிட்டாங்க.. தாத்தாவோட அப்பா அம்மா பெருசா எந்த எதிர்ப்பும் சொல்லல.. நாம தான் தனிப் பிள்ளையா வளந்துட்டோம்.. நம்ம பிள்ளைங்களாவது.. ஒன்னா வளரட்டும்னு.. மூனு பிள்ளைங்களா பெத்துகிட்டாங்க.." என சஞ்சை கூறியதை தொடர்ந்து.. ஜானவி மொழிந்தாள்..
"அதுல மூத்தவர்.. உன் மாமனார்.. இரண்டாவது சித்தப்பா.. தேவ தேவன்.. மூனாவது.. கடைக்குட்டி சமீரா அத்தை.." என ஜானவி மொழிந்ததும்..
தொடர்ந்தான்..
ராகுல்.. "அதுக்கப்புறம்.. தாத்தாவும் பாட்டியும் சேர்ந்து எல்லாருக்கும் பாத்து பாத்து கல்யாணம் பண்ணி வைச்சாங்க.. கூட்டு குடும்பமா எல்லாரும் இருக்கனும்னு தாத்தா ஆசைப்பட்டாங்க.." என ராகுல் முடித்ததும்..
நேஹா தொடர்ந்தாள்.. "அப்பா.. அதான் நேத்து உன்ன திட்டுனார்ல.. யாதவன்.. அவர் வேறயாருமில்ல இந்திரகவி அத்தையோட அண்ணா தான்... சொந்தம் தான எல்லாரும் ஒன்னா இருந்துட்டோம்.. தீவா.. எப்படி பாத்தாலும்.. அப்பாவோட மருமகள்.. தான் .. ஆனா ஷ்ரித்திக் தான் இந்த குடும்பத்தோட மூத்த வாரிசு.. அதான் உன்ன மூத்த மருமகள்னு சொல்றோம்.. தீவாவும் மகேந்திரன் அண்ணாவும்.. அப்ராட்லயே லவ் பண்ணிக்கிட்டாங்க.. என் புருஷன் கார்த்திக் ஒரு அனாதை.. நாங்க லவ் மேரேஜ்.. தாத்தா தான்.. எல்லாரும் ஒன்னா இருக்க வெச்சிருக்காரு.." என அனைவரும் அவர்களின் குடும்ப கதைகளை மொழிந்தனர்..
"ஹப்பா.. என்ன எப்படி மூத்த மருமகனு சொல்றீங்கனு தான் கேட்டேன்.. ஆனா.. அதுக்கு வரலாறே சொல்லிட்டேளே.. நேக்கு இப்பவே.. கண்ண கட்றது.." என ஷிவாக்ஷி தலையில் கை வைத்து.. மயக்கமாவதை போல் நடிக்கவும்..
"ஏய்... உன்ன.. ??" என அனைவரும் நெருங்கி.. அவளை மேலோட்டமாக அடிக்க நெருங்க..
அப்போது ருத்துக் குட்டி.. சர்ரென சரித்து கொண்டு ஷிவாக்ஷியின் முன் வந்து நின்றான்..
"ரதகஜ துரக பதாதிகள் எதுப்பினும்..
அதகளம் புரிந்திடும் வீரம்..
இவன் மதபுஜம் இரண்டும்
மலையென எழுந்திட..
செதுக்களம் சிதரிடும் வீரம்.."🎵🎶
அதே நேரத்தில் ரித்து குட்டி.. ஐ பேட்ல் வீரம் படத்தில் இடம்பெற்ற பாடலை ஒலிக்கச் செய்தான்..
"என் செல்லம் மேல கை வைக்க.. என்ன தாண்டி தொடுங்க பாக்கலாம்.." என ருத்துக் குட்டி.. வீரம் பட வசனத்தை தன்னுடைய பாணியில் மொழிந்தான்..
"அப்படியா.. ?? அதை மீறி கை வைச்சா.. என்ன டா பண்ணுவ.." என ராகுல் அவனின் மண்டையை தட்டினான்..
"பண்ணுவேன்..." என தன் கழுத்தை தடவிக் கொண்டே தோரணையாக கதைத்தான்..
"ராகுல்.. இவன் பண்ணாலும் பண்ணுவான்.. அமைதியா இரு.." என நேஹா ராகுலை எச்சரிக்கை செய்தான்..
அதையும் மீறி ஷிவாக்ஷியை தொடப் போக.. ஹோலி துப்பாக்கியை அவன் முன் நீட்டி வண்ண நீரை ராகுலுக்கு அபிஷேகம் செய்து விட்டான்..
அனைவரும் ராகுலை நிலை கண்டு .. புன்னகைக்க.. ராகுல்.. "டேய்.. உன்ன.. ??" என ருத்ராவை நெருங்க..
"வேணா.. அப்பறம்.. உனக்கு தான் பிராப்ளம்.." என ருத்ரா எச்சரிக்கை விடுக்க..
"சரி விடுரா.. விடுரா.. நாம வாங்காத அடியா..மிதியா.." என ராகுலிடம் சஞ்சையும் ஜானவியும் மொழிய..
"சும்மா இருங்க.. ராகுல் நீ போய்.. ட்ரஸ் சேன்ஜ் பண்ணிட்டு வா.." என தீவா கூறியதும்.. ராகுலும் உடை மாற்றி வந்தான்..
அப்போது ஷிவாக்ஷி.. "ருத்து குட்டி.." என ருத்ராவை தூக்கிக் கொண்டாள்..
ரித்துல் அவர்களருகே வந்து உதட்டை பிதுக்கினான்..
ஒருபக்கம் ரித்துவையும.. மறுபக்கம் ருத்துவையும் தூக்கி கொஞ்சிக் கொண்டிருந்தாள்..
வர்ஷா.. ஷிவாக்ஷியின் அருகே வந்து.. "ஷிவு.. ஷிவு.. பெயிண்டிங்.. பண்ணி தரேன்னு சொன்னில்ல.. ப்ளீஸ் இப்ப பண்ணி தாயேன்.." என வர்ஷா ஷிவாக்ஷியின் அருகே வந்து கெஞ்சுவதை போல கேட்க..
"சரி .. இப்ப வரையலாம்.. ஆனா.. திங்ஸ்.. ரும்ல இருக்கே.. ??" என ஷிவாக்ஷி ருத்துவையும், ரித்துவையும் இருவரையும் சுமந்த படி கூற..
"ஷிவு.. அவனுங்கள.. இறக்கி விடு.. உனக்கு தான் கை வலிக்கும்.." என தீவா கூறவும்.. நேஹாவும் அதற்கு ஒத்து ஊதினாள்..
ருத்ராவும், ரித்துலும்..
இருவரும்.. "அம்மா.." என கண்கள் மின்ன பார்க்க..
"இதெல்லாம் நம்பற காலம் மலை ஏறி போச்சு.." என நேஹா திரும்பிக் கொண்டாள்.. ரித்துல் தீவாவை பார்க்க.. "இங்கயும் அதான்.." என்றாள்..
அனைவரும் புன்னகை புரிந்தனர்..
"சரி விடுங்க.. ருத்து, ரித்து.. வரு.. நீ வேணா.. ரூம்ல இருக்கற.. என் பெயிண்டிங் திங்ஸ் எல்லாம் எடுத்துண்டு வாயேன்.." என ருத்துவையும் ரித்துவையும் இடையில் தாங்கிய படி கூற..
"இல்ல.. நாங்க அண்ணா.. ரும்முக்கு போக மாட்டோம்.. நீ போய் எடுத்துட்டு வா.." என வர்ஷா ஷிவாக்ஷியிடம் மொழியவும்..
ருத்துவையும், ரித்துவையும் இறக்கி விட்டு..
குழப்பத்தை சுமந்து கொண்டே நகர்ந்தாள்.. ஷிவாக்ஷி.. தங்களின் அறைக்கு சென்று ஒவிய உபகரணங்களை எடுத்து வந்தாள்..
அனைவரும் வரவேற்பறையில்.. படிக்கட்டில் அமர்ந்திருந்தனர்..
"வரு.. நா என்ன வரையனும்னு சொல்லு.. வரைஞ்சுடறேன்.." என ஷிவாக்ஷி கேள்வியெழுப்பினாள்..
"ம்ம்ம்ம்ம்ம்.. எங்களையே வரைஞ்சுடேன்... நல்லாருக்கும்.." என வர்ஷா ஆசையோடு கேட்கவும்..
"சரி.. அதே.. நன்னாயிருக்கும்.. ஆமா.. நீங்க எல்லாம் என்ன படிச்சிருக்கேள்.. ??" என ஷிவாக்ஷி ஒவியப் பலகையை எடுத்து வைத்து கொண்டே கேட்டாள்..
வர்ஷா.. "நா எம்.பி.பி.எஸ்.. படிச்சுட்டு இருக்கேன்.. ஃபைனல் இயர்ல.. ட்ரைனிங்.. போயிட்டு இருக்கு.. ஜானவி .. ஆர்க்கிடெக் படிச்சுட்டு இருக்கா.. சஞ்சை.. எம்.பி.ஏ படிச்சுட்டு இருக்கான்.. ராகுல்.. எம்.சி.ஏ படிக்கிறான்.." என்றவள்.. மொழிந்து கொண்டிருக்க..
ஷ்ரித்திக்கும் அப்போது தான் உள்ளே வந்தான்..
ஷிவாக்ஷி இதையெல்லாம் கேட்டு.. 'ஹ்ம்ம்ம்ம..' என உதட்டை பிதுக்கினாள்..
"ஹாய்.. அண்ணா.. என்ன இன்னிக்கு சீக்கிரமா வந்துட்டிங்க.. ??" என ஜானவி வினவினாள்..
"ஏற்கெனவே வொர்க்ஸ முடிச்சு வைச்சுட்டு தான்.. கல்யாணத்துக்கு வந்ததே.. இன்னிக்கு கொஞ்சமா தான் இருந்தது.. மீட்டிங் வேற இருந்தது.. அட்டென்ட் பண்ணிட்டு வந்தேன்.. மீதிய இங்க பாத்துக்கலாம்னு வந்துட்டேன்.." என ஷ்ரித்திக் மொழிந்த வண்ணம் அவர்களருகே வந்தான்..
ஷிவாக்ஷி கையில் துரிகையும், வண்ணங்களையும் இருப்பதை கண்டு..
"என்ன.. ஒன்னா இருக்கீங்க.. ?? ஷிவாக்ஷி கையில ப்ரஷ்.. போர்ட்.. என்ன நடக்குது இங்க.. ??" என கேட்டபடியே.. அமர்ந்தான்.. ஷ்ரித்திக்..
"ஷ்ரித்திக்.. ஷிவு.. எங்கள வரைய போற அதான்.." என நேஹா கூறினாள்..
"ஷிவு.. உனக்கு பெயிண்டிங் தெரியுமா.. ??" என்று ஆச்சர்யமாக கேட்டான்..
ஷிவாக்ஷி பதில் கூறும் முன்.. "என்ன .. அண்ணா.. இப்படி கேக்கறீங்க.. ?? ஷிவு ஒரு பெரிய ஆர்டிஸ்ட்.. வொர்ல்ட் ரெக்கார்ட் எல்லாம் பண்ணிருக்கா..." என ராகுல் மொழிய..
"ஆமாம்.. அண்ணா.. அதுவும் இல்லாம... ஷிவு.. படிச்சதே அது தானே.. B.A., (arts and paintings) .. ஏன் அண்ணா.. உங்களுக்கு தெரியாதா.. ??" என ஷிவாக்ஷி கூற வந்ததை தடுத்து.. வர்ஷாவே மொழிந்தாள்..
ஷிவாக்ஷி ஷ்ரித்திக்கை பார்த்து இளித்து விட்டு.. வர்ஷாவிடம் திரும்பி.. "பென்சில் அர்ட்டா.. இல்ல.. மார்டன் கலர் ஆர்ட்டா.. ??" என வினவ..
"ஹ்ம்ம்.. இரண்டும்.. வேணும்.." என வர்ஷா.. கத்தினாள்..
"ஏன்.. ஏன்.. கத்துற.. ??" என வர்ஷாவின் மண்டையை தட்டி தள்ளினான்.. ராகுல்..
ஷிவாக்ஷி "சரி.. கொஞ்சம் நேரம் அப்படியே போஸ் மட்டும் குடுங்க போதும்.." என அவள் கதைக்கவும்..
ருத்ரா அவளருகே.. வந்து.. "ஷிவு.. எனக்கு ஆம்ஸ் பெருசா வரை.. அப்பறம்.. எனக்கு புருவம்.. விஜய் காந்த் மாதிரி தூக்கி வை.. நா கெத்தா மேன்லியா இருக்கனும்.." என அடுக்கிக் கொண்டே போனான்..
ரித்துவும்.. "எனக்கு கூலிங் கிளாஸ் போட்டு மாதிரி இருக்கனும்.. அப்பதியே.. என் முதி.. காத்துல பறக்கனும்.." என இருவரும் அடுக்கிக் கொண்டே போக..
"டேய்.. தடி மாடுங்களா.. இப்ப மட்டும் இங்க வரல.. உங்க ரெண்டு பேரு முஞ்சியும் கழுதை பண்ணி மாதிரி வரைய சொல்லிடுவேன்.." என நேஹா திட்ட தொடங்க..
"ஏய்.. அம்மா.. இந்த இரண்டு ஆம்பளைங்கள கை நீட்டி.. பேசுற.." என ரித்து கூற..
"பேசற வாய் தவடாவ நெவுத்திருவேன்.. வில்லன் அஜித் மாதிரி தான் திரிவ.. ஜாக்கிரதை.." என தீவா மிரட்டினாள்..
ருத்து ரித்து.. இருவரும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டே.. கப்சிபென அமர்ந்தனர்..
ஷிவாக்ஷி புன்னகையுடன் அனைவரையும் ஒரு தரம் நன்கு கவனித்தாள்.
படிக்கட்டில்
ராகுல், சஞ்சை, ஜானவி, வர்ஷா.. இடப்பக்கத்தில் வரிசையாக அமர்ந்திருக்க..
நேஹா, தீவா, ருத்து, ரித்து .. வலப்பக்கத்தில்.. வரிசையாக அமர்ந்திருக்க..
அனைவரும் முக்கோண வடிவில் வரிசையாய் அமர்ந்திருந்தனர்..
நடுவே ஷ்ரித்திக் கால் முட்டில்.. கைகளை பதித்து.. ராஜனாக அமர்ந்திருந்தான்..
நன்கு கவனித்து முடித்து.. அவர்களிடம்... "இப்ப.. ஃப்ரீ.. ஆகிக்கோங்க.." என மொழிந்து விட்டு..
பென்சிலை எடுத்து.. போர்டில்.. இரண்டு முறை தேய்த்து விட்டு.. பிறகு.. சர் சர்ரென இழுத்து இழுத்து சில வினாடிகளில் ஓவியத்தை வரைந்து முடித்தாள்..
"வரு.. இந்தா.." என ஷிவாக்ஷி தான் வரைந்து வைத்திருந்ததை வர்ஷாவிடம் தந்தாள்..
அதை கண்டு அனைவரும் ஆச்சரியமடைந்தனர்.. "ஹே.. அவ்வளவு தான.. இவ்ளோ சீக்கிரம் முடிச்சிட்ட..." என நேஹா மட்டுமன்றி அனைவரும் வியந்திருக்க.. ஷ்ரித்திக்.. "வர்ஷா அத தா.." என ஷ்ரித்திக் ஆச்சரியம் அடைந்து.. வர்ஷாவிடம் வாங்கின்ன்.. வரைந்திருந்த ஓவியத்தை கண்டு மலைத்து போனான்..
ஏனெனில்.. அவ்வளவு நுணுக்கமாக இருந்தது.. ராகுல் விரலில் இருந்த சிறு கீரலையும் விடாது.. வரைந்திருந்தாள்.. அதேபோல தன் நெற்றியில் அடிப்பட்டிருந்த தழும்பையும் அப்படியே வரைந்திருந்தாள்.. சில வினாடியில் எப்படி இப்படி வரைந்தாள்.. என ஒவியத்தை கண்டு பிரமித்து போனான். ஷ்ரித்திக்.. தன் மனையாள் இவ்வளவு திறமையானவளா.. ?? என வியந்தான்..
மெய்மறந்து நின்றவனை கலைத்தது.. வர்ஷாவின் குரல்..
"மாடர்ன் கலர் பெயிண்டிங்.." என வர்ஷா.. ஷிவாக்ஷியிடம் வினவ..
"கொஞ்சம்.. வைட் பண்ணு.. அது கொஞ்சம் நாழி ஆகும்.." என மொழிந்து விட்டு..
ஓவியத்தில் தன்னை நுழைத்தாள்.. ஓவியத்தில் தன்னை மறந்து வரைந்திருந்தவளை.. ஷ்ரித்திக் காதல் வழியும் கண்களில் ரசனையோடு கண்டான்.. சில மணித் தியாளங்களில்.. ஓவியத்தை முடித்தாள்.. ஷிவாக்ஷி..
"வரு இந்தா.." என ஷிவாக்ஷி தான் வரைந்த ஓவியத்தை நீட்டினாள்..
"ஹே.. ஷிவு.. அப்படியே.. ஃபோட்டோ மாதிரியே இருக்கு.. ஹப்பா.. இப்படியெல்லாம் வரையமுடியுமா.. ?? ச்சே.. செம.." என வர்ஷா புகழ்ந்து தள்ளினாள்..
ஷிவாக்ஷிக்கு புகழ்ச்சியை சிறிதும் கேளாது.. புன்னகை புரிந்தாள்..
ஷ்ரித்திக்கும் அவர்களின் அருகே வந்து.. ஓவியத்தை கண்டவன்.. இன்னும் மலைத்து போனான்..
ஏற்கெனவே.. அவளுடைய பென்சில் ஓவியத்தில் இருந்து மீளாந்திருந்தவன்.. இதை கண்டு இன்னும் பிரம்மித்தான்..
அப்படியே.. புகைப்படமும் ஷிவாக்ஷி வரைந்த ஓவியத்தை ஒப்பிட்டால்.. ஒன்றாகவே இருக்கும்.. புகைப்படம் எடுத்தார் போல வரைந்திருந்தாள்.. அவள்..
அவர்கள் அமர்ந்திருந்த.. படிக்கட்டுகளில்.. ஜமக்காள விரித்திருந்தனர்.. அந்த பின்னல் கூட தெளிவாய்.. அச்சு பிசகாமல் வரைந்திருந்தாள்.. ஷ்ரித்திக்கின் நகத்தில் இருந்த பிறை முதற் கொண்டு அனைத்தும் நுட்பமாகவும்.. நுணுக்கமாகவும் இருந்தது..
"ஓகேவா.. ஏதாவது சேன்ஜஸ்.. பண்ணனுமா.. ??" என ஷிவாக்ஷி கேள்வியாக நோக்கினாள்..
"ஹே.. இதுவே ரொம்ப சூப்பரா இருக்கு.. இதுல சேன்ஜஸான்னு கேக்கற.. ?? நீ வரைவன்னு ஜானவி சொன்னா.. ஆனா இவ்ளோ நல்லா வரைவேன்னு தெரியாது.. ஆசம்மா இருக்கு.." என தீவா வரைந்திருந்த ஓவியத்தில் பார்வை விலகாது கதைத்தாள்..
"சூப்பர்.. அண்ணி.. சாரி.. ஷிவு.. உனக்குள்ள.. இப்படியொரு திறமையா.. செம.." என ராகுலும் சஞ்சையும் மாறி மாறி புகழ்ந்தனர்..
வர்ஷா.. கிட்டத்தட்ட அவளை தூக்கிக்கொண்டாள்.. "சூப்பர் டி.. செம .." என கட்டிக் கொண்டாள்..
ஜானவி.. ஷிவாக்ஷியை அணைத்துக் கொண்டாள்.. "சூப்பர் மா..பிச்சுட்ட.." என மொழிந்தாள்..
"சரி.. சரி.. போதும்.. அவளை இறக்கி விடுங்க.." என பாட்டி தேவசேனா பக்கத்தில் தாத்தா அமரேந்திரர் கூறினார்..
வர்ஷா ஓடிச்சென்று ஷிவாக்ஷி வரைந்திருந்த ஓவியத்தை காண்பித்து.. அனைத்தும் மொழிந்தாள்..
தாத்தா அமரேந்திரர்.. அவளை.. அருகில் அமர வைத்து.. அவளிடம் பேச.. ஷிவாக்ஷியும்.. நன்றாக பேச ஆரம்பித்தாள்..
"ஷிவாக்ஷி.. நல்ல பேரு.. இங்க பாரும்மா.. இது உன் வீடு.. உன் இஷ்டம் போல இருக்கலாம்.. யாரும்.. கேள்வி கேக்க மாட்டாங்க.. என்னையும் சேத்தி தான்.. ஆனா.. ஒன்னு.. இந்த குடும்பம் இதே மாதிரி.. எப்பவும் ஒன்னா இருக்கனும்.. எனக்கு அது தான் வேணும்.. நீ நல்ல பாத்துப்பே தான.. ??" என தாத்தா அமரேந்திரர் சீரியஸாக வினவினார்..
"நன்னா பாத்துக்கறேன்.." என ஷிவாக்ஷி கூறியதும்.. அவளின் தலையை கோதினார்.. தாத்தா..
அப்போது அங்கே இருந்த.. சித்தி தேவிகா.. ஷிவாக்ஷியின் நெற்றியில் குங்குமம் இல்லாததை கண்டு.. "என்னம்மா.. நெத்தில.. குங்குமம் இல்ல.." என கூறிக்கொண்டே.. "இந்தா.. இது உனக்கு.. தான்.. என்னோடது தான்.. பரம்பரையா இந்த குடும்பத்துக்கு வர மருமகளுக்கு தரது தான்.. இப்ப உனக்கு நா தரேன்.. இந்தா.." என சித்தி தேவிகா ஷிவாக்ஷியின் கைகளில் குங்கும சிமிழை திணித்தார்..
தங்க குங்குமம் சிமிழ்..
அது அழகாக.. மயில் போன்ற வடிவமைப்பை பெற்று தங்க நிறத்தில் ஜொலித்தது..
"இனிமேல்.. நம்ம வீட்ல.. சைவம் தான்.. அசைவங்கற பேச்சுக்கே.. இடமில்ல.." என பாட்டி தேவசேனா சிரித்துக் கொண்டே கூறவும்.. அனைவரும் இணைந்தனர்..
யாதவனும் சமீராவும் தவிர..
அனைவரும் அவளிடம் சகஜமாக பேச.. அகமகிழ்ந்தாள்.. ஷிவாக்ஷி..
ஷ்ரித்திக் ஓவியத்தை பற்றி ஏதும் கூறாதிருந்தது.. மனதில் உறுத்தினாலும்.. வெளியே காண்பிக்க வில்லை..
அனைவரும் ஷிவாக்ஷியை தாங்கினர்.. தலை தூக்கி வைத்து கொண்டாடினர்.. இதையெல்லாம் பார்த்து கொண்டிருந்தாள்.. மாயா..
இரவு உணவை முடித்துக் கொண்டு.. அனைவரும் அவரவர் அறையை நாடினர்..
ஷிவாக்ஷியும்.. தங்களின் அறைக்கு செல்ல விழைய..
மாயா நடுவே நுழைந்தாள்.. பூனை குறுக்கே வந்ததை போல..
"ஏய்.. என்ன டி.. எல்லாரும் தூக்கி வைச்சு கொண்டாடறதுனால.. நீ ஒன்னும் இந்த வீட்டு மருமக ஆயிட முடியாது.. என்னிக்கு இருந்தாலும்.. நாந்தான் இந்த வீட்டு மருமக.." என மாயா அவளின் முன் விரலை சுண்டினாள்..
"ஷ்ரித்திக்க எப்படி.. என் பக்கம் கொண்டு வரனும்னு.. எனக்கு தெரியும்.. அதுவரைக்கும் இத அனுபவிச்சுக்கோ.. ஆனா ரொம்ப நாளைக்கு இல்ல.. நான் பண்ண சின்ன தப்பால.. என் இடத்துல வந்து சேந்த சனியன் டி நீ.. ஞாபகம் வைச்சுக்கோ.. ஷ்ரித்திக் எனக்கு தான்.. எனக்கு மட்டும் தான்.. நா லவ் பண்ணது ஷ்ரித்திக்க தான்.. விஜய் நடுவுல வந்து கெடுத்துட்டான்.. இந்த வீட்ல நீ இருக்கப் போறது கொஞ்ச நாள் தான்.. கௌன்ட் யுவர் டேஸ்.." என குரோதத்தை வார்த்தைகளில் கொட்டிச் சென்றாள்..
'அஷடா.. இருப்பாளோ.. ?? நானே.. இந்த ஆத்த விட்டு போலான்னு நினைச்சுண்டு இருக்கேன்.. இவா என்னடான்னா.. ??' என தன்னுள் நினைத்து தலையில் அடித்துக் கொண்டே தங்களின் அறைக்கு நகர்ந்தாள்.. ஷிவாக்ஷி..
----------------
To be continued..
(Apdiye.. andha starum commentum kodhuthutu poradhu..)
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro