அத்தியாயம் - 13 ❤️
மக்கள் தங்களின் வாழ்த்துக்களையும் ஆசியையும் அட்சதை என்னும் மங்கல மழையால் மணமக்களை வாழ்த்துவதற்காக எழுந்து நிற்க.. மங்கல வாத்தியங்கள் கெட்டிமேள இசையால் அந்த அவையை நிரப்ப...
அனைவரின் முகத்திலும் அகத்திலும் புன்னகையும் மகிழ்ச்சியும் தாண்டவம் புரிய..
ஆனால்.. நம் நாயகனின் மனதில் இது எதுவுமே பதியவில்லை.. மங்கல நாணினை ஐயர் நீட்டி.. "பொன்னு கழுத்தில கட்டுங்கோ.. " என கூறி சுப மந்திரங்களை ஒத ..
"மாங்கல்யம் தந்துனானே மம ஜீவன ஹேதுனா
கண்டே பத்னாமி சுபாகே த்வம் சஞ்சீவ சரத சதம்"
தன் கரங்கள் நடுங்க மங்கல நாணினை ஏந்த.. அப்போது மாயாவின் முகத்தை கலங்கிய கண்களுடன் கண்டவனின் விழிகளில் நின்றது.. தன் கனவு தேவதையே பிம்பமே..
ஷிவாக்ஷியின் நினைவில்.. நாணினை ஏந்தியபடியே இருந்தவனிடம்..
மாயா.. "ஷ்ரித்திக்.. கட்டு.. " என ஷ்ரித்திக்கை ஊக்குவித்தாள்..
அப்போது..
நிகழ்விற்கு வந்தவன்.. மங்கல நாணை கைகள் நடுங்க பார்த்துக் கொண்டிருந்தவன்..
தாத்தா அமரேந்திரர்.. கண்களுக்கு... ஷ்ரித்திக் மஞ்சள் கயிற்றை பிடித்து இருப்பது மங்கலாக தெரியவே.. திடீரென தலை சுற்றல் எடுத்து மயக்கமாகி ஷ்ரித்திக்கின் மடியில் விழுந்தார்..
"தாத்தா.. " என ஷ்ரித்திக் அதிர்ச்சியில் அவனின் உதடுகள் பிரிந்தது..
"தாத்தாஆஆஆ.. " என ஷ்ரித்திகின் உடன் பிறப்புகள் நால்வரும் கத்திக்கொண்டே அவர் அருகில் வந்தனர்.
அப்போது அந்த அடையாளம் தெரியாத இருவர்.. தங்களின் முதற்கட்ட திட்டம் வெற்றி பெற்றதால் அகமகிழ்ந்து யாருமறியா வண்ணம் கொக்களித்து புன்னகைத்தனர்..
"என்னங்க.. " என ஷ்ரித்திக்கின் பாட்டி பதறியடித்து கொண்டு தன் கணவனருகே வந்து எழுப்பவும்..
"அப்பாஆஆஆ.." ராஜ தேவனும்.. தேவ தேவனும் ஒருங்கே அதிர..
"அப்பா.. அப்பா.. எந்திரிங்க.. என்னாச்சு உங்களுக்கு.. " என்று இந்திரகவியும் சமீராவும் .. அவரருகே சென்று எழுப்ப முயற்சிக்க..
ஷிவாக்ஷி..
'அச்சோ.. என்ன இப்படி ஆயிடுத்தே.. கிருஷ்ணா.. அவாளா.. காப்பாத்துங்கோ..' என வருத்தம் கொண்டவள்.. அவருக்காக கடவுளிடம் வேண்டிக் கொண்டாள்..
தீவா.. "இருங்க.. தாத்தாக்கு என்னாச்சுன்னு பாக்கலாம்.. முதல்ல கூட்டமா இருக்காதீங்க.. அவருக்கு மூச்சுக்கு வழி விடுங்க.." என அனைவரிடமும் கூறிவிட்டு.. மகேந்திரனிடம் திரும்பி "மஹி .. தாத்தாவ ரூம்க்கு கூட்டிட்டு வா .. " என மருத்துவராக கூறியதும்...
மணமேடையில்
மாலையும் கழுத்துமாக இருந்தனர்.. மாயாவும் ஷ்ரித்திக்கும்.. இருவரில் முதலில் ஷ்ரித்திக் மணமேடையில் இருந்து எழுந்து தாத்தாவிற்கு என்ன நேர்ந்தது ..? என பதறியடித்து கொண்டு மாலையை எறிந்து விட்டு எழுவதை கண்ட மாயாவும்.. கோபத்தில் 'ச்சா..' என கையை தரையில் அடித்து கொண்டு எழுந்தாள்..
மகேந்திரனும் கார்த்திக்கும் தாத்தாவை அறைக்கு அழைத்து சென்றனர்.. தீவா தாத்தாவிற்கு என்ன நேர்ந்ததென பரிசோதனை செய்து.. அதற்கான மருத்துவம் அளித்துக் கொண்டிருந்தாள்..
மாயாவின் எண்ணமோ.. 'ச்சே.. இந்த கிழத்துக்கு இப்ப தான். இப்படி நடக்கனுமா.. ??' தன் தாத்தா என்பதை மறந்து கோபத்தில் தனக்குள் முணுமுணுத்துக் கொண்டது .. ஷ்ரித்திக்கின் செவிகளில் நன்றாகவே விழுந்தது..
ஷ்ரித்திக்... "மாயா.. மைன்ட் யுவர் வர்ட்ஸ்.. அவர் நம்ம தாத்தா.. இதுக்கு மேல ஏதாவது பேசுன.. தப்பாயிடும்.. " ஷ்ரித்திக் யாருமறியா வண்ணம் மாயாவிடம் கோபத்தில் உருமினான்..
மாயா.. ஷ்ரித்திக்கை பார்த்து ஏளனமாக புன்னகைத்து "உனக்கு.. கல்யாணம் நின்னுடுச்சுன்னு சந்தோஷம்.. அதான் இப்படி பேசற.. எனக்கு தெரியாதா.. உன்ன பத்தி.. ??" ஷ்ரித்திக்கின் கோபத்தை கிளறினாள்..
ஷ்ரித்திக்கிற்கு திருமணம் நின்றது மனதில் பதியவேயில்லை.. ஏனெனில்.. இப்போது ஷ்ரித்திக்கின் எண்ணம் முழுதும் தாத்தாவைச் சுற்றியே..
அவ்வாறு இருக்கையில் மாயாவின் சொற்கள் அவனின் கோபத்தை அதிகப்படுத்தியது..
"மாயா... " என கத்தியவன்.. வருத்தத்தில் இருந்த தன் பெற்றோர் பாட்டி உட்பட.. அனைவரின் கண்களும் ஷ்ரித்திக்கையே நோக்க.. மகேந்திரனும் கார்த்திக்கும் ஷ்ரித்திக்கை 'அமைதியாயிரு' என செய்கை செய்ய... அமைதியாய்.. அதே சமயம் அழுத்தம் நிறைந்த குரலில் "ஐ வார்ன் யு அகெய்ன்.. என்கிட்ட வார்த்தைய பார்த்து பேசு.. பின்னாடி ரொம்ப வேதனைபடுவ.." என கூறியவன்.. மாயாவை நோக்கி மீண்டும் தொடர்ந்தான்.. "என்னால உன்ன மாதிரி யோசிக்க முடியாது.. இப்ப தெரியுதா நான் ஏன் உன்ன வேணாம்னு சொன்னது.. ?" என்று ஷ்ரித்திக் எரிச்சலில் கூறியதை கேட்டதும் ... மாயாவிற்கு இன்னும் கோபம் அதிகமானது.. மறுவார்த்தை பேச போனவளை.. "மாயா.. தென் யு கேன் டாக்.. வாட் யு நீட் டூ சே.." என கூறி மாயாவை அமைதியாக்கினான்.. மாயாவின் சகோதரன்.. மகேந்திரன்..
ஷ்ரித்திக்கின் உடன்பிறப்புகள் தன் சகோதரனின் திருமணம் நின்றதிலும்.. தாத்தாவின் உடல் நிலை மோசமடைந்ததிலும்.. வருத்தமாக இருந்தனர்.. தன் தமையனின் அருகில்..
ஷிவாக்ஷியோ.. 'கல்யாணம்.. நின்னுடுத்து.. இதுக்கு மேல நாம இங்க இருக்கறது.. நன்னா இருக்காது.. ஆத்துக்கு போயிடலாம்.. தாத்தா கேக்கறச்ச சொல்லிடலாம்..' என்று அக்குடும்பத்திடம் கூறிவிட்டு செல்லலாமென நினைத்தவள்.. அவர்களின் நிலையை கண்டு.. 'எல்லாரும்.. சோகமா இருக்காளே.. இந்த நிலைமையில எப்படி சொல்லிட்டு போறது.. ??' என நினைத்தவள்.. 'இவாக்கிட்ட வேணா.. அப்பறமா சொல்லிக்கலாம்..' என்று நினைத்து யாரிடமும் சொல்லாமல் அந்த இல்லத்தைவிட்டு கிளம்ப ஆயத்தமானாள்..
ஷிவாக்ஷி..
அனைவரையும் ஒருமுறை பார்த்தவள்.. அந்த இல்லத்தின்.. வாசலை நோக்கி அவளின் கால்கள் நகர்ந்தது..
அந்த இல்லத்தின் வாயிலில்.. கடக்க அவளின் கால்களை பதிக்கும் தருவாயில்.. ஷிவாக்ஷியின் கரங்களை பற்றியது.. ஓர் ஆணின் கரம்...
அப்போது... அதேசமயம்..
திருமணத்திற்கு வந்த
இருவரில் முதலாமவன்.. "டேய்.. நாம போட்ட ப்ளான் சக்சஸ் ஆயிடுச்சு.. அவ்வளவுதானே.. வேலை முடிஞ்சது.. வா போலாம்.. " என தன்னுடன் வந்த மற்றொருவனின் தோளை பற்றி அழைத்தான்..
முதலாமவன் அப்படி அழைத்ததும் கோபம் வந்து அவனின் கண்ணத்தில் அறைந்தான் மற்றொருவன்...
"டேய்ய்ய்ய்... " என முதலாமவன் அதிர்ச்சியில் கூவ..
"பின்ன என்னடா.. ?? 5 வருஷம் டா.. 5 வருஷமா.. மாயாவ காதலிக்கறேன்.. அவளும் என்ன காதலிச்சா.. இப்ப எவனோ ஒருத்தன்.. அவள கொத்திட்டு போறத பார்த்துட்டு நா சும்மா இருக்கனுமா.. " என கோபத்தில் கத்தினான்.. நேற்றைய பொழுதில் மாயாவிடம் கதறியவன்..
"நீ.. சொல்றதெல்லாம்.. சரி விஜய்.. அதான் கல்யாணம் நின்றுச்சுல்ல.. இதுக்கு மேல கல்யாணம் நடக்க சான்ஸ் இல்ல.. அதான் இங்கயிருந்து ஏன் டைம் வேஸ்ட் பண்ணிட்டு.. போலாம்னு கூப்டேன்.. " என்று அவன் அவனுடைய தோழனிடம் விளக்கம் கூறினான்..
ஆம் .. அவனுடைய பெயர் விஜய்... மாயாவை ஐந்து வருடங்களாக காதலித்து வந்தான்.. மாயாவும் தனக்கென ஒரு இளிச்சவாயன் கிடைத்துவிட்டான்.. என்றெண்ணியே விஜய்யுடன் சுற்றி வந்தாள்..
அவனின் காதலை ஏற்றுக் கொண்டே...
"இல்ல.. எனக்கு மாயா வேணும்.. எனக்கு என்னவோ பயமா இருக்கு.. என் மாயா எனக்கு இல்லாம போய்டுவாளோன்னு... இன்னிக்கு ஒரு நாள் மட்டும் மாயாவ இவங்க கண்ல படாமா வைச்சிருந்தா.. போதும்.. அப்பறம் நா நிம்மதியாய் இருப்பேன்..." என்று விஜய் கூறுவதைக் கேட்டு துள்ளினான்.. அவனின் தோழன்..
"டேய் எப்படி டா ..??? நீ சொல்றத பாத்தா மாயாவை கடத்துனா உண்டு.." என்று ஏளனமாக கூறிக் கொண்டே சிகரெட்டை பற்றவைத்தான்..
அதே நேரத்தில்..
யாரென திரும்பி பார்த்த ஷிவாக்ஷியின் கரத்தைப் பற்றியிருந்தது... விக்ரமே..
"ஒய்.. எங்க கிளம்பிட்ட.. ??" என விக்ரம் கேட்டான்..
விக்ரமிடம் தன் கையை விடுவித்து கொண்டே.. "ஆத்துக்கு.. " என வாசலை நோக்கி விரலை நீட்டி காண்பிக்கவும்..
"என்ன ஆத்துக்கா.. ?? குளிக்கப் போறியா.. ??" என விக்ரம் விரல் காட்டிய திசையை பார்த்து கேள்வியாக ஷிவாக்ஷியை நோக்கினான்..
அவனின் கேள்வியில் கண்களை சுருக்கி..
"ஷோ.. வீட்டுக்கு.. வீட்டுக்கு.. போறேன்.. " என ஷிவாக்ஷி கூறியதை கேட்டு..
"என்ன.. வீட்டுக்கா.. ??? ஹே... இங்க என்ன போயிட்டு இருக்கு.. நீ பாட்டுக்கு வீட்டுக்கு போறியே.. ??" என விக்ரம் ஆதங்கத்தில் வினவினான்..
'இவ பாட்டுக்கு சொல்லாம கொள்ளாமா போறா.. இது ஷ்ரித்திக்கு தெரிஞ்சா என்ன செஞ்சுருவான்... ஷிவாக்ஷிய வீட்ட விட்டு வெளியே போகாம பாத்துக்கனும்.. ' என தன் மனதில் நினைத்துக் கொண்டான்.. விக்ரம்..
"இல்ல.. நா வேத்து ஆள்.. மூனாவது மனுஷா.. இதுக்கு மேல இங்க இருக்கறது நன்னா இருக்காது..அதான்.."
என தன் தலையை சொறிந்த படி கூறியதை கண்டவன்..
விக்ரம்.. "என்ன ஷிவு நீ.. ?? உன்ன என்னிக்காவது தெர்ட் பெர்சன் இங்க யாராவது ட்ரீட் பண்ணியிருக்காங்களா... ? ஹ்ம்ம்ம்ம்.. நீ.. போறத பாத்த ஷ்ரித்திக்கிட்ட சொல்லிட்டு போற மாதிரி இல்ல... நா சொல்றது கரெக்ட் தான.. ???" என விக்ரம் ஷிவாக்ஷியை கேள்வியாக நோக்கினான்..
ஷிவாக்ஷியும் மேலும் கீழுமாக மண்டையை ஆட்டினாள்.. அவளின் பதிலில் 'தன்னிடம் கூட சொல்லாமல் செல்கிறாளே.. ' என வருத்தமே மேலொங்கியது.. "என்ன.. ஷிவு நீ.. சொல்லமா.. கொள்ளமா.. போற.. ??? அவன் மட்டுமா வருத்தப்படுவான்... இந்த ஃபேமிலி அண்ட் இன்க்ளுடிங் மீ.. கஷ்டமா இருக்கு ஷிவு.. " என்று வருத்தமாக ஷிவாக்ஷியிடம்.. மொழிந்தான்..
ஷிவாக்ஷி..
"அச்சோ.. நா வேணும்னு பண்ணல.. என்ன தான் நீங்க மூனாவது மனுஷாளா பாக்கலைனாலும்.. நா என்னோட லிமிட்ல இருக்கறது தான் சரின்னு நேக்கு படறது.. நீங்க என்ன வேத்தாளா பாக்கலைனாலும்.. நா அந்த உரிமையை எடுத்துக்கறது பாவம்.. என்னைய காப்பாத்தினேள்.. என்னைய உங்க ஆத்துல தங்க வைச்சேள்.. அதுவும் நீங்க வற்புறுத்தனதுனால தான்.. இதுவே நான் அளவுக்கு மீறி போறனோன்னு தோன்றது... இதுல நீங்க இப்படி சொல்றேளே.. " என தன் பக்க தரப்பை விவரித்தாள்...
விக்ரம்..
'நியாயம் தான்.. ஆனா உன்ன வீட்ட விட்டு வெளியே போகாம பாத்துக்கனுமே.. சரி உண்மைய சொன்னாதான் போகாம இருப்பா.. ' என மனதில் நினைத்தவன்.. அவளிடம் நடந்த உண்மையை கூற விழைந்தான்...
"ஷிவாக்ஷி... நீ சொல்றது எல்லாம் சரிதான்.. ஆனா நீ யோசிச்சியா.. எதுக்காக ஷ்ரித்திக் உன்ன உன் வீட்டுக்கு கூட போக விடாம.. இங்க அவன் வீட்ல தங்க வைச்சிருக்கான்னு... ??" என விக்ரம் அவளுக்கு புரியும்படி எடுத்து உரைக்க..
அதை நினைவு கூர்ந்தாள்..
'ஆமா.. நேத்து நா ஆத்துக்கு போயிண்டு அப்படியே வந்துடறேன்.. அப்படின்னு சொன்னதுக்கு.. உன் பொருள ஆள் அனுப்பி எடுத்துக்கலாம்னு சொன்னாறே தவிர.. என்னைய ஆத்துக்கு போக விடல... இத நான் யோசிக்கவே இல்லயே.. ' என ஷிவாக்ஷியின் மனவோட்டம் இருந்தது..
"ஜஸ்ட் 1 லட்சம் தான் கடன் வாங்குனார்... உங்க தாத்தா.. ஆனா எதுக்காக வட்டி மேல வட்டி போட்டு 5 லட்சத்துக்கு உன்னால கடன் கட்ட முடியாத அளவுக்கு ஏன் பண்ணான்னு யோசிச்சியா... ??" என விக்ரமின் கேள்விக்கு புரியாத பார்வை பார்த்தாள்.. ஷிவாக்ஷி...
"உங்க எரியா கவுன்சிலர் நாகராஜ் தான... ???" என விக்ரம் தெரிந்து கொண்டே அவளிடம் கேட்கவும்..
ஷிவாக்ஷியும்... "ஆமா.. அவாள எப்படி உங்களுக்கு.. ??" என இழுத்தாள்..
விக்ரம்.. "ஹ்ம்ம்ம்ம்.. உன்ன ஒரு கடங்காரன் தொரத்துனான்ல.. அவ என்ன பண்ணியிருக்கான்னு.. தெரியுமா.. ?? அந்த கடங்காரன் நாய்.. சொல்றதுக்கே வாய் கூசுது..
உன்ன.. அனுபவிச்சுட்டு.. அந்த கவுன்சிலர் நாகராஜ்கிட்ட அனுப்பராத ப்ளான் .. அந்த கடங்காரன் நாயும் எல்லா தகவலும்.. உன்ன கடத்துனது வரைக்கும் தெரியும்.. அதுக்கப்புறம் என்னாச்சுனு தெரிஞ்சுக்கறதுக்காகவும்.. உன்னய தூக்கிட்டு வரத்துக்காகவும்.. ஆளுங்கள வைச்சு தேடிட்டு இருக்கான்.. அதனால தான் உன்னைய எங்கயும் விடாம இந்த வீட்ல தங்க வைச்சிருக்கான்.. இந்த வீடு உனக்கு சேஃபான இடம்.. இங்க எல்லாரும் வரமுடியாது... உனக்கும் பாதுகாப்பா இருக்கும்.. அதான்.. ஷ்ரித்திக்குக்கு இந்த நாகராஜ் எல்லாம் ஒரு ஆளே இல்ல.. ஆனா.. அவ பெரிய பெரிய கவர்ன்மென்ட் பொலிடிசியன்ஸோட தொடர்புல இருக்கான் .. ஈஸியா கை வைக்க முடியாது.. அதனால பொறுமையா தான் இருக்கான்.. என்ன பண்றது.. ?? " என்று விக்ரம் அவளின் முகத்தை பார்க்கவும்...
பேயறைந்தார் போல .. எந்த உணர்ச்சியும் இல்லாமல் இருந்த ஷிவாக்ஷியின் நிலையை கண்டு ஆடிப் போனான்.. 'என்ன இவ .. எந்த ரியாக்ஷனும் காட்டாம இருக்காளே.. இப்படி ஃபீல் பண்ணுவாங்கறதுனால தான் ஷ்ரித்திக் இதெல்லாம் அவகிட்ட சொல்லாதேன்னு சொன்னானோ.. கொஞ்சம் இல்ல ரொம்ப அவசரபட்டுடேன்.. இது மட்டும் ஷ்ரித்திக்கு தெரிஞ்சுது.. அவ்ளோதான்..' என நினைத்து கொண்டிருந்தவன்.. இப்போது ஷிவாக்ஷியை பார்த்து "ஹேய்.. ஐ எம் சாரி .. ஐ எம் ரியலி வெரி சாரி.. நா இத வேணும்னு சொல்லல்ல நீ வீட்டுக்கு போறேன்னு ரொம்ப அடமெண்டா இருந்த சோ நீ உண்மைய சொன்னா தான் போகாம இருப்பேன்னு.. " என கூறிக் கொண்டே ஷிவாக்ஷியை பார்த்தான்..
அவளோ விக்ரம் கூறும் எதையும் கேளாமல் எங்கோ வெறித்த வண்ணமிருந்தாள்..
'என்ன சுத்தி என்ன நடக்கறது.. ?? நேக்கு ஒன்னும் புரியல.. ?? ஆனா நா என்ன பண்ணேன்.. ?? ஏன் இவாளேல்லாம் என்ன தப்பா பாக்கறா.. ?? நா இந்த காலத்து பொம்படையான் மாதிரி மேக்-அப் அரைகுறை ஆடை எதுவும் பண்ணதில்லயே.. ?? ஆனா ஏன்.. ?? இப்படி ..???' என அவளின் எண்ணங்கள் ஒரு பக்கம் ஓட .. மறுப்பக்கம் விக்ரமின் குரல் எங்கிருந்தோ கேட்டது.. விக்ரம் மீண்டும் "ஷிவாக்ஷி.." ஷிவாக்ஷியை உலுக்கவும் அப்போது தான் நினைவுக்கு வந்தாள்..
"ஹான்.. " என விழித்தவள்.. "நான் .. உன்னோட நல்லதுக்கு தான்.. சொன்னேன்.. அது உன்ன ஹர்ட் பண்ணிருந்தா.. ஐ எம் சாரி.. வா.. உள்ள போலாம்.." என ஷிவாக்ஷியை உள்ளே அழைத்து சென்றான்.. பொம்மை போல அவளும் விக்ரமின் பின்னோடே நடந்தாள்..
தனக்கு கொடுக்கப்பட்ட அறையில் இருந்தவளின்... கண்களில் வழியும் நீரை துடைக்காமல்.. விக்ரமின் மொழிகளே.. அவளை சுற்றி ரிங்காரமிட்டது..
விக்ரம்.. தன் தோழன் இருக்கும் இடத்தில் சென்றவன்.. அங்கே அவர்களுக்கு உதவியாக இருந்தான்..
அதேசமயம் அந்த அடையாளம் தெரியாத இருவர்...
தன் தோழனின் மொழிகளை கேட்டு.. "அப்ப.. கடத்திரலாம்..." என்று விஜய் சாதாரணமாக கூறியதை கேட்டதும்... அவன் தோழன் வாயில் வைத்து இருந்த சிகரெட்டை அதிர்ச்சியில் வாயை பிளந்ததால் கீழே விழுந்தது..
"டேய்.. எப்படி டா.. ?? இவ்ளோ ஈஸியா சொல்ற.. என்ன எங்கள போலீஸ்ல மாட்டிவிடனும்னு முடிவே பண்ணிடீயா.. ??" என்று விஜயின் தோழன் கூற..
"டேய்.. அப்படி உங்கள மாட்டி விடுவேனா டா.. இப்ப சொல்றேன் .. இந்த ப்ளான்ல ஏதாவது கொளறுபடி ஆகி மாட்டிகிட்டோம்னா.. நான் பொறுப்பேத்துக்கறேன்.. உங்களுக்கு எதும் ஆகாது.. ஓகே.. " என ஆதங்கத்தில் கூறி முடித்தான்..
"டேய்.. லூசு.. அதுக்காடா சொன்னேன்.. " என நெற்றியை தேய்தவன் .. "சரி .. பண்ணலாம்.. நம்ம ஃப்ரண்ட்ஸ் எல்லாரும் இருக்காங்க.. என்ன ப்ளான்.." என்றவனின் தோழன் கேட்கவும்..
விஜய்.. தன் தோழன் ஒத்துக்கொண்டான் என்று மகிழ்ச்சியாக தன்னுடைய திட்டத்தை விளக்கினான்...
"கண்டிப்பா.. இது வொர்ட் ஔட் ஆகும்.. " என்று விஜயின் தோழன் கூறியதை கேட்டதும்..
விஜய் .. "கண்டிப்பா..டேய்.. ப்ளீஸ்.. எப்படியாவது... இத பண்ணுடா.. ??" என கெஞ்சினான்..
"டேய்.. கெஞ்சாத டா.. நான் பண்றேன் .. நீ வேற.. நம்ம ஃப்ரண்ட்ஸ் கூப்பட வேணாமா.. ?? இரு.." என விஜயின் தோழன் விஜயை சமாதானம் செய்தான்...
ஷ்ரித்திக் தன் கைகளால் தலையை தாங்கிய வண்ணம் அமர்ந்திருந்தான்..
அப்போது.. தீவா தாத்தாவிற்கு மருத்துவம் பார்த்து விட்டு வெளியே வந்தாள்..
தீவா வருவதை கண்டு அனைவரும் அவளை நெருங்கினர்..
"தாத்தாக்கு எப்படி இருக்கு.. ரியலி வாட் ஹேப்பண்ட்.. ??" என ஷ்ரித்திக் தீவாவிடம் வினவ..
பாட்டி தேவசேனா.. "இப்ப எப்படி இருக்காரு.. ??அவருக்கு என்னம்மா ஆச்சு.. ??" என கண்ணீரை அடக்கிக் கொண்டு கேட்டார்..
"என்னாச்சும்மா.. அப்பாக்கு இப்ப எப்படி இருக்காரு.. ??" என ஷ்ரித்திக்கின் தந்தை ராஜ தேவனும் தாய் இந்திரகவியும் வினவ.. உடன் ஷ்ரித்திக்கின் சித்தப்பா தேவ தேவன் சித்தி தேவிகா உடன் சேர்ந்து வினவினர்..
"அண்ணி.. தாத்தாக்கு என்னாச்சுன்னு சொல்லுங்க.. ??" என மாயாவும் நேஹாவும் தீவாவை கேட்க..
என அனைவரும் கேள்வி கணைகளை தீவாவின் மீது தொடுத்தனர்..
"இருங்க.. இருங்க.. தாத்தாவுக்கு ஒன்னும் இல்ல.. தாத்தாக்கு ஃபுட் பாய்சன் ஆயிடுச்சு.. அவரோட வயசுக்கு அத தாங்க முடியாதனால.. பிபீ அதிகமாகி தலை சுத்தல் ஆயிடுச்சு.. இப்ப ரொம்ப நல்லா இருக்காரு.. அவர தாரளமா பாக்கலாம் " என தீவா புன்னகையுடன் கூறியதை கேட்டதும்.. அனைவரின் முகத்திலும் வருத்தம் மறைந்து நிம்மதி பரவியது ..
ஷ்ரித்திக்கின் சித்தப்பா தேவ தேவன்.. "ஃபுட் பாய்சன்.. எப்படி அதுக்கு சான்ஸே இல்ல .. ?? நம்ம வீட்ல எல்லாமே ஹைஜினிக்கா தான பண்றோம்.. அப்பறம் எப்படி.. ??" என சந்தேகமாக வினவினார்..
"அது தெரியல.. ஆனா.. சிம்ப்டம்ஸ் எல்லாம் ஃபுட் பாய்சன் தான்.. ஐ எம் டாம்ன் ஸுர்.." என்று தீவா தன் கூற்றில் தெளிவாக இருந்தாள்..
"அப்படி எதுவுமே.. சாப்படலையே.. அவரு.. காலைல ஏன் வெறும் வயிறுல இருக்காரேன்னு இரண்டு இட்லி தான சாப்டாரு.. " என பாட்டி தேவசேனாவிற்கு சந்தேகம்.. பற்ற வைத்த நெருப்பாக எழுந்தது..
ஷ்ரித்திக்கிற்கும் அவர்களின் உரையாடலில் "சம்திங் இஸ் ஃபிஷ்ஷி.. " என சந்தேகம் துளிர் விட்டது...
"சரி .. இருங்க.. அப்பாகிட்டயே கேக்கலாம்.. என்னன்னு.. ??" என ஷ்ரித்திகின் தாய் இந்திரகவி கூற்றை அனைவரும் அமோதித்தனர்.. அக்குடும்பத்தின் ஆணி வேரை காண உறவினர்கள் விரைந்தனர்..
மெத்தையில் ஆலமரமே சாய்ந்திருந்ததோ.. என எண்ணும் அளவிற்கு.. உடல்நிலையால் வாடி படுத்திருந்தவரை மொத்த குடும்பமும் சூழ்ந்து... "தாத்தா... இப்ப எப்படி இருக்கு.. ?? பரவால்லையா.. ?? உடம்புக்கு என்ன பண்ணுது.. ?? சொல்லுங்க நாங்க இருக்கோம்.. " என பேரப் பிள்ளைகள் அனைவரும் தாத்தா அமரேந்திரரை சூழ்ந்து கொண்டு ஒருபக்கம் விசாரிக்க..
மறுபக்கம் "அப்பா... என்னப்பா.. எங்ககிட்ட ஒரு வார்த்தை சொல்லியிருக்க கூடாதா.. ?? உங்களுக்கு ஏதாவதுன்னா.. எங்களால தாங்கிக்க முடியுமா.. " என மகனும் மகளும் மருமகனும் மருமகள்களும் .. அனைவரும் அவரை சூழ்ந்து கொண்டு விசாரிக்க..
மற்றொர் புறம் கொள்ளு பேரப்பிள்ளைகள் "தாத்தா... காய்ச்சல் சிக்கிதமா செதியாயிடும்.. " என மழலை மொழியில் அவரின் மனதை கவர்ந்தது..
மொத்த குடும்பத்தின் பாசத்தில் மனதில் இன்னும் தெம்பு ஏறியது... அந்த பெரியவருக்கு.. தன் மனையாளை நோக்கியவருக்கு .. அமைதியே உருவாய் கண்களாளே 'உடல் நலமா.. ??' என கண்ணீரை அடக்கி கொண்டு கேட்க..
அவரும் தன் கண்களால் இமை மூடி திறந்து.. 'இப்பொழுது நலம்.. ' என கண்களாலே பேசிக் கொண்டனர்.. முதிர்ந்த காதல் தம்பதிகள்.. 'அழ தேவையில்லை.. ' என பாட்டி தேவசேனாவிற்கு சமாதானம் கூறினார்..
"ஏன்.. அப்பா.. ?? என்னாச்சு.. ?? ஃபுட் பாய்சன் ஆகற அளவுக்கு என்ன சாப்டிங்க.. ??" என ஷ்ரித்திக்கின் தந்தை ராஜ தேவன் கேள்வி எழுப்பினார்..
"ஆமா.. மாமா.. என்ன சாப்டிங்க.. ??" என மாயாவின் தந்தை யாதவன் வினவினார்..
அனைவரின் கேள்விக்கும்.. "நா என்னப்பா சாப்பிட போறேன்.. மாப்பிள்ளை.. உங்க அத்தை எனக்கு சாப்பிட இட்லி குடுத்தா.. அப்புறம் யாரோ ஒரு பையன் கிட்ட ஜூஸ் குடுத்து அனுப்பினா.. நானும் குடிசேன்.. வேற எதுவும் சாப்படலையே.. " என்று தாத்தா அமரேந்திரர் கூறுவதை கேட்ட அவரின் மனையாள்..
"என்னங்க.. சொல்றீங்க.. ?? நான் ஜூஸ் குடுத்து விட்டேனா.. ??" என பாட்டி தேவசேனா குழப்பமாக கேட்கவும்..
தாத்தா அமரேந்திரர்
"என்னம்மா.. நீ.. ?? குடுத்து விட்டேனான்னு கேக்கற.. நீ குடுத்ததா தான் ஜூஸ் கொண்டு வந்து குடுத்தாங்க.. " என்க..
திடுக்கிட்டவர் "இல்லங்க.. நா எதுக்கு வேற ஒருத்தர்கிட்ட குடுத்து அனுப்பனும்.. என் புருஷனுக்கு நான் வந்து குடுக்க மாட்டேனா.. ?? நா குடுத்து அனுப்பல.. தேவா.. இதுல ஏதோ.. தப்பு நடந்து இருக்குப்பா... ??" என தன் இளைய மகன் தேவ தேவனிடம் சந்தேகத்தை முன் வைத்தார்.. பாட்டி தேவசேனா..
அப்போது தான்.. தேவ தேவனின் நினைவில் வந்தது.. அந்த அடையாளம் தெரியாத இருவர்.. 'ஒரு வேளை இது அவங்க பண்ணிருப்பாங்களோ.. நம்ம குடும்பத்துக்கு வேற எதிரிங்க நிறையவே இருக்காங்க... இருக்கலாம்..' என மனவோட்டத்தை நிறுத்தி.. தன் சகோதரனிடம் நடந்தவைகளை கூற தொடங்கினார்..
"அண்ணா.. நம்ம கல்யாணத்துக்கு வெளியே எல்லாரையும் வெல்கம் பண்ணிட்டு இருந்த சமயத்தில.. அடையாளம் தெரியாத இரண்டு பேர் நம்ம கல்யாணத்துக்கு வந்திருந்தாங்க.. அவங்க வேலை செய்ய வந்திருக்கறவங்கன்னு நெனச்சு .. ஏன் எல்லாரையும் தப்பா பாக்கனும்னு.. நான் கண்டுக்கல.. எனக்கு என்னவோ அவங்க மேல தான் சந்தேகமா இருக்கு.. ??" என தன் மனவோட்டத்தை தன் சகோதரனிடம் கதைத்தார்..
"என்ன அண்ணா.. நீ.. ?? கொஞ்சம் கவனமா இருக்கக் கூடாது.. நம்ம அப்பாக்கு ஏதோ கலந்து கொடுத்து இருக்காங்க.. ஃபுட் பாய்சன் போச்சு.. இதே வேற ஏதாவது கலந்து அப்பா உயிருக்கே ஆபத்து ஆயிடுச்சுனா.. ??" என மகளாக சமீரா வருத்தம் கொள்ள..
"ஹேய்.. என்ன பேசற.. ??" என ஷ்ரித்திக்கின் தாய் இந்திரகவி சமீராவை அணைத்துக் கொண்டார்..
"என்ன சொல்ற தேவா... ?? சந்தேகத்தோட ஏன் உள்ள விட்ட.. ?? சரி போனது போட்டும் .. அவங்கள அடையாளம் தெரியுமா.. ?" என ஷ்ரித்திக்கின் தந்தை ராஜ தேவன் தன் தம்பியிடம் கேள்வி எழுப்பினார்..
"அதெல்லாம் அண்ணா.. " என பதில் கூறினார்.. தன் தமையனின் கேள்விக்கு..
"என்னங்க.. எனக்கு .. என்னமோ.. அவங்களோட எண்ணம் கல்யாணத்த நிறுத்தறது தான்னு தோனுது.. ஏன்னா.. நம்ம அப்பாக்கு ஏதோ கலந்து கொடுத்து இருக்காங்க.. அப்ப தான் நாம பதறுவோம்.. கல்யாணமும் நிக்கும்.. கொல்லனும்னு நினைக்கிறவங்க இப்படி ஃபுட் பாய்சன் பண்ணிருக்க மாட்டாங்க.. " என ஷ்ரித்திக்கின் தாய் இந்திரகவி கூறுவதை யோசித்தனர் அனைவரும்..
"நா அவங்கள யாருன்னு பார்த்து வெளியே அனுப்பிடறேன்.. அண்ணி" என தேவ தேவன் கூறினார்..
"தேவா.. அது பிரச்சினை இல்லை.. இன்னிக்கு ஷ்ரித்திக்குக்கு கல்யாணம் நடக்கனும்.. நடந்தாகனும்.. " என தாத்தா அமரேந்திரர் அனைவரிடமும் கூறியவுடன்..
தாத்தாவின் மொழிகளை கேட்டு மாயா மகிழ்ச்சியின் உச்சியில் இருந்தாள்.. ஆனால் ஷ்ரித்திக்கோ அதற்கு நேர்மாறாக இருந்தான்.. தாத்தாவின் கூற்றில் எரிச்சலில் இருந்தான்..
"வாட்... ?? என்ன பேசறீங்கன்னு புரிஞ்சு தான் பேசறீங்களா.. ?? உங்க உடம்பு இருக்கற கண்டிஷன்க்கு.. என் கல்யாணம் ஒரு கேடா.. ??" என ஷ்ரித்திக் எரிச்சலில் கூறியதை கேட்டதும்..
தாத்தா அமரேந்திரர்.. "எனக்கு இப்ப என்னாச்சுன்னு இப்படி பேசற.. ?? உடம்பெல்லாம் சரியாயிடுச்சு.. இப்ப உன் கல்யாணத்த பாக்கனும் .. அவ்ளோதான்.. " என்று தாத்தா அமரேந்திரர் முடிவாக கூறினார்..
அதை கேட்டதும்.. "அது இல்ல தாத்தா.. இன்னிக்கு கல்யாணம் பண்ணியே ஆகனுமா.. இன்னொரு நாள் வைச்சுகலாம்.. " என ஷ்ரித்திக் மறுத்தான்..
பாட்டி தேவசேனா
"அதெல்லாம் கிடையாது.. பெரியவங்க.. எங்களுக்கு தெரியாதா.. ?? உனக்கு எப்போ என்ன பண்ணணும்னு.. ?? போ போய்.. கல்யாணத்துக்கு ரெடி ஆகற வழிய பாரு.. " என ஷ்ரித்திக்கிடம் கூறிவிட்டு "வேற முகூர்த்தம் இப்ப இருக்கான்னு கேட்டு.. கல்யாணத்துக்கான ஏற்பாட்ட பண்ணுப்பா.. தேவா.." என தன் மகனிடம் கூறினார்..
"அம்மா.. அப்பா கல்யாணம் இன்னிக்கே பண்ணணும்னு சொன்னவுடனே நான் கேட்டுடேன்... இப்ப மணி 5.. காலைல 5:30ல இருந்து 6:30 மணிக்கு முகூர்த்தம் இருக்குதாம்.. இன்னும் அரை மணி நேரம் தான் இருக்கு.. சோ நோ ப்ராப்ளம்.. " என ஷ்ரித்திக்கின் சித்தப்பா தேவ தேவன் மொழிந்தார்..
அதற்கு மேல் எதுவும் பேச முடியாமல் தவித்தான்.. ஷ்ரித்திக்.. அவனின் முகமாற்றங்களை கவனித்தார்.. தாத்தா அமரேந்திரர்..
"சரிப்பா.. அம்மா.. மாயா.. போய் சீக்கிரம் கல்யாணத்துக்கு ரெடி ஆகு.. " என புன்னகையுடன் பாட்டி தேவசேனா கூறியதும்..
வெக்கம் கொண்டு தன் அறைக்கு ஓடினாள்.. மாயா.. தங்கள் மகளின் மகிழ்ச்சி.. சமீரா யாதவனிற்கு நிறைவை தந்தது..
"ஹைய்யா.. கல்யாணம் நடக்கப் போகுது.. ஜாலி.. " என ஷ்ரித்திக்கின் உடன்பிறப்புகள் மகிழ்ச்சியாக கதைத்துக் கொண்டே வலம் வந்தனர்..
"டேய்.. கல்யாணம் நின்னுதும்னு .. நம்ம வீட்டு கதையே.. சீரியல போகும்னு பாத்தா.. இப்படி ஆயிடுச்சு.. " என்று ரிதுல் வினவவும்...
"கண்ணா.. இது வெறும் டிரெய்லர் தான்.. இன்னும் மெயின் பிக்சர் பாக்கலையே.. நிறைய டிவிஸ்ட் இருக்கும்.. நீயே பாரு என்ன நடக்க போதுன்னு... சரி எனக்கு பசிக்குது.. மிட் நைட்ல வேற எழுப்பிட்டாங்க.. போய் ஷர்லாக் குடிச்சுட்டு வரேன்.." என ருத்ரா ரிதுலிடம் கூறிவிட்டு அவ்விடம் விட்டு சென்றான்..
ஆராவும்.. தியாவும்.. கதைத்த வண்ணம் வந்தனர்.. "வரவர இந்த ருத்து சரியில்ல... ??" என ஆரா கூறவும்..
"ஏன் .. என்னாச்சு.. ??" என தியா கேட்க..
"ருத்து.. ஷிவு அக்கா கூடயே தான் இருக்கான்.." என்று ஆரா தன் மழலை மொழியில் கூற..
"அது ஒன்னும் இல்ல.. அந்த அக்கா.. அழகா இருக்காங்கல அதான்.. அன்னிக்கு நம்ம பண்ண தப்புக்கு அவங்க நம்மகிட்ட சாரி கேட்டாங்கள.. அதுல நம்ம பைய இம்ப்ரெஸ் ஆயிடாப்படி.. இந்த ரித்துவும் கூட சுத்துதே.. விடு விடு" என தியா ஆராவிடம் சமாதானமாக கூறவும்.. ஆராவும் அப்படியே கதைத்துக் கொண்டே வலம் வந்தனர்..
தன் அறையில் வேகமாக நுழைந்த ஷ்ரித்திக்... அனைத்து பொருள்களையும் கீழே தள்ளி விட்டு... கோபத்தில் மண்டையை பிடித்துக் கொண்டு வெறிப் பிடித்தார் போல கத்திக் கொண்டிருந்தான்...
அப்போது உள்ளே நுழைந்த விக்ரமின் கண்களுக்கு வெறி பிடித்தார் போல கைகளில் அகப்பட்ட அனைத்தும் கீழே சிதைத்து கொண்டிருப்பவனை கண்டதும்.. "டேய்.. டேய்.. டேய்.. லூசு... என்னடா பண்ற.. ?? அறிவில்ல உனக்கு... ??" என ஷ்ரித்திக்கை திட்டிக்கொண்டே அவன் கையில் அகப்பட்ட பொருளை வாங்கி வைத்தான்..
ஷ்ரித்திக்.. "ஆமாண்டா.. நா லூசு தான்.. கல்யாணத்த நிறுத்த முடியாமா தவிக்கிறேன்ல.. நான் லூசு தான்.. " என கோபத்தில் பிதற்றினான்...
"ம்ப்ச்.. என்னடா.. நீ.. ?? எனக்கென்னமோ.. உனக்கு மாயாவோட... கல்யாணம் நடக்காதுன்னு தான் தோனுது.. நீ 15 மினிட்ஸ்ல மணமேடைக்கு வா... நடக்கறது நடக்கட்டும்.. பாத்துக்கலாம்.. " என ஷ்ரித்திக்கிற்கு தைரியம் கொடுத்தான்..
"இப்படி தான் .. முன்னாடியும் சொன்ன.. ?? நானும் கல்யாணம் நின்றுச்சு.. இதுக்கு மேல கல்யாணம் நடக்காது அப்படின்னு நெனச்சேன்.. ஆனா.. மறுபடியும் முகூர்த்தம் ஃபிக்ஸ் பண்ணி.. இப்ப மறுபடியும் கல்யாணம்.. ம்ப்ச்... என்னால தாலிய பிடிக்க முடியல.. என் கை எப்படி நடுங்குச்சுன்னு தெரியுமா டா.. ?? நான் பண்ண ஒரு சின்ன தப்பு.. இந்த அளவுக்கு வளர்ந்து இருக்கு.. என்னால கல்யாணத்துல இருந்து பின் வாங்கவும் முடியாம.. மாயாவ ஏத்துக்கவும் முடியாம.. ரொம்ப கஷ்டமா இருக்கு டா.." என ஷ்ரித்திக் தன் வருத்தங்களை விக்ரமிடம் அடுக்கினான்..
"டேய்.. அதான் சொல்றேன்ல.. பாத்துக்கலாம்.. அப்பறம் ஷிவு.. வீட்ட விட்டு வெளியே போக பாத்தா.. " என நடந்த அனைத்தையும் ஷ்ரித்திக்கிடம் மொழிந்தான்..
"அடப்பாவி.. எல்லாத்தையும் சொல்லிட்டியா.. அவ ரொம்ப ஃபீல் பண்ணிருப்பா.. அதான் சொல்ல வேண்டாம்னு சொன்னேன்.. சரி விடு.. இல்லைனா.. அவளும்.. நா போறேன்னு அடம் பிடிச்சிருப்பா.. இப்ப எங்கே அவ .. ?? " என ஷ்ரித்திக் விக்ரமிடம் கூறினான்..
"இருக்கா.. அவ ரூம்ல தான்.. சொல்லாமலே இருந்திருக்கலாம்னு.. தோனுச்சு.. ரொம்ப ஃபீல் பண்ணினா.. முகம் பாக்கவே கஷ்டமா இருந்துச்சு.. " என விக்ரம் ஷிவாக்ஷியின் வருத்தம் சுமந்திருந்த முகத்தை எண்ணி கூறவும்..
"சரி.. விடு.. அவ நல்லதுக்கு தான சொன்ன.. " என விக்ரமை சமன் படுத்தினான்.. ஷ்ரித்திக்..
"சரி.. சரி.. சீக்கிரம் ஸ்டேஜ்ல வந்து உக்காரு.. உங்க அம்மாவோட ஆர்டர்.." என்று விக்ரம் ஷ்ரித்திக்கை தயாராக சொல்ல...
"சரி.. போறேன்.. போய் தொலைக்கறேன்.. எல்லாம் தலையெழுத்து.. " என ஷ்ரித்திக் மணமேடையில் சென்றமர்ந்தான்...
ஷ்ரித்திக்கிற்கு.. இந்த திருமணம் நிச்சயமாக நடைபெறாது என்ற எண்ணமே ஷ்ரித்திக் இலகுவாக இருப்பதன் காரணம்..
ஐயர்.. மீண்டும்.. அக்னியை வளர்த்தி சுப மந்திரங்களை ஓதி வந்தார்..
ஷ்ரித்திக்கும் கடனே என ஐயர் ஓதும் மந்திரங்களை தானும் ஓதி.. ஐயர் கொடுப்பதை அக்னிக்கு கொடுத்து கொண்டிருந்தான்..
தங்களுடைய மகன் எந்த பிரச்சனையும் செய்யாமல் மணமேடையில் அமர்ந்ததை கண்டும் பெற்றவர்கள் நிம்மதி அடைந்தனர்.. ஷ்ரித்திக்கின் தந்தை ராஜ தேவனும்.. தாய் இந்திரகவியும்..
மாயாவின் பெற்றோர் சமீராவும் யாதவனும் தங்கள் மகளின் திருமணம் நின்றதால் சற்று பதற்றம் கொண்டவர்கள்.. அக்குடும்பத்தின் மூத்தோர் சற்றும் தாமதமின்றி இன்றே திருமணத்தை நடத்த முடிவு செய்யப்பட்டதும்.. அவர்களின் மனம் மகிழ்ச்சி நிரம்பியது..
மாயா.. மறுபடியும் ஒப்பனை செய்து கொண்டவள்.. தன்னை ஒரு முறை சரி பார்த்து கொண்டிருந்தாள்.. தனதறையில்..
மாயா.. தன் தோழிகளை வெளியே அனுப்பினாள்.. தனது ஆடையை சரி செய்து கொள்வதற்காக..
கதவை மூடிவிட்டு திரும்பிய மாயாவின் கண்களுக்கு அகப்பட்டவர்களை கண்டு வெகுவாக அதிர்ந்தாள்...
"நீயா.. ??? விஜய்.. இங்க என்ன பண்ற.. ?? இது யாரு.." என கேட்டுக் கொண்டிருந்தவள்.. திடீரென கத்த போனவளை கொஞ்சமும் தாமதிக்காமல்...
மயக்கம் மருந்து கலந்த கைக்குட்டையை அவள் முகத்தில் வைத்து அழுத்தினான்.. விஜய்..
விஜய்யிடம் இருந்து திமிறியவள் .. முச்சு இழுத்து பிடிக்க முடியாமல்.. அம்மருந்தின் தாக்கத்தால் சிறிது நேரத்திலே மயக்கம் அடைந்தாள்..
விஜய்.. மயக்கம் அடைந்தவளை பர்தாவை போட்டு மறைத்துக் கொண்டு.. அங்கிருந்த மேஜையில் ஒரு காகிதத்தை வைத்துவிட்டவன்.. யாரும் பார்க்கா நேரத்தில் மாயாவை கடத்தி சென்றனர்.. அவ்விருவர்..
இது எதுவுமே அறியாத அக்குடும்பத்தினர்.. புன்னகையுடன் மணமேடையிலும்.. மணமேடைக்கு அருகிலும் இருந்தனர்..
ஐயர் மணப்பெணை அழைத்து வர கூறியதும்..
மாயாவின் தோழிகளிடம் போய் அழைத்து வாருங்கள் என மாயாவின் தாய் சமீரா கூறவும்..
"இல்ல .. ஆண்ட்டி சாரிய மாத்திட்டு.. நானே கூப்படறேன்னு.. சொன்னா.. அதான்... " என மாயாவின் தோழிகள் கைகளை பிசையவும்..
"சரி விடு.. சமீரா.. என் மருமகள.. நானே கூட்டிட்டு வரேன்.. " என புன்னகையுடன் ஷ்ரித்திக்கின் தாய் இந்திரகவி.. கூறியதை கேட்டு.. சமீராவும் சென்று வாருங்கள்.. என அனுப்பி வைத்தார்..
மாயாவை அழைத்து வருவதாக போனவர்.. வெகு நேரமாகியும் வராததால்... அனைவரும் பதற்றமடைந்தனர்..
ஐயரோ.. "பொன்ன அழைச்சிண்டு வரேன்னு போனவா.. இன்னும் கானோமே.. முகூர்த்த நேரம் வேற முடியப்போறது.. " என வழக்கம் போல அனைவரையும் பதற்றம் கொள்ள வைத்தார்..
மாயாவின் தாய் சமீரா.. "இருங்க.. நான் போய்.. பாத்துட்டு வரேன்.. " என நகர போனவரை தடுத்தது.. இந்திரகவியின் வருகையும்.. பின்னே மணப்பெண் கோலத்தில் தலை குனிந்து வருபவளை கண்டு சற்று பதற்றம் குறைந்தது..
சற்று நிம்மதி பெருமூச்சு விட்டு முடிக்கும் முன்பே.. அதிர்ச்சியின் உச்சிக்கே சென்றார்... மணப்பெண் கோலத்தில் வந்து கொண்டு இருப்பது.. நம் கதா நாயகி ஷிவாக்ஷி...
கோபத்தில் கத்தத் தொடங்கினார்.. "என்ன.. அண்ணி.. என் பொன்ன கூட்டிட்டு வராம.. யவளோ ஒருத்திக்கு பரம்பரை நகைய போட்டு கூட்டிட்டு வரீங்க.. " என சமீரா.. கத்தியதும்.. ஷ்ரித்திக்கின் அருகில் சூழ்ந்திருந்த மொத்த குடும்பமும் இந்திரகவியை திடுக்கிட்டு.. திரும்பி பார்த்து அவர்களும் அதிர்ச்சியில் உறைந்தனர்..
விக்ரமோ.. 'அடரா.. சக்கனானா.. போடு தகிடதகிட.. ' என தன் நண்பனின் காதலியே மணப்பெண்ணாக வருவதை கண்டு ஆனந்த அதிர்ச்சி அடைந்து துள்ளினான்..
ஷ்ரித்திக் ஷிவாக்ஷி மணப்பெண் கோலத்தில் இருப்பதை கண்டு ஒரு பக்கம் மகிழ்ச்சியில் இருப்பினும்.. 'ஷிவு.. எப்படி.. ?? என்ன நடக்குது இங்க.. ??' என மறுபக்கம் அவனின் மனதில் ஓராயிரம் கேள்விகள்..
யாதவனுக்கும் தன் மகளுக்கு பதிலாக.. வேறு யவளோ.. வருவதை கண்டு கோபமுற்றார்.. பரம்பரை நகைகளை தன் மகளுக்கு கொடுக்காமல் யவளோ ஒருவளுக்கு அணிந்து அழைத்து வந்தது... இன்னும் கோபமூட்டியது...
சமீரா கோபத்தில் ஷிவாக்ஷியை நெருங்கி அவளின் கழுத்தை பிடிக்க வர.. இந்திரகவி சமீராவின் கைகளை தட்டிவிட்டு.. மணமேடையில் ஷிவாக்ஷி அமர வைத்தார்..
ராஜ தேவன்.. "கவி.. என்ன பண்ற.. ?? என்ன நடக்குது.. ??" என குழப்பத்தில் கேட்டார்..
"அம்மா.. என்ன பண்ற.. ?? மாயா எங்க.. ??" என பாட்டி தேவசேனா கேட்கவும்..
"இந்திரா.. என்னாச்சு.. ?? இந்த பொன்ன.. ?? ஏன் .. ??" ஷ்ரித்திக்கின் சித்தி தேவிகாவும் வினவ..
"இங்க.. பாருங்க.. என்கிட்ட இப்ப எதுவும் கேக்காதீங்க.. இந்திரகவி ஒன்னு பண்ண அது சரியா இருக்கும்னு நம்பறீங்க தான.. அப்ப ப்ளீஸ் இந்த கல்யாணம் நடக்கட்டுமே.. " என அவர்களிடம் அனுமதி கோரினார்..
என்ன நினைத்தாரோ.. தாத்தா அமரேந்திரர் அனுமதி கொடுத்தார்..
"சரி.. இந்த கல்யாணம் நடக்கட்டும்.. " என கூறியதும்..
அக்குடும்பத்தின் தலையே ஒப்புக் கொண்ட பிறகு.. நாம் பேசுவது தவறாகிவிடும்.. என்று அனைவரும் இத்திருமணத்தை புன்னகையை தொலைத்து குழப்பத்தோடே இருந்தனர்..
"அப்பா.. இது நியாயமே.. இல்ல.. என் பொன்னு எங்க.. ??" சமீரா தன் தந்தையிடம் வாதிடவும்.. தன் மனைவி பேசட்டும் என அமைதி காத்தார்.. யாதவன்.. சமீராவின் கேள்விக்கு மௌனமாக இருந்தார்.. தாத்தா அமரேந்திரர்..
இந்திரகவி.. "ஐயரே.. மந்திரத்தை சொல்லுங்க.. கல்யாணம் நடக்கட்டும்.. கண்ணா.. ஷிவாக்ஷி கழுத்தில தாலி கட்டு.." என ஷ்ரித்திக்கிடம் கூறினார்..
ஷ்ரித்திக்கோ ஷிவாக்ஷியை காண.. இயற்கையாகவே அழகாக இருப்பவள்.. மணப்பெண் அலங்காரத்தில் பேரழகாக மின்னியவளின் முகத்தில் பயத்தை அப்பட்டமாக காண்பித்து கண்களில் நீர் தழும்ப இருப்பவளை கண்டு.. நிச்சயமாக தன் தாய் ஷிவாக்ஷியை கட்டாயப்படுத்தி தான் ஒத்துக் கொள்ள வைத்திருப்பார்.. தனக்கு பிடித்தவளே ஆயினும் அவளின் சம்மதமின்றி நடக்கும் இத்திருமணம் நன்றாயிராது.. என எண்ணியவன்.. இத்திருமணம் நடக்காமல் தடுக்க எண்ணினான்..
"இல்லம்மா.. இந்த கல்யாணம் நடக்க வேணாம்.." என ஷ்ரித்திக் மணமேடையிலிருந்து மாலையை கழட்ட போனவனை... அவனின் தாய் இந்திரகவி தடுத்து..
"ஷ்ரித்திக்.. உன்ன கெஞ்சி கேக்கறேன்.. ஷிவாக்ஷி கழுத்தில தாலி கட்டு.. ரொம்ப கஷ்டப்பட்டுடேன்.. இதுக்கு மேல எனக்கு உடம்பிலயும் தெம்பில்ல.. மனசுலையும் தெம்பில்ல.. ப்ளீஸ்.. உன் அம்மா சொல்றேன்ல.. கட்டுப்பா.. " என்க..
"அம்மா.. வேணாம்.. எனக்கென்னவோ.. சரியில்லனு தோனுது.. " எனக் ஷ்ரித்திக் மறுக்கவும்..
இந்திரகவி..
" கால்ல விழனுமா.. ஷ்ரித்திக்.. " என்று கண்ணீரை அடக்கிக் கொண்டு கேட்க..
ஷ்ரித்திக்
"அம்மா.." என உதடுகள் ஓசையின்றி அதிர்ச்சியில் மொழிய..
தன் தாயின் வார்த்தைகளின் தாக்கத்தால் வேறு வழியின்றி ஐயர் மந்திரங்களை ஓதி கொண்டே அவனிடம் மங்கல கயிற்றை நீட்ட..
மங்கல நாணினை அக்னியை சாட்சியாக வைத்து.. அவளின் வெண்சங்கு கழுத்தில் முன்று முடிச்சிட்டு.. தன்னவளாக ஆக்கிக் கொண்டான்.. முடிச்சிட்டு தன் கரத்தை எடுக்கும் தருவாயில் ஷிவாக்ஷியின் கண்ணீர் அவனின் கரத்தில் பட்டுத் தெறித்தது... ஷிவாக்ஷியின் வருத்தம் .. ஷ்ரித்திக்கின் நெஞ்சை அழுத்தி பிசைந்தது..
இருவரின் எண்ணங்களும் வெவ்வேறு திசையில் பயணித்தது..
ஷ்ரித்திக்கின் மங்கல நாணினை தன் கழுத்தில் ஏறிய போது.. 'என் கன்னியாதானம் எப்படியெல்லாம் இருக்கனும்ண்டு ஆசைபட்டேன்.. ஆனா.. இப்ப தாத்தாக்கு தெரியாமா... ஒத்து வராத ஒருதர் கூட.. ' என ஷிவாக்ஷி மனதில் நினைத்துக் கொண்டே ஷ்ரித்திக் கட்டிய தாலியை தன் கைகளில் எடுத்து பார்தவளுக்கு அதன் பாரம் தாங்காமல் கண்களில் நீர் வழிந்தது...
ஷ்ரித்திக்கிற்கோ.. 'அவ சம்மதமில்லாம இந்த கல்யாணம் நடக்குது.. பேச முடியாத நிலையில நா இருக்கேன்.. ' என இவனின் மனவோட்டம் இருந்தது..
"பொன்னு நெத்தில குங்குமம் இடுங்கோ.. " என ஐயர் குங்குமத்தை நீட்ட..
கொடுத்த குங்குமத்தை ஷிவாக்ஷியின் நெற்றி வகிட்டில் தீட்டினான்.. ஷ்ரித்திக்.. தன்னவளாக ஆக்கிக் கொண்டிருப்பதற்கான ஆதாரமாக இருக்கும் பொன் தாலியில் குங்குமத்தை இட்டான்..
ஷிவாக்ஷியின் கண்களில் நீர் நிற்காமல் வழிந்தது.. அதை மறைக்க தலை குனிந்த நிலையில் இருந்தான்.. நிமிர்ந்து இருந்திருந்தால் வரப் போகும் பிரச்சினை தவிர்த்திருப்பாளோ..
மணமேடையில் நடந்துக் கொண்டிருந்த சுப நிகழ்ச்சிகளை மாயாவின் தாயும் தந்தையும் ஒருசேர கோபத்தில் கண்களால் எரித்து கொண்டிருக்க.. அவர்களோடு சேர்ந்து இன்னும் ஒரு ஜோடி கண்கள்.. அதிர்ச்சியிலும் கோபத்திலும் எரித்தது..
ஐயர்.. "அக்னியை மூணு முறை சுத்துங்கோ.. " என அவர் கூறவும்..
ஜானவி ஷ்ரித்திக்கின் வேஷ்டி நுனியையும்.. ஷிவாக்ஷியின் சேலை தலைப்பையும் ஒன்றாக முடிச்சிட்ட பின்.. ஷ்ரித்திக் ஷிவாக்ஷியின் சுண்டு விரல் கோர்த்து அக்னி குண்டத்தை மும்முறை வலம் வந்தான்..
மேடையில்.. ஷ்ரித்திக்கின் அம்மா இந்திரகவி மெட்டியை நீட்ட... அம்மியில் தன் கால்களை பதித்த ஷிவாக்ஷியின்.. வெண்பிஞ்சு பாத விரல்களை தன் கரங்களால் பிடித்து மெட்டியை அணிந்து விட்டான்.. ஷ்ரித்திக்..
இன்னும் சில சம்பிரதாயங்களை முறைப்படி செய்தனர்.. ஷிவாக்ஷி இவையனைத்தும் இயந்திரகதியில் செய்து கொண்டு இருந்ததை ஷ்ரித்திக்கும் கவனித்தான்..
அனைத்து சுப சம்பிரதாயங்களையும் முடித்து மணமேடை விட்டு எழுந்தனர்.. ஷிவாக்ஷியும் ஷ்ரித்திக்கும்..
அப்போது தான் நிமிர்ந்து நோக்கிய ஷிவாக்ஷியின் கண்கள் அதிர்ச்சியில் உறைந்து கண்களில் நீர் அருவியாக கொட்ட "தாத்தா.." என அவளின் இதழ்கள் ஓசையின்றி பிரிந்தது..
ஏற்கனவே அழுது கொண்டிருந்தவள்... இன்னும் பிறிட்டு அழுவதை கண்டு இன்னும் பதற்றமானான்.. ஷ்ரித்திக்.. ஷிவாக்ஷியின் பார்வை போகும் திசையை கண்டவள்.. ஒரு வயதானவர் கண்களில் குரோதமும் அதிர்வும் கொப்பளித்தது..
மணமேடையை விட்டு இறங்கிய ஷிவாக்ஷி.. ஷிவாக்ஷியுடன் ஷ்ரித்திக்கும் நடந்தான்..ஷிவாக்ஷி.. தன் தாத்தாவிடம்.. அடைக்கலம் தேட நினைக்க.. "தாத்தா.. " என அழுதுகொண்டே விளிக்க..
அவரோ ஷிவாக்ஷியை புரிந்து கொள்வதற்கான முயற்சி எடுக்காமல்.. தனக்கு தெரியாமல் திருமணம் செய்து விட்டாள்.. தான் கற்பித்த ஒழுக்க நெறிகளை பின்பற்ற தவறிவிட்டாள்.. என்ற கோபத்தில்..
"ச்சீய்.. அபிஷ்டு.. என்ன அப்படி கூப்டாத.. சனியனே.." என ஷிவாக்ஷியின் தாத்தா கோபத்தில் கொப்பளிக்க..
ஷிவாக்ஷி.. "இல்ல.. தாத்தா.. நா எந்த தப்பும் பண்ணல தாத்தா.. " என தெம்பிக் கொண்டிருந்தமையால் தொண்டை அடைக்க கூறவும்..
"நேக்கு தெரியாம கன்னியாதானத்துல ஈஷிண்டு உக்காந்திண்டு.. இப்ப எந்த தப்பும் பண்ணலன்னு அபத்தமா வேற பேசுற.." என இன்னும் கோபத்தில் கண்கள் சிவந்தது.. தாத்தாவிற்கு..
"இல்ல.. தாத்தா.. நா அபத்தம் செய்யல.. என்ன நம்புங்கோ.. " என அழுது அவளின் முகம் சிவந்து வீங்கியதை கண்டு காதல் கொண்ட மனம் பொறுக்காது..
ஷ்ரித்திக் "இல்லங்க.. நீங்க தப்பா புரிஞ்சுகிட்டிங்க.. அக்ச்சுவலி.. என்ன நடந்ததுன்னா.. " என நடந்ததை சொல்ல வந்தவனை இடையிட்ட தாத்தா..
"அம்பி... நீங்க.. பேசாதேள்.. " என ஷ்ரித்திக்கிடம் சொல்லி விட்டு.. ஷிவாக்ஷியிடம் திரும்பி..
"என்ன பொறுத்த வரை.. நீ செத்துண்ட... நேக்கு உன் முகம் பாக்கவே அருவெறுப்பா இருக்கறது.. உன்ன நா தலை முழுங்கிண்ட... " என ஷிவாக்ஷியிடம் மொத்த வெறுப்பையும்.. கோபமாக காண்பித்து விட்டு திரும்பி பார்க்காமல் வேகமாக நடந்து சென்றவரை..
"தாத்தா.. தாத்தா.. " என தெம்பிக் கொண்டே அவரின் பின்னோடே சென்றாள்.. ஷிவாக்ஷி..
கோபம் கொண்ட ஷிவாக்ஷியின் தாத்தா ஷிவாக்ஷியை திரும்பி பார்க்காமல் வெளியேறினார்..
நேற்றைய பொழுதிலிருந்தே ஒரு கூட்டம் தன் கற்பை பறிக்க நினைத்து .. தன் உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு ஓடியது.., இன்று காலையில் ஷ்ரித்திக் அம்மாவின் தற்கொலை முயற்சி.., தன்னுடைய திடீர் திருமணம்.., தாத்தாவின் கோபம்.., ஒரே நாளில் எத்தனை அதிர்ச்சியை தான் மனம் தாங்கும்.. தெம்பி அழுதுக் கொண்டே இருந்தவளுக்கு மூச்சுத் திணறவும்.. இவையனைத்தும் ஒன்று சேர ஷிவாக்ஷியை தாக்க.. மனம் பாரம் தாங்காது.. தலை சுற்றல் எடுத்து மயக்கமடைந்தாள்..
ஷிவாக்ஷி மயக்கமடைவதை கண்டு பதறியடித்து கொண்டு ஷ்ரித்திக் அவளை தாங்கினான்..
தீவாவை அழைத்து..
"தீவா.. ஷிவாக்ஷிக்கு வந்து என்னன்னு பாரு.. ??" என ஷ்ரித்திக் ஷிவாக்ஷியை தன் கைகளில் தாங்கி கொண்டே சோஃபாவில் படுக்க வைத்தான்..
தீவா ஷிவாக்ஷிக்கு சிகிச்சை அளித்து கொண்டிருந்தாள்..
"ஒன்னுல்ல.. ஷ்ரித்திக்.. அதிர்ச்சியில வந்த மயக்கம்... நேத்துல இருந்தே நிறைய அதிர்ச்சி தர சம்பவம் தான் இவளுக்கு நடந்துருக்கு.. அதான்.. வேற ஒன்னுல்ல.. இன்னும் கொஞ்சம் நேரத்தில முழிச்சிப்பா.. " என ஷ்ரித்திக்கிடம் கூறிவிட்டு தன் கணவன் மகேந்திரனிடம் வந்து நின்றாள்.. தீவா
தீவாவின் சொற்கள்..
ஷ்ரித்திக்கிற்கு.. ஷிவாக்ஷி பட்ட இன்னல்களை கண்டு அவன் கண்களில் நீர் கசிய.. இதற்கெல்லாம் காரணமாக இருக்கும் தன் தாயின் மீது இருக்கும் அளவு கடந்த கோபத்தில் கண்கள் சிவந்தது..
"என்ன நடக்குது இங்க.. ?? என் பொன்னு எங்க.. அண்ணி.. ?? " மாயாவின் தாய் சமீரா கோபமாக இந்திரகவியிடம் வினவ..
"என்ன நடந்துச்சு.. மருமகளே.. ?? ஏன் கடைசி நிமிஷத்தில இப்படி பண்ண.. ?? நீ ஒன்னு பண்றினா அதுல ஆயிரம் அர்த்தம் இருக்குனு நினைக்கறவன் நா.. நா ஏன் அமைதியா இருந்தேனா.. ?? ஷ்ரித்திக் கல்யாணம் நடந்தாகனும்னுங்கற தான்.. இப்ப சொல்லும்மா.. ?? என்ன ஆச்சு.. ??" என அனைவரின் கேள்வியையும் தாத்தா அமரேந்திரர் தன் கம்பீரம் குறையாது கேட்டார்...
மொத்த குடும்பமும் இந்திரகவியை கேள்வியாக பார்த்து..
"சொல்றேன் அப்பா.. " என தன் மாமனாரிடம் கூறிவிட்டு .. சமீராவிடம் திரும்பி "உன் பொன்னு என்ன காரியம் பண்ணிருக்கா தெரியுமா.. ??" என இந்திரகவி சமீராவின் முன் தனக்கு அறையில் கிடைத்த கடிதத்தை வீசினாள்... நடந்தவைகளை இந்திரகவி கூறினார்..
***************************
ஃப்ளாஷ் பேக் நமக்கு தெரிய வேணாம்...
***************************
விக்ரமின் மொழிகளை நினைத்து கொண்டிருந்த
ஷிவாக்ஷியை நிகழ்விற்கு கொண்டு வந்தது.. மங்கல வாத்தியங்களின் முழக்கமே..
'என்ன .. ?? கல்யாணம் நின்னுடுத்து தான.. ?? தவில் நாதஸ்வரம் இசையெல்லாம் கேக்கறதா.. இல்ல நேக்கு அப்படி தோன்றதா.. ??' என நினைத்தவள் .. வெளியே வந்து.. கீழே எட்டிப் பார்த்தாள்..
ஷ்ரித்திக் மணமேடையில் அமர்ந்திருக்க.. சுற்றியும் ஷ்ரித்திக்கின் உறவினர்கள் இருப்பதை கண்டவள்.. 'ஹோ.. மறுபடியும்.. கல்யாணம் நடக்கறதா.. நன்னா இருக்கே.. தாத்தா நன்னா இருக்கா போலயே.. உடம்பு சரியாயிடுத்து.. அதான் மறுபடியும்.. வைக்கறா.. ' என மனதில் நினைத்துக் கொண்டிருக்கும் போதே..
தன் ஜியோ கைப்பேசியில் தன் தாத்தாவின் எண் திரையில் மின்னுவதை கண்டவளுக்கு மனம் நிம்மதி அடைந்தது... தாத்தாவின் அழைப்பை ஏற்று..
"ஹலோ.. தாத்தா.. எங்க இருக்கேள்.. ?? என்ன பண்றேள்.. ?? நா எத்தன தடவ போன் பண்ணே.. ?? ஒரு காலையாவது அட்டென்ட் பண்ணேளா.. ?? நோக்கு கொஞ்சமாவது அக்கறை இருக்கறதா.. நம்ம பேத்தி இங்க தனியா இருப்பாளேன்னு.. நேக்கு தான் இங்க மனசு படபடன்னு அடிச்சுக்கறது.. " என போனில் தாத்தாவை பேச விடாமல் படபடவென பேசி தள்ளவும்..
அதேசமயம்..
ஐயர்.. "பொன்ன அழைச்சிண்டு வாங்கோ.." என வழக்கம் போல கூறவும்..
அப்போது.. மாயாவின் தோழிகள் அங்கிருப்பதை கண்டு.. "என்னம்மா.. போய்.. உங்க ஃப்ரண்ட் கூட்டிட்டு வாங்கம்மா.. " மாயாவின் அம்மா சமீரா கூறவும்..
மாயாவின் தோழிகள் கைகளை பிசையவும்.. சரி தானே மாயாவை அழைத்து வருவதாக கூறி அவளின் அறையை நோக்கி சென்றார்..
மாயாவின் அறை கதவு திறந்து இருப்பதை கண்டு புருவ முடிச்சிட்டது.. இந்திரகவிக்கு..
அறையில் நுழைந்த ஷ்ரித்திக்கின் தாய் இந்திரகவி.. "மாயா.. மாயா.." என விளிக்க.. பதிலில்லாமல் போகவே.. குளியலறை என அவ்வறையில் இருக்கும் மூலை மூடுக்கு என எங்கு தேடியும் மாயாவை காணாததால்.. பதற்றமடைந்த இந்திரகவியின் கண்களுக்கு தென்பட்டது .. விஜய் மேஜையில் விட்டு சென்ற காகிதம்...
அந்த காகிதத்தை எடுத்த போது தான் தெரிந்தது.. அதொரு கடிதம் என்று..
அக்கடிதத்தில் தான் ஒரு ஆடவனை காதலிப்பதாகவும் .. தனக்கு இத்திருமணத்தில் விருப்பம் இல்லை.. நான் என்னவனுடன் வாழ்க்கை நோக்கி தடம் பதிக்கிறேன்.. என்னை தேட வேண்டாம்.. என எழுதியிருப்பதை கண்டவர்.. ஆடிப் போனார்.. அதிர்ச்சியில் கடிதத்தை காற்றில் விட்டவர் தோப்பேன கீழ அமர்ந்தார்...
'இவளுக்காக.. தான என் பையனுக்கு... இந்த கல்யாணத்துல இஷ்டம் இல்லைனாலும்.. வந்து பண்ணிக்கோன்னு வற்புறுத்துனேன்.. என் பையன் பண்ண தப்புக்கு மாயா தண்டனை அனுபவிக்க கூடாதுன்னு தான் நெனச்சேன்.. ஆனா.. இவ என் பையனுக்கு தண்டனைய குடுத்துட்டாளே.. இதுக்கு அப்புறம்.. எந்த அவமானத்தையும் சந்திக்காத என் பையன்.. இப்ப இந்த கல்யாணம் நின்னுடுச்சுனா.. என் பையன என்னென்னவோ குறை சொல்லுவாங்களே.. ஒரு பையனோட அம்மாவா யோசிக்காமா.. ஒரு பொன்னா.. யோசிச்சேனே.. அது என் தப்பா.. ?? ஷ்ரித்திக்கோட அம்மாவா யோசிச்சா... சுயநலமாயிடுமேன்னு... மாயாவுக்காக யோசிச்சேன்.. இவ இப்படி பண்ணிட்டாளே.. ஜோசியர் சொன்ன மாதிரி கல்யாணம் ஆகலைனா.. ஷ்ரித்திக்கோட உயிருக்கே ஆபத்து... நா எவ்ளோ பெரிய அவமானத்தை என் பையனுக்கு குடுத்துட்டேன்.. பையனுக்கு மட்டுமில்லாம .. இந்த குடும்பத்துக்கே குடுத்துட்டேன்.. ' என மனதில் ஏறிய பாரத்தின் அளவு தாங்காது கண்களில் நீர் திரையிட்டது... அதை துடைக்க வேண்டும் என்ற எண்ணமில்லாமல்.. மனம் தன் மகனுக்காய் எண்ணியது.. 'நான் எவ்ளோ பெரிய தப்பு பண்ணிருக்கேன்.. இல்ல.. இதுக்கு மேல நா உயிரோட இருக்கக் கூடாது.. ' என எண்ணிய மாத்திரமே.. கதவை கூட தாழிடாது.. மெத்தையில் கிடந்த ஒரு புடவையை எடுத்து மேலே தொங்கிக் கொண்டிருந்த வண்ணமயமான சீலிங் ஒளிவிளக்கில் புடவையை சுற்றி முடிச்சிட்டவர்.. தன் தலையை புடவையில் நுழைக்கும் முன் தன் மகன் ஷ்ரித்திக்கை நினைத்தவர்.. தான் ஈன்றெடுத்த மக்களையும்.. தன் மணாளனையும் நினைத்தவர்.. தன் தலையை நுழைத்து.. தன் இன்னுயிரை நீக்க முயற்சித்தார்.. கண்களில் நீர் வழிந்தது.. தன் மகனை பற்றி யோசியாதது.. பெரும் தவறாக ஷ்ரித்திக்கின் அம்மா இந்திரகவி தோன்றிற்று.. தான் செய்த தவறுக்கான தண்டனையை அனுபவிக்க வேண்டும்.. என தவறான முடிவை கையாண்டார்...
அப்போது ஷிவாக்ஷி தாத்தாவிடம் பேசிக்கொண்டு .. கீழே நடைபெறும் திருமணத்திற்கு செல்லலாமென வெளியே வந்தாள்..
பேசிக் கொண்டே நடந்தாள்.. ஷிவாக்ஷி "கொழந்த.. இருடா.. வந்த இடத்துல மாட்டிண்டேன்.. வந்து நா சொல்றேன்மா.. கன்னியாதானம் முடிந்திடுத்தா.. ??" என தாத்தா இராமானுஜம் கேட்கவும்...
"இல்ல தாத்தா.. அது பெரிய கதை.. நா அப்பறம் சொல்றேன்.. நீங்க இங்க வாங்கோ.. ??" என தன் தாத்தாவை உடன் அழைத்தாள் .. ஷிவாக்ஷி..
"கொழந்த.. அட்ரெஸ் சொல்லுடா.. இப்ப அந்த அம்பியோட கன்னியாதானம் எங்க நடக்கறதுண்டு சொல்லு நா அங்க தான் வந்துண்டு இருக்கேன்.. " என தாத்தாவின் மொழிகளில் மகிழ்ச்சி அடைந்தவள்.. இப்போது தங்கியிருக்கும் அரண்மனையின் முகவரியை கூறிவிட்டு திரும்பியவளின் செவிகளில் யாரோ.. இரும்புவது போன்ற ஒலி கேட்கவும்... 'யாரோ.. இரும்பற மாதிரி கேக்கறதே...' என நினைத்தவள்.. அதை அப்படியே விட்டுவிட்டு கீழே செல்ல வேண்டுமானால் மாயாவின் அறையை தாண்ட வேண்டும்...
மாயாவின் அறை ஜன்னல் திறந்திருமையால்..
கீழே இறங்கும் தருவாயில் எதர்ச்சையாக .. மாயாவின் அறை ஜன்னலை காண.. அங்கே... ஷ்ரித்திக்கின் அம்மா.. தூக்கிலிட்டு கொண்டிருப்பதை கண்டவள்... அதிர்ச்சியில் விழிவிரித்தவளின் விழிகளில்.. பயமும் பதற்றமும் கொண்டவள்.. "அச்சோ.. அம்மா.. என்ன காரியம் பண்றேள்.. ??" என என்ன செய்வதென அறியாமல்.. கைகளும் கால்களும் நடுங்க.. அதிர்ச்சியில் கத்திக் கொண்டே அவ்வறையில் நுழைந்தாள்.. தாழிடாததால்.. சுலபமாக உள்ளே நுழைந்தவள்...
என்ன செய்வது என புரியாமல் விழித்தவள்..
தொங்கிக் கொண்டிருந்த
ஷ்ரித்திக்கின் அம்மாவின் ஒலிகள் வேறு ஷிவாக்ஷியை பயமுறுத்த.. மிகவும் தன்னை சமன் படுத்தி.. ஷ்ரித்திக்கின் அம்மாவை காப்பாற்ற வேண்டுமென அவரின் கால்களை பற்றி.. அவரை தூக்கி.. "அம்மா.. ப்ளீஸ்.. அந்த புடவையை உங்க கழுத்தில இருந்து எடுங்கோ.." என அவரின் மொத்த பாரத்தையும் தாங்கிக் கொண்டு ஷிவாக்ஷி சொல்லவும்...
"இல்லம்மா.. என்ன விட்றும்மா.. " என ஷ்ரித்திக்கின் அம்மா இந்திரகவி செய்கையில்.. கண்ணீர் மல்க கூறினார்..
"அம்மா.. ப்ளீஸ்.. எதுவா இருந்தாலும்.. பேசி தீத்துக்கலாம்.. உங்க பிரச்சினைய நான் தீர்க்கறேன்... ப்ளீஸ்.. என்னால ரொம்ப நேரம் உங்க வைட்ட தாங்க முடியாது.. ப்ளீஸ் அம்மா.. " என ஷிவாக்ஷி அவரின் பாரம் தாங்காது கண்ணீர் வெளியிட ஷ்ரித்திக்கின் அம்மா இந்திரகவியிடம் கெஞ்சினாள்..
'தன்னுடைய உடல் பாரத்தை தாங்குகிறாளே.. ' என்றெண்ணி.. தன் தலையில் நுழைத்த புடவையை வெளியே எடுத்தார்... அவரை பத்திரமாக மெத்தையில் இறக்கினாள்.. ஷிவாக்ஷி..
இரும்மலிட்டவருக்கு.. நீரை கொடுத்து.. ஷிவாக்ஷி சமன் படுத்தினாள்...
"என்னம்மா.. நீங்க.. ?? இப்படியொரு காரியத்தை பண்றதுக்கு... உங்களுக்கு எப்படி மனசு வந்தது.. நேக்கு ஒரு நிமிஷம் என்ன பண்றதுன்னே.. தெரியலை.. ?? என் கை காலெல்லாம் வெட வெடத்து போயிடுத்து.. தெரியுமோன்னோ.. நீங்க தற்கொலை பண்ற அளவுக்கு என்ன ஆயிடுத்து.. ??" என முச்சு வாங்கிக் கொண்டு பதற்றம் குறையாமல்.. கை கால்களின் நடுக்கம் தெளியாமல்.. வினவினாள்..
ஷிவாக்ஷியின்.. கேள்வியில் விரக்தியில் புன்னகைத்தவர்.. அந்த கடித்தத்தை ஷிவாக்ஷியிடம் நீட்டினார்...
அக்கடித்தத்தை படித்த ஷிவாக்ஷியும் அதிர்ச்சியில் உறைந்தாள்..
"என் பையனுக்கு எவ்ளோ பெரிய அவமானத்தை குடுத்திருக்கேன்.. என் பையனுக்கு மட்டுமில்லாம இந்த குடும்பத்துக்கும்... " என அதற்கு மேல் கூற இயலாது.. தொண்டை அடைத்தது..
'என்ன இப்படி ஆயிடுத்தே.. ?? கிருஷ்ணா.. ஏன் இவாளுக்கு இப்படியொரு சோதனை தரேள்.. இவாளோட சரி பண்ணு.. ' என தன்னுடைய இஷ்ட தெய்வத்தை வழிபட்டாள்.. அவரின் செவிகளை அடைந்ததால்.. 'ததாஸ்து... ' என அவ் வேண்டுதலுக்கு இசைந்தார்..
"அது மட்டுமில்லாம .. என் பையனுக்கு இன்னிக்கே கல்யாணம் நடந்தாகனும்.. அப்படி ஆகலனா.. அவனோட உயிருக்கே ஆபத்து.. யாரு என் பையன.. " என தாயாக.. வருத்தம் கொண்டிருந்தவருக்கு.. 'தன் மகன் ஷிவாக்ஷியை தானே காதலிக்கிறான்.. அவளையே மணம் முடித்து வைத்து விட்டால் என்ன.. ' என்றெண்ணம் தோன்றிய மாத்திரம்... அதை செயல்படுத்தவும் ஆயத்தமானார்..
"நீ.. ஏன் என்னோட பையன கல்யாணம் பண்ணிக்க கூடாது... ???" என ஷிவாக்ஷியிடம் கேட்டார்..
தாயாக வருத்தத்தில் எப்படி ஆறுதல் கூறுவது என தவித்தவளின் செவிகளில் விழுந்த இவரின் மொழிகளால் அதிர்ச்சியில் அவளின் கால்கள் தரையில் வேரூன்றியது...
"அம்.. அம்.. அம்மா.. என்.. என்.. என்ன.. ஸ் .. ஸ்ச.. சொல்றேள்.. ??" என்ற அதிர்ச்சியில் அவளின் நாக்கு பிளன்றது...
"ஆமாம்மா.. என் பையன் ரொம்ப நல்லவன்.. கைநிறைய சம்பாதிக்கிறான்.. உன்ன நல்லா பாத்துப்பான்.. " என ஷ்ரித்திக்கின் தாய் இந்திரகவி திருமணம் நடந்துவிடும் என்ற ஆசையில் கண்கள் மின்ன கூறினார்..
"அச்சோ.. அம்மா.. அதுக்கு சொல்லல்ல.. விளையாட்டுக்கு தான சொல்றேள்.. ??" என ஷிவாக்ஷி முகத்தில் பயத்தை தடவிக்கொண்டு கேட்க..
"இல்லம்மா.. நிஜமா தான் சொல்றேன்.. என் பையன கல்யாணம் பண்ணிக்கோம்மா.. உன்ன கெஞ்சி கேக்கறேன்.. " என காலில் விழ போனவரை .. பயத்தில் கண்கள் நீர் குளமாகி இரண்டு அடி பின்னோக்கி சென்றாள்.. "என்னம்மா.. நீங்க.. இப்படி பேசறேள்.. நா சாதாரண மிடில் க்ளாஸ் பொன்னு.. இப்ப நீங்க சொல்றீங்கங்கறத்துக்காக.. நா உங்க பையனா கல்யாணம் பண்ணின்டா.. இந்த லோகம் என்னை தான் தப்பா பேசும்.. நா உங்களையும் உங்க பையனையும் மயக்கிட்டாதா.. பேசும்.. நேக்கு அத தாங்கிக்குற சக்தி இல்ல.. என்ன விட்றுங்கோ.. " என்று கண்களில் நீர் வழிய தொண்டை அடைக்கக் கூறினாள்..
"இல்லம்மா.. உன்ன யாரும் எதுவும் சொல்ல மாட்டாங்க. அதுக்கு நான் பொறுப்பு.. நா உனக்கு வாக்கு தரேன்.. நீ என் பையன கல்யாணம் பண்ணிக்கோ.. இன்னிக்கு கல்யாணம் ஆகலைனா.. அப்பறம் அவனோட உயிருக்கே ஆபத்து.. இப்ப நீ மட்டும் கல்யாணத்துக்கு ஒத்துகலைனா.. அப்பறம் நானும் உயிரோட இருக்க மாட்டேன்.. " என்று கண்களில் நீர் மல்க.. தான் மீண்டும் தற்கொலைக்கு முயற்சிப்பேன் என கூறுபவரை என்ன செய்வதென புரியாமல் பார்த்தாள்..
"அப்பறம் எதுக்கு என்ன காப்பாத்துன.. என் பையன் கஷ்டப்படறத பாக்கவா.. " என கோபமாக பேசிய இந்திரகவி.. ஷிவாக்ஷி இத்திருமணத்திற்கு சம்மதிக்காததால்.. மீண்டும் தூக்கிலிட செல்வதை பார்த்தவள்..
ஷிவாக்ஷி அவர் மீண்டும் தூக்கிலிடுவதை கண்டு அச்சம் கொண்டு.. ஷ்ரித்திக்கின் அம்மாவை தன் கை பிடித்து தடுத்து கொண்டே..
"அச்சோ..அம்மா.. ஏன் என்ன வதைக்கறேள்.. உங்களுக்கு என்ன இந்த கன்னியாதானத்துக்கு நா சம்மதிக்கனும்.. அதான.. நா சம்மதிக்கறேன்.. " என பயத்தில் தன் சம்மதத்தை தெரிவித்தாள்..
ஷிவாக்ஷி சம்மதத்தை சொன்னதும்.. மகிழ்ச்சியில் கண்கள் மின்ன.. ஷிவாக்ஷியை.. "நிஜமா.. " என கண்களில் நீர் வழிய கேட்கவும்.. தலையை மேலும் கீழும் ஆட்டி சம்மதம் என தெரிவித்தாள்.. ஷிவாக்ஷி..
மகிழ்ச்சியில்.. தன் கண்களை துடைத்தவர்.. "நீ ஒன்னும் கவலப்படாதம்மா.. உன்னை நான் நல்லா பாத்துப்பேன்.. என் பையனும் நல்லா பாத்துப்பான்.. உன்னை யாரும் எதுவும் சொல்ல விடமாட்டேன்.. " என கூறிக் கொண்டே ஷிவாக்ஷிக்கு மணப்பெண் அலங்காரம் செய்தார்..
தனக்கு வரப்போகும் மருமகளுக்கு பரிசாக தரவேண்டி வாங்கி வைத்திருந்த விலையுயர்ந்த கற்கள் பதித்த அரக்கு வண்ணப்புடவையை ஷிவாக்ஷிக்கு கட்டி விட்டு.. பரம்பரை நகைகளால் ஷிவாக்ஷியை அலங்கரிக்க .. அந்நகைகளை கண்டவள்.. மிகவும் பயந்தவள்.. "அம்மா.. நேக்கு பயமா இருக்கறது.. இதெல்லாம் வேண்டாம்.. இந்த கல்யாணம் வேணாம்.." என அவர்களின் ஆடம்பரம் அவளை பயத்தில் தள்ளி மீண்டும் திருமணம் வேண்டாம்.. என மறுத்தாள்..
"இல்லம்மா.. இதெல்லாம்.. பரம்பரை நகைங்க தான்.. ஒன்னும் இல்ல.. நீ பயப்படாத நான் இருக்கேன்ல.. " என ஷிவாக்ஷிக்கு தைரியம் கொடுத்து.. அவளை மணப்பெண்ணாக அலங்கரித்தார்..
நெற்றியில் வைரக்கல் பதித்த நெற்றி சுட்டி மின்ன..
மூக்கில்
வைர மூக்குத்தி, முள்ளாக்கு என முகத்திற்கு தனி ஜொலிப்பை கொடுத்தது..
காதில் முத்து வைரம் பதித்த லொளாக்கு கதை சொல்ல..
கழுத்தில் வைர அட்டிகை.. தங்க ஆரம் பளபளக்க.. மெல்லிடையில் ஒட்டியாணமும் இடைச் சங்கிலியும் தனியழகை சேர்க்க... கைகளில் வளையலகளும் தொங்கியிருக்கும் மணிகள்.. அவளின் கையசைவுகளுக்கு ஏற்ப ஆட.. ஷிவாக்ஷியின் முகம் பளிங்கு போல பயத்தை அப்படியே காட்ட.. கண்களில் கண்ணீரும் விழுந்துவிடுவேனா.. என்றிருக்கும் போதே.. மகாலட்சுமி வழி தவறி தம் வீட்டினுள் வந்தாளோ என எண்ணும் அளவிற்கு பேரழகாக இருந்தாள்.. ஷிவாக்ஷி..
"நீ பயப்படாத.. நா இருக்கேன்ல.. நீ எனக்கு ஒரு வாக்கு தரனும்.. " என ஷ்ரித்திக்கின் அம்மா இந்திரகவி யாசிக்க..
"என்னம்மா.. ??" என ஷிவாக்ஷி யோசனையோடே கேட்கவும்..
"எந்த நேரத்திலும்.. நீ நம்ம வீட்ட விட்டோ.. என் பையன விட்டோ.. என்னிக்கும் போகமாட்டேன்னு வாக்கு குடு.. " என ஷ்ரித்திக்கின் அன்னை எங்கே கட்டாயம் கொண்டு திருமணம் முடிந்ததும் சென்று விடுவாளோ.. என்ற பயத்தில் ஷிவாக்ஷியிடம் வாக்கு கேட்டார்..
எதற்காக இப்படியொரு வாக்கு என யோசித்த வண்ணமே.. தன் கரங்களை அவரின் கரங்களில் இணைத்து வாக்கு கொடுத்தாள்.. ஷிவாக்ஷி..
மணமேடைக்கு தன் வருங்கால மாமியாருடன் இணைந்து நடந்தாள்..
--------------------
Sorry for the late epi...
Enakku Vera onlinelaye model exam.. so adhanala epi kuduka mudila..
Patti tinkering velai.. adhan..
Valakam Pola.. kela irukura natchathiratha thattitu ponga.. comment kudukavum.. marakadhinga makkale.. 😁
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro