அத்தியாயம் - 12 🤗
இருளவளை 'எங்கே செல்கிறாய்' எனத் தன்கைவளைவில் இறுக்கி அணைத்திருந்தான்... பனியவனின் ... விடியாத அதிகாலை பொழுது..
இருளவள் வெக்கத்தில் தன் முகத்தை முடியிருந்தவள்.. தன் ஒற்றைக் கண்ணால்.. கண்ணாளனை காண்பதைப் போலவே.. அந்த மாளிகை தெரிந்தது...
ஊரே உறக்கத்தை... கூட்டமான பேருந்தில் ஏறிய பயணிகளை போல் இறுக்கி பிடித்திருந்தது.. ஆனால் அம்மாளிகையை தவிர்த்து..
கேரளா பாணியில் கட்டியிருந்த அந்த அரண்மனையே புது மணப்பெண் அலங்காரத்தில் மிளிர்ந்தது...
அவ்வூரின் நடுவில் மின்மினி பூச்சி அமர்ந்து அதன் ஒளியில் மின்னுவதை போலே அந்த அரண்மனை மின்னியது...
அதிகாலை பிரம்ம முகூர்த்தத்தில் திருமண முகூர்த்தம் என்பதால்.. அனைவரும் நித்திரை தேவியின் கரத்தை பிடித்தபடியே இருந்தனர்... சிலரை தவிர்த்து ...
திருமண முகூர்த்தம் நெருங்குவதற்கு இன்னும் சில மணி நேரங்களே.. ஆதலால் மாளிகையில் சில குரல்கள் சுற்றி வந்தன...
"வாப்பா.. இந்த ஸ்டேஞ் டெக்கரேஷன்ஸ் எல்லாம் எப்படி... இருக்குன்னு பாரு... ??? வா.. வந்து சரி பண்ணு.. " என்று தாத்தா அமரேந்திர நாயக் வேலையாட்களுக்கு ஆணையிடவும் வந்து செய்தனர் ...
"கலசம் எங்கே இருக்கு .. ?? தீவா... இங்கே வாடாம்மா.. கலசம் எடுத்துட்டு வாம்மா.. அது பூஜையறையில் இருக்கும்.. எடுத்துட்டு வந்துரும்மா..." என்று சித்தி தேவிகா தீவாவை ஏவி விட்டார்...
"ஐயர்.. வந்துட்டாரான்னு கேட்டீங்களா... ??? சீக்கிரம் கேளுங்க.. என்னங்க நீங்க.. "
என்று ஷ்ரித்திக்கின் தாய் இந்திரக்கவியும் தன் அன்பு கணவரை ராஜ தேவனிடம் கேட்டுக் கொண்டிருந்தார் ..
"டேய்... புருஷா.. எந்திரிடா... ஏன்டா.. என்ன இப்படி படுத்துற... இன்னிக்கு ஷ்ரித்திக்குக்கு கல்யாணம் ஞாபகம் இருக்கா... ??? எந்திரிடா... " என நேஹா தன் கணவன் கார்த்திக்கை எழுப்ப முயற்சித்தாள்...
"போடா... ஹனி.. எனக்கு செம்ம தூக்கம்.. வா நாம ரெண்டு பேரும் தூங்கலாம்..." என கார்த்திக் நேஹாவை பிடித்து இழுத்து அவளை அணைத்துக் கொண்டு உறங்கத் தொடங்கினான்...
"அடப்பாவி.. நீ தூங்கறதும் இல்லாம... என்னையும் இழுக்கறியா... உன்ன.. நீ இப்படிலாம் கூப்டா எந்திரிக்க மாட்ட.. " என்று கூறிக்கொண்டே அருகிலிருந்த தண்ணீர் குவளையை எடுத்து கார்த்திக்கின் மீது சாய்தாள்
"ஐயோ.. மழை.. மழை ரூம்குள்ள .. மழை.. ஆமா.. ரூம்குள்ஹ எப்படி மழை பெய்யும்... ??" என்று பதறியடித்து கேள்வியினோடே எழுந்தான்... கார்த்திக்..
"அடிடிஇஇப்பாஆஆஆவி... " என கார்த்திக் தூக்கத்திலிருந்து எழுப்பிய கடுப்பில் இழுத்தவன்... நேஹாவின் பார்வையில்.. " சரி... சரி ... முறைக்காத.. உன்னால குளிக்கற வேலை மிச்சம்... " என புலம்பிக் கொண்டே கார்த்திக் படுக்கையை விட்டு எழுந்தான்..
"மஹி... போ.. போய் குளி.. எனக்கு நிறைய வேலை இருக்கு.. குழந்தைகள வேற ரெடி ஆக்கனும்.. அத்தை வேற கூப்டாங்க.." என தீவா தன் கணவன் மகேந்திரனை குளியலறைக்குள் தள்ளவும்...
"என்ன... திவு... மிட்நைட்ல யாரு கல்யாணம் வைச்சது ... இவங்கல... " என புலம்பியபடியே அவனும் குளித்து தயாரானான்..
ருத்ரா, ஆரா, தியா, ரித்துல்.. நால்வரும் தாருமாறாக ஒருவர் முகத்தில் காலும் மற்றொருவரின் கை ஒருவரின் வாயிலும் வைத்துக் கொண்டு உறங்கிக் கொண்டிருந்தனர்..
இவர்கள் உறங்கிக் கொண்டிருந்த அழகை பார்த்து சிரித்துக் கொண்டே தீவாவும் நேஹாவும்... "பண்ற சேட்டைலாம் பண்ணிட்டு.. எப்படி தூங்கறாங்கனு பாரு... " என தீவா அந்நால்வரை எழுப்பும் முயற்சியில் ஈடுபட்டனர்...
"அம்மா.. தூங்கனும்... இன்னும் 5 மினிட்ஸ் மட்டும்.. ப்ளீஸ்.. ப்ளீஸ்... " என ருத்ரா தன் தாய் நேஹாவிடமும் அத்தை தீவாவிடமும்... தங்களுக்காக கெஞ்சினான்...
"ஆமா... அம்மா... தூங்கதோம்... " என ரித்துல் கூறிவிட்டு.. நால்வரும் மீண்டும் தங்களின் உறக்கத்தை தொடர்ந்தனர்..
"டேய்... உங்கள .. " என்று கூறிக்கொண்டே தீவாவும் நேஹாவும் நால்வரையும் குளியலறைக்குள் தூக்கிக் கொண்டு தயார்படுத்தினர்..
சமீராவும் தன் மகள் மாயாவை திருமணத்திற்கு தயார்படுத்திக் கொண்டிருந்தார்... அழகு நிலையத்திலிருந்து வந்த ஆட்கள் மாயாவை அழகு படுத்திக் கொண்டிருந்தனர்..
"மாம்... ஹவ் வாஸ் மை லுக் ???" என்று தன் பெற்றோர்களிடம் வினவினாள்....
"உனக்கென்ன... என் செல்லமே... ராணி மாதிரி இருக்கே... " என மாயாவின் தந்தை யாதவன் தன் மகளை கொஞ்சினார்..
"ஆமா.. இன்னும் கொஞ்ச நேரத்தில கல்யாணம் ஆக போகுது.. கொஞ்சிட்டே இருங்க.. உங்க மகளை.. " என்று சிரித்துக்கொண்டே சமீரா கூறவும்..
"ஏன்டி... என் பொன்ன நா கொஞ்சரேன்.. உனக்கு என்ன... ?? அதுமில்லாம.. என் பொன்னு பொறந்ததும் வாழப்போறதும் ஒரே வீட்ல.." என்று யாதவன் கூறிவிட்டு தன் மகள் மாயாவிடம் கைகளை தட்டி ஹைஃபை செய்தனர்...
புன்னகையுடன்
"ஹ்ம்ம்ம்ம்... ஆமாம்மா... " என கூறிக் கொண்டே தன் மகள் மாயாவை கண்ட சமீரா... "ஏன்டி... நகை போட்டுக்களையா... ??" என்று கேட்டாள்..
"மாம்... வாட் ஆர் யூ சேயிங்.. ??? பரம்பரை நகைய கொண்டு வாங்க போட்டுக்கறேன்... அதுக்காகத் தான் வைட்டீங்.." என ஆசையில் கண்கள் மின்ன கூறுவதைப் பார்த்ததும்...
"ஏய்.. என்ன டி.. இந்த நகையெல்லாம்.. என்ன பண்றது... ??? நீ தான பாத்து பாத்து செலக்ட் பண்ண.. இதப் போடு.. " என சமீரா கூறவும்...
"ஏய்... எதுக்கு டி... என் பொன்ன அதட்டுற... அவ கரக்ட்டா தான கேட்டா... ??? இந்த வீட்டுக்கு வரப் போற முத்த மருமகளுக்கு கல்யாணத்தப்ப பரம்பரை நகைய போடுவாங்க தான.. அப்பறமென்ன... ???" என தந்தை யாதவன் மகளுக்காக பரிந்து பேசினார்...
"ம்ப்ச்... நீங்களும்.. புரியாம பேசறீங்க... ??? பரம்பரை நகைய போடறதுன்னா... இந்நேரம் அவங்களே வந்து குடுத்திருப்பாங்க... பரம்பரை நகைய சம்டைம்ஸ் ஆப்டர் மேரேஜ் அப்பக்கூட குடுப்பாங்க.. ஆனா இன்னும் தரல... நாமலா... போய் கேக்கறது எனக்கு சரியா படல... அதனால தான் சொல்றேன் ... இந்த நகையெல்லாம் போடு... " என தன் மகள் மாயாவிடம் ஆணையிட்டார்...
தாயின் சொற்களை கேட்டு முகம் சுருங்கி விட்டது... மாயாவிற்கு...
ஏனெனில் ராஜ பரம்பரை நகைகள்.. மிகவும் பரம்பாரிய வடிவமைப்பு இன்னும் அழகாக காட்டியது.. நேர்த்தியாக உருவாக்க பட்டது.. அதன் அழகை பார்க்க பார்க்க திகட்டாத ஒன்று.. அக்காலத்து நகைகளின் அழகை வர்ணிக்கவும் வேண்டுமா..
பரம்பரை நகைகள் அனைத்தும் தலை முதல் கால் வரை அணிந்ததை மீண்டும் அணிய தேவையின்றி ஒரு பெரிய பெட்டி நிறைய நகைகளே நிறைந்து உள்ளது..
அதன் அழகில் மயங்கி .. திருமணத்தன்று நிச்சயம் தருவார்கள்.. எனறெண்ணத்தில் மிதந்திருந்தவள்... தாயின் சொற்களால் முகம் சுருங்கியது..
தன் மகளின் முகம் திருமணத்தன்று வாடுவதை கண்டு பொறுக்காது.. யாதவன் ..
"நீ.. என்ன பேசற.. ??? நம்ம உரிமைய விட்டு குடுக்க சொல்றீயா... ??? இன்னும் கொஞ்சம் நேரத்தில என் பொன்னு தான் இந்த வீட்டு மருமகள்... இந்த வீட்ட ஆளப்போற ராணி என் பொன்னு மாயா தான்... " என்று யாதவன் சற்று கோபமாகவே பேசினார்...
"சரி.. நீங்க சொல்றதுனால போய் கேக்கறேன்... தரலைனா.. அது உங்களுக்கு தான் அவமானம்" என்று சமீரா... சற்று காட்டமாகவே பதிலளித்து விட்டு சென்றார்..
தன் கணவனிடமும் மகளிடமும் கூறிவிட்டு நேரே தன் தாய் தேவசேனாவின் முன் வந்து நின்றாள்.. சமீரா..
"என்னம்மா... என் முன்னாடி வந்து நின்னுட்டு இருக்கற... ??? இன்னும் கொஞ்சம் நேரத்தில கல்யாணம் என்ன நீ... ?? " என தேவசேனா தன் மகள் சமீராவிடம் வினவ..
சமீரா
"அம்மா... அதுதுஉஉஉ... அது வந்து... "எப்படி கேட்பது என யோசித்தவள்..
"என்னம்மா... இப்படி யோசிக்கற... ?? என்னாச்சு.. ??" என்று தன் மகளிடம் பரிவாக வினவவும்...
சமீரா
"அது வந்தும்மா.. நம்ம பரம்பரை நகைகள கல்யாணத்தப்ப.. வரப்போற முத்த மருமகளுக்கு போடுவாங்கள.. ஆனா இன்னும் நகைங்க.. வரல.. அண்ணிக்கிட்ட தான் இருக்கும்.. நீங்க கொஞ்சம் சொல்லுங்களேன்.. " என்று ஒருவழியாக தன் தாயிடம் கேட்டேவிட்டாள்..
சிறிது யோசித்த.. பாட்டி தேவசேனா.. "இங்க பாரு சமீரா.. நகைய தரதா இருந்தா..இந்திரகவி முன்னாடியே குடுத்து இருப்பா.. இன்னும் தரலைனா.. தெர் மஸ்ட் பீ சம் ரிசன் ஃபார் தட்.. மே பீ ஆஃப்டர் மேரேஜ் .. அப்பறம் எல்லார் முன்னாடியும் தரலாம்னு நெனச்சிருப்பா.. அதனால நீ மாயாவுக்கு வாங்குன நகையவே போட்டு விடும்மா..." என மகளையும் மருமகளையும் விட்டுக் கொடுக்காமல் பேசினார்.. தேவசேனா..
யோசனையில் உளன்ற
பாட்டி தேவசேனா... தன் முத்த மருமகளான.. "அம்மா... மருமகளே.. இந்திரா... இங்க வாம்மா.. " இந்திரகவியை அழைத்தார்..
"அம்மா... சொல்லுங்க... " என பணிவுடன் தன் அத்தையிடம் வந்து நின்றார்.. இந்திரகவி...
"இல்லம்மா... பரம்பரை நகைங்க.. எல்லாம் நீ மாயாகிட்ட தரலையா... ??? சமீரா வந்து கேட்டுட்டு போறாம்மா... ???" என பாட்டி தேவசேனா இந்திரகவியை நோக்கி கேள்வி எழுப்பினார்...
"இல்ல.. அம்மா.. நான் இப்படி பேசறேன்னு தப்பா எடுத்துக்க கூடாது... " என்று இந்திரகவி இழுக்க..
"என்னம்மா.. எதுவா இருந்தாலும் சொல்லு.. ??" என்று பாட்டி தேவசேனா பதில் சொல்ல ஊக்கம் கொடுத்தார்..
"அது.. வந்தும்மா.. மாயாகிட்ட பரம்பரை நகைகள தரத்துக்கு... ஏன்னு தெரில... ?? ஒரு மாதிரியா இருக்கு.. நீங்க கேக்க வரது... புரியுதும்மா.. ??" என இடையே பேசவந்த தன் மாமியாரை கையமர்த்திவிட்டு தொடர்ந்து பேசினார் "ஷ்ரித்திக்கோட .. முறைப் பொன்னு தான.. என் பேத்தி தான... அப்பறமென்ன யோசனைன்னு.. நீங்க கேக்க வரது எனக்கு புரியுது... ஆனா.. என்னால அப்படி குடுக்க முடியல... ஏன்னு தெரில.. ??? பரம்பரை நகைங்க.. முழு மனசோட தான் தரனும்.. சோ நான் முகூர்த்தம் அப்ப ஷ்ரித்திக் தாளி கட்டுனதும்.. மாயாக்கிட்ட நா எல்லார் முன்னாடியும் மொத்தமா குடுத்தறேன்.. என்னைய தப்பா நினைக்காதீங்க.. அம்மா.. " என்று பணிவுடன் தன் மாமியாரிடம் விளக்கம் கூறினாள்... இந்திரகவி..
"சரிம்மா.. உன் விருப்பப்படி பண்ணு... பரம்பரை நகைங்க.. முழு மனசோட குடு... அது தான் நல்லது.. உன்னோட ஒவ்வொரு செயலுக்கு பின்னாடி.. ஒரு காரணம் கண்டிப்பா இருக்கும்.. பாத்துக்கோம்மா.... " என்று கூறி பாட்டி தேவசேனா நடந்தார்...
தாயின் சொற்களே மனதில் இருந்தது.. சமீராவிற்கு..
அதை நினைத்து கொண்டே நேரே தன் மகளிடம் வந்தார்.. சமீரா..
"இங்க பாரு.. மாயா .. நா அப்பவே சொன்னேன்ல.. இந்த நகைகளயே போடு.. தாலி கட்டுனதும்.. எல்லார் முன்னாடியும் தான் பரம்பரை நகைங்கள உன்கிட்ட தராங்கலாம்... சோ இந்த நகையே போடு.. " என கூறவும்..
"ஏன்.. என்னவாம்.. அவங்களுக்கு.. ???" என யாதவன் தன் மகளுக்கு சாதகமாகவே கேட்கவும்..
"வொய் மாம்.. ?? வாட் ஹேப்பண்ட்.. ?? " என மாயா கோபத்தில் தன் தாயிடம் கடுமையாக கேட்கவும்..
"என்னைய என்னடி பண்ண சொல்ற.. ?? கல்யாணத்தப்ப கூட சில நேரத்தில தருவாங்க.. எல்லார் முன்னாடியும் தரது உனக்கும் கௌரவம் தான.. போய் ரெடி ஆகு.. போ.. " என தன் மகளிடமும் கணவனிடமும் கூறியதும்..
சமீராவின் சொற்களை கேட்டு..
'அதுவும் கரக்ட் தான் ..' என்றெண்ணி கொண்டே தந்தையும் மகளும் தயாரானார்கள்..
"சரி .. என்னவோ.. பண்ணுங்க.. நான் வெளியே போய் எல்லாம் சரியா இருக்கான்னு பாக்கறேன்.. அம்மா.. மாயா.. ஏதாவதுன்னா.. அப்பாகிட்ட சொல்லு.. நான் பாத்துக்குறேன்.. ஹ்ம்ம்ம்ம்.." என தன் மகளிடம் கூறி அவளின் கண்ணம் தட்டி சென்றார்...
"என்னப்பா ... இது மாலை இப்படி உதுருது... ஹான்... வேற மாலைய ரெடி பண்ணுங்க... " என மாயாவின் தந்தை யாதவன் அனைத்தையும் சரிப் பார்த்து கொண்டிருந்தார்..
ஷ்ரித்திக்கின் சித்தப்பா தேவ தேவன் தன் சொந்த பந்தங்களை வரவேற்றுக் கொண்டிருந்தார்...
அப்போது அடையாளம் தெரியாத இருவர் உள்ளே நுழைந்ததை ஷ்ரித்திக்கின் சித்தப்பா தேவ தேவன்.. கண்டு கொண்டார்.. அதை சாதாரணமாக நினைத்து விட்டு விட்டார்..
அவ்விருவரும் அனைவரும் அமர்ந்திருந்த மண்டபத்தில் அமராமல் .. அம்மண்டபத்தை அளந்து கொண்டிருந்தனர்..
திருமணத்திற்கு சிலரை மட்டுமே அழைத்திருந்தனர்...
பிரம்ம முகூர்த்தம் என்பதாலே சிலர் மட்டுமே வருகை தந்தனர்...
உறக்கமின்றி.. ஷிவாக்ஷியை நினைத்து கொண்டே இருந்த... ஷ்ரித்திக்கிற்கு அடுத்த நாளே வந்ததைக்கூட உணராமல் இருந்தான்...
சடாரென கதவை அறைந்து திறந்து கோபத்தோடே உள்ளே நுழைந்தான்.. விக்ரம்.. அவனுடன் அழகு நிலையத்திலிருந்து ஆட்கள் ஷ்ரித்திக்கை அலங்கரிக்க வந்திருந்தனர்...
ஷ்ரித்திக்கை கண்டு கொள்ளாமல்
"ஃப்ரண்ட்ஸ்.. இவன தான் நீங்க.. ரெடி பண்ணணும்.. so.. நான் வெளியே போறேன்.. நீங்க பாத்துக்குங்க.. " என வந்த ஆட்களிடம் பேசினான்.. எனக்கென்ன சம்பந்தம் என்றார் போல விக்ரம் நடந்ததைப் பார்த்த ஷ்ரித்திக்..
வந்திருந்த அழகு நிலைய ஆட்களை சிறிது நேரத்திற்கு வெளியே இருக்குமாறு கூறிவிட்டு.. விக்ரமிடம் திரும்பி
"டேய்.. என்ன.. இல்ல.. என்னங்கறேன்.. ???" என காட்டமாகவே கேட்கவும்..
"நான் யாருப்பா.. ?? உன்ன கேக்க.. ?? ஹான்.. ?? காதலிக்கறத ஒருத்தியும்.. வாக்கப்படப்போறது இன்னொருத்தி.. உன் வாழ்க்கை.. நான் தலையிட யாரு... ??" என்று விக்ரம் ஏனோ தானோ கூறுவதில் கோபம் கொண்டான் .. ஷ்ரித்திக்..
"டேய்... மூடு.. மூடுங்கறேன்.. என்னடா.. என்ன.. ?? வர கோவத்துக்கு அறைஞ்சுருவேன்.. " பேச்சை நிறுத்தி பின்னால் திரும்பி முச்சை இழுத்து தன் கோபத்தை கட்டுப்படுத்தி பேச ஆரம்பித்தான்.. "ஆமாண்டா.. நான் ஷிவாக்ஷிய லவ் பண்றேன்.. நீயா சொல்ற வரைக்கும் எனக்கு தெரியாது.. நான் லவ் பண்றேன்னு.. நேத்து தான்.. நான் ஃபீல் பண்ணேன்.. எனக்கு தெரியாது டா.. லவ் இப்படி தான் இருக்கும்னு.. ஷிவுவ நான் லவ் பண்றேன்னு தெரிஞ்சிருந்தா.. இந்த கல்யாணத்துக்கு ஓகேனு சொல்லி இருப்பேனா.. ஏதோ நான் அவளும் வேணும் இவளும் வேணும்னுங்கற ரேஜ்க்கு பேசற... நான் இப்ப போய் அப்பா அம்மாகிட்ட பேசத்தான் போறேன்.. புரியுதா.. " என்று ஷ்ரித்திக் விக்ரமிடம் கூறி முடித்தான்..
"சரி.. அப்ப சீக்கிரமா பேசு.. நீ எவ்ளோ சீக்கிரம் பேசறியோ.. அவ்ளோ சீக்கிரம் இந்த கல்யாணமும் நிக்கும்.. இப்பயே கல்யாணத்துக்கு ஆளுங்க வர ஆரம்பிச்சிட்டாங்க.. நான் ஏன் அவசரப்படறேன் உனக்கு புரியுதா டா... ??" என விக்ரம் தன் பங்கிற்கு கத்தவும்..
ஷ்ரித்திக்
"நான் பாத்துக்கறேன்.. என்னை மீறி எதுவும் நடக்காது.. நடக்கவும் நான் விடமாட்டேன்.. எனக்கு கல்யாணம்னு ஒன்னு நடந்துச்சுன்னுனா.. அது ஷிவுக்கூட மட்டுந்தான்.. " என தன் முடிவை கூறினான்..
"சரி என்னவோ.. பண்ணிக்கோ... முதல்ல கல்யாணத்துக்கு ரெடி ஆகு.." என்று விக்ரம் ஷ்ரித்திக்கை தயாராக கூறியதும்..
"டேய்.. கல்யாணமே நடக்கப் போறதில்ல.. அப்பறமென்ன.. நீ என்னை ரெடி ஆக சொல்ற.. " என ஷ்ரித்திக் விக்ரமிடம் கத்தினான்..
"தெய்வமே.. என்கிட்ட கத்தாத.. எதுவா இருந்தாலும் உங்க வீட்ல பேசிக்கோ.. இப்ப நீ மணமகன் கோலத்தில இருக்கனும்னு உங்க தாத்தாவோட ஆர்டர் .. இப்ப வந்து உன்னை பாக்கும் போது நீ அந்த கோலத்தில தான் இருக்கனுமாம்.. இல்லைனா.. என்னை தான் கத்துவாங்க.. சோ நீ கண்டிப்பா ரெடி ஆகணும்... " என்று விக்ரம் ஷ்ரித்திக்கிடம் கூறிவிட்டு அழகு நிலைய ஆட்களை உள்ளே அனுப்பினான்..
விக்ரமின் மொழிகளை கேட்டு கடுப்பானான்.. ஷ்ரித்திக்.. ஏனெனில் பெரியோர்களின் பேச்சிற்கு அவ்வீட்டில் மறுப்பேச்சில்லை.. ஆதலால்
வேறு வழியின்றி.. கோபத்தினோடே குளித்தவன்.. அழகு நிலையத்திலிருந்து வந்த ஆட்களின் அலங்காரத்தில் பட்டு வேஷ்டி சட்டையில் ராஜ குமாரனாக கம்பீரமாகவே ஜொளித்தான்... ஷ்ரித்திக்..
ஆனால்.. ஷ்ரித்திகின் எண்ணமெல்லாம் ஷிவாக்ஷியே நிறைந்தாள்..
இதையேதும் உணராது...
படுக்கையில் உறக்கத்தின் பிடியில் நிம்மதியாய் இருந்தாள்.. ஷிவாக்ஷி.. நிம்மதி இன்னும் சிறிது நேரத்தில் தொலையப் போவதை அறியாமல்..
ஜானவியும் வர்ஷாவும் விரைவாகவே எழுந்து திருமணத்திற்கு பட்டு சேலை கட்டி வானுலக மங்கைகள் போலவே இருந்தனர்.. ராகுல் சஞ்சையும் விரைவாக எழுந்து பட்டு வேஷ்டியில் கம்பீரமாக வலம் வந்தனர்.. நால்வரும் ஷிவாக்ஷியை காண வந்தனர்.. நேற்று ஷிவாக்ஷியும் அவர்கள் நால்வரிடமும் நன்றாக பழகி பெயர் சொல்லி அழைக்கும் அளவில் நெருங்கினர்.. ஒரே வயதினர்.. என்பதாலே இன்னும் நெருங்கினர்..
ஷிவாக்ஷி இன்னும் உறக்கத்தின் பிடியில் சிக்கி இருப்பதை கண்டவர்கள்..
ராகுல் "என்ன இவ.. ?? இன்னும் தூங்கிட்டு இருக்கா.. ??" என்றதும்..
சஞ்சை "கல்யாணத்த மறந்துட்டாளா.. ???" என கூறவும்
வர்ஷாவோ.. "கண்டிப்பா.. மறந்திருப்பா.. இவள.. " என்று கூறிக்கொண்டே ஜானவியும் இவளோடு சேர்ந்து நன்றாகவே ஷிவாக்ஷியை படுக்கையிலிருந்து தள்ளி விட்டனர்..
கீழே விழுந்ததும் தூக்கம் தெளிந்து வலியோடே
"கிருஷ்ணா... அச்சோ.. " என்று சத்தத்துடன் கண் விழித்துப் பார்த்தவளின் பார்வையில் விழுந்தது..
அவர்கள் பட்டு வேஷ்டியிலும் பட்டு புடவையிலும் மின்னிவதை உள்வாங்கி அவர்களை ரசித்துக் கொண்டே..
"ஹைஐஐஐஐயோ.. என்ன எல்லோரும் ரொம்ப அழகா இருக்கேள்... பட்டு வேஷ்டி என்ன.. பட்டு சேலை என்ன.. கட்டிண்டு கலக்குறேளே... ??? ஆமா .. என்ன விசேஷம்.. ?? நேக்கும் சொல்லுங்கோளேன்... ??" என தூக்கத்திலிருந்து எழுந்து கண்களை கசக்கி கொண்டே கேட்டாள்..
"சுத்தம்... சரியா போச்சு போ... ?? தூங்குனா... எல்லாத்தையும் மறந்துடுவியா.. ஷிவா.. ??" என ராகுல் சலித்து கொண்டாண்..
"ஏன் .. ?? என்னாயிடுத்து.. ?? நான் ஏதாவது தப்பா கேட்டுண்டேனா.. ??" என ஷிவாக்ஷி தன் தலையை சொரிந்து கொண்டே கேட்கவும்..
"ம்க்கும்.. எல்லாம் மறந்துடுச்சா.. சோப்பா... இன்னிக்கு அண்ணாக்கு கல்யாணம் அதுக்கு தான் நீ
இங்க இருக்க.. " என வர்ஷா ஷிவாக்ஷியின் மண்டையில் தட்டினாள்.. அப்போது தான்... தான் இருக்குமிடமே நினைவிற்கு வந்தது ஷிவாக்ஷிக்கு...
"அச்சோ.. ஆமால்ல.. நா அஷடு .. ச்சா ... மறந்துண்டேன்.. " பதறியடித்து எழுந்து.. "இன்னும் நாழி இருக்குல்ல.. நான் சட்டுன்னு ரெடி ஆயிடுறேன்.. " என்று கூறிவிட்டு குளியலறைக்குள் புகுந்தாள்...
"ஆம்பளைங்க.. உங்களுக்கு இங்க என்னடா.. வேலை கெளம்புங்க டா.. " என வர்ஷா ராகுல் சஞ்சையிடம் கூறியதும்..
"ஏன்டி.. பேச மாட்டிங்க.. நடத்துங்க.. ஆனா .. சீக்கிரம் வந்து சேருங்க.. " என்று ராகுல் சஞ்சையை இழுத்து கொண்டு அறையை விட்டு வெளியே நடந்தான்..
சஞ்சை.. "டேய்.. விடு டா.. விட்டு தொலைடா.. நானே வரேன்.." என்றவனுடன் நடந்தான்..
விரைவாக குளித்து விட்டவளுக்கு அணிந்துக் கொள்ள உடை ஏதுமில்லை என்பது அப்போது தான் நினைவுக்கு வந்தது.. 'அட ஈஸ்வரா.. போட்டுக்க துணி இல்லயே.. இப்ப என்ன பண்றது.. ??' என யோசித்த ஷிவாக்ஷி குளியலறையின் கதவிடுக்கின் வழியே வெளியே எட்டிப் பார்த்தாள்..
வெளியே வர்ஷாவும் ஜானவியும் இருப்பதைப் பார்த்து.. நிம்மதி பெருமூச்சு விட்டாள்..
"ஜானு.. வரு.. " என இருவரையும் அழைத்தாள்... தங்களுடைய ஒப்பனை சரி செய்துக் கொண்டு இருந்தவர்களின் செவியில் ஷிவாக்ஷியின் குரல் விழுகவும்.. திரும்பி பார்த்தனர்..
கதவிடுக்கின் வழியாக பார்த்த ஷிவாக்ஷியை கண்டவர்கள்.. "ஓய்.. ப்பூ.. ப்பூ.. என்ன.. இப்படி பாக்குற... ??" என வாயைப் பொத்தி சிரிப்பை அடக்கிக் கொண்டு கேட்டாள்..
ஷிவாக்ஷியும் அவளை போலவே வாயைப் பொத்தி சிரிப்பதுப் போல அவளை பழித்து "போட்டுக்க .. ப்பூ.. ப்பூ.. துணி.. இல்லாம.. எப்படி வெளியே வருவேன்.. அஷடு.. துணியக் கொடுங்கோ.. " என கோபத்தில் முடித்தாள்..
"அதோ .. அங்க தான் இருக்கு.. நாந்தான் உனக்கு சேலை கட்டி விடுவேன்.. ஜானு உனக்கு மேக்-அப் போட்டு விடுவா.. ஓகே வா.. நேத்து நீ செம்மையா இருந்த.. பட் மேக்-அப் போட்டா இன்னும் சூப்பரா இருப்ப.. அதான்.. வா .. " என வர்ஷா கூறியதை கேட்டதும்..
"ஹேய்.. என்ன நீ.. ?? எனக்கு சேலை கட்டி விடு.. ஆனா.. மேக்-அப் மட்டும் வேணாம்.. ஜவல்ஸ்.. ஓகே " என ஷிவாக்ஷி வர்ஷா சேலை கட்டுவதற்கேற்ப.. வெளியே வந்தாள்..
வர்ஷா ஷிவாக்ஷியை வாயை பிளந்து பார்த்தவள்.. "உன்ன கல்யாணம் பண்ணிக்க போறவங்க கொடுத்து வச்சவங்க தான் .." என கூறவும்...
"ஏன்.. ??" என ஷிவாக்ஷி கேள்வி எழுப்பவும்..
"பின்ன.. குட்டி குட்டி கண்ணு.. ப்யுட்டிஃபுல்.. செம்ம ஸ்டரக்ச்சர் .. செம்ம ஃபீகர்.. " என ஜானவி கூறியதை கேட்டதும்..
மேலே கூறவந்தவளின் வாயை தன் கரத்ததால் மூடியவளின்
முகம் சிவந்திருக்க..
"பாத்தியா.. நாராமலா ரோஸ் பவுடர் இல்லாமையே கண்ணம் பிங்கிஸ்ஸா இருக்கும்.. வெக்கத்தில முகம் வேற இன்னும் செவக்குது.. " வர்ஷாவும் உடன் சேர்ந்து நன்றாகவே கிண்டலும் கேளியும் செய்தாள்..
"அச்சோ.. கிருஷ்ணா.. போதும்.. நா ஒன்னும் நீங்க சொல்ற அளவுக்கு இல்ல.. " என ஷிவாக்ஷி முடிக்கவும்..
"ம்ம்ம்ம்ம்ம்.. தன்னடக்கம்.. " என வர்ஷா ஷிவாக்ஷியை
கிண்டல் செய்து கொண்டே அவளுக்கு லெஹங்கா போன்ற வடிவத்தில் சேலையை கட்டி விட்டாள்..
ஒப்பனை வேண்டாம் என ஷிவாக்ஷி கூறியதால்.. வேறு வழியின்றி ஜானவி அவளுக்கு ஆபரணங்களை மட்டும் அணிந்து கல் பதித்த பொட்டு நெற்றியில் வைத்து விட்டாள்...
ஒப்பனையேதும் இன்றியே தேவலோக தேவதை மண்ணில் இறங்கியதோ.. என வியக்கும் வண்ணம் இருந்தாள் .. ஷிவாக்ஷி..
"ஹேய்.. மேக்-அப் போடாமலே... இவ்ளோ அழகா இருக்க.. செம்மையா.. இருக்க.. போ.." என ஜானவி கூறவும்..
"ம்ம்ம்.. சூப்பர்.. உனக்கு வரப் போறவங்க கொடுத்து வச்சவங்க தான்.. " என வர்ஷா கண்ணடித்து கூறியதும்..
ஷிவாக்ஷி
"மறுபடியுமா.. ?? போதும்.. கிருஷ்ணா.. வாங்கோ.." என அவர்கள் இருவரின் வாயைப் பொத்தி கைகளைப் பற்றி வெளியே இழுத்துச் சென்றாள்..
ஜானவியும் வர்ஷாவும்..ராகுல் அழைக்க..
வர்ஷா.. "நீ இங்கேயே இரு.. நாங்க ராகுலும் சஞ்சையும் கூட்டிட்டு போய் அண்ணாவையும் மாயாவையும் பாத்துட்டு வரோம்.. ஓகே .. " என ஷிவாக்ஷியிடம் கூறிவிட்டு இருவரும் நகர்ந்தனர்..
வேலையில் ஈடுபட்டிருந்த இந்திரகவியின் பார்வையில் தனியே நின்றிருந்த ஷிவாக்ஷி விழுந்தாள்.. அவளருகே சென்றார்.. இந்திரகவி...
"என்னம்மா.. இப்படி தனியா நிக்கற.. ??" என இந்திரகவியின்.. கேள்வியில் திரும்பினாள்..
"அம்மா.. அது இப்ப தான்.. ஜானு போன.. வந்துருவா.. "
என ஷிவாக்ஷி கூறிவிட்டு திருதிருவென விழித்தாள்..
அவளின் பார்வையை கண்டு புன்னகையை வந்தாலும்... "ஒஹோ.. சரி என்ன சேலை கட்டிட்டு.. பூ வைச்சுக்காமா இருக்க.. " என கூறிவிட்டு ..
ஷ்ரித்திக்கின் சித்தி தேவிகா
"தேவிகா.. இங்க வாயேன்.. " என பூக்கள் நிறைந்த தாம்பூலத் தட்டினை ஏந்தியபடியே நடந்திருந்தவரின் செவிகளில் இந்திரகவியின் குரல் தன் அழைத்ததும் அவ்விருவரிடம் வந்தனர்..
"என்ன இந்திரா.. ?? ஹாய்.. ஷிவு ம்மா.. என்ன ஷிவாக்ஷி ரொம்ப அழகா இருக்காளே.. ??" என்று தேவிகா கூறியதும்..
"அதெல்லாம் ஒன்னும் இல்ல.. நீங்க வேற அம்மா.. " என புன்னகையுடன் கூறினாள்..
"தேவிகா.. இவளுக்கு.. தலையில வைச்சுக்க பூவ குடு.. சேலை கட்டியிருக்கா.. பூ இல்ல அதான் கூப்டேன்.. " இந்திரகவி கூறியதை ஆமோதித்தார்.. தேவிகா..
"அட.. ஆம்மா... நா கவனிக்கவே இல்லையே.. இரு .. " என கூறிக் கொண்டிருந்த தேவிகா.. ஷிவாக்ஷி வேண்டாம் தானே வைத்து கொள்வதாக கூறியவளை கையமர்த்தி.. தட்டில் வைத்திருந்த மல்லிகை பூ சரத்தை அவளின் தலையில் வைத்து விட்டார்..
"ஹ்ம்ம்ம்ம்.. பரஃவெக்ட்.. ஓகேம்மா.. நீ இங்க உட்கார்ந்து இரு .. முகூர்த்த நேரத்தில மேடையில வந்து நில்லு.. நாங்க வந்துடறோம்.." என இந்திரகவி ஷிவாக்ஷியிடம் கூறிவிட்டு தேவிகாவை அழைத்து சென்றார்..
தீவா அவளுருகே வந்து சிறிது நேரம் பேசிவிட்டு ஷிவாக்ஷியின் நெற்றிக் கட்டினை அவிழ்த்து .. ப்ளாஸ்டரை ஒட்டிச் சென்றாள்...
ஷிவாக்ஷிக்கு ஏதோ.. ஒரு தவறு நிகழவிருக்கிறது என அவளின் மனம் எச்சரிக்கை விடுப்பது போலவே அவளுக்கு தோன்றியது..
'இந்த ஆத்துக்கு வந்ததுல இருந்தே... நேக்கு இப்படி தான் தோன்றது.. கன்னியாதானம் முடிச்சிண்டு சட்டுன்னு.. புறப்படறது தான்.. நேக்கு நல்லதுன்னுபடறது.. அதுக்குள்ள எந்த அபச்சாரமும் நடந்தறப்படாது.. கிருஷ்ணா..' என மனம் ஒரு பக்கம் எண்ணியது.. அவளின் எண்ணமெல்லாம் விரைவில் இல்லம் திரும்புவதே நன்மையை பயக்கும்.. என்றே மனதில் ஓடியது..
'தாத்தா வேற முகூர்த்த நாழிகைக்கு நா கண்டிப்பா வந்துடறேன் கொழந்தன்னு சொன்னவா தான்.. இன்னும் ஆள காணாம்.. phone ஆ கூட எடுக்க மாட்டேன்ட்றா.. ?? என்ன தான் பண்றாளோ.. ?? நேக்கு இங்க படபடன்னு ஆறது..' என தன்னுடைய தாத்தா இராமானுஜத்திற்கு திரும்ப திரும்ப முயற்சித்து பலனின்றியே போனது..
அதில் வெறுத்து போனாள்.. ஷிவாக்ஷி..
"உய்.. ஸ்ஸ்ஸ்.. " என ருத்ரா ஷிவாக்ஷியின் சேலையை பற்றி இழுக்கவும்..
அதுவரையில் இருந்த பதற்றம் மறைந்து.. புன்னகை தொற்றிக் கொண்டது.. ருத்ராவை கண்டதும்.. "என்ன.. ?? எங்க உன் friends.. காணாம்.. ??" என அவன் உயரத்திற்கு மண்டியிட்டு புருவம் உயர்த்தி வினவினாள்..
" அதுங்கள விடு.. Sorry.. ப்பா.. " என ருத்ரா தன் காதை பிடித்து கூறியதை பார்த்து..
"ஏன் டா.. ?? எதுக்கு sorry சொல்றீங்க.. ??" ஷிவாக்ஷி ருத்ராவின் கரத்தை அவன் செவியின் பிடித்தத்தை விடுவித்த கொண்டே கேட்கவும்..
"இல்ல... நேத்து உன்ன ஷ்ரித்திக் மாமா roomல வைச்சு lock பண்ணிட்டோம் .. தப்பு தான்.. அதுக்காக sorry.. " என ருத்ரா விளக்கம் கூறினான்
ஷிவாக்ஷி
முத்துக்கள் கொட்டிவிடும் படி புன்னகைத்தவள்..
"ஹாஹா... ருத்து sorry கேக்கறானா.. ?? இது சரி இல்லையே.. " என்று ருத்ராவின் தோளை பற்றி இழுத்தவள்.. தொடர்ந்தாள்..
"நீ பண்ணுணது தப்பு தான்.. இல்லன்னு சொல்ல மாட்டேன்.. நாங்கறதுனால ok .. இதே வேற யாராவது.. வேற situationல sometimes தப்பாபோயிடும் பாத்துக்கோ.. ஒருத்தரோட மனச சந்தோஷப்படுத்துற கோபம் கூட அழகு தான்.. ஆனா ஒருத்தரோட மனச hurt பண்ற ஒரு சின்ன smile கூட தப்பு தான்.. " என கூறி முடித்தாள்.. ஷிவாக்ஷி..
ஷிவாக்ஷியையே வாயைப் பிளந்து பார்த்தான்.. ருத்ரா..
"ஒய்.. என்ன... ?" என்ற ஷிவாக்ஷி ருத்ராவின் முன் சொடுக்கவும்.. அதில் மீண்ட ருத்ரா.. மணமேடையை காண்பித்து..
"அது ரொம்ப அழகா இருக்குல்ல.. " என ருத்ரா ஷிவாக்ஷியிடம் கேட்டான்..
"அதுக்கென்ன.. ரொம்ப அழகா இருக்கு.. நல்ல அலங்காரம் பண்ணியிருக்காங்க.. " என்று ஷிவாக்ஷி ருத்ராவிடம் கூறினாள்..
அதை கேட்டு துள்ளி குதித்தவனை வித்தியாசமாக நோக்கினாள்.. ஷிவாக்ஷி..
"என்ன.. ருத்து.. ??" என்று ஷிவாக்ஷியின் மொழியை கேட்டவன்..
"இல்ல... நாம இங்க.. கல்யாணம் பண்ணிக்கலாமா.. ??" என்று ருத்ரா சிரித்துக் கொண்டே அவளின் முகத்தை தன் பிஞ்சு விரல்களால் தாங்கி கொண்டே கேட்டான்..
ருத்ராவின் கேள்வியில்
புன்னகையுடனான அதிர்வில்.. "டேய்.. என்ன.. டா.. அடப்பாவி.. ??" என விழி குண்டு வெளியே வந்துவிடுமோ கேள்வி எழுப்பினாள்..
"இன்னிக்கு வேணாம்.. ஷ்ரித்திக் மாமா கல்யாணம் முடிஞ்சு கொஞ்ச நாள்ல பண்ணிக்கலாம்.." என ருத்ராவே பதிலை கூறிக் கொள்ளவும்..
"அடப்பாவி... உன் size என்ன.. ?? என் வயசென்ன.. ?? " என புன்னகையை மறைத்துக் கொண்டு வினவினாள்..
"அட.. அதவிடு.. love has no eyes.. " என்று ருத்ரா பிஞ்சு கரங்களால் தன் தலையை கோதிக் கொண்டு கூறவும்..
'உன் Englishல தீய வைக்க..' என மனதில் நினைத்தவள்..
"அடப்பாவி.. " என தன் கரத்ததால் வாயை மூடினாள்.. ஷிவாக்ஷி
"சரி .. சரி.. இது நமக்குள்ளேயே இருக்கட்டும்.. நான் போய் shinchan பாக்குறேன் Tata.. "
என்று ஷிவாக்ஷியின் கண்ணம் தட்டி சென்றான்..
'சரியான அறுந்த வாலு தான்.. ' என ருத்ராவை எண்ணி சிரித்துவிட்டு.. தன் தாத்தாவிற்கு மீண்டும் முயற்சிக்க ஆரம்பித்தாள்..
மணமகன் கோலத்தில ராஜ குமாரானாக.. ஜோலித்து கொண்டிருந்தான்... ஷ்ரித்திக்.. ஆனால்.. எந்தவோரு உணர்வின்றி கல் போலே முகத்தை வைத்திருந்தான்..
அவனின் எண்ணம் முழுவதும் திருமண நிகழ்வை நிறுத்துலதிலேயே..
அதேசமயம்.. ஷ்ரித்திக்கின் பெற்றோரும் மூத்த சந்ததியினரும்.. அவனைக் காண ஆவலோடும் மகிழ்ச்சியில் கண்களில் துள்ள உள்ளே நுழைந்தனர்..
ஷ்ரித்திக்கின் தாத்தா அமரேந்திர நாயக்கும் பாட்டி தேவசேனாவும்.. தங்களின் செல்ல பேரனின் அழகில்.. தங்களின் கண்களே பட்டுவிடுமோ.. என எண்ணுமளவிற்கு கம்பீரமாக பட்டு வேஷ்டியில் இருப்பதை கண்டு பூரித்துப் போயினர்...
பாட்டி தேவசேனா புன்னகையுடனே
"அப்படியே.. ராஜா மாதிரி இருக்க.. என் கண்ணே பட்டுரும் போல இருக்க.. " தன் கரங்களால் ஷ்ரித்திக்கின் முகத்தை வழித்தார்...
தாத்தா அமரேந்திர நாயக்கும்.. புன்னகையோடே "அவன் இந்த வீட்டுக்கே ராஜா தான... ஷ்ரித்திக்.. வாழ்க்கையோட அடுத்த கட்டத்துக்கு போற.. இதுக்கு அப்பறம் தான் நீ ரொம்ப தைரியமா இருக்கனும்.. மனச திடமா வைச்சுக்கோ.. வாழ்த்துக்கள்.. " என்றவனை கேளி செய்தாலும்.. அவனின் அமைதியும்.. உணர்ச்சியற்ற முகமும் ஏதோ சரியில்லை என தாத்தா அமரேந்திரர்க்கு உணர்த்தவே செய்தது..
அமைதியாக அப்படியே வெளியேறினார் தாத்தா அமரேந்திரர்..
தங்களின் மகன் ராஜ கம்பீரமாக பட்டு வேஷ்டியில் மின்னுவதை கண்ட பெற்றோர் இருவரும்.. மகிழ்ச்சியில் அவனின் தோளைப் பற்றினார் தந்தை ராஜ தேவன்..
தாய் இந்திரக்கவியும்.. தன் கண்ணே பட்டு விடுமோ என தன் கண்களில் தீட்டியிருந்த மையினை அவனின் கண்ணத்தில் வைத்து விட்டாள்.. வெளியே நின்றிருந்த தன் மாமனார் தன்னை அழைப்பதை கண்டு அவரிடம் சென்றார் இந்திரகவி..
வெளியேறியே தாத்தா அமரேந்திரர் தன் மருமகளை தனியே அழைத்து அவனின் முகம் சரியில்லை என்னவென விசாரிக்க கூறினார்..
"அப்பா... என்னாச்சு.. ?? கூப்புட்டு இருந்தீங்க.. ?? அங்கேயே சொல்லி இருக்கலாமே.. ??" என ஷ்ரித்திக்கின் தாய் இந்திரக்கவி கேட்கவும்..
"இல்லம்மா.. ஷ்ரித்திக்கோட முகமே சரியில்ல.. அவனுக்கு என்னன்னு கேளும்மா.. ?? அங்கேயே சொல்லி இருந்தா.. உன் அம்மா அதான் உன்னோட அத்தை பயந்திருப்பா.. அவளை வெளியே அனுப்பிட்டு என்னன்னு கேளும்மா.. ??" என்று தாத்தா அமரேந்திரர் தன் மனதில் எழுந்த சந்தேகத்தை தன் மருமகளிடம் கூறி முடித்தார்..
இந்திரகவி
"நான் பாத்துக்கறேன்.. மாமா.. " என்றவரிடம் கூறினாலும்.. தன் மகனின் உணர்ச்சியற்ற முகம் ஒரு தாயாக அவருக்கும் தெரிந்தே தான் இருந்தது.. ஷ்ரித்திக்கிடம் கேட்கலாமென அவரே நினைத்திருந்ததை தன் மாமனாரும் கூறிச் சென்றார்..
இந்திரகவி
தன் பேரனை கொஞ்சிக் கொண்டிருந்த தன் அத்தையின் அருகில் வந்த..
இந்திரகவி..
"அம்மா.. அப்பா உங்கள கூப்டாரு.. " என தன் அத்தையிடம் கூறியதும்..
"அப்படியா.. சரி நான் போய்ட்டு வரேன்.. ஷ்ரித்திக்.. சீக்கிரம் stageக்கு வந்துடு.. இன்னும்.. கொஞ்ச நேரம் தான் இருக்கு.. " கூறிக் கொண்டே.. அவ்விடம் விட்டு நகர்ந்தார்..
"சரி .. ஷ்ரித்திக்.. stageக்கு வந்துடு.. நாங்களும் கெளம்பறோம்.. என்னங்க.. வாங்க.. " என்று தன் கணவனை அழைத்து கொண்டு வெளியே செல்ல முற்பட்டாள்.. ஷ்ரித்திக்கே தன் மனதில் இருப்பதை கூறும் பொருட்டு...
அதேபோலே.. ஷ்ரித்திக்கும்..
"அம்மா.. அப்பா.. 1 minute.. " என தன் பெற்றோரை அழைத்து..
"உங்ககிட்ட கொஞ்சம் பேசணும்.. " என எந்த உணர்வின்றி கூறியதை கண்டதும்..
ஷ்ரித்திக்கின் தந்தை ராஜ தேவன்..
"ஷ்ரித்திக்.. என்னாச்சு.. உன் முகமே சரியில்ல.. ??"
என கேட்டார்..
இந்திரகவி
"இருங்க.. அவன் ஏதோ பேசனுமாமே.. பேசட்டும் " என தன் கணவனை அமைதி படுத்தி விட்டு... தன் மகனிடம் திரும்பி.. "பேசு.. ஷ்ரித்திக்.. " என்று கூறினார்..
"ஹ்ம்ம்ம்ம்.. இந்த கல்யாணத்த நிறுத்துங்க.. " என்று ஷ்ரித்திக் எங்கோ பார்த்துக் கொண்டே கூறினான்..
ஷ்ரித்திக்கின் மொழிகளை கேட்டு இருவரும் அதிர்ந்தனர்.. இருப்பினும் விளையாடுகிறானோ.. என்று தந்தை ராஜ தேவன்
"ஷ்ரித்திக்.. என்ன நீ.. ?? விளையாடாதா.. வந்து மணமேடையில உட்காரத விட்டுட்டு விளையாடிட்டு இருக்க.. " என கூறவும்..
"இல்ல.. I'm very serious.. எனக்கு இந்த கல்யாணத்துல இஷ்டம் இல்லை.. " என உரக்க கூறியதை கேட்டு அதிர்ச்சியில் உறைந்தனர்..
"ஷ்ரித்திக்.. நீ என்ன பேசறேன்னு உனக்கு தெரியுதா.. ?? " என அம்மா இந்திரகவி கோபத்தில் அழுத்தமாக கேட்கவும்...
அதேசமயம்.. தந்தை ராஜ தேவனும்.. "என்ன ஷ்ரித்திக்.. விளையாடறீயா.. எந்த நேரத்தில என்ன பேசற நீ.. ??" என கோபமிருந்தாலும் அமைதியாகவும் அதே நேரம் அழுத்தமாகவும் கேட்டார்..
"கல்யாணத்துக்கு சம்மதாமான்னு கேக்கும் போது ok அம்மா your wishனு சொல்லிட்டு .. இப்ப கல்யாணத்த நிறுத்துங்கன்னு சொன்னா என்ன அர்த்தம்.. " என்று ஷ்ரித்திக்கின் முன் கேள்வியை வைத்தார்..
"அப்ப okனு சொல்லிட்டு.. இப்ப கல்யாணத்த நிறுத்துங்கன்னு சொல்றின்னா.. Something has happened .. what's it .. ??" என தந்தை ராஜ தேவன் கேட்க.. ஷ்ரித்திக் அமைதியாக இருப்பதைக் கண்டு கோபம் கொண்டவர்.. "அமைதியா இருந்தா.. என்ன அர்த்தம் ஷ்ரித்திக்.. " இப்போது அவரின் குரலில் கோபம் தெரிந்தது...
தான் எடுத்த முடிவு.. தன் குடும்பத்திற்காக.. எடுத்த முடிவு முதன்முதலாக தவறாகியதன் கோபத்தில்
"நா ஒரு பொன்ன love பண்றேன்.. போதுமா.. " என ஷ்ரித்திக் கத்தினான்..
"என்னடா.. என்கிட்ட கத்தற.. ஒரு பொன்ன love பண்றியா.. ?? உன்ன.. " என கை ஒங்கினார்..
"என்னங்க .. என்ன நீங்க.. ? தோளுக்கு மேல வளர்ந்த பிள்ளை மேல கைய நீட்றீங்க.." என இந்திரகவியின் சொற்களை கேட்டு பின் தன் ஒங்கிய கையை இறக்கினார்.. ராஜ தேவன்..
தன் கணவனை சமாதானம் செய்துவிட்டு தன் மகனிடம் திரும்பினார்.. "loveஆ.. அன்னிக்கே கேட்டோம்ல .. யாரையாவது love பண்றியான்னு.. அப்ப அமைதியா இருந்துட்டு இப்ப வந்து கத்துனா என்ன பண்றது.. " என தாய் கூறியதை கேட்டும் உணர்ச்சி துடைத்த முகமாகவே இருந்தான்.. ஷ்ரித்திக்..
அவனின் முகத்தை கண்டவர்.. பெருமூச்சு விட்டு "சரி யார் அந்த பொன்னு.. யாரை love பண்ற.. ?? என அம்மா இந்திரகவி கேட்கவும்..
"ஷிவாக்ஷி.. " என்று கண்மூடி புன்னகையுடன் கூறினான்.. ஷ்ரித்திக்..
"இந்த middle class பொன்னுங்களே இப்படிதான்.. உன்னை மயக்கிட்டாளா.. " என்று கோபத்தில் என்ன பேசுகிறோம் என யோசிக்காமல் வார்த்தைகளை தெளித்தார்..
தந்தையின் சொற்களை கேட்டு.. கோபம் கொண்டவன்..
"அப்ப்ப்ப்பாஆஆஆ.. " என ஷ்ரித்திக் அழுத்தமாக கத்தினான்..
அதேசமயம்.. தாய் இந்திரக்கவி "என்ன.. நீங்க.. ?? அந்த பொன்ன பாத்த அந்த மாதிரி தெரில்ல.. நீங்க இப்படி வார்த்தைய விடாதீங்க.. இது நல்லதுக்கில்ல.. " என தன் கணவனிடம் கூறினாள்..
தன் மகனிற்கு புரிய வைக்கும் நோக்குடன் பேசத் தொடங்கினார்
"இங்க பாரு ஷ்ரித்திக்.. நீ சொல்றது எல்லாம் சரிதான்.. புரியுது.. ஆனா.. நீ situationஅ புரிஞ்சுக்காம பேசற.. இதயே நீ engagementக்கு முன்னாடி சொல்லியிருந்தாக்கூட பரவால்ல.. ஆனா நீ எப்ப சொல்ற ஷ்ரித்திக்.. கல்யாணத்துக்கு இன்னும் 15 minutes தான் இருக்கு.. இந்த நேரத்தில வந்து கல்யாணத்த நிறுத்துங்க.. நா வேறோருத்திய love பண்றேன்.. அப்படின்னு சொல்ற.. " என்று இடையே பேசவந்த ஷ்ரித்திக்கை தடுத்து இந்திரகவியே தொடர்ந்தார்.. "சரிப்பா.. நீ சொல்ற மாதிரியே கல்யாணத்த நிறுத்துறேன்னே வெச்சுக்கோ.. நீ சந்தோஷமா இருப்ப.. ஆனா எந்த தப்பும் பண்ணாத மாயா இதுக்கு தண்டனை அனுபவிப்பாளே.. மாயா என்ன தப்பு பண்ணுனா ஷ்ரித்திக்.. ?? அவ எதுக்கு தண்டனை அனுபவிக்கனும்.. ?? மணமேடை வரைக்கும் வந்து ஒரு கல்யாணம் நின்னு போச்சுன்னா.. ஒரு பொன்னுக்கு எவ்வளவு பெரிய அவமானம் தெரியுமா.. ?? மறுபடியும் அந்த பொன்ன யாராவது கல்யாணம் பண்ணிக்க முன்னாடி வருவாங்களா.. ?? உனக்கென்ன ஷ்ரித்திக் நீ ஆம்பள.. ஆனா ஒரு பொன்னுக்கு என்னென்ன பிரச்சினை.. ?? அவளுக்கு என்னென்ன அவப்பெயர் வரும்னு தெரியுமா.. ?? நீப்பாட்டுக்கு கல்யாணத்த நிப்பாட்ட சொல்றே.. " என்று இந்திரகவி கூறியதும்..
தாயின் சொற்களில் உள்ள நியாயம் அவனுக்கு புரிந்தாலும் மனம் அதை ஏற்கவில்லை..
"அம்மா நீங்க.. இந்த ஒரு நாள் பத்தி யோசிக்கறீங்க.. ஆனா.. நான் வாழ போற நாட்கள பத்தி யோசிக்கறேன்.. ஒரு நாள் கூத்துகாக வாழப்போற நாட்கள அடமானம் வைக்க சொல்றீங்களே மா.. நா சந்தோஷமா இருக்க மாட்டேன் மா.. " என்று குமறியபடி கூறினான்..
தன் மகனிற்கு விருப்பமில்லாத ஒன்றை திணிப்பதில் ஒரு தாயாக வருத்தம் இருப்பினும்.. தன் மகன் இழைத்த தவறுக்கு வேறு ஒருவர் தண்டனை அனுபவிப்பது நியாயமற்றதென மனதில் தோன்றியதால்..
"என்ன மன்னிச்சிடு ஷ்ரித்திக்.. ஒரு அம்மாவ.. நா யோசிச்சா அது சுயநலம் ஆயிடும்.. நீ செஞ்ச தப்புக்கு மாயா தண்டனை அனுபவிக்கறத நா அனுமதிக்க மாட்டேன்.. என்ன மன்னிச்சிடு ஷ்ரித்திக்.. சீக்கிரமா மணமேடையில வந்து உக்காரு.. " என்று இந்திரகவி தன் முடிவை உறுதியாக கூறி முடித்தார்..
தன் தாயின் மொழிகளை கேட்டு மனம் சோர்ந்த ஷ்ரித்திக் தந்தையிடம்
"அப்பா.. please.. நீங்களாவது சொல்லுங்க.. ??" மண்றாடினான்..
ராஜ கம்பீரமாக வலம் வரும்.. தன் மகன்..
யாருக்கும் பணியாத தன் மகன்.. இன்று தன் முன் மண்றாடுவதை காண்கையில் காதல் ஒரு மனிதனை எப்படி மாற்றுகிறது என்றெண்ணியவர்..
"என்கிட்ட.. எதுவும்.. கேக்காத.. ஷ்ரித்திக்.. உனக்கு எல்லாம் பாத்து பாத்து.. பண்ற உன் அம்மா இப்படி சொல்லும் போது .. நா சொல்றதுக்கு ஒன்னுமில்ல.. ஷ்ரித்திக்.. " என ராஜ தேவன் கூறினார்..
இதற்கு மேல் பேச ஒன்றும் இல்லை என எண்ணிய இருவரும்.. அவ்வறையைவிட்டு வெளியேறினர்..
இருவரின் மொழிகளை கேட்டு உறைந்தவன்.. அப்படியே தொப்பேன sofaவில் அமர்ந்தான்..
'அவ்ளோ தான.. எல்லாம் முடிஞ்சுருச்சா.. ' என மனதில் நினைத்தவன்.. வாழ்க்கையில் முதன் முறையாக நம்பிக்கையின்மையை உணர்ந்தான்..
'இல்ல.. இந்த கல்யாணம் நடக்கக்கூடாது.. மாயாகிட்ட பேசலாம்.. மாயா புரிஞ்சுப்பா.. புரிஞ்சுப்பான்னு நம்பறேன்..'
மனதில் எடுத்த முடிவுடன் மாயாவின் அறையை நோக்கி நகர்ந்தான்..
மாயா அறையில் தன் தோழிகளின் கேளியோடும் கிண்டலோடும் அலங்காரத்தில் ஈடுபட்டு இருந்தவள் .. முகக் கண்ணாடியில் ஷ்ரித்திக்கின் பிம்பம் கண்டவள்.. அதிர்ச்சியிலும் ஆனந்தத்திலும் திரும்பி "ஷ்ரித்திக்.. நீ.. நீ.. என்ன பாக்க.. என் .. என் ..என்னோட roomல.. oh god.. I can't believe this.. " என்று கூவினாள்..
பட்டு வேஷ்டி சட்டையில்.. கம்பீரமாக இருப்பவனை அவள் மட்டுமல்லாது.. அவளின் தோழிகளே பார்வையிலே வருடினர் ..
"Girls.. Wait a while... I need to talk to her... " என்று மற்ற பெண்களிடம் கூறியவுடன்.. மாயாவை " ஹோ.. அப்படிங்களா.. நடத்துங்க.. நடத்துங்க.. நாங்க எதுக்கு நடுவுல.. " என மாயாவை முகம் சிவக்க வைத்துவிட்டே வெளியேறினர்..
"என்ன.. ஷ்ரித்திக்.. கல்யாணத்துக்கு முன்னாடி என்ன பாக்கனும்னு ஆசையா.. ?? நல்லவேளையா.. உனக்கு என்ன பத்தின thought எல்லாம் இருக்கு.. " என்று மாயா கண்கள் மின்ன கூறுவதைப் பார்த்ததும்.. தான் செய்தது மிகப்பெரிய தவறென்று அப்போது தான் உணர்ந்தான்.. ஒரு பெண்ணின் மனதில் ஆசையை விதைத்து விட்டோமே.. என குற்ற உணர்வில் மனதில் தவித்தான்.. தான் கூற வந்ததை கூற அவனுக்கு மனம் வரவில்லை.. இருப்பினும் கூறுவதே சாலச் சிறந்தது.. என்றெண்ணி கூறத் தொடங்கினான்..
"மாயா.. எப்படி சொல்றதுன்னு தெரில.. ??" என ஷ்ரித்திக் யோசிக்கவும்..
' என்ன ஷ்ரித்திக் பேசறதுக்கே இப்படி யோசிக்கறான்.. ?? சரியில்லயே.. ' என்று யோசித்தவள்.. "என்ன.. ஷ்ரித்திக்.. பரவால்ல.. சொல்லு.. ??" என்று மாயா கூறியதும்..
"மாயா.. really I'm very sorry.. என்ன மன்னிச்சிடு.. please.. இந்த கல்யாணத்த நிறுத்திடு.. " என்று ஷ்ரித்திக்கின் மொழிகளை கேட்டு அதிர்ச்சியின் உச்சியில் இருந்தாள்..
"ஷ்ரித்திக்.. என்.. என்.. என்ன சொல்ற.. ??" என்று அதிர்ச்சியில் கத்தியே விட்டாள்..
"மாயா.. தப்பு தான்.. ஒத்துக்கறேன்.. தயவு செஞ்சு கல்யாணத்த நிறுத்திடு.. " என்று குற்ற உணர்ச்சியில் மெதுவாக கேட்டான்..
"என்ன.. ஏன் ஷ்ரித்திக்.. ?? ஏன் இப்படி... ? " என கூறிக் கொண்டிருந்தவள்.. திடீரென கோபத்தில் அவ்வறையில் இருந்த பொருட்களை எல்லாம் கீழே போட்டும் தள்ளிவிட்டும் உடைக்க ஆரம்பித்தாள்.. மாயா..
"மாயா.. please control yourself.. நா பண்ணது தப்பு தான்.. " என்று ஷ்ரித்திக் மாயாவை சமாதானம் செய்ய முயற்சித்தான்...
"இவ்ளோ.. நாள்.. கல்யாணத்துக்கு okனு சொன்னவர்.. இப்ப ஏன்.. அதுவும் முகூர்த்தத்துக்கு இன்னும் கொஞ்சம் நேரம் இருக்குற இந்த timeல வந்து சொல்றதுக்கான reason.." கோபம் கொஞ்சமும் குறையாமல் கத்தவும்..
"நா ஒரு பொன்ன love பண்றேன்.. அது நேத்து தான் எனக்கே தெரிஞ்சுது.. அதான்.. " என்று ஷ்ரித்திக்கின் விளக்கம் கேட்டு இன்னும் கொதித்தாள்.. 'ஒருவேளை... நேத்து வந்த நாயா இருக்குமோ.. ' மனம் ஒரு பக்கம் எண்ணினாலும்..
"யவ அவ.. ???" என்று கோபத்தை அடக்கிக் கொண்டு கேட்டாள்..
"ஷிவாக்ஷி.. " என்ற ஷ்ரித்திக்கின் பதிலில் ஆத்திரம் கொண்டவள்.. மீண்டும் அங்கிருந்த பொருட்களை சிதறடித்தாள்..
"நினைச்சேன்.. உன்ன மயக்கறத்துக்கு தான் அவ நேத்து.. மினிக்கிட்டு திரிஞ்சுருக்கா.. உன்ன மயக்கி அவ முடிஞ்சு வைச்சிருக்காளா.. ??" என ஆத்திரத்தில் வார்த்தைகளை விட்டாள்..
ஷிவாக்ஷியை தவறாக பேசுவதை பொறுக்காது.. ஷ்ரித்திக்..
"மாயா.." என அழுத்தமாக
சொல்லவும்...
"முடியாது.. ஷ்ரித்திக்.. என்னால உன்ன வேற ஒருத்திக்கு விட்டு குடுக்க முடியாது.. உன்ன மாதிரி ஆம்பளையே.. எந்த பொன்னு விட்டு குடுப்பா.. என் மனசுல ஆசைய வளத்துட்டு.. இப்ப கல்யாணத்த நிறுத்திடு என்கிட்டயே சொல்ற.. வலிக்குது ஷ்ரித்திக்.. " அழுகையை கட்டுபடுத்தி கொண்டு கூறினாள்..
"ஒத்துக்கறேன்.. நா செஞ்சது தப்பு தான்.. நம்ம familyகாக தான் marriageக்கு சம்மதிச்சென்.. அப்பயே உன்கிட்ட சொல்லியிருந்தேன்.. எனக்கு time வேணும்னு.. ஆனா..என் மனசுல நீ இல்லயே.. உன்ன love பண்ண நிறைய தடவை try பண்ணி.. என்னால முடியல.. நேத்து தான் நான் அவளை love பண்றேன் அப்படின்னு தெரிஞ்சுது.. please இந்த கல்யாணத்த நிறுத்து.. எனக்கு உன்கிட்ட sorryனு சொல்றத தவிர என்ன பண்றதுன்னு தெரியல.. " என்று ஷ்ரித்திக் கூறி முடித்தான்..
அதை கேட்ட மாயாவிற்கு மிகுந்த சினத்தை ஏற்படுத்தியது.. "சும்மா.. சும்மா.. நேத்து தான் feel பண்ணேன்னு சொல்றியே.. ?? என் loveஅ feel பண்ணியா ஷ்ரித்திக்.. என்னால முடியாது.. இந்த கல்யாணம் கண்டிப்பா நடந்தே தீரும்... உன்ன வேற ஒருத்திக்கு விட்டு குடுக்க முடியாது... I'm sorry.. ஷ்ரித்திக்.. because I love you.. " என்று மாயா இத்திருமணம் நிச்சயமாக நடக்கும் என கூறியதை கேட்டதும்... வேறு வழியின்றி அவ்வறையை விட்டு நடக்க ஆரம்பித்தான்..
என்ன செய்வது.. ஏது செய்வது... என ஏதும் புரியாமல் அவனறைக்கு போகும் பாதையில் நடந்தான்..
வழியில் ஷிவாக்ஷி.. phoneல் signal கிடைக்காததால் தன் தாத்தாவிற்கு முயற்சித்த வண்ணமே வந்தவள்.. எதிரில் வந்து கொண்டிருந்த.. ஷ்ரித்திக்கை கவனிக்காமல் நடந்தவள்.. ஷ்ரித்திக்கும் திருமணத்தை நிறுத்த வேண்டும் என்றெண்ணத்தில் வந்தவன் .. ஷிவாக்ஷி வருவதை கண்டு கொள்ளாமல் எதிரெதிரே நடந்தவர்கள்..
ஒருவர் மீது ஒருவர் மோதிக் கொண்டனர்... நிலை தடுமாறிய ஷிவாக்ஷி
கண்ணாடி குவளையால் செய்த அலங்காரத்தில் விழப் போனவளை.. 'போச்சு.. கிருஷ்ணா.. ' என பயத்தில் தன் கரங்களால் முகத்தை மூடியவளை.. தாங்கி பிடித்தது ஷ்ரித்திக்கின் வலிய கரங்கள்...
'என்னாயிடுத்து.. நமகொன்னும் ஆகலியோ..' தன் கரத்தை விலக்கி திரும்பி பார்த்த ஷிவாக்ஷிக்கு கண்ணாடி குவளையின் அலங்காரத்திற்கும் நூலிழை இடைவெளியே.. பயத்தில் எச்சிலை முழுங்கி.. "ஹுஉஉஉ.." என பெருமூச்சு விட்டு யோசித்த ஷிவாக்ஷிக்கு தான் மிதக்கிறோமா.. என திரும்ப.. தன்னை ஒர் தாங்கி இருப்பது அப்போதுதான் உணர்ந்தாள்..
ஷ்ரித்திக்கிற்கு தன் மீது பஞ்சு குவியல் மோதிய உணர்வில் இருந்தவன்.. கண்ணாடி குவளை அலங்காரத்தில் விழுந்து விடுவார்களோ என்று சட்டென ஷிவாக்ஷியின் மெல்லிடையை பற்றினான்..
"Sorry.. மன்னிச்சிடுங்கோ.. நீங்க வரத... கவனிக்கலை.. " என மன்னிப்பு கோரினாள்...
ஆனால்.. ஷ்ரித்திக்கிற்கு ஷிவாக்ஷியின் மொழிகள் எதுவும் செவியை எட்டவில்லை.. முதல் முறையாக சேலையில் கண்டதும்.. அவள் வானுலகம் போற்றும் தேவதைகளை போலவே மின்னினாள்...
"Hello... " ஷிவாக்ஷி ஷ்ரித்திக்கின் முன் கையை ஆட்டியதன் பின்னே நினைவுக்கு வந்தான்...
ஷ்ரித்திக்
"ஹான்.. என்ன.. ??" என விழித்துக் கொண்டு கேட்டதும்..
"Thank youனு சொன்னேன்.. கல்யாணம் மாப்பிள்ளைல.. அதான் thought எல்லாம் வேற எங்கேயோஒஒ.. இருக்கு... " ஷிவாக்ஷி கையை வளைத்து கூறுவதைக் கேட்டு.. 'அடப்போம்மா... நீ வேற ... எரியுற fireல oil அ ஊத்திட்டு..' என மனதில் நினைத்துக் கொண்டான்..
"அப்பறம்.. சொல்ல time இருக்குமான்னு தெரில.. அதனால்.. happy married life.. கல்யாண வாழ்க்கை மகிழ்ச்சியா இருக்க என்னோட வாழ்த்துக்கள்..." என்று கூறிவிட்டு அவ்விடம் விட்டு அவசரமாக அகன்றாள்..
போகும் அவளையே பார்த்துக் கொண்டிருந்தான்.. 'அவ்ளோ தானா.. ' என நினைத்து கொண்டே தன்னறைக்குச் சென்றான்..
இத்திருமணத்தை நிறுத்துவதற்கான ஏதேனும் வழியிருக்கிறதா.. என யோசித்துக் கொண்டிருந்தான்.. இத்திருமணத்தை புறக்கணிக்க ஷ்ரித்திக்கின் மனம் ஒப்பவில்லை.. ஏனெனில் இது தான் செய்த தவறு.. தான் செய்த பிழைக்கு மொத்த குடும்பமும் அவமானத்தை சந்திக்க நேரிடும்.. தானே தான் இதை திருத்த வேண்டும்.. என்றெண்ணினான்..
மணமேடையில் ஐயர் இறைவனை வணங்கி விட்டு அக்னியை வளர்த்தி... மங்கல மந்திரங்களை ஓதத் துவங்கினார்...
மங்கல மந்திரங்களால் யாகத்தை வளர்த்த.. அவர் கேட்கும் பொருள்களை தீவாவும் நேஹாவும் எடுத்துக் கொடுத்து கொண்டிருந்தனர்... விக்ரம் ஐயர் கேட்பனவற்றையும் .. பெண்கள் கேட்பனவற்றையும் எடுத்து கொடுத்த வண்ணம் அவர்களுக்கு உதவி செய்து கொண்டிருந்தான்
வந்திருந்த மக்கள் மணமக்களை வாழ்த்த.. அவர்களுக்காக ஆவலாக காத்திருந்தனர்...
ஐயர்.. "மாப்பிள்ளைய அழைச்சிண்டு வாங்கோ.. " என அவரின் மொழிகளை கேட்டு.. ஷ்ரித்திக்கின் உடன்பிறப்புகள்.. ஷ்ரித்திக்கை அழைத்து வர அவனுடைய அறைக்கு சென்றனர்..
"அண்ணாஆஆஆஆ... " என நால்வரும் கத்திக்கொண்டே ஷ்ரித்திக்கை அணைத்தனர்..
"ஹ்ம்ம்ம்ம்.. " என அவர்களின் அணைப்பிலிருந்த படியே கேட்டான்.. ஷ்ரித்திக்..
"ப்பா.. அண்ணா.. செம்மையா.. இருக்க.. உன்ன பாத்து இன்னிக்கு நிறைய பேர்.. Sight அடிக்கப் போறாங்க.. " என ஜானவி ஷ்ரித்திக்கிற்கு ஐஸ் வைத்தாள்..
"ஏய்.. இப்ப எதுக்கு அண்ணாக்கு ஐஸ் வைக்கற.. ??" என்று சஞ்சை கேட்கவும்..
அப்பொழுதும் ஷ்ரித்திக் மௌனமாக இருந்தான்..
"என்ன அண்ணா.. ?? இன்னிக்கு உனக்கு கல்யாணம்.. நீ என்னடான்னா.. ஏனோ தானோன்னு இருக்க.. ??" என்று ராகுல் தன் அண்ணனிடம் சலித்துக் கொண்டான்..
"அதான.. என்னாச்சு அண்ணா.. " சஞ்சையும் ஒத்து ஊதினான்..
"ம்ப்ச்.." என்று ஷ்ரித்திக்கும் சலித்து கொள்ளவும்..
"டேய்.. இது நலம் விசாரிக்கற நேரமாடா.. இது.. ?? ஒழுங்கா.. தள்ளுங்க டா.. நாங்களாவது அண்ணாவ கூட்டிட்டு.. போறோம்.. " என்று வர்ஷா அவர்களை விலக்கி.. "அண்ணா.. வா.. அங்க ஐயர் கூப்டறாங்க.. சீக்கிரம்.. " என அழைத்தாள்..
'எது நடக்கக்கூடாதுன்னு நெனச்சேனோ.. அது நடக்கப் போகுது.. ' என மனதில் நினைத்துக் கொண்டே.. தன் உடன்பிறப்புகளுடன் மணமேடைக்கு சென்றான்..
மணமேடையில் அமர்ந்ததும்.. தாய் மாமன் முறையில் யாதவன் நெற்றிப் பட்டையை நெற்றியில் கட்டி விடவும்.. நேஹா.. தலை பாகையை தலையில்
வைத்து விட்டாள்..
மேடையில் தீவா, நேஹா, ஜானவி, வர்ஷா, ஷ்ரித்திக்கின் தாய் இந்திரக்கவி, மாயாவின் தாய் சமீரா, விக்ரம் ஷ்ரித்திக்கிற்கு துணையாக மணமேடையில் இருந்தான்..
ஷ்ரித்திக்கின் அருகே வந்தான் விக்ரம்..
கரகரத்த குரலில்
"பங்கு.. நா முயற்சி பண்ணேன்.. என்னால முடியல.. " என்று ஷ்ரித்திக் விக்ரமிடம் தோற்றுப் போனார் போல கூறியதைக் கண்டதும்.. விக்ரம் ஷ்ரித்திக்கின் நிலையை கண்டு ஆடிப் போனான்.. ராஜனாக இருக்கும் தன் தோழன் முதன்முறையாக அழுகையை கட்டுபடுத்துவதை இப்போது தான் காண்கிறான்..
"பங்கு.. எனக்கு தெரியும்.. அங்க என்ன நடந்ததுன்னு தெரியும்.. ஷிவாக்ஷி உனக்குதான்னு விதி இருந்தா.. இந்த கல்யாணம் நடக்காது.. நம்பிக்கைய விடாத.. பாத்துக்கலாம் ஷ்ரித்திக்.. " என தன் நண்பனுக்கு தைரியம் கூறி அவனருகே நின்றான்.. தன் மொழிகள் நிஜமாக போவதை அறியாமல்..
ஐயர் மங்கல மந்திரங்களை ஒதிக் கொண்டிருந்த.. அதேசமயம்..
மண்டபத்தில் நுழைந்த அடையாளம் தெரியாத இருவர்.. திருமணத்தை நிறுத்துவதற்கான வேலையில் ஈடுபட்டிருந்தனர்.. யாருமறியா வண்ணம்..
"முகூர்த்த நேரம் வந்துடுத்து.. பொன்ன அழைச்சிண்டு வாங்கோ.. " என்று ஐயர் அழைக்கவும்..
மாயா முகம் முழுதும் மகிழ்ச்சியையும் புன்னகையையும் பூசிக் கொண்டு தோழிகளோடும் தன் சகோதரியோடும் அன்னையோடும் வந்து ஷ்ரித்திக்கின் அருகே அமர்ந்தாள்..
ஷ்ரித்திக் .. ஐயர் கூறும் மந்திரங்களை பின்பற்றாமல் கடனே என அவர் கொடுப்பதை அக்னிக்கு கொடுத்து கொண்டிருந்தான்..
ஷ்ரித்திக்கும் மாயாவும் ஒருவரையொருவர் பார்த்து கொண்டனர்.. ஷ்ரித்திக்கின் முகத்தை கண்ட மாயா.. 'கொஞ்சம் சிரி.. ' என ஷ்ரித்திக்கிடம் தோளை இடித்து கூறினாள்..
மாயாவின் மொழியை கேட்டு விரக்தியில் புன்னகைத்தான்..
ஷ்ரித்திக்கின் இந்நிலையை கண்ட பெற்றோர் இருவரும் உள்ளுக்குள் குமறினர்..
"என்னங்க.. ஷ்ரித்திக்அ இப்படி என்னால பாக்க முடியல.. " என தாயாக கவலை கொண்டார்.. இந்திரகவி..
தந்தையாக அவரின் மனதிலும் அவ்வெண்ணம் இருந்தாலும்..
"என்ன.. கவி.. ?? நீதான இந்த கல்யாணம் நடந்தே ஆகனும்னு அவன்கிட்ட சொன்ன.. இப்ப நீயே கவலப்பட்டா என்ன அர்த்தம்.. அன்னிக்கே ஜோசியர் சொன்னார்ல ஷ்ரித்திக்கோட கல்யாணம் அப்ப தடங்கல் வரும்.. ஆனா அதையும் மீறி
கல்யாணம் நடந்துரும்னு.. பாக்கலாம்.. நல்லதே நடக்கும்.. கவல படாத.." என்று தன் மனைவிக்கு தைரியம் கொடுத்தார்..
ஐயர்.. மந்திரங்களை ஓதி கொண்டே.. முகூர்த்த நேரம் நெருங்கியதும்.. மாங்கல்யத்தை வந்திருந்த மக்களிடம் ஆசி பெற்றும் அட்சதையை கொடுத்து வருமாரும் கூற.. தீவா அதேபோல ஒவ்வொருவரிடமும் ஆசி பெற்றும் அட்சதையை கொடுத்து வந்தாள்..
குடும்பத்தின் ஆண்கள் மணமேடையின் அருகில் இருந்தனர்.. ஷ்ரித்திக்கின் தாத்தாவும் பாட்டியும் மணமேடையின் அருகில் நாற்காலியில் அமர்ந்திருந்தனர்..
ஐயர் மாங்கல்யத்தை ஷ்ரித்திக்கிடம் நீட்டி 'கெட்டிமேளம்.. கெட்டிமேளம்.. ' என கூறியதும்.. மாயாவை பார்த்தான்.. ஷ்ரித்திக்..
மாயா ஷிவாக்ஷியாக தெரிந்தாள்.. ஷ்ரித்திக்கின் விழிகளுக்கு..
'முடிஞ்சுடுச்சு.. அவ்ளோதான்..' என நினைத்துக் கொண்டே ஷிவாக்ஷியை காண.. அவளோ கையில் அட்சதையோடு ஆவல் பொங்கும் விழியோடு வாழ்த்த தயாராக இருக்க..
மாயாவிற்கோ.. 'நான் நெனச்சது நடக்கப் போகுது.. இதுக்கு அப்பறம் நான் தான் இந்த வீட்டுக்கே ராணி.. ' என எண்ணமிருக்க..
ஷ்ரித்திக்கின் பெற்றோருக்கோ.. 'நாங்க பிடிக்காதத அவனுக்கு திணிக்கறோம்.. தப்பு தான்.. ஆனா.. அந்த பொன்னு என்ன தப்பு பண்ணுணா.. ??' எண்ணினர்..
விக்ரமிற்கோ.. 'தான் பண்ண சின்ன தப்புக்காக.. பிடிக்காதத வாழ்க்கைல முத தடவையா.. பண்றான்.. ' என தன் நண்பனுக்காக வருத்தம் கொள்ள..
ஒவ்வொருவரும் ஒவ்வொரு யோசனையில் உளன்ற அந்நேரம் ...
ஷ்ரித்திக்..
மாங்கல்யத்தை பார்த்து கொண்டே இருந்தவன்.. கைகள் நடுங்க எடுக்க போனான்...
அப்போது ..
To be continued..
----------
(Sorry guyzz.. idhu innum ezhudhalaamnu nenachean.. neraiya irukku.. but idhuve enakku romba long aa therinjudhu.. nxt ud la adha kudukarean any mistake panni irundha sollunga.. NAA thiruthikirean.. I'm really sorry.. enakku viral fever.. so adhan ud kuduka mudila.. Pona Friday dhan habbbaaaa.. apdinu feel aachu.. munnadiye kuduka vendiya ud.. konjam Patti tinkering velai.. so adhan.. sorry nanba.. Corona attack.. so be safe in your house.. )
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro