அத்தியாயம் - 10 😇
வளைந்து நெளிந்து போகும் பாதையில் அந்த ஃபெராரி கார் ஊசி வளைவுகளில் ஸொய்ஸொய் என்று சென்றது..
"செந்தாழம் பூவில் வந்தாடும் தென்றல்
என் மீது மோதுதமா..
பூ வாசம் மேடை போடுதம்மா
பெண் போல ஜாடை பேசுதம்மா..
அம்மம்மா ஆனந்தம்.. அம்மம்மா ஆனந்தம்.."
என்று மெய்மறக்கச் செய்யும் இசைஞானியின் இசையுடன் கண்ணதாசனின் வரிகளை விக்ரம் பாடுகிறேன் என்று பாடல் வரிகளை படித்துக் கொண்டிருந்தான் .. அதை கேட்க முடியாமல்.. ஷிவாக்ஷி காதை பொத்தியப்படி பின்னிருக்கையில் பயணித்தாள்...
சிறிது நேரம் பொருத்திருந்த
ஷ்ரித்திக்காலும்.. இனியும் தாளாது... "கொரங்கே.. ஏன்டா.. ஏன்டா .. இப்படி.. ??? நா உனக்கு என்ன பண்ணேன்.. ??? ஒத்துக்குறேன்.. நீ போட வைச்சிருந்த சட்டைய, .. அவ்வளோ ஏன் நீ சாப்பட வைச்சிருந்த.. ரெட் வெல்வெட் கேக்கையும் புடுங்கி திண்ணு இருக்கேன்.. அதெல்லாம் மனசுல வைச்சு பழிக்கு பழியாடா.. என் தெய்வமே.. ??? " என்று உரத்த குரலில் ஆரம்பித்து ஹஸ்கி வாய்சில் முடித்த ஷ்ரித்திக் கியரை அழுத்திக் கொண்டே கேட்டான்.. "நீ படிக்கறத ஷிவுவாலயே கேக்க முடியல.. கொடூரத்தின் உச்சம் டா.. " என்று ஷ்ரித்திக் விக்ரமின் மண்டையில் தட்டினான்...
"டேய்.. என்னடா... ?? சட்டுனு படிக்கறேன்னு சொல்ட.. டூ யூ நௌ ஹூ ஐ எம்.. ?? நா சித் ஸ்ரீ ராம்க்கே டவ்ஃப் கொடுக்கற ஆள்டா.. என்னைய போய்.. " என்று விக்ரம் வருத்தமே முகமாய் வைக்க முயற்சித்தான்..
"டேய்.. இரண்டு செருப்பால அடிப்பேன்.. மூடு.. சித் ஸ்ரீ ராம உன்னோட கம்பெர் பண்ணே முத டெட் பாடி நீ தான் டா.. " என்று ஷ்ரித்திக் தன்னுடைய நாக்கை மடக்கி விரல் நீட்டி அவனைத் எச்சரிக்கை விடுத்தான்..
"சரி.. சரி.. ஒரு தமிழகத்தின் செல்ல குரல கேவளப்படுத்துறாங்க.. காம் டௌன் விக்கி காம் டௌன்.." என்று தன்னிரு கைகளை முகத்தில் வீசிறிவிட்டபடியே தன்னை அடக்கினான்..
அவர்களின் உரையாடல் கேட்ட ஷிவாக்ஷியும் .. புன்னகையோடே
"ஹாஹாஹா.. என்ன நீங்க பேசறத பாக்கறச்ச.. ரொம்ப க்ளௌஸ் ஃப்ரண்ட்ஸ்.. ?? " என்று ஷிவாக்ஷி இதழ்களை விரித்தவாறே வினவினாள்..
"ஹே.. என்ன இப்படி கேட்டுட்ட .. ??? என்னுயிர் நட்பு ... சின்ன வயசுல இருந்தே.. வீ ஆர் வெர்ரி க்ளோஸ் ஃப்ரண்ட்ஸ் பா.. இவன் என்னோட தளபதி .. " என்று விக்ரம் அவனின் தோளை தட்டி கூறினான்..
"ஆமா.. நான் தளபதி ரஜினி, இவரு மம்முட்டி.. போடா டேய்... ஆனா ஒன்னு.. என்ன ரஜினின்னு சொன்னத கூட ஓரளவுக்கு ஏத்துப்பேன்.. ஆனா உன்னைய மம்மூட்டின்னு சொன்னத மட்டும் என்னால ஏத்துக்கவே முடியாதுடா.. " என்று ஷ்ரித்திக் தலையில் அடித்துக்கொண்டான்.. ஷிவாக்ஷியிடம் திரும்பி "ஷிவு நாங்க சின்ன வயசுல இருந்தே ஃப்ரண்ட்ஸ் .. நா என்ன நனைக்கறேன் .. நான் எப்ப என்ன பண்ணுவேன் எல்லாம் இந்த எருமைக்கு என்ன விட ரொம்ப நல்லாவே தெரியும்.. அதே மாதிரி அவன பத்தியும் எனக்கு நல்லா தெரியும்.. ஆஃப் கோர்ஸ்.. எங்களுக்கு நிறைய ஃப்ரண்ட்ஸ் இருக்காங்க.. பட் ஹீ இஸ் மை பெஸ்டீ.. ப்ரண்டுக்கும் மேல.." என்று ஷ்ரித்திக் தங்களிடையேயான நட்பை சுருக்கமாக கூறினான்..
ஷிவாக்ஷிக்கு..
அவர்களின் பேச்சிலேயே அவர்களுக்கு இடையேயான நட்பை விவரித்தது..
"ஹேய்.. ஷிவு.. நான் கேக்கனும்னு நெனச்சேன்.. ?? அதென்ன நீ உன் லாங்வேஜ் ஸ்லேங்க அடிக்கடி மாத்துறியா.. ??? இல்ல... ஏன் கேக்கறேன்னா .. ?? சம்டைம்ஸ் நார்மல்.. சம்டைம்ஸ் உங்க பிராமின் ஸ்லெங் எட்டிப் பாக்குதே.. ?? அதான்.. " என்று விக்ரம் தன்னுடைய கேள்வியை எழுப்பினான்..
"அதொன்னுமில்ல.. காலேஜில படிக்கறச்ச.. ஃப்ரண்ட்ஸ் எல்லாம் கிண்டல் பண்ணா..
அதான்.. ஸ்லேங்க மாத்த முயற்சி பண்ணேன்.. ஓரளவுக்கு தான்.. நா நார்மலா இருக்கும் போது என்ன பேசுறேன்னு தெரியும்.. சோ கன்ட்ரொல் பண்ணிக்குவேன்.. நா எமோஷனல் ஆகும் போது எனக்கே தெரியாம..அந்த ஸ்லேங் வந்தறது.. " என்று ஷிவாக்ஷி தன் பக்க விளக்கமளித்தாள்..
"ஓஓஓ..ஓ..ஓ.. உஉஉ " ஊளையிடுவதை போல் விக்ரம் ஷ்ரித்திக் ஒருசேர செய்வதை கண்டவளோ கண்களை சுருக்கி..
"என்ன.. கிண்டலா.. ?? " என கூறவந்த ஷிவாக்ஷி
அவர்களின் ஆடம்பர அலங்காரத் தோரணையில் பளிரென ஜொலிக்கும் பண்ணை வீடு அவர்களை வரவேற்றது...
அதைப் பார்த்தவளும் இன்னும் வாயை பிளந்தாள்...
'நேத்து தான வந்துட்டு போனோம்.. அதுக்குள்ள எப்படி இப்படி.. ??' என்று அவர்களின் ஆடம்பர அலங்காரம் அவளை வராதே... என்று எச்சரிக்கை விடுப்பது போலவே அவளுக்கு தோன்றியது..
இதுவரை பணக்காரர்களை பற்றி கேள்விப்பட்டு உள்ளாளே ஒழிய அவர்களின் வாழ்க்கை முறையும் ஆடம்பரமும் பார்த்ததே இல்லை.. இப்போது அதை கண்டதும் அவளை சற்று பீதியுறவேச் செய்தது..
'ஆத்துக்கு ஒடிடுவோமா... ??' என்றே அவளின் மனம் ஒருபுறம் யோசித்தது..
விக்ரமும் ஷ்ரித்திக்கும் தன் காரை விட்டு இறங்கி ஷிவாக்ஷி இறங்குவதற்கு கார் டோரை திறந்து அவள் இறங்குவதற்கு வழிவகைத்தனர்..
ஷிவாக்ஷி
அவர்கள் முன்னே செல்ல..
கற்றைக் கூந்தல் முகத்தில் தவழ... காரை விட்டு
இறங்கி அந்த பெரிய பண்ணை வீட்டைப் பார்த்து யோசனையுடனே அவ்விடத்திலேயே நின்றாள்..
'என்ன கொலுசு சத்தத்தையே காணாம்' .. என
பின்னால் திரும்பி பார்த்த ஷ்ரித்திக்கு... அவள் தயக்கத்தோடே நிற்பதைக் கண்டவன்..
அவளருகே சென்று "என்னாச்சு.. ? " என்று வினவியதன் பதிலாய்.. "இல்ல .. அட் லீஸ்ட் போனாவது ஆவது வேணும்.. ஆத்.. ஷ்ஷ்.." ஆத்துல என அவளின் பாஷையில் ஆரம்பித்து பின் நாக்கை கடித்து விட்டு " வீட்ல இருக்கு எடுத்துட்டு வந்துடறேனே.. ?? ப்ளீஸ்.. ?? " என்று ஷிவாக்ஷி மீண்டும் தொடங்கினாள்..
"உன்னோட திங்ஸ் போன் மட்டும் தான... ஒன்னும் பிராப்ளம் இல்ல.. அதுக்கு ஆளுங்க செட் பண்ணி கொண்டு வந்தரலாம்.. " என்று அப்பேச்சுக்கு முற்றுப் புள்ளி வைத்தான்..
"என்ன பங்கு .. ?? என்ன யோசனை.. ???" என்று வீட்டினுள் நுழையவிருந்த விக்ரம் திரும்பி நின்று கேட்க.. " ஒன்னுல்ல.. பங்கு " என்றவனிற்கு பதிலளித்து விட்டு.. ஷிவாக்ஷியின் கட்டு போடப்பட்டிருந்த மணிக்கட்டை மென்மையாக பிடித்து அவளை உள்ளே அழைத்து செல்ல..
முதன்முதலாக ஒரு ஆண்மகன் தன் கரத்தை பற்றியது உள்ளுக்குள் பதற்றமாகவும்.. ஒரு வித உணர்வில் நெளிந்தாள்..
ஷிவாக்ஷியோ ஆவென ஷ்ரித்திகின் பின்னேயே அவனை பார்த்த வண்ணமே நடந்தாள்.. அவ்வீட்டில் அவளின் கால் தடம் அவனோடேயே பதித்தாள்...
வரவேற்பறையிலிருந்த குடும்பத்தினர் அனைவரும் மாலை நலங்கு விடிந்தால் திருமணம் என்பதாலே... வேலை சற்று அதிகமாகவே இருந்தது.. ஒவ்வொருவரும் ஒவ்வொரு வேலையில் ஈடுபட்டிருந்தனர்..
குடும்பத்தினர் அனைவரும் பங்கிட்டு செய்கையில் வேலைப்பளு அவ்வளவாக தெரியவில்லை.. ஏனெனில்.. தங்களின் மூத்த வாரிசு அதுவும் செல்லப் பிள்ளையின் திருமணம் என்று நினைக்கையில் அவர்களுக்கு அதிலிருந்த சிரமம் மறந்தே போனது..
அச்சமயம் விக்ரம், ஷ்ரித்திக் ஷிவாக்ஷியின் கரத்தை பற்றிய வண்ணம் உள்ளே வந்தனர்.. ஷிவாக்ஷியின் கோலமும் அவள் அணிந்திருந்த ஷ்ரித்திகின் ஜாக்கெட் அனைவரின் சிந்தனையும் வாசகர்களின் எண்ணம் போலவே குடும்பத்தினரை சிந்திக்க செய்தது..
குடும்பத்தில் ஆண்கள் அனைவரும் வெளியே சிறுவேலையாக சென்றதனால்.. பெண்கள் மட்டுமே இருந்தனர்..
"ஷ்ரித்திக் .. என்ன இது.. ?? என்னாச்சு.. இந்த பொன்ன நேத்து நீ கூட்டிட்டு வந்த தான.. ?? என்னாச்சு பா.. தலையில கட்டு வேற.. ??" என்று தாய் இந்திரக்கவியும் பாட்டி தேவசேனா ஒன்று மாற்றி ஒருவர் கேள்வி எழுப்ப.. அனைவருக்குமே புரியும் வகையில் ஷ்ரித்திக் சுருக்கமாக கூறி முடித்தான்..
"அச்சோ.. நல்ல வேலை... நீ போனே.. இல்லைனா என்ன ஆகறது.. ??" என்று சிறிது நேரத்திற்கு பின் " ஒன்னும் ப்ராப்ளம் இல்லமா.. நீ பயப்படாத நாங்க இருக்கோம்.. இன்னிக்கு ஷிவாக்ஷி நம்ம வீட்ல தங்கிக்கட்டும்.. " ஷ்ரித்திகின் தாயாகிய இந்திரகவி ஷிவாக்ஷியின் பக்கம் திரும்பி தலையை ஆறுதலாக தடவிக் கூறினார்..
கடைசியாக பாட்டி காட்டிய அன்பிற்கு பிறகு ஷிவாக்ஷிக்கு அந்த அன்பு கிடைக்கவில்லை.. ஷிவாக்ஷியின் தாத்தா பாசத்தை காட்டுவது மிக அரிது.. இப்பொழுது இந்திரகவியின் வார்த்தைகளும் அக்குடும்பத்தின் அக்கறையும் ஏனோ காயம்பட்ட மனதிற்கு இதமாக இருந்தது..
"தீவா.. இங்க வா மா.. " என்று ஷ்ரித்திகின் பாட்டி தன்னுடைய பேரனின் மனைவியை அழைத்து வந்து ஷிவாக்ஷியின் முன் நிறுத்தினார்..
தீவா ஒரு பொது நல மருத்துவர் .. அவர்களின் குடும்பம் வழிநடத்தி வரும் மருத்துவமனையில் தலைமை மருத்துவராக இருக்கிறாள்.. அதனாலேயே பாட்டி தேவசேனா தீவாவை அழைத்தார் " நீ எதுக்கா இருந்தாலும் ஒன்ஸ் செக் பண்ணுமா.. நம்ம பேரன் இன்னிக்கு நம்மக்கூட இருக்கறான்னா.. அதுக்கு இம்பார்டன்ட் ரிசன் ஷிவாக்ஷி தான் .." என்று அவர்களிடம் மொழிந்தார் பாட்டி தேவசேனா..
பாட்டி கூறினால் அதற்கு மறுமொழியே கிடையாது என்பதால் ஷ்ரித்திக்கும் விக்ரமும் மொத்த குடும்பமும் அமைதி காத்தனர்..
ஷிவாக்ஷி
"அச்சோ.. அதெல்லாம் வேண்டா.. நீங்க சொல்றளவுக்கு நா ஒன்னும் பண்ணல.. இது பெரிய காயமில்ல.. அவாளே என்னை ஹாஸ்பிடல் கூட்டிண்டு போனா.. ஹாஸ்பிடல்ல மருந்தும் கொடுத்திட்டா.." என்று மறுத்தவளை வலுக்கட்டாயமாக
பரிசோதனை செய்தாள்.. வேறு ஏதேனும் அடி பட்டதா என்றும்.. "சின்னதா தான் காயம் எதுக்கு பெரிய கட்டு " என தீவா கூறியபடியே ஏற்கனவே போட்டிருந்த பெரிய கட்டை அவிழ்த்து சிறிய கட்டாக நெற்றியில் கட்டினாள்..
வலியை குறைக்கும் மாத்திரையை ஷிவாக்ஷியிடம் கொடுக்கவும்.. 'இதுக்கு தான் நான் வரமாட்டேன்னு சொன்னேன்' என்று ஷ்ரித்திக்கையும் விக்ரமையும் பார்த்து விட்டு ஏதும் கூறாமல் வாங்கி விழுங்கினாள்..
அவளின் பார்வை கூறும் பொருளை நன்கறிந்த ஷ்ரித்திக்கும் ஏதும் கூறாமல் ஷிவாக்ஷியை பார்த்தான்..
ஷ்ரித்திக்கின் சித்தி
தேவிகா.. "அவ கொஞ்சம் ரெஸ்ட் எடுக்கட்டும்.. முகமெல்லாம் வாடியிருக்கு.." என மற்றவர்களை பார்த்து கூறிவிட்டு ஷிவாக்ஷியை நோக்கி.. " அம்மா ஷிவாக்ஷி.. நீ இந்த ரூம்ல ரெஸ்ட் எடுத்துக்கோம்மா.. ஆனா ஒன்னு ஈவ்னிங் ரெடி ஆயிடனும்.. ஏன்னா .. எங்க பையனோட நலங்கு .. சோ கெட் ரெடி ஃபார் தட்.. " எனக் அவளின் தாடையை பிடித்துக்கொண்டு புன்னகையோடே பேசி முடித்தார்.. ஷிவாக்ஷிக்கென ஒரு அறையும் வகுத்து கொடுத்தாள் தேவிகா..
அக்குடும்பம் ஷிவாக்ஷியின் மேல் காட்டிய பரிவும் அக்கறையும் .. ஒருபுறமெனில்.. ஷ்ரித்திகின் ஜாக்கெட் அணிந்திருந்ததே ஒரு ஜோடிக் கண்களுக்கு மிகுந்த சினத்தை ஏற்படுத்தியது .. ஷிவாஷியை ஆவேசத்தோடே நோக்கின...
அவ்விழிகள்..
ஷ்ரித்திக்கை பார்த்தவரோ
"டேய்.. புது மாப்பிள்ளை.. நீ இங்க என்ன.. ?? போ.. போய் நலங்குக்கு ரெடியாகு .. " என ஷ்ரித்திகின் சித்தி தேவிகா அவனை கிளப்பினார்..
அதற்கேற்றார் போல் தேவிகாவின் அருகிலிருந்த ஷ்ரித்திகின் தாய் இந்திரக்கவியும் சிறிது யோசித்து விக்ரமை பார்த்து...
"விக்ரம்.. நீயும் கூட போப்பா.." என்று விக்ரமிடம் கூறியதும்..
"ஆகட்டும் ... மகாராணி.. " என்று விக்ரம் அவர்களிடம் மொழிந்து விட்டு ஷ்ரித்திக்குடன் அவர்களுடைய அறைக்குச் சென்றான்.. "அறுந்த வாலு.." என்று தேவிகாவும் இந்திரகவியும் ஒருவரையொருவர் பார்த்து புன்னகையுடன் வேலையில் இறங்கினர்..
மாத்திரை தந்த மயக்கத்திலும்.. நேற்றிரவிலிருந்து அலைந்த அலைச்சலும்.. ஷிவாக்ஷியை 'சற்று ஓய்வு கொடு' என அவளின் உடல் கெஞ்சியதும்.. அப்படியே கட்டிலில் சாய்ந்தாள்.. சாய்ந்தவள் உறங்கியும் போனாள்..
அனைவரும் சென்ற பிறகு ஷிவாக்ஷியின் அறையை நோக்கி மெல்ல எட்டுக்களை எடுத்து வைத்து நுழைந்தாள்.. அந்த கண்களுக்கு சொந்தமானவள்..
உறங்கிக்கொண்டிருந்த ஷிவாக்ஷியை கண்டதும் அவளின் கோபம் தலையில் ஏறுவதை உணர்ந்தாள்..
விழிகளிலே நின்றதென்னவோ அவள் போட்டிருந்த ஷ்ரித்திகின் ஜாக்கெட்.. இது அவளிடம் இருக்கக் கூடாது என.. அவளிருவிழிகள் கோபத்தில் சிவந்தந்தது.. தன் கரத்தை ஷிவாக்ஷியை தொடும் நேரத்தில்.. அவளின் கரத்தைப் பற்றியது.. ஓர் கரம்..
"நீ இவகிட்ட என்ன.. பண்ற .. ?? " என சமீரா தன் மகளின் கரத்தைப் பற்றினார்..
வந்தது மாயா தான்
"மாம்.. என்ன நீங்க .. தெரியாத மாதிரி கேக்கறீங்க.. ?? அஃப்டர் ஆல் நம்ம வீட்டு சமையல் செய்றத்துக்கு கூட தகுதி இல்லாத இவ.. என் ஷ்ரித்திக்கோட ஜாக்கெட்ட இவ.. ஷிட்.. " என மாயா கோபத்தில் வார்த்தைகளை தந்தியடிக்க கூறினாள்..
"ஜஸ்ட் ஸ்டாப் இட்.. மாயா.. ஷ்ரித்திக் ஹெல்ப் தான் பண்ணான்.. அதையும் இதையும் பேசி நீயே தப்பான எண்ணத்தை விதைச்சிடாத.. நீ ஷ்ரித்திக்க லவ் பண்றினா.. அவனும் உன்ன லவ் பண்றதுக்கான முயற்சி பண்ணு.. அதைவிட்டுவிட்டு தேவையே இல்லாம இந்த பொன்னு மேல பொஸஸிவ் ஆகி இவ மேல கைய வைக்காத.. இந்த பொன்னு பாக்க அப்பாவி மாதிரி தான் தெரியுது.. இந்த பொன்னு மேல கைய வைச்சா.. அவ்ளோதான் சொல்லிட்டேன்.. என்னோட கோபத்தை அப்ப நீ முழுசா பாப்ப.. " என அவளின் தாய் சமீரா மாயாவை எச்சரித்து அவ்விடத்தை விட்டு அகன்றார்..
நிர்மலமாய் நிம்மதியாய் தன்னுறக்கத்தை தொடர்ந்த ஷிவாக்ஷியை காண காண மாயாவின் கோபத்திற்கு தூபம் போடவே.. காலை தரையில் உதைத்துக் கொண்டு அவ்வறையிலிருந்து வெளியேறினாள்..
தனதறையில் நுழைந்த
ஷ்ரித்திக் ஹப்பா என அமர்ந்தான்... ஷ்ரித்திக்கின் கைப்பேசியோ கிண்கிணித்தது..
அத்திரையில் ராபர்ட் என காட்டியதும் தாமதிக்காது எடுத்த பேசினான் .. ஷ்ரித்திக்..
"ஜி ... நீங்க சொன்னப்படி தான் நான் அவனை கவனிக்கறேன்.. ??? இப்ப அவனுக்கு ரொம்ப பிளீட் ஆகுது.. நான் என்ன பண்ணனும் சொல்லுங்க.. ??" என்று மறுப்பக்கத்திலிருந்து ராபர்ட் அக்கடன்காரனை பற்றி கூறுவதைக் கேட்டவனுக்கு மனதிலிருந்த கோபத்திற்கு சிறு திணியாகவே இருந்தது.. ஆயினும் கோபம் தான் குறைந்த பாடில்லை... அவனின் செவிகளில் இன்னமும் ஷிவாக்ஷியின் அலறலும் கதறலும் ரிங்காரமிட்டது..
"அவனுக்கு ட்ரீட்மெண்ட் நம்ம ஹாஸ்பிடல் டாக்டர் வச்சு கொடு.. ஆனா ஈஸியா விட்றாத.. " என்று ஷ்ரித்திக் ஆணையிட்டபடி ராபர்ட் செய்ய விழைந்தான்..
ஷ்ரித்திக்கின் மொழிகளை கேட்டபடியே அவனருகே வந்தான்.. விக்ரம்.. 'லவ் பண்றான்.. அது இவனுக்கே தெரியல.. ம்ப்ச்.. எப்படி அவனுக்கு புரிய வைச்சி.. சோஓஓஓ.. விடிஞ்சா கல்யாணம்.. ஹ்ம்ம்ம்ம்.. ' என நினைத்தவனின் நினைவில் திருமணத்தில் நாட்டமில்லை என ஷ்ரித்திகின் மொழிகள் அவனுள்ளே இறைத்தன.. 'இவன் எப்ப ஃபீல் பண்ணி.. விளங்கும்.. என்ன பண்றது.. ?? சரி நடக்கறது நடக்கட்டும்' என தன்னுக்குள் ஓர் முடிவுடன்
"பங்கு.. என்னப் பங்கு .. ?? இப்படியே உக்காந்துட்டு இருந்தா என்ன அர்த்தம்.. ஈவினிங் நலங்கு இருக்குப்பா.. போங்க ரெடி ஆகுங்க புது மாப்பிள்ளை.. " மொழிந்தான் விக்ரம் ..
"டேய் .. ஏன்டா படுத்தற.. ??? நாந்தான் சொன்னேன்ல ஐ எம் நாட் இன்டரஸ்டெட் அப்பறம் ஏன்டா.. ??" என்று ஷ்ரித்திக் சலித்து கொண்டே கூறினான்..
" சொன்னதெல்லாம் ரைட் தான் தம்பி.. பட் டைம்மிங் தப்பாச்சே.. " என்று விக்ரம் ஷ்ரித்திகின் கேள்விக்கு பதிலளித்தான்.. சிறிது இடைவெளிக்குப் பின்னர்
" டேய் ஓரு பொன்னோட வாழ்க்கை.. டா.. நாளைக்கு கல்யாணம்.. இப்ப பிடிக்கலைன்னு சொன்னா.. அவங்க என்ன நினைப்பாங்க.. பீ சில் அண்ட கெட் ரெடி " என்று விக்ரம் ஷ்ரித்திக்கிடம் கூறிவிட்டு அவனின் தோளை தட்டிவிட்டு அவ்விடம் விட்டு அகன்றான்..
யோசனையோடே இருந்த ஷ்ரித்திக் பால்கனில் கைகளை ஊன்றி யோசித்தான்.. ' நா என்ன நினைக்கிறேன்.. ??? விடிஞ்சா கல்யாணம்..
ச்சா... ஒன்னும் புரியல..' என தன் தலையை அழுத்திக் கோதினான்...
"அண்ணா... அண்ணா.. " என கூவிக்கொண்டே உள்ளே நுழைந்தார்கள் வர்ஷா மற்றும் ஜானவி ..
" என்னங்கடி.. " என சலித்துக் கொண்டான் ஷ்ரித்திக்.. "டேய் அண்ணா.. நீ டி போட்டா.. நாங்க டா போடுவோம்.. ஜாக்கிரதை.. " என விரல் நீட்டி தன் அன்பு அண்ணனை எச்சரித்தாள்.. வர்ஷா
"ஐயோ.. அப்பா.. இப்ப மட்டும் என்ன ஒழுங்கு.. ?? ஏதோ என்ன மரியாதையா கூப்படற மாதிரி தான் சீன் " என ஷ்ரித்திக்கும் அவர்களுக்கு பதிலளிக்க.. பதிலுக்கு அவர்களும்
" டேய்.. அண்ணா உனக்கு இந்த மரியாதை போதும்.. " என்று ஜானவி தன் அண்ணனை அடக்கினாள்..
ஷ்ரித்திக்கும் அடங்கிவிட்டார் போல "சரி இப்ப என்ன வேணும்.. ??? ஏதாவது வேணுமா.. ??? இல்ல தேவைனா மட்டுந்தான் நான்லாம் உங்க கண்ணுக்கு தெரிவேன்.. ? " என்று ஷ்ரித்திக் அவர்களிடம் விளையாட்டாக பேசியபடியே வர்ஷாவின் தலைமுடியை கலைத்து விட்டான்... "அண்ணாஆஆஆ.. " எனக் கத்திய வர்ஷா.. திரும்பி "ஆமா.. உன்ன காப்பாத்துன பொன்ன.. நீ காப்பாத்துனியாமே.. " என்று தன் சகோதரனிடம் வினவியவளிடம்..
ஜானவி சடாரென "வாட் எ ரைம்மிங் .. வாட் எ ரைம்மிங் ??? கில் மீ எ ஹைஃபை.." என்று வர்ஷா கூறியதில் ஜானவியும் வர்ஷாவும் இருவரும் கைகளை தட்டிக் கொண்டனர்..
"சோ.. ஏன்டி.. நா உயிரோட இருக்கனுமா.. வேணாமா.. மொக்கைய போட்டு ஏன்டி படுத்தறீங்க ???" என்று ஷ்ரித்திக் தன் தங்கைகளிடம் சலித்துக் கொண்டான்..
"ப்ரோ .. சில் ப்ரோ .. " என்றாரம்பித்த ஜானவி இடைவெளி விட்டு.. "என்னாச்சு .. அண்ணா.. ?? " என்று வினவ .. மீண்டும் நடந்ததை சுருக்கமாக கூறி முடித்தான்.. "நல்லவேளை.. நீங்க போனீங்க.. அடர்ந்த காடு வேற.. என்ன நடந்தாலும் உதவிக்குன்னு ஆள் இருந்திருக்க மாட்டாங்க.. " என வர்ஷா பதற்றமாக மொழிய.. ஷ்ரித்திக்கும் வர்ஷாவை ஆதரவாக தோளோடு அணைத்தான்.. "அதைப்பத்தி யோசிக்காத.. ஹ்ம்ம்ம்ம்.. " என்று கதைத்தான்.. பின் ஏதோ நினைவு வந்தவனாக.. "ம்ம்ம்.. சொல்ல மறந்துட்டேன்.. அவளுக்கு ட்ரஸ் ஆர் எனிதிங் எது கேட்டாலும் எல்லாமே அவளுக்கு ரெடி பண்ணிக்குடு.. ஓகே " என்று ஷ்ரித்திகின் மொழிக்கு பார்த்து கொள்வதாக தலை அசைத்தனர் அவனின் தங்கைகள்..
"அண்ணா நா கேட்டேன்ல அந்த பெயின்டிங் கலெக்ஷன்ஸ் வாங்கி தா அண்ணா..
ப்ளீஸ்.. ப்ளீஸ்.. ப்ளீஸ்.. " என்று வர்ஷா கெஞ்சினாள்..
வர்ஷாவிற்கு ஓவியங்கள் மீது அதீத ஆசை .. ஓவியம் கண்களை கவரும் வகையில் இருந்தால் யோசனைக்கு இடமின்றி எவ்வளவு விலை என்றாலும் வாங்கி விடுவாள்..
"ஹே..கெஞ்சாத.. ஆப்டர் மேரேஜ்.. நா கண்டிப்பா வாங்கி தரேன்.. ஓகே.." என்று ஷ்ரித்திக்கும் அவளிடம் வம்பிளுத்துவிட்டே அவளின் விருப்பத்திற்கு தலை சாய்த்தான்..
"எனக்கு.. ட்ரஸ்ஸஸ் "என்று ஜானவி அண்ணணை பாவமாக கண்கள் மின்ன பார்க்க.. "சரி சரி.. ரெண்டு பேருக்கும் வாங்கி தரேன்.. " என்று ஷ்ரித்திக் ஜானவியையும் சமாதானம் செய்தான்..
வெளியே சென்றிருந்திருந்தவர்கள் வீட்டுக்கு வந்தனர்.. அக்குடும்பத்தின் ஆண்கள்..
ரித்துல், ருத்ரா, ஆரா, தியா நால்வரும் விளையாடிக் கொண்டிருந்தர் .. ஷிவாக்ஷி உறங்கிக்கொண்டிருந்த அறையில் ருத்ரா மட்டும் ஒளிந்து கொள்ள வேண்டியே
நுழைந்தான்..
அந்த அறையில் ருத்ரா, ஆரா, தியா, ரித்துல், நால்வரும் விளையாடுவதற்கு பயன்படுத்தினர்.. இப்பொழுது ருத்ரா ரித்துல்லிடம் தப்பிக்கவே இவ்வறைக்கு வந்தான்..
"ருத்து.. வாடா.. எடுமை.. எங்க டா இதுக்க.. ??" என ரித்துல் கத்தியப்படியே ருத்ராவை தேடினான்..
வெளியே இருந்த ரித்துலிற்கு சத்தம் கேட்கக்கூடாது என்று மெதுவாக நுழைந்தான்.. ருத்ரா..
"நாய்க்கு.. எருமைன்னு ஒழுங்கா சொல்ல வரல.. ஐயோ..இதுக்கெல்லாம் பயந்துட்டு ஒளியரேனே.. " என்று புலம்பிக் கொண்டே
உள்ளே வந்தவனின் பார்வையில் அழகாக உறங்கிக்கொண்டிருந்த ஷிவாக்ஷி விழுந்தாள்..
"இவங்க என்ன இங்க.. ??" என்று நினைத்த ருத்ரா.. ஷிவாக்ஷியின் அருகில் சென்றான்.. ஷிவாக்ஷி உறங்குவது ருத்ராவிற்கு தூங்கும் அழகியை நினைவுபடுத்தியது.. தூங்கும் அழகியை கதைகளின் வாயிலில் அறிந்த ருத்ராவிற்கு ஷிவாக்ஷி உறக்கத்தில் மிக அழகாக தெரிந்தாள்..
ருத்ரா அவள் உறங்கும் அழகை ஷிவாக்ஷியின் முகத்தருகே அமர்ந்து இதழ்கள் விரிய புன்னகையோடே பார்த்துக்கொண்டு இருந்தான்..
வெளியே ருத்ராவை தேடிய ரித்துலின் கண்களுக்கு அகப்படாமல் போகவே.. கடைசியாக விளையாட்டின் போது பயன்படுத்திய அறைக்குள் நுழைந்தவனுடன் ஆராவும் தியாவும் வந்தனர்.. ருத்ரா ஷிவாக்ஷியை சைட் அடிப்பதைப் பார்த்த ஆரா "பாரு ரித்து சைட் அடிக்கிறான்.. இவன.. " என ஆரா கூற அதற்கு தியாவும் "உம்.. " என அவளுக்கு ஒத்து ஊதினாள்.. "இந்த .. கொக்க.. " என ரித்துவும் கொரங்க என கூறத் தெரியாமல் கூற...
ஆரா, தியா, ரித்து மூவரும் ஒருங்கே "ருத்துஉஉஉ.. " என கத்தியதன் பலனாய்.. ருத்ரா அவர்களின் பக்கமே திரும்பாமல் "சூ .. சூ .. ச்சு" என்று கொசுவை விரட்டுவதைப் போல பாவ்லா செய்தான்.. ஷிவாக்ஷியின் உறக்கம் கலைந்து தன் விழிகளை திறந்தாள்..
உறக்கத்திலிருந்து விழிப்பதில் கூட அழகு இருக்கிறதென அப்போது தான் பார்த்தான்.. ருத்ரா..
விழித்தவளின் பார்வைக்கு ருத்ராவே தென்பட.. தான் இருக்கும் இடத்தை அப்போது தான் உணர்ந்தாள்..
"ஹேய்.. சார் இங்க என்ன பண்றீங்க.. ??? " என்று ஷிவாக்ஷி எழுந்து ருத்ராவை தூக்கி தன் மடியில் வைத்துக் கொண்டாள்..
"அத நா கேக்கனும்.. நீ எங்க ரூம்ல என்ன பண்ற.. ?? " என ருத்ரா ஷிவாக்ஷியிடம் தன் மழலை மொழியில் கேள்வி எழுப்பினான்..
ஷிவாக்ஷி அப்போதுதான் ரித்து, ஆரா, தியாவை பார்த்ததுமே கண்கள் விரிய புன்னகையோடே அவர்களை ஐவிரல்களையும் மடக்கி அழைத்ததும்.. அப்பிஞ்சுகள் அவளிடம் வந்தன..
ஷிவாக்ஷியோ அம்மூவரையும் தூக்கி தன்னருகே அமர்த்திக் கொண்டாள்..
"இது உங்க ரூம்மா.. ??" என்று கேட்க.. "இல்ல.. இந்த ரும்ம ப்ளே டைம்ல யூஸ் பண்ணுவோம்.. அதான்.." என ரித்துலிடமிருந்து கடுப்பாகவே பதில் வரவே..
ஷிவாக்ஷி
"என்னாச்சு.. உங்களுக்கு.. ஏதாவது கோபமா.. ?? இதென்ன.. ட்ரஸ் எல்லாம் ஈரமா இருக்கே.. " என்று ரித்துலின் சட்டையை தடவிக் கேட்டதின் விடையாய்.. அதுவரை மறந்திருந்த கோபம் நினைவு வந்தவனாய்.. "டேய் .. ருத்து .. உன்ன.. " என்று ரித்துல் ருத்ராவை சரமாரியாக அடித்தான்..
இதைப் பார்த்துக் கொண்டிருந்த ஷிவாக்ஷி
"ஹேய்.. ரித்து விடுடா.. கண்ணா.. "என பரிவாக கூறியதும்.. ரித்துல் ருத்ராவை அடிப்பதை நிறுத்தி விட்டு.. ஷிவாக்ஷியை பார்த்தான்.. "என்னாச்சு.. செல்லம்.. ? " என கேட்டதற்கு ரித்துல்.. "இதோ .. இவ இடுக்கானா எடுமை.. நா ஸ்விம்மிங் பூல்ல என்னோட ஃப்வரைட் ஷின் சான் பொம்மை போட்ட ஜட்டி விழுந்துடுச்சுன்னு எட்டிப் பாத்தேன்.. இவ பின்னாடி இருந்து தள்ளிவிட்டான்.. நா உள்ள விழுந்துட்டேன்.. " என்று கூறியதும்.. வந்த சிரிப்பை அடக்கிக் கொண்டு முகத்தை சீரியஸாக வைத்து "அச்சோ.. ஏன் ருத்ரா.. ரித்துவ ஸ்விம்மிங் பூல்ல தள்ளிவிட்டிங்க.. ??" என ஷிவாக்ஷி ருத்ராவிடம் கேட்க.. "அட நீ வேற.. இந்த நாய்.. குட்டி தொட்டியதான் அப்படி சொல்லுது.. " என்று ருத்ராவின் பதிலுக்கு இம்முறை சிரிப்பை அடக்க முடியாமல் வெடித்தாள்..
"ஹாஹாஹா.. அச்சோ ..என் செல்லம்" என ரித்துல் ருத்ராவை இருவரையும் கட்டிக் கொண்டாள்..
ஆராவோ.. "நீங்க இவன குறிப்பா.. ருத்ராவ நம்பாதிங்க.. " என ஷிவாக்ஷியிடம்.. தன் மழலை மொழியில் கூறியதும்.. "ஏன்டா பட்டு.. ??" என அவளின் தாடையை பிடித்து கேட்க.. "அது ஒன்னும் இல்ல.. ஆராவோட ஆளு ருத்ரா.. ஆனா நீங்க வந்ததுல இருந்து ருத்ரா ஆராவ கண்டுக்காததால .. வந்த கோபம்.. அதுவுமில்லாம ருத்து உங்கள சைட் அடிக்கிறான்" என்று தியா கூறியதும்..
ஷிவாக்ஷி.. "ருத்து.. ஆள் வேற இருக்கா உனக்கு பெரியாள் தான்.. " என ருத்ராவை பார்த்து கூறியதும்.. "ஆமா.. நா கேட்டதுக்கு அன்சர் வரலையே.. நீ எப்படி இங்க.. ??" என ருத்ரா ஷிவாக்ஷியிடம் மீண்டும் தொடங்கவும்.. "என்ன.. இங்க.. " சிறிது யோசித்து "ஹான்.. இங்க ஒருத்தருக்கு மண்டையில மூடி நட்டுகிட்டு நிக்கும்ல.. (ஷ்ரித்திக்க தான் சொல்றா.. ) அவர் தான் என்ன இங்க கூட்டிட்டு வந்தாரு.. அதுவுமில்லாம.. உங்க பாட்டி தான்.. எனக்கு அடிபட்டு இருக்குல .. அதனால என்ன இங்க தங்க வைச்சிட்டாங்க.. போதுமா.. " என்று ஷிவாக்ஷி அவனிடம் சுருக்கமாக கூறினாள்..
"முடி யாருக்கு நட்டுகிட்டு இருக்கும்.. ஷ்ரித்திக் மாமாவையா சொல்ற " என்று ருத்ரா கேட்டதும்..
"ஆமா.. அவர்தான் அவர்தான்.. " என்று ஷிவாக்ஷி மண்டையை ஆட்டியதும்.. "நீ.. நல்லா.. வாங்கி கட்டிக்க போத.. " என ரித்துல் முணுமுணுத்தான்.. ருத்ராவை பற்றி நன்கு அறிந்தவன் அவனே.. இதை வைத்து நிச்சயம் ஏதேனும் செய்வான்.. என்று ரித்துல் நினைத்துக்கொண்டான்
"ஓ.. உனக்கு அடிப்பட்டிருக்கா.. கவலப்படாத ச்செரியாயிடும்.. " என ஆராவும் தியாவும் ஒன்றாக அவளின் நெற்றியிலும் கையிலும் போட்டிருந்த கட்டுகளில் தன் பிஞ்சு விரல்களால் மயிலிறகாய் வருடியதும்.. மனதேங்கும் மகிழ்ச்சியின் சாரலே.. "அச்சோ.. அழகு .." என ஷிவாக்ஷியும் அவர்கள் நால்வரையும் அள்ளிக் கொண்டாள்..
ஷிவாக்ஷியிடம் பேச வந்த ஷ்ரித்திக்கின் தங்கைகள்.. அவள் குழந்தைகளுடன் பேசுவதை கண்டு புன்னகையுடன் அவளருகே வந்தனர்..
ஜானவியும் "இந்த அறுந்த வாலுங்க.. கிட்டாயா பேசிட்டு இருந்தீங்க.. " என அவ்வாண்டுகளை வம்புக்கு இழுக்க.. ஷிவாக்ஷி பதில் மொழியும் முன்னே .. முந்திக்கொண்டு "ஏய்.. என்ன.. எங்கள பத்தி தெரியும்ல.. " என்று தியா அவர்களை மிரட்ட.. "சரி மேடம்.. பயந்துட்டோம் போதுமா.. " என்று வர்ஷாவின் பதிலுக்கு.. ருத்ரா அஜித்தை போல "அதே... " என சொல்லி.. அவனின் தோழர்களையும் அழைத்து ஓடி சென்றான்..
ஷிவாக்ஷி, வர்ஷா, ஜானவி
அக்குழந்தைகள் செல்வதை புன்னகையோடே பார்த்தனர்..
"இப்ப பரவால்லையா.. ??" என வர்ஷா விளிப்பதன் விடையாய்.. "இப்ப ஓகேங்க.. பட் கொஞ்சம் வலிக்குது.. அவ்ளோதான்.. " என்று ஷிவாக்ஷி இதழ்களை விரித்தவாறே மொழிந்தாள்..
ஜானவி
"நாம ஃப்ரண்ட்ஸ் ஆயிடலாமே.. ?? நாமெல்லாம் ஒரே ஏஜ் தான.. ?? சோ.. எதுக்கு இந்த மாதிரி வாங்க போங்கன்னு .. உங்களுக்கு டிஸ்டர்ப் இல்லனா.. ?? நா பெயர் சொல்லி கூப்படவா.. ??" என்று ஷிவாக்ஷியை பார்க்க..
ஷிவாக்ஷி "அச்சோ.. எனக்கென்ன டிஸ்டர்பன்ஸ்.. ?? இத நானே சொல்லலாம்னு நெனச்சேன்.. நீங்களே சொல்லிட்டீங்க.." எனக் கூறி அவர்களோடையான நட்பை ஏற்றுக் கொண்டாள்..
வர்ஷாவோ வெகு நேரமாக ஷிவாக்ஷியின் முகத்தையே ஆராய்வது போல பார்த்து கொண்டிருந்த.. அதே நேரத்தில்..
ஜானவி.. " பெயின் கில்லர் டெப்லெட் போட்டுகோ.. இனிமே ஜாக்கிரதையா பத்திரமா இரு.. அண்ட உனக்கு தேவையான காஸ்ட்யூம்ஸ் நீ கேட்டிருந்த போன் இன்னும் ஒரு 15 மினிட்ஸ்ல ரூம்க்கு வந்துடும்.. ரெடி ஆயிட்டு கீழ நலங்கு பங்ஷன்க்கு வா.. சரியா.." என்று கூறியதற்கு புன்னகையே விடையாய் நோக்கினாள்..
வர்ஷாவின் ஆராய்ச்சி பார்வையில் நெளிந்த ஷிவாக்ஷி.. இனியும் பொறுக்காது.. "என்ன நீ.. ?? அப்படி பாக்றேள்.. ??" என வர்ஷாவிடம் கேட்டே விட்டாள்..
"இல்ல.. எனக்கு உன்ன எங்கயோ பாத்த மாதிரி இருக்கு.. ?? ஆனா எங்கன்னு தான் தெரியல.. ??" என்று வர்ஷாவின் கேள்வியில் திருதிருவென விழித்தாள்..
"எனக்கும் சம்டைம்ஸ் அப்படிதான் தோனுச்சு.. " என ஜானவியும் தன் சகோதரிக்கு துணையாய் கேள்வியை எழுப்பினாள்..
"இல்ல.. அதுக்கு சான்ஸே இல்ல.. பிகாஸ்.. இப்பதான் உங்கள ஃபர்ஸ்ட் டைம் பாக்குறேன்.. அப்பறம் எப்படி.. ??" என்று ஷிவாக்ஷியும் தன்னை கண்டிருக்க வாய்ப்பில்லை என புரிய வைக்க முயற்சித்தாள்..
"இல்ல.. உன்ன நிச்சயமா பாத்திருக்கேன்.. நீ என்ன படிச்சிருக்க.. ??" என்ற வர்ஷாவின் கேள்விக்கு "B.A., (ஆர்ட்ஸ் அண்ட் பெயிண்டிங்ஸ்) .. ஏன் கேக்கற.. ??" என்று குழப்பத்தை மறைத்து சிரித்தவாறே கேள்வி எழுப்பியதன் பொருளாய்..
எதையோ தேடி கடைசியில் கண்டுபிடித்த உணர்வுடன்..
வர்ஷா.. "நீ.. பெயிண்டிங் ஆர்டிஸ்ட் ஷிவா ஐயங்கார் தான.. ??" என்று கண்கள் மின்ன கேட்கும் அவளை பார்த்திருந்த ஷிவாக்ஷிக்கு எல்லாம் தானாய் விளங்கியது..
ஷிவாக்ஷி ஓவியங்களில் சில பல சாதனைகளை எளிதாக முறியடித்தவள்.. கலை உலகில் ஷிவா ஐயங்காராக பெயரை வைத்துக் கொண்டாள்..
ஷிவாக்ஷி இவ்வளவுதான என உணர்வுடன் எந்த ஒரு உணர்வின்றி..
"ஆமா.. அது நாந்தான்.. " என கூறிய மறுநிமிடம்.. வர்ஷா அவளை கட்டியணைத்தபடியே இருவரும் கட்டிலில் விழுந்தனர்.. இதை எதிர்ப்பாக்காத.. ஷிவாக்ஷி சற்று திணறிதான் போனாள்..
ஜானவி ஷிவாக்ஷியை வர்ஷாவிடமிருந்து பிரித்தவுடன்..
ஷிவாக்ஷி.. "கிருஷ்ணா.. " என முனகிக்கொண்டே எழுந்தாள்.. அதேசமயம்..
வர்ஷா.. மகிழ்ச்சியில் கால்கள் தரையில் நில்லாமல் "ஐயோ.. அது நீங்க தான.. நா உங்களோட பெரிய விசிறி.. உங்க பெயிண்டிங்ஸ், ஆர்ட்ஸ் எல்லாம் சாண்ஸ்லெஸ்.. என்ன ஒரு அழகான கற்பனை.. " என மேலும் கூற போனவளை தடுத்து நிறுத்தினாள்
ஷிவாக்ஷி.. "ப்ளீஸ்.. ப்ளீஸ்.. நீங்க இப்படி சொல்றளவுக்கு.. நா ஒன்னும் பண்ணல.. இத அப்படியே விட்ருங்கோளேன்.. " என்று கூச்சத்தில் நெளிந்தாள்..
வர்ஷாவை முந்திக்கொண்டு
"என்ன.. இப்படி சொல்டிங்க.. உங்க பெயிண்டிங்ஸ்.. எல்லாம் நானும் பாத்துருக்கேன்.. ரொம்பவே அற்புதமா இருந்துச்சு.. " என்று ஜானவி வர்ஷா கூற வந்ததை கூறி முடித்தாள்..
வர்ஷா
"நீங்க.. எனக்காக.. ஒரு பெயிண்டிங் கண்டிப்பா வரைஞ்சு தரனும்.. ப்ளீஸ்.. ப்ளீஸ்.. ப்ளீஸ்.. ப்ளீஸ்.. " என ஷிவாக்ஷியிடம் கொஞ்சியபடியே கெஞ்ச..
"அச்சோ.. வரைஞ்சு தா அப்படின்னு சொன்னாலே.. வரைஞ்சு தருவேன்... ப்ளிஸெல்லாம் எதுக்கு.. " என ஷிவாக்ஷி வர்ஷாவிடம் ஒவியம் வரைந்து தருவதாக சொல்லாமல் சொல்லியதை கேட்ட வர்ஷா ஷிவாக்ஷியை கட்டியணைத்து அவளின் கண்ணத்தில் முத்தமிட்டு விட்டு குதித்து கொண்டே ஓடினாள்..
"சாரிப்பா.. அவளுக்கு பெயின்டிங்ஸ் ரொம்பவே பிடிக்கும்.. அதான் இப்படி.. தப்பா நினைக்காதே.. " என்று ஜானவி வர்ஷாவிற்காக பேசியதை கேட்டதும் பதறிய ஷிவாக்ஷி.. "ஹேய்.. நீ என்னப்பா .. ?? இதுல தப்பா நினைக்க.. ஒன்னும் இல்ல.. " என்று ஷிவாக்ஷியின் மொழியை கேட்டதும் இதழ்கள் விரிய.. ஷிவாக்ஷியை மாலை நலங்குக்கு தயாராகும் படி கூறிச் சென்றாள்..
ஜானவி கூறியபடி ஷிவாக்ஷி கேட்ட அனைத்துப் பொருளும் நேரத்திற்கு வந்து சேர்ந்ததும்.. குளியலறையிலும் ஆடம்பரம் வாயை பிளக்கவே செய்தது... இருப்பினும் விரைவாக தயாராக விழைந்தாள்..
மாயா அறையில் செயற்கை அலங்காரத்தில் மிளிர்ந்து கொண்டிருந்தாள்.. அவளின் தோழிகளின் கிண்டலும் கேளியும் பெற்றுக் கொண்டே ஒப்பனை செய்து கொண்டிருந்தாள்..
மாயாவின் போனில் அன்நௌன் நய்பரிலிருந்து கால் வரவே.. சிறிது யோசித்த பின் எடுத்துப் பேசினாள்..
"ஹலோ.. மாயா.. ஸ்பீக்கிங் ஹீயர் " என்று பேச்சை ஆரம்பித்தாள்..
"ஹலோ.. ஹலோ.. ???" என்றிருந்த மாயாவிற்கு எரிச்சல் வர.. போனை வைக்கப் போன மாயாவின் செவிகளில்.. ஒர் ஆணின் அழுகுரலே யாரென உணர்த்தியது.. மனம் சற்று பயந்தாலும் சுற்றியும் ஆட்கள் இருக்கவும் வெளியே காண்பிக்காமல் "சிக்னல் கிடைக்கல்லை.. கொஞ்சம் வைட் பண்ணுங்க.. " என்று சிக்னல் இல்லாததைக் போல் பாவ்லா செய்து ஒப்பனைக் காரரிடம் கூறிவிட்டு அவர்கள் அனைவரையும் விட்டு வெளியே வந்தவள் யாராவது இருக்கிறார்களா.. ?? என பார்த்து விட்டு.. "ஹலோ.. " என்க..
"மாயா.. உன்ன கண்டபடி திட்டலாம்னு தான்.. ஹலோ.. பண்ணேன்.. உன்னோட வாய்ஸ் கேட்டதும் என்னால திட்டக் கூட முடியலடி.. நான் உன்ன அவ்ளோ லவ் பண்றேன் டி புரிஞ்சுக்கோ.. " என மறுபக்கத்திலிருந்த ஒருவன் தான் ஆண் என்பதை மறந்து கதறி அழுதான்..
அவனின் மொழிகளை கேட்டவள்
"ஹல்லோ.. யார் நீ.. ?? என்ன வேணும் உனக்கு.. ??" என்று கடுகடுத்தாள்...
"என் வாய்ஸ் கேட்டும்.. எல்லாமே சொன்னதுக்கு அப்பறம் கூட நா யார்ன்னு உனக்கு தெரியலல்ல.. ?? அந்த அளவுக்கு காசு உன்னோட கண்ண மறைச்சுருச்சுல.. " என்று விரக்தியில் மொழிந்தது அந்த ஆணின் குரல்.. மாயா மௌனம் சாதித்தாள்.. அவள் ஏதும் பேச போவதில்லை.. என்று தெரிந்தாலும் கடைசி முறையாக முயற்சித்தான்..
"சரி.. இப்ப கூட ஒன்னுல்ல.. நீ ஒரு வார்த்தை ஒரே ஒரு வார்த்தை சொல்லு.. இப்பவே அங்க வரேன்.. நா உன்ன நல்லா பாத்துப்பேன்.. டி.. என்ன நம்பு டி.. இந்த கல்யாணம் உனக்... " என அக்குரல் முடிக்கும் முன்னரே..
மாயா குறுக்கிட்டாள்.. "ஏய் மூடு.. " என கோபத்தில் சத்தமாக கத்திய மாயா.. பின்புணர்ந்து.. மெதுவாக பேசலானாள்.. "என்னடா.. என்ன.. ?? ஏதோ காலேஜில அந்த டைம்ல .. அந்த வயசுல உன் மேல வந்ததது லவ்னு நெனச்சேன்.. ஒத்துக்கறேன்.. உன் கூட ஊரூரா.. சுத்துனேன்.. அதுக்கு என்ன இப்போ.. ?? இதுவரைக்கும் நானா கூப்பட்டதில்லை.. நீ வா என் கூட.. அப்படின்னு.. இது என் லைஃப் நாந்தான் முடிவு பண்ணுவேன்.. உன் கூட வாழலாமா.. ??? வேணாமான்னு.. ??? நாந்தான் உன்ன வேணாண்ணு சொல்டேன்ல.. அப்புறம் என்ன.. ?? " என சிறிது இடைவெளிக்குப் பிறகு.. "இங்கப் பாரு.. இதுக்கப்பறம் எனக்கு போன் பண்ணி.. வரவா.. வரட்டுமா.. ?? அப்படின்னு கேட்டேன்னு வை.. விளைவுகள் ரொம்ப விபரிதமா இருக்கும் .. ஜாக்கிரதை.. " என்று போனை கட் செய்தவள்.. மீண்டும் தோழிகளோடு அரட்டை அடித்தப்படியே ஒப்பனை செய்து.. நலங்குக்கு தயாரானாள்..
"அப்ப ஏன்டி லவ்வ சொல்லி ஆசைய தூண்டுன.. ??? நான் பாட்டுக்கு இருந்தேன்.. என்னைய லவ் பண்ண வைச்சு.. இப்ப உனக்காக ஏங்க வைச்சுட்டியேடி.. " புலம்பியவாரே கதறி அழுதான்.. அக்குரலின் சொந்தக்காரன்.. பின்பு ஒர் முடிவுடன் எழுந்து.. தன் கண்களை துடைத்தவன்.. "உன்ன யாருக்காகவும் எதுக்காகவும் விட்டு கொடுக்க மாட்டேன் மாயா.. நீ எனக்குத் தான்.. பாக்குறேன் டி.. நாளைக்கு எப்படி இந்த கல்யாணம் நடக்குதுன்னு.. ??" என்றவன் வில்லங்கமாக சிரித்து இத்திருமணத்தை தடுப்பதற்கான வேலைகளில்.. இறங்கினான்..
_____________
(Hiii.. guyzzz.. theriyum meedum ungalin gaandode ungalai sandhikirean.. kashtapattu 10 episode successful aa konduvantean.. tq to all and everyone.. for supporting.. me.. and ivalum oralavukku story yezhidhura apdinu nenachu enakku vote podum All gud ullamzz.. tq.. plz supporting me.. long ud ya dhan kuduthu irukean sollunga.. epdi irukkunu.. 🥰😘)
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro