பெண்ணிண் சம்மதம்
*POSITIVE THINKING...💭*
💞 *இனிமையான இல்லறம்* 💞
👰🏻 *திருமணத்திற்கு பெண்ணின் சம்மதம் அவசியம்...*
பெண்ணுக்குத் திருமண வயதாகிவிட்டது. காலாகாலத்தில் அவளை யாராவது ஒருவன் கையில் பிடித்துத் தர வேண்டும். அதோடு நம் கடமை முடிந்துவிட்டது,'' என்று நினைக்கும் பெற்றோர், தங்கள் விருப்பத்திற்கு ஒரு மாப்பிள்ளையைப் பார்த்து, அவனைப் பெண்ணுக்குப் பிடித்திருக்கிறதா? இல்லையா? என்றுகூட கேட்காமல் மணம் முடித்து விடுகின்றனர்.
பெண்ணும் பெற்றோரை எதிர்த்துப் பேச முடியாமல், அவர்கள் பார்த்த மாப்பிள்ளையை மணம் முடித்துக்கொள்கிறாள். விளைவு... திருமண வாழ்க்கை சில நாட்களிலேயே கசந்து விடுகிறது.
பெண்களை அவர்களது விருப்பமில்லாமல், ஆண்கள் திருமணம் செய்யவே கூடாது என்கிறது இஸ்லாம். "விசுவாசிகளே! பெண்களை (அவர்கள் உங்களை விரும்பாமல் வெறுக்க, அவர்களை) பலவந்தமாக அடைவது உங்களுக்கு ஆகுமானதல்ல,'' என குர்ஆனில் சொல்லப் பட்டுள்ளது.
மேலும், மணப்பெண்கள், தனக்கு மணமகனைப் பிடித்திருக்கிறது என மனப்பூர்வமாக ஒப்புதல் தரவேண்டுமென்றும், அவள் அந்த மணமகனை திருமணம் செய்ய விரும்பவில்லை என்றால், பலாத்காரமாக திருமணம் செய்து வைக்கக்கூடாது என்றும் எச்சரிக்கிறது.
பெண்களின் சம்மதம் இல்லாமல் நமதூரில் எத்தனை திருமணங்கள் நடக்கின்றன.
இதனால், திருமணம் நடந்த பின்,
சிறிது காலத்திலேயே எத்தனை விவாகரத்துகள் நடக்கின்றன.
நபி (ஸல்) அவர்கள் காட்டித்தந்த வழிமுறைப்படி, கன்னிப்பெண்ணாக இருந்தாலும்,
விதவை பெண்ணாக இருந்தாலும்,
தனக்கு தேர்வு செய்யப்படும் மணமகனை தனக்கு பிடித்துயிருக்கிறதா?
என்ற சம்மத்தை பெண்ணிடம் சம்மதம் பெற வேண்டும்..
ஹதீஸ் ...
கன்னிப் பெண்ணாயினும், விதவையாயினும் சம்மதம் பெற வேண்டும் என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறிய போது கன்னிப் பெண் (சம்மதம் தெரிவிக்க) வெட்கப்படுவாளே என்று கேட்டேன்.
அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அவளது மௌனமே அவளது சம்மதமாகும் என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)
நூல்: புகாரி 6971, 6964, 5137
என் தந்தை எனது சம்மதம் பெறாமல் மணமுடித்து வைத்தார்.
அதனை விரும்பாத நான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் வந்து இதைக் கூறிய போது, அத்திருமணத்தை ரத்து செய்தார்கள்.
அறிவிப்பவர்: கன்ஸா பின்த் கிதாம் (ரலி)
நூல்: புகாரி 5139, 6945, 6969
பெண்ணுக்கு திருமணம் செய்து வைக்கும் விஷயத்தில் பெற்றோர்கள், குர்ஆன் சொல்லும் கருத்துக்களை கண்டிப்பாக பின்பற்றி நடந்து கொள்ள வேண்டும்.
💓💗💓💗💓💗💓💗💓💗💓
- - Forward message - -
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro