பெண்களை மதிப்போம்- 2
பெண் ஆணை விட இருபது சதவீதம் எடைக்குறைவு. அவனைப் போல வேகமாக ஓடவோ தாவவோ முடியாது. கால்களில் பலம் குறைச்சல். இதயமும் சுவாசப்பையும் அவளுக்குக் கொஞ்சம் சின்னது. வியர்வை அதிகம். சின்ன வயதிலிருந்தே ஆணைவிட அவள் அதிகம் புன்னகை செய்கிறாள். ஆணைவிடச் சிறிய பொருட்களை விரும்புகிறாள். சின்ன குடைகள், சின்ன பர்ஸ்கள், கைக்குட்டை கூட சின்னது. சைக்கிள், ஸ்கூட்டி போன்ற சின்ன வாகனங்கள். இப்படியே அவள் பயன்படுத்தும் அத்தனை வஸ்துக்களும் சிறியது.
புத்தகங்களை எப்;போதும் நெஞ்சோடுதான் அணைத்துச் செல்வாள். ஆண்களைப் போல் பக்கவாட்டில் இல்லை. அவளுடைய எலும்பு அமைப்பு நளினமானது. தசை நார்கள் முப்பது சதவீதம் வலிமை குறைவு. தொண்டை சின்னது. அதனால் கீச்சுக்குரல், இடுப்பு கொஞ்சம் (பிறப்புக்கு வழி பண்ண) பெரிசு.
அவள் ரத்தத்தின் அடர்;த்தி கொஞ்சம் குறைவு. அதில் ஹிமோக்ளோபின் குறைவு. நாடித்துடிப்பு ஆண்களை விட அதிகம். படக்கென்று வெட்கப்பட்டு கன்னம் சிவப்பாள். அவள் உடலில் கால்சியம் ஸ்திரமாக அமைவதில்லை. மாதவிலக்கின் போதும், கர்ப்ப காலத்திலும் அவள் நிறைய கால்சியம் இழக்கிறாள். அதனால் தைராய்ட்ட சுரப்பி பாதிக்கப்பட்டு எண்டாக்ரின்களால் நரம்புகள் பாதிக்கப்பட்டு அவள் ஆணை விடக் கொஞ்சம் அதிகமாக உணர்ச்சி வசப்படுகிறாள். அதிகம் அழுகிறாள். அதிகம் சிரிக்கிறாள். அதிகம் கவலையும் கொள்கிறாள். ஆயுட்காலம் ஏறக்குறைய ஆண்கள் அளவுதான். ஆனால் அதிக தினங்கள் உடல்நலமில்லாமல் இருக்கிறாள். தன்னை ஒழுங்காகக் கட்டுப்படுத்திக் கொள்ள முடியாத நாட்கள் தான் அவளுக்கு அதிகம். போதுமா.. ? இத்தனை குறைபாடுகள் அவளுக்குள் இருப்பதால்தான் அவள் ஆணைச் சார்ந்திருக்கிறாள்.
"ஆண்கள் பெண்களை நிர்வாகிக்கின்றவர்கள். ஏனென்றால் அவர்களில் சிலரை (ஆண்களை) சிலரை (பெண்களை) விட அல்லாஹ் சிறப்பாக்கி வைத்திருக்கின்றான்''. (குர்ஆன் 4:34)
இவ்வளவு கஷ்டத்துடன்தான் பெண்களின் வாழ்க்கை ஒவ்வொரு நாளும் தன் குடும்பத்தோடு பின்னி பிணையப்பட்டுள்ளது. இந்நிலையில் ஒரு பெண் தன் கணவனுடைய ஒத்துழைப்பை பெரிதும் எதிர்பார்க்கிறாள். கிடைக்காது போது உணர்ச்சி வயப்படுகிறாள். இதே மாதிரி கணவனும் சில வேண்டுதல் மனைவியிடம் கேட்காமலேயே எதிர்ப்பார்க்கிறான்.
"உங்கள் மனைவிகள் உங்களுக்குரிய பண்ணை. ஆகவே உங்கள் பண்ணைக்கு நீங்கள் விரும்பியவாறு சென்று உங்களுக்கு (வேண்டிய சந்ததியையும் நன்மைகளையும் தேடி) முற்படுத்திக் கொள்ளுங்கள்''.
இன்னும் சிலருக்கு 'எக்ஸிபிஷனிஸம்' என்கிய மனநோய் தொற்றி இருக்கலாம். 1877;ல் முதன்முதல் லாஸ்கி என்பவரால் ஆய்வு செய்யப்பட்ட மனநோய். தம் ஜனன அந்தரங்க உறுப்புகளை மற்றவர்களுக்குக் குறிப்பாக எதிர்பாலினத்தைச் சேர்ந்தவர்களுக்கு காட்டுவதிலேயே இனச்சேர்க்கை இச்சைகளைத் தீர்த்துக் கொண்டு நிறைவு ஏற்படுவது. இது சம்பந்தப்பட்ட துறையில் இக்குற்றத்தை 'இன்டீஸண்ட்.எக்ஸ்போஷன்' என்று சொல்கிறார்கள்.
இதுபற்றி குர்ஆனில் அல்லாஹ்:
"(நபியே) விசுவாசிகளான பெண்களுக்கு நீர் கூறுவீராக தங்கள் பார்வைகளை அவர்கள் தாழ்த்திக் கொள்ளவும். தங்க்ள மர்மஸ்தானங்களையும் பேணிப் பாதுகாத்துக் கொள்ளவும். அதினின்று வெளியில் தெரியக்கூடியவைகளைத் தவிரதங்கள் (அலங்காரத்தை) அவர்கள் வெளிப்படுத்த வேண்டாம். தங்கள் முந்தானைகளை தம்மேல் சட்டைகளின் மீது போட்டு (தலை, கழுத்து மார்பு ஆகியவற்றை மறைத்து)க் கொள்ள வேண்டும்".
இப்பிரச்சனையுள்ள பெண்களுக்கு நமது மார்க்கத்தின் மேன்மையையும் அல்லாஹ்வின் எச்சரிக்கையும் எடுத்து சொல்ல வேண்டும்.
"மேலும் பெண்களுடன் கண்ணியமான முறையிலும் (சகிப்புத்தன்மையுடனும்) நடந்து கொள்ளுங்கள். அவர்களை நீங்கள் வெறுத்த போதிலும் சரியே! ஏனென்றால் நீங்கள் வெறுக்கும் ஒன்றில் அல்லாஹ் அநேக நன்மைகள் வைத்திருக்கலாம்''.
எனவே குழந்தைகளை வளர்ப்பதில் ரொம்பவும் கவனமாக கண்காணித்து வளர்க்க வேண்டும். குறிப்பாக குழந்தைப்பருவத்தில் அறியாமையால் செய்யக்கூடிய இந்த செயல்பாடு நாளடைவில் மனரீதியாக பெரும்பாதிப்பை ஏற்படுத்துவதால் பெற்றோர்கள் இந்த விஷயத்தில் கவனம் செலுத்த வேண்டும்.
மேலும் ஒரு பெண்ணின் கர்ப்பத்தை மூன்று - மூன்று மாதங்களாக (ட்ரை மெஸ்டர்களாக) பிரித்துச் சொல்வது வழக்கம். ஒவ்வொரு ட்ரை மெஸ்டரிலும் அவள் உடலிலும் உள்ளத்திலம் வௌ;வேறு மாறுதல்கள் ஏற்படுகின்றன. வெளிப்படையாக மாறுதல்கள் ஏற்படுகின்றன. வெளிப்படையாக மாறுதல் ஏற்படுவதற்கு முன் ஒரு பெண்ணுக்குச் சில சமயங்களில் உணர்ச்சி ப+ர்வமான மாறுதல்கள் தோன்றலாம். சிலருக்கு வாயில் ஒரு மாதிரியான 'மெட்டாலிக் டேஸ்ட"; ஏற்படும் திடீரென்று காபி பிடிக்காமல் போகும்.
ஒரு மாதிரி மந்தமாக இருக்கும். கோபம் வரும். கண்ணீர் வரும் அசதி, டிப்ரெஷன் பரபரப்பு என்னதான் கர்ப்பமான செய்தியைப் பற்றி சந்தோஷமிருந்தாலும் இம்மாதிரி தவிர்க்க முடியாத மாறுதல்கள் அவளில் தோன்றுகின்றன. கர்ப்பமான காலத்தில் நல்ல பிடித்துப் போன கணவனைக் கூட சிலசமயம் நோக வேண்டிய நிலை அவளுக்கு வருகிறது. இதைப்போல் காரமாக, புளிப்பாக எதையாவது சுவைக்க வேண்டுமென்ற ஆசை. இதெல்லாம் தான் மசக்கை.
வாந்தி எடுக்கிற சமாசாரம் வேறு. சுமார் 60 சதவீதம் பேருக்கு இந்த உபாதை. இதன் காரணம் விஞ்ஞானத்திற்கு இன்னும் சரியாகத் தெரியவில்லை. திடீரென்று அவள் ரத்தத்தில் ஹார்மோன் அளவு அதிகமாகிவிடுவதால் ஒரு மாதரியான 'ரியாக்ஷன்' என்கிறார்கள்.
பொதுவாக முதல் மூன்று மாதங்களுக்குள் இந்த உபாதைகள் எல்லாம் நின்று போய்விடுகின்றன.
"தன்னுடைய தாய் தகப்பனுக்கு நன்றி செய்யும்படி நாம் மனிதனுக்கு நல்லுபதெசம் செய்தோம். அவளுடைய தாய் கஷ்டத்துடனேயே அவனை(கர்ப்பத்தில்) சுமந்திருந்து கஷ்டத்துடனேயே பிரசவிக்கிறாள்.'' -அல் குர்ஆன்
இதெல்லாம் பெண்கள் பிரச்சினை இவ்வளவு கஷ்டத்துடன்தான் வாழ்க்கை அவளுக்கு இருக்கிறது... ஆண்கள் சற்று யோசியுங்கள்.
படித்ததில் பிடித்த உண்மை!
- - - This is forward message - - -
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro