🌺40🌺
இதோ மேலே இருக்கும் youtube வீடியோவில் ரைட் கார்னர் settings அருகில் உள்ள YouTube வார்த்தையை ஜஸ்ட் கிளிக் செய்து Watch on Youtubeல் வீடியோவை பார்க்கும் பொழுது கீழே இந்த நேரடி அத்தியாயத்திற்கான லிங்க் கொடுக்கபட்டிருக்கும். கொஞ்சம் சிரமம் பார்க்காமல் ரெண்டே ரெண்டே க்ளிக்கில் அழகாக படித்து மகிழ்வீர்களாம்.
______________________________________
சட்டென்று தோன்றிய எரிச்சலுடன் லேசாக முகத்தை சுளித்த அட்சயா தன் அம்மாவை ஓரவிழியில் முறைத்துக் கொண்டே, "என் மாமா போன்ற நல்ல மனிதன் கிடைத்தால் நானா வேண்டாமென்று சொல்லப் போகிறேன்? அவரை போல் முதலில் ஒருவன் கிடைக்கட்டும், பிறகு நான் என் திருமணத்தை பற்றி யோசித்துக் கொள்கிறேன்!" என்றாள் அலட்சியமாக.
அம்மா போன்ற பெண் தான் வேண்டும் என வேண்டுகோள் வைத்து காலத்திற்கும் பிரம்மச்சாரியாய் தனிமையில் வாழ்ந்த விநாயகப் பெருமான் போன்று தானும் எப்படியும் சாதித்து விடலாம் என்று கனவு கோட்டை கட்டினாள்.
"இப்படி பேசினால் எப்படிடி? உன் அத்தை மிகவும் பொறுமைசாலி என்பதால் மாமாவும் அதற்கேற்றவாறு அமைந்தான். உன்னை போன்ற அடம்பிடித்த கழுதைக்கு எல்லாம் உன் வழியில் சென்று உன்னை அடக்குபவனாக தான் வர வேண்டும்!" என்று வழக்கமான தாயாய் கமலா அதட்ட, இக்கால மகளாகிய அவள் மட்டும் அமைதியடைந்து விடுவாளா என்ன? அட்சயா வாயை திறக்கும் முன் வேகமாக சித்தார்த் முந்திக் கொண்டான்.
"ஏய்... அம்மாவும், பெண்ணும் முதலில் வாயை மூடுங்கள். வீட்டிற்கு வந்திருக்கின்ற எங்களை பேச விடாமல் உங்களுக்குள் சண்டையிட்டு கொள்கிறீர்கள்!" என்று கண்களை உருட்டினான்.
அதில் அட்சயாவின் முகம் இளக, தன் தாயிடம் தர்க்கம் செய்வதை விடுத்து மாமனிடம் ஆர்வமாய் கவனத்தை செலுத்தியவள் அருகில் இருக்கும் சிந்துவின் நமட்டுச் சிரிப்பை கவனித்து அவள் பேசியதன் உட்கருத்தை ஆராய்ந்தபடி எதையும் சமாளிக்க தான் தயார் என்பது போல நிமிர்ந்து அமர்ந்தாள்.
"அவர்கள் எப்பொழுதும் அப்படித்தான் திருத்த முடியாது, நீ சொல்ல வந்ததை சொல்லப்பா!" என்று சித்துவிடம் விசாரித்தார் பார்வதி.
"அது அத்தை... நேற்று கருணுக்காக அருந்ததியை பெண் கேட்டு ரிச்சர்டை சந்தித்து பேசினோம். அவளுடைய படிப்பும் முடிந்து விட்டதால் நம் விருப்பத்தை கூறி அவர்களின் வசதியை கேட்டோம். ரிச்சர்டுக்கும் ரொம்ப சந்தோசம், நம் குடும்பத்தில் பெண் கொடுக்க அவனுக்கு பரம திருப்தி!" என்று முறுவலித்தான்.
"பின்னே... நம் வீட்டில் வந்து வாழ அந்தப் பெண் கொடுத்து வைத்திருக்க வேண்டாமா?" என்றார் பெருமையாக.
'ஓ... கருணுடைய கல்யாண விஷயமா? இதற்கெற்கு இந்த அத்தை தேவையில்லாமல் என்னை வம்புக்கு இழுத்தார்களோ தெரியவில்லை...' என தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டாள் அட்சயா.
- part to be continued on www.deepababuforum.com
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro