🌺35🌺
இதோ மேலே இருக்கும் youtube வீடியோவில் ரைட் கார்னர் settings அருகில் உள்ள YouTube வார்த்தையை ஜஸ்ட் கிளிக் செய்து Watch on Youtubeல் வீடியோவை பார்க்கும் பொழுது கீழே இந்த நேரடி அத்தியாயத்திற்கான லிங்க் கொடுக்கபட்டிருக்கும். கொஞ்சம் சிரமம் பார்க்காமல் ரெண்டே ரெண்டே க்ளிக்கில் அழகாக படித்து மகிழ்வீர்களாம்.
______________________________________
"ஆனால்... இத்தனை தூரம் அழகாக ஒவ்வொரு விஷயத்தையும் திட்டம் போட்டு செயலாற்றுகிற நீ ஒரு முக்கியமான விஷயத்தில் தப்பு பண்ணி விட்டாய் ரிச்சர்ட்!" என்று குறுக்காக தலையசைத்தாள் சிந்துஜா.
"அப்படியா... என்ன ஆன்ட்டி அது?" என்றான் புரியாமல்.
"நீ தருணை விட ஒரு வயது தான் சிறியவன், சரியான பருவத்தில் திருமணம் முடித்திருந்தால் கூட இந்நேரத்திற்கு அருந்ததி உன்னுடன் ஒரு மூன்று, நான்கு வருடங்களாவது வீட்டில் ஒன்றாக இருந்திருப்பாள். அதேபோல் வந்தவளும் முறைப்படி மனைவி என்கிற ஸ்தானத்தில் உனக்கு தோள்கொடுத்து குடும்ப தலைவியாக பொறுப்பாய் உன் தங்கையை எங்கள் வீட்டிற்கு மருமகளாக அனுப்புவதற்கும் அனைத்து விதத்திலும் பேருதவி புரிந்திருப்பாள்!"
லேசாக பெருமூச்செரிந்தவன், "ப்ச்... எங்கே ஆன்ட்டி? நானாக தேடிச் செல்லவில்லை என்றாலும், ஐந்து வருடங்களுக்கு முன் தானாக ஒரு வாய்ப்பு வந்தது. நீங்கள் சொல்லுகின்ற திசையில் தான் நானும் யோசித்து அருந்ததியை வீட்டிற்கு அழைத்துக் கொள்ள வசதியாக இருக்கும் என்று சம்மதிக்க நினைத்தேன். ஆனால் என்னுடன் பயின்ற தோழியாக இருந்தாலும் என் நிலைமையை புரிந்துக் கொள்ளாமல் தன் குடும்பத்தினரை முன்னிறுத்தி அவளை ஏற்றுக்கொள்ள முடியாது என கூறி விட்டாள். நானும் அப்படியென்றால் திருமணம் வேண்டாம் என அவளிடம் மறுத்து விட்டேன்!" என்றான்.
"ஏன் ரிச்சி ஒரு பெண்ணையும், குடும்பத்தையும் மட்டும் சான்றாக வைத்து இது இது இப்படித்தான் என அனைத்துப் பெண்களையும் ஒதுக்கி விட்டாயா நீ?" என்றாள் லேசான அதிருப்தியுடன்.
"அச்சோ... பிரச்சினை அதுமட்டுமில்லை, எனக்கு அது கொஞ்சம் வேறு சங்கடத்தையும் கொடுத்து விட்டது. என்னுடன் பழகிய அவளே இதற்கு ஒத்துக் கொள்ளவில்லை எனும்பொழுது முகமறியா மற்றப் பெண்கள் எப்படி என் மன உணர்வுகளை புரிந்துக் கொள்வார்கள் என்கின்ற குழப்பம் தோன்றியது. வீட்டில் பெரியவர்கள் என்று யாரும் இல்லாத நிலையில் நானே நேரடியாக பெண் வீட்டினரிடம் இதைப்பற்றி எடுத்து சொல்லி திருமணத்திற்கு பெண் கேட்கவும் சங்கடமாக இருந்தது. ஏதோ நான் பெரிய குற்றம் இழைத்தது போல் ஏன் ஒவ்வொருவரிடமும் என் சூழ்நிலையை விளக்க வேண்டும் என்கிற சுயமரியாதையும் ஒரு காரணம்!"
"ம்... புரிகிறது!" என ஆமோதித்தவள், "சரிவிடு... இனி தான் குடும்பத்தில் பெரியவர்களாக நாங்கள் இருக்கிறோம் இல்லை, கவலையை விடு. உனக்கேற்றவாறு அருமையான பெண்ணாக தேடிக் கண்டுப்பிடித்து விரைவில் உன்னுடைய திருமணத்தையும் ஜாம்ஜாமென்று நடத்தி விடலாம்!" என்று உற்சாகமாக கூறினாள்.
விளக்கெண்ணெயை விழுங்க சொன்னது போல் சற்றே தடுமாறி விழித்தவன், "இப்பொழுது அதற்கென்ன அவசரம் ஆன்ட்டி? முதலில் கருண், அருந்ததி திருமணம் நல்லபடியாக முடியட்டும். பிறகு... பிறகு என் விஷயத்தில் ஏதோ ஒன்று முடிவெடுத்துக் கொள்ளலாம்!" என்று சமாளிக்கப் பார்த்தான்.
அவன் பேசப் பேச எதையோ தீவிரமாக யோசித்திருந்த சிந்து இன்டர்காமில் ஏதோ நம்பரை அழுத்தியபடி, "நோ... நோ... பிரோக்ராம் ஈஸ் நவ் டோட்டலி சேஞ்ச்டு!" என ரிச்சர்டிடம் உரைத்தாள்.
- part to be continued on www.deepababuforum.com
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro