🌺30🌺
இதோ மேலே இருக்கும் youtube வீடியோவில் ரைட் கார்னர் settings அருகில் உள்ள YouTube வார்த்தையை ஜஸ்ட் கிளிக் செய்து Watch on Youtubeல் வீடியோவை பார்க்கும் பொழுது கீழே இந்த நேரடி அத்தியாயத்திற்கான லிங்க் கொடுக்கபட்டிருக்கும். கொஞ்சம் சிரமம் பார்க்காமல் ரெண்டே ரெண்டே க்ளிக்கில் அழகாக படித்து மகிழ்வீர்களாம்.
______________________________________
கருணை குழப்பத்துடன் ஏறிட்டான் ரிச்சர்ட்.
"இந்த ஆள் ஒரே பக்கமாக பார்த்துக் கொண்டிருக்கிறாரே அங்கே தான் நானும், அருந்ததியும் முதலில் நின்றிருந்தோம். அவளை அழைத்து சென்று ஓரிடத்தில் அமர வைப்பதற்கு இவரை தான் உதவிக்கு அழைத்தேன். ஆனால் மனிதர் அருகில் வருவதற்கு அவ்வளவு யோசித்தார் வந்தவரும் பிறகு விட்டால் போதும் என்கிற ரீதியில் வேகமாக விலகி ஓடிவிட்டார். அப்பொழுதே எனக்கு அது சற்று வித்தியாசமாக தெரிந்தாலும் சந்தேகம் தோன்றவில்லை. யாரையும் சட்டென்று அப்படி அலட்சியப்படுத்தி விடக்கூடாது என நீங்கள் அன்று கூறியிருந்ததால் ஒருவேளை இவராக இருக்குமோ என்கிற உறுத்தல் தற்பொழுது தோன்றுகிறது!" என்றான் கருண் விளக்கமாக.
ம்... என்றபடி திரையில் தெரிந்த மனிதரை கூர்ந்தவாறு லேசாக பின்னால் சரிந்து தாடையை தடவிய ரிச்சி, சட்டென்று நேராக அமர்ந்து அதை ஸ்க்ரீன்ஷாட் எடுத்தான்.
"எனக்கும் இந்த மனிதரை யாரென்று அடையாளம் தெரியவில்லை கருண், ஒருவேளை அருந்ததிக்கு அறிமுகமானவரா என கேட்கலாம். ஆம் என்றால் இந்த ஆளுடைய பின்புலம் பற்றி விசாரித்து என்ன ஏதுவென்று காரணமறிந்து எச்சரித்து வைக்க வேண்டும். அப்படி இவர் இல்லையென்றால்... வேறு யார் அந்த சம்பவத்திற்கு காரணம் என தீர விசாரித்து தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்!" என்றபடி தனது அலைபேசியில் அருந்ததியின் நம்பரை டயல் செய்தான்.
மறுமுனையில் அவள் பிக்கப் செய்யவும், "ஹலோ அருந்ததி..." என விளித்தான்.
"ஆங்... அண்ணா சொல்லுங்கள்!"
"நான் உன்னுடைய வாட்ஸ்அப்பிற்கு ஒரு புகைப்படம் அனுப்புகிறேன். அவரை எதுவும் உனக்கு முன்பே தெரியுமா என கொஞ்சம் பார்த்து சொல்!" என்று லைனை கட்செய்தவன் அவளுடைய எண்ணிற்கு அந்த ஸ்க்ரீன்ஷாடை அனுப்பினான்.
நிமிடங்கள் கடந்ததே தவிர அவளிடமிருந்து அழைப்பு வரவில்லை எனவும் சந்தேகம் கொண்டு அவளுக்கு கால் செய்தால் எடுத்தவள் மெல்ல அண்ணா என முனகினாள்.
அவளின் குரல் பேதத்தை வைத்தே பதிலை ஊகித்தறிந்தவன், "யார் அந்த ஆள்?" என்றான் நேரிடையாக.
ரிச்சர்டின் முகத்தில் வெளிப்பட்ட ஆக்ரோஷத்தையும், கடுகடுப்பையும் கண்டு திரையில் உள்ள மனிதன் தான் பிரச்சினைக்கு காரணமானவன் என புரிந்துக் கொண்டான் கருண்.
- Part to be continued on www.deepababuforum.com
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro