🌺28🌺
இதோ மேலே இருக்கும் youtube வீடியோவில் ரைட் கார்னர் settings அருகில் உள்ள YouTube வார்த்தையை ஜஸ்ட் கிளிக் செய்து Watch on Youtubeல் வீடியோவை பார்க்கும் பொழுது கீழே இந்த நேரடி அத்தியாயத்திற்கான லிங்க் கொடுக்கபட்டிருக்கும். கொஞ்சம் சிரமம் பார்க்காமல் ரெண்டே ரெண்டே க்ளிக்கில் அழகாக படித்து மகிழ்வீர்களாம்.
______________________________________
ரிச்சர்டின் பார்வை வீச்சில் நெற்றியை சுருக்கிய அட்சயா, என்ன என்பது போல் புருவங்களை மேலேற்றி கீழிறக்கினாள்.
சட்டென்று தன்னை சுதாரித்தவன், "சாரி ஒயிட் காலரோ எந்த வேலையோ... ஆனால் ஆகமொத்தம் உங்கள் அளவிற்கு எல்லாம் விளையாடுவதற்கு எனக்கு திறமை கிடையாது!" என்று அவளை விழியால் சீண்டி தோள்களை குலுக்கினான்.
அவனை சவாலாக நோக்கியவள், "ஓஹோஹோ... மறந்து விட்டேன் பாருங்கள். உங்களுக்கு விளையாடவெல்லாம் தெரியாது நடு ரோட்டில் நடந்து கொண்டே உடற்பயிற்சி செய்ய மட்டும் தான் தெரியும் இல்லை?" என்று அழகாக உதடுகளை விரித்தாள்.
'அடிப்பாவி... எங்கே இருந்து எங்கே தாவி விட்டாள் இவள்?' என மலைத்தான் ரிச்சர்ட்.
"என்ன சம்பந்தமே இல்லாமல் உளறுகிறாய் நீ?" என்று வினவினான் கருண்.
அதை நான் சொல்கிறேன் என்று வேகமாக ஆரம்பித்த ரிச்சி தன்னை கேலிப் புன்னகையோடு நோக்கி கொண்டிருந்தவளிடம் ஒருமுறை பார்வையை வீசி விட்டு அன்று நடந்ததை விளக்கமாக கூறினான்.
"இதுதான் பிரச்சினை, கை வலியால் அப்படி சுழற்றி விட்டேன் என்று சொல்லியும் நம்பாமல் என்னிடம் ஒரே சண்டை. அன்று அவர்களை சமாதானப்படுத்துவதற்குள்..."
"இருங்கள்... இருங்கள்!" என அவனை தடுத்த கருண், "உங்களுக்கு என்ன வயதாகிறது?" என்று சம்பந்தமில்லாமல் கேள்வி எழுப்பினான்.
அனைவரும் என்ன என்று கூவ, "அட... நீங்கள் எல்லோரும் அமைதியாக இருங்கள், ம்... நீங்கள் சொல்லுங்கள்!" என்றான்.
"ஏன்? முப்பத்திமூன்று!" என்றான் குழப்பத்துடன்.
அட்சயாவிற்கு விஷயம் புரிந்து லேசாக இதழைக் கடித்தாள், "கிட்டத்தட்ட என் அண்ணாவின் வயது அவள் உங்களை விட ஐந்து வயது சிறியவள், முன்பின் தெரியாதவர்களை போல மரியாதை கொடுத்து எல்லாம் பேசத் தேவையில்லை!" என்று அறிவுறுத்தினான் கருண்.
- Part to be continued on www.deepababuforum.com
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro