பெட்டையாடே நீ எங்கே !
"ஏண்டி ருக்கு, நீ நெசமாத்தான் சொல்லுதியா.
அந்த பெட்டிக்கிட்ட எதுகேட்டாலும் சொல்லிருமா.. எனக்கு ஒன்னும் புடிபடலையேடி"..
'ஏத்தா நானனென்ன டவுனு பள்ளிக்கூடத்திலேயா படிச்சிருக்கேன், உனக்கு புரியராப்புல சொல்லுரதுக்கு. அன்னைக்கு தண்ணி புடிக்கிறப்ப மாணிக்கண்ணன் பேத்தி தேனுதான் சொல்லுச்சு. அந்த பொட்டிகிட்ட கேக்குற மாதிரி கேட்டா, எல்லாத்துக்கும் விடை வருமாம் '
"அதுக்கெப்படி டி தெரியும், நம்ம ஊருக்குள்ள குறிச்சொலுமே பூவாத்தா அது மாதிரியா?"
'ஏதோ ஒரு தடவை தெரியாம வந்து உங்கிட்ட சொல்லிட்டேன். அதுக்குனு இதையே பேசி மூணு நாளா என்னை உலுக்கி எடுக்கிற. உனக்கு என்னதான் வேணும்..'
"செத்த எங்கூட அந்த புள்ளை வீடு வரைக்கும் வரியா, எனக்கு ஒரு யோசனை கேக்கனும்"
'ஐயோ ஆத்தா நான் மாட்டேம்பா நீ வேணா போய் கேட்டுக்கிடு, அனைக்கே நாந்தேன் அந்த பெட்டிய உத்து உத்துப் பார்த்தேனு அந்த புள்ளை என ஒரு முற முறைச்சு பாரூ...நானு பின்னூகூடி ஓடியாந்தட்டேன்...'
"பாத்தா என்னடி ஆகப்போகுது.. சுளுவா பிரக்காபக்கமா போயிட்டு வந்துடலாம்.."
'வயசானவ துணைக்கு கூப்பிறேனு வரேன், ஆனா அந்த புள்ளகிட்ட நீதேன் பேசனும்.. இங்கனையே சொல்லிப்புடேன்..'
"ஆமாடி நான் வயசானவ, நீ முந்தாநாளுதான் சமஞ்சபாரு.. சும்மா நின்னு வாயளக்காம.. எட்ட விரசா போட்டு வா"
*
"என்னது நம்ம ஊரு ரம்பையும் ஊர்வசியும்.. ஒன்னா ஜோடிபோட்டு வந்துரிக்கீக"
'இல்லபுள்ள, இந்த குருவம்மா கிழவிதான் உன்கிட்ட எதை ரோசனை கேக்கணும்னு சொல்லி என்ன கூடியாந்துச்சு..சொல்லுத்தா ஏன் சும்மா என்வாய பார்த்திட்டு நிக்கிற'
"ஏத்தி தேனு உங்கிட்ட எதோ குறிசொல்லுற பொட்டி இருக்காமே?"
"என்னது குறிசொல்லுற பெட்டியா.. அப்படி எதும் இருக்கா என்ன? "
'அனைக்கு எங்கிட்ட காட்டுனியே, கருப்பா.. டி.வி மாதிரி படமெல்லாம் வருமே..ஆத்தா அததான் சொல்லுது.. '
'அட விஷகிருமிகளா.. என் லேப்டாப்க்கா இப்படி பேரு வச்சுறீக்கீங்க..இப்போ அது எதுக்கு உங்களுக்கு?'
"அது நம்ம சீனியம்மா பேரன், மூணுநாளைக்கு முன்ன ஆட்ட பத்திட்டு போயிட்டு வரப்ப ரெண்டு பெட்டையாட்ட தொலச்சிபுட்டான், அதுக்கு அவ அடிச்சிபிட்டானு எங்கவூட்டு திண்ணையில ரெண்டு நாளா சாப்பிடாம கிடக்கறான். நீ கொஞ்சம் அந்த பெட்டிக்கிட்ட கேட்டு அந்த ஆடு ரெண்டும் எங்க போச்சுனு கேட்டு சொல்லேன்... உனக்கு புண்ணியமா போகும்"
'என் ஆண்டிபட்டி அலமேலுகளா... உங்க அறிவுல எனக்கு மேலேல்லாம் சிலுக்குது. அதுல நீங்க சொல்லுறதெல்லாம் கண்டுபிடிக்க முடியாது.. எனக்கு கோவம் வரதுககுள்ள பேசாம ஓடிப்போயிருங்க அம்புட்டுத்தான்.. "
"அடிபோடி என்னவோ ஊருகுள்ள இல்லாத அதிசயத்தை வச்சிருக்கமாதிரி ரொம்ப அலட்டிகிறியே.. நீ வா ருக்கு நாம கருப்பன்கோயிலுக்கு போய் கேட்டுக்குவோம்.
என்ன இருந்தாலும் நம்ம சாமியாரு கிட்ட வெத்தலைல மைபோட்டு கேட்கிற மாதிரி இதுகிட்ட கேட்க முடியாது போல.. "
*****
Kanmanies..just felt to share something such little munchy short stories with you all.. Let me know your feedback...
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro