முன்னுரை
சமத்துவம்
இதன் பொருளை அகராதியின் படி நம்மால் கூறிவிட இயலும். ஆனால் நடைமுறையில் இது நமது சமூகத்தில் எந்த அளவு முழுமையாக பின்பற்றபடுகிறது என்பது கேள்விகுறியே.
சமூகம் என்பது நீங்களும் நானும் நமது நட்பும், உறவும் தான். மேடை பேச்சாளர்கள் போல அலங்காரமாய், வாய் தோரணமாய் பேசுவதும், சமூக வலை தளங்களில் பலரின் கவனத்தையும் பாராட்டையும் பெற மட்டுமே சமத்துவம் எனும் துருப்புச் சீட்டை பலர் இப்போதெல்லாம் கையாள்கின்றனர்.
நான் எனது குடும்பத்தில், நெருங்கிய சொந்தங்களில், நட்பு வட்டத்தில், சமூகத்தில் நேரில் பார்த்த சம்பவங்களின் தாக்கத்தால் இந்த குடும்ப வன்முறை - domestic abuse/violence என்ற மைய கருத்தை கொண்ட கதைகளை எழுதி வருகிறேன் (அ) முயற்சிக்கிறேன்.
ஒரு வீட்டின் நான்கு சுவற்றுக்குள், ஒரே கூரையின் கீழ் வசிக்கும் ஒரு குடும்பத்திற்ககுள்ளாகவே எத்தனை பாகுபாடுகள்? இந்த பாகுபாட்டிற்கு பெரும்பாலும் ஆளாவது பெண்களே.
ஆண்களை குடும்பத்தலைவராக/ குடும்பத்தின் மையமாக கொண்ட வாழ்க்கை முறையை பெரும்பாலும் எல்லா நாட்டவருமே பின்பற்றுகின்றனர். அது தவறில்லை.
ஆனால் ஆண்கள் மட்டுமே மதிப்பிற்குறியவர்கள் என்றும், பெண்கள் அவர்களுக்கு ஏவல் செய்ய பிறந்தவர்கள் போலவும், இன்ன பிற இன்னல்களுக்கு ஆளாக்கபடுவதுமே விவாதத்திற்கும் வருத்தத்திற்கும் உரியது.
"ஆமா பொண்ணுன்னா வீட்டையும் புள்ளைகளையும் பாத்துகிறது தான அவ வேலை அதனால என்ன? கொறைஞ்சா போயிடுவீங்கன்னு" கேக்கறவங்களுக்கும்...
"மாமியா, மாமனாரு, புருசன் எல்லாரும் திட்டுறதும் கோவிக்குறதும் சகஜம். இதுக்கெல்லாமா கொடி பிடிப்பாங்க?" என அங்கலாய்ப்பவர்களும்...
"வெளிய வேலை மேல போற ஆம்பிளைங்க கோவத்தை வேலை செய்யிற இடத்துலையா காட்ட முடியும்? நம்மளாண்ட தான் காட்டுவாங்க அனுசரிச்சு தான் போகணும்"
"அடிக்கிற கைதான அணைக்கும்" என சப்பை சால்ஜாப்பு சொல்லும் தாய்மார்களுக்கும்...
"பொம்பளை புள்ளை சும்மா என்ன ஊரு சுத்துறது? காலம் கெட்டு கிடக்கு, பொறுக்கி பசங்க சந்துக்கு சந்து நின்னுகிட்டு நோட்டம விடுறதும், பல்லை காட்றதும்... உன்னை ஒருத்தன் கையில புடிச்சு குடுக்கற வரை அடங்கி ஒடுங்கி வீட்டுல கிட... கல்யாணத்துக்கு பிறகு உன் பாடு உன் புருஷன் பாடு, எனக்கு தொல்லை விட்டுது..."
தறிகெட்டு பொறுக்கியாய் சுத்தும் ஆண்பிள்ளைகளை கண்டிக்காமல் பெண்களை வீட்டில் இன்றளவும் முடக்கிவைக்கும் நியாயஸ்தர்களுக்கும்...
"இதெல்லாம் நாம அக்கம் பக்கத்துல இல்ல நம்ம குடும்பத்துல பாக்கததா? இதென்ன புதுசா? எங்க அம்மா, அவுங்க அம்மா, நானு, நம்ம குடும்பத்து பொண்ணுங்க எல்லாமே இப்படிதான குடித்தனம் பண்ணுனோம்? நீ என்னடி வெள்ளக்காரிக்கு பொறந்த மாதிரி புதுசு புதுசா நியாயம் பேசுற?"
இப்படி பல விதத்திலும் பெண்கள் வீட்டில் துன்புறுத்தபடுவதை நியாயப்படுத்தி, நியாயப்படுத்தி அதுவே நடைமுறை/ வாழக்கை முறை என மனதில் பதிய வைக்கப்பட்டுவிட்டது.
Mentally and socially conditioned
🔆🔆🔆🔆🔆
தன் குடும்பம், பிள்ளைகளின் வளர்ப்பு, படிப்பு, எதிர்காலம், குடும்பத்தினரின் ஆரோக்கியம், உறவுகள், அனைவரின் சந்தோஷம், ஒற்றுமை, கடமைகள் என எல்லாவற்றிற்கும் முக்கியத்துவம் கொடுக்கும் ஒரு பெண் தன்னை மட்டும் பின்னுக்கு தள்ளிவிடுவது ஏன்? அல்லது தள்ளப்படுவது எதனால்?
அவளோட தேவைகளை புறக்கணிக்க காரணம் என்ன?
நான் சொல்றது, உணர்வுகள் சம்பந்தபட்ட தேவைகள் (Emotional needs).
புற தேவைகள் இல்லை அக தேவைகள்!
மனசும் உடம்பும் ஓஞ்சு போன நேரத்துல அன்பா அக்கறையா ரெண்டு வார்த்தை. புகுந்தவீடுன்னு மட்டுமே கிடக்காம பிறந்த வீட்டுக்கும் போகற பாக்கியம்.
அட, நீங்க எதிர்பார்த்த அளவுக்கு அவ பெரிய புத்திசாலியோ திறமைசாலியோ இல்லைங்க. அதுக்கு என்ன?
எப்ப பார்த்தாலும் மட்டம் தட்டுறதும், அடுத்தவங்களோட ஒப்பிட்டு பேசுறதும் அவ மனசை எவ்வளவு காயப்படுத்தும்ன்னு என்னைக்காவது யோசிச்சு இருக்கீங்களா?
ஆண்களே! உங்களை கம்பெனில இன்னொருத்தரோட பர்ஃமான்ஸ் வச்சு உங்க முதலாளி கம்பேர் பண்ணுனா எவ்வளவு நியாயம் பேசுறீங்க?
உங்களுக்கு வந்தா ரத்தம் எங்களுக்குன்னா டமேட்டோ கெட்சப்பா?
🔆🔆🔆🔆🔆
அடித்து துன்புறுத்துவது மட்டுமே குடும்ப வன்முறை இல்லை (Domestic violence). உடல் ரீதியாக (வேலை பளு) பாலியல் ரீதியாக, கடுஞ்சொற்களால் மனரீதியாக உளவியல் ரீதியாக & பொருளாதார ரீதியாக குடும்பத்தில் ஒருவர் ஒடுக்கப்படுவதும், அச்சுறுத்தப்படுவதும் குடும்ப வன்முறை ஆகும். இந்த வன்முறை கணவனால் மட்டுமே பெண்களுக்கு இழைக்கபடுவதில்லை, அவரின் குடும்பத்தினரின் துன்புருத்தலும் இதில் அடங்கும்.
இந்த தவறை பல பெண்களும் செய்யிறாங்க. கணவனையும் அவர் குடும்பத்தாரையும் இப்படிபட்ட இன்னல்களுக்கு ஆளாக்கும் பெண்களும் சமூகத்தில் இருக்கிறார்கள். அதுவும் கண்டிக்கத்தக்கது தான், தவறு தான்.
Let me clarify one important issue.
மது அருந்துவதும், புகைப்பதும், போதை பழக்கத்திற்கு அடிமையாவதும், சமத்துவம் அல்ல!
இவை அனைத்துமே உடல் நலத்திற்கும், சமூகத்திற்கும் கேடாகும் - இதில் ஆண் பெண் என்ற பாகுபாடு தேவை இல்லை.
உங்கள் கருத்துக்களை மனம் திறந்து பகிர்ந்து கொள்ளுங்கள் வாசக அன்புள்ளங்களே!
நன்றி
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro