நயனம்
அவன் யார் என்று அவளுக்கு
தெரியவில்லை.....
அவள் யார் என்று அவனுக்குத்
தெரியவில்லை.....
அவனைப் பார்க்க நேரும்போது
முகத்திரையாக இருந்தது அவளின் முகக்கவசம்....
எதற்கு?????
அவனைப் பார்த்ததும் அவள் வெட்கப்படுவது தெரியாமல்
இருக்க......
இப்படியே இரவும் பகலும் மாறி மாறி மோதிக்கொள்ள
அவளை பார்க்க வேண்டாம் என்று அவன் நினைத்த பொழுது
அவனின்
கண்ணெதிரே அவள் கடந்து சென்றாள்…
அவளைப் பார்க்கநேராத பொழுது
பார்க்க வேண்டும் என்று
அவன் உள்ளம் ஏங்க
அவளோ எங்கே சென்றாள் என்று தெரியவில்லை..
ஏனோ அவளின் முகிழ்நகை முகம் பார்க்க அவனின்
கண்கள் அலைபாய்கிறதே !!
பல நாள் கழிந்து ஒரு நாள்
அவன் அவளை
கண்டபொழுது
அவள் கலகலவென சிரிப்பால் காற்றில் பறந்தான்
அவள் பேச்சில் மனதால் கரைந்தான்…
இப்படியே தூரத்தில் இருந்து விழியென்று ரசித்துக்கொண்டிருந்தது
அவனின் மனம்….
-Poojayohs
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro