மலரும் நினைவுகள்- தொடக்கம்
நால்வரும் ஒருவரையொருவர் கலாய்த்துக்கொண்டு பேசிக்கொண்டிருந்தனர். உடனே ராம்...
ராம் : இன்னும் கொஞ்ச நாள்ல நம்மெல்லாம் பிரிய போறோம்
பாரதி: சரியான லூசு டா நீ அத வேற நியாபகப்படுத்துற
சம்யுக்தா (சாம்) : மச்சி, அதலாம் ஒன்னுமே இல்ல. யாரையும் யாரும் மறக்க மாட்டோம். ஆர் ஃபிரண்ட் ஷிப் வில் லாஸ்ட் ஃபார் யெவர். So டோன்ட் வொரி பசங்களா
கவி : அவ சொல்றதும் கரட்டு தான். இதுக்கெல்லாம் வருத்தப்பட்டு என்னைய அழ வெச்சிராதிங்க பா.
சாம்: ஐயோ எனக்கு இத விட இந்த project practical நினைச்சா தான் பயமா இருக்கு
ராம் : அதலாம் படிச்சிக்கலாம் டா. என்ன பண்றது எல்லாமே நமக்கு கடைசி டைம்ல தான் சொல்றாங்க. ஆல் ஃபேட் நம்ம கைல அதும் இல்லை.
பாரதி : சரி சரி கடுப்பா இருக்கு கேன்டீன் போவோம் ஆ
கவி : என்னடா இன்னும் சொல்லலயே னு பாத்தேன்.
பாரதி : தெரிதுல வாடா..
கேன்டீனில் நால்வரும் தங்களுக்காக உணவு வாங்கி உட்கொண்டிருந்தார்கள்.
அப்போது இவர்களுக்கு ஆர்கானிக் கெமிஸ்ட்ரி எடுக்கும் ஆசிரியர் அங்கு வந்தார்.
(எல்லா பள்ளி கல்லூரியிலும் மாணவர்களுக்கு பிடித்த ஆசிரியர் ஒருவராச்சும் இருப்பார், மாணவர்களிடம் நட்பாக பழகுபவர்)
கவி: அய்யோ அரவிந்த் சார் டா
ராம் : அரவிந்த் சார் தான டா, ஏன்டா பதறுற
அரவிந்த் சார் தனக்கான உணவை வாங்கிக்கொண்டு இந்த நால்வர் இருக்கும் மேஜைக்கு அருகில் வந்தார்.
அரவிந்த் : Shall I join with you?
கவி: சார் கண்டிப்பா சார். உட்காருங்க.
அரவிந்த் : என்ன ரொம்ப பெருசா ஏதோ டிஸ்கஸ் பண்ற மாறி இருக்கே
பாரதி : அது ஒன்னும் மில்ல சார், இந்த project Practical பற்றி தான் சார்
அரவிந்த் : டேய் அதுலாம் நீங்க இன்டிரஸ்ட் எடுத்து பண்ணா மாஸ் பண்ணலாம். அதான் கூடவே உங்கள கைட் பண்ண கண்டிப்பா நம்ப ஃஸ்டாப்ஸ் இருக்க போறாங்க. அத பத்திலாம் போட்டு குழப்பிக்காதிங்க
ராம் : ஓகே சார்
அரவிந்த் : பார்ரா , சார் நீங்க பேசுவிங்களா?
அனைவரும் சிரித்தனர்
கவி: அவன் எங்க கிட்டலாம் நல்லா தான் சார் பேசுவான்
அரவிந்த் : சரி சரி, எனக்கு நெக்ஸ்ட் கிளாஸ் இருக்கு. நான் கிளம்புறேன். ஏண்டா உங்களுக்கு இல்லையா
ராம் : இல்ல சார். இரண்டு ஹார் free தான். இங்கேயே சாப்டு அப்புறம் Ground பொய்ட்டு பேசிட்டு வீட்டுக்கு கிளம்பிர்வோம்
அரவிந்த் : ஆக கிளாஸ் பக்கம் போக போறது இல்லையோ, சரி சரி என்ஜாய் பண்ணிட்டு போங்க
பாரதி : சார், டூர்
அரவிந்த் : டூர் கேட்க தெரிஞ்ச உங்களுக்கு யார்கிட்ட கேட்கனும் னு தெரியலையே, போய் HOD கால்ல விழுந்திடுங்க. ஒகே நீங்க கண்டினு பண்ணுங்க.
சாம் : பாய் சார்...
அரவிந்த் சார் அங்கிருந்து கிளம்பினார்.
சாம்: Guys நம்ம இப்ப ஒன்னு பண்ணலாம் ஆ
பாரதி : என்ன ?ஓடிப்புடிச்சி விளையாட மட்டும் சொல்லிடாத டீ
கவி : அட ஆமா பா நான் இப்ப ஓடுற நிலைமையில இல்ல
ராம் : டேய் கவி அவல சொல்ல விடுடா. ஹேய் இந்தா மா சொல்லு ஃபாஸ்டா.
சாம் : நம்ம இன்னும் கொஞ்ச நாள் ல இந்த காலேஜ் விட்டு போக போறோம் ல. அப்படியே நம்ம காலேஜ் ஜாயின் பண்ணதுல இருந்து இப்ப வர என்னலாம் நடந்துச்சு னு ரீவைண்ட் பண்ணி பாக்கலாம்.
எவ்ளோ சண்டை எவ்ளோ Happiness நம்ம அனுபவிச்சிற்கோம். நம்ம ஃபிரண்ட்ஷிப் எப்படி னு நம்ம ஃபேமிலி எல்லார்க்குமே தெரியும்
So இப்ப நம்ம அத பத்தி பேசலாம்
சம்யுக்தா இப்படி கூறிவிட்டு மற்ற மூவரை பார்த்து ஓகே வா என்று கேட்க, அவர்களும் சந்தோஷமாக ஓகே என்று கூறினார்கள்
ராம் : ஆரம்பிக்கலாங்களா ?!!!
>>>>>> தங்களின் முதல் கல்லூரி நாள்
கவியின் பெற்றோர் : இதோ பாரு டா , நீ இன்னும் ஸ்கூல் படிக்கிற பையன் இல்ல, காலேஜ் வந்துட்ட. MBBS கிடைக்கலனு வருத்தப்படாத
கவி : அம்மா என்ன பத்தி தெரியும் ல அதலாம் அட்ஜட்ஸ் பண்ணிப்பேன் மா, எனக்கு கிடைச்சத படிக்கப்போறேன் இதுல என்ன இருக்கு
பெற்றோர் : உனக்கு புரிஞ்சா சரி.
இதே போல் மற்ற மூவர் வீட்டிலும் நன்றாக படி நல்ல பிள்ளையாக இரு என்று பெற்றோர்கள் அட்வைஸ் செய்து கல்லூரிக்கு அனுப்பி வைத்தனர்.
முதல் நாள் கல்லூரியில்
கவி பார்க்கிங் ஏரியாவில் நின்று கொண்டு ஒரு பைக்கின் கண்ணாடியை பார்த்து தலை வாரிக் கொண்டிருந்தான்.
அப்பொழுது ஒரு பெண் கவியிடம், அண்ணா பிஎஸ் சி கெமிஸ்ட்ரி ஃபர்ஸ்ட் இயர் எங்கு உள்ளது என்று வினவினாள்.
அதற்கு கவி அப்பெண்ணை fresher ஆ என்று கேட்டான்.
அவளும் ஆமாம் என்று தலையசைத்தாள்.
கவி : ஏங்க நானும் பர்ஸ்ட் இயர் கெமிஸ்ட்ரி தான். ஐ யம் கவி. கவி பிரசாத்
பெண் : சம்யுக்தா ப்ரோ.
கவி : இந்த ப்ரோ லாம் வேணமே நம்மலாம் ஒரே கிளாஸ் தான் கவி னே கூப்பிடுங்க
சம்யுக்தா சிரித்துவிட்டு சரிங்க கவி என்று கூறினாள்.
சம்யுக்தா : வாங்களேன் கிளாசுக்கு போவோம்
கவி : இல்லங்க ஒரு ஃபிரண்ட் வரணும் அதுக்கு தான் இங்க வெயிட் பண்றேன். நீங்க வேணா போங்களேன் கிளாசுக்கு
சம்யுக்தா: ஏங்க அதுக்கு வழி தெரிஞ்சா நான் ஏங்க இங்க நிக்க போறேன். பரவால்ல வாங்க சேர்ந்தே போலாம் உங்க ஃபிரண்ட் வந்தப்புறம்.
கவியின் நண்பன் வரும் வரை இவர்கள் இருவரும் தங்கள் பள்ளியை பற்றி எங்கிருந்து வருகிறோம் என்பதை பற்றி பேசிக் கொண்டிருந்தனர்.
சிறிது நேரம் கழித்து கவியின் நண்பனும் வந்தான்.
கவி : ஏண்டா லேட்?
நண்பன் : சாரி டா லேட்டா எழுந்துட்டேன். யார் இவங்க?
கவி : இவங்களும் நம்ம கிளாஸ் தான் சம்யுக்தா. ஏங்க என் ஃப்ரெண்ட் என்று சொன்னாலே இவன்தான் ராம்.
சாம் : ஹாய் ராம்
ராம் : ஹாய் ப்ரோ... அய்யோ Cha சாரி ங்க பழக்கதோஷத்துல தெரியாம சொல்லிட்டேன்
சாம் மற்றும் கவி இருவரும் சிரித்தனர், சாம் நோ இஷ்ஷூஸ் என்று கூறினாள்
சாம் : என்ன நீங்க ரெண்டு பேரும் ரொம்ப தெரிந்தவங்க மாதிரி பேசுறீங்க. ஆல்ரெடி ஃபிரண்ட்ஸ் ஆ ?
கவி : அப்படி இல்ல பா. அட்மிஷன் போட வந்தோம் ல அப்போ பேசினோம். So அப்பவே நம்பர் லாம் வாங்கி பேசி நண்பர்கள் ஆகிட்டோம்
சாம்: ஹோ சரி சரி சூப்பரு. இப்பயாச்சும் கிளாஸ் கு போலாம் ஆ
ராம் : கண்டிப்பா வாங்க போலாம்.
சாம் : எப்படி எல்லாம் தெரிஞ்ச மாதிரி போறீங்க
ராம் : அதான் ங்க எல்லாமே அன்னிக்கே கிளாஸ் ரூம் லாம் எங்க னு பாத்து வெச்சாச்சி.
சாம் : அட்வாண்ஸ்டா தான் இருக்கீங்க இரண்டு பேரும்.
மூவரும் வகுப்பறைக்குள் நுழைந்தனர். ஏற்கனவே வகுப்பில் சிறிது மாணவ மாணவிகள் பேசிக்கொண்டிருந்தனர். இவர்கள் மூவரும் அனைவரிடமும் பேசி தங்களையும் மற்றவர்களும் அறிமுகப்படுத்திக்கொண்டனர்.
முதல் நாள் வகுப்பு ஆரம்பிக்கும் சிறு நேரம் இருந்தும் கெமிஸ்ட்ரி வகுப்பின் ஆசிரியை அங்கு வந்து எத்தனை பேர் இருக்கிறார்கள் என்று எண்ணத் தொடங்கினார். அனைவரும் எழுந்து நின்றனர். அவர்களை உட்காருங்கள் என்று சைகை காட்டினார்.
வகுப்பில் கவி, ராம், மற்றும் இன்னொரு புது நண்பர் சர்வேஷ் கடைசி பெஞ்சில் அமர்ந்தனர்.
பெண்கள் நடு வரிசை பெஞ்சுகளில் அமர இருபுறமும் ஆண்கள் வரிசையாக அமர்ந்தனர்
சம்யுக்தா கடைசி பெஞ்சில் அமர்ந்தாள். ஆசிரியை எண்ணிக் கொண்டிருக்கும் பொழுது "மே ஐ கம் இன் மேம்" என்ற ஒரு கணித்த குரல் கேட்ட அனைவரும் நிமிர்ந்தனர்.
( மீ : Heroine என்டீரினு லாம் நினைச்சுக்காதிங்க😂😂😂 எதா ஒரு Student ஆ இருப்பாங்க)
தொடரும்....❤️
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro