அத்தியாயம் 8
இவர்கள் இரண்டாம் ஆண்டு படிக்கும்போது மூன்றாம் ஆண்டு படிக்கும் மாணவர்களுக்கு ஃபேர்வெல் நடத்த திட்டமிட்டனர். அந்த டிபார்ட்மெண்ட் மாணவர்கள் அனைவரும் ட்ரெடிஷனலில் வருமாறு முடிவு எடுத்தனர். அதேபோல் டிபார்ட்மென்ட் ஆசிரியர்களும் ட்ரடிஷனலில் வருமாறு கேட்டுக் கொண்டனர். எல்லாரும் ஒன்று போல் இருக்க வேண்டும் என்று இரண்டாம் ஆண்டு மாணவர்கள் முடிவு செய்தனர். ஃபுட்டீஸ் ஸ்குவாட் மாணவர்கள் ஐவரும் ஒரே நிறத்தில் உடை அணியலாம் என்று பேசிக்கொண்டனர்.
அதனால் சம்யுக்தா யதார்த்தமாக தன் சீனியர் ரேஷ்மாவிடம் என்ன நிறத்தில் புடவை கட்டப்போவதாக கேட்டுக் கொண்டாள். அவளோ சந்தேகத்துடன் நீல நிறத்தில் புடவை கட்டப் போவதாக கூறினாள்.
இந்த ஐவரும் ஏற்கனவே நீல நிறத்தில் உடை அணிவதாக முடிவு எடுத்தனர்.
ஃபேர்வெல் தினம்,
சர்வேஷ் ராம் கவி மூவரும் நீல நிறத்தில் ஷர்ட் ,வேஷ்டியும் கட்டிக் கொண்டு கல்லூரியில் விதவிதமாக தங்களைத் தானே போட்டோ எடுத்துக் கொண்டனர்.
அப்போது சம்யுக்தாவும் பாரதியும் ஒன்றாக வந்தனர்.
இவர்கள் மூவரும் வேண்டுமென்றே கண்டுக்காதது போல் சம்யுக்தா பாரதியின் முன் சென்று அவர்களைத் தாண்டி எட்டிப் பார்த்தனர்.
கவி: என்ன இந்த சம்யுக்தாவும் பாரதியும் காணும்?
பாரதி: ஹலோ ஹலோ பாய்ஸ் இங்க இருக்கோம் .நடிக்காதீங்கப்பா
சர்வேஷ்: அட ஆமாம்பா நம்ம டோலிகள் இதோ இருக்காங்க
ராம்: பா இன்றைக்கு தான் பொண்ணு போல வந்து இருக்கீங்க.
சம்யுக்தா: கொழுப்பு கொழுப்பு உங்க மூணு பேருக்கும் அவ்ளோ கொழுப்பு. போதும்பா கலாய்ச்சது.
கெமிஸ்ட்ரி டிபார்ட்மென்ட் மாணவர்கள் அனைவரும் ஒரு மினி ஆடிட்டோரியத்தில் அமர்ந்தனர். பைனல் இயர் மாணவர்களுக்காக முதலாம் ஆண்டு மாணவர்களும் இரண்டாம் ஆண்டு மாணவர்களும் சிறப்பு நடனம் பாட்டு ஆகியவற்றை ஏற்பாடு செய்தனர். அனைத்தும் சிறப்பாக நடந்து முடிந்தது.
ஃபேர்வெல் முடிந்தவுடன் ராம் ரேஷ்மாவிடம் தனியாக பேச வேண்டும் என்று காரிடாருக்கு அழைத்தான். அவளும் ஜூனியர் தானே என்று வெளியே வந்தாள்.
ராம் : இதை எப்படி சொல்றதுன்னு தெரியல. நான் உங்கள ரொம்ப மிஸ் பண்ணுவேன்.
ரேஷ்மா : நானும் தான்டா தம்பி உங்க எல்லாரையும் ரொம்ப மிஸ் பண்ணுவேன். ஃபேர்வெல் சூப்பரா பண்ணிட்டீங்க ரொம்ப தேங்க்ஸ்.
ராம்: ப்ளீஸ், ப்ளீஸ், ப்ளீஸ் தம்பின்னு மட்டும் சொல்லிடாதீங்க. உங்ககிட்ட ஒன்னு சொல்லணும்.
ரேஷ்மா: சொல்லுங்க ஜூனியரே.
ராம் ஒரு சுவற்றின் பின்னால் மறைத்து வைத்திருந்த பூங்கொத்தை நீட்டி ரேஷ்மாவிற்கு ப்ரொபோஸ் செய்தான்.
இந்த சம்பவத்தை கவி சர்வேஷ் பாரதி சம்யுக்தா பார்த்து விட்டனர். ஆனால் ராமின் கண்ணில் படவில்லை மறைந்து நின்று பார்த்துக் கொண்டிருந்தனர்.
சீனியர் ரேஷ்மாவும் அதிர்ச்சி அடைந்து அமைதியாக என்னடா இது என்று கேட்டார்கள்.
ரேஷ்மா: நான் உன் சீனியர். எனக்கு எப்படிடா நீ ப்ரொபோஸ் பண்ணுவ.
ராம்: சோ வாட் சீனியர். நீங்கதானே அன்னைக்கு சொன்னீங்க நம்ம எல்லாருக்கும் கிட்டத்தட்ட ஒரே ஏஜ்தா இருக்கும் அப்படின்னு.
ரேஷ்மா: டேய் இதெல்லாம் சரிப்பட்டு வராது புரிஞ்சுக்க.
ராம் : என்ன சீனியர் ஏஜ் டிஃபரன்ஸ் இருக்குன்னு பாக்குறீங்களா? உங்களோட டேட் ஆப் பர்த் சொல்லுங்க.
ரேஷ்மா: 28.01.1994
ராம் : என்னோடது 01.01.1994 இப்ப கூட உங்களோட 27 நாள் பெரியவன் தான் சீனியர்.
ரேஷ்மா: டேய் புரிந்துகொள் அதெல்லாம் சரி தான். இதெல்லாம் சரியா வராது நான் என்னோட ஹையர் ஸ்டைலிஸ்க்கு ஃபாரின் போறேன்.
ராம்: ஓகே சீனியர் நான் சொல்ல வேண்டியது சொல்லிட்டேன். அக்சப்ட் பண்ணறதும் பண்ணாததும் உங்க இஷ்டம். நான் உங்க டெசிஷன்ல தலையிட மாட்டேன். பட்
ரேஷ்மா : பட்
ராம்: ஐ வில் பி வெயிட்டிங் ஃபார் யுவர் ரிப்ளை.
இவன் சொல்லிவிட்டு அங்கிருந்து நடந்தான். ராம் அனைவருக்கும் முன் ப்ரபோஸ் செய்து ரேஷ்மாவிற்கு சங்கடத்தை கொடுக்க விரும்பவில்லை. அதனால் தான் தனியாக அழைத்து தன் காதலை கூறினான்.
இதை தெரிந்து கொண்ட ரேஷ்மாவின் தோழியும் ஒரு ஆண் தோழனும் ராமை என்ன என்று கேட்பதற்கு விரைந்தனர். ஆனால் ரேஷ்மா இவர்களை தடுத்தாள். காரணம் அவன் ஜெனியூனாக தன் காதலை வெளிப்படுத்தியது. அவனும் காதலித்தே தான் ஆகணும் என்று கட்டாயப்படுத்தவும் இல்லை.
*********************
சர்வேஷ்: நம்ம கேங்கிலேயே தைரியமான ஆள் என்றால் நீ தாண்டா. சீனியருக்கே ப்ரொபோஸ் செஞ்ச மகான்.
ராம் : டேய் டேய் ஓட்டாதீங்கடா. அதலாம் ஒரு மெமரீஸ்.
அனைவரும் பேசிக் கொண்டிருக்கையில் இவர்கள் வகுப்பு தோழிகள் இருவர் அழுதுகொண்டே வந்தனர். மற்ற மாணவர்கள் விசாரித்தபோது அங்கே இவர்களைப் போல் சுற்றி பார்க்க வந்த ஒரு சில ஆண்கள் இவர்களை டீஸ் செய்ததாக அழுதனர். இதை அறிந்த பாரதியும் சம்யுக்தாவும் தன் நண்பர்களிடம் கூறினர். உடனே ராமிற்கு கோபம் வந்து அவர்களை யார் என்று காட்ட கூறினான். கவியும் சர்வேஷும் எவ்வளவு கூறியும் நாம் தட்டிக் கேட்கச் சென்றான். டீஸ் செய்தவர்களின் சட்டையை பிடித்து அடிக்க கை ஓங்கிய போது, நிறுத்துடா என்ற சத்தம் கேட்டது. அவன் திரும்பி பார்த்தபோது அரவிந்த் மற்றும் சித்தார்த் இருந்தனர்.
சித்தார்த் : டேய் இது ஒன்னும் நம்ம ஊரு இல்ல. ஸ்டேட் விட்டு ஸ்டேட் வந்திருக்கோம்.
ராம்: சார் அதுக்கு என்ன சார் அவனுங்க நம்ப பசங்கள தப்பா பேசி இருக்காங்க.
அரவிந்த்: இந்த கோவம் உனக்கு எங்க என்னடா வருது கொஞ்ச நேரம் அமைதியா இரு நான் பேசிக்கிறேன்.
அரவிந்த் ட்ஸ் செய்த நபர்களின் முன் சென்று அவர்கள் இருவரின் கன்னத்தில் ஒரு அரை வைத்தான்.
ராம், நம்மள அடிக்க கூடாது கோபப்படக்கூடாதுனு சொல்லிட்டு இவரு அடிக்கிறாரு என்று முணுமுணுத்தான். அவர்களைத் திட்டி அறிவுரை கூடி அவர்களை அனுப்பி வைத்தார் அரவிந்த்.
சித்தார்த் : நான் உன்னை ஸ்கூல்லையே பார்த்திருக்கேன் எல்லாத்துக்கும் கோபப்படுற அது எவ்வளவு தப்புன்னு தெரியுமா.
ராம் மௌனம் காத்தான்
கவி: சார், நீங்க தப்பா புரிஞ்சுகொண்டு இருக்கீங்க. அவன் எல்லாத்துக்கும் கோபப்படமாட்டான். அவன் கண்ணுக்கு தப்புன்னு தெரிஞ்சா மட்டும்தான் சார் கோபப்படுவான். இப்ப கூட இந்த விஷயம் நம்ம கேர்ள்ஸ் பசங்க எல்லார்கிட்டயும் சொல்லி தான் சார் தெரியும் அப்போ என் முன்னால போய் கேட்க போனான் சார் அவ்வளவுதான்.
சித்தார்த்: டேய் டேய் நான் ஒன்னும் தப்பா எல்லாம் சொல்லல டா. இருக்கிற ஃபேக்ட சொல்ற. அந்த வந்து ரெண்டு பசங்களும் கிட்டத்தட்ட உங்க வயசு பசங்க மாதிரி தான் இருக்காங்க. அப்ப நீங்க கைவைத்து ஏதாவது பிரச்சனை ஆயிடும் அதனாலதான் சொன்னேன்.
ராம்: சரிங்க சார்.
பின்பு மீண்டும் ஒரு இரண்டு நாள் நன்றாக சுற்றி பார்த்துவிட்டு தங்கள் வீட்டிற்கு அனைவரும் திரும்பினர்.
மீண்டும் ஒரு ஃப்ளாஷ்பேக்
இடைப்பட்ட காலத்தில் எவனோ செய்த தவறுக்காக சர்வேஷிற்கும் பாரதிக்கும் இடையே உள்ள நட்பு முறிந்தது.
பாரதி சர்வேஷிடம் நன்றாகவே நட்பாக பழகியவள். வேறு டிப்பார்ட்மன்ட் மாணவன் விவின் பாரதியை ஒரு தலையாக காதலித்து வர, இந்த விஷயம் யாருக்குமே தெரியாது. பாரதியை தன் நண்பர்களிடம் இருந்து பிரிக்க விரும்பினான். ஏனென்றால் அனைவரும் ஒன்றாக இருந்தால், தனக்கு முக்கியதுவம் இருக்காது என்று. அவன் பாஷையில் அதற்கு பெயர் பொசசிவ்னஸ். முதலில் சம்யுக்தாவிடம் இருந்து பிரச்சனையை ஆரம்பித்தான்.
விவின்: பாரதி, நீ எவ்வளவு நல்ல பொண்ணு, ஆனா உன் பிரண்ட் சம்யுக்தா உன்ன பத்தி தப்பா பேசிட்டு இருக்கா.
பாரதி: என் தோழியைப் பற்றி உனக்கு என்ன தெரியும்? அவளைப் பற்றி பேசினால் உன்னை அறைவேன். முதலில், அவளைப் பற்றி பேச நீங்கள் யார்?
விவின் : நல்லதுக்கே காலம் இல்ல. எதோ நீ நல்ல பொண்ணு. நீ எல்லாரையும் நம்பிட்டு ஏமாந்துவிட கூடாதுனு ஒரு பாசத்துல சொல்றேன். அப்புறம் உன் இஷ்டம்.
பாரதி: ஓ.. சார் பாசத்த காமிச்சிட்டிங்க ல அப்போ மூடிட்டு கிளம்புங்க.
ஆனால் விவினோ பாரதியை நன்றாக குழப்பிவிட்டு அனுப்பிவைத்தான்.
பாரதி இவர்கள் இருக்கும் இடத்திற்கு வரும்போது, நன்றாக பேசிக்கொண்டிருந்த அனைவரும் இவள் வருவதை கண்டு மெளனம் ஆயினர்.
பாரதி : என்ன நான் வந்த உடனே அமைதியா ஆகிடிங்க.
கவி: ஒன்னுல்ல பா, சும்மாதான்
பாரதி, விவின் கூறியதை நினைத்து பார்த்தாள். விவின் கூறியது உண்மையோ என எண்ணினாள். ஆனால் அவளின் மனம் ஏற்கவில்லை.
அடிக்கடி நண்பர்களிடம் தேவையில்லாமல் சண்டை போட ஆரம்பித்தாள். இது சர்வேஷிர்கோ சுத்தமாக பிடிக்கவில்லை. ராம் தன் தோழி என்பதால் தன் கோபத்தை கட்டுப்படுத்தினான்.
ஒரு நாள் விவின் பாரதியிடம் தன் காதலை வெளிப்படுத்தினான். ஆனால் பாரதி ஒப்புக்கொள்ளவில்லை. அவன் அவளை டார்ச்சர் செய்து தன்னை லவ் செய்வதாக கூற சொன்னான்.
இதனாலயே ஒன்று மாற்றி ஒன்று ஐவருக்கும் சண்டை வந்தது.
சம்யுக்தா : இந்த லெட்டர புடி. உனக்கு சப்ரைஸ் பண்ணலாம் னு தான் ஆஃபிஸ் ல குடுத்த இந்த லெட்டர நாங்க வாங்கி வைச்சோம். அத பத்தி பேசும்போது தான் அன்னிக்கி நீ அங்க வந்த. அதான் பேச்ச நிறுத்திட்டோம். ஆனா நீ யவன் பேச்சுயோ நம்பிட்டு லூசு மாதிரி எங்க கூட சண்ட போடுற. வி ஹேவ் நோ இன்டென்ஷன் ஆப் ஹைடிங் சம்திங் பிரம் யூ. ஏனா நம்ம எல்லாரும் அப்படி பழகல.
பாரதி: புரிஞ்சிக்க சாம் அந்த காமர்ஸ் டிப்பார்ட்மென்ட் பையன் விவின் என்ன லவ் பண்ற னு டார்ச்சர் பண்றான் டி. அவன் பொலைட் ஆ சொன்னா கூட பரவாயில்ல. ரொம்ப ஹார்ஷ் ஆ பிஹேவ் பண்றான். என் வீடு வைரக்கும் வந்துடுறான். என் அண்ணா கிட்ட சொல்ல பயமா இருக்கு அவன் ஒரு கோவகாரன். நான் ஏதா சொல்லி அவன அடிச்சிட்டா. நம்ம பிரண்ட்ஸ் கிட்ட சொல்லவும் பயமா இருக்கு.
சம்யுக்தா : நீ என்கிட்ட சொல்லி இருக்கலாம் இல்ல.
பாரதி: உன் கிட்ட சொன்னா மட்டும். நீ அப்படியே நம்ம ஃப்ரெண்ட்ஸ் கிட்ட சொல்லிடுவ. அப்புறம் தேவையில்லாத பிரச்சினை வரும் எல்லாருக்கும்.
சம்யுக்தா: அவன் எங்க இருக்கான்னு சொல்லு நீ வா நான் பேசுறேன்.
பாரதி: ஹே வேண்டாம்.
சம்யுக்தா: ஏய் தமிழ்ல எல்லாம் ஸ்பீச் அவ்ளோ தைரியமா பேசுற. இங்க சண்டை போட உனக்கு என்ன. எவனும் நம்ம பிரச்சனையை தீர்க்க வரமாட்டான். நம்மதான் நம்பளுடைய பிரச்சனையே சமாளிச்சு தைரியமா பேஸ் பண்ணனும்.
பாரதி: அப்போ நானே போய் பேசுறேன். என்ன நடந்தாலும் பாத்துக்குறேன்.
இவளும் அவனிடம் பேசி ஒரு முடிவெடுக்க சென்றாள். பாரதி விவனிடம், "எனக்கு உன்ன புடிக்கல, பிளீஸ் இனிமே என்ன டார்ச்சர் பண்ணாத".
விவின்: நான் லவ் பண்றது டார்ச்சர் ஆ இருக்கா டி. உன்ன ஒரு வருஷமா லவ் பண்றேன். என்ன வேணா னு சொல்ல என்ன காரணம். நான் அழகாதான இருக்கேன்.
பாரதி: பிளீஸ், விவின் விஷயம் தெரியாம பேசாத. தயவுசெய்து என் பிரண்ட்ஸ் வருவதற்குள் கிளம்பிடு.
அமைதியாக இருந்த விவினுக்கு கோபம் வர, பாரதியை அடிக்க கை ஓங்கினான். அவளோ அவன் கையை நிறுத்தி பிடித்தாள்.
அப்போது விசில் சத்தம் கேட்க, இருவரும் திரும்பிப் பார்த்தனர். அங்கே புட்டீஸ் Squad.
சர்வேஷ்: விவின் ப்ரோ நீங்களா? என்ன இவகிட்ட பேச்சு?
கவி: சும்மா டா, தங்கச்சி கிட்ட பேசுறாப்புல
விவின்: தங்கச்சியா. லவ் பண்ற டா
ராம்: கியா ப்ரோ லவ், உங்கள அதுவும் பாரதி.
சர்வேஷ்: ப்ரோ அவகிட்ட ஒன்று சொல்லி அவள குழப்பி அனுப்புனிங்கள அது உண்ம தான்.
விவின்: என்ன உண்மை?
சர்வேஷ்: அதான் நான் லவ் பண்றேன் னு ஒரு உருட்டு உருட்டினிங்களே, ஆக்சுவலி அது உண்மைதான். உண்மை னு தெரியாம சார் பொய் சொல்லிற்கிங்க
அனைவரும் சர்வேஷை பார்த்தனர்.
"என்ன நானும் பாரதியும் First year ல இருந்தே லவ் பண்றோம்", சர்வேஷ்
அனைவரும் அதிர்ச்சியாயினர். சர்வேஷ் தன் கண்களால் பாரதியை ஆமா என்று கூறன்று கூறினான்.
சம்யுக்தா: அதான ஆமா
ராம் மற்றும் கவி பிரசாத்திற்கு ஒன்றும் புரியவில்லை. அவர்களும் ஆமாம் என்று கூறினர்.
விவின்: பாரதி, நீ சொல்லு, இவன் சொல்றது உண்மையா
பாரதிக்கு என்ன சொல்வதென்று தெரியாமல் ஆமாம் என்று தலையசைத்தாள்.
விவின்: இத ஏன் என்கிட்ட முன்னாலயே சொல்லல
சர்வேஷ்: நீங்க எங்க ப்ரோ அவள பேசவிட்டிங்க.
விவின்: ஐ ஸ்டில் கான்ட் பிலிவ். பட் பாரதி நல்ல பொண்ணு அவள நல்லா பாத்துக்கோங்க.
விவின் பாரதியை பார்த்து சாரி என்று கூறி புன்னகைத்து விட்டு கடந்து சென்றான்.
ராம்: Genuine ஆன வில்லன் ஆ இருப்பான் போலயே.
பாரதி அனைவரிடமும் மன்னிப்பு கேட்டுவிட்டு, சர்வேஷிக்கு நன்றி கூறினான்.
கவி: நல்ல வேலை டா நீ நல்லா ஒரு பொய் சொல்லி சமாளிச்ச, குட் பிரசன்ஸ் ஆஃப் மைண்ட் டா மச்சா.
சர்வேஷ்: பொய் னு யார் சொன்னா.
பாரதி: வாட்???
தொடரும்.
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro